எப்சோம் உப்பு/ மக்னிசியல் சல்பைட் டாலமைட் எனும் எரிமலை பாறையில் இருந்து தயாரிக்கபடுவது. இந்தியாவில் மருந்து கடைகளில் எப்சோம் உப்பு அல்லது மக்னிசியம் சல்பைட் என கேட்டால் கிடைக்கும்.
எப்சோம் உப்பை வாங்கி வந்து நீரில் கரைக்கவும். இது உப்பு வடிவில் இருக்கும். கரைய வெநீரை ஊற்றி அதை ஆறவிடவும். 1:1 எனும் விகிதத்தில் நீரும் உப்பும் இருக்கும் அளவு திக்காக கரைக்கவேண்டும்
அதன்பின் ஆர்தரிட்டிஸ், மூட்டுவலி, எலும்பு பலவீனம், மூட்டுவலி, கைகால் வலி இருக்கும் இடங்களில் ஒரு ஸ்ப்ரே மூலம் அதை அடிக்கவேண்டும். பாத்திரத்தில் கரைத்து வலியுள்ள கை விரல், பாதம் போன்ற இடங்களையும் அதில் 15- 20 நிமிடம் வைத்து எடுக்கலாம்.
வசதியுள்ளவர்கள் பாத்டப்பில் எப்சோம் உப்பை விட்டு வெந்நீரை விட்டு முழுக்க மக்னிசியம் பாத் எடுக்கலாம். 15- 20 நிமிடம் குளியல் போடவேன்டும்
பலன்கள்: மக்னிசியம் தோலால் உறிஞ்சி எடுக்கபடும் தன்மை உடையது. பலகீனமான எலும்புகள், மூட்டுகள் இதனால் வலுப்பெறும்
உடலில் ஈயம் மாதிரி ஆபத்தான கழிவுகள் இருந்தால் அதை இது உறிஞ்சி வெளியே எடுத்துவிடும் என கூறுவர்கள். ஆனால் இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது ஆய்வுக்குரியது
ஆர்த்ரைட்டிஸ் வலி, எலும்பு வீக்கத்துக்கு இது மிகுந்த பலனளிக்கும்
Neander Selvan
Neander Selvan
No comments:
Post a Comment