Sunday, September 20, 2015

Kefir / கெபிர் / கபிர் - Probiotic Kefir

-by neander Selvan


கெபிர் க்ரெய்ன் (க்ரெய்ன் என இருப்பதால் தானியம் என நினைத்துவிட வேண்டாம்  
ப்ரொபயாடிக் பாக்டிரியா நிரம்பிய கெபிர் பாலை தயாரிக்க கெபிர் கிரெய்னை வாங்க வேண்டும். வாங்கி சுத்தமான கண்னாடி பாட்டிலில் வைத்து, 2 கப் பாலை மேலே ஊற்றி 24 மணிநேரம் அறைவெப்பத்தில் வைக்கவேண்டும்

24 மணிநேரம் கழித்து பில்டரில் வடிகட்டி கபிர் கிரெய்னை எடுத்துவிட்டு தயிராக மாறிய ப்ரொபயாடிக் பாலை பருகலாம்.

மீண்டும் அந்த கபிர் கிரெய்னை வைத்து கபிர் தயிர் தயாரிக்கலாம். நாள்பட, நாள்பட கபிர் கிரெய்ன் வளர்ந்து கொண்டே போகும். அதை நண்பர்களுக்கும் கொடுக்கலாம்.
இது பாலில் உள்ள லாக்டோசை பெருமளவில் அகற்றிவிடுவதால் பால் அலர்ஜி உள்ளவர்களும் அருந்தலாம். ஜீரண கோளாறு, வயிற்றுவலி உள்ளவர்களும் கெபிரை அருந்தலாம். உங்கள் வயிற்றுவலிக்கு காரணம் உடலில் ப்ரொபயாடிக் பாக்டிரியா குறைபாடு எனில் அதை இது நிவர்த்தி செய்யும்.

-------------
மாடுகளுக்கும், கோழிகளுக்கும் தம் இயற்கைக்கு மாறான தானிய உணவை கொடுக்கையில் அவற்றின் உடல்நலம் அடிக்கடி குன்றிவிடும். அதனால் ஆண்டி பயாடிக்குகளை அடிக்கடி கொடுத்து அவற்றை உயிர்பிழைக்க வைப்பார்கள். ஆண்டிபயாடிக்குகள் வைரஸ், பாக்டிரியாக்களை கொல்லும் சக்தி வாய்ந்தவை. நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் அதுவே நம் உடலை தாக்கும் பாக்டிரியா, வைரசை அழித்துவிடும். ஆனால் நோயெதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க உடலுக்கு வலுவான வைட்டமின், மினரல் சத்துக்கள் நிரம்பிய உணவை அளிக்க வேண்டும். அது நிகழாத பட்சத்தில் நோயெதிர்ப்பு சக்தி குன்றி ஆண்டி பயாடிக்குகளை நம்பி இருக்கும் சூழலுக்கு ஆளாகிறோம்.

அதனால் என்ன? உடலில் பாக்டிரியா வைரஸ் மூலம் வியாதி வருகிறது. ஆண்டிபயாடிக்குகள் அவற்றை அழித்துவிடுகிறது. மேட்டர் ஓவர் என்கிறீர்களா?
இல்லை. கதை அத்துடன் முடியவில்லை. துவங்குகிறது.

மனிதன் உடலில் சிறுகுடல், பெருங்குடல் இரு வகைகள் உள்ளது. சிறுகுடலில் புரதமும், கொழுப்பும் ஜீரணம் செய்யப்படும். சிறுகுடலால் ஜீரணம் செய்யபட இயலாத நார்சத்து உள்ள உணவுகள் பெரும்குடலுக்கு நகர்கின்றன. ஆக மாமிசம், முட்டை முதலான உணவுகளை உண்டால் அவை முழுக்க முழுக்க சிறுகுடலில் ஜீரணம் செய்யபடும். அரிசி, கோதுமை, கீரை, காய்கறி, பழம் முதலானவை சிறுகுடலில் ஜீரணம் ஆகாமல் பெரும்குடலுக்கு நகர்கின்றன.

பெரும்குடலில் ப்ரொபயாடிக்ஸ் எனப்படும் நலனளிக்கும் பலகோடிகணக்கான பாக்டிரியாக்கள் வசிக்கின்றன. இவை தாவர உணவுகளை ஜீரணம் செய்ய உடலுக்கு உதவுகின்றன. சொல்லபோனால் மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிக பாக்டிரியாக்கள் நம் பெரும்குடலில் உள்ளன. தாவர உணவுகளை ஜீரணிக்க இவை உதவுகின்றன.

காய்ச்சலுக்கு நாம் சாப்பிடும் ஆண்டிபயாடிக்குகள் நல்ல பாக்டிரியா, கெட்ட பாக்டிரியா என பேதம் பார்ப்பது இல்லை. உடலில் சூறாவளி புகுந்தது போல் புகுந்து நல்லது, கெட்டது என பார்க்காமல் அனைத்து பாக்டிரியாக்களையும் அழித்துவிடுகின்றன. ஒருதரம் ஆண்டிபயாடிக்குகளை சாப்பிட்டால் அது நம் பெருகுடலில் உள்ள ப்ரொபயாடிக் பாக்டிரியாக்கள் மேல் அணுகுண்டு போட்டதற்கு சமமான விளைவுகளை உருவாக்குகிறது. காய்ச்சல் குணமாகிறது என மகிழ்ச்சி அடைகிறோம். அதே சமயம் அது நம் பெரும்குடலுக்கு தாங்க இயலாத தீமைகளை உருவாக்குகிறது.

பெண்கள் உட்கொள்ளும் கர்ப்பதடை மாத்திரைகளும் ப்ரொபயாடிக் பாக்டிரியாக்களை அழிக்கும் சக்தி வாய்ந்தது. கர்ப்பதடை மாத்திரையால் பாதிப்பு துளீயும் இல்லை என சொல்லி இவை விற்கபடுவது குறிப்பிடதக்கது. இதனால் ப்ரொபயாடிக் பாக்டிரியா பாதிப்பால் பெண்களுக்கு சிறுநீர் பாதையில் இன்ஃபெக்ஷன், மறைவிடத்தில் இன்ஃபெக்ஷன் முதலானவை தோன்றுகின்றன.

ப்ரொபயாடிக் பாக்டிரியா குறைபாடால் இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் எனப்படும் வியாதி தோன்றுகிறது. ஜீரண சக்தி குறைந்து அடிக்கடி வயிற்றில் போவது நிகழ்கிறது. காரணம் சொல்ல இயலாத வயிற்றுவலிகளுக்கு இதுதான் மூலகாரணம்.

ப்ரொபயாடிக் பாக்டிரியா நலன் தான் ஒட்டுமொத்த உடல்நலனையும் தீர்மானிக்கும் விஷயம். இது பாதிக்கபட்டால் பல வகை அலர்ஜிகள் உடலில் உருவாகும், பாலை ஜீரணம் செய்ய முடியாமல் போகும். சிறுநீர்பாதை கோளாறுகள் வரும்.

இதனால் ஆண்டிபயாடிக்குகளை சாப்பிட கூடாது என பொருள் இல்லை. தவறான உணவுபழக்கம் மூலம் வியாதிகளை வரவழைத்துகொள்கிறோம். இதனால் மிக மோசமான பாக்டிரியாக்கள் உடலில் சேரும். அதனால் அவற்றை கொல்ல நேர்கையில் நல்ல பாக்டிரியாக்களும் அழிகின்றன. ஆக தவறான உணவால் வரும் வியாதியை போக்க ஆண்டிபயடிக், ஆண்டிபயாடிக் விளைவால் வரும் வியாதியை போக்க இன்னொரு மருந்து என மீள இயலாத சுழலில் சிக்கிவிடுகிறோம். கடைசியில் ப்ரிஸ்க்ரிப்ஷன் மாத்திரைகளை நம்பி மட்டுமே உயிர்வாழும் சூழலில் சிக்கிவிடுகிறோம்.

ப்ரொபயாடிக் பாக்டிரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கஃபிர் எனும் வகை தயிரை உட்கொள்லலாம். இதில் மில்லியன் கணக்கில் நல்ல பாக்டிரியாக்கள் உள்ளன. இவை பெரும்குடலில் உள்ள நல்ல பாக்டிரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. கபிர் தயிரை உண்கையில் சர்க்கரை, கெமிக்கல் இல்லாத தயிரை உட்கொள்ளவேண்டும். வீட்டிலும் கெபிர் தயிரை தயாரிக்கலாம். ஆனால் அதற்கு கபிர் கல்ச்சர்ஸ் எனும் வகை ஸ்டார்ட்டர் கிட் தேவைப்படும்.
 ----------

ப்ரோபயாடிக்ஸ் சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது என இந்த கலிபோர்னியா பல்கலைகழக ஆய்வு கூறுகிறது. பொதுவாக இது கெபிர் எனும் வகை தயிரில் காணப்படும். ஏராளமான செயற்கை சர்க்கரைகளை சேர்த்து தயிர்பாயசம் என இந்த கெபிரை கூறலாம்.

இது எப்படி மூளை வளர்ச்சிக்கு நல்லது என இந்த ஆய்வு சொல்கிறது என குழம்பி முழுக்க படித்து பார்த்தேன். கடைசி பத்தியில் உண்மை வெளிவருது. இந்த ஆய்வை முழுக்க ஸ்பான்சர் செய்தது டானோன் எனும் கம்பனி. உலகின் நம்பர் ஒன் தயிர் உற்பத்தியாளர் டானோன். அதுபோக இந்த ஆய்வை நடத்தியவர்களில் மூவர் டாடோன் கம்பனியின் பணியாளர்கள்!!!

இம்மாதிரி ஆய்வுகளை வைத்து இனி மெடிக்கல் காலேஜ் சிலபஸ்களில் புரொபயாடிக் யோகர்ட் உடலுக்கு நல்லது என சொல்லிகொடுப்பார்கள். மருத்துவர்கள் அதை பரிந்துரைப்பார்கள். அப்புறம் இப்படி ஆரோக்கியமா சாப்பிட்டும் டயட்பைஸ் ஏன் வருது, ஹார்ட் அட்டாக் ஏன் வருது என புரியாமல் மக்கள் குழம்புவார்கள்.http://newsroom.ucla.edu/portal/ucla/changing-gut-bacteria-through-245617.aspx

 

https://www.facebook.com/groups/tamilhealth/permalink/195363630654124/
 
https://www.facebook.com/groups/tamilhealth/permalink/197775787079575/
 
https://www.facebook.com/groups/tamilhealth/permalink/160163927507428/


http://newsroom.ucla.edu/releases/changing-gut-bacteria-through-245617


 by Abdul Farooq

https://www.facebook.com/photo.php?fbid=737289496281403&set=gm.203078166549337&type=1


Kefir is superior than probiotic capsules

If you’re looking for a good probiotic supplement go for the best, Kefir. Many manufacturers of probiotics claim that their pills contain 15 billion bacteria at the time of processing. And that it would take tubs of yogurt or gallons of kefir to receive the same amount of friendly bacteria.

First of all, lets not forget that these companies acquire their products directly from these whole food fermented-milk products. They pull nutrients out of whole foods and turn around and sell them right back to you.

So for a fraction of the cost, you can have a more superior product. I paid only a few dollars for my kefir grains, and if you take care of them properly they will multiply and last forever!

Numbers don’t lie· One capsule of man-made probiotics normally contains about 15 billion bacteria.

· One small bowl of fresh yogurt (500 ml), contains about 1.5 trillion beneficial organisms. – 100 times more than a 15 billion capsule.

· And one small bowl of fresh kefir (500 ml), contains as many as 5 trillion beneficial organisms. Almost 400 times more than a capsule.

Kefir and other fermented milk products contain buffering agents that nourish and protect the lactobacillus from bile acids in the stomach. This way they can make it into the intestines where they produce Vit. B-12 and help to breakdown and package food for excretion. Milk products are such strong buffering agents that even poison control centers recommend drinking milk when confronted with a poison situation.

Bacteria in pill form are in a dormant cycle and the bacteria in kefir and yogurt are alive and well, making them much more fit to adapt to sudden changes in environment as they enter the body.

These fermented milk products are considered functional foods because they function as health promoting foods. Probiotic pill supplements only offer one thing, bacteria. Fermented Milk offers much more; minerals, vitamins, amino acids, L-carnitine, good fats, antimicrobial agents and more.

Scientist tested the kefir in the Caucasus Mountains for any type of harmful bacteria. But much to their surprise, they found nothing. Deep in the mountains where sanitary conditions are much worse than ours, the scientist refused to believe there was no harmful bacteria to be found. Creating a possible scenario that a piece of animal fecal matter would fall into the milk, they injected the E. Coli bacteria into the kefir. Within 24 hours the E. Coli was destroyed by Kefir’s benificial bacteria. Kefir has also demonstrated the ability to kill H. pylori infections when bacteria alone could not. In addition, the complex microflora of kefir has also shown a keen ability to stimulate our immune system, ward off infections from salmonella, and in some cases even fight cancer.

Fermented foods such as kefir, yogurt, and sauerkraut are once again superior to pills in a bottle.

No comments: