Monday, November 7, 2016

எடைபயிற்சியும் பேலியோவும்! அனுபவ கட்டுரை தொடர் !!! பாகம் – 2
வலியின்றி வளர்ச்சி இல்லை என்பது எடைப்பயிற்சி பழமொழி! ……….. வலியின்றி வளர்ச்சி உண்டு!!! இது பேலியோ புது மொழி!!! குழப்பமாக இருக்கிறதா? பதில் அறிவியல்பூர்வமானது! எல்லோருக்கும் ஆர்னால்டு போல ஆகவேண்டும் என்ற நப்பாசை ஜிம்முக்குள் நுழைந்ததுமே வந்துவிடும்! ஒரு புதிய நபர் உடற்பயிற்ச்சி சாலைக்கு செல்கிறார்! உள்ளே நுழைந்தவுடன் அங்க இருக்கும் தம்பிள்ஸ்தான் அவர் எடுக்கும் முதல் ஆயுதம்! அதை கையில் எடுக்கும்போதே மனசு ஆனழகன் கனவில் மிதக்க ஆரம்பித்துவிடும்!!!
.
.
எடுத்த எடுப்பிலேயே ஆர்வமிகுதியால் ஒவ்வொரு கைக்கும் 100- லிருந்து 150 ரெப்ஸ் ( முறைகள் ) தம்பிள் ஃப்ரண்ட் கர்ல் செய்துவிடுவார்! அதோடு விடுவாரா என்றால் இல்லை! போய் பெஞ்ச்ப்ரஸ்ஸில் படுத்துகொள்வார்! நெஞ்செல்லாம் சிவக்கும் வரைக்கும் பெஞ்ச் ப்ரஸ்சில் மல்லுகட்டுவார்! பிறகு லாட்ஸ் புல் டவுன் பாரில் ஒரு அரைமணி நேரம் லாட்ஸ்க்கு பயிற்ச்சி ! அது புல்லிங் மூவ்மெண்ட் ஆதலால் அப்போது களைப்போ வலியோ தெரியாது! அதோடும் முடியாது! வேறு ஏதாவது பயிற்ச்சிகைளையும் செய்துவிட்டு கண்னாடிக்கு முன் தன் கொளுக்மொழுக் கைகளை பைஸப்ஸ் பம்ப் ஆகியிருக்கா என பார்ப்பதுதான் காமடியின் உச்சம்! இது பெரும்பாலும் ட்ரெயினர் இல்லாத மத்தியதர ஜிம்மில் தான் அதிகமாக நடக்கும்!
.
.
அவ்வளவுதான்! அன்று இரவு நேரா ஹோட்டலுக்கு போய் ரெண்டு ஆஃப்பாயிலும் அஞ்சு பரோட்டாவும் சாப்பிட்டுவிட்டு போய் படுக்கும் மாப்பிளைக்கு நைட் கனவில் ஆர்னால்டு நிச்சயம் வந்துவிடுவார்!! மறு நாள் காலை எழும்போதுதான் நரகம் தெரியும்! டேக் ஆஃப் ஆகும் ப்ளேன் மாதிரி கையை ரெண்டுபக்கமும் விரித்துகொண்டு கையை மடக்கவோ நீட்டவோ முடியாது! மீறி முயற்ச்சி செய்தால் வலியில் கும்பிபாகம் கண் முன்னாடி காட்சியளிக்கும்!
.
.
உடனே அந்த ஜிம் மாஸ்ட்டருக்கு நம்ம கதா நாயகன் போன் போட்டு நேத்து அப்படி இருந்த நான் இன்னிக்கு இப்பிடி ஆயிட்டேன் சார் என புலம்பும் போது அந்த ஜிம் மாஸ்டர் சொல்லும் பொன்மொழிதான் ’’வலியின்றி வளர்ச்சியில்லை’’ !!!!! ஆனால் வலியில்லாமல் வளர்ச்சியில்லையா ? அப்படின்னு கேட்டால் வலியில்லாமல் வளர்ச்சி உண்டு என்பதே பதில்! ஆம்! அது பேலியோவில் மட்டுமே சாத்தியம்! எப்படி??? அதற்க்கு உடற்பயிற்ச்சி செய்யும் போது என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ள வேண்டும்!
.
.
நாம் ஒரு ஜிம்மில் போய் தம்பில் ஃப்ரண்ட் கர்ல் செய்ய்வதாக வைத்துகொள்வோம்! நம்முடைய கை தசையின் தாங்குதிறன் 5 கிலோ என்றால் நாம் நான்கு கிலோ எடையில் 100 ரெப்ஸ் தம்பிள் ஃப்ரண்ட் கர்ல் செய்தாலும் மறு நாள் நமக்கு வலியும் பெரிதாக இருக்காது! கையில் எந்த மாற்றமும் நிகழாது! கொஞ்சம் கலோரி மட்டும் செலவாகும்! அதே சமயம் எட்டு கிலோ எடையுள்ள தம்பிள்ஸ் எடுத்து வெறும் 50 ரெப்ஸ் செய்தாலும் கை தசை செல்கள் உடைய ஆரம்பிக்கும்! கொஞ்சம் கொஞ்சமாக எட்டுகிலோவிற்க்கும் கை தசைகள் வித்ஸ்டேண்டிங் கெப்பாசிட்டியை டெவலப் செய்து கொள்ளும்!
.
.
அதனால் நாள் ஆக ஆக மேலும் எடையை கூட்டி செய்ய வேண்டும்! இந்த இடத்தில் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும்! இப்பிடியே எடையை கூட்டி செய்ய ஆரம்பித்தா;ல் இரண்டு வருடம் கழித்து 60 கிலோ தம்பிள் கர்ல் செய்ய முடியுமா? இந்த சந்தேகம் எல்லோருக்கும் வரும்! ஒரு குறிப்பிட்ட மாதங்கள் ஆன பின் பயிற்சியை மாற்றவேண்டும்! அதாவது தம்பல் ஃப்ரண்ட் கர்ல்-க்கு உடல் பழக்கப்பட்டுவிட்டால் பார்பெல் ஃப்ரண்ட் கர்ல் செய்ய வேண்டும்! அதிலும் கை பழக்கப்படும் போது ez- பாருக்கு போய்விடவேண்டும்! குறைந்த பச்சம் நான்கு மாதமும் அதிக பச்சம் ஆறு மாதத்திற்க்கு மேலும் ஒரே விதமான பயிற்சியை செய்யகூடாது! ஒரே தசை தொகுதிக்கு வேறு வெறு பயிற்சியை குறிப்பிட்ட கால அளவில் மாற்றி மாற்றி செய்யும்போதுதான் தசைகள் வேகமாமவும் சீராகவும் வளர்ச்சிபெறும்! தசை செல்கள் உடைவதும் வளர்வதும் தொடரும்!
.
.
அந்த உடைந்த செல்கள் வளரும்போதுதான் பைசப்ஸ் பெரிதாக வளர ஆரம்பிக்கும்! ஒவ்வொரு முறையும் நாம் கடுமையான பயிற்ச்சி செய்யும் போது மேலும் மேலும் தசைச்செல்கள் உடைவதும் அது இரண்டு செல்கள் நான்காகவும் நான்கு செல்கள் எட்டாகவும் பெருக பெருக உடல் தசைகள் மளமளவென வளர ஆரம்பிக்கும்! ஆனால் இதில் மிகவும் முக்கியமான விஷயம் ஒவ்வொரு உடற்ப்பயிற்சிக்கு பின்னும் பேலியோ உனவு எடுப்பவர்களுக்கு தசை சிதைவை தடுக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடெண்டுகள் தேவையான அளவு கிடைப்பதாலும், உடைந்த செல்கள் வளர்வதற்க்கு தேவையான மிக அருமையான எஸென்ஸியல் புரத அமினோ அமிலங்கள் உனவின் மூலம் கிடைத்து விடுவதாலும் உடைந்த தசைச்செல்கள் உடனடியாக வளர துவங்குகிறது! மேலும் நமக்கு அதிகப்படியான கொழுப்பு உணவில் இருப்பதால் நீண்ட நேரம் பயிற்சி செய்ய உடலுக்கு பவர்சப்ளை இருந்துகொண்டே இருக்கும்!
.
.
ஆகவே நாம் எந்த தசைதொகுதிக்கு பயிற்சி செய்கிறோமோ அந்த தசை பகுதியில் வலி அதிகம் இருக்காது! மேலும் நாம் சாப்பிடும் பசுமஞ்சள், துளசி, பாதாம், பூண்டு போன்ற உனவு பொருட்கள் உள்காயங்களை உடனுக்குடன் ஆற்றிவிடுவதால் வலியே இருக்காது என சொல்லலாம்! அதாவது பேலியோ டயட்டில் இல்லாதவர்களை விட பேலியோ டயட்டில் உள்ளவர்களுக்கு ஏற்ப்படும் தசைவலி என்பது மிக சொற்ப்பமே! ஆனால் பேலியோ டயட்டில் இல்லாமல் காமன் மேன் டயட்டில் இருந்து கொண்டு மேற்க்கூறிய உடற்ப்பயிற்ச்சியை செய்யும் போது உடைந்த செல்களுக்கு போதுமான சரிவிகித புரதம் கிடைக்காமலும், உள்ளே ஏற்ப்படும் உள்காயங்களுக்கு ஆண்ட்டி இன்ஃப்ளமேஷன் உணவுகள் கிடைக்காமலும் போவதால் ரத்தத்தில் ஃப்ரீரெடிகல்ஸ் அதிகமாகி தசைச்செல்கள் சிதைந்து போய் மிக பயங்கரமாக வலியெடுத்துவிடும்!
.
.
இந்த வலியை தாங்கிகொண்டேதான் காமன்மேன் டயட்டில் உடற்ப்பயிற்சியை தொடர்ந்து செய்கிறார்கள்! நூற்றுக்கு 90 பேர் பாதியிலேயே ஜிம்மை விட்டு ஓட்டமாய் ஓடுவதும் தாங்கமுடியாத தசைவலியால் தான் நடக்கிறது! ஆகவே பேலியோ இளைஞர்களே! நீங்கள் தைரியமாக உடற்பயிர்ச்சி செய்யுங்கள்! நிச்சயம் சரியான அசைவ பேலியோ டயட் ஃபாலோவ் செய்பவர்களுக்கு வலியின்றி தசைவளர்ச்சியை அட்டகாசமாக பெற முடியும் என்ற பதிலோடு இரண்டாம் பாகத்தை நிறைவு செய்கின்றேன்! இவ்வளவு நேரம் ஆர்வமாக சொல்லிட்டு கடைசியில் அசைவ பேலியோ-வினர் மட்டும்தான் கட்டழகு தசைகளை பெற முடியுமா??? சைவ பேலியோவினர் ஜிம் பக்கமே போக கூடாதா? என கேட்க்கும் அன்பர்களுக்கு உண்மையாக பதில் சொல்ல வேண்டும் என்றால் ஆம் என்பதுதான் உண்மையான பதிலாக இருக்கும்!
.
சைவ பேலியோ நண்பர்கள் விடாப்பிடியாக நான் ஆனழகன் ஆகியே தீரவேண்டும் என்று விரும்பினால் அது சுத்தமாக முடியாது என சொல்லத்தேவையில்லை! சரிவிகித புரத உனவு எடுப்பதில் இமாலய கவனம் செலுத்தவேண்டும்! மேலும் தவிற்க முடியாத சில நேரங்களில் புரத சப்ளிமெண்ட்டுகள் எடுக்கவேண்டிவரும்! இது சைவ பாடிபில்டர்களுக்கு மட்டுமே! அட நான் ச்சும்மா ஜென்ரல் ஹெல்த்துக்காக ஜிம் போறேன் –ன்னு சொல்ரவங்க சைவ பேலியோவில் இருந்துகொண்டு மிதமான உடற்ப்பயிற்ச்சிகளை தாராளமாக செய்யலாம்! ””ஆரோக்கியமே மஹாபாக்யம்”” ……………… தொடரும்!!!
Post a Comment