Friday, November 4, 2016

பேலியோவில் செய்ய கூடிய தவறுகள்

பேலியோவில் நாம் செய்யகூடிய தவறுகள்
1) கொழுப்புநீக்கிய இறைச்சி, எக் ஒயிட்ஸ், ஸ்கிம் மில்க் உண்பது......நம் ஆற்றல் ஒன்று கார்பில் இருந்து வரவேண்டும் அல்லது கொழுப்பில் இருந்து வரவேண்டும். புரதத்தின் மூலம் வந்தால் ராபிட் ஸ்டார்வேஷன் நிகழ்ந்து பாதிப்பு ஏற்படும். தோசையின் மேல் எக் ஒயிட்ஸை ஊற்றிசாப்பிடும் காமன் மேன் டயட்டால் பாதிப்பில்லை. ஏனெனில் அதில் கார்ப் ஏராளமாக கிடைத்துவிடுகிறது..ஆனால் வெறுமனே 4 முட்டை ஆம்ல்ட பிரேக்பாஸ் சாப்பிடுகையில் முட்டையின் மஞ்சள் கருவை உண்பது மிக அவசியம் ஆகிறது
2) பேலியோ என்ற பெயரில் இனையத்தில் ஏராளமான ரெசிபி கிடைக்கும். பேலியோ ரெசிபி என இருந்தாலும் உள்ளே தேன் ஊற்ற சொல்லி, வாழைபழம் போட சொல்லி எல்லாம் இருக்கும். அதை எல்லாம் சாப்பிட்டுவிட்டு "பேலியோவில் எடை ஏறிவிட்டது" என நினைக்ககூடாது :-)
3) பேலியோ பார்கள், பேலியோ பானங்கள் எல்லாம் சந்தையில் வருகின்றன. பேலியோவுக்கு நல்ல சந்தை உருவாகிவருவதால் கண்டதையும் போட்டு பேலியோ என விற்கிறார்கள். பேலியோவில் பணம் சம்பாதிக்க கூடியவர்கள் இறைச்சி கடைக்காரரும், காய்கறிகடைகாரருமே. இவர்கள் இருவரையும் தவிர்த்து யாரிடமும் பொருட்கள் வாங்கவேன்டாம்
4) பேலியோவில் இருந்தாலும் போதுமான வைட்டமின், மினரல்கள் கிடைக்கும் வண்ணம் இறைச்சி, விதவிதமான காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்லவேண்டும். லோகார்ப் என சொல்லி மூன்று வேளையும் முட்டையை மட்டும் சாப்பிடவேண்டாம்..சிலர் அம்மாதிரி கிராஷ் டயட்டுகளில் ஈடுபடுவது உண்டு
5) பிரேக் எடுக்கையில் கவனம் அவசியம். சிலர் வாரம் 2, 3 நாள் எல்லாம் பிரேக் எடுப்பார்கள் :-) பிரேக் எடுத்தாலும் அன்றுசோயா எண்னெயில் பொறித்த பண்டம், இனிப்புகள், ஐஸ்க்ரீம் முதலானவற்றை தவிருங்கள். இவற்றை எதாவது பிறந்தநாள், பண்டிகை அன்றே சபபிடுங்கள் (சோயா மட்டும் உயிரே போகும் சூழலிலும் வேண்டாம்). சீட் செய்கையில் அரிசி, உருளைகிழங்கு, பழங்கள் என வீட்டுசாப்பாடு சாப்பிட்டு சீட் செய்யலாம். அதுவும் மாதம் 2, 3 முறை மட்டுமே. அதற்குமேல் போகவேண்டாம். அதிலும் குறிப்பாக எண்னெயில் பொறித்த பலகாரத்தில் வரும் டிரான்ஸ்பேட் உடலை விட்டு அகல பல வாரங்கள் ஆகும் என்பதால் அவற்றை வருடத்தில் சில நாட்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே உண்பது சிறந்தது
6) 6) போதுமான அளவில் காலரிகள் எடுக்காமல் பட்டினி கிடப்பது..இது தற்காலிக பலனை அளித்தாலும் மயக்கம், தலைசுற்றல் முதலானவை வரலாம். வெறுத்துபோய் அதன்பின் காமன்மேன் உணவை ஒரு கட்டுகட்டுவதும் நிகழும். அதனால் காலரிகள் குறையாமல் பார்த்துக்கொள்வது அவசியம்

Neander Selvan

No comments: