Sunday, March 27, 2016

மகளிருக்கு பேலியோ உணவுமுறையில் கிடைத்த நன்மைகள் விவரம். ( Effect of Paleo Diet in Women's Health)

சமீபத்தில் (2016) மகளிர் தினத்தன்று எங்கள்  பேலியோ உணவுமுறையில் பலனடைந்த மகளிரிடம்  அடைந்த பலன்களைப் பற்றிக் கேட்டபோது டாக்டர் ஹரிஹரன் , அந்த மெம்பர்கள் அளித்த பதிலை வைத்து, அவர்களுக் என்னென்ன பிரச்சனைகள் இந்த டயட் மூலம் தீர்வு கிடைத்திருக்கிறது என்று மருத்துவ மொழியில் அவர்கள் தொகுத்த விவரங்கள் கீழே: 
1. Hypothyroidism improved 
2. Knee Osteoarthritis disappeared 
3. PCOD disappeared 
4. obesity reduced 
5. Tiredness absent 
6. stress relieved 
7. body pain associated with periods gone 
8. gas problem gone 
9. Hyper uricemia (gout) relieved 
10. Diabetes Mellitus disappeared 
11. Diabetic associated nail weakening and breaking disappeared 
12. Body feeling lightened 
13. No sleep during afternoon 
14. Energetic and no body pain while waking up in morning 
15. Hot flushes disappeared 
16. Migraine disappeared 
17. Irregular periods improved 
18. Improved spinal cord pain by losing weight 
19. Improved Lipid Profile 
20. Rheumatoid Arthritis disappeared 
21. Anemia cured 
22. Vit D deficiency improved 
23. Ulcer cured 24. Sinusitis cured 
25. Hypertension reduced 
26. Improved Exercise tolerance 
27. Relief from Lethargy 
28. Relieved from Gluten/Non Gluten sensitivity/food intolerance 
29. Anger, Tension reduced 
30. Eczema Disappeared 
31. Irritability reduced 
32. Breathessness on exertion (? Heart failure) 
33. Tolerance to hunger/disappearance of hunger pangs 
34. Heel pain disappeared 
35. Endometriosis 
36. Improved sleep 
37. Not afraid to eat or eat more (phobia over harmfullness of food) 
38. Improved chances of conception in females 
39. Reduced Hip/Waist circumference 
40. Sneezing got relieved 
41. Aversion over carbs increased
42. Frequent dental problem reduced.

பேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக் குறிப்புகள்.

யார்மூலமாகவோ, எதையோ படித்து, யாரோ எடை குறைத்த போட்டோக்களைப் பார்த்து எப்படியோ இந்தக் குழுவுக்குள் வந்த அன்பருக்கு வணக்கம்.

உங்கள் வரவு நல்வரவாகுக.


===================================================

தயவு செய்து குழுவில் புதியவராகக் கேள்வி கேட்பதற்கு முன்பாக இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் முழுவதுமாக நேரம் எடுத்து ஒரு லேப்டாப்பிலோ, டெஸ்க்டாப்பிலோ படிக்கவும். அனைத்தையும் படித்துப் புரிந்தபின் கேள்விகள் கேட்கவும்.


===================================================



இந்தக் பேஸ்புக் க்ரூப்பிற்குள் வந்துவிட்டீர்களே தவிர, இங்கே என்ன பேசுகிறார்கள்? இது என்ன டயட்? பேலியோ என்றால் என்ன? அதை வேகவைத்து சாப்பிடவேண்டுமா? காலை தேன் கலந்து சுடுநீரில் கலந்து சாப்பிடவேண்டுமா? சப்பாத்தியின் உள்ளே வைத்து சாப்பிடவேண்டுமா என்றெல்லாம் புரியாமல் , சரி, இது ஏதோ வேலை வெட்டி இல்லாத க்ரூப் போல இருக்கிறது, ஒரு காலை வணக்கம் இல்லை, 8 தலை நாகம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் அதிசிய வீடியோக்கள் இல்லை, பெரிய கேக் படத்தைப் போட்டு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இல்லை, இந்தியா கிரிக்கெட்டில் வெற்றிபெற்றும் ஒரு பாரதமாதாகி ஜே என்ற போஸ்ட் கூட இல்லை என்று குழம்பி நீங்கள் தவிக்கிறது புரிகிறது.

நிற்க.

இது ஒரு பேலியோ உணவுமுறை க்ரூப். இங்கே 40000 க்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கிறார்கள். இங்கே நாங்கள் பரிந்துரைப்பது அதிக கொழுப்புள்ள உணவுகளும், குறைந்த மாவுச்சத்துள்ள உணவுகளும் சாப்பிடும் ஒரு  வாழ்வு முறை.

இந்த பேலியோ உணவுமுறையை  புரிந்துகொள்ள முதலில் ஒரு கிலோ சர்ப் வாங்கி இதுவரை எது நல்ல உணவு, எது தீய உணவு என்று உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதோ அந்தக் கறைகளை எல்லாம் நன்றாக ஊறவைத்து அலசி வெளியே போட்டுவிட்டு வெண்மையான மனதுடன் படியுங்கள். ஏனென்றால் நீங்கள் குறிப்பிட்ட உணவுமுறை என்றாலே அவசியமாக இருக்கவேண்டிய எதுவுமே இந்த பேலியோ உணவுமுறையில்  இருக்காது. எனவே அனாவசியமான குழப்பங்கள், கேள்விகள் தவிர்க்க ஏதுவாக இருக்கும்.


இந்த பேலியோ உணவுமுறையின்  அதிர்ச்சிகள்:


இங்கே எதுவெல்லாம் உண்ணத் தடை.


அரிசி. (பொன்னி, கைக்குத்தல், பாஸ்மதி, சுகர் ப்ரீ டயா ப்ரீ அரிசி, பாரம்பரிய அரிசி, ஆர்கானிக் அரிசி)
கோதுமை. (குட்டை கோதுமை, நெட்டை கோதுமை, டயாப்ரீ கோதுமை, சப்பாத்தி, ப்ரெட்)
மைதா. (கேக்குகள், பரோட்டாக்கள்)
பேக்கரி பொருட்கள்.(பேக்கரிகளில் விற்கப்படும் அனைத்தும்)
பழங்கள் / ஜூஸ்.
அனைத்துவகை இனிப்புகள் (நெய்யில் செய்யப்பட்டதுமுதல், டால்டாவில் செய்யப்பட்டது வரை)
தேன், நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுகர் ப்ரீ மாத்திரைகள், ஹீலர் ஜாங்கிரிகள், கேக், அல்வா, இறைவனே கொண்டு வந்து கொடுக்கும் அமிர்தம்.
ஓட்ஸ், மேகி, ஹெர்பாலைப், லேகியங்கள், உடல் எடை குறைப்பு மாத்திரைகள், மருந்துகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, இன்னபிற)
பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடி டு குக் உணவுகள் அனைத்தும்.
ரிபைன்ட் என்ற வார்த்தையுடன் விற்கப்படும் சன்ப்ளவர், தேங்காய், நல்ல, கடலை , கடுகு , கனோலா, ரைஸ்பார்ன், டால்டா, பாமாயில் எண்ணெய்கள்.
ஜங்க் புட் எனப்படும், குப்பை உணவுகள் அனைத்தும்.
அனைத்துவகை பீன்ஸ், கிழங்கு வகைக் காய்கறிகள், அனைத்துவகை கடலைகள், (வேர்க்கடலை முதற்கொண்டு),
அனைத்து வகை பருப்புகள், புளி.
அனைத்துவகை சோயா பொருட்கள்.
காபி, டீ, அனைத்துவகை கூல் டிரிங்க்ஸ், எனர்ஜி ட்ரிங்க்ஸ், சிட்டுக்குருவி லேகியங்கள்.




போங்க சார், அப்புறம் என்னத்தான் சாப்பிடறது? இது என்ன ஏதும் உணவுமுறை சம்பத்தப்பட்ட க்ரூப்பா? இல்ல மோட்சத்துக்கு ஆளெடுக்கிறீங்களா? என்று நீங்கள் கதறிக் கடுப்பாகி மயக்கம் போட்டு விழப்போவதற்கு முன்பாக மேலேயும், கீழேயும் படியுங்கள்.

மேலே முதலில் என்ன சொன்னோம்?

||||||||| இது ஒரு பேலியோ உணவுமுறை க்ரூப். இங்கே 40000 க்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கிறார்கள். இங்கே நாங்கள் பரிந்துரைப்பது அதிக கொழுப்புள்ள உணவுகளும், குறைந்த மாவுச்சத்துள்ள உணவுகளும் சாப்பிடும் ஒரு உணவுமுறை அல்லது வாழ்வு முறை.

இந்த உணவுமுறை புரிந்துகொள்ள முதலில் ஒரு கிலோ சர்ப் வாங்கி இதுவரை எது நல்ல உணவு, எது தீய உணவு என்று உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதோ அந்தக் கறைகளை எல்லாம் நன்றாக ஊறவைத்து அலசி வெளியே போட்டுவிட்டு வெண்மையான மனதுடன் படியுங்கள். ஏனென்றால் நீங்கள் டயட் என்றாலே அவசியமாக இருக்கவேண்டிய எதுவுமே இந்த டயட்டில் இருக்காது. எனவே அனாவசியமான குழப்பங்கள், கேள்விகள் தவிர்க்க ஏதுவாக இருக்கும். ||||||||||||

ஓக்கே, இப்பொழுது ஏன் சர்ப் வாங்கி அலசி காயவைத்து திறந்த மனதுடன் இந்த உணவுமுறையை  அணுகுங்கள் என்று சொன்ன காரணம் புரிந்திருக்கும். அது புரிந்தால்தான், எடை குறைப்பு என்றாலே, வெந்நீரில் தேன் கலந்து சாப்பிடவேண்டும், கொள்ளு வேகவைத்து சாப்பிடவேண்டும், சிறுதானியங்களை ஊறவைத்து சாப்பிடவேண்டும், குறைவாகச் சாப்பிடவேண்டும், கை கால் வீசி நடந்து, களைத்துப் போய் 4 பட்டர் பிஸ்கெட்டும், டீயும் குடித்துவிட்டு, ஆழ ஒரு தம் அடித்துவிட்டு இருப்பதே ஆரோக்கிம், ஹெர்பாலைபை குடித்துவிட்டு 5 ப்ளேட் ப்ரியாணையை அசால்ட்டாகத் தின்றால் எடை குறைந்துவிடும், 50 கிலோ மீட்டர் ஓடினால், நடந்தால், சைக்கிள் ஓட்டினால், ட்ரெட்மில்லில் ஓடினால் எல்லாம் சரியாகிவிடும் என்று முட்டிவலியோடு நீங்கள் நம்புவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.

சர்ப் போட்டு நீங்கள் சரியாக அலசாததால், சைடில் லேசாக (அப்ப அருகம்புல்லும், கற்றாழையும் போட்டு கம்மங்கூழ் குடிக்கச் சொல்றாங்களோ) என்று ஒரு கறை இருப்பதால், மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

||||||||| இது ஒரு பேலியோ உணவுமுறை க்ரூப். இங்கே 40000 க்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கிறார்கள். இங்கே நாங்கள் பரிந்துரைப்பது அதிக கொழுப்புள்ள உணவுகளும், குறைந்த மாவுச்சத்துள்ள உணவுகளும் சாப்பிடும் ஒரு உணவுமுறை அல்லது வாழ்வு முறை.||||||

போதும்யா, போதும் அந்தக் கீரிப்புள்ளையையும், பாம்புபையும் அவுத்துவிட்டு சண்டை போடவைங்க என்று நீங்கள் நினைத்தால் ஓரளவு இந்த பேலியோ உணவுமுறை பற்றி அறிய நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம். யெஸ், இதற்கு மேல் வரும் செய்திகளைப் படிக்காமல் போனால் உங்களுக்கு, டயபடிக், ஹார்ட் அட்டாக், உடல்பருமன் போன்ற பலவியாதிகள் வரும்.

ரைட், இனி இந்த உணவுமுறை ற்றி சில அதிர்ச்சிகரமான உண்மைகள்:

இங்கே பரிந்துரைக்கப்படும் உணவுகள் கீழ்வருமாறு:

கிழங்குகளில்லாத, பீன்ஸ் இல்லாத, பருப்புகள் இல்லாத காய்கறிகள்.
பாதாம், பிஸ்தா, மகடாமியா, வால்நட்ஸ்.
மஞ்சள் கருவுடன் முட்டைகள்.
கொழுப்புடன் கூடிய தோல் நீக்காத இறைச்சி வகைகள்.
அனைத்துவகை கடல் உணவுகள்.
நெய், வெண்ணெய், சீஸ், பனீர், முழுக்கொழுப்பு பால், தயிர், மோர்.
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்.
அனைத்துவகை கீரைகள்.

யெஸ், கொழுப்பு, கொழுப்பு, மேலும் கொழுப்பு:

இதெல்லாம் சாப்பிட்டால் மாரடைப்பு வராதா?

டயபடிக் இருப்பவர்களுக்கு சுகர் ஏறாதா

உயிருக்குப் பிரச்சனை இல்லையா?  

எல்லாம் போகட்டும்

இவ்வளவு கொழுப்பு சாப்பிட்டால் எப்படி உடல் எடை குறையும்

தமிழனின் பாரம்பரிய உணவுகளான அரிசி, கோதுமை, மேகி, பட்டர்பிஸ்கட், பிரியாணி, பரோட்டா எல்லாம் சாப்பிடக்கூடாது என்கிறீர்களே? நீங்கள் சொல்வது டயட்டா? என்ற கேள்விக்கெல்லாம் விடையை நாங்கள் ஒரு சிறிய குழந்தைக்கும் புரிவதுபோல விளக்கமாக எழுதி இருக்கிறோம். பொறுமையாக கீழே உள்ள லிங்க்குகளை வாசிக்கவும்.


பேலியோ உணவுமுறை என்றால் என்ன?


பேலியோ உணவுமுறை பற்றி தமிழில் படிக்க புத்தகம் இருக்கிறதா?

இருக்கிறது, அதை ஆன்லைனில் வாங்க:





 அனைத்து ஆரோக்கியம் நல்வாழ்வு புத்தகங்கள் கிடைக்கும்.


                           www.paleocart.com 



புதிய காம்போ புத்தகங்கள்:





அமேசான் கிண்டிலில் மின் புத்தகமாக வாங்க:

பேலியோ சமையல் சைவம்      :              https://goo.gl/QzqHe1

பேலியோ சமையல் அசைவம் :              https://goo.gl/TJqqsq





PIN Post படிக்கவும் என்று அடிக்கடி கமென்ட்டில் சொல்கிறார்களே அது என்ன ? :






பேலியோ உணவுமுறையில்  திரும்பத் திரும்பக் கேட்கப்படும் கேள்விகள் என்ன?



பேலியோ உணவுமுறை பற்றிப் புரிந்து முயற்சிக்க விரும்பும் மக்கள் டிஸ்கவுன்ட் விலையில் முதலில் எடுக்கவேண்டிய டெஸ்ட் விவரம்


Paleo Cheat Sheets:

http://paleogod.blogspot.in/2016/04/paleo-lifestyle-cheat-sheets.html


இந்த பேலியோ உணவுமுறை பற்றிய சிறிய அறிமுக வீடியோ பதிவு:



https://www.youtube.com/watch?v=s9x7oqdsKdI 






மகளிருக்கு இந்த உணவுமுறையால்  கிடைத்த நன்மைகளின் பட்டியல் :

http://paleogod.blogspot.in/2016/03/effect-of-paleo-diet-in-womens-health.html




இந்த பேலியோ உணவுமுறையை எடுப்பதற்கு முன்பு ஏன் ரத்தப் பரிசோதனை கட்டாயம் செய்யச் சொல்கிறீர்கள்?

ஏனென்றால், உங்களுக்கு உடலில் என்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது, இந்த உணவுமுறையால்  உங்களுக்கு கிடைத்த நன்மைகளை நீங்கள் தெளிவாக அறிந்துகொள்ள இந்த பரிசோதனைகள் உதவும்.

இந்த உணவுமுறையை எடுத்து ஒரு மாதம் கழித்து அல்லது ஒரு வாரம் கழித்து டெஸ்ட் எடுத்தால் என்ன தவறு?

பேலியோ உணவுமுறை எடுத்தபிறகு நீங்கள் டெஸ்ட் எடுக்கிறீர்கள். சரி, அதற்கு முன்பாக எப்பொழுது டெஸ்ட் எடுத்திருப்பீர்கள்? தெரியாது. சரி, உங்கள் உடலில் என்ன பிரச்சனைகள் இருக்கிறது? நான் நல்லாத்தான் சார் இருக்கேன், என்ன வெயிட் கொஞ்சம் அதிகம், அவ்ளோதான், அதுக்கு ஏன் டெஸ்ட்? இப்படித்தான் உங்கள் எண்ணங்கள் இருக்கும். ஆனால் இந்த டெஸ்ட் எடுத்து ஒரு மாதம் கழித்து உங்கள் ரிசல்ட்டில் உங்களுக்கு டயபடிக் இருக்கிறது, தைராய்ட் இருக்கிறது, விட்டமின் டி குறைவு, ஹீமோக்ளோபின் குறைவு, இரும்பு சத்துகுறைவு, பி12 குறைவு, HscRP அதிகம், க்ரியேட்டினின் அதிகம், HbA1C அதிகம் என்று வந்தால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும், உங்கள் நலம் விரும்பும் நண்பர்களும் என்ன சொல்வார்கள்?



ஏன்யா நான்தான் அப்பவே சொன்னேன்ல, இந்தக் கொழுப்பு சாப்பிட்டா இந்தமாதிரி எல்லாம் பிரச்சனை வரும்னு? பேஸ்புக்ல சொன்னாங்களாம்னு முட்டையும், சிக்கனும், வெண்ணெயும், நெய்யுமா அடிச்சி வீக்கின? புட்டுக்கிச்சா? சோறு தின்னக்கூடாதுன்னு சொன்னப்பவே நீ உசாராகிருக்கவேணாமா? சோறு இல்லாம மனுசன் உயிர் வாழமுடியுமா? சிறுதானியம், தேன், நாட்டு சர்க்கரை, ஜாங்கிரி, பட்டர் பிஸ்கெட், க்ரீம் பன் கூட சாப்பிடக்கூடாதுன்னு சொன்னப்பவே உனக்குத் தெரியவேணாமா? மேகிய விடவா சத்தான சாப்பாடு கிடைக்கும்?

என்று இன்னும் பல கெட்டவார்த்தைகள் போட்டு, நீங்கள் கொஞ்சம் என்னைப் போல அப்பாவியாக இருந்தால் மூக்கில் கொஞ்சம் குத்துகூட கிடைக்கும்.

சரி,

அதுவே நீங்கள் உணவுமுறைக்கு  முன்பாக டெஸ்ட் எடுக்கிறீர்கள். உங்களுக்கு டயபடிக் இருக்கிறது, உடல் பருமன், விட்டமின் டி குறைபாடு, தைராய்டு உள்ள வர்ட்டா என்று கேட்கிறது, சைவர்களாக இருந்தால் பி12 குறைவு, அடிக்கடி சோர்ந்து தூங்குபவராக இருந்தால் ஹீமோக்ளோபின் குறைவு, இருதயப் பிரச்சனைகளை ஓரளவு அறிவிக்கும் HsCRP அளவுகள் அதிகமாக இருக்கிறது.

இந்த ரிசல்ட்டைக் குழுவில்போட்டு பேலியோ  உணவுமுறை கேட்கிறீர்கள். இதேபோன்ற பிரச்சனைகளுடன் வந்து அவைகள் சரியான மெம்பர்களின் போஸ்ட்களைப் படிக்கிறீர்கள். இதுபோன்ற பிரச்சனைகள் ஏன் நீங்கள் தினம் நல்லது என்று சாப்பிட்ட உணவுகள் மூலமாக வருகிறது என்று புரிந்துகொள்கிறீர்கள். பலவிதமான குழப்பங்களுக்கு பதில் கிடைக்கிறது.

ஒழுங்காக சர்ப் போட்டு கழுவிய தூய்மையான அறிவில் பேலியோ உணவுமுறையை  ஏற்றிக்கொண்டு, பரிந்துரைக்கப்படும் உணவுமுறையை சரியாகக் கடைப்பிடிக்கிறீர்கள். ஒரு மாதம்/ 3 மாதம் கழித்து நீங்கள் மீண்டும் டெஸ்ட் எடுத்து உங்கள் பேலியோ உணவுமுறைக்கு முன்பான ரிசல்ட்டுடன் ஒப்பிடுகிறீர்கள். பல விசயங்களில் முன்னேற்றம் இருக்கிறது. இந்த உணவுமுறையை இப்பொழுது உங்கள் குடும்பத்தினரும், நண்பர்களும் நம்புகிறார்கள், உங்கள் மருத்துவரும் ஆச்சரியத்துடன் எப்படி? என்று கேட்கிறார்.

இதுதான் மிக முக்கியமான வித்தியாசம். இதற்காகத்தான் இந்த உணவுமுறைக்கு  முன்பாக டெஸ்ட்கள் அவசியம்.

இவ்வளவு சொல்லியும் டெஸ்ட் எடுக்காமல் சில அதிபுத்திசாலிகள்  பேலியோ உணவுமுறை பிறகு டெஸ்ட் எடுத்து எனக்கு அது கூடிவிட்டது என்று அது கொழுப்பு சாப்பிட்டதால்தான் என்று எங்கள் நாட்டு வைத்தியர் சூடம் அடித்துச் சொல்கிறார், சீனியர்களே நீங்கள் உடனே உங்கள் சொந்த வேலையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள் என்று கேட்பார்கள். அவர்களுக்கு நம்மிடமிருந்து கிடைக்கும் பதில் ஆழ்ந்த பரிதாபம் மட்டுமே. தனது உடல் ஆரோக்கியத்திற்கு அக்கறை காட்டாத எவருக்கும் ஆரோக்கியம் கிடைப்பது கடினம்தான், உங்களுக்காகத்தான் லேகியம், தாயத்து, டானிக், பவுடர் எல்லாம் விற்கிறார்கள், அதில் என்ன இருக்கிறது என்று கூடக் கவலைப்படாமல் அதை உண்டு மகிழ்ச்சியுடன் இருக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்

ஏன் ப்ளட் டெஸ்ட் அவசியம்? படிக்க..
இவ்வளவு சொல்லியும், எங்களின் உழைப்பை அலட்சியப்படுத்தி தேன் ஏன் குடிக்கக்கூடாது? ஏன் மேகி சாப்பிடக்கூடாது? ஏன் கொள்ளு சாப்பிடக்கூடாது என்று கேட்பீர்களேயானால் உங்களுக்கு எந்த விளக்கமும் சரியாகக் கிடைக்காது என்பதை ஆழ்ந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் நலம் உங்கள் கையில் - வாழ்க கொழுப்புடன்

https://web.facebook.com/groups/tamilhealth 

எச்சரிக்கை:

இங்கே அனுபவம் சார்ந்த குறிப்புகளே பகிரப்படுகின்றன, அவைகள் மருத்துவ ஆலோசனைகள் அல்ல. இங்கே ஆலோசனை சொல்பவர்கள் மருத்துவர்களோ, டயட்டிசியன்களோ அல்ல. நண்பர்கள் அவற்றை ஆராய்ந்து முடிவு எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்களின் உடல்நலத்திற்கு அவரவர்களே பொறுப்பு.

Thursday, March 24, 2016

பேலியோ உணவுமுறை முன்பாக எடுக்கவேண்டிய டெஸ்ட்கள்






நீங்கள் ஒரு உணவுமுறையில்  இருக்கிறீகளோ இல்லையோ, வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது சில சிக்கல்களை வருமுன் காக்க உதவும். மேலே உள்ள தைரோகேர் லாப் மூலம் நீங்கள் ரத்தப் பரிசோதனையை சகாயவிலையில் செய்துகொள்ளலாம், இதை நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இரவு கடைசி உணவை 9 மணிக்குள் முடித்துக்கொண்டால், காலையில் அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து ரத்தப் பரிசோதனை எடுக்கும்வரை நீங்கள் எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். தண்ணீர் மட்டும் குடிக்கலாம், உங்கள் பகுதியில் தைரோகேர் வசதி இல்லையென்றால் மேற்கண்ட டெஸ்ட்களை உங்கள் அருகில் உள்ள லேபில் எடுத்துக்கொள்ளலாம்.

பேலியோ உணவுமுறை  எடுப்பதற்கு முன்பாக பரிசோதனை கட்டாயம், அப்பொழுதுதான் உணவுமுறையின்  தாக்கம் உங்கள் உடலில் என்ன என்பது தெரியும், பேலியோ உணவுமுறைக்கு முன்பாக டெஸ்ட் செய்யாமல், பேலியோ உணவுமுறைக்கு  பிறகு டெஸ்ட் எடுத்து அது ஏறிவிட்டது, இது குறைந்துவிட்டது என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கமுடியாது.

அனைவரும் அல்லது டயபடிக் உள்ளவர்கள் மேற்கண்ட டெஸ்டுகளுடன் அருகிலுள்ள லேபில் உங்கள் சிறுநீரைக்கொடுத்து அரோக்கியம் 1.4 ல் உள்ள டெஸ்ட்களுடன் 


Microalbuminuria in urine + Urine Routine  டெஸ்ட்களையும் சேர்த்து எடுப்பது நல்லது. இந்த யூரின் டெஸ்டில் உங்கள் கிட்னி செயல்பாடுகள் தெளிவாகத் தெரியவரும், கண்டிப்பாக வருடம் ஒருமுறை எடுத்து உங்கள் கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளலாம்.






© https://www.facebook.com/groups/tamilhealth/