இன்று புது உறுப்பினர் ஒருவருக்கு டயட் பற்றி விளக்கினேன். விளக்கி முடிஞ்சதும், இதை க்ரூப்பில் போட்டால் புதிதாய் சேரும் பலருக்கு உதவுமே என்று நினைத்தேன். ஆகவே அதை எடிட் செய்து, பெயரை நீக்கி, இங்கே இடுகிறேன். யாராவது ஒரு சிலருக்காவது உபயோகமாய் இருந்தால் மகிழ்ச்சியே. கொஞ்சம் நீளமா இருக்கும். பொறுமையா வாசிங்க. புது உறுப்பினர்களுக்கு அதுவும் குறிப்பாக முட்டை கூட சாப்பிடாத வெஜிடேரியன்களுக்கு உபயோகமாக இருக்கலாம்.
I am New Joiner. My weight is 68 kg. height is 156 CM. I just want to reduce my weight. I am Vegetarian. please suggest me diet.
வெஜிடேரியனா முட்டை கூட சாப்பிட மாட்டீங்களா
S sir
ஓகே. ஸ்டெப் நம்பர் 1. எல்லா தானியங்களையும் நிப்பாட்டணும். அரிசி, கோதுமை, மைதா, ரவை, பருப்பு, பயறு, பட்டாணி, சுண்டல், கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம் மற்றும் எல்லா சிறு தானியங்களும்
Ok. I am already using kuthiraivalli for my lunch substitute for rice
அதையும் நிப்பாட்டுங்க
Ok sir
ஸ்டெப் நம்பர் 2: இனிப்பு என்னும் வார்த்தையைவே மறக்கணும். சீனி, சர்க்கரை, பனங்கற்கண்டு, தேன், கருப்பட்டி, வெல்லம், சுகர் ஃப்ரீ இப்படி எல்லாம். நம்ம டயட் லோ கார்ப் ஹை ஃபேட் டயட். சரிங்களா, அதனால நல்ல கொழுப்பு எடுக்கணும். கொழுப்பு ரொம்ப நல்லது. அதனால கொழுப்பு எடுக்க பயப்படக்கூடாது
Romba kastam sir. I like coffee more. Let me try
கார்பை நிப்பாட்டுறோம். கார்ப் அப்படீன்னா கார்போஹைட்ரேட். அதன் மூலமா கிடைக்கும் க்ளூகோஸ் தான் உடம்புக்கு எனர்ஜியா இது வரை இருந்தது. ஆனா, அப்படி கிடைக்கும் க்ளூகோஸ் எனர்ஜியை உங்க உடம்பிலுள்ள செல்கள் முழுவதுமா ஏத்துக்கிடலை. முக்கால்வாசிய ஏத்துக்கிட்டு மீதியை அப்படியே கொழுப்பா மாத்தி சேமிச்சு வைக்குது. புரியுதுங்களா
I understand sir
அதனால நாம செய்யிற வேலை என்னன்னா உடம்புக்கு க்ளூகோஸை ரொம்ப கம்மியா குடுக்கப்போறோம். அதுவும் காய்கறிகள் போன்ற நல்ல சோர்ஸிலிருந்து மட்டும். பிரதான எனர்ஜியா கொழுப்பையும் ப்ரோட்டீனையும் கொடுக்கப் போறோம். இதை உடம்பில் உள்ள செல்கள் முழுசா ஏத்துக்கிடும். உங்களுக்கு அடிப்படை சைன்ஸை விளக்கினால் தான் டயட் புரியும். அதனால தான் இம்புட்டு எக்ஸ்ப்ளனேஷன் குடுக்கிறேன். புரிஞ்சதுன்னா ஓகே சொல்லுங்க. அடுத்து சொல்றேன்
I understand sir.
ஓகே. இப்போ கொழுப்பு + ப்ரோட்டீனை அதிகமா எடுத்து கார்பை கொஞ்சமே கொஞ்சூண்டு எடுக்கப்போறோம். அதனால என்னாகுதுன்னு கேட்டீங்கன்னா, கணையம் இன்சுலினை ரொம்ப கம்மியா சுரக்குது. ஆனா அதே நேரம் உடம்புக்கு தேவையான எனர்ஜி கிடைச்சிருது
Really interesting sir.
ஆனா நம்ம உடம்பின் சிஸ்டம் எப்படி இருக்குன்னா, ரத்தத்தில் இன்சுலின் அளவு கம்மியா இருந்தா, நம்ம உடம்பில் ஏற்கெனவே நிறைய இருக்கும் கொழுப்பிலிருந்து எனர்ஜி ரிலீஸ் ஆகும். அப்படித்தான் நம்ம எடை குறையப் போகுது. ஏன்னா இன்சுலின் தான் செல்களுக்கு க்ளூகோஸ் எனர்ஜியை எடுத்துக்கோ அப்படீன்னு கட்டளை போடுறவர். செல்கள் இன்சுலின் பேச்சைக் கேட்டுக் கேட்டு மரத்துப் போய் நாளடைவில் அது சொல்றதைக் கேக்கிறதில்லை. அந்த நிலைக்குப் பெயர் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ்.
Sir you are more informative. Follow up this diet is difficult I think.
இப்படிப்பட்ட நிலையில் செல்கள் ஏத்துக்கிடாத க்ளூகோஸையெல்லாம், இன்னும் கொஞ்சம் அதிகமா இன்சுலினை கணையம் சுரக்க வைத்து, அந்த எக்ஸ்ட்ரா எனர்ஜி எல்லாத்தையும் ட்ரைகிளிஸரைட்ஸ் என்னும் கொழுப்பா மாற்றி சேகரிச்சு வச்சிடுது. அப்படி ஒன்னும் கஷ்டம் இல்லை. நம்ம கொழுப்பு + ப்ரோட்டீன் டயட்ல க்ளூகோஸ் ஒரே சீரா கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் ஆகும். முன்பு கார்ப் உணவு எடுத்தது போல் ஒரே நேரத்தில் எக்கச்சக்கமா ரிலீஸ் ஆகாது. அதனால அதிகம் பசிக்காது. ஏற்கெனவே சேர்த்து வைத்திருக்கும் கொழுப்பும் கரையும். சரி வெஜிடேரியன்ல நீங்க என்ன சாப்பிடலாம்னு பார்க்கலாம்.
முதல்ல சமையல் எண்ணெய். சமையலுக்கு வெஜிடபிள் ரீஃபைண்டு எண்ணெய்களையே பயன்படுத்தக்கூடாது. வெண்ணெய், நெய், செக்குல ஆட்டின தேங்காய் எண்ணெய், செக்குல ஆட்டின நல்லெண்ணெய் இதைத்தான் உபயோகப்படுத்தணும். சரியா
Butter, ghee ok. Oil where we will get in Dubai
ஓகே. இங்கே பர்துபாய் பேங்க் ஸ்ட்ரீட்ல அப்சரா சூப்பர் மார்க்கெட்ல நிர்மல் என்னும் ப்ராண்ட்ல வர்ஜின் கோகோநட் ஆயில் கிடைக்குது. வெள்ளைக்கலரில் இருக்கும். லுல்லுல கேட்டுப்பாருங்க. இல்லை கேரிஃபோரிலும் கிடைக்குதான்னு பாருங்க. 400 எம் எல் 20 திர்ஹாம். 100% கோகோநட் ஆயில்னு போட்டிருக்கிறது வாங்கக்கூடாது. அப்புறமா பட்டருக்கு
KerryGold unsalted butter வாங்குங்க Kerrygold இல்லைன்னா President இல்லைன்னா Anchor கெர்ரிகோல்ட், ப்ரெஸிடெண்ட், ஆங்கர் இதெல்லாம் புல் தின்னு வளர்ந்த மாடுகளில் இருந்து கிடைக்கும் பட்டர். ரொம்ப நல்லது. லூர்பாக் லாஸ்ட் சாய்ஸ்
Okay. லோகல் பட்டரான அல் ரவாபி, அல் மராய், நம்மூரு அமுல் இதெல்லாம் வேண்டாம். ஒரு நேரம் உணவு உங்களுக்கு பாதாம்
Which means breakfast
100 எண்ணிக்கை பாதாம். 100 முடியலைன்னா எவ்வளவு மேக்ஸிமம் முடியுதோ அவ்வளவு.
Okay
பாதாமை சாப்பிடும் முன் பின் இரண்டு மணி நேரம் வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. தனியா சாப்பிடணும். பாதாமை மினிமம் 8 மணி நேரம் சால்டட் வாட்டர்ல ஊற வைக்கணும். அதன் பின் அந்தத் தண்ணியைக் கொட்டிட்டு நல்ல தண்ணீரில் நல்லா கழுவிட்டு சாப்பிடணும்.
So overnight soaking morning breakfast aa badam
ஊற வைக்க சோம்பேறித்தனம்னா நல்லா இரண்டு முறை கழுவிட்டு, உலர்த்திட்டு, வாணலில நெய் விட்டு, பொன்னிறமா வறுத்து, உப்பு பெப்பர் போட்டு கடைசில லெமனை பிழிஞ்சி விட்டு சாப்பிடலாம் சுவையா இருக்கும். ம்ம் ப்ரேக்ஃபாஸ்ட்டா இல்லைன்னா லஞ்ச்சா எதுனாலும் ஓகே. தோலோடு சாப்பிடணும்.
Mmm.
ஊற வச்சு, பின் இது போல் ரோஸ்ட் பண்ணியும் சாப்பிடலாம்.ஒரு நேர உணவு 300 கிராம் காய்கறிகள். பேலியோல அனுமதிக்கப்பட்ட காய்கறிகள் + பனீர் + கீரை
Afternoon
எல்லா வகை கீரைகளும் சாப்பிடலாம். காய்கறி சாப்பிட்டீங்கன்னா நிச்சயமா பனீரும் சேர்க்கணும்.
Just boiling of vegetables or can I do it like poriyal
ஏன்னா காய்கறில நல்ல கார்ப் மட்டும் தான் இருக்கு. பனீரில் தான் கொழுப்பும், ப்ரோட்டீனும் இருக்கும்.
Just fry panner with ghee is enough va sir
அவிச்சோ, இல்லை அவிச்சிட்டு வாணலில தாளிச்சுக்கொட்டி மசாலா மணம் போக அப்படியே கிளறி வேக விட்டோ, இல்லை பருப்பில்லாம கூட்டு வச்சோ எப்படியோ. ஆமா பனீரை நெய்ல ரோஸ்ட் பண்ணி காய்கறிகளோடு சேர்த்து சாப்பிடலாம்.
Okay
ஸ்நேக்ஸா என்னென்ன சாப்பிடலாம். ஒரு கப் முழுக்கொழுப்பு பால், இல்லை முழுக்கொழுப்பு தயிர். இல்லை 50 கிராம் சீஸ். இல்லை தேங்காய் கால் மூடி இல்லை அதிலும் கொஞ்சம் கம்மியா. தேங்காயை அப்படியே. வெஜிடபிள் சூப்
Yogurt Any brand is ok sir
ஆக, ஸ்நேக்ஸா பால், காபி, டீ, தயிர், சீஸ், சூப் இப்படி பல ஆப்ஷன் இருக்கு. ஆமா, யோகார்ட் ஓகே ஆனா ஃபுல் க்ரீம், அல்லது ஃபுல் ஃபேட் யோகார்ட்
Night veg soup
எங்கே என்ன வாங்கினாலும் லோ ஃபேட் என்பதை வாங்கவே கூடாது ஸ்கிம்டு அப்படீங்கிற வார்த்தையே இருக்கக்கூடாது. மதியம் பாதாம் எடுங்க. இரவில் காய்கறி + பனீர் + கீரை எடுங்க. காலைக்கு ஒரு ஐட்டம் சொல்றேன் இண்டெரெஸ்ட்டிங்கா இருக்கும். காலை 8 மணிக்கு அதை எடுங்க
Superb sir. Let me try.
அதன் பேரு புல்லட் ப்ரூஃப் காபி, அல்லது காபி பிடிக்கலைன்னா பட்டர் டீ. எது பிடிக்கும் காபியா இல்லை டீயா
Coffee sir.In all these my only difficulty is coffee
ஓகே. வித்தியாசமான காபி சொல்லப்போறேன். பவர் ஹேண்ட் ப்ளெண்டர் வச்சிருக்கிறீங்களா
No sir
போய் வாங்குங்க 99 திர்ஹாம் தான். ஜாரோடு கிடைக்கும். மோலிநெக்ஸ் ப்ராண்ட்ல
Okay
இல்லைன்னா பரவாயில்லை மிக்ஸில பெரிய ஜூஸர் ஜார் இருக்கே
I have big jar
25 கிராம் அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் அன்சால்டட் பட்டர் எடுத்துக்கோங்க. அதோடு இரண்டு டீஸ்பூன் வர்ஜின் தேங்காய் எண்ணெய் விடுங்க. அதோடு ஒரு ஃபுல் டீஸ்பூன் இன்ஸ்டண்ட் காஃபி பவ்டர். டேவிட் ஆஃப் ப்ராண்ட்ல அருமையா கிடைக்குது காபி பவுடர் ஃபைன் அரோமா ரிச் அரோமா ரெண்டுமே ஓகே. இதோடு 250 எம் எல் சூடு தண்ணீர்
Coffee powder with coconut oil and butter a
இது எல்லாத்தையும் ப்ளெண்டரிலோ இல்லை மிக்ஸி ஜூஸ் ஜாரிலோ போட்டு 30 செகண்ட்ஸ் ப்ளெண்ட் பண்ணுங்க. அது தான் புல்லட் ப்ரூஃப் காபி. ஆமா. குடிச்சுப் பாருங்க. அமிர்தமா இருக்கும். ஆரம்பத்தில் அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விடுங்க. கொஞ்சம் கொஞ்சமா கூட்டுங்க. ஆரம்பத்தில் தேங்காய் எண்ணெய் சுவை பிடிக்காமல் போகலாம். ஆனா நீங்க ஒரு காபி ரசிகர்னா உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். முக்கியம் பட்டர் உப்பில்லாத பட்டர். நான் சொன்ன ப்ராண்ட். 30 செகண்ட் ப்ளெண்ட் பண்ணினா காபி மாதிரியே இருக்கும். பாலுக்குப் பதில் பட்டர் அவ்வளவு தான். தேங்காய் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு மூளைக்கு அவ்வளவு நல்லது. இது மூனு மணி நேரம் பசி தாங்கும். ஓகேவா
Oh okay.
இது பிடிக்கலைன்னா, ஒரு கப்ல பாதி பால், மீதி தண்ணீர், இதை ஒரு டீ போடும் பாத்திரத்தில் விட்டு, இதோடு ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் அல்லது 20 கிராம் பட்டர் விட்டு, கொதிக்க விடுங்க
Mmm
சரி அதோடு ஒரு டீஸ்பூன் டீயும் சேர்த்து கொதிக்க விடுங்க. கொதிச்சதும் எப்பவும் போல ஃபில்டர் பண்ணி குடிங்க. நோட். ரெண்டிலும் சுகர் அறவே கிடையாது. இதுக்குப் பேர் பட்டர் டீ. இதுவும் பசி தாங்கும். ரெண்டரை அல்லது மூனு மணி நேரம் கழிச்சு தேங்காய்ச்சில் ரெண்டு அல்லது மூனு அல்லது வெஜிடபிள் சூப் இப்படி எதுனாச்சும் சாப்பிடுங்க ஆக, ப்ரேக்ஃபாஸ்ட் = புல்லட் ப்ரூஃப் காபி அல்லது பட்டர் டீ, அப்புறம் தேங்காய் பச்சையா இல்லை வெஜிடபிள் சூப், லஞ்ச் = 100 பாதாம், ஸ்நேக்ஸ் = ஒரு கப் பால், தயிர், சீஸ் ஏதாவது, டின்னர் = 300 கிராம் பேலியோ காய்கறிகள் + பனீர் + கீரை, இது தான் உங்க டயட்டு
Good. Thank you sir. Huge note.
இடையில் உப்புப்போட்ட லெமன் ஜூஸ் எப்பவாச்சும் எடுத்துக்கோங்க. லெமன் போரடிச்சா நெல்லிக்காயை ஜூஸ் போட்டு இல்லை அப்படியே சாப்பிடுங்க. இது வைட்டமின் சிக்கு. இன்னும் முக்கியமான ஒன்னு இருக்கு மதியம் 11 மணியிலிருந்து இரண்டு மணி வரை இருக்கும் வெயிலில் தினமும் ஸ்கின்னை எக்ஸ்போஸ் பண்ணி அரை மணி நேரம் இருக்கணும். ஹால்ஃப் ஸ்லீவ் டாப்ஸ், முடிஞ்சா முக்கால் வாசி பாட்டம். தலையை தொப்பி போட்டு கவர் பண்ணிக்கோங்க. இது வைட்டமின் டிக்கு. இது ரொம்ப அவசியம். ஓகேவா? ஆரம்பத்தில் நாலைஞ்சு நாட்களுக்கு தலைவலி இருக்கும். அந்நேரம் நல்லா தண்ணீர் குடிங்க
Lemon juice and Amla juice i am already taking i
உங்க சமையலில் உப்பு ரெஸ்ட்ரிக்ட் பண்ண வேண்டாம். லெமன் அண்ட் நெல்லிக்காய் ஜுஸில் உப்பு தாராளமா போட்டு குடிங்க
I am using rock salt now
நிறைய தண்ணீர் குடிக்கணும். ஓகே ராக் சால்ட் இஸ் ஓகே. அவ்வளவு தான். இனிமே க்ரூப்ல உள்ள பிண்டு போஸ்ட் படிங்க. எல்லாம் நல்லா புரியும். சங்கர் ஜியின் ப்ளாக் வாசிச்சீங்களா
No sir
நான் லிங்க் தரேன்.
I think paleo diet blog a sir.
அதை வாசிக்கும் முன், இப்போ நான் சொன்னதை எல்லாம் மீண்டும் ஒரு முறை முழுசா திருப்பி வாசிங்க. அப்புறமா அதை வாசிங்க. இதில் சொல்ல விடுபட்டது எல்லாம் அதில் கிடைச்சிடும்.
http://paleogod.blogspot.in/…/repeated-questions-about-pale…
இந்த லிங்க்ல உள்ளதை நல்லா வாசிங்க. அப்புறம் க்ரூப்ல உள்ள போஸ்ட்டையெல்லாம் கவனமா வாசிங்க.
Will start my diet after eid holidays.
ஓகே. டயட்டை ஆரம்பிச்சுட்டு நாலைஞ்சு கிலோ எடை குறைச்சிட்டு அப்புறமா தெம்பா வாங்க. இடையில் சந்தேகம்னா கேளுங்க. தெரிஞ்சதைச் சொல்றேன். க்ரூப்ல கேட்டாலும் சரி.
Will update u later. Once again thank u. Spending your time to explaning me
No comments:
Post a Comment