நீங்கள் ஒரு உணவுமுறையில் இருக்கிறீகளோ இல்லையோ, வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது சில சிக்கல்களை வருமுன் காக்க உதவும். மேலே உள்ள தைரோகேர் லாப் மூலம் நீங்கள் ரத்தப் பரிசோதனையை சகாயவிலையில் செய்துகொள்ளலாம், இதை நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இரவு கடைசி உணவை 9 மணிக்குள் முடித்துக்கொண்டால், காலையில் அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து ரத்தப் பரிசோதனை எடுக்கும்வரை நீங்கள் எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். தண்ணீர் மட்டும் குடிக்கலாம், உங்கள் பகுதியில் தைரோகேர் வசதி இல்லையென்றால் மேற்கண்ட டெஸ்ட்களை உங்கள் அருகில் உள்ள லேபில் எடுத்துக்கொள்ளலாம்.
பேலியோ உணவுமுறை எடுப்பதற்கு முன்பாக பரிசோதனை கட்டாயம், அப்பொழுதுதான் உணவுமுறையின் தாக்கம் உங்கள் உடலில் என்ன என்பது தெரியும், பேலியோ உணவுமுறைக்கு முன்பாக டெஸ்ட் செய்யாமல், பேலியோ உணவுமுறைக்கு பிறகு டெஸ்ட் எடுத்து அது ஏறிவிட்டது, இது குறைந்துவிட்டது என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கமுடியாது.
அனைவரும் அல்லது டயபடிக் உள்ளவர்கள் மேற்கண்ட டெஸ்டுகளுடன் அருகிலுள்ள லேபில் உங்கள் சிறுநீரைக்கொடுத்து அரோக்கியம் 1.4 ல் உள்ள டெஸ்ட்களுடன்
Microalbuminuria in urine + Urine Routine டெஸ்ட்களையும் சேர்த்து எடுப்பது நல்லது. இந்த யூரின் டெஸ்டில் உங்கள் கிட்னி செயல்பாடுகள் தெளிவாகத் தெரியவரும், கண்டிப்பாக வருடம் ஒருமுறை எடுத்து உங்கள் கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளலாம்.
© https://www.facebook.com/groups/tamilhealth/
No comments:
Post a Comment