Friday, November 4, 2016

பீன்ஸின் பிரச்சனைகள்



பீன்ஸின் பிரச்சனைகள் என்ன?
லெக்யூமே வகையை சேர்ந்த கீழ்க்கண்ட உணவுகளை பேலியோவில் தவிர்க்கிறோம்.
பீன்ஸ் (நேவி, பிளாக், பின்டோ, ரெட் பீன்)
கொண்டைகடலை
மூங் பீன்
கிட்னி பீன்
பட்டாணி
சோயா
நிலக்கடலை
இன்னபிற
முதற்கண் இவற்றில் என்ன பிரச்சனை என பார்த்தால் இவற்றை பச்சையாக சாப்பிட்டால் இவை விஷம் என்பதே. சாப்பிட்டவுடன் உயிரை விட மாட்டோம். ஆனால் ஒரு எல்லைக்கு மேல் பச்சையாக இவற்றை உண்டால் கடும் வயிற்றுவலி, அஜீரணம் வந்து மரணம் வரை செல்லும். அமெரிக்காவில் வருடம் பல்லாயிரம் பேர் சரியாக வேக வைக்காத பீன்ஸை உண்டு மருத்துவமனைகளில் சேர்க்கபடுகிறார்கள்.
இவற்றின் நன்மை என பார்த்தால் இரும்புசத்தும், புரதமும் நன்மையாக கூறபடுகிறது
இரும்பு சத்து என எடுத்தால் 100 கலோரிகளுக்கு எத்தனை மிகி இரும்பு சில உணவுகளில் இருக்கிறது என பார்க்கலாம்
லெக்யூமே - 2.2 மிகி
மீன் 2.7 மிகி
முட்டை 0.77 மிகி

ஆக முட்டையை விட நாலு மடங்கு அதிக இரும்பு பீன்ஸில் இருந்தாலும், மீனுக்கு சமமாக இரும்பு இருந்தாலும் லெக்யூமேக்களில் உள்ள இரும்புசத்து ஹீமே அல்லாத வகை இரும்புசத்து. இதில் வெறும் 25% அளவே உடலில் சேரும். ஆக முட்டையை விட குறைவான அளவு இரும்பே உடலில் சேரும்

லெக்யூமேக்களில் உள்ள சிலவகை ஆண்டிநியூட்ரியண்ட்களை பற்றி காணலாம்
சபோனின்
சபோனின் என்பது சோப் என்பதில் இருந்து பிறந்த வார்த்தை. சபோனின் இல்லாத லெக்யூமேவே கிடையாது. பீன்ஸை வேக வைத்தால் மேலே நுரை மாதிரி பொங்கி வருமே, அதான் சபோனின். பீன்ஸை சமைக்கையில் அந்த நுரையை அப்படியே எடுத்து வீசிவிடவேண்டும். அப்படி செய்தால் பெருமளவு சபோனின் குறையும்.

சபோனின் நேராக நம் குடலில் உள்ள செல்களில் நுழைந்து ஓட்டையை போடும். எத்தனைக்கு எத்தனை அதிகமாக சபோனின் சாப்பிடுகிறொமோ, அத்தனைகத்தனை அதிகமாக குடலில் ஓட்டை விழும். சமைப்பதால் சபோனின் அழிவதில்லை என்பது குறிப்பிடதக்கது. லீக்கி கட் மாதிரி தீராத வயிற்றுவலிகள் வர சபோனின் காரணமாக அமைகிறது

சபோனின் அதிகாமாக உள்ல பீன்ஸ்--வேறு என்ன? சோயா பீன்ஸ் தான், நிலகடலையில் சபோனின் மிக குறைவு..ஆனால் நாம் நிலகடலையை அதிக எண்னிக்கையில் அல்லவா சபபிடுவோம்?

பாலிபினால்
சூரிய வெளிச்சத்தால் வரும் ரேடியேஷனில் இருந்து தப்ப இயற்கை செடிகளுக்கு கொடுத்த சன்ஸ்க்ரீனே பாலிபெனால். இதில் ஐஸோபிளேவின், டானின் என்ற பல வகைகள் உண்டு

இதில் ஐஸோபிளேவின் நேரடியாக பெண்களுக்கான ஹார்மோன் என்ன பணியை ஆற்றுமோ அதே பணியை நம் உடலிலும் ஆற்றும். இதனால் இவற்றை பைட்டோ எஸ்ட்ரோஜென் (பிளான்ட் எஸ்ட்ரோஜன்) என அழைக்கிறார்கள். எஸ்ரோஜன் தான் பெண்களுக்கு பெண்மையை அளிக்கும் ஹார்மோன். அது உடலில் அதிகரித்தால் என்ன ஆகும்?ஆண்களுக்கு ஆண்மை குறையும், மார்பகம் வளரும், ஆண் மார்பக பிரச்சனையால் அவதிப்படும் பல ஆண்களின் சிக்கலுக்கு இது முக்கிய காரணம்
பெண்களுக்கு இதனால் மார்பக புற்றுநோய் வரும்.

சில ஆய்வுகளில் லெக்யூமேவை ஆறே வாரம் தொடர்ந்து சாப்பிட்ட பெண்களுக்கு கருமுட்டை வளர்வது நிற்பதும், மாதவிலக்கு நிற்பதும் கண்டுபிடிக்கபட்டது. கர்ப்பிணிகள் இதை உண்பதால் பிள்லைகளுக்கு ஆடிசம் வரும் வாய்ப்பும் உண்டு
பீன்ஸில் காஸ் பிரச்ச்னைகள் வருவது அனைவரும் அறிவோம். காரணம் பீன்ஸில் உள்ள நார்சத்தை உடலால் ஜீரணம் செய்ய இயலுவதில்லை
ஆப்பிளில் சயனைடு இருப்பது போல லிமா பீன்ஸிலிம் ஹைட்ரஜன் சயனடு உள்ளது. சமைப்பதில் இதில் பெரும்பங்கு அழிந்தாலும் உங்கள் வயிற்றில் கொஞ்சமே கொஞ்சம் ஹைட்ரஜன் சயனைடு சேர்ந்தால் நல்லாவா இருக்கு?

Neander Selvan

No comments: