Friday, March 2, 2018

ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் பேலியோ முயற்சிப்பவர்களுக்கான வழிகாட்டி.

ஆரோக்கியம் நல்வாழ்வு Facebook Group மூலம் பேலியோ உணவுமுறையைப் பற்றி அறிந்துகொள்ள வந்திருக்கும் உங்களை வரவேற்கிறோம்.


எச்சரிக்கை - 1.

இந்த உணவுமுறை மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம்படித்து தெரிந்துகொண்டது ஆகியவற்றின் பேரில் எழுதபட்டது. இந்த உணவுமுறையைத் துவக்குமுன் மருத்துவர் அறிவுரையை கேட்டுகொன்டு பின்பற்றூவது நலம்
இந்த உணவுமுறையால் கொலஸ்டிரால் & எல்டிஎல் ஏறும். சுகர் இறங்கும். பிளட் பிரஷர் கட்டுபாட்டில் வரும். இதற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. படித்து அறிந்துகொள்ளவும்.
இந்த ரெசிப்பிக்களால் சுகர் இறங்குவதால் அதற்கு தகுந்தபடி சுகர் மாத்திரை அளவை மருத்துவர் அறிவுரையின் பேரில் குறைத்துகொள்வதும்சுகர் லெவலை அடிக்கடி மானிட்டர் செய்து லோ சுகர் ஆகாமல் பார்த்துகொள்வதும் அவசியம்.
இது பொதுவாக சுகருக்கும்எடைகுறைப்புக்கும் எழுதபட்டது. அத்துடன் வேறு எதாவது சிக்கல்கள்வியாதிகள் (உதா: கிட்னி பிரச்சனை) இருந்தால் அம்மாதிரி பிரச்சனைகளை மனதில் வைத்து இது எழுதபடவில்லை. அம்மாதிரி சூழலில் இதை மருத்துவ ஆலோசனை இன்றிப் பின்பற்றவேண்டாம்.


எச்சரிக்கை - 2.

எங்கள் குழு முழுவதும் இலவசமாக ஆலோசனைகள் தரும் குழுமம். நீங்கள் பேஸ்புக்கில் கேள்வி கேட்டு யாரேனும் உங்கள் இன்பாக்ஸில் நான் டயட் தருகிறேன் என்று தனிச் செய்தி அனுப்பினாலோ, போன் நம்பர் கேட்டாலோ உடனடியாக அதை எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரவும். எங்கள் குழுவின் அட்மின்கள், தன்னார்வலர்கள் யாரும் இப்படித் தனித் தொடர்பில் உறுப்பினர்களைத் தொடர்புகொள்ள மாட்டார்கள். தேவையில்லாத ஆன்லைன் கிரிமினல்களிடம் சிக்கி உங்கள் பணத்தை, ப்ரைவஸியை இழக்கவேண்டாம்.


புகார் செய்ய இமெயில் : neander2100@gmail.com

01.

இந்தப் பக்கத்தில் பேலியோ உணவுமுறையின் முக்கியக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது. அடிப்படையான கேள்விகள் கேட்கும் முன்பாக இந்தப் பக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுரைகளையும் பொறுமையாகப் படித்து பேலியோ பற்றி அறிந்துகொள்ளுங்கள். 

02. 

ரத்தப் பரிசோதனை முடிவுகள் பார்த்த பின்பே ஆரோக்கியம் நல்வாழ்வுக் குழுவில் உங்களுக்கான பேலியோ பரிந்துரைகள் இலவசமாக வழங்கப்படும். பேலியோ உணவுமுறையைப் பின்பற்றுவதற்காக குழு பரிந்துரைக்கும் அடிப்படையான ரத்தப் பரிசோதனைகள் விவரம்:


மேலே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தப் பரிசோதனைகளை நீங்கள் உங்களுக்கு வசதியான லேபுகளில் டெஸ்ட் எடுத்து அதனை குழுவில் Excel Sheet Format ல் படமாகப் பகிர்ந்தால் உங்களுக்கான பேலியோ உணவுப் பரிந்துரைகள் வழங்கப்படும். 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பரிசோதனைகளையும் எடுக்க முடியாத நிலையில் இருக்கும் வெளிநாட்டு வாழ் மக்கள் கீழ்க்கண்ட குறைந்தபட்ச டெஸ்ட்களை எடுத்தும் குழுவில் பேலியோ உணவுப்பரிந்துரைகள் பெறலாம். நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்? உங்கள் உடல் பிரச்னைகள், எடுக்கும் மாத்திரைகள் விவரம் போன்றவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். 

வெளிநாட்டு வாழ் மக்களுக்கான குறைந்தபட்ச டெஸ்ட்கள்:

Hba1C, Thyroid, Lipid profile, Kidney profile, Urine, Liver Profile If possible include any or all of the above tests. 

இருப்பினும் வெளிநாட்டு மக்கள் இந்தியா வரும்போது முழு பரிசோதனை செய்து விவரங்கள் அறிந்துகொள்வது அவசியம். 

பல ஆண்டுகளாக டயபடிக்காக இருக்கும் மக்கள், அதிக உடல் எடை (90 கிலோவிற்கு மேல்) இருக்கும் மக்கள், குடி, சிகரெட் அல்லது அதிக நாட்கள் உடலில் பிரச்னைகளோடு இருக்கும் மக்கள், வயதானவர்கள், அறுவை சிகிச்சை, இதய நோய்கள், கிட்னி பிரச்னை மக்கள் அனைவரும் மேலே பரிந்துரைக்கப்பட்ட ரத்தப் பரிசோதனைகளுடன், அப்டமன் ஸ்கேன் மற்றும் ஈ சி ஜி டெஸ்ட்களும் சேர்த்து எடுத்து பதிவிடுவது நல்லது. ஈ சி ஜி அப்டமன் ஸ்கேன் போன்றவை நீங்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது எடுத்து உங்கள் குடும்ப மருத்துவரிடம் அறிவுரை பெற்று வருமுன் காக்கவேண்டியே இதைப் பரிந்துரைக்கிறோம். ரத்தப் பரிசோதனை முதற்கொண்டு நீங்கள் எடுத்துப் பகிரும் எந்த டெஸ்ட் ரிசல்ட்களையும் வைத்துக்கொண்டு நாங்கள் எந்த மருத்துவமும் பார்ப்பதில்லை, மருந்துகளும் பரிந்துரைப்பதில்லை. அதன் பிரச்னைகள் அடிப்படையில் உங்கள் மருத்துவரைப் பார்க்கவும் நீங்கள் ஏதாவது உணவைத் தவிர்க்கவேண்டி இருப்பின் அதைச் சொல்லவும், பேலியோ உணவுமுறை உங்களுக்கு ஒத்துக்கொள்ளாதென்றால் அதை எடுத்துச் சொல்லவும் மட்டுமே அதை நாங்கள் பயன்படுத்துகிறோம். உங்கள் உடல் பிரச்னைகள் எதுவாக இருப்பினும் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து சிகிச்சை  எடுத்துக்கொள்ளவேண்டும்.  

மேற்கண்ட டெஸ்ட்களை குறைந்த விலையில் தென் இந்தியா மற்றும் இந்தியா முழுமைக்கும் ஆரோக்கியம் நல்வாழ்வு குழு மக்களுக்காகச் செய்து தரும் லேப் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பரில் அவர்களைத் தொடர்புகொண்டு நீங்கள் வசிக்கும் இடத்தில் அவர்கள் பரிசோதனை நிலையம் அல்லது வீட்டிலேயே ரத்த மாதிரிகள் எடுக்கும் வசதி இருக்கிறதா என்று கேட்டு அறிந்துகொள்ளலாம். எங்கு ப்ளட் டெஸ்ட் செய்துகொள்வது என்பது உங்கள் விருப்பம். எங்களுக்குத் தேவை டெஸ்ட் ரிசல்ட்கள் மட்டுமே.

பல ஆண்டுகளாக உடல் பிரச்னை இருப்பவர்கள், இது போன்று டெஸ்ட்கள் செய்யாதவர்கள், முதல் முறையாக பேலியோ முயற்சிக்க விரும்புபவர்கள், முழு பேலியோ பரிசோதனை செய்துகொள்வது அவசியம். குறைந்த விலையில் கிடைக்கும் பாக்கேஜ்கள் ஏற்கனவே பேலியோ முயற்சித்து உடல் பிரச்னைகள் அறிந்த மக்களுக்கானது.

ஆர்பிடோ லேப் ஸ்கான்ஸ் – 9087690877, 9344113880

ஆர்த்தி ஸ்கான்ஸ் : 99400 22667, 044- 66007700

தைரோகேர் – 022-30900000 / 41252525 அல்லது PALEO என்று 9870666333 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பி பேலியோ 1.7 டெஸ்ட் எடுக்கவும்.

03. 

ரத்தப் பரிசோதனை ரிசல் வந்ததும் அதனை குழுவில் படங்களாக அல்லது பிடிஎஃப் பைலாக இணைக்காமல் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி போஸ்ட் செய்தால் மட்டுமே உணவுப் பரிந்துரை கிடைக்கும்.

ரத்த பரிசோதனை ரிப்போர்ட் கிடைக்கப்பெற்றதும் கீழே கொடுக்கப்பட்டு உள்ள வழிமுறையை பின்பற்றி குழுவில் உங்களது ரத்த பரிசோதனை ரிப்போர்ட்யை பதிவிடுங்கள்.

எக்ஸ்செல் ஷீட் கிரீன்ஷாட் இல்லாத பதிவுகள் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. எக்ஸ்செல் ஷீட்அப்படியே பதிவு செய
்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.

எக்ஸ்செல் ஷீட் ஸ்கிரீன் ஷாட் (இமேஜ் ஃபார்மட்டில்) எடுத்து தான் பதிவு செய்ய வேண்டும்.

எனவே,உங்களிடமிருக்கும்ரிபோர்ட்களில் உள்ள ரிசல்ட் நம்பர்களை இந்த எக்ஸ்செல் ஷீட்டில் தவறு இல்லாமல்சரியாக இட்டு நிரப்பி அதை SCREEN SHOT எடுத்து இங்கு பதிவிடவும்.

தவறான தகவல்களுக்கு நீங்களே பொறுப்பு. சரியான தகவல்கள் இல்லாத ரிப்போர்ட்களுக்கு டயட் சார்ட் தர இயலாது.இந்த லிங்க்கில் இருக்கும் எக்ஸ்செல் ஷீட் பார்மட்டைடவுன்லோட் செய்து உபயோகப்படுத்திக்கொள்ளவும்.
https://drive.google.com/file/d/1OQ8GuAe8idWgUBKk-VvUB-974l2d_apD/view?fbclid=IwAR0AHvr0W_wkPUd6xNSHSgtbYQBy2mgvPb4KyT92i9CTi11uFu4RNczxXFU

கவனமாக படித்து அதில் குறிப்பிட்டபடிபதிவேற்றவும் கீழ்க்கண்ட விபரங்கள் அனைத்தையும்கண்டிப்பாககுறிப்பிடவும்
(வயது, ஆண்/பெண், சென்டிமீட்டரில் உயரம், சைவமா / அசைவமா/ முட்டை+சைவமா, நோய்கள், எடுக்கும் மருந்துகள்)

எக்ஸ்சல் ஷீட் நிரப்பி பதிவு செய்வதற்கான வழிமுறைகள்:
கொடுக்கப்பட்டிருக்கும் லின்க்கில் இருந்து எக்ஸ்சல் ஷீட்டை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

அதில் கேட்கப்பட்டிருக்கும் நம்பர்களை உங்களது இரத்தப்பரிசோதனை அறிக்கையில் பார்த்து தவறில்லாமல் நிரப்பவும். (min-max என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நம்பர்களை மாற்ற வேண்டாம்)
கம்ப்யூட்டரில் உள்ள ALT மற்றும் PRINTSCREEN (PrtSc) பட்டன்களை அழுத்தவும்.

Paint என்னும் சாப்ட்வேரை ஓபன் செய்து அதில் “Paste” செய்யவும். பின்னர், அதனை JPEG என்ற ஃபார்மட்டில் சேவ் செய்து கொள்ளவும்.
இப்போது ஆரோக்கியம் & நல்வாழ்வு குழு முகநூல் பக்கத்தை திறந்து டைம்லைனில் (“Write Something” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியில்) உங்களது விபரங்களைக் குறிப்பிட்டு, Add Photo/Video என்ற இடத்தில் நீங்கள் Paint சாப்ட்வேரில் சேவ் செய்து வைத்த ஸ்கிரீன்ஷாட் ஃபைலை இணைக்கவும்.

உதாரணமாக மற்றவர்கள் எப்படி & எந்த வடிவில் அவர்களது ரிப்போர்ட் பதிவு செய்து உணவு பரிந்துரை பெற்று உள்ளார்கள் என்று பார்க்கவும்.

பதிவு செய்வதற்கான நடைமுறைகள் இத்துடன் நிறைவு பெறுகின்றன. உங்களுக்கான உணவு பரிந்துரை நீங்கள் உங்களது ரிப்போர்ட்யை பதிவிட்டதும் அந்த பதிவில் வழங்கப்படும்..

04.

பேலியோ உணவுமுறைக்கான பொருட்கள் வாங்க கீழ்க்கண்ட குழுவில் இணைந்துகொண்டு அங்கே விளம்பரப்படுத்தப்படும் விற்பனையாளர்களிடம் தெளிவாகப் பேசி விவரம் அறிந்து நீங்கள் உங்கள் பேலியோ உணவுமுறைக்கான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். அல்லது உங்கள் அருகாமையில் இருக்கும் கடைகளிலும் அவை கிடைக்கிறதா என்று பார்த்தும் வாங்கிக்கொள்ளலாம். இதுவும் ஒரு இலவச சேவை என்பதால் விற்பனை வியாபாரம் சம்பந்தமான எந்தப் பிரச்னைகளுக்கும், கொடுக்கல் வாங்கல்களுக்கும் குழுவோ, அட்மின்களோ, வாலண்டியர்களோ பொறுப்பாக மாட்டார்கள்.

பேலியோ சந்தை குழு லிங்க்: 

பேலியோக்குத் தேவையான பொருட்கள் வாங்க அமேசான் லிங்க் தொகுப்பு:

https://paleogod.blogspot.com/2019/11/blog-post.html

05. 

பேலியோ பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகள் குழுவில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கான பதில்களும் வழங்கப்பட்டுள்ளது. 

கூகுளில் தேடுவதைப் போலவே பேஸ்புக் சர்ச் பாக்ஸிலும் குறிப்பிட்ட உங்கள் சந்தேகம் சார்ந்த வார்த்தைகளைப் போட்டு தேடினால் உங்களுக்கான கட்டுரைகளோ, பதில்களோ கிடைக்கும். குழுவில் மோர் சாப்பிடலாமா? கடல் பாசி சாப்பிடலாமா என்று கேட்பதால் பலன் இல்லை. 

06. பேலியோ பற்றி குழுவில் எழுதப்பட்டவைகள் புத்தகங்களாகவும் கிடைக்கிறது. அவை பற்றிய விவரங்கள்:
01.பேலியோ டயட் - பேலியோ பற்றிய அறிவியல் விளக்கம். திரு நியாண்டர் செல்வன் அவர்களால் எழுதப்பட்டது. 02. உன்னை வெல்வேன் நீரிழிவே - சிவராம் ஜெகதீசன். பேலியோ உணவுமுறையில் எப்படி டயபடிக்கிலிருந்து வெளியே வரலாம் என்பது துவங்கி , டயபடிக் பற்றிய முழுமையான விளக்கங்கள் உடைய தமிழின் ஒரே முதல் நீரிழிவு பற்றிய புத்தகம். 03. 30 நாட்கள் பேலியோ சாலஞ்ச் - ஷங்கர் ஜி. பேலியோ டயட் முதன் முறையாக முயற்சிக்க விரும்புபவர்களுக்கான எளிமையான கையேடு. 04. தைராய்டு ஏன் எதற்கு எப்படி? - முத்துராமன் ஜி. தைராய்டு பற்றிய தெளிவான விளக்கம். அதிலிருந்து மீளும் உணவு முறைகள், பரிசோதனைகள் என்று தைராய்டு பற்றிய தமிழின் முக்கியமான புத்தகம். 05. பேலியோ சமையல் - சைவம். 100+ சைவ சமையல் குறிப்புகள். 06. பேலியோ சமையல் அசைவம் - 100+/அசைவ சமையல் குறிப்புகள் - 07. பேலியோபுரம் - நியாண்டர் செல்வன். ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் 5 வருடங்களாக எழுதிய கட்டுரைகள் தொகுப்பு. 5 லட்சம் மக்களை பேலியோவுக்குள் ஈர்த்த முக்கிய உணவு சார்ந்த கட்டுரைகள். 08. ஆரோக்கியம் 2.0 - டாக்டர் ஃபரூக் அப்துல்லா. ஒரு மருத்துவரால் எழுதப்பட்ட பேலியோ உணவுமுறை குறித்த முதல் மற்றும் முக்கியமான புத்தகம். 09. பேலியோ சந்தேக நிவாரணி - ஷங்கர் ஜி. பேலியோ உணவுமுறைக்கு வரும் மக்களுக்கு ஏற்படும் அடிப்படை சந்தேகங்கள் தீர்க்கும் கேள்வி பதில் தொகுப்பு. பேலியோவின் முதல் கேள்வி பதில் புத்தகம். 10. பேலியோ வெஜ் ரெசிபிகள் - RTN கண்ணன் அழகிரிசாமி. எளிமையான சைவ ரெசிபிகள் 100+ 11. பேலியோ நான்வெஜ் ரெசிபிகள் - RTN கண்ணன் அழகிரிசாமி. எளிமையான அசைவ ரெசிபிகள் 100+
12. பேலியோ டயட் சார்ட் ரெசிபிகள் - தேன்மொழி அழகேசன். 30 நாட்கள் மூன்று வேளைக்கு என்ன சமைக்கலாம் என்று ஒவ்வொரு நாளுக்கான ரெசிபிகள் அடங்கிய ரெசிபி புத்தகம்.

13. பேலியோ டயட் குணமாகும் நோய்கள் - மரு. ஃபரூக் அப்துல்லா. பேலியோ உணவுமுறையால் குணமாகும் நோய்கள் என்ன? எப்படி அவை குணமாகின்றன? அதன் அறிவியல் விளக்கம் என்ன என்று தெளிவாக எளிமையாக எழுதப்பட்ட புத்தகம்.
பேலியோ உணவுமுறையைப் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள, சரியாகப் பின்பற்ற இந்தப் புத்தகங்கள் உதவும். வெறும் வெயிட்லாஸுக்காக இந்த உணவுமுறையை குறுகிய காலத்திற்கு அணுகுவது பலனளிக்காது.

அனைத்துப் புத்தகங்களையும் ஆன்லைனில் வாங்க www.paleocart.com அல்லது 9445951115 என்ற எண்ணில் வாட்ஸப்பில் மட்டும் மெசேஜ் அனுப்பி விவரங்கள் பெறவும். மேலதிக விவரங்களுக்கு எங்கள் ஆரோக்கியம் & நல்வாழ்வு பேஸ்புக் குழுவிற்கு வருகை தரவும். முகவரி: www.Facebook.com/groups/tamilhealth பேலியோ ரெசிபிகளுக்கான பேஸ்புக் குழுவிலும் நீங்கள் இணைந்துகொண்டு பேலியோ சமையல் முறையை எளிதாகக் கற்கலாம் அந்தக் குழுவில் இணைய: https://www.facebook.com/groups/tamilfoods/

சமைக்கத் தெரியாதவர்களும் விரைவாகவும் எளிதாகவும் பேலியோ சமையல் வீட்டிலேயே தயாரிக்க இந்த யு ட்யூப் சானலைப் பார்க்கவும்.

https://m.youtube.com/channel/UCAP-FggYTRd28CGCamD14cw


எல்லாம் சரி இதனால் பலனடைந்தவர்கள் இருக்கிறார்களாஎன்று கேள்வி வந்தால் கீழுள்ள குழுவில் சேர்ந்து பலனடைந்தவர்கள் அனுபவங்களைப் படித்து தெளிவுற கீழ்க்கண்ட குழுவில் இணைந்துகொள்ளுங்கள்:

https://www.facebook.com/groups/PaleochangedmyLife/

நீங்கள் புரிந்துகொண்டு பேலியோ முயற்சித்துப் பலனடைந்துவிட்டீர்கள்உங்கள் நண்பருக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறீர்கள். அவருக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்றால் கீழுள்ள எங்கள் ஆங்கிலக்குழுவில் சேர்ந்து பலனடையவும்.

நீங்கள் நீண்டகால டயபடிக் உள்ளவராக இருப்பின் உங்களுக்கென்று ப்ரத்யோகக் குழுவான இதில் சேர்ந்து உணவுப் பரிந்துரை  பெற்றுக்கொள்ளவும்.

--

நம் குழுவிற்கென்று ஒரு வெப்சைட் இருக்கிறது, அதிலும் நீங்கள் உங்கள் ரத்தப் பரிசோதனை ரிசல்ட்களை நிரப்பி உணவுப் பரிந்துரை பெற முடியும். பரிசோதனை ரிசல்ட்கள் இல்லாத இடங்களை 0 என்று பூஜ்ஜ்யம் கொண்டு நிரப்பி அதற்கான காரணத்தை தெரிவிக்கவும். 

வெப்சைட் முகவரி :  https://www.indiapaleo.com/

ஒருமுறை போஸ்ட் செய்தால் உங்களுக்கு போஸ்ட் அப்ரூவ் செய்து பரிந்துரை கிடைக்க 3 முதல் அதிகபட்சம் 5 நாட்கள் ஆகலாம். காத்திருக்கவும்.


இனி,

நாங்கள் எதற்கும் கட்டணம் வாங்குவதில்லை. தனியாக க்ளினிக் வைத்து  பேலியோ பரிந்துரை செய்வதில்லை. எங்களை சந்திக்கவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. அனைத்துவிதமான தகவல்களும் குழுவில் இருக்கிறது. பொறுமையுடன் படித்துப் பார்த்தாலே போதுமானது. உங்களுக்கு அதற்கு மேலும் ஒரு மருத்துவர் தேவைப்பட்டால் முதலில் உங்கள் குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். அவருக்கு பேலியோ பற்றி தெரியாவிட்டால் குழுவை அறிமுகம் செய்யவும். உங்கள் உடல் உபாதைகளுக்கு பேலியோ என்பது உதவக் கூடிய உணவுமுறையாக இருந்தாலும்பேலியோ என்பது மருந்தோமருத்துவமோ அல்ல. உங்களுக்கு வரும் பிரச்னைகளுக்கு பேலியோ உணவுமுறையை சந்தேகப் பட்டு கேள்விகேட்காமல் உங்கள் மருத்துவரைச் சந்தித்து வைத்தியம் பார்க்கவும்.

பேலியோ முயற்சிக்கக்கூடாத மக்கள்:

ரத்தப் பரிசோதனை செய்யாமல் பேலியோ முயற்சிப்பவர்கள்.
நீண்டகால டயபடிக்கிற்கு / ப்ளட் ப்ரஷருக்கு சரியான வைத்தியம்மருந்துகள் உண்ணாமல் கிட்னிபிரச்னை இருப்பவர்கள்.
டயலிஸிஸ் செய்பவர்கள்.

ஓப்பன் ஹார்ட் சர்ஜரிஸ்டெண்ட் வைத்தவர்கள்.
பேலியோ பற்றி அடிப்படைப் புரிதல் இல்லாதவர்கள்.
வெறும் வெயிட்லாஸுக்காக அணுகுபவர்கள்.
படித்து புரிந்துகொள்ள நேரமும்பொறுமையும் இல்லாதவர்கள். இட்லி, தோசை, பரோட்டா, பிரியாணி, பேக்கரி உணவுகள், ஐஸ்க்ரீம், இனிப்புகள் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக், கிட்னி பிரச்னைகள், மாதவிடாய் பிரச்னைகள், உடல் பருமன் வராது, பேலியோ சாப்பிட்டால் மட்டுமே இவை எல்லாம் வரும் என்று திடமாக நம்புபவர்கள் தயவு செய்து பேலியோவை முயற்சிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். 


இறுதியாககுழுவில் உங்களுக்கு யார் மீதாவது புகார் இருந்தாலோஉங்களை யாரேனும் இன்பாக்ஸில் தொந்தரவு செய்தாலோஅனாவசியமாக எதையாவது விற்பனைசெய்ய அணுகினாலோ நீங்கள் புகார் அளிக்கவேண்டிய முகவரி:

neander2100@gmail.com

புகார்கள் ஆதாரப் பூர்வமானதாக இருப்பது அவசியம். உங்கள் ரகசியம் காக்கப்படும்மேலே உள்ள முகவரிக்கு டயட் சார்ட்பேலியோ சந்தேகங்கள் கேட்பது தவிர்க்கவேண்டும்.

தேவையில்லாத அநாகரீகமான ஆதாரமற்ற புகார்கள், மருத்துவர்கள் பற்றி, அட்மின்கள் பற்றி, தன்னார்வலர்கள் பற்றிய சில்லறைத்தனமான புகார்கள், போஸ்ட்கள், கமெண்ட்களுக்கு அனுமதி இல்லை, அப்படிச் செய்பவர்கள் குழுவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். உங்கள் புகார்கள் யார் மீது இருப்பினும் மேலே உள்ள மின்னஞ்சலில் ஆதாரத்துடன் அனுப்பவும்.

டயட் துவங்கியவுடன் தினம் குழுவில் என்ன நடக்கிறது என்பதைப் படிக்கவேண்டும். தினம் சாப்பிடும் உணவுகளை ஒரு டைரியில் குறித்துவரவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை சரியாக உண்ணவேண்டும். நடைப்பயிற்சி சன்பாத் போன்றவைகள்சப்ளிமெண்ட்கள் முக்கியம். 

உங்கள் டோக்கன் எண், உங்கள் போஸ்ட் எப்படி சேமிப்பது போன்ற தகவல்கள் உங்கள் போஸ்டில் தரப்பட்டிருக்கும் கவனமாக அதை குறித்துக்கொண்டு மேலதிக சந்தேகங்களை இதே போஸ்டில் மட்டுமே கேட்கவும். உங்களுக்கு ஏற்படும் அனைத்து உடல் பிரச்னைகளுக்கும் உங்கள் மருத்துவரை மட்டும் அணுகவும். சிகிச்சை பெறவும். 

வாழ்க கொழுப்புடன்,

நன்றி. 

37 comments:

Rakhi said...

Thanks for sharing the useful blog on Paleo Guide. Keep sharing the updated Blogs on Paleo Packages, Paleo Foods, and the benefits of Paleo Essentials Program.

Paleo Blood Test in Coimbatore

Unknown said...

I have uploaded my blood report but still I have not received your email

Unknown said...

ஐயா,படிக்காதவர்கள் பேலியோ பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லை.அப்படி அறிந்து பின்பற்ற ஆசைப்பட்டாலும் அவர்களால் உண்ணும் உணவு டைரி பராமரித்தல் போன்றவற்றை செய்யா இயலாது.இவ்வளவு அற்புதமாக மருத்துவமனைக்கு சென்று கூட கட்டுக்குள் வராத பல வியாதிகள் பேலியாவால் கட்டுக்குள் வருவதைப் பார்க்கும் போது அவர்கள் அந்த பலனை அடைய முடியாததை நினைத்தால் வருத்தமாக உள்ளது.

P.ARUL, Trichy, thiruverumbur said...

ARUL.P TRICHY
This is a wonderful diet. I am following this and getting very good benefits, at present I am free from type II diabetic and I lost 8 Kg weight within 75 days. so my sincere thanks to Mr.Dr.Neander Selvan sir, Mr.Manoj Kumar Sir, Dr.Hariharan Sir, and all others. Thank you Thank you.

Mannaiambani said...
This comment has been removed by the author.
Anonymous said...

Thankyou

Unknown said...

Thanks for sharing this. I'll try to upload my report

SABIULLA said...

Audio tracks is the best way to address this issue

R.Pavul said...

Thank you for your valuable information

Unknown said...

Thank you for your valuable reply.i upload my report few days later

Unknown said...

Sir naan 74 kg iruken paleo diat eduthukalama??? Enaku epdi irukurathunu theriala sir sollunga

Nagappa Pillai.A Nagercoil said...

I was 91 kg on 06/02/2020 with BP, Thyroid, Lipid issues. I contacted Dr.safiullah of Nagercoil. Under his supervision I followed Paleo for 150 days.Now I am 17 kg less with no medication. My age is 60. Feeling healthy and happy. Thanks Dr.Safi and Neanderji for the great introduction.This is scientific and practical.

Unknown said...

Tq but all in Tamil will be happy if it is in English

Unknown said...

I want to contact you sir I want to satrt paleo diet

Unknown said...

Sir can we get ur phone number to contact.plz I need more and information and personal guidelines for it

Dr.T.Prabhash said...

மிக சரியாக சொன்னிங்க

Dr.T.Prabhash said...

Hai arul, am also trichy only bhel, i want talk with u plz, how join about in this.. How to do start ?some questins, prabhashbio@gmail.com plz share

Dr.T.Prabhash said...

Paleo test trichy ல உள்ளதா ?

Ramavijay said...

How to contact u

Ramavijay said...

How to contact u

MDIBSS said...

How to contact

Subhan said...

super

Unknown said...

Can v take groundnut instead of badam

Thila said...

Hi.. I'm thila fro. Malaysia.. I would like to do paleo diet.. what I need to do..

Nivethan said...

How i need to upload my report?

harison said...

Sir.. I'm working in night shift and I've high BP and cholesterol. Is Paleo advisable? I eat different time during weekdays and weekends differ. I wanted to follow., but not sure if this will suit

ராஜா பிச்சைமுத்து said...

நன்றக புரிகிறது. நன்றி

Arun g k said...

I wish take paleo diet . how to contact u sir.kindly help me in this regards

kannan kannan said...

எங்க அப்பா kidney filiure passent அவருக்கு ஏதாவது solution கிடைக்கும் என குழுவில் இணைந்தேன் ,அப்பொழுது குழுவின் கொள்கை அறியாமல் ஒருவருக்கு உதவும் வகையில் மற்றொரு பதில் அளித்தேன், அது தவறு என இப்பொழுது புரிந்தேன் ,நன்றி ...

எனது அப்பா ஒரு வருடம் முன்பு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பின் எனது தேடலில் 3 வகையான treatment சுயமாக எடுத்தேன் ,அவரை காப்பற்றி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்,ஆனால் அவரின் உணவு முறையை மாற்றி கொடுக்காமல் போய்விட்டேன், இப்பொழுது மீண்டும் பழைய நிலைமைக்கு போகும் தருவாயில் இருக்கிறார். Creatinine 8 இருக்கிறது, வீக்கம் இல்லை,urine சரியாக போகிறது ,ஆனால் மயக்கம் வருகிறது

Unknown said...

Sir,எனக்கு acidity, hormone imbalance problem உள்ளது. Weight கூட 20 கிலோ அதிகமாக உள்ளது. Sugar, bp இல்லை. நான் paleo எடுக்க முடியுமா? Please உங்கள் advice வேண்டும் ஐயா.

Mary said...

Sir, I went through the link. In the last it is given that those who want to lose weight, they come under the list of முயற்சிக்க கூடாத மக்கள். Actually I have seen many people taking this diet and have reduced weight. Please clarify

muthukumar said...

உன்னை வெல்வேன் நீரிழிவே

Anonymous said...

Sir I need your help please contact me in my email sriprabalu@gmail.com

Anonymous said...

ஹலோ சார் தமிழ்நாடு சேலம் மாவட்டத்தில் எங்கு ரத்த பரிசோதனை நீங்கள் கூறுவது எடுக்க முடியும்

Anonymous said...

புதிதாக இணைந்தேன் ...குரூப் தகவல்கள் மிக அருமை!! நன்றி..எனக்கு கிட்னி கல் 20"மிமீ ஏதேனும் அறுவை சிகிச்சை இல்லாமல் மாற்று வழி உண்டா? அறுவை சிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ளேன்... அதைபற்றிய விழிப்புணர்வு கிடைக்குமா... நன்றி

Anonymous said...

Thanks for your information

Anonymous said...

நானும் உங்களோடு போலியே டைட்டில் இனைய ஆர்வமாய் இய்க்கிறேன் எனக்கும் சீனீ பேசர் எல்லாம் இய்க்கு நான் குவைட்டில் இய்கேன் ஊஊர் இலங்கை