Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
அதிக கார்ப் (மாவுச்சத்து-இட்லி/தோசை/சப்பாத்தி/சிறுதானியம்/போண்டா/etc.,)சாப்பிட்டால் அதிக இன்சுலின் சுரக்கும். இன்சுலின் ஒரு பஞ்ச கால ஹார்மோன். மனிதனுக்கு பூமியில் உணவு கிடைக்காத நேரத்தில், கையில் கிடைக்கும் உணவை உடலில் சேர்த்து வைப்பதற்காக பரிணாம வளர்ச்சியில் இது தோன்றியது.
கார்ப் உணவுகள் அதிகமாக சாப்பிட்டால், இன்சுலின் அவற்றை எடுத்து கிளைக்கோஜனாகவும் கொழுப்பாகவும் சேமித்து வைத்து நம்மை குண்டாக்கும். நாம் சக்திக்காக உண்ணும் உணவை, இன்சுலின் இப்படி திசைதிருப்பவதால், உடல் இயங்க சக்தி கிடைக்காது. அதனால் உணவு சாபிட்ட சில மணி நேரங்களில் மறுபடி பசி எடுக்கிறது. நாம் மறுபடியும் கார்ப் உணவுகள் எடுக்கிறோம்-->இன்சுலின் சுரக்கிறது-->குண்டாகிறோம்-->உடல் இயங்க சக்தி இல்லை-->மறுபடி பசி. இந்த சுழற்சியில் சிக்கி குண்டாகி, அத்துடன் சில சமயம் பிரஷர், சுகரை வரவழைக்கிறோம்.
நல்ல கொழுப்பு (பேலியோ டயட்) சாப்பிட்டால் வயிறு உடனே நிரம்புகிறது. இன்சுலின் சுரப்பதில்லை. சாப்பிட்ட உணவில் இருந்து உடலுக்கு சக்தி பெறப்படுகிறது. இன்னும் சக்தி தேவைப்பட்டால் உடலில் இருக்கும் கொழுப்பு கரைகிறது. உடற்பருமன் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. சுகரும், பிரஷரும் தான்.
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore.
பல ஆராய்ச்சிகள், முழுதானியம் சுகர் மற்றும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் (சுகர் வருவதன் முந்தைய நிலை) வராமல் தடுக்க வல்லது என கூறுகின்றன,
இந்த ஆராய்ச்சிகளை உற்று நோக்கினால், அவர்கள் முழுதானியத்தையும் உடைக்கப்பட்ட தானியம், மாவுகள் (flour) ம் கம்பேர் செய்திருப்பதை அறியலாம். அதாவது பாலிஷ் செய்யப்பட்ட தானியத்தை விட முழுதானியம் நல்லது என்று. அதாவது உடைக்கப்பட்ட தானியம் உள்ள உணவுகள் உடனே ரத்தத்தில் சர்க்கரை அளவை ஏற்றி விடும். முழுதானியம் கொஞ்ச நேரம் கழித்து சுகரை ஏற்றும். அவ்வளவு தான்.
இரண்டிலும் சர்க்கரைவியாதி வர அதிக வாய்ப்புள்ளது. இதை அவர்கள் "முழுதானியம் சாப்பிட்டால் சுகர் மற்றும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் வராமல் தடுக்கும்" என்கிறார்கள்.
இவர்கள் சொல்லும் லாஜிக் படி ஒருவன் முதல் மாடியில் இருந்து விழுந்தால் (முழுதானியம்) கைகால் மட்டுமே உடையும். இரண்டாம் மாடியில் (உடைக்கப்பட்ட தானியம்) இருந்து விழுந்தால் உயிர் போகும். அதனால் முதல் மாடியில் இருந்து விழுந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என சொல்ல வருவது போல் உள்ளது.
தானியத்தில் உள்ள கார்ப் எனும் மாவுச்சத்து ஒரு நாளைக்கு 60கிராமிற்கு மேல் இருந்தால், அது எந்த தானியமாக இருந்தாலும் நமக்கு சுகர் வர வாய்ப்புள்ளது என அறிக.
நாம் உண்டவுடன் உணவில் உள்ள அந்த சுகரை ப்ராசஸ் செய்ய உடலுக்கு ஆறு முதல் எட்டு மணிநேரம் பிடிக்கிறது. அதன்பின் நாம் எதையும் உண்ணவில்லை எனில் உடலில் சுகர் இல்லை. இன்சுலின் உற்பத்தி செய்யும் அவசியம் இல்லை. உடலில் இன்சுலின் இருக்கும்வரை உடல் கொழுப்பை எரிக்கும் மோடுக்கு போகாது
இன்சுலின் சுரக்காமல் நின்றவுடன் உடல் சேமிப்பில் உள்ள (அதாவது தொப்பையில் உள்ள) கொழுப்பை எரித்து க்ளுகோனோஜென்சிஸ் புராசஸ் மூலம் சுகராக மாற்றுகிறது. உணவு இல்லாவிடினும் உடலுக்கு தேவையான எனெர்ஜி இப்படி கிடைக்கிறது.
ஆக ஆறு அல்லது எட்டுமணிநேரத்துக்கு மேல் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தொடர்ந்து உங்கள் உடல் கொழுப்பை எரித்து கொண்டே இருக்கிறது. எதாவது உணவுபொருள் உங்கள் வாயில் போனால் இந்த புராசஸ் நின்று மறுபடி ஆறு- எட்டு மணிநேரம் கழித்து தொடர்கிறது
ஆக தினம் ஆறு சிறு உணவுகள் அல்லது நாள் முழுக்க இடைவிடாது தின்றுகொண்டே இருப்பது ஆகியவை உங்களை எடையை இழக்கவிடாமல் தடுக்கிறது. பலரும் இரவு ஹெவியாக உண்டுவிட்டு நடுவே எழுந்து கூட ஒரு ஸ்னாக் சாப்பிட்டுவிட்டு காலையில் எழுந்ததும் பாயசத்துடன் (காப்பி) நாளை துவக்குவார்கள். ஆக அவர்கள் உடல் கொழுப்பை எரிக்கும் மோடுக்கு செல்வதே கிடையாது
ஆய்வு ஒன்றில் ஒரே அளவு காலரிகள் இரு குழு எலிகளுக்கு கொடுக்கப்ட்டது. ஒரு குழு எலிகளுக்கு நாள் முழுக்க உணவு அளிக்காப்ட்டது. ஆனால் தினம் 16 மணிநேரம் விரதம் இருந்த எலிகள் மீதமிருந்த எட்டுமணிநேரத்தில் உண்ணாவிரதம் இருக்காத எலிகள் உண்ட அதே அளவு காலரிகளை உண்டபோதிலும் அவற்றை விட அதிக எடையை இழந்தன. ஆரோக்கியமாகவும்,. சுறுசுறுப்பாகவும் இருந்தன
காலை உணவு ஒரு நாளின் முக்கிய உணவு என்ற வதந்தியை பரப்பியவை முழுக்க சீரியல் கம்பனிகள் ஸ்பான்சரில் நடந்த ஆய்வுகள்
உண்னாவிரதம் (முழு, பகுதி) நம் எடையை குறைப்பது மட்டும் அல்ல, விரதம் இருக்கும் சமயம் மூளையின் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பசியோடிருக்கும் சமயம் தான் இரையை எப்படி தேடுவது என்பதை மனிதன் யோசிப்பது அவசியம். அதனால் இம்மாதிரி சமயங்களில் தான் மனிதனின் மூளையில் புதிய செல்கள் தோன்றுகின்றன.
உண்ணாவிரதம் நம் உடலின் இன்சுலின் சென்சிட்டிவிட்டையையும் அதிகரிக்கிறது. அதாவது குறைவான இன்சுலினை சுரந்தே அதிக அளவு சுகரை எரிக்கும் சக்தி என வைத்துகொள்வோம்
மன அழுத்தத்தை தாங்கும் வலிமை, வயதாவதை தடுப்பது ஆகியவற்ரையும் உண்னாவிரதம் அளிக்கிறது
அதுபோக
ஒல்லியாக இருந்து அன்ஃபிட் ஆக இருப்பதை விட குண்டாக இருந்து ஃபிட் ஆக இருப்பவர்கள் ஆரோக்கியமானவர்கள் என தெரிகிறது.
சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் இவ்வகை ஒல்லிதன்மை மிக ஆபத்தானது. காரணம் இவர்கள் உடலில் கொழுப்பு உள்ளுறுப்புகளில் (இதயம், கிட்னி) படியும். அதே சமயம் சிலர் குண்டாக இருந்தாலும் அவர்கள் உடலில் உள்ல கொழுப்பு முழுக்க தொப்பை, தொடை முதலிய இடங்களில் இருக்கும் (சுமோ வீரர்களை நினைவில் கொள்க). இதனால் ஒபிசிட்டி வருமே ஒழிய உள்ளுறுப்புகள் பாதிக்கபடுதல் முதலான ஆபத்துக்கள் இருப்பதில்லை.
ஆக டயட் இருந்து தொப்பையை இறக்கினாலும், உடன் உடல்பயிர்சியும் செய்வது அவசியம். உடல்பயிற்சி உங்கள் இதயத்துக்கு, டயட் உங்கள் தொப்பைக்கு என வைத்துகொள்ளுங்கள். என்னதான் பேலியோ, வாரியர் என டயட் இருந்தாலும் அதனுடன் எளிய நடைபயிற்சி போன்றவற்றை சேர்ப்பது மிக, மிக அவசியம். டயட் என்பது 80% உணவு, 20% உடல்பயிற்சி. பிசிகல் பிட்னஸ், உடல்பயிர்சி இல்லாவிடில் என்னதான் சிறப்பான டயட் ஆக இருந்தாலும் அது நம்மை காப்பாற்றாது.
தினம் 30- 45 நிமிட நடைபயிற்சி மினிமம் வாரம் 3- 4 நாள் செய்யவேண்டும் (அல்லது அதுக்கு சமமான வீட்டுவேலை)
தினம் குறைந்தது 12- 16 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்.
உங்கள் உணவு இயற்கையை ஒட்டிய நம் ஜீன்களுக்கு நெருக்கமான பேலியோ உணவாக இருக்கவேண்டும்
இவையே நம் ஜீன்களுக்கு நெருக்கமான ஆதிமனிதனின் வாழ்க்கைமுறையை ஒட்டிய முறை. இதுவே மருந்துகள், நோய்களில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கும். Neander Selvan
சமீபத்தில் (2016) மகளிர் தினத்தன்று எங்கள் பேலியோ உணவுமுறையில் பலனடைந்த மகளிரிடம் அடைந்த பலன்களைப் பற்றிக் கேட்டபோது டாக்டர் ஹரிஹரன் , அந்த மெம்பர்கள் அளித்த பதிலை வைத்து, அவர்களுக் என்னென்ன பிரச்சனைகள் இந்த டயட் மூலம் தீர்வு கிடைத்திருக்கிறது என்று மருத்துவ மொழியில் அவர்கள் தொகுத்த விவரங்கள் கீழே:
1. Hypothyroidism improved
2. Knee Osteoarthritis disappeared
3. PCOD disappeared
4. obesity reduced
5. Tiredness absent
6. stress relieved
7. body pain associated with periods gone
8. gas problem gone
9. Hyper uricemia (gout) relieved
10. Diabetes Mellitus disappeared
11. Diabetic associated nail weakening and breaking disappeared
12. Body feeling lightened
13. No sleep during afternoon
14. Energetic and no body pain while waking up in morning
15. Hot flushes disappeared
16. Migraine disappeared
17. Irregular periods improved
18. Improved spinal cord pain by losing weight
19. Improved Lipid Profile
20. Rheumatoid Arthritis disappeared
21. Anemia cured
22. Vit D deficiency improved
23. Ulcer cured 24. Sinusitis cured
25. Hypertension reduced
26. Improved Exercise tolerance
27. Relief from Lethargy
28. Relieved from Gluten/Non Gluten sensitivity/food intolerance
29. Anger, Tension reduced
30. Eczema Disappeared
31. Irritability reduced
32. Breathessness on exertion (? Heart failure)
33. Tolerance to hunger/disappearance of hunger pangs
34. Heel pain disappeared
35. Endometriosis
36. Improved sleep
37. Not afraid to eat or eat more (phobia over harmfullness of food)
HBA1C என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் எவ்வளவு சதவீதம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் ஒரு மாற்று சோதனை.
இதற்கு ஏற்கனவே இரத்தத்தில் குளுக்கோஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை
தெரிந்துகொள்ள Fasting blood sugar, 2-hour postprandial blood sugar,
Random blood sugar (RBS), Oral glucose tolerance test என்று பல்வேறு
சோதனை முறைகள் உள்ளது.
பின் ஏன் HBA1C பரிந்துரைக்கபடுகிறது.
மேற்சொன்ன சோதனைகள் உங்கள் இரத்தத்தில், குளுக்கோஸின் இப்போதைய நிலைமை என்ன என்பதை மட்டுமே சொல்லும்.
HBA1C கடந்த மூன்று மாதமாக இரத்தத்தில் குளுக்கோஸின் நிலைமை என்ன என்பதின் சராசரியை சொல்லும். அதானால் இது பரிந்துரைக்கபடுகிறது.
பின் என்ன பிரச்னை.
HBA1C சோதனை எடுத்து பார்த்து கடந்த மூன்று மாதமாக இரத்தத்தில் குளுக்கோஸின் சராசரி நிலைமை என்ன என்பதை சரியாக தெரிந்து கொள்ளலாமே.
இங்கு சரியாக என்று சொல்வதில்தான் பிரச்னை.
அதற்க்கு HBA1C சோதனை எவ்வாறு செய்ப்படுகிறது என்பதை புரிந்துகொண்டால்தான் தெரியவரும்.
இரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த செல்களில், ஹீமோகுளோபினில் A1A, A1B, A1C
என்ற பிரிவுகள் உள்ளது. இதில் A1Cயுடன் குளுக்கோஸ் அதிகமாக ஒட்டிகொள்
கிறது. அதை தனியாக பிரித்தெடுத்து அதில் எத்தனை சதவீதம் குளுக்கோஸ்
ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று கண்டுபிடிக்கவேண்டும். இரத்த சிவப்பு
செல்களின் வாழ்நாள் சராசரியாக 90 நாட்கள் அதன் பிறகு அது சிதைந்து விடும்.
இந்த 90 நாட்களில் படிப்படியாக எவ்வளவு குளுக்கோஸ் ஒட்டிக்கொண்டிருக்கிறது
என்பதை கண்டுபிடித்து சொல்வதுதான் HBA1C சோதனை முடிவுகள்.
இந்த 90
நாட்கள் என்பது சரியான கணக்கு கிடையாது. ஒவ்வொருத்தருக்கும் வேறுபாடும்.
நீரழிவு(DIABETIC), அனிமியா (ANEMIA) போன்ற இரத்த குறைபாடு உள்ளவர்களுக்கு
சிறிது நாட்களிலேயே சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் முடிந்துவிடும் . ஒரு
பிரச்னையும் இல்லாதவர்களுக்கு சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் 187
நாட்கள் வரை கூட இருக்கும்.
சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள்
குறைவாக இருக்கும்போது அதனுடன் ஒட்டிக்கொள்ளும் குளுக்கோஸ் விகிதம் குறைவாக
இருக்கும் HBA1C சோதனை முடிவுகள் குறைவாக இருக்கும்.
சிவப்பு
இரத்த செல்களின் வாழ்நாள் அதிகமாக இருக்கும்போது அதனுடன் ஒட்டிக்கொள்ளும்
குளுக்கோஸ் விகிதம் அதிகமாக இருக்கும். HBA1C சோதனை முடிவுகள் அதிகமாக
இருக்கும்.
ஆக HBA1C சோதனை முடிவுகளை நமது உடலில் உள்ள குளுக்கோசை விட நமது உடலில் உள்ள சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள்தான் தீர்மானிக்கிறது.
சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் அதிகமாக இருப்பவர்களுக்கு அவர்களின்
உடலுக்கு குளுக்கோசை சாமாளிக்கும் திறமை இருந்தாலும் HBA1C சோதனை முடிவுகள்
அதிகமாக இருக்கும்.
இதே மாதிரி நீரழிவு(DIABETIC), அனிமியா
(ANEMIA) போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள்
குறைவாக இருக்கும். அவர்களுக்கு HBA1C சோதனை முடிவுகள் குறைவாக காண்பித்து
அவர்கள் நல்ல நிலைமையில் இருப்பதாக முடிவுகள் வரக்கூடும்.
மேலும்
ஏ1சி சராசரியைத்தான் காட்டும். அதாவது ஒரு நாள் 300 இருந்து மூன்று
நாட்கள் 80 இருந்தால் சராசரி 125. ஆனால் ஒரு நாள் 300 போவதில் இருந்து
வரும் பாதிப்பை கட்டுப் படுத்த முடியாது
மேலும் இது இரத்தத்தில் குளுக்கோஸ் ஏறும்போது நம் உடல் அதை எப்படி சாமளிக்கிறது என்பதும் தெரியாது.
இதனால்தான் HBA1C சோதனை முடிவுகளை நம்புவதர்க்கு முடியவில்லை.
எனவே HBA1C எடுக்கும்போது Fasting blood sugar, 2-hour postprandial blood
sugarவும் எடுத்து பார்த்துவிடுங்கள் என்பது என் சொந்த கருத்து.
உணவுக்கு பின் சர்க்கரை அளவு மிக குறைந்துவிடுவது தான் ரியாக்டிவ் ஹைப்ப்போகிளைசெமியா
இதற்கு
காரணம் உணவில் இருக்கும் உயர் சர்க்கரையே. வருடகணக்கில் ஒவ்வொருவேளையும்
200, 250 கிராம் சர்க்கரை உடலில் சேர்வதை நினைத்துகொள்ளுங்கள். ஒரு பருக்கை
உணவு உள்ளே போனதும் உடல் உடனடியாக பர,பர என இன்சுலின் உற்பத்தியை
துவக்கிவிடும். துவக்கி தேவைக்கு அதிகமான இன்சுலினை உற்பத்தி செய்துவிடும். உண்டபின் இன்சுலின் சுரப்பு அதிகம் ஆகி தலைசுற்றல், மயக்கம் எல்லாம் வரும்.
லோ
கார்ப் டயட்டால் இது குணம் ஆகுமா? ஆகும். ஆனால் உடனடியாக ஆகாது. இத்தனை
வருட உணவுபழக்கத்தில் நீங்கள் ஏராளமான கொழுப்பை உண்டாலும், உடல்
ஆட்டோபைலட்டில் இன்சுலினை உற்பத்தி செய்யும். உங்கள் உணவில் சர்க்கரை இல்லை
என்பதை உடல் உணர சிலகாலம் ஆகலாம்.
அதனால் ரியாக்டிவ் ஹைப்போகிளைசெமியா உள்ளவர்கள் லோ கார்ப் செல்லுமுன் பின்வரும் உத்திகளை பயன்படுத்தலாம்.
கொஞ்சம், கொஞ்சமாக உணவில் கொழுப்பின் சதவிகிதத்தை அதிகபடுத்தி வருவது.
கொழுப்பு அதிகம் உள்ள தேங்காய் மாதிரி உணவை உட்கொள்வது
கொழுப்பு
நிரம்பிய உணவை உண்டபின் க்ளுகோஸ் மாத்திரைகளை எச்சரிக்கையுடன் கையில்
வைத்திருப்பது.
கைப்போகிளைசெமியா தாக்குவது போல் தெரிந்தால் உடனடியாக அதை
உட்கொள்வது
சிலருக்கு 2 - 3 மணிநேரத்துக்கு ஒரு முறை உண்ண சொல்லி
மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். சிலர் ஐந்து - ஆறுமணிநேரத்துக்கு
ஒருமுறை உண்பது பலனளிக்கும். இதை ட்ரயல் அன்ட் எர்ரர் முறை மூலமே கண்டறிய
முடியும்.
துவக்கத்தில் கொழுப்பும், சிறிது கார்பும் சேர்த்து
கொள்ளலாம். மெதுவாக கொழுப்பின் சதவிகிதத்தை அதிகரித்து வாருங்கள். உதா:
தோசை 3 உண்பதற்கு பதில் 2 முட்டை+ 1 தோசை என சேர்த்து நாள்போக்கில் மூன்று
முட்டைக்கு மாறலாம். கார்பை முழுக்க துவக்கத்தில் இதுக்கவேண்டாம். புரதமும்
அதிக அளவில் வேண்டாம். ஐம்பது அறுபது கிரமுடன் நிறுத்திவிட்டு
கொழுப்பையும், நார்சத்தையும் சேர்க்கவும். தேங்காய், நட்ஸ், வெண்ணெய்
எல்லாம் இதற்கு சரியான உணவுகள்.
லோ கார்புக்கு மாறுகையில் அடுத்த 1- 2
மணிநேரம் உடன் யாராவது இருக்குமாறு பார்த்துகொள்ளவும். க்ளுகோஸ் மாத்திரை
கையில் வைத்திருக்கவும். உடல் லோ கார்ப் டயட்டுக்கு பழகியபின் இன்சுலினின்
ஆட்டம் தானே குறைந்துவிடும்.
ஒரு பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இருக்கும் சொத்துக்கு கணக்கு
வழக்கில்லை. ஆனால் தினமும் கோயிலில் பிச்சை எடுத்து உண்டு வந்தான். காரணம்
அவன் பணம் எல்லாம் ஒரு வங்கியில் இருந்தது. வங்கியில் பணம் எடுக்கலாம் என
போனால் வாட்ச்மேன் அவனை பணத்தை எடுக்கவிடாமல் துரத்திவிடுகிறார்.
யார் அந்த பரிதாபத்துகுரிய கோடீஸ்வரன்?
நாம் தான்.
சுமார் 70 கிலோ எடையுள்ள ஒருவரை எடுத்துக்கொள்வோம். இது ஒன்றும் அதிக எடை அல்ல, பர்பெக்ட் எடை என கூட சொல்லலாம்.
இவரது உடலில் 1500 கலோரி கிளைகோஜெனாக தேங்கியுள்ளது. உடலுக்கு இந்த 1500
கலோரி கிளைகோஜெனை தொட விருப்பமே இருப்பதில்லை. காரணம் அது எமெர்ஜென்சிக்கு
என சேமித்து வைத்துள்ள பணம்.
அடுத்ததாக நம் உடலின் செல்களுக்குள்
எட்டு கிலோ புரதம் (சுமார் 25,000 கலோரி) உள்ளது. இது கிஸான் விகாஸ்
பத்ராவில் உள்ல பணம் போல. இதை உடல் எடுக்கவே எடுக்காது. எடுக்க உடல்
அனுமதிக்கவும் அனுமதிக்காது. எடுக்க ரொம்ப சிரம்படவேண்டும் என
வைத்துக்கொள்ளுங்கள்.
ஆக மீதமிருப்பது கொழுப்பு மட்டுமே....எழுபது
கிலோ ஒல்லியான நபர் உடலில் சுமார் 15 கிலோ கொழுப்பு இருக்கும். இது
முழுக்க, முழுக்க அன்றாட தேவைகளுக்கு வேண்டும் என்ற நோக்கில் உடலால் கரண்ட்
அக்கவுண்டில் போடபப்ட்ட பணமே. இதில் சுமார் 150,000 கலோரிகள் உள்ளன.
நமக்கு ஒரு நாளைக்கு தேவை 2000 கலோரி மட்டுமே. கணக்கு போட்டுபாருங்க, அப்ப
எத்தனை மாதத்துக்கு தேவையான கலோரியை நாம் வைத்துள்ளோம் என்று
இதில்
கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இவர் ஒல்லியான 70 கிலோ நபர் என்பதே. இதே
குண்டான நபர் என்றால் அவர் உடலில் பல லட்சம் கொழுப்பு கலோரிகள் கரண்ட்
அக்கவுண்டில் எடுக்க தயாராக காத்திருக்கும்.
ஆனால் இன்சுலின் எனும் வாட்ச்மேன் அதை எடுக்க விடாமல் தடுத்துவிடுகிறார்.
சர்க்கரை அதிகமுள்ள தானிய உணவுகளை உண்டால் உடல் கொழுப்பு ஸ்டோரேஜ்
மோடுக்கு சென்றுவிடும். அதன்பின் செல்கள் தாம் தேக்கி வைத்திருக்கும்
கொழுப்பை எரிக்காது. கிளஒகோஜெனையும் தொடாது. புரதத்தையும் எரிக்க முடியாது.
வேறு வழி என்ன? பசி, அகோரபசி தான். பசியைத்தூண்டி நம்மை மேலும் உணவை
சாப்பிட்டு எனெர்ஜியை அடைய தூண்டி பட்டினியில் இருந்து உடல் தப்புகிறது.
ஆனால் அப்படி சபபிடும் உணவும் சர்க்கரை நிரம்பிய உணவாக இருந்தால் இந்த
ப்ராசஸ் மீன்டும் ரிபீட் ஆகிறது
ஆக வங்கியில் பல லட்சம் காலரிகள் நமக்காக காத்திருந்தும் அதை எடுக்க முடியாமல் வாட்ச்மேன்
தடுத்துவிடுகிறார்.
இன்சுலினை வெளியே வராமல் தடுத்தால் வங்கிக்குள் எளிதில் செல்லலாம்.
கேஷியர் நாம் விரும்பும் அளவு பணத்தை கொடுத்துக்கொண்டே இருப்பார். நாம்
அடுத்த சில மாதங்கள் லீவு போட்டுவிட்டு, வேலைக்கே போகாமல் ஜாலியாக
வங்கியில் இருக்கும் பணத்தை செலவு செய்யலாம்.
நார்வேயில் 175 கிலோ
எடை இருந்த நோயாளி ஒருவர் ஒரு வருடம் வரை எதுவுமே உண்ணாமல் இருந்து உடல்
இளைத்தார். அவரது இன்சுலினின் ஆட்டம் அடங்கி உடல் கெடொசிஸுக்கு சென்றவுடன்
உடல் தான் தேக்கி வைத்த கொழுப்பை ஜாலியாக எரித்துக்கொண்டே இருந்தது. ஒரு
வருடம் எரித்து முடித்தபின்னரே அவர் மீண்டும் உணவை உண்டார்.
ஆக இன்சுலினின் ஆட்டத்தால் நாமெல்லாம் மாடிவீட்டு ஏழையாக இருக்கிறோம்.
டயபடிஸ் ஏன் வருகிறது என்பதற்கான விளக்கம் எளிமையானது.
நாம் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனும் நிலையை அடைந்தவுடன் டயபடிஸ் நம்மை வந்தடைகிறது.
நம் உணவில் நாள் தவறாமல் சர்க்கரை சத்து சேர, சேர இன்சுலினின் தேவையும்
அதிகமாகிறது. இன்சுலின் நம் உணவில் உள்ள சர்க்கரையை கொழுப்பாக மாற்றி நம்
உடலில் சேகரிக்கும்படி செல்களுக்கு கட்டளை பிறப்பிக்கிறது. உடலால் 2 நாள்
தேவைக்கு மேலான குளுகோசை சேமிக்க முடியாது. ஆனால் ஏராளமான அளவு கொழுப்பை
உடலால் சேர்க்க இயலும். ஆனால் தினமும் இன்சுலின் பிறப்பிக்கும் இந்த
உத்தரவுக்கு கட்டுபடும் நம் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ்
எனும் நிலையை அடைகிறது. இந்த சூழலில் இன்சுலினின் கட்டளையை ஏற்று
சர்க்கரையை கொழுப்பாக்க உடல் மறுக்கிறது. உடலில் சர்க்கரை அளவு
அதிகரிக்கிறது.
உடலை சொல்பேச்சு கேட்க வைக்க நம் பேன்க்ரியாஸ்
மேலும் அதிகமான அளவில் இன்சுலினை சுரக்கிறது. ஒரு கட்டத்தில் தன்னால் இயன்ற
அளவு அதிகபட்ச இன்சுலினை பென்க்ரியாஸ் சுரக்கிறது. ஆனால் அந்த அளவு அதிக
இன்சுலினயும் எதிர்க்கும் ஆற்ரலை உடல் பெறுகிறது. அதனால் நாம் செயற்கையாக
ஊசிமூலம் இன்சுலினை ஏற்றும் நிலைக்கு ஆளாகிறோம்.
உணவில் உள்ள சர்க்கரை அளவை குறைத்தால் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் மிக குறைந்துவிடும். டயபடிஸ் வரும் வாய்ப்பும் குறையும்.
குண்டாக ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் 13 பெண்கள் ஆய்வுக்கு
தேர்ந்தெடுக்கபட்டனர். இரு பிரிவுகளாக பிரிக்கபட்டனர். ஒரு பிரிவு நம்
மருத்துவர்கள் பைந்துரைக்கும் குறைந்த கொழுப்பு உணவை உட்கொண்டது. இன்னொரு
பிரிவு குறைந்த சர்க்கரைசத்து நிரம்பிய உணவை உட்கொண்டது. இரு குழுவினரும்
ஒரு நாளைக்கு 500 காலரி மாத்திரமே உண்ண பணிக்கபட்டனர். 1 மாதம் முழுக்க
இப்படி முக்கால் பட்டினி டயட்டை அவர்கள் மேற்கொண்டனர்.
1 மாதம் கழித்து முடிவுகள் ஒப்பிடப்பட்டன.
உயர்கொழுப்பு உணவை உண்ட பெண்களின் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அளவு குறைந்த
கொழுப்பு சத்து நிரம்பிய உனவை உண்ட பெண்களைன் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அளவை
விட குறைந்தது கண்டுபிடிக்கபட்டது. அதாவது உயர்கொழுப்பு, குறைந்த சர்க்கரை
சத்து நிரம்பிய உணவு 1 மாதத்தில் அதை உண்ட பெண்களின் உடலின் இருந்த
இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைத்தது. ஆக வெறும் ஒரே மாதத்தில் இந்த
பெண்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை ஜீரணம் செய்ய அவர்களுக்கு குறைந்த
இன்சுலினே போதும் என்ற நிலை உருவானது.
இன்னும் பல ஆய்வுகளை எழுதலாம்.
ஆனால் அவற்றின் முடிவுகள் பெரிதும் மாறுபடுவது இல்லை.
சர்க்கரை சத்து உள்ள உணவுகள் கெடுதல். இயற்கையான கொழுப்பு நிரம்பிய உணவுகள் உடலுக்கு நன்மையளிப்பவை.
இதை தான் பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஏன் இன்னும் டயபடிஸ்
பேஷன்டுகளுக்கு சர்க்கரைசத்து நிரம்பிய உணவுகள் மருத்துவர்களால்
பரிந்துரைக்கபடுகின்றன?
அமெரிக்க டயபடிஸ் அசோசியேஷன் உண்மையில்
சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையை குணமாக்க ஆலோசனை கூறுகிறதா அல்லது
அவர்களை நிரந்தரமாக சர்க்கரை நோயிலேயே இருக்க வைக்க ஆலோசனை கூறுகிறதா
என்பது பலசமயம் பிடிபடுவது இல்லை.
உதாரணமாக அந்த சங்கம் கூறுவது
“உங்கள் உடல் சர்க்கரையை குளுகோசாக எளிதில் மாற்றிவிடும்
உடலில் உள்ல குளுகோஸ் லெவெலை விரைவில் ஏற்றும் சக்தி படைத்தது கார்போஹைட்ரேட் நிரம்பிய உணவுதான்
எத்தனைகெத்தனை அதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடுகிறீர்களோ அத்த்னைக்கு அத்தனை உங்கள் உடலில் சர்க்கரை லெவெல் ஏறும்
நீங்கள் அதிகம் உண்னவேன்டிய உணவுகள் கார்போஹைட்ரேட் நிரம்பிய ரொட்டி, அரிசி, பாஸ்டா போன்ற உணவுகளே..”
'எதாவது புரிகிறதா?
எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
சர்க்கரை உண்பதால் சர்க்கரை நோய் வரும் என சொல்லிவிட்டு சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை நிரம்பிய உணவுகளை பரிந்துரைப்பது ஏன்?