ப்ளட் டெஸ்ட் கண்டிப்பா எடுக்கனுமா? நான் நல்லாத்தான் இருக்கேன் என்று
பலர் கேட்கிறீர்கள் அல்லவா? நமது குழுவின் புதிய மெம்பர் ஒருவரின்
ரிபோர்ட்டை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.
Cholesterol 417
TGL 200
HDL 49
LDL 328
Weight 89 / Age 30 / Non veg
அவருடைய ரிசல்ட். 30 வயதில் 89 கிலோ எடை என்பது பெரிய விஷயமே அல்ல. 25 வயதில் 100+ எல்லாம் குழுவில் இருக்கிறார்கள். இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது அவருடைய கொழுப்பின் அளவுகள்.
இவரிடம் சில கேள்விகள் கேட்டேன். இதற்கு முன்பு எப்பொழுதாவது ரத்தப் பரிசோதனை செய்திருக்கிறாரா?
இல்லை.
ஏதேனும் உடல் பிரச்சனைகள் இருக்கிறதா?
இல்லை.
மருந்து மாத்திரை எடுக்கிறாரா?
இல்லை.
சரி, இப்பொழுது இவரைப் போல ஒருவர், நாம் கூறியபடி ரத்தப் பரிசோதனை எதுவும் எடுக்காமல் பேலியோ எடுத்து ஒரு மாதம் அல்லது ஒருவாரம் கழித்து, இவ்வளவு கொழுப்பு சாப்பிடுகிறோமே என்ற எண்ணத்திலோ, எடை குறைந்ததாலோ பயந்து போய், ஒரு டெஸ்ட் எடுத்துவிடலாம் என்று நினைத்து டெஸ்ட் எடுக்கிறார். பேலியோவால் 0% நன்மை என்றே வைத்துக்கொள்வோம். இப்பொழுது மேலே உள்ள ரிசல்ட்கள் அவருக்கு வருகிறது.
Cholesterol 417
TGL 200
HDL 49
LDL 328
இந்த ரிசல்ட்டை வைத்துக்கொண்டு டாக்டரிடம் செல்கிறார்.
டாக்டர்: என்ன சாப்பிட்டீர்கள்?
15 நாட்களாக டெய்லி 5 முட்டை, 1/2கிலோ சிக்கன், நெய்ல வறுத்த பாதாம், பனீர் 200 கிராம், அவகோடா, சீஸ், வெண்ணெய் டாக்டர் இதுதான் சாப்பிட்டேன்.
டாக்டருக்கு லேசாக மயக்கம் வருகிறது, மெதுவாகக் கீழே கால் இருக்கிறதா என்று பார்த்து வந்தது ஆவி இல்லை மனிதன்தான் என்று கன்பர்ம் செய்துகொள்கிறார்.
இவ்ளோ கொழுப்பு சாப்பிட்டா என்னாங்க ஆகறது? ஏன் இப்படிச் சாப்பிட்டீங்க? தற்கொலைக்கு முயற்சி பண்றீங்களா?
இல்லைங்க டாக்டர் பேலியோன்னு ஒரு டயட், பேஸ்புக்ல...
வாட் நான்சன்ஸ்? நீங்க எல்லாம் படிச்சவங்கதானே? பேஸ்புக்காம் டயட்டாம், உடனே அட்மிட் ஆகுங்க, வீட்டுக்கு தகவல் சொல்லிடுங்க.
பைபாஸ் பண்ணப்போறீங்களா டாக்டர்?
அவர் வீட்டுக்குத் தகவல் பறக்கிறது. பேலியோ சாப்பிட்டால் நன்றாக இருந்த மனிதரின் கொழுப்பு 400ஆக மாறி உயிர்பிழைத்ததே அதிசயம் என்ற செய்தி பரவுகிறது.
அதைவிட முக்கியமாக வறண்ட சப்பாத்தியும், மஞ்சள் கரு இல்லாத முட்டையும், ஓட்ஸ் கஞ்சியும், பொன்னி அரிசி சாப்பாடும், கொழுப்பில்லாத பாலும் தவிர்த்து ஸ்டாட்டின் மட்டுமே சாப்பிடவேண்டும் என்று தீர்ப்பு வருகிறது .
டேய் சீனியர்களே எங்கடா இருக்கீங்க, என்று வன்மத்தோடு ஒரு போஸ்டும் அவர் மனதில் டைப்பிக்கொண்டிருப்பார். சொந்த பந்தங்கள் டேய் சம்முவம் எட்றா அந்த வீச்சறிவாள என்று டாட்டா சுமோவில் கரும்புகை கக்கக் கிளம்பும்.
இது தேவையா?
இதில் எங்கள் தவறு என்ன?
இதையே, மேலே நண்பரைப் போல சரியாக சொன்னதைக் கேட்டு, பரிந்துரைக்கப்பட்ட ப்ளட் டெஸ்ட் எடுத்தால் , அவருக்கு சரியான உணவு முறையை , மருத்துவரைப் பார்க்கவேண்டி இருப்பின் அந்த அறிவுரையோ கிடைக்கும்தானே?
அவர் விருப்பப்படும் நாளில் மீண்டும் டெஸ்ட் எடுத்துப் பார்க்கும்பொழுது மேலே சொன்னதை விட அளவுகள் குறைந்தால் அவருக்கு நமது டயட்டின் மீது நம்பிக்கை வரும்தானே? வராவிட்டால் இது வேலைக்காவாது என்று வேறு வழியைப் பார்க்கச் சென்றுவிடுவார்தானே?
யோசியுங்கள் மக்களே..
உணவுமுறை முதற்கொண்டு பொழுதுபோகாமல் எதையும் இந்தக் குழு பரிந்துரைப்பதில்லை. அதில் இருப்பதை சரியாகப் பின்பற்றினாலே போதும்.
போலவே, அந்த டெஸ்ட் ரிசல்ட்டை எல்லாம் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் காண்பித்து சரியான ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளவேண்டும். நாங்கள் அதில் சில விசயங்கள் தவிர்த்து மற்றவற்றை அலசி ஆராய்வதில்லை. ஏனென்றால் அதெல்லாமே நீங்கள் ஒரு மருத்துவரை நேரடியாகக் கலந்து பேசி புரிந்துகொள்ளவேண்டியவை.
உணவுமுறை முன்பாக ரத்தப் பரிசோதனை அவசியம், அலட்சியப்படுத்துபவர்களுக்கு ஆலோசனை கிடைக்காது. அதனால் வரும் பாதிப்புகளுக்கு குழு பொறுப்பல்ல.

No comments:
Post a Comment