Friday, November 4, 2016

கெடோசிஸ்



கெடொசிஸ் ஆபத்தானது, மனிதர்களுக்கு க்ளுகோஸ் அவசியம் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.
ஆனால் பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே பிறந்து வெறும் இரண்டு மணிநேரத்தில் கெடொசிஸுக்கு சென்றுவிடுகின்றன என்பது அவர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே. அதன்பின் தாய்ப்பாலை நிறுத்தி திட உணவுகளை உண்ண துவங்கும் வரை குழந்தைகள் கெடொசிஸிலேயே இருக்கின்றன!!
பிரசவசமயம் எந்த தாயும் கெடொசிஸில் இருப்பதில்லை. அதனால் விவசாய காலகட்டத்தில் குழந்தைக்கு தாயின் பிளசெண்டாவில் வழியே கிடைக்கும் உணவானது சர்க்கரை நிரம்பிய உணவாகவே இருக்கும். அதே தாய் கெடொசிஸில் இருந்தால் சிசுவானது கருவிலேயே கெடொசிஸில் இருக்கும். விந்தையிலும் விந்தையாக சிசுவின் ஈரலே க்ளுகோனோஜெனெஸிசை நடத்தி கொழுப்பில் இருந்து சர்க்கரையை தயாரிக்கும் ஆற்றல் கொண்டதாக கருவிலேயே இருக்கும்.
ஆக பேலியோலிதிக் காலகட்டத்தில் கருவிலேயே கெடொசிஸில் இருந்த குழந்தைகள் ஏராளமாக பிறந்திருக்கும்
சரி..தற்போதைய நவீன காலகட்டத்துக்கு வருவோம். கர்ப்பிணிக்கு ஐஸ்க்ரீம் முதல் அல்வா வரை வாங்கிகொடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையுள்ள சமூகத்தில் கரு கெடொசிஸில் வளர்வது கிடையாது. ஆனால் குழந்தை பிறந்த இரண்டு மணிநேரத்தில் அது கெடொசிஸுக்கு சென்றுவிடுகிறது. தாய்ப்பால் மட்டுமே அதற்கு கிடைக்கும்வரை அது கெடொசிஸிலேயே இருக்கிறது
பிறந்தது முதல் திட உணவுகளை உண்ணும் காலகட்டம் வரை மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான காலகட்டம் என்பதால் இயற்கை இக்காலக்ட்டத்தில் மூளை கீடோன்களில் இயங்குமாறு பணித்துள்ளது. திட உணவாக இறைச்சியும், முட்டையும் கொடுத்தால் கெடொசிஸ் தொடரும். ஆனால் நாம் குழந்தைக்கு ஊட்டுவதே சர்க்கரை அல்லது தேன் தான் என்பதால் கெடொசிஸ் அத்துடன் முடிவடைந்துவிடுகிறது.
தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகள் கெடொசிஸில் இருப்பார்கள் சரி..புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள்?
ஹா..ஹா..ஹா..ஹா
ஆக கெடொசிஸ் ஆபத்து, கெடொஜெனிக் டயட் ஆபத்து என்பவர்கள் ஆண்டவன் குழந்தைகளை கெடொசிஸிலேயே பிறப்பித்து வளரும் வண்ணம் அமைத்திருப்பதை அறிந்தால் ஆண்டவனையும் குற்றம் சாட்டினால் வியப்பில்லை- 

-  Neander Selvan 
:-)
Neander Selvan

No comments:

Post a Comment