இரவில் ஒரு காவலனை துப்பாக்கியுடன் வீட்டுகாவலுக்கு நிறுத்தி இருக்கிறீர்கள். அது திருட்டு பயம் நிரம்பிய ஏரியா. தினம் வீட்டுக்குள் பத்து திருடர்கள் நுழைய முற்படுகிறார்கள். அதனால் காவலனுக்கு சின்ன அசைவு வந்தாலும் துப்பாக்கியால் சுடும் அளவு பதட்டம் வந்துவிடுகிறது. வீட்டு சுவர் மேலே பூனை ஓடுகிறது. அது திருடனா, இல்லையா என்பதை கவனிக்கும் தெளிவு அவனுக்கு இல்லை. சுவற்றை துப்பாக்கியால் சுடுகிறான். சுவரில் பொத்தல் விழுகிறது. மாடியில் டிவியில் சத்தம் வருகிறது. டிவியை நோக்கி சுடுகிறான்....இதுதான் ஆட்டோஇம்யூன் வியாதி. நிஜவாழ்வில் இப்படி ஒரு காவலன் இருந்தால் அவனை டிஸ்மிஸ் செய்யலாம். ஆனால் நம் நோயெதிர்ப்பு சக்தியை டிஸ்மிஸ் செய்ய முடியாதே?
ஸ்பெயின் கிரோனா பல்கலைகழகத்தில் நடத்தபட்ட ஆய்வு ஒன்று உள்காயம் (இன்ஃப்ளமேஷன்) எப்படி நம் இம்யூன் சிஸ்டத்தை பாதித்து ஆடோஇம்யூன் வியாதிகளை உருவாக்குகிறது என்பதையும், உள்காயம் எப்படி வருகிறது என்பதையும் விளக்குகிறது.
கொடுத்த உதாரணத்தில் தினம் பத்து திருடர்கள் வீட்டில் நுழைய முற்படுகிறார்கள் என்பதால் தான் காவலன் அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய் எனும் கதையாக பயம் வருகிறது. அதுபோல் உடலெங்கும் உள்காயம் எனும் இன்ஃப்ளமேஷன் நிரம்பி இருந்து, அந்த உள்காயம் சதா சர்வகாலமும் அபாய சைரன் ஒலிப்பதை போல் இம்யூன் சிஸ்டத்துக்கு "நீ தாக்கபடுகிறாய்" என சிக்னல் கொடுத்துகொண்டே இருந்தால் என்ன ஆகும்? அந்த விளைவை தான் உள்காயம் நம் நோயெதிர்ப்பு சக்திக்கு கொடுக்கிறது. இதன் விளைவாக ஆடோஇம்யுன் வியாதிகள், மனநிலை தவறுதல், டிப்ரஷன், சிசோபெர்னியா அனைத்தும் நிகழ்கின்றன. இதுவே பல டியூமர்களை உயிர்ப்பித்து கான்சரையும் ஆக்டிவேட் செய்கிறது
உள்காயம் உருவாக காரணம் ஒமேகா 6;3 விகிதம் அதிகமாக இருப்பதும், விரைவில் ஜீரணமாகும் கார்ப் நுகர்வுமே. தானியங்கள் இந்த இரு விஷயங்களிலும் மோசமானவை.
இதுதவிர தானியங்களில் இருக்கும் வேறு சில விஷயங்களும் உள்காயத்தை தூண்டுபவை என்கிறது இந்த ஆய்வு
கோதுமை சாப்பிட்டு ஒரு சில மணிநேரங்களில் உடல்பயிற்சியில் ஈடுபட்டால் சிலரது உடல் கடுமையான அலர்ஜிக் ரியாக்ஷனை கொடுக்கும். அவர்களுக்கே அது என்ன காரணத்தால் என தெரியாது. கோதுமையை வைத்து ரொட்டி சுடுவதால் (சாப்பிட கூட வேண்டியது இல்லை. வாசமே போதும்) மட்டுமே வரும் ஆஸ்துமாவுக்கு "பேக்கர்ஸ் ஆஸ்துமா" என பெயர். இதற்கு பயந்தே ரோமானியர்கள் காலத்தில் அடிமைகளை வைத்து கோதுமை மாவை அரைக்க வைத்தார்கள்.
கோதுமை புரதமான க்ளியாடின் செலியாக் வியாதி (கோதுமை அலர்ஜி) இருக்கும் பேஷண்டுகளுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியமாக இருப்பவர்களது உடலில் இருக்கும் இல்6, இல்3, புரதங்களை தூண்டிவிடுகின்றன. உடலில் எதாவது மிக கடுமையான வைரஸ் நுழைந்தால் மட்டுமே இந்த புரதங்கள் ஆக்டிவேட் ஆகும். இவை ஆக்டிவேட் ஆனதும் இம்யூன்ஸ் சிஸ்டம் உடனடியாக தாக்குதலை தொடர்ங்கும். இது உடலுக்கு கொடுக்கபடும் உச்சகட்ட அபாய எச்சரிக்கை சிக்னல். இத்தகைய புரதங்களை க்ளியாடின் ஆக்டிவேட் செய்கிறது. இதனால் உடலில் இருக்கும் நல்ல செல்களை இம்யூன் சிஸ்டம் தாக்குகிறது. உள்காயம் இருக்கும் பகுதிகள் தொடர் தககுதலுக்குளாகி மேலும் பாதிப்படைகின்றன.
இதுபோக க்ளையாடின் ஸோனுலின் எனும் வகை புரதத்தை உடலில் உற்பத்தி செய்கிறது. ஸோனுலின் டைப் 1 டயபடிஸ் வர முக்கிய காரணி என்பதுடன் ஸோனுலினை உற்பத்தி செய்யகூடிய சக்திவாய்ந்த இன்னொரு காரணி காலரா வைரஸ் மட்டுமே!!!!!!ஆக ஸோனுலின் உடலில் உற்பத்தி ஆனால் காலரா வைர்ஸ் உள்லே நுழைந்ததாக நினைத்து நம் நோயெதிர்ப்பு சக்தி கலவரம் அடைகிறது. அதீத அளவில் ஸோனுலின் உற்பத்தி ஆவது அனைத்து வகை ஆடோஇம்யூன் வியாதிகளுக்கும் மூலகாரணமாக அமைகிறது
"தீடபடாத முழு தானிய கோதுமை" மற்றும் பிற முழு தானியங்களில் உள்ள லெக்டின் செல்லுலார் அளவில் உள்ளுறுப்புகளில் ஓட்டிகொள்ளும் சக்தி வாய்ந்தது. சிறிய அளவுகளில் லெக்டின் கெடுதல் விளைவிக்காது. ஆனால் லெக்டின் ஏராளமாக உணவில் சேர்ந்தால், அது நம் உள்ளுறுப்பு செல்களில் ஒட்டிகொண்டு உள்காயத்தை உருவாக்குகிறது. லெக்டின் அனைத்து விதைகளிலும் உண்டு (அதனால் தான் ப்சொரியாசிசுக்கு விதைகளை தவிர்க்க வேண்டும் என்பது). லெக்டின் நிரம்பிய உணவுகள் முழுதானியங்கள், பீன்ஸ், பட்டாணி, சோயா, உருளை முதலானவை. மற்றபடி பூண்டு, சில வகைபழங்கள் (உதா: மாதுளை)யில் கூட லெக்டின் காணப்படும். பொதுவாக சமைப்பது லெக்டினை பெருமளவில் குறைத்துவிடும். ஆனால் முழுக்க அழிக்காது. அதனால் வடநாட்டில் சப்பாத்தியும், ராஜ்மா பீன்ஸும் சாப்பிடுவது எத்தனை கெடுதல் என்பது அவர்க்ளுக்கு தெரிவது கிடையாது. லெக்டினை பொறூத்தவரை அளவே விஷம். ஒரு எல்லைக்கு மேல் லெக்டின் உணவில் சேர்ந்தால் கெடுதலே. தானியம், பீன்ஸ், பட்டாணி, சோயா கிழங்கு எல்லாம் தொடர்ச்சியாக உணவில் தினமும் சேர்ந்தால் பாதிப்பே.
ஆய்வுகளில் முழுதானியம் உண்பவர்களுக்கு, தீட்டிய தானிய உணவுகளை உண்பவர்களை விட லேட்டாக டயபடிஸ் வருகிறது (ஆனால் வராமல் இல்லை) என்பது கண்டுபிடிக்கபட்டாலும், முழுதானிய உணவுகளுக்கும், தீட்டிய தானியங்களுக்கும் உள்காயத்தை பொறுத்தவரை எந்த வித்தியாசமும் இல்லை என்பது தெரியவந்தது. அதே சமயம் தொல்மனித உணவுமுறையையும், முழுதானியங்களையும் கொடுத்து ஆய்வு செய்ததில் (உதா: ஜான்சன் 2006, லண்டன் பல்கலை) தொல்மனித உணவுகள் உள்காயத்தை பெருமளவு குறைப்பது நிருபிக்கபட்டது.
ஆக உள்காயம், ஆட்டொஇம்யூன் வியாதிகள் அனைத்தும் நம் உணவுடன் நெருங்கிய தொடர்புடையவை. தானிய உணவுகள் தொடரும் வரை ஆட்டோஇம்யூன் வியாதிகளுக்கு தீர்வு கிடையது.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3705319/
http://www.aarda.org/autoimmune-information/list-of-diseases/
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1635051/
Neander Selvan
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3705319/
http://www.aarda.org/autoimmune-information/list-of-diseases/
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1635051/
Neander Selvan
No comments:
Post a Comment