Saturday, November 5, 2016

மகப்பேறின்மை

மகப்பேறின்மை காரணமாக பெண்களை பலரும் குற்றம் சாட்டுவார்கள். ஆனால் மகப்பேறின்மை என்பது கணவந் மனைவி இருவரும் சம்பந்தபட்டதாகும். 40% சமயம் இதற்கு காரணம் ஆணின் ஸ்பெர்ம் கவுன்ட் குறைவு போன்ற காரணம் என்பதை பலரும் உணர்வதில்லை. மேலும் சில சமயம் மனைவியின் உடல் கணவனின் விந்தணுவை ஏதோ வைரஸ் என நினைத்து தாக்கி அழிக்கும் அபாயமும் உள்ளது. ஆட்டோஇம்யூன் வியாதிகள் (லூபஸ், சொரியாசிஸ்) போன்றதே இது. சில சமயம் கணவனின் விந்தணுவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை கூட மனைவியின் உடல் தயாரிக்கும். மேலும் மகபேறின்மைக்கு அதீத வெப்பம், உணவுநீரில் உள்ள நச்சுக்கள் போன்ற பலகாரணிகள் உண்டு. ஆக இது எதையும் கருத்தில் கொள்ளாது பெண்களை இதற்கு குற்றம் சாட்டும் மூடதனமான வழக்கம் சமூகத்தில் நிலவுகிறது
உண்மையில் பெண்கள் விரும்பினாலும் கூட மற்ற காரணிகள் சரியாக அமைந்தால் அவர்களால் கருத்தரிக்காமல் இருக்க முடியாது. ஆக பெண்களை இதற்கு காரணமாக கூறுவது விவரம் அறியாத போக்கு என்றே கூறலாம்.
மகபேறின்மைக்கு கீழ்க்கண்ட தடைகள் உண்டு
மகபேறின்மைக்கு 40% காரணம் ஆண் விந்தணு குறைபாடே. பெண்களுக்கு எனில்
ஃபலோபியன் டியூப்களில் பிளாக் இருப்பது
என்டோமெட்ரியோசிஸ்
ஃபைப்ராய்டுகள்
கணவனின் விந்தணுவுக்கு மனைவியின் உடல் அலர்ஜிக் ஆவது (இது சற்று அபூர்வம். ஆனால் இது இருந்தால் செக்ஸுக்கு பின் பெண்ணுறுப்பில் வீக்கம், வலி, எரிச்சல் ஆகியவை இருக்கும். காண்டம் போட்டு உறவு கொன்டால் இப்படி நிகழாது. இது சில சமயம் மருத்துவர்களால் ஈஸ்ட் என தவறாக புரிந்து கொள்ளப்படலாம்)
ஓவலேசன் சரியாக அமையாதது
பெண்ணுடல் ப்ரொக்ரெஸ்ட்ர்ரொனை போதுமான அளவு உற்பத்தி செய்வதில்லை
இருவரில் ஒருவருக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பது
ஆகியவை காரணமாக அமையலாம்.
கருத்தரிப்புக்கு உடலுறவு கொள்வதற்கான முறைகள்
ஓவலேஷன் நிகழும் சமயம் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். ஆய்வுகள் கூறுவது என்னவெனில் ஓவலேஷன் சமயம் உறவுகொன்டால் அம்மாதம் கருத்தரிக்க 20% வாய்ப்பு உன்டு என்பதே. ஓவலேஷன் காலகட்டம் 12 முதல் 24 மணிநேரமே. இதில் நல்ல விசயம் என்னவெனில் ஆணின் விந்தணு ஓவலேஷன் நடக்கும் அதே நாளில் பெண்ணுடலில் சேரவேண்டும் என்ர அவசியம் கூட இல்லை. ஆணின் விந்தணு பெண்ணுடலில் இரண்டு, மூன்று நாட்கள் கூட உயிர்ப்புடன் இருக்கும். கருமுட்டை உருவானால் அதன்பின் விந்தணு சேர்ந்து குழந்தை பிறக்கலாம். கருத்தரிக்க ஒரே ஒரு விந்தணு போதும் என்பது குறிப்பிடதக்கது
மருந்து கடைகளில் டிப்ஸ்டிக் கிடைக்கும். இதை சிறுநீரில் விட்டு ஓவலேஷன் நிகழ்கிரதா என கன்டறியலாம். இதில் பாஸிடிவான ரிசல்ட் வந்து 1 முதல் 3 நாளில் ஓவலேஷன் நிகழும். ஆனால் இப்பரிசோதனை 100% சரியாக இருக்கும் என கூறமுடியாது.
மேலும் கருத்தரிக்க டைமிங் எல்லாம் பார்க்கும் அவசியம் இல்லை. தினமும் உறவு கொள்வது நல்லது. ஓவலேஷன் சமயம் ஒரு நாளக்கு எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உறவுகொள்ளவேண்டும். ஓவலேஷன் சமயம் லீவு போட்டுவிட்டு வீட்டில் கூட இருக்கலாம். ஏனேனில் ஓவலேஷன் சமயம் ஒருமுறை கருத்தரித்தால் பிள்ளை பிறக்கும் வாய்ப்பை விட இரண்டு,மூன்று முறை உறவுகொள்வது அவ்வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும். ஆக இந்த நாட்களில் எத்தனை தரம் முடியுமோ அத்தனை தரம் உறவுகொள்வது நல்லது.
முன்பு "டைமிங் முறையை" மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள். இதன்படி "தினம் உறவுகொள்வதை விட ஒரு நாள் விட்டு ஒரு நாள் உறவுகொன்டால் விந்தணுக்கள் அதிகரிக்கும்" என்றார்கள். இது உண்மைதான் எனினும் இந்த டைமிங் முறையை விட தினம் உறவுகொள்வது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என இப்போது கூறுகிரார்கள். கருத்தரிக்க அவசியம் என்பது ஒரு விந்தணு கருமுட்டையில் நுழையவேண்டும் என்பதே....அவ்வளவுதான்...எத்தனை முறை உறவுகொள்கிறோமோ அத்தனைகத்தனை இதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அதனால் ஓவலேஷன் பீரியட் முடிந்தபின்னரும் கூட தினம் உறவுகொள்வது ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை அதிகர்க்கிறது, ஆண்மையை அதிகரிக்கிறது எனவும் கூறுகிரார்கள்.
சுருக்கமாக சொன்னால் ஒரு புல்லட்டை வைத்து குறிபார்த்து சுட்டு எதிரியை வீழ்த்துவதை விட மெஷின்கன்னால் சகட்டுமேனிக்கு சுட்டால் எதிராளி வீழும் வாய்ப்புகள் அதிகம் அல்லவா? நமக்கு தேவை ஒரே புல்லட் இலக்கின் மேல் படவேன்டும். அவ்வளவே
உணவுமுறை :
அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைத்துவிட்டு கருத்தரிப்புக்கு தயாராக வேண்டும். ஏனெனில் கருத்தரிக்க முயலும் சமயம் எடையையும் இறக்க முயல்வது சரியானதல்ல. பட்டினி, விரதம், கலோரி கட்டுபாடு போன்றவை கருத்தரிப்பை தடுக்கலாம். ஏனெனில் நீங்கள் பட்டினி இருக்கும் சமயம் உடல் சர்வைவல் மோடுக்கு சென்றுவிடும். சர்வைவல் சமயத்தில் கருத்தரிப்பு என்பதெல்லாம் உடலுக்கு ஆடம்பரம் போல. ஆக கருத்தரிக்கும் சமயம் கலோரிகள் அதிகமாகவும், மூன்று வேளையும் உண்பதும், நல்ல ஊட்டசத்துள்ல உணவுகளாக உண்பதும் அவசியம். உடலுக்கு ஸ்ட்ரெஸ் அளிக்கும் கடின உடல்பயிர்சிகளை ஆணும், பெண்ணும் செய்யவேன்டாம். மித நடை போதுமானது
கருத்தரிக்க தேவையான உணவுமுறை . ஆண்,பெண் இருவரும் எடுக்கவேண்டும். பெண் மட்டும் எடுத்தால் போதுமானது என் நினைப்பது ஏன் பிழையானது என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்
செலனியம்: செலனியம் ஆண்களின் விந்தணு கவுண்ட்டை அதிகரிக்க உதவுகிறது. ஆண்கள் தவறாமல் செலனியம் உள்ள உணவுகளை எடுக்கவேண்டும். பெண்களும். செலனியம் உள்ள உணவுகள்: முந்திரி, காளான், மீன் (டியூனா), பன்றி/ஆடு/பீஃப், சிக்கன், ஈரல் முதலானவை
வைட்டமின் சி: வைட்டமின் சி விந்தணுவின் வீரியத்தை (மோடிலிட்டி) அதிகரிக்கிறது. மோடிலிட்டி அதிகரித்தால் விந்தணு நகரும் வேகம் அதிகரிக்கும். வேகமாக செல்லும் விந்தணு விரைவில் கருத்தரிக்க உதவும்.ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்கனி, கீரை .தினம் 2 நெல்லிக்கனி சபபிடுவது மிக உகந்தது
வைட்டமின் ஈ: இதன் பெயரே செக்ஸ் வைட்டமின்.ஏனெனில் இதுதான் பாலுறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொன்டுபோய் சேர்க்கிறது. இதனால் உடலுறவின் இன்பம் அதிகரிப்பதுடன் விந்தணுவின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்
வைட்டமின் ஈ உள்ல உணவுகள்:பாதாம், கீரை, அவகாடோ, ஷ்ரிம்ப் மீன், ட்ரவுட் மீன்,பூசணி முதலானவை
ஸின்க்: விந்தில் ஸின்க் ஏராளமாக காணப்படும். இது அதன் வீரியத்தை அதிகரிக்கும். இது உள்ள உணவுகள்
மாட்டிரைச்சி, நண்டு, பன்றி இறைச்சி, முந்திரி, சிக்கன் , பாதாம் முதலானவை
மாங்கனிஸ்: இது செக்சுக்கு தேவையான ஹார்மோனை தயாரிக்க உதவும். பாதாம், டார்க் சாக்லட், கொக்கோ பவுடர், கீரை, ஆழிவிதையில் கிடைக்கும். கிராம்பு/லவங்கபட்டையை மாங்கனிஸின் கோட்டை எனலாம்.
புரதம் மிகுந்த உணவை இருவரும் தவறாமல் உண்னவேண்டும். புரதம் தான் நீங்கள் பட்டினி கிடக்கவில்லை என்பதை உடலுக்கு உனர்த்தி உங்களை ஸ்டார்வேஷன் மோடிலிருந்து மாற்றுகிறது. மேலும் ஆர்ஜினைன், எல்சிஸ்டைன் முதலான அமினோ அமிலங்கல் ஸ்பெர்ம் கவுன்ட்டை அதிகரிக்க முக்கியமானவை.புரதம் நிரம்பிய உனவுகள்: முட்டை, இறைச்சி, பாதாம் முதகானவை
போலிக் அமிலம், B12 நிரம்பிய முட்டை, கீரையை எத்தனைகெத்தனை எடுக்கிறோமோ அத்தனைகத்தனை நல்லது
உதவுவதாக கூறப்படும் நாட்டு மூலிகைகள் (இவற்றை முயல்வதில் தவறில்லை)
ஜின்செங்
வல்லாரை
மாகாளிக்கிழங்கு
அதிமதுரம் (மூலிகை கடைகளில் கிடைக்கும்)


Neander Selvan
Post a Comment