Showing posts with label LCHF. Show all posts
Showing posts with label LCHF. Show all posts

Tuesday, April 4, 2017

விரதத்தினால் நம் உடலில் ஏற்படும் பத்து (10) நன்மைகள்

1) நம் உடலின் உள்காயங்களை (அழற்சி-INFLAMMATION) குணப்படுத்துகிறது.
2) எடை குறைப்பு திடீரென்று நிற்கும் போது, மீண்டும் எடை குறைப்பைத் தூண்டுகிறது.
3) இன்சுலின் எதிர்ப்பைக்(INSULIN RESISTANCE) குறைத்து டையபடிஸ் டைப் - 2 வருவதைத் தடுக்கிறது.
4) வளர்ச்சி ஹார்மோன்களின் (HUMAN GROWTH HARMONES) உற்பத்தி 5 மடங்கு அதிகமாகி, உடல் கொழுப்பை எரிக்க, தசைகளை வளர்க்க உதவுகிறது.
5) குறைபாடுள்ள செல்கள் பழுது பார்க்க தூண்டுகிறது. செல்களில் உள்ள உபயோகமற்ற பொருட்கள் வெளியேற்றப்படுகிறது. (AUTOPHAGY PROCESS)
6) நமது ஆயுளை நீடிக்கச் செய்யும்மற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக் கூடிய ஜீன் களில் (GENE EXPRESSION) நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, ஆயுளைக் கூட்டுகிறது.
7) ஆரோக்கியமான இருதயத்தை தந்து நமது ஆயுளை கூட்டுகிறது.
8) புற்று நோய் (CANCER) வருவதை தடுக்கிறது
9) நமது மூலையில் புதிய நியூரான்கள் (NEURONS) உற்பத்தியைத் தூண்டி மூளையை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
10) அல்சீமர் நோய் (Alzheimer’s Disease) வருவதைத் தடுக்கிறது.
விரதம் இருப்போம்....பயன் / பலன் பெறுவோம்.

முக்கிய குறிப்பு :
நீரிழிவு நோய் உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இருதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் விரதம் இருப்பதை தவிர்க்கவும்.

Monday, November 7, 2016

மாரடைப்பு ஏன் வருகிறது ?


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
ஸ்டிரெஸ், அதிக ரத்த சர்க்கரை அளவு, அதிக இன்சுலின் அளவு, எக்சர்சைஸ் செய்யாமை, சிகரெட், காற்றில் உள்ள மாசு, அதிக பிரஷர், வயது அதிகரித்தல், ஒமேகா 6 கொழுப்புஅதிகமுள்ள எண்ணெய்கள் (சூரியகாந்தி, ஆமணக்கு, தவிட்டு, கனோலா), ஹோமோசிஸ்டீன் எனும் கெமிக்கலின் அளவு ரத்தத்தில் அதிகரித்தல் போன்ற பல கூறுகள் நம் ரத்தக்குழாய்களில் உள்லைனிங் போன்று இருக்கும் எண்டோதீலியல் செல்களை டேமேஜ் செய்கின்றன. செல்லின் தோலில்(cell membrane) கொலஸ்டிரால் உள்ளது. இந்த தோல் டேமேஜ் ஆகும் போது LDL அங்கு சென்று கொலஸ்டிராலை வைத்து ரிப்பேர் செய்கிறது. செல் சரியானவுடன், HDL அந்தக் கொலஸ்டிராலை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஈரலுக்கு எடுத்துச் சென்று அழிக்கிறது.
LDL, செல்லின் டேமேஜ் ஆன இடத்தில் கொலஸ்டிராலை, 'பேன்ட் எய்ட்' போல் ஓட்டி விட்டு செல்கிறது. இப்போது அந்த செல் தன் தோலை சரி செய்ய முற்படுகிறது. அதனை சரி செய்ய சாட்சுரேட்டட் கொழுப்புகள் (வெண்ணை/முட்டை) மற்றும் புரதங்கள் தேவை.
நாம் சாதாரணமாக மூன்றுவேளையும் சாப்பிடும் இட்லி/தோசை/சாதம்/குழம்பு/காய்கறி/சப்பாத்தி,etc., வில் சுத்தமாக சாட்சுரேட்டட் கொழுப்புகள் இல்லை எனலாம். புரதமும் கம்மி. இதனால் செல் அதன் தோலை சரி செய்ய முடியாமல் தவிக்கும். இதைப் பார்க்கும் LDL, "இந்த ஓட்டைஅடைக்கப்படவில்லை" எனக்கருதி இன்னும் கொஞ்சம் கொலஸ்டிராலை அங்கு அப்பி விட்டு போகிறது. நாளாக நாளாக கொழுப்பு அதிகம் படிந்து மாரடைப்பில் கொண்டு வந்து விடுகிறது.
நாளாக நாளாக உடம்பில் இருக்கும் பல ரத்த நாளங்களில் இது நடக்கிறது. அதனால் LDL ன் தேவை அதிகமாகி, ஈரல் அதிகமான LDLலை சுரக்கிறது. மேலே எழுதியிருப்பதை மீண்டும் படித்தால் ஒரு உண்மை புரியும். ரத்தக் குழாயில் கொழுப்பு படிவது அது காயம் படுவதாலேயன்றி LDL கொலஸ்டிரால் அதிகம் இருப்பதால் அல்ல. உள்காயம் அதிகமாக இருந்தால் LDL அதிகமாக இருக்கும். இது ஒரு அறிகுறி.
LDL லை பழி சொல்வது என்பது, வீட்டி்ல் தீப்பிடித்தால், தீயை அணைக்க வரும் தீயணைப்பு வீரரை பழி சொல்வது போலாகும். அவரை கட்டி வைத்து உதைத்தால் தீ அணைந்து விடுமா? அதனால் தான் LDL அதிகம் இருக்கும் பலருக்கும் ஸ்டாடின் மருந்து கொடுத்தும், இதய வியாதிகள் வருவதை தடுக்க முடிவதில்லை.
இதற்கு வைத்தியம் மருந்து மூலம் LDL லை குறைப்பது அல்ல. பேலியோ போன்ற சாட்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் புரதம் அதிகமுள்ள நல்ல உணவுமுறையும், பேலியோ மூலம் இன்சுலின் லெவலையும் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைப்பதும், டயட் மூலம் பிரஷரை நார்ம்லாக்குவதும், உடற்பயிற்சியும், சிகரெட்டை விடுவதும், மன அழுத்தத்தை தியானம்/யோகா மூலம் செல்கள் காயமடைவதை குறைப்பது மட்டுமே.

Thursday, February 25, 2016

வாரியர் உணவுமுறை - Warriar Diet

 Article by Neander Selvan: 

Hope you are atleast following paleo / LCHF for minimum 3 months, else dont try this it will collapse your metabolism:
வாரியர்உணவுமுறை  பின்பற்றுவது எப்படி?

வாரியர் என எழுதினாலும் இது இன்டர்மிட்டன்ட் பாஸ்டிங் முறையை சார்ந்ததாகும். இதன் அடிப்படை கொள்கை நமக்கு புதிதல்ல. நம் பெரியவர்கள் சொன்னதுதான்.."
மூன்று வேளை உண்பவன் ரோகி, இரு வேளை உண்பவன் போகி, ஒரு வேளை உண்பவன் யோகி.." என

இதில் பாஸ்டிங் விண்டோ, பீடிங் விண்டோ என இரு வகைகள் உண்டு..அதாவது விருந்து/ விரத நேரங்கள்...

துவக்கத்தில் அனைவரும் 12: 12 விண்டோவை கடைபிடிக்கலாம். உடலுக்கு கண்டநேரத்தில் கண்டதையும் கொடுத்து பழக்கவேண்டாம்...காலை 9 மணிக்கு சாப்பிட ஆரம்பித்தால் இரவு 9 மணிக்குள் இரவு உணவை முடித்து விடவேண்டும். அதன்பின் எக்காரணம் கொண்டும் அடுத்தநாள் காலை 9 மணிவரை சாப்பிடவேண்டாம். நீர் மட்டும் பருகலாம்.

அதன்பின் அடுத்த நிலை காலையில் பசிக்கையில் மட்டுமே உண்பது...பல சமயம் பார்த்தால் நாம் விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கு எழுவோம். மதியம், 1- 2 வரை பசிக்கவே பசிக்காது. ஆக இந்த நிலையில் காலை உணவை தாராளமாக ஸ்கிப் செய்யலாம்..காலையில் பசிக்கையில் மட்டும் சாப்பிட ஆரம்பிப்பது என அடுத்த ஸ்டேஜுக்கு செல்லுங்கள்..9 மணிக்கு சபபிட்டே ஆகணும் என எந்த கட்டாயமும் இல்லை.

ஆக இந்த 12: 12 விண்டோவை 8: 12 என அடுத்த கட்டத்தில் மாற்றுங்கள். எட்டு மணிநேரத்தில் 2 வேளை உணவை எடுக்கலாம். அதன்பின் 16 மணிநேரம் விரதம்

உதாரணம்

மதியம் 12 மணிக்கு 4 முட்டை, காய்கறி

மாலை 6 மணிக்கு: 1/2 கிலோ மட்டன்

இதில் கவனிக்க வேண்டியது

முதல் உணவில் காலரி குறைவு

இரண்டாவது உணவில்/ டின்னரில் காலரி அதிகம்

நடுவே ஸ்னாக்ஸ் மிக அவசியம் இல்லையெனில் வேண்டாம்..

இதில் பழக்கபட்ட பின் அடுத்து நாலுமணி நேர விண்டோ

இதில்

மாலை 3 மணிக்கு 4 முட்டை, காய்கறி

இரவு 7 மணிக்குள் கால் கிலோ சிக்கன்

அதன்பின் 20 மணிநேரம் விரதம்

இதன் உச்சகட்டம்

ஒரு வேளை உணவு...இதன்படி தினம் மாலை 3- 4 மணிக்கு அரைகிலோ அல்லது முக்கால் கிலோ கொழுப்புள்ள இறைச்சி மட்டுமே எடுக்கவும். அதன்பின் மீண்டும் 23 மணிநேரம் பட்டினி...

சில டிப்ஸ்கள்

துவக்கத்தில் கஸ்டமாக இருந்தால் பாஸ்டிங் விண்டோவில் லைட்டான ஸ்னாக்ஸ் எடுக்கவும்...2 முட்டை, 1 கப் பால் முதலானவை.

எடுத்த எடுப்பில் சிங்கிள் மீலுக்கு அல்லது 4 மணிநேர விண்டோவுக்கு போகவேண்டாம்...12:12, 8:16, 6:18, அதன்பின் 4:20, அதன்பின் 1:23 என செல்லவும்

விரதம் இருக்கிறோம் என குப்பை உணவால் வயிற்றை நிரப்பவேண்டாம்..பேலியோ உணவுகளே உண்ணவும்

விரதம் இருக்கையில் காலரிகள் குறைவாக எடுக்கவேண்டும். பேலியோ உணவாக இருந்தாலும். 1500- 1800 காலரிகள் போதுமானவை

பட்டினி கிடக்கவேண்டாம் பசியுடன் இருக்கவேண்டாம் . பசித்தால் டின்னரில் கூடுதலான அளவு இறைச்சி சேர்க்கவும்

முடியவில்லையெனில் தினமும் 12:12 இருந்துவிட்டு வாரம் 2 நாள் மட்டும் 4:20 இருக்கலாம்...

டயபடிஸ் உள்ளவர்கள், பிரசர் உள்ளவர்கள் 12:12உடன் நிறுத்திக்கொள்வது நல்லது.