Monday, November 7, 2016

எடைபயிற்சியும் பேலியோவும்!-- பாகம் – 4

நடந்தால் நன்மையே! ……


.
.
எங்கு நடக்கலாம்?
.
.
பாதுகாப்பான ஒற்றையடி பாதை, குளக்கரை, வயல், தோட்டம் ஒட்டியுள்ள பாதை, மரங்கள் இருபுறமும் உள்ள அதிகம் வாகன போக்குவரத்து இல்லாத பாதை, கிராம சாலைகள், மலைப்பாதை, நகரங்களில் உள்ள பூங்கா, கடற்கரை , மரங்கள் உள்ள மைதானங்கள், ஆற்றங்கரை, இங்கெல்லாம் நடைபயிற்சி மேற்க்கொள்ளலாம்!
.
.
எங்கு நடக்க கூடாது?
.
கண்டிப்பாக ஹைவேஸில் நடக்க கூடாது! தொழிற்சாலை கழிவுகள் தேங்கியுள்ள இடம், அதிக புகை வெளியிடும் தொழிற்ச்சாலைகள் உள்ள இடம், பஞ்சு, நூல் மில் அருகில், பெயிண்ட் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் உள்ள இடங்கள், அதிக மண் மற்றும் தூசிகள் பறக்கும் இடங்கள், வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகள், ஜன சந்தடி மிகுந்த சந்தை , மார்க்கட் , மழை நீர் தேங்கியுள்ள இடங்கள், சாக்கடை நீர் தேங்கியுள்ள இடங்கள், இங்கெல்லாம் நடை பயிற்சி செய்யக்கூடாது!
.
.
ரொம்ப முக்கியமான விஷயம் சிலர் வீட்டுக்குள்ளேயே பூனைமாதிரி ஹாலுக்கும் கிச்சனுக்கும் நடப்பார்கள்!!! அது கூடவே கூடாது!முக்கியமாக கார்ப்பரேஷன் குப்பை எரிக்கும் பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர் தள்ளித்தான் நடக்க வேண்டும்! இல்லையென்றால் புற்று நோயை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்! குப்பையை யார் எரித்தாலும் ஒரு குழுவாக சேர்ந்து கண்டிக்கவும், தட்டிகேட்கவும் செய்தால் அந்த மாசில் இருந்து நம் சந்ததியை காப்பாற்ற முடியும்!
.
.
யாரோடு நடக்க கூடாது?
.
வயதானவர்கள், நோயாளிகள், கை கால் அடிபட்டு சிகிச்சையில் இருப்பவர்கள், குழந்தைகள், ஆகியோர்களோடு நடை பயிற்சி செய்ய கூடாது! நமது வேகமும் கவனமும் தடைபடும்! அவர்களுக்கு உதவ வேண்டுமானால் அதெற்கென நேரம் ஒதுக்கி உதவி செய்யலாம்!
.
.
யாரோடு நடக்கலாம்?
.
சம வயது உடையவர்கள், ஆத்மார்த்தமான நண்பர்கள், உங்களோடு மனரீதியாக ஒத்து போகிறவர்கள், பாஸிட்டிவான எண்ணம் கொண்டவர்கள், உற்சாகமாக நகைச்சுவையாக பேசக்கூடியவர்கள், உங்களை விட வயதில் சிறியவர்கள், ஆகியவர்களோடு நடக்கலாம்! ஆனாலும் தனியாக நடப்பதே உத்தமம்! மனைவியோடு நடப்பது ஆபத்து! காரணம் கேட்க வேனாம்! ஏன்னா என் வொய்ஃப் இத படிப்பாங்க! அப்புறம் எனக்கு பேலியோ வாத்து கிடைக்காம போயிரும்! அவங்கவங்க அனுபவத்தை வச்சி யூகிச்சுகோங்க!
.
.
எந்த நேரத்தில் நடக்கலாம்?
.
அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் நடை பயிற்சியை முடித்து விட வேண்டும்! அந்த நேரம் நல்ல ஆக்ஸிசன் கிடைக்கும்! காற்றில் மாசு மிகவும் குறைவாக இருக்கும்! மாலை 5 மணிக்கு மேல் உங்கள் வசதியை பொருத்து நடக்கலாம்! கட்டாயம் மதிய வெய்யிலில் நடக்க கூடாது! வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் மட்டும் மதிய வெயிலில் அதிக பட்சம் 15 நிமிடம் நி்ற்கலாம்!
.
.
தலையை ஈர துனியால் மூடிகொள்ளலாம்! பதினைந்து நிமிடத்துக்கு மேல் நிற்ப்பது ஆபத்து! அதாவது சூரியன் என்பது அப்பட்டமான ஹட்ரஜன் குண்டுதான்! நாம் வெடிக்கும் அனுகுண்டுக்கு பெரியப்பா வகை! ஜப்பானில் வெடிக்கப்பட்ட அனுகுண்டை விட பல ஆயிரம் மடங்கு சக்தியுடைய அனுவெடிப்பானது சூரியனில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்!
.
.
அதனால் தான் சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சூரியனின் வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது! இதில் மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால் துருவ பகுதிகளிலும், இந்தியா ,சீனா போன்ற நாடுகளுக்கு மேல் பகுதியிலும் சூரிய கதிர்வீச்சில் இருந்து நம்மை காக்கும் ஓசோன் பாதுகாப்பு படலம் அதிகம் சேதமாகியுள்ளது! இந்த ஓட்டையானது நம் கீழடுக்கு வளிமண்டல எல்லைக்குள்ளே இருப்பதால் பூமியோடு சேர்ந்து அந்த ஓசோன் மண்டல ஓட்டையும் சுற்றிகொண்டேதான் வரும்!
.
.
ஆக எப்போதுமே இந்திய சீன நாடுகளில் பகல் நேரங்களில் அல்ட்ரா வயலட் ரேஸ் என சொல்லப்படும் புற ஊதா கதிர்கள் , ரேடிய கதிர்வீச்சுகள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் போன்ற ஆபத்தான கதிர்வீச்சுகள் இருந்துகொண்டே இருக்கும்! அது காலை மற்றும் மாலை வேளைகளில் மிக குறைவாகவும் மதிய வேளையில் அதிகமாகவும் இருக்கும்! எனவேதான் உச்சிவெயில் உடம்புக்கு ஆகாது! அதனால் கண்டிப்பாக கண்னுக்கு நல்ல தரமான கருப்பு கண்ணாடி போட்டுகொள்ள வேண்டும்! பின் நல்ல தண்னீரில் குளித்துவிட வேண்டும்!
.
.
மேலும் காலை மற்றும் மாலை வெயிலில் தூரத்து அகச்சிவப்பு கதிர்கள் எனப்படும் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய இன்ஃப்ரா ரெட் ரேஸ் செறிவாக இருக்கும்! எனவேதான் காலை மாலை நடை பயிற்ச்சி செய்யும் போது ஒளி ஊடிருவக்கூடிய மெல்லிதான சட்டை போட்டு நடப்பது நல்லது!
.
.
அதேபோல் அர்த்த ஜாமத்தில் நடைபயிற்சி செய்வதும் கூடாது! புளிய மரங்கள் அடர்த்தியாக உள்ள சாலைகளில் நடப்பதை தவிர்ப்பது நல்லது! காரணம் பிசாசு அல்ல! அறிவியல் பூர்வமாக சில மரங்கள் சில நச்சு வாயுக்களை வெளிவிடும்! அதில் புளி, வேலிக்கறுவை போன்ற மரங்கள் முதலிடம் வகிக்கின்றன! பார்த்தீனியம் செடிகள் அதிகம் உள்ள இடங்களும் மூச்சு அலர்ஜியை ஏற்ப்படுத்தும்! மற்ற மரங்கள் நல்லது!! ............ இன்னும் நடக்கலாம்!!!
Post a Comment