Saturday, November 23, 2019

பேலியோ பின்பற்றுபவர்களுக்காக உதவும் மொபைல் ஆப்கள் மற்றும் அமேசான் தளத்தில் கிடைக்கும் பொருட்கள் பற்றிய தொகுப்பு.

பேலியோ பின்பற்றுபவர்களுக்காக உதவும் மொபைல் ஆப்கள் மற்றும் அமேசான் தளத்தில் கிடைக்கும் பொருட்கள் பற்றிய தொகுப்பு.

வெயிலில் உடலைக் காண்பித்து விட்டமின் டி எவ்வளவு ஏறி இருக்கிறது என்பதை அளக்கும் டி மைண்டர் ஆப்

உணவில் உள்ள மேக்ரோக்களை அளக்க உதவும் க்ரோனோ மீட்டர் ஆப்


வாட்டர் பாஸ்டிங் இருந்தால் அதனைக் கணக்கிட உதவும் ஆப்


தேவையான அளவு தண்ணீர் குடிக்க மறப்பவர்களுக்காக நினைவூட்டும் ஆப்


நடைப்பயிற்சிக்கான ஸ்டெப்ஸ் கவுண்டர் மொபைல் ஆப்


வெயிட் லிஃப்டிங் உடற்பயிற்சிகளுக்கு


ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி எழுந்து நடக்க நினைவூட்டும் ஆப்


மகளிருக்கான மாதாந்திர பிரியட்ஸ் டிராக்கர். 


BMI Calculater App


 
ஸ்லோ குக்கர் 3.5, 4.5 மற்றும் 6 லிட்டர்.


01. Sabichi Haden 3.5 Ltr Stainless Steel Slow Cooker (Silver)


02. Bergner Elite Stainless Steel Slow Cooker, 4.5 L, Grey


03. Bergner Elite Stainless Steel Slow Cooker 6 L, Grey



பேலியோவில் பரிந்துரைக்கப்படும் சப்ளிமெண்ட்கள்:

விட்டமின் முழுமையான ப்ரோட்டோகால் ஒரே கேப்ஸூலில் விட்டமின் டி 3 5000IU + K2 + மக்னீசியம் க்ளைசினேட்.




ஒமேகா 3 1000 mg கேப்ஸூல்கள் 


தலைமுடிக்கான பயோட்டின் சப்ளிமெண்ட்:


கெபிர் தயிர் தயாரிக்க முடியாதவர்களுக்கான ப்ரோபயாடிக் மாத்திரை வடிவில். 


பி 12 குறைபாடுகளுக்காக பி 12 சப்ளிமெண்ட் :


தனித்தனியாக விட்டமின் டி ப்ரோட்டோகால் வாங்க:

இரவில் போடவேண்டிய மக்னீசியம் க்ளைசினேட் 400 எம் ஜி (மட்டும்) இம்போர்டட் மேக்

Kal - Magnesium Glycinate 400 Mg - 180 Tablets


விட்டமின் டி 3 சப்ளிமெண்ட் (இம்போர்ட்டட்) தினம் ஒன்று சாப்பிடக்கூடிய 5000IU அளவுள்ள 180 கேப்ஸுல்கள். தினம் ஒன்று.

Doctor's Best Vitamin D3 5000iu, Soft Gels, 180-Count


விட்டமின் டி யுடன் சேர்த்துப் போடவேண்டிய எம் கே 7 கே 2 விட்டமின் கேப்ஸுல் 60 எண்ணிக்கை உள்ளது. (இம்போர்ட்டட்)

Jarrow Formulas, K-2, MK-7, Vitamin K2 as MK-7, 90 mcg, 60 Softgels



ப்ராக் ஆப்பிள் சைடர் வினிகர் 1 லிட்டர்

Bragg Organic Raw Unfiltered Apple Cider Vinegar - 946 ml


 ப்ராக் ஆப்பிள் சைடர் வினிகர் 1/2 லிட்டர்  

Bragg Organic Raw Apple Cider Vinegar - 473 ml


இம்போர்ட்டட் ப்யூர் அலாஸ்கா ஒமேகா 3 கேப்ஸூல்

Pure Alaska Omega-3 Wild Alaskan Salmon Oil 1000mg Softgels 180-Count


பயோட்டின் சப்ளிமெண்ட் (இம்போர்ட்டர் மேக்)

Doctors Best Biotin Supplement, 120 Count


முட்டை வேகவைக்க எலக்ட்ரிக் எக்  பாய்லர்
Warmex Home Appliances 360 Watts Instant Egg Boiler (Black and SS)


பிபி தினம் பரிசோதிக்க பிபி மானிட்டர்

Omron HEM 7120 Fully Automatic Digital Blood Pressure Monitor With Intellisense Technology For Most Accurate Measurement



டயபடிக் இருப்பவர்கள் தினம் ரத்த சர்க்கரை அளந்து குறிக்க உதவும், க்ளுக்கோ மீட்டர் 50  ஸ்டிரிப்புகளுடன்.

Accu-Chek Active Meter with 50 Strips (Multicolor)



உடல் எடை மற்றும் பாடி அனலைஸ் செய்ய உதவும் வெயிட் மெஷின்.

HESLEY Bmi Body Analyzer Weighing Machine Scale 180 Kg 10 Users



எத்தனை ஸ்டெப்கள் நடந்தீர்கள் என்று கணக்கிட உதவும், எம் ஐ பாண்ட்.

Mi Smart Band 4 (Black)


கீட்டோ Mode ல் உடல் இருக்கிறதா என்று பரிசோதிக்க உதவும் கிட்.

Bayer Keto-Diastix Reagent Strips-Urinalysis, 50 Each (Pack of 3)



தரமான விலை குறைந்த நடைப்பயிற்சிக்கான ஷூ

ASIAN Wonder-13 Running Shoes,Gym Shoes,Sports Shoes,Walking Shoes for Men



ப்ரோட்டீன் பவுடர் 

Optimum Nutrition (ON) Gold Standard 100% Whey Protein Powder - 2 lbs, 907 g (Chocolate Mint)



For Paleo Books:

Sunday, October 13, 2019

OPOS Paleo, மேஜிக் பாட் என்றால் என்ன? முதல் பாடம்.

முதல் பாடம்.
Standardisation. ஒரு குக்கரை மேஜிக் பாட் ஆக்குவது எப்படி?
குழு துவங்கி சற்றொப்ப 2 நாள் கூட ஆகவில்லை. 2000 உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டி இருக்கிறோம்.
மேஜிக் பாட் என்றால் என்ன? நம் வீட்டில் இருக்கும் குக்கரே போதுமா? தனியே காசு செலவழிக்க வேண்டுமா? இந்தக் குக்கர் அல்லது மேஜிக் பாட் எங்கே கிடைக்கும்? உங்களில் பலருக்கு இந்தக் கேள்விகள் இருக்கிறது. பலர் கமெண்ட்டில் கேட்டிருக்கிறீர்கள்.
ஒவ்வொரு படியாக கற்றுக்கொண்டு பொறுமையாக ஒபோஸ் சித்தாந்தத்தைப் புரிந்துகொள்வது நல்லது.
பேலியோவுக்கும் இதேதான்.
அதிரடியாக பாதாம், முட்டை, இந்துப்பு, பசுமஞ்சள், ஆப்பிள் சைடர் வினிகர் வாங்கி, கார்ப் ஃப்ளூ தாக்குப் பிடிக்க முடியாமல், பேலியோ பற்றிப் புரிந்துகொள்ளாமல் 3 ம் நாள் பேலியோ வேஸ்ட் என்று கைவிடுவதற்கும், அதிரடியாக குக்கர் வாங்கி, சித்தாந்தம் புரியாமல் ஏதோ ஒன்றைச் சமைத்து ஒபோஸ் வேஸ்ட் என்று கைவிடுவதற்குப் பதிலாக, பொறுமையாகப் புரிந்துகொண்டு முயற்சிக்கும்பொழுது இதன் முழுமையான பலன் உங்களுக்குக் கிடைக்கும்.
உங்களிடம் இருக்கும் 2லி குக்கர் அல்லது ஒபோஸிற்கான வாங்கிய மேஜிக் பாட் உங்களிடம் இருந்தால். முதன் முதலில் நீங்கள் செய்யவேண்டிய அடிப்படை விஷயம் என்ன? என்பதை இதில் காணலாம்.
அதன் பெயர் ஸ்டாண்டர்டைசேஷன்.
ஒரு இண்டக்‌ஷன் ஸ்டவ்வில், உங்களுக்குக் கிடைக்கும் லோ வோல்டேஜ், ஹை வோல்டேஜ், அல்லது சரியான வோல்டேஜில், 60 எம் எல் அளவுள்ள கால் கப் தண்ணீரை சூடுபடுத்தினால் அல்லது சமைத்தால் அல்லது ப்ரஷர் குக் செய்தால் அந்த கால் கப் நீர் கொதித்து முதல் விஸிலை எவ்வளவு நேரத்தில் அளிக்கிறது என்பதே ஒரு 2லி குக்கர் மேஜிக் பாட்டாக மாற்றும் வழிமுறை.
இதுதான் முதல் பாடம். இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் ஒபோஸில் எந்த ரெசிபியை நீங்கள் முயற்சித்தாலும் அது முதல் பாவமாக மாறிவிடும்.
-@-
இன்னொருமுறை ஒபோஸ்க்கு தேவையான லிஸ்டை சரிபார்த்துவிடலாம்.
ஒபோஸ் மேஜிக் பாட் = ஒபோஸின் தனிப்பட்ட மேஜிக் பாட் அல்லது உங்களிடம் இருக்கும் 2லிட்டர் ப்ரஷர் குக்கர்.
சரியான அளவுகளுள்ள - கப் Cups & ஸ்பூன்கள் Spoons
இவை அளவுகள் ஒரேமாதிரியானவை.
ஒரு கப் அளவு 1C= 240 ml,
ஒரு டீஸ்பூன் அளவு 1tsp = 5ml,
ஒரு டேபிள் ஸ்பூன் அளவு 1Tbsp = 15ml
கையளவு , ஆழாக்கு, நான்கு சிட்டிகை போன்றவை ஏன் வேலைக்காகாது என்பது புரிகிறதல்லவா?
ஒரு ரெசிபியில் ஒரு கப் காய்கறி, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர், அரை டீஸ்பூன் உப்பு என்று சொல்லும்பொழுது, மேலே சரியான அளவுகளில் கப் / ஸ்பூன்கள் வாங்கிப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரே போல சுவை & Result வருவது மாறாதுதானே? ஏற்கனவே அறிமுகம் 3-ல் சொன்ன பிஸ்கெட் கம்பெனி உதாரணத்தை நினைவில் கொள்ளுங்கள்.
செபரேட்டர்கள் Separators - இதன் பயன்பாட்டைப் பிறகு பார்க்கலாம்.
இண்டக்‌ஷன் ஸ்டவ். 800, 1000, 1200, 1400 வாட்ஸ்கள் செலக்‌ஷன் இருக்கும் டைப் உத்தமம்.
-@-
இப்பொழுது ஒரு ஒபோஸ் மேஜிக் பாட் அல்லது 2 லி குக்கரை எடுத்து அதன் மூடியில் விஸிலைப் போட்டு, காஸ்கெட் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கவனித்து கால் கப் அதாவது சரியாக 60 எம் எல் தண்ணீரை விட்டு. மூடியைப் போட்டு மூடி, இண்டக்‌ஷன் அடுப்பில் வைத்து, 1200 வாட்ஸ் என்ற வெப்ப அளவை செலக்ட் செய்து, அதே நேரம் உங்கள் மொபைலில் டைமரை ஆன் செய்துகொள்ளவேண்டும்.
முதல் விஸில் வரும்போது டைமரை நிறுத்தி எவ்வளவு நேரத்தில் முதல் விஸில் வந்திருக்கிறது என்று பார்க்கவேண்டும்.
அடுப்பையும், டைமரையும் ஒருசேர ஆன் செய்வது முக்கியம். அடுப்பை ஆன் செய்து டிவி சீரியலில் எந்த மாமியார் எந்த மருமகளுக்கு சூனியம் வைக்கிறார் என்று ஒரு எட்டுப் பார்த்துவிட்டு டைமரை ஆன் செய்து மூன்றாவது விஸில் 1.35 நிமிடத்தில் வந்ததை முதல் விஸில் என்று நம்பும் அப்பாவி நீங்கள் என்றால் ஐ அம் பாவம்.
இதுதான் Standardisation எனும் முதல் பாடம்.
சரி, இதைச் சரியாகச் செய்துவிட்டீர்கள். இப்பொழுது என்ன ரிசல்ட் அதன் மூலம் நாம் அறிந்துகொள்ளும் விஷயம் என்ன?
முதல் விஸில் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்களுக்குள் வந்துவிட்டால் உங்கள் குக்கர் ஒபோஸ் சமையல் முறைக்கு தயாராக இருக்கிறது என்று அர்த்தம்.
ஒரு நிமிடத்திற்குள்ளாகவே முதல் விஸில் வந்துவிட்டால். நீங்கள் அதிக வெப்பத்தில் சமைக்கிறீர்கள், வெப்பத்தைக் குறைக்கவேண்டும் என்று பொருள்.
2 நிமிடங்கள் தாண்டியும் உங்களுக்கு விஸில் வரவில்லை என்றால், நீங்கள் குறைவான வெப்பத்தில் சமைக்கிறீர்கள், வெப்பத்தைக் கூட்டவேண்டும் என்று பொருள்.
1 நிமிடம் 35 செகண்ட்களில் முதல் விஸில் என்பது பர்பெக்ட் டைமிங். குக்கர், இண்டக்‌ஷன் அடுப்பு, நல்ல ஏற்றம் இறக்கமில்லாத வோல்டேஜில் இது சுலபமாகக் கிடைக்கும். ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்களுக்குள்ளாக என்பதை கணக்கில் கொண்டால் போதும்.
ஏன் இதைச் செய்யவேண்டும்?
இதுதான் உங்கள் 2லி குக்கர் அல்லது மேஜிக் பாட் ஒபோஸ் முறையில் அதன் பார்முலாவில் சொல்லப்படும் ரெசிபிக்களை சுவை, நிறம், மணம் மாறாமல் உங்களுக்கு அளிக்க சரியான ஒன்றாக இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது.
இதைச் செய்யாமல் குன்ஸாக சமைத்தால் அதிக வெப்பத்தில் தீய்ந்துபோவதும், குறைந்த வெப்பத்தில் உணவு சரியாக சமைக்காமல், அரைகுறையாக இருப்பதும் நிகழும்.
முதல் பாடத்தை மீண்டும் ஒருமுறை கவனமாகப் படித்துவிடுங்கள்.
இனி மக்கள் இதைப் புரிந்துகொள்ளாமல் செய்யும் முதல் பாவத்தைப் பார்க்கலாம்.
இரண்டு லிட்டர் குக்கர் கைவசம் இல்லை. 1.5லிட்டர் அல்லது 5 லிட்டர் இருக்கிறது. அதனால் என்ன? கூட்டி, வகுத்து, பெருக்கிக் கழித்து முக்காலே அரைக்கால் கப் தண்ணீரை விடுவோம்.
இண்டக்‌ஷன் ஸ்டவ்வில் 2500 வாட்ஸ்தான் இருக்கிறது. மீண்டும் கூட்டி, வகுத்து, பெருக்கிக் கழித்து 30 செகண்டில் முதல் விஸில் வருகிறதா என்று பார்க்கலாம்.
மேலே சொன்ன இரண்டுமே இல்லை. பால் குக்கர்தான் இருக்கிறது. அதுவும் விஸில் அடிக்குமே? கால் கப் தண்ணீரை விட்டு அடுப்பில் வைப்போம்.
மேலே சொன்ன எதுவும் பலனளிக்காது. அல்லது ஒபோஸ் சமையலுக்கு ஒத்துவராது. தயவுசெய்து ஒரு சித்தாந்தத்தின் அறிவியல் கணக்கீடுகளின் அடிப்படையில் புரிந்துகொண்டு முன்னேறி 1000 லிட்டர் குக்கரில் கூட ஒபோஸில் சமைக்கும் திறனை வளர்த்துக்கொள்ள முயற்சியுங்கள். முதல் பாடத்திலேயே முதல் பாவத்தைச் செய்யவேண்டாம். அது மிகப்பெரிய பின்னடைவை, மனக்கஷ்டத்தை, வெறுப்பை உங்களுக்குத் தரும்.
ஒரு உன்னதமான எளிமையான சமையல் முறையை நீங்கள் உங்கள் அறியாமையால் வெறுக்கும் நிலை வரும்.
பேலியோவின் முதல் பாவமும் இதேதான்.
முதன் முதலாக கார்ப் எனும் மாவுச்சத்து உணவுகளை தவிர்க்கும்பொழுது கார்ப் ஃப்ளூ எனும் உடல் பிரச்னை வரும்.
தலைவலி, சோர்வு, கைகால் உதறுவது, வயிற்றுப் போக்கு என்று முதல் 4-5 நாட்கள் வரும் இதைப் புரிந்துகொள்ளாமல் பேலியோ விட்டு ஓடியவர்கள் பலர். அவர்கள் இழந்தது எவ்வளவு விலைமதிப்பில்லாத ஆரோக்கியத்தை? அதைக் கடந்தவர்கள் அடைந்த அபரிமிதமான பலன்கள்தான் எத்தனை?
பொறுமை, புரிந்துகொள்ளுதல், புரியாததை தெளிவுபடுத்தித் தெரிந்துகொள்ளுதல், தேடல், பகுத்தறிதல், ஏற்றுக்கொள்ளுதல், செயல்படுத்துதல், வெற்றியடைதல்.
இதுதானே புதிய ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கான படிநிலைகள்?
ஆக, Standardisation ஒபோஸின் முதல் பாடம். உங்கள் மேஜிக் பாட் அல்லது 2லிட்டர் குக்கரில் கால் கப் நீருக்கு முதல் விஸில் எப்பொழுது வந்தது? நிமிடங்கள், நொடிகள் என்ன?
சரி, இனி மேஜிக் பாட் எங்கே கிடைக்கும் என்று கேட்டவர்களுக்கு:
ஒபோஸுக்கென்று வடிவமைக்கப்பட்ட பிரத்யேக 2லிட்டர் மேஜிக் பாட் கிடைக்கிறது. அதற்கான லிங்க் மற்றும் டிஸ்கவுண்ட் கூப்பன் கோட் கீழே கொடுக்கிறேன். அதில் என்ன இருக்கும்?
ஒரு 2லி மேஜிக் பாட்.
அளவுகளுக்கான ஸ்பூன்கள்.
அளவுகளுக்கான கப்கள்.
ஒரு சபரேட்டர்.
Link:

2லி மேஜிக் பாட் செலெக்ட் செய்து
2லிட்டர் மேஜிக் பாட்டுக்கான டிஸ்கவுண்ட் கூப்பன் கோட் : OPOSpaleo2 பயன்படுத்தி வாங்கலாம்.
3லிட்டர் மேஜிக் பாட்  டிஸ்கவுண்ட் கூப்பன் கோட் : opospaleo பயன்படுத்தி வாங்கலாம்.

(இந்த கூப்பனைப் பயன்படுத்தாவிட்டால் டிஸ்கவுண்ட் கிடைக்காது. )

இந்த மேஜிக் பாட் எப்படி இருக்கும்? வீடியோ:

மேலுள்ள யுட்யூப் சானலை சப்ஸ்க்ரைப் செய்து பேலியோ உணவுகளை எப்படி ஒபோஸ் முறையில் தயார் செய்வது என்று எளிமையாக வீடியோக்கள் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.

இந்தக் குக்கர் வாங்கும்பொழுது ஏற்படும் ஆன்லைன் பேமெண்ட் பிரச்னைகள், ஆர்டர், டெலிவரி விவரங்கள் அனைத்திற்கும் கீழுள்ள இமெயிலில் தொடர்புகொண்டால் அவர்கள் தேவையான பதில் அளிப்பார்கள்.

care@smarteer.com

மேலுள்ள இமெயிலுக்குப் புகார் அனுப்பிவிட்டு ஒரு காப்பியை கீழ்க்கண்ட இமெயிலுக்கும் அனுப்பவும்:

oposmods@gmail.com

பேலியோவிற்காக இன்னும் விலை குறைவாக ஒரு கிட் தயாரித்து தருமாறு கேட்டிருக்கிறேன். அது எப்பொழுது கிடைக்கும் என்பது தெரியாது. விவரம் வரும்பொழுது அறிவுக்கிறேன்.
சரி.
இந்தக் குக்கர் விற்கத்தான் இந்தக் க்ரூப்பா?
இல்லை. ஒபோஸ் முறையில் பேலியோ உணவுகளை எப்படி எளிதாக, விரைவாகச் சமைப்பது? சமைக்கத் தெரியாதவர்களும் சமைக்கக் கற்றுக்கொள்வது, நமது உணவை நாமே சமைத்து உண்பது போன்றவற்றிற்காகத்தான் இந்தக் குழு.
பேலியோ இலவசம்தானே?
பேலியோ சித்தாந்தம் இலவசம்.
ஒபோஸ் சித்தாந்தம் இலவசம்.
பேலியோ கடைபிடிக்க சமையல் பாத்திரம் துவங்கி, கேஸ் சிலிண்டர், சமையல் பொருட்கள், காய்கறி, எண்ணெய், நெய், முட்டை, இறைச்சி, பாதாம் அனைத்தையும் காசு கொடுத்து வாங்கத்தானே வேண்டும்.
ஏற்கனவே உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டும் பேலியோ முயற்சிக்கலாம். தேவை பேலியோ பற்றிய புரிதல்.
அதே போல ஒபோஸ் சித்தாந்தம் இலவசம். அதனடிப்படையில் சமைக்க, சில பொருட்கள் காசுகொடுத்து வாங்கவேண்டும்.
ஏற்கனவே உங்கள் சமையலறையில் இருக்கும் குக்கரைக் கொண்டும் ஒபோஸ் முயற்சிக்கலாம். தேவை ஒபோஸ் பற்றிய புரிதல்.
முழுவதுமாக பாடங்கள் முடிந்து, சமையல் துவங்கும் வரை காத்திருந்து அதன் பின் உங்களுக்கு உபயோகமென்றாலும் வாங்கலாம்.
முதலில் சித்தாந்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
மேலே உள்ள சைட்டில்தான் வாங்க வேண்டுமா?
மேஜிக் பாட் என்றால் ஆம். சாதாரன குக்கர் என்றால் இல்லை.
என்னிடம் 2லி குக்கர் இருக்கிறது. அதைப் பயன்படுத்தலாமா?
ஒபோஸ் ஸ்டாண்டர்டைசேஷன் டைமிங் சரியாக இருப்பின் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதிக வெப்பத்தில் சமைக்கப்படும் ஒபோஸ் சமையல்கள் அனைத்திற்கும் அது ஏற்றதா என்பதை நீங்கள்தான் பயன்படுத்தி முடிவுசெய்யவேண்டும். பொதுவாக சாதாரண குக்கர்கள் அதிகவெப்பம் குறுகிய நேரம், தண்ணீர் இல்லாத அல்லது குறைவான சமையலுக்காக டிசைன் செய்யப்படுவதில்லை.
Induction stove எதை வாங்கலாம்?
நான் பயன்படுத்துவது இது :

இண்டக்‌ஷன் ஸ்டவ் மட்டும்தான் பயன்படுத்த முடியுமா? கேஸ் ஸ்டவ், விறகடுப்பு போன்றவற்றில் ஒபோஸ் முறையில் சமைக்க முடியாதா?
முடியும். ஆனால் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்தப்பட்ட வெப்ப அளவை சீராகக் கொடுப்பது இண்டக்‌ஷன் ஸ்டவ் மட்டுமே என்பதால் ஒபோஸில் அது மட்டுமே பரிசீலிக்கப்படுகிறது. ஆக , இப்பொழுதைக்கு அதில் சமைப்பதை மட்டும் பேசுவோம்.
உங்களிடம் 1200 வாட்ஸ் உள்ள அடுப்பை நீங்கள் பயன்படுத்தி முதல் பாடம் சரியாக வருகிறதா என்று சரிபார்க்கலாம். உங்களிடம் 1200 வாட்ஸில் இல்லாவிட்டால் அக்கம் பக்கம் தெரிந்தவர்களிடத்தில் இருந்தாலும் வாங்கிப் பரிசோதிக்கலாம். முதல் பாடத்தில் குக்கருக்கோ, அடுப்பிற்கோ ஒரு ஆபத்தும் வராது. ஆனால், ஒபோஸ் முழுமையான சமையலுக்கு இந்த இரவல் சமாச்சாரம் ஒத்துவராது.
கிச்சன் எடைக் கருவி எதை வாங்கலாம்?
நான் பயன்படுத்தும் இருப்பதிலேயே விலை குறைவான மாடல்
இன்னும் அளவுகள் கொண்ட கப்கள், ஸ்பூன்கள் எல்லாமே அமேசானில் கிடைக்கிறது.
தேடுங்கள் கிடைக்கும்.
-@-