Monday, November 7, 2016

பேலியோவும் எடைபயிற்சியும்!!! ……..பாகம் ---5

.
நடை பயிற்சி…. நுனுக்கங்கள்!!!
.

யார் யார் எப்படி நடக்க வேண்டும்?
.
.
என்ன காரனத்திற்க்காக நடைபயிற்சி செய்கிறோமோ அதற்க்கேற்றார்போல் நடை இருக்க வேண்டும்!
உடல் எடை குறைப்புக்ககாக நடப்பவர்கள், குறைந்தது 5 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்! மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் இல்லையென்றால் ஏழு கிலோமீட்டர் வரைக்கும் கூட நடக்கலாம்! அதற்க்கு மேல் வேண்டாம்!
கட்டாயமாக நல்ல தரமான காலனி (ஷீ? அணிந்துதான் நடக்க வேண்டும் ! நாம் அணிந்திருக்கும் காலனி நம் காலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்க வேண்டும்!
.
.
அதாவது அதிக இருக்கமாகவும் இருக்கக்கூடாது! மிகவும் தளர்வாகவும் இருக்க கூடாது! செருப்பு அணிந்து நடப்பது மிகவும் தவறு!
பாரதி சொன்னமாதிரி நிமிர்ந்த நடையும் நேரான பார்வையும் இருக்க வேண்டும்! கை கால்களை விரைப்பாக வைத்துகொண்டு மார்ச்சிங் செய்ய வேண்டாம்! சாதாரனமாக கைகளை வீசி நடந்தால் போதும்! உடல் இளைப்பதற்க்காக நடப்பவர்கள் ஒரே மாதிரி சீராக நடக்க கூடாது!
.
.
அடிக்கடி வேகத்தை அதிகப்படுத்தவும், குறைக்கவும், திடீரென மெதுவாக ஓடுவதும், கொஞ்சம் வேகமாக ஓடுவதும், பின் மெதுவாக நடப்பதும், இப்படி மாறி மாறி பயிற்ச்சி இருக்க வேண்டும்! முக்கியமாக நாய்கள் அதிகம் உள்ள இடத்தில் கவனமாக பயிற்சி செய்ய வேண்டும்! எச்சரிக்கை இல்லையென்றால் தொப்புளை சுற்றி ஊசி போடவேண்டியிருக்கும்! ஒரு வேளை நியாண்டர் செல்வம் ஜீ மாதிரி மரம் ஏற தெரிந்தால் தப்பிக்கலாம்!
.
.
நடக்கும் போது குதிகாலை ஊண்றி நடக்க வேண்டும், ஓடும்போது பாதத்தின் முன் பகுதியை ஊன்றி ஓட வேண்டும்! அடி வயிற்றை கொஞ்சம் இருக்கமாக வைத்துகொண்டு நடப்பது ஊளைச்சதையை சீக்கிரமாக கரைக்க உதவும்! முதுகை வளைத்து கூன்போட்டபடி நடக்க கூடாது! முழங்காலை ஒவ்வொர் எட்டி வைக்கும் போதும் லாக் செய்ய கூடாது! முழங்கால் மூட்டை எப்போதும் தளர்வாகவே வைத்திருக்க வேண்டும்! ஒவ்வொரு முறையும் லாக் செய்தால் காட்டிலேஜ் ( மூட்டு ஜவ்வு என்று சொல்லப்படும் நுண் குருத்தெலும்புகள்) பாதிக்கப்படகூடும்!
.
.
லோ சுகர் உள்ளவர்கள் கையில் சாக்லேட் வைத்திருப்பது மிகவும் முக்கியம்! இதய அடைப்பு உள்ளவர்கள் , சிகிச்சை எடுத்துகொண்டு இருப்பவர்கள் துனையில்லாமல் நடக்க கூடாது! மூட்டு ஜவ்வு தேய்மானம் உள்ளவர்கள் அதிக தூரம் நடை பயிற்சி செய்ய கூடாது! யூரிக் அமிலத்தால் எலும்பு இனைப்புகளில் சோடியம் பைரேட் படிமானங்கள் இருப்பவர்கள் அந்த பிரச்சனை தீரும் வரைக்கும் பிஸியோ பயிற்ச்சிகளை செய்துவருவது நண்மை பயக்கும்! ஓடுதல், நடத்தல் எலும்புகளில் உராய்வுகளை ஏற்ப்படுத்தி வலியை கொடுக்கும்!
.
.
நடந்துகொண்டோ , நடந்து முடித்த உடனோ கண்டதையும் சாப்பிடுவதை கட்டாயம் தவிற்க்கவேண்டும்! முக்கியமாக நடை பயிற்சி முடித்தவுடன் வென்னீரில் எலுமிச்சையும் கொஞ்சமாக உப்பும் சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது! நடக்கும் முன்னால் வெதுவெதுப்பான தண்ணீர் அரை லிட்டர் வரைக்கும் குடிக்கலாம்! நடந்து முடித்தவுடன் ஆர்கானிக் க்ரீன் டீ வித் லெமன் சேர்த்தும் குடிக்கலாம்!
.
.
ஆனால் இனிப்பு எந்த வகையிலும் சேர்க்க கூடாது! முக்கியமாக செட்டியார் கடை போண்டாவை எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துகொள்ள வேண்டும்! முடிந்தவரைக்கும் போண்டா, வடை போன்ற ஆரோக்கியத்துக்கு வேட்டுவைக்கும் கடை பக்கம் போகாமலயே இருப்பது நல்ல தற்க்காப்பாக அமையும்!
.
.
அதேபோல் இன்னொரு முக்கியமான விஷயம் காலையில் எழுந்தவுடன் கற்றாழை சாறு, அருகம் புல் சாறு, நில வேம்பு சாறு, மலைவேம்பு கஷாயம், இப்படியெல்லாம் அதிரடி வைத்தியத்தில் இறங்கவே கூடாது! உடல் காலையில் மெதுவாக சோம்பல் முறித்து எழும்போதே இப்படியான முரட்டு வைத்தியெமெல்லாம் செய்தால் கட்டாயம் சிறு நீரக கோளாருகள் வந்து விடும்!
.
.
அதெல்லாம் நேய்வாய்ப்பட்டவர்களுக்கான மருந்து மட்டும்தான்! ஆரோக்கியமாக இருப்பவர்கள் வருமுன் காக்க சரியான பேலியோ உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலே போதும்! காலையில் வெறும்வயிற்றில் ஐஸ் வாட்டர் குடிப்பது, நடந்து முடித்தவுடன் ஐஸ் வாட்டர் குடிப்பது, பெப்ஸி , கோக் போன்ற விஷபானங்களை குடிப்பது எல்லாம் நமக்கு நாமே செய்வினை வச்சிகிறதுக்கு சமம்!
.
.
சர்க்கரை நோய் இல்லாதவர்கள் உடல் எடைகுறைப்பில் இல்லாமல் மெயிண்டென்ஸ் டயட்டில் உள்ளவர்கள் மட்டும் காலை நடை பயிற்சி முடிந்து ஒரே ஒரு இளனீர் சாப்பிடலாம்! அதுவும் மிகவும் உப்புபதமாக அதிகபச்சம் 200 மில்லி குடித்துவிட்டு அந்த இள நீரின் உள்ளே இருக்கும் வழுக்கையை கட்டாயம் சாப்பிட்டுவிட வேண்டும்!
.
.
ஆச்சர்யப்படும் விதமாக இந்த இள நீரும் வழுக்கையும் சாப்பிடும் போது முக்கியமான புரத அமினோ அமிலங்கள் நம் உடலுக்கு கிடைக்கும்! மேலும் இள நீர் ஒரு சுவையான டயூரடிக்ஸ் பானம்! நல்லா யூரின் போகும்! ஆனால் 200 மில்லி இள நீரில் 12 கிராம் சர்க்கரை உள்ளதை மறக்க வேண்டாம்! எனவே மெய்ன்டென்ஸ் டயட் உள்ளவர்கள் மற்றும் நான்டயபட்டிக் உள்ளவர்கள் மட்டும் தேவைப்பட்டால் குடிக்கலாம்!
.
.
பொதுவான உடல் ஆரோக்கியத்துக்காக நடப்பவர்கள் ஒரே சீரான நடை மணிக்கு நாலு அல்லது ஐந்து கிலோ மீட்டர் நடந்தால் போதும்! மூச்சை ஒரே சீராக நல்ல ஆழமான சுவாசம் கட்டாயம் வேண்டும்! எடை குறைக்க நடப்பவரகள் 30 வயதுக்குள் இருந்தால் இதயதுடிப்பு நிமிடத்துக்கு 120 வரைக்கும் போகலாம்! 30 வயதுக்கு மேல் உள்ளவர்களும் கூட ஆரோக்கியமாக இருந்தால் இதயதுடிப்பு 120 வரைக்கும் போவதில் தவறு இல்லை!
.
.
ஆனால் தொடர்ந்து அதேபோல் இல்லாமல் மீண்டும் இதய துடிப்பு குறையுமாறு நடையின் வேகத்தை மட்டுப்படுத்தவும் மறுபடியும் வேகப்படுத்தவும் மாறி மாறி செய்ய வேண்டும்! உடலை எந்த ஒரு பயிற்ச்சிக்கும் நிரந்தரமாக பழக்கப்படுத்த விடவே கூடாது! தொடர்ச்சியான குழப்ப நிலையிலேயே வைத்திருந்தால்தான் கொழுப்பு தொடர்ந்து எரிக்கப்பட்டு கொண்டே இருக்கும்!
.
.
ஒரே மாதிரியான பயிற்ச்சிக்கு உடல் பழக்கப்பட்டு விட்டால் பின் கொழுப்பு எரிக்கப்படுவது குறைந்துவிடும்…. அதனால்தான் சில தொழிற்ச்சலைகளில் கடினமாக வேலை செய்பவர்கள் கூட குண்டர்களாக இருப்பதை பார்க்கிறோம்!! ஆக உடலை ஒரே மாதிரியான உடற்பயிற்ச்சிக்கு பழக விடாமல் எந்த பயிற்ச்சியாக இருந்தாலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிகொண்டே இருக்க வேண்டும்! உடல் வாகை பொருத்து அதிக பட்சம் 6 மாதம் ஒரே மாதிரியான பயிற்சியை செய்யலாம்!!
.
.
வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் சைக்கிள் ஓட்டும் பயிற்சியும் சேர்த்து செய்யலாம்! சைக்கிள் வாங்கும் போது சங்கர் ஜீ-யின் சைக்கிளை போன்று நல்ல தரமான சைக்கிளாக வாங்க வேண்டும்! கட்டாயம் ஹெல்மெட் அனிய வேண்டும்! மூட்டுகளை க்ரிப் பேண்டேஜ் மூலம் கவர் செய்வது நல்லது! நடப்பதை போன்றே சிறிது நேரம் மெதுவாகவும் சிறிது நேரம் வேகமாகவும் மாற்றி மாற்றி செய்தால் உடல் கொழுப்பு வேகமாக தொடர்ந்து எரிக்கப்படும்! நான் 2002-ம் வருடம் சைக்கிளில் கரூரில் இருந்து கோவை வடவள்ளி சென்று மீண்டும் கரூர் வந்தேன்! மூன்று நாளில் நான் சைக்கிளில் கடந்த தூரம் சுமார் 400 கிலோ மீட்டர்! ………………………………………………………………………………………………………………….. இன்னும் நடக்கலாம்!!!



Gunaseelan

No comments: