Wednesday, April 13, 2016

Paleo LifeStyle - Cheat Sheets / எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் பேலியோ விளக்கப்படம்.

Paleo LifeStyle - Cheat Sheets. (Veg & Non-Veg)
by Arun Antony George


 

புதியவர்களுக்குத் தேவையான முக்கிய குழு லிங்க் விவரங்கள். / PINNED POST

வணக்கம்.
புதிதாக டயட் கேட்பவர்கள் தனி இழை துவக்கி
தினம் 100 பாதாம் எடுக்க முடியுமா,
தினம் 4 முட்டை எடுக்க முடியுமா
தினம் மட்டன்/இறைச்சி எடுக்க முடியுமா
பனீர் தினமும் எடுக்க முடியுமா (பியூர் வெஜ் மட்டும்)
உங்களுக்கு தற்போது உள்ள உடல்நலன் சார்ந்த சிக்கல்கள், எடுக்கும் மருந்து விவரங்கள் என்ன?
உங்கள் உடல்நிலை பற்றிய தகவல்களுடன், மேலே உள்ள கேள்விகளுக்கும் பதிலை தட்டச்சி பதிவாக இடுங்கள். மேலே உள்ல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மொட்டையாக ஒரு வரியில் டயட் கேட்டால் பதில் அளிப்பது தாமதம் ஆகும்.
---------------------------------------------------------------------------------------------
குழுவில் நிறைய பேர் மெடிக்கல் ரிபோர்ட்டை போட்டு டயட் கேட்கிரார்கள். அது சரிவர கவனிக்கபடாமல் போவதால் பின்வரும் ஒழுங்குமுறையை அமுல்படுத்தவிருக்கிறோம்.

1) புதிதாக டயபடிஸ் உணவுமுறைக கேட்பவர்கள் அனைவரும் "சர்க்கரையில்லா பொங்கல்" (www.facebook.com/groups/ancestralfoods) குழுவில் ரிபோர்ட்டுகளை இடும்படி கேட்டுகொள்ல்படுகிறார்கள். அங்கே இன்சுலின், டயபடிஸ் போன்றவற்றில் சிறப்பான அனுபவம் உள்ள சிவராம் ஜெகதீசன், செந்தழல் ரவி போன்றோர் இருக்கிரார்கள். நியாண்டர் செல்வனும் அங்கே பேலியோ உணவுமுறைக்கு   சார்ட் வழங்குவார்.

http://paleogod.blogspot.in/2016/06/exclusive-paleo-group-for-diabetic.html

2) டயாபடிஸ் தவிர்த்து எடைகுறைப்பு, ஆட்டோஇம்யூன், பிரசர் போன்ற சிக்கல்கள் உள்ளவர்கள்
தனியாக ஒரு இழையை துவக்கி ரிபோர்ட்டுகளை அங்கே இடவும்

அதன்பின் பின் செய்யபட்ட பதிவில் ரிபோர்ட்டின் யு,.ஆர்.எல்லை இடவும். இட்டு பொறுமையாக காத்திருக்கவும். புதிதாக தொன்றும் கேள்விகள், டயட் குறித்த சந்தேகம் அனைத்தையும் அதே இழையில் முதல் பின்னூட்டத்தில் இடவும். அதில் நீங்கள் சைவமா, அசைவமா, தினம் இறைச்சி, முட்டை, 100 பாதாம் எடுக்க முடியுமா என்பது போன்ற தகவல்களை குறிப்பிடவும். இப்படி செய்வது உங்கள் மடலுக்கு பதில் கிடைப்பதை விரைவுபடுத்தும்.

"பர்ஸ்ட் கம், பர்ஸ்ட் சர்வ்" அடிப்படையில் அந்த ரிபோர்ட்டுகளுக்கான பதில் இடப்படும். பதில் இட்டவுடன் பின்போஸ்டில் உள்ள உங்கள் பின்னூட்டம் நீக்கபடும். இதன்படி உங்களுக்கு முன் காத்திருப்பவர் எனும் தகவலை அறிந்து கொள்ள இயலும்.

குழுவில் எழுதவே முடியாத அளவு பர்சனலான பிரச்சனை என்றால் எனக்கு பர்சனல் மெஸேஜ் அனுப்பவும்.
உங்கள் இழையில் சீனியர் உறுப்பினர்கள் யாரேனும் பதில் சொல்லியிருந்தால் பின் போஸ்டில் உள்ள உங்கள் யு.ஆர்.எல் கமெண்டை நீங்களே நீக்கிவிடவும். அல்லது பதில் சொன்ன சீனியர் உறுப்பினர்கள் அங்கே "ரிப்ளைட்" என்ற கமெண்ட் போட்டால் அந்த பின்னூட்டம் நீக்கபடும்.

பின் செய்யபட்ட இழையில் இடப்படும் வேறு எந்த கேள்வியும், பின்னூட்டமும் நீகக்படும்
பொதுவான கேள்விகள், தினம் எத்தனை பாதாம் சாப்பிடலாம் என்பது மாதிரியான கேள்விகளை குழுவில் இடவும்..பொதுவான சந்தேகங்களுக்கு வாரம் ஒரு முறை "ஒரு மணிநேர கேள்வி- பதில்" பகுதி நடத்த இருக்கிறேன். அதன் நேரம் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கபடும்

Beginners paleo

https://selvan.wordpress.com/…/03/25/paleo-diet-for-beginn…/

Paleo vegetables

https://selvan.wordpress.com/2014/04/25/ginger/

Butter tea Recipe:

https://www.youtube.com/watch?v=EnPLBPYCG4M

Arun Anthony George's Paleo diet chart

https://www.facebook.com/groups/tamilhealth/permalink/414804078710077/

----------------------------------------------------------------------------------------------------

உதவகூடிய பிற இணைப்புகள்:

சிவராம் ஜெகதீசன் அவர்களின் "உன்னை வெல்வேன் நீரிழவே" நூல்

https://www.facebook.com/groups/tamilhealth/435598866630598

வருடாந்திர மெடிக்கல் டெஸ்டில் என்ன பரிசோதனைகளை எடுக்கலாம்?

http://on.fb.me/1JRmGuw

பேலியோ ரெசிபிகள்

www.munnorunavu.blogspot.com

"உன்னை வெல்வேன் நீரிழிவே" சிவராம் ஜெகதீசனின் மின் நூல்

https://www.facebook.com/groups/tamilhealth/415206898669795/

கீழை ராசாவின் பேலியோ ரெஸிபிகள் நூல்

https://www.facebook.com/groups/tamilhealth/316592741864545/

நனிசைவர்களுக்கான சகோதர குழுமம் (பால் கூட சேர்க்காத சைவர்களே நனிசைவர்கள்)

https://www.facebook.com/groups/919246308138414/

பேலியோ உணவுமுறை  குறிப்புகள் (ஷங்கர் ஜியின் பிளாக்)

http://paleogod.blogspot.in/…/repeated-questions-about-pale…

November மாத டயட் போட்டி

https://www.facebook.com/events/1667417553470312/

ரெசிபிகள் Diet event

https://www.facebook.com/events/664870340281850/

புதியவர்களுக்கான கோகுல் குமரன் ஜியின் குறிப்புகள்

https://www.facebook.com/groups/tamilhealth/permalink/406084892915329/

Vitamin D thread

https://www.facebook.com/events/840256796095528/

Paleo success stories

https://www.facebook.com/groups/tamilhealth/permalink/378436602346825/

Paleo diet book in English

https://docs.google.com/…/1Oykw7HE-Yxx7STOvKX3lg54ioK…/edit…

Monday, April 4, 2016

பேலியோ உணவுமுறைக்கு முன்பாக ரத்தப் பரிசோதனை ஏன் அவசியம்? Blood Test Before Paleo Diet

ப்ளட் டெஸ்ட் கண்டிப்பா எடுக்கனுமா? நான் நல்லாத்தான் இருக்கேன் என்று பலர் கேட்கிறீர்கள் அல்லவா?  நமது குழுவின் புதிய மெம்பர் ஒருவரின் ரிபோர்ட்டை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

Cholesterol 417
TGL 200
HDL 49
LDL 328
Weight 89 / Age 30 / Non veg

அவருடைய ரிசல்ட். 30 வயதில் 89 கிலோ எடை என்பது பெரிய விஷயமே அல்ல. 25 வயதில் 100+ எல்லாம் குழுவில் இருக்கிறார்கள். இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது அவருடைய கொழுப்பின் அளவுகள்.

இவரிடம் சில கேள்விகள் கேட்டேன். இதற்கு முன்பு எப்பொழுதாவது ரத்தப் பரிசோதனை செய்திருக்கிறாரா?
இல்லை.

ஏதேனும் உடல் பிரச்சனைகள் இருக்கிறதா?
இல்லை.

மருந்து மாத்திரை எடுக்கிறாரா?
இல்லை.


சரி, இப்பொழுது இவரைப் போல ஒருவர், நாம் கூறியபடி ரத்தப் பரிசோதனை எதுவும் எடுக்காமல் பேலியோ எடுத்து ஒரு மாதம் அல்லது ஒருவாரம் கழித்து, இவ்வளவு கொழுப்பு சாப்பிடுகிறோமே என்ற எண்ணத்திலோ, எடை குறைந்ததாலோ பயந்து போய், ஒரு டெஸ்ட் எடுத்துவிடலாம் என்று நினைத்து டெஸ்ட் எடுக்கிறார். பேலியோவால் 0% நன்மை என்றே வைத்துக்கொள்வோம். இப்பொழுது மேலே உள்ள ரிசல்ட்கள் அவருக்கு வருகிறது.

Cholesterol 417
TGL 200
HDL 49
LDL 328

இந்த ரிசல்ட்டை வைத்துக்கொண்டு டாக்டரிடம் செல்கிறார்.

டாக்டர்: என்ன சாப்பிட்டீர்கள்?


15 நாட்களாக டெய்லி 5 முட்டை, 1/2கிலோ சிக்கன், நெய்ல வறுத்த பாதாம், பனீர் 200 கிராம், அவகோடா, சீஸ், வெண்ணெய் டாக்டர் இதுதான் சாப்பிட்டேன்.

டாக்டருக்கு லேசாக மயக்கம் வருகிறது, மெதுவாகக் கீழே கால் இருக்கிறதா என்று பார்த்து வந்தது ஆவி இல்லை மனிதன்தான் என்று கன்பர்ம் செய்துகொள்கிறார்.

இவ்ளோ கொழுப்பு சாப்பிட்டா என்னாங்க ஆகறது? ஏன் இப்படிச் சாப்பிட்டீங்க? தற்கொலைக்கு முயற்சி பண்றீங்களா?

இல்லைங்க டாக்டர் பேலியோன்னு ஒரு டயட், பேஸ்புக்ல...

வாட் நான்சன்ஸ்? நீங்க எல்லாம் படிச்சவங்கதானே? பேஸ்புக்காம் டயட்டாம், உடனே அட்மிட் ஆகுங்க, வீட்டுக்கு தகவல் சொல்லிடுங்க.

பைபாஸ் பண்ணப்போறீங்களா டாக்டர்?





 அவர் வீட்டுக்குத் தகவல் பறக்கிறது. பேலியோ சாப்பிட்டால் நன்றாக இருந்த மனிதரின் கொழுப்பு 400ஆக மாறி உயிர்பிழைத்ததே அதிசயம் என்ற செய்தி பரவுகிறது.


அதைவிட முக்கியமாக வறண்ட சப்பாத்தியும், மஞ்சள் கரு இல்லாத முட்டையும், ஓட்ஸ் கஞ்சியும், பொன்னி அரிசி சாப்பாடும், கொழுப்பில்லாத பாலும் தவிர்த்து ஸ்டாட்டின் மட்டுமே சாப்பிடவேண்டும் என்று தீர்ப்பு வருகிறது .

டேய் சீனியர்களே எங்கடா இருக்கீங்க, என்று வன்மத்தோடு ஒரு போஸ்டும் அவர் மனதில் டைப்பிக்கொண்டிருப்பார். சொந்த பந்தங்கள் டேய் சம்முவம் எட்றா அந்த வீச்சறிவாள என்று டாட்டா சுமோவில் கரும்புகை கக்கக் கிளம்பும்.

இது தேவையா?

இதில் எங்கள் தவறு என்ன?

இதையே, மேலே நண்பரைப் போல சரியாக சொன்னதைக் கேட்டு, பரிந்துரைக்கப்பட்ட ப்ளட் டெஸ்ட் எடுத்தால் , அவருக்கு சரியான உணவு முறையை , மருத்துவரைப் பார்க்கவேண்டி இருப்பின் அந்த அறிவுரையோ கிடைக்கும்தானே?

அவர் விருப்பப்படும் நாளில் மீண்டும் டெஸ்ட் எடுத்துப் பார்க்கும்பொழுது மேலே சொன்னதை விட அளவுகள் குறைந்தால் அவருக்கு நமது டயட்டின் மீது நம்பிக்கை வரும்தானே? வராவிட்டால் இது வேலைக்காவாது என்று வேறு வழியைப் பார்க்கச் சென்றுவிடுவார்தானே?

யோசியுங்கள் மக்களே..

உணவுமுறை முதற்கொண்டு பொழுதுபோகாமல் எதையும் இந்தக் குழு பரிந்துரைப்பதில்லை. அதில் இருப்பதை சரியாகப் பின்பற்றினாலே போதும்.

போலவே, அந்த டெஸ்ட் ரிசல்ட்டை எல்லாம் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் காண்பித்து சரியான ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளவேண்டும். நாங்கள் அதில் சில விசயங்கள் தவிர்த்து மற்றவற்றை அலசி ஆராய்வதில்லை. ஏனென்றால் அதெல்லாமே நீங்கள் ஒரு மருத்துவரை நேரடியாகக் கலந்து பேசி புரிந்துகொள்ளவேண்டியவை.

உணவுமுறை முன்பாக ரத்தப் பரிசோதனை அவசியம், அலட்சியப்படுத்துபவர்களுக்கு ஆலோசனை கிடைக்காது. அதனால் வரும் பாதிப்புகளுக்கு குழு பொறுப்பல்ல.