Friday, November 4, 2016

அடிக்கடி.கேட்கபடும் கேள்விகள




1) பேலியோ ஆரம்பித்தபின் மலசிக்கல் வருகிறது
தானிய உணவில் தினமும் காலை, மாலை என டான்னு பாத்ரூம் போவோம். பேலியோவில் அம்மாதிரி ஆகாது. காரணம் இதில் உடலில் குப்பை சேர்வது குறைவு. குப்பை போதுமான அளவு சேர்ந்தபின் இயற்கையாக் உடலே அதை வெளியே கொண்டுவந்துவிடும். அதனால் தினம் காலையில் பாத்ரூம் சென்று பழைய பாணியில் சிரமபட்டுகொண்டிருக்க வேண்டாம்.
2) எடை ஸ்டக் ஆகி நிற்கிறது
முதல் வாரம், இரண்டாம் வாரம் நன்றாக எடை இறங்கும். அதன்பின் ஸ்டக் ஆகலாம். மூன்றுவாரம் வரையாவது பேலியோ எடுத்து உடல் ஃபேட் அடாப்ட் ஆனவுடன் வாரியருக்கு நகரலாம். வாரியரிலும் 12 மணி விண்டோ, 8, 6, 4 மணி விண்டோ என மெதுவாக நகரவும்
3) பண்ணைகோழி சாப்பிடலாமா?
சாப்பிடலாம் என வெடினரி மருத்துவர் ஒருவர் இங்கே எழுதினார். ஹார்மோன் ஊசிகள் கோழிகளுக்கு போடபடுவதில்லை எனவும் கூறினார்.
4) பட்டர் டீ இரவில் சாப்பிடலாமா?
பொதுவாக காலை உணவு லைட்டாக, மதிய உணவு மிதமாக மற்றும் இரவு உணவு ஹெவியாக உண்பதே நல்லது. அதனால் உங்கள் ஹெவி மீல் இரவு உணவாக இருப்பது நல்லது. பட்டர் டீ மட்டும் பசிக்கு போதாது
5) உள்ளுறுப்புகள் சபபிடலாமா?
யூரிக் அமில பிரச்சனை இல்லாதவர்கள் சேர்க்கலாம். வாரம் ஒருமுறை ஆட்டு ஈரல், கிட்னி, இதயம் போன்ரவற்றை சேர்க்கலாம்
6) தவிர்க்கவேண்டிய மாமிசம் எது?
அனிமியா இல்லாதவர்கள் ரத்தம், சிக்கன் பிரெஸ்ட், கருவாடு போன்றவற்றை தவிர்க்கலாம். இதில் கொழுப்பின் சதவிகிதம் குறைவே. இவற்றை என்றாவது சாப்பிடலாமே ஒழிய தினமும் அதிக அளவுகளில் வேண்டாம்
7) எனக்கு கொலஸ்டிரால் அதிகம். ஸ்டாடின் சபபிடலாமா?
ஸ்டாடின் எடுத்துகொன்டு தினம் 4 முட்டையும் சபபிடுவது பயனற்றது. உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தேலொழிய ஸ்டாடின் சாப்பிடுவதில் எப்பயனும் இல்லை. பின்விளைவுகளும் அதிகம். கொலஸ்டிராலை எண்ணி அஞ்சவேண்டியதில்லை
8) வைட்டமின் டி பரிசோதனை எடுக்கணுமா?
அவசியமே இல்லை...ஏனெனில் நீங்கள் ஆபிஸ் தொழிலாளியாக இருந்தால் உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்கனவே உள்ளது. வெஜிட்டேரியான இருந்தால் பி12 தட்டுபாடும் உங்களுக்கு உள்ளது. தினம் அரைமணிநேரமாவது வெயிலில் நிற்கவும். முடியாவிடில் வார இறுதியிலாவது நிற்கவும்

Neander Selvan

No comments: