Saturday, November 5, 2016

ஆஸ்த்மா, சைனஸ் பிரச்சினை மற்றும் அடிக்கடி சளி வருதல்

Asthma, Sinus, chronic cold-ஆஸ்த்மா, சைனஸ் பிரச்சினை மற்றும் அடிக்கடி சளி வருதல் 

-Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore 



Wheezing- சும்மா சளி வந்தாலே வீசிங் என்று அவர்களே முடிவு செய்து விடுவார்கள். உங்களுக்கு மூச்சு இரைத்தால் டாக்டரிடம் சென்று என்ன பிரச்சினை எனக் கேளுங்கள். வீசிங் இருக்கிறது என்றால் அது COPDயா அல்லது ஆஸ்த்மாவா எனக் கேளுங்கள். சிகரெட்பீடி பிடிப்பதால் வரும் COPDபற்றி இங்கு பேசப்போவதில்லை. ஆஸ்த்மா பற்றி மட்டுமே.

ஆஸ்த்மா சிறுவயதிலேயே வரலாம், பின்னாலும் வரலாம்.
சிலருக்கு குளிர்மழை சீசனில் மட்டுமே வீசிங் வரும். சிலருக்கு சில உணவுகள் சேர்த்தால் மட்டுமே, சிலருக்கு காற்றில் புகை, கொசுவத்தி புகை, வீட்டு தூசி, குளிர் காலத்தில் காற்றில் மிதக்கும் மகரந்தம், வைக்கோல் போரில் உள்ள போலன் போன்றவைகள் வீசிங்கை ஏற்படுத்தும். சிலருக்கு வருடம் பூராவும். 
இவர்கள் அனைவருக்கும் மற்றும் அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தைகள் பெரியவர்கள், ENT டாக்டரை பார்த்து சைனஸ் பிரச்சினை இருக்கிறது என்று கன்பர்ம் செய்தவர்களுக்கும் கீழே உள்ள டயட் பயனளிக்கும். 
சிலருக்கு எதனால் சிம்ப்டம்ஸ் அதிகமாகும் எனத்தெரிந்திருக்கும். அதை அவாய்ட் செய்வதே நன்று.
பைக்கில் செல்லும் போது துணி போட்டு காதையும் மூக்கையையும் வாயையும் மூடிக்கொண்டு அதன் மேல் ஹெல்மெட் போட்டு ஓட்டிச் செல்வது நல்லது. 

மேலே சொன்ன பிரச்சினைகளுக்கான மருந்துகள்:
ஆஸ்த்மா இன்ர்ஹேளர்கள்-தற்காலிகமாக சிம்ப்டம்சை குறைக்கும். சைட் எபக்ட் அதிகம் கிடையாது என சொல்கிறார்கள். ஆஸ்தாலின் மாத்திரை மற்றும் சிரப்-உடல் நடுக்கத்தை ஏற்படுத்தும், பிரஷர் ஏறலாம், டெம்ப்ரவரி சிகிச்சை ஆகும். ஊசி- அவசரத்துக்கு ஒகே. அடிக்கடி போட்டால் பிரச்சினை தான், மற்றும் இது ஒரு தற்காலிக தீர்வு. டேரிபிளின்-மிக அருமையான மருந்து. தாராளமாக சாப்பிடலாம்.
ஸ்டிராய்ட் மருந்துகள்- நன்றாக ஆஸ்த்மாவையும், சைனஸ், சளியைக் குறைக்கும்-அடிக்கடி சாப்பிட்டால்பிரஷர், சுகர் வரவழைக்கும்.

மாண்டிலுகாஸ்ட் மற்றும் அவில், செட்ரிசின், வகையறாக்கள்-ஆஸ்த்மா, சைனஸ், சளிக்கு நல்ல மருந்துகள். ஆனால் நிறுத்தியவுடன் திரும்ப பிரச்சினைகள் ஆரம்பித்து விடும்.
டயட் டைரி- ஒரு மாதத்திற்கு என்ன செய்கிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள், எங்கே போகிறீர்கள், என்பதை விரிவாக டைரியில் எழுத வேண்டும். வீசிங்/சளி/சைனஸ் எதனால் வருகிறது என்பதை ஈசியாக அறிந்து கொள்ளலாம். அதை அவாய்ட் செய்தாலே போதும்.
முதலில் பிகினர் வெஜ் அல்லது நான் வெஜ் பேலியோ எடுக்கவும். 90% ஆட்களுக்கு சரியாகி விடும். சரியாகவில்லை என்றால் ஆட்டோ இம்யூன் டயட் எடுக்கவும். அது பைல் செக்ஷனில் உள்ளது.
டாக்டர் கூறும் மருந்துகளை தவறாமல் எடுக்கவும். பிரச்சினைகள் குறையக்குறைய அவரிடம் சென்று ஒவ்வொரு மருந்தாக நிறுத்துங்கள்.

ஒகே. பேலியோ/ஆட்டோ இம்யூன் பேலியோ எடுத்தும் பிரச்சினை குறையவில்லை. என்னசெய்வது? மறுபடி டயட் டைரி எழுதுங்கள். விலாவரியாக எழுதுங்கள். கண்டுபிடித்து விடலாம்.
இல்லை. அப்போதும் சரியாக வில்லை. என்ன செய்வது? இப்போது மார்க்கெட்டில் சில அலர்ஜன்ஸ் ஊசிகள் கிடைக்கின்றன. எ.கா. Histoglob injection. வெறும் 70 ரூபாய் தான்.  இதில் பல அலர்ஜன்கள் இருக்கின்றன-வீட்டு தூசி, மகரந்தம், புகை, கொசுவத்தி,  பால், கத்திரி என அலர்ஜி ஏற்படுத்தும் ஐட்டங்கள் அதில் உள்ளன. ஒரு பத்து ஊசிகளை போடுவதன் மூலம் அலர்ஜியை முறிக்கலாம். இதைப்பற்றி உங்கள் டாக்டரிடம் பேசுங்கள். இதைப் போல பல ஊசிகள் உள்ளன. நல்ல அலர்ஜி ஸ்பெஷலிஸ்டிடம் சென்று அவர் கொடுக்கும் மருந்தை வாங்காமல், இதைப் பற்றி சொல்லுங்கள். “இதெல்லாம் வேஸ்ட்பா” என்றால் டாக்டரை மாற்றுங்கள். “ஆமா, செஞ்சு பாப்போம்" என்றால் அவர் சொல்வதை செய்யுங்கள். (பேலியோ டயட் எடுக்காமலும் இந்த ஊசியை போட்டு பலர் பலனடைந்து உள்ளனர். பலன் அளிக்காவிட்டால் ஊசி பிளஸ் பேலியோ). இது ஆஸ்த்மா, சளி, சைனஸ் எல்லாவற்றிற்கும் தான்.

ஒரு இரண்டு முதல் பத்து சதவிகதம் ஆட்களுக்கு மேலே சொன்ன எதுவும் கேட்காமல் போகலாம். ‘ஆண்டவன் விட்ட வழி இது தான்’ எனத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான். 

குழந்தைகள்: கோதுமையை தவிருங்கள், முடிந்தால் பேலியோ, இல்லாவிட்டால் வேண்டாம். பிஸ்கட், பிரட், பொறித்த உணவுகள், சர்க்கரை மற்றும் இனிப்புகள் வேண்டாம். பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், மற்றும் பர்கர் ஸ்டால் அருகே கூட போக வேண்டாம். சாக்லேட் வேண்டாம். டயட் டைரி எழுதி எதனால் அலர்ஜி வருகிறது என யோசிக்கவும். அவர்களுக்கும் மேலே சொன்ன ஊசிகள் பலன் தரலாம். சமையலுக்கு தேங்காய் எண்ணெய். காய்கறிகள், பால்,  தயிர், சாதம், பருப்பு, பழங்கள், முட்டை,  நான்வெஜ் என வெளுத்துக் கட்டுங்கள். விட்டமின் டிக்கு சன்செஷன் முக்கியம். பாலில் குறுமிளகு,  மஞ்சள் சேர்ப்பது நல்லது. பசுமஞ்சள் வைத்தியம் முக்கியம்.

No comments:

Post a Comment