Saturday, November 5, 2016

இரும்பு சத்து குறைபாடு (அனீமியா) - by selvan

இரும்பு சத்து குறைபாடு (அனீமியா) இந்திய பெண்களை கடுமையாக தாக்கும் ஒரு நோய். இதற்கான காரணங்கள்:



வீட்டில் கணவர், குழந்தைகள் உண்டது போக மிச்சத்தை பெண்கள் உண்பது சைவ உணவு வழக்கம்

மாதவிலக்கு/பிள்ளைபேறு முதலான காலங்களில் இரும்புசத்தின் தேவை அதிகரித்தல்
இதுபோக கடும் உடல்பயிற்சி செய்பவர்கள், அடிக்கடி ரத்ததானம் கொடுப்பவர்கள் ஆகியோருக்கு அனிமியா ரிஸ்க் உண்டு. ரத்ததானம் தரவேண்டாம் என பொருள் இல்லை. ஆனால் அடிக்கடி கொடுப்போர் இரும்பு சப்ளிமெண்ட் எடுத்துகொள்வது நலம்.

அதனால் ஆண்களுக்கு தினம் 8 மிகி இரும்புசத்து உட்கொள்ள பரிந்துரைக்கபட்டுள்ளது. 19- 50 வயது உள்ள பெண்களுக்கு இது இருமடங்கு: அதாவது சுமார் 16- 18 மிகி இரும்புசத்து பரிந்துரைக்கபட்டுள்ளது. இயற்கை பெண்களுக்கு செய்துள்ள ஓரவஞ்சனை எனவும் கூறலாம்.
இந்திய பெண்களில் சுமார் மூன்றில் இரு பங்கு பெண்களுக்கு அனிமியா பாதிப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் சைவ பெண் ஆக இருந்தால் உங்களுக்கு அனிமியா இருக்கும் வாய்ப்பு அதிகம். கீழ்காணும் சிக்கல்கள் உங்களுக்கு இருந்தால் அனிமியா இருப்பதை அறிந்துகொள்ளலாம்.
அடிக்கடி மூச்சுவாங்குதல்

அடிக்கடி களைப்பு ஏற்படுதல் ( இரும்பு சத்து ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களை உற்பத்தி செய்யபயன்படும். சிகப்பு அணுக்கள் உடலெங்கும் ஆக்சிஜனை எடுத்து செல்லும். இரும்புசத்து குறைபாடால் ஆக்சிஜன் பரவல் குறைந்து களைப்பு ஏற்பட்டுவிடும். சோர்ந்து உட்கார்ந்துவிடுவோம்)

தலைசுற்றல் ,தலைவலி ,உள்கை, பாதம் ஆகியவை சூடாக இல்லாமல் குளிராக இருத்தல். உங்கள் உள்கையை ஒருவர் கன்னத்தில் வையுங்கள். "ஐயோ குளிருது" என அவர் சொன்னால் அனிமியாவாக இருக்கும் வாய்ப்பு உண்டு.இதயம் சிறகடிக்கும் பறவையை போல் பட,பட என அடித்தல்.....
உனவல்லாதவற்றை உண்னதோணுதல் (உதா: செங்கல் பொடி, மண்..கர்ப்பிணிகளுக்கு இதை எல்லாம் உண்ண தோன்ற காரணம் இரும்புசத்து குறைபாடு)

நீங்கள் சைவ பெண் ஆக இருந்து மேலே உள்ள அறிகுறிகள் இருந்தால் மருத்துவபரிசோதனை செய்து உடலில் உள்ள இரும்பு சத்து விகிதத்தை டெஸ்ட் செய்யலாம். அனிமியா இருப்பது தெரிந்தால் மருத்துவரிடம் கேட்டு இரும்புசத்து சப்ளிமெண்ட் எடுத்துகொள்வது நலம். ஸ்லோரிலீஸ் ஐயர்ன் எனப்படும் ஒருவகை சப்ளீமெண்ட் உண்டு. அது உடலுக்குள் இரும்புசத்தை மெதுவாக ரிலீஸ் செய்து அது கிரகிக்கபடுவதை அதிகரிக்கும்.
சைவர்களுக்கு உணவின் மூலம் இரும்புசத்தை அடைய முயல்வது சற்று கடினம். காரணம் சைவ உணவுகள் அனைத்திலும் நான் ஹெமே வகை இரும்புசத்து உள்ளது. இவற்றை உடல் கிரகிப்பது மிக கடினம். உதாரணம் கீரையில் இரும்புசத்து அதிகம். ஆனால் கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் அந்த இரும்பை உடல் கிரகிப்பதை தடுத்துவிடும். கீரையில் உள்ளதில் 2% அளவேனும் இரும்பு உடலில் சேர்ந்தால் அதிசயம்.
உலர்திராட்சை, பேரிச்சை, கோதுமை முதலானவற்றுக்கும் இதே நிலைதான். பேரிச்சையில் இரும்பு அதிகம் என பலரும் நம்பி வந்தாலும் அதில் உண்மை இல்லை. நூறு பேரிச்சை பழம் உண்டால் மட்டுமே 19- 50 வயது பெண்ணுக்கு போதுமான இரும்புசத்து கிடைக்கும். ஆனால் அதிலும் கிரகிக்கபடும் இரும்பின் சதவிகிதம் குறைவு

அசைவர்கள் முட்டை, சிக்கன், ஈரல் முதலானவற்றில் போதுமான அளவு இரும்புசத்தை அடையலாம். உதாரணம் 4 முட்டை உண்டால் அதில் 2.4 கிராம் அளவு எளிதில் கிரகிக்கபடும் இரும்புசத்து கிடைக்கும். நூறுகிராம் ஈரலில் ஒரு நாளைக்கு தேவையானதில் 130% இரும்புசத்து கிடைக்கும். அசைவ உணவுகளில் உள்ள இரும்புசத்து எளிதில் கிரகிக்கபட காரணம் அது ஹீமோக்ளோபின் வடிவில் இருப்பதுதான்.

சைவர்கள் பின்வரும் டெக்னிக்குகளை கையாளலாம்:
இரும்புசத்து உள்ள உணவுகளை உண்கையில் கூட வைட்டமின் சீ உள்ள உணவுகள் (நெல்லி, கொய்யா) உண்பது இரும்புசத்து கிரகிப்பதை சுமார் 3- 4 மடங்கு அதிகரிக்கிறது.

இரும்புசத்து உள்ள உணவுகளை உண்டு 2 மணிநேரம் முன்/பின் டீ, நட்ஸ், முழு தானியம் முதலானவற்றை தவிர்க்கலாம். டீயில் உள்ளெ டேனின், நட்ஸ், தானியத்தில் உள்ள பைட்டிக் அமிலம் முதலானவை இரும்புசத்து கிரகிப்பை குறைத்துவிடும்.

இரும்புசத்து உள்ல உணவுகளை உண்கையில் உடன் கால்ஷியம் அதிகம் உள்ள உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும். உதா: பால்,தயிர். கால்ஷியம் இரும்பு நுகர்வை குறைத்துவிடும்.
இரும்புசட்டியில் சமைத்தால் இரும்பு அதிக அளவில் உடலில் சேரும்

இரும்புசத்து உள்ள சைவ உணவுகள்:
தினம் ஒரு தேங்காய் உண்டால் சுமார் 10 மிகி இரும்புசத்து கிடைக்கும். தேங்காயில் உள்ல இரும்புசத்து அதிக அளவில் உடலில் சேர்கிறது.
ஹிமாலயன் சால்ட் இரும்புசத்து அதிகம் உள்ள வகை உப்பு. சாதா உப்புக்கு பதில் அதைபயன்படுத்தலாம்.
பீன்ஸ், பருப்புகள். இவற்றுடன் நெல்லிகனி, லெமென் ஜூஸ் முதலானவற்றை உன்டுவந்தால் இரும்புசத்து நுகர்வு அதிகரிக்கும்

பூசணிவிதையில் இரும்பு சத்து உண்டு
பிளாக்சீட் பவுடரிலும் உண்டு. தினம் 2 ஸ்பூன் பிளாக்சீட் பவுடர் உண்டால் 1.2 மிகி இரும்புசத்து கிடைக்கும்
கிணற்றுநீர், இயற்கையான சுனைநீர் ஆகியவற்றில் மண்ணின் தன்மையை பொறுத்து இரும்புசத்து கிடைக்கும். இரும்புகுழாய்களில் வரும் நீரிலும் இரும்புசத்து கிடைக்கலாம். ஆனால் இதை முழுமையாக நம்பி இருக்க முடியாது

மொத்தத்தில் நீங்கள் சைவ பெண்ணாக இருந்து அனிமியா அறிகுறிகள் இருந்தால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் இரும்புசத்து சப்ளிமெண்ட் எடுப்பது உத்தமம்


Neander Selvan

No comments:

Post a Comment