Friday, November 4, 2016

குழந்தைகளுக்கான உணவு முறை மாற்றம்

குழந்தைகளுக்கான உணவு முறை மாற்றம்

உடல் எடை குறைப்பு, குருதி கொதிப்பு, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், கீல்வாதம், ஒற்றைத்தலைவலி, பிசிஓடி என பல பிரச்சனைகளுக்காக டயட் எடுக்க வந்த குடும்பத்தினர், டயட் பற்றி அறிந்து, அதன் பலன்களை அடைந்தபிறகு உடனே யோசிப்பது குழந்தைகள் பற்றி...
நாம் அடைந்த பலன்களை நம் குழந்தைகள் அடையவேண்டுமே, நாம் அனுபவித்த துன்பங்களை நம் குழந்தைகள் அனுபவிக்காமல் வருமுன் காக்கவேண்டுமே என தவிப்போடு கேள்வி எழுப்பும் பெற்றோர்களுக்கு...
குழந்தைகளின் வளரும் பருவத்தில் அவர்களின் இனிமையான நினைவுகளுள் ஒன்று அம்மாவின் உணவின் சுவை. அந்த இனிமை நினைவுகளை அவர்களிடம் இருந்து எடுத்துவிடவேண்டாம். வகைவகையான இனிப்பு வகைகளை விளம்பரங்களிலும், மற்ற குழந்தைகள் உண்பதிலும் அறிந்துகொள்ளும் குழந்தகளுக்கு அவைகளை சுவைப்பதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். அதைப்பற்றிய சிறிய விளக்கம்...
சற்றே பெரிய குழந்தைகள் - 13 முதல் 18 வயது என்றால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை உங்கள் உணவு முறை மாற்றத்துக்குள் கொண்டுந்துவிடுங்கள்...
3 முதல் 12 வயது உடைய குழந்தைகளுக்கு கோக், பிஸா, பர்கர், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் வகைகர், கார்பனேட்டட் குளிர்பானங்கள், பானிபூரி, பரோட்டா போன்றவற்றை கட்டாயமாக தவிர்த்துவிடுங்கள்.
0 - 3 வயது வரை தாய்ப்பால் + உங்கள் குழந்தைகள் நல மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகள் மட்டும்.
வாரத்தில் ஒரு நாள், சனிக்கிழமை மட்டும் சாக்லேட் போன்ற இனிப்பு வகைகளுக்கு அனுமதி கொடுங்கள். முதலில் கடினமாக இருந்தாலும், போகப்போக பழகிவிடும் குழந்தை. மற்ற நாட்களில் உறவினர் / தோழமைகள் இனிப்பு வகைகள் பரிசளித்தாலும், சனிக்கிழமை சாப்பிட்டுக்கொள்கிறேன் என குழந்தையே சொல்லும் அளவில் இருக்கவேண்டும். அந்த வகையில் நீங்கள் குழந்தையோடு அமர்ந்து உரையாடி இந்த விஷயத்தை புரியவைக்கவேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்துடன் குழந்தையின் பல்லும் ஆரோக்கியமாக இருக்கும், பத்து வயதில் பல்லில் ஓட்டையுடன் டெண்டிஸ்ட்டிடம் ஓடவேண்டியதில்லை.
தினமும் ஒரு முட்டை கொடுக்க துவங்க வேண்டும். நீங்கள் முட்டை கூட எடுக்காத வெஜிட்டேரியனாக இருந்தாலும் இந்த காம்ப்ரமைஸ் நீங்கள் செய்துதான் ஆகவேண்டும். இன்றைய போட்டி நிறைந்த உலகில் உங்கள் குழந்தை புத்திக்கூர்மையுடனும், உடல் / மன நலத்துடனும் வளர வேண்டாமா ? அதனால் கண்டிப்பாக தினம் ஒரு முட்டை (நாட்டுக்கோழி அல்லது பிராய்லர்) கொடுக்கவேண்டும் என நான் உறுதியாக வலியுறுத்தி சொல்கிறேன்..
குழந்தைகளுக்கு டயட் தேவையில்லை. குப்பை உணவுகள் தவிர்ப்பதும், வாரம் ஒரு நாள் மட்டுமே இனிப்புகள் என வைத்துக்கொள்வதும் மட்டும் போதும் என்பதே நம் குழுவின் அறிவுறுத்தல்.

No comments: