Showing posts with label Paleo Diet Protocol. Show all posts
Showing posts with label Paleo Diet Protocol. Show all posts

Monday, February 20, 2017

Paleo Blood Test Protocol - பேலியோ உணவுமுறைக்கு முன்பாக எடுக்கவேண்டிய ரத்தப் பரிசோதனை பாக்கேஜ்.

  பேலியோ உணவுமுறைக்கு முன்பாக ரத்தப் பரிசோதனைகள் எடுக்கவேண்டியது கட்டாயம்.
அது ஏன் கட்டாயம் என்று ஏற்கனவே பலமுறை விளக்கி இருந்தாலும், தினமும் குழுவில் புதியவர்கள் இணைவதால் அடிக்கடி இதைப் பற்றி எடுத்துச் சொல்லிப் புரியவைப்பது நம் கடமை.
திருப்பூரில் ஒரு பெண்மணி என்னிடம் இப்படிக் கேட்டார்.

"ஐ அம் பர்பெக்ட்லி ஆல்ரைட். நான் ஏன் இந்த டெஸ்ட் எடுக்கனும்? எனக்கு பீபி, சுகர், தைராய்டு எதுவும் இல்லை. நான் டெஸ்ட் எடுக்காம பேலியோ ட்ரை பண்ணக் கூடாதா?"
 
"ஓ தாராளமாக பேலியோ முயற்சிக்கலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்."

"சொல்லுங்க."

"பேலியோ உணவுமுறைக்கு மாறியபிறகு மறு நாளோ 3 மாதங்களோ கழித்து, யாரோ எதுவோ சொன்னார்கள் என்று ப்ளட் டெஸ்ட் எடுத்து, ஏதேனும் அதில் கூடக் குறைய இருந்தால், 'ஈஸ் திஸ் பிகாஸ் ஆஃப் பேலியோ அன்ட் ஹைபேட்?' என்று கேட்கக் கூடாது. அப்படியே உங்களுக்குள்ளாகவே வைத்துக்கொள்ளவேண்டும், அதற்கும் பேலியோவுக்கும் சம்ப்ந்தமே இல்லை ஓக்கேயா?" என்று கேட்டேன்.
அவர் புரிந்துகொண்டார். அதாவது பேலியோவுக்கு முன்பாக தனக்கு ஒன்றுமே இல்லை என்று நம்புபவரின் நம்பிக்கை பேலியோவிற்குப் பிறகு பொய்த்துப்போய் டெஸ்ட் எடுக்கச் சொல்கிறது. நம்பிக்கைக்கு டெஸ்ட் தரவுகள் இல்லாமல் அவரால் நம்மிடம் கேள்வி ஏதும் கேட்க முடியாது. ஆயிரக்கணக்கான டெஸ்ட் ரிப்போர்ட்களை நாங்கள் பார்த்தவகையில் 30% மக்களுக்கு முதல் முறையாக நாங்கள் சொல்லித்தான் டயபடிக், ஃபேட்டி லிவர், தைராய்டு, விட்டமின் டி குறைபாடு, ஹார்மோன் குறைபாடுகள், கிட்னி பிரச்னைகள் தெரிந்தது. இதில் மருத்துவர்களும் உண்டு என்பது கூடுதல் தகவல். ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே இவற்றை அறிய முடியும். அந்த ரிப்போர்டை வைத்துக்கொண்டு நாங்கள் ஆப்பரேஷனோ, தொடுசிகிச்சையோ, அக்குமர்மமோ செய்வதில்லை. உங்களுக்கு ரிப்போர்ட்படி இந்தக் குறைபாடு இருக்கிறது. உங்கள் குடும்ப மருத்துவரிடம் இந்த ரிப்போர்ட்டைக் காட்டி ஆலோசனை பெறவும் என்று சொல்லி அனுப்புகிறோம். அஷ்டே.

சரி, இனி ரத்தப் பரிசோனை பற்றி சில விவரங்கள்.

மூன்று முக்கிய பரிசோதனைக் கூடங்கள் நம் குழுவிற்காக குறைந்த செலவில் ரத்தப் பரிசோதனைகள் செய்து தருகிறார்கள். இதில் பல டெஸ்ட்கள் பல விலைகளில் சொல்லப்படுவதால். எந்த டெஸ்டை பேலியோவிற்கு முன்பாக செய்வது என்ற குழப்பம் நிலவுகிறது. அதைப் போக்கி உங்களுக்கு ஏற்ற பரிசோதனைகள் பரிந்துரைக்கிறோம். கவனமாக குறித்துக்கொள்ளவும்.

உங்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீங்கள் முதன் முதலாக பேலியோ உணவுமுறைக்கு வருவதற்கு முன்பாக முழு டெஸ்ட்கள் + அப்டமன் ஸ்கேன் அடங்கிய பாக்கேஜில் உள்ள டெஸ்ட்களை செய்துகொள்வது நல்லது.

முழு டெஸ்ட் பாக்கேஜ்கள் + அப்டமன் ஸ்கான் யாருக்கு?

01. இதுவரை இதுபோன்ற ரத்தப் பரிசோதனைகள் வாழ்க்கையில் / சமீபத்தில் செய்யாதவர்கள்.
02. முழு பரிசோதனையில் உள்ள முக்கியமான டெஸ்ட்களான விட்டமின் டி, ஹார்மோன்கள், eGFR, Microalbumin Urea போன்ற டெஸ்ட்கள் விடுபட்டவர்கள்.
03. குடிப்பழக்கம், சிகரெட் பழக்கம் உள்ளவர்கள்.
04. அதிக உடல் எடை கொண்டவர்கள் 100+
05. உடல் எடை குறைக்க ஹெர்பாலைஃப், மாற்று மருத்துவங்கள், நாட்டு மருந்து, லேகியம், பவுடர் போன்றவைகள் உபயோகித்தவர்கள்.
06. ஆண்டுக்கணக்கில் டயபடிஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள்.
07. ஆண்டுக்கணக்கில் டயபடிஸால் பாதிக்கப்பட்டு சரியாக ஆங்கில மருந்து உட்கொள்ளாமல் மாற்று மருத்துவம், லேகியம், பவுடர் உண்டவர்கள்/ உண்ணாதவர்கள்.
08. குழந்தையின்மைக்காக உடல் பருமன் குறைக்க பேலியோ முயற்சிப்பவர்கள்.
09. சில பல வருடங்களுக்கு முன் செயின் ஸ்மோக்கர், சங்கிலி குடிகாரர்களாக இருந்து தற்பொழுது நல்ல பிள்ளையாக இருப்பவர்கள்.
10. வருடம் தவறாது இதுபோன்ற உடல் பரிசோதனை மேற்கொள்பவர்கள்.
11. முதன் முறையாக பேலியோ முயற்சிக்க வருபவர்கள் அனைவரும்.

 விலை குறைந்த டெஸ்ட்கள் யார் முயற்சிக்கலாம்?

01. பேலியோ பற்றி நன்கு அறிந்து 100 நாட்கள் கடந்தவர்கள்.
02. தன் உடல் நிலை பற்றி ஏற்கனவே முழு டெஸ்ட் எடுத்து அதன் மூலம் தெளிவாக அறிந்துகொண்டவர்கள்.
மேற்கூறியவர்கள் தங்கள் பிரச்னைக்கேற்ப டெஸ்ட் பாக்கேஜ்களை தேர்வுசெய்துகொள்ளலாம்.
இதுபோக கிட்னி பிரச்னை இருப்பவர்கள், தைராய்டு குறைபாடு இருப்பவர்கள் அவரவர் நிலைக்கேற்ப சில டெஸ்ட்களை மாதந்தோறும் எடுக்கவேண்டி இருக்கலாம். அது குறித்து உங்கள் மருத்துவர் முடிவு செய்வார்.
ஆரோக்கியம் நல்வாழ்வில் பேலியோவுக்கு முன்பாக கட்டாயம் எடுக்கவேண்டிய ரத்தப் பரிசோதனைகளை குழு பரிந்துரைக்கும் மூன்று லேப்களில் மட்டும்தான் எடுக்கவேண்டுமா?
அவசியம் இல்லை. நாங்கள் பரிந்துரைக்கும் முழுமையான பாக்கேஜ்களை நீங்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் பரிசோதனை நிலையங்களில் கூட எடுக்கலாம். ஆனால் விலை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது உங்களுக்கு வித்தியாசம் புரியவரும். மற்றபடி எங்களுக்குத் தேவை எக்ஸல் ஷீட்டில் முழுமையாக நிரப்பப்படும் எண்கள் மட்டுமே.

நீங்கள் பரிந்துரைக்கும் ரத்தப் பரிசோதனை லேப்களில் சிலவற்றில் ஸ்கான் இருக்கிறது, சிலவற்றில் இல்லை. என்ன செய்வது?

உங்களுக்கு உகந்த மூன்று லேபுகளிலோ அல்லது அருகாமையில் இருக்கும் லேபிலோ ரத்தப் பரிசோதனை செய்துகொண்டு அருகில் இருக்கும் பரிசோதனை நிலையத்தில் அப்டமன் ஸ்கேன் மட்டும் தனியாக செய்துகொள்ளலாம். எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள். முழு ரத்தப் பரிசோதனை மற்றும் அப்டமன் ஸ்கேன் பரிந்துரைக்கப்படும் லேப்களில் இருப்பின் அங்கேயே இரண்டையும் தள்ளுபடி விலையில் செய்துகொள்ளவும். அல்லது தள்ளுபடி விலையில் ரத்தப் பரிசோதனையும், அப்டமன் ஸ்கானை அருகாமையில் இருக்கும் நல்ல லேபிலும் செய்துகொள்ளலாம்.

நான் வெளிநாட்டில் வசிக்கிறேன். என்னால் இங்கு பரிந்துரைக்கப்படும் எல்லா டெஸ்ட்களையும் எடுக்க இயலாது. ஆனால் நான் பேலியோ முயற்சிக்க விரும்புகிறேன். நான் என்ன செய்வது?

 நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் ரத்தப் பரிசோதனை என்பது அவசியம். ஆனால் வெளிநாடுகளில் இந்தப் பரிசோதனைகள் செய்வது கடினம் மற்றும் மிக அதிக பொருட்செலவினை அளிப்பது என்பதால், நீங்கள் உங்கள் சுய ஆர்வத்தில் பிகினர்ஸ் பேலியோ துவங்கலாம். குறைந்தபட்சம் உங்கள் ரத்த சர்க்கரை அளவுகள், தைராய்டு, விட்டமின் டி, கொழுப்பு அளவுகளை அறிந்துகொண்டு பேலியோ முயற்சிப்பது நலம். இந்தியாவிற்கு வரும்பொழுது முழுமையான டெஸ்ட்கள் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

ரத்தப் பரிசோதனை எடுத்தபிறகு என்ன செய்யவேண்டும்?

பின் போஸ்டில் உள்ள இந்த இணைப்பிலிருந்து http://tiny.cc/paleoreport எக்ஸல் ஷீட்டை டவுன்லோடு செய்து அதில் உங்கள் பரிசோதனை ரிசல்ட்டில் உள்ள எண்களை சரியாக உள்ளிட்டு அதை ஒரு ஸ்க்ரீன் ஷாட் அல்லது தெளிவாக மொபைலில் புகைப்படம் எடுத்து குழுவில் அப்லோடு செய்து போஸ்ட் போட்டு தெளிவாக உங்கள் உடல் பிரச்னைகள், தற்பொழுது உண்ணும் மாத்திரை, மருந்துகள், எதற்காக இந்த பேலியோ உணவுமுறையை முயற்சிக்க விரும்புகிறீர்கள் போன்ற தகவல்களை சரியாக விவரித்துக் கேட்டால் உங்களுக்கான பேலியோ பரிந்துரை கிடைக்கும்.

என் குடும்பத்தில் 6 நபர்கள் இருக்கிறோம். நான் மட்டுமே பேலியோ முயற்சிக்க இருக்கிறேன். நான் மட்டும் ரத்தப் பரிசோதனை செய்தால் போதுமா?

பேலியோவுக்கு முன்பான ரத்தப் பரிசோதனைகள் என்பது பேலியோவால் நீங்கள் அடைந்த பலனை ஒப்பிட்டுப் பார்க்கவும், உங்கள் உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் பேலியோவால் குணமடைந்ததை உங்கள் மருத்துவர் ஒப்பிட்டுப் பார்த்து மருந்துகள் அளவைக் குறைக்கவும் பயன்படும்.
ஆனால், பேலியோவில் அல்லாத உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வருடம் ஒருமுறையாவது இதுபோன்ற ரத்தப் பரிசோதனைகளை நீங்கள் செய்வதின் மூலம், வருங்கால குறைபாடுகள், நோய்களை முன்னரே கண்டறிந்து காப்பாற்றிக்கொள்ள முடியும். நம் குழுவில் பரிந்துரைக்கப்படும் லேபுகளில் குறைந்த செலவில் பேலியோ பாக்கேஜையோ அல்லது, வெளியில் உள்ள லேபுகளில் குறைந்தபட்ச ரத்தக் கொழுப்பு, சர்க்கரை, தைராய்டு, விட்டமின் டி, லிவர், கிட்னி, ஹார்மோன் டெஸ்ட்களை அவரவர் பொருளாதார வசதி மற்றும் உடல்நலன் அடிப்படையில் எடுத்து மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

குழு தவிர்த்து வெளியே காசு கொடுத்து மருத்துவர்கள் அல்லாத பேலியோ அடிப்படை அறிவற்ற, ப்ளட் டெஸ்டே எடுக்காமல் மூன்று வேளையும் முட்டையும், கறியும், பாதாமும் தின்னச் சொல்லும் போலிகளிடம் அர்ஜன்ட் பேலியோவை நீங்கள் முயற்சித்து, ஒரிஜினல் டூப்ளிகேட் பேலியோ டயட் புத்தகங்கள் படித்து, அதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு எங்களிடம் கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்காமல் இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதேபோல பலமுறை குழு சார்பில் பேசி, முக்கிய ரத்தப் பரிசோதனைகளை சகாய விலையில் தருமாறு கோரிக்கை வைத்து புதிய பரிசோதனை நிலையங்களை நாங்கள் அறிமுகப்படுத்தினால் சிலர் டெஸ்ட் எடுக்கவேண்டும் என்று வீட்டுக்கு வரச்சொல்லிவிட்டு காலங்காலையில் ரத்தப் பரிசோதனை எடுக்க வருபவரிடம் இன்னிக்கு வேணாங்க, வடக்குல சூலம் அடுத்த மாசம் பார்க்கலாம் என்று திருப்பி அனுப்பும் பொறுப்பற்றத்தனமும் ரிப்போர்ட் செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்கு டெஸ்ட் எடுக்க விருப்பமில்லை என்றால் புக்கிங் செய்யவேண்டாம். புக்கிங் செய்துவிட்டால் டெஸ்ட் எடுத்துவிடுங்கள். உங்களின் பொறுப்பற்ற செயலால், டெஸ்ட் விலைகள் கூடி ஆர்வமுடையவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும். இதனால் வீட்டிற்கு வந்து டெஸ்ட் எடுப்பது நிறுத்தப்பட்டு நீங்கள் காலங்காலையில் காசு எடுத்துக்கொண்டு லேபில் நிற்கவேண்டிய நிலை வரலாம். ஒரு வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அதில் மேலும் தள்ளுபடியோ, புதிய வசதிகளோ பெற எங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
போலவே, சம்பந்தப்பட்ட லேபுகளின் சேவைகளில் ஏதேனும் குறை இருப்பின் நேரடியாக அவர்களைத் தொடர்புகொண்டு புகார் அளித்து நிவாரணம் பெறவும் வேண்டுகிறோம்.

 நன்றி.

Monday, November 21, 2016

பேலியோவில் உடல் எடை ஏற....


முக்கிய குறிப்பு : கீழே சொல்லுவது உடல் ஏற வேண்டும் என்பவர்களுக்கு மட்டும். சர்க்கரை குறைபாடு போன்ற எவ்வித உடல் உபாதைகள் இல்லாதோருக்கு மட்டும்.



பேலியோவை பெரும்பாலும் உடல் எடை குறைக்கதான் பயன்படுத்துகிறார்கள். ஒல்லியாக உள்ளவர்கள், எடை குறைவாக உள்ளவர்கள் பேலியோவில் எடை ஏற்றவும் நல்ல வாய்ப்பு உள்ளது. உடலில் கொழுப்பு சேராமல் தசை ஏற்ற வாய்ப்பு உள்ளது.
உங்கள் எடை ஏற வேண்டுமெனில்....
1. ஜிம் செல்லுங்கள். இது மிக முக்கியம். பயிற்சிகளை முறையாக கற்றுக் கொண்டு எடை தூக்கும் பயிற்சிகளை செய்யுங்கள். Squats போன்ற கால்களுக்கான பயிற்சி கண்டிப்பாக செய்யுங்கள். உங்கள் தசைகளுக்கு பயிற்சி கொடுக்கும் போது அவை காயப்பட்டு அவை மேன்மேலும் வலுவுடன் வளர ஆரம்பிக்கும். No Pain. No Gain.
2. நடை பயிற்சி, ஓட்டம் போன்றவை வாரம் ஒரு முறைக்கு மேல் வேண்டாம்.
3. ஒரு நாளைக்கு 250 மிலி முழு கொழுப்பு பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
4. 200 மிலி தயிர் தினசரி எடுத்துக் கொள்ளுங்கள்.
5. ஒரு வேளை கார்ப் உணவு எடுக்க வேண்டும். ஒர்க் அவுட் முடித்த பிறகுதான் ஒரு மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் கார்ப் உணவுகள் உருளைக் கிழங்கு 200 கிராம் அல்லது சக்கரை வள்ளிக் கிழங்கு 200 கிராம் அல்லது 200 கிராம் ஆப்பிள் அல்லது 200கி வாழைப்பழம்.
6. மற்ற வேளைகளில் புரதம் + கொழுப்பு அதிகம் நிறைந்த முட்டை, கோழி, மீன், சிகப்பு இறைச்சி போன்ற உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
7. இரவு உறங்கும் முன்பு 20 பாதாம் சாப்பிடுங்கள்.
மேலே உள்ள அனைத்தையும் செய்யுங்கள். எதையும் ஸ்கிப் செய்ய வேண்டாம். ஒரு மாத முடிவில் உங்கள் எடை அதிகரித்து இருக்கும்.
இவ்வாறு செய்யும் போது உடலில் அதிகம் கொழுப்பு சேராமல் தசை அதிகம் ஏறும். உடலில் கொழுப்பு அதிகம் சேர்வதாக தெரிந்தால் பாலை நிறுத்தி விடுங்கள்.

- Kathiran

Saturday, November 12, 2016

பீட் கவாஸ் புரோபயாட்டிக் டானிக்




புரோபயாட்டிக் உணவுகளில் பிரதானமாக நாம் அறிவது கெபிர் மட்டுமே. ஒவ்வோரு நாட்டிலும் பராம்பரியமான முறையில் பல புரோபயாட்டிக் உணவுகள் உள்ளன. இனி வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம். இப்பொழுது முதலில் பீட் கவாஸ் எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
பீட் கவாஸ் எளிதாக அதிகமான பொருட்கள் இல்லாமல் தயார் செய்யலாம். இது ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக உபயோகத்தில் உள்ளது. இதில் உடலுக்கு நன்மை தரும் புரோபயாட்டிக் உருவாகி நமது ஜூரண சக்தியை மேம்படுத்துகிறது. அத்துடன் நமது சிறுநீரகங்களுக்கும், ஈரலுக்கும் ஒரு டிடாக்ஸாக அமைகின்றது. சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் இதை அருந்தி பயன்கள் பெறலாம். ஐரோப்பியா நாடுகளில் கான்சர் தெரப்பியில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. அலர்ஜிகளுக்கும், chronic fatigue எனப்படும் நாள்பட்ட சோர்வு, ரசாயண அலர்ஜிகளுக்கும் நல்ல தீர்வாக அமைகின்றது.
டால்ஸ்டாய் பீட்கவாஸை தண்ணீரைவிட சிறந்தது என்றும், எவ்வாறு ரஷ்ய போர்வீரர்கள் காலரா தோன்றிய காலத்தில் தங்களது ராணுவ குடியிருப்பிகளிலிருந்து கவாஸை கொண்டு வந்து மாஸ்கோ தெருக்களில் மக்களை எவ்வாறு தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றினார்கள் என்று அழகாக வர்ணித்திருப்பார். பீட் கவாஸ் ஆயிரம் வருடங்களாக ரஷ்யா, போலன்ட், லாட்டிவியா, லித்துவானியா, பெலாரஸ், ஜார்ஜியா, கஜக்ஸ்தான், ஆர்மேனியா மற்றும் சீனாவிலும் பிரபலமாக உள்ளது. இன்றும் தெருக்களில் ஒரு ஆரோக்கியபானமாக விற்க்கப்படுகிறது.
இதில் உண்டாகும் புரோபயாட்டிக் பாக்டீரியாக்களின் மூலம் பயன்பெற இன்றும் பழமையான முறையில் கம்பு ரொட்டிகளை சேர்த்து செய்கிறார்கள். எளிமையான முறையில் கெபிர் வே சேர்த்து செய்வதால் கம்பு ரொட்டி நமக்கு தேவையில்லை.
இவ்வாறு உண்டாக்கும் பீட்கவாஸில் வைட்டமின்கள் B-1, B-6, மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், அமினோ ஆசிட்கள், லாக்டிக் ஆசிட் மற்றும் பேன்டோதெனேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் உள்ள என்சைம்கள், நலம் தரும் பாக்டீரியாக்கள் பீட்டாசயானின் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்சிட்ட்டாக மாறி இதய நோய்களுக்கும், கான்சருக்கும் மற்றும் தொற்று நோய்களுக்கு நல்ல பயன் தருகிறது.
பீட் கவாஸை இரண்டு முறைகளில் தயாரிக்கலாம். ஒன்று கெபிர் வே (whey) அல்லது சாதரண தயிரின் வேயுடன்.
கெபிர் வே எவ்வாறு தயார் செய்வது ?
கெபிர் அதிகமாக புளித்தால் கெபிர் தயிர் மேலேயும், வே கீழேயும் தங்கிவிடும். இதனை தனியாக பிரித்து உபயோகப்படுத்தலாம். அல்லது பனீர் தயாரிக்கும் போது எவ்வாறு தயிரிலிருந்து தண்ணீரை (வே) ஒரு துணியில் கட்டி வடிக்கிறமோ அந்த முறையில் கெபிர் தயிரையும் பிரிக்கலாம்.
எவ்வாறு பீட்ரூட் கவாஸ் தயார் செய்வது ?
தேவையான பொருட்கள்:
2,3 மூன்று ஆர்கானிக் பீட்ரூட்
கெபிர் அல்லது சாதாரண தயிர் வே - கால்கப்
கல் உப்பு அல்லது இந்துப்பு - 2 டீஸ்பூன்
ஒரு மேசன் ஜார்
ஸ்பிரிங் அல்லது பில்ட்டர் தண்ணீர் (குளோரின் இல்லாத தண்ணீராகிருக்க வேண்டும்)
கெபிர் வே இல்லையென்றால் கெபிர் ஸ்ட்டார்டர் கல்சரும் பயன்படுத்தலாம்
செய்முறை:
▪️ஆர்கானிக் பீட்ரூட்டை நன்றாக கழுவி அரை/ஒரு இன்ச் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சாதாரண பீட்ரூட்டாக இருந்தால் தலைபாகத்தை சிறிது அதிகமாகவும், அடிபாகத்தை சாதரணமாகவும் வெட்டி நீக்கிவிட்டு தோலை சீவி மேற்சொன்ன அளவில் நறுக்கிக்கொள்ளவும்.
▪️நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை ஜாரில் இட்டு, கெபிர் வே அல்லது ஒரு பேக்கட் கெபிர் ஸ்டார்ட்டர் கல்ச்சரையும், உப்பையும், தண்ணீரையும் சேர்க்கவும்.
நன்றாக கலக்கி ஜாரை நன்றாக காற்று புகாதவாறு அடைத்து வைக்கவும். குறைந்தது மூன்று நாட்கள் வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை திறந்து பூஞ்சை ஏற்படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.
▪️இப்பொழுது லாக்ட்டிக் ஆசிட்டால் பெர்மன்ட் ஆகி சிறிய குமிழிகள் நிறைந்துள்ளதை பார்க்கலாம்.
▪️நான்கு நாட்கள் முதல் ஒரு வாரம் கழித்து திறந்து வேறு ஒரு கண்ணாடி பாட்டிலில் தனியாக பிரித்து ஊற்றி பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும்.
▪️தினமும் காலையும் இரவும் 2-3 அவுன்ஸ் குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு எவ்வாறு செய்யலாம் ?
ஆப்பிள், ஆரஞ்ச், ஸ்ட்ராபெரி, கொய்யாப்பழம், பைனாப்பிள் போன்ற பழங்களை துண்டுகளாக்கி சேர்த்து செய்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.
▪️நமது உணவுமுறைகளுக்கு ஏற்ப எவ்வாறு செய்வது ?
இஞ்சி, எலுமிச்சை, சோம்பு, மல்லி, மாங்காய் இஞ்சி,ஏலக்காய், கிராம்பு, பட்டை என்று உங்களுக்கு பிடித்த மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களை சேர்த்து செய்யலாம். பீட்ரூட்டின் பச்சை வாசனை பிடிக்காதவர்களுக்கு இந்த முறையில் செய்யும்போது மேலும் மருத்துவ குணங்களுடன் சுவையையும் கூட்டும்.

குறிப்பு:
▪️வடிகட்டிய பீட் கவாஸ் கால்கப் எப்பொழுதும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த முறை தயாரிக்கும் போது கெபிர் வேக்கு பதிலாக இதையே சேர்த்துக்கொள்ளலாம்.
▪️பில்ட்டர் செய்த பிறகு மீதமுள்ள பீட்ரூட் துண்டுகளில் இராண்டாம் முறையும் பீட் கவாஸ் செய்யலாம். அல்லது இதை சலாட்டுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.
▪️நான் செய்த முறையில் வெறும் இஞ்சி மட்டுமே பீட்ரூட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளது.


Abdul Farook

Tuesday, November 8, 2016

புதியவர்கள் அதிகம் செய்யும் தவறுகள் என்ன?



01. அடிக்கடி சீட்டிங் என்று கண்ட சத்தில்லாத ருசி சார்ந்த உணவுகளை உண்பது.
02. குறைந்த நடைப்பயிற்சி செய்யாமல் தேமே என்று கொழுப்பு சாப்பிட்டு உட்கார்ந்து தெய்வமகள் அண்ணியாரைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவது.
03. சரியான அளவு நீர் அருந்தாதது.
04. விட்டமின் டிக்காக வெயிலில் நிற்காமல் நிறத்தைக் காக்க ஏசியிலேயே அமர்ந்திருப்பது. அல்லது நிழலிலேயே இருப்பது.
05. சரியான அளவுகளில் உண்ணாமல் குறைந்த கலொரி உணவுகளை எடுப்பது. குறிப்பாக சைவர்கள் காலை பட்டர் டீ, மதியம் பொரியல், இரவு கூட்டு என்று எடையைக் குறைக்கிறோம் என்று மஸிலை கரைத்துக்கொண்டிருப்பது.
06. சரியான அளவுகளில் ப்ரோட்டீன் எடுக்காமல் இந்தியன் தாத்தா கமலைப் போல ஆகிவிடுவது.
07. சைலண்ட்டாக சரக்கு, தம் என்று அடித்துக் கலக்கி ஹார்ட் அட்டாக் வந்து பேலியோ மீது பழி போடத் தயாராக இருப்பது.
08. பக்கம் பக்கமாக எழுதினாலும்.. சார் கொழுப்பு கூடிடுச்சின்னு ரிப்போர்ட் சொல்லுது உடனடியாக அதைக் குறைக்க வழி சொல்லுன்கள் என்று டர்ரியலாவது. கொழுப்பு சாப்பிட்டால் ஏன் கொழுப்பு கூடுகிறது என்பதை பேலியோ டயட் புத்தகத்தில் தேடிப் படிக்கவும்.
09. குறைந்த பட்ச கலோரி அளவான 1200 கலோரி உணவை பரிந்துரைத்தபடி எடுக்காது, குறைவாக எடுத்து அவதிப்படுவது.
10. காய்கறி, கீரைகளை முற்றிலும் புறக்கணித்து முக்கியமான காலைக்கடனை முக்கமுடியாது அவதிப்படுவது.
11. எங்களிடம் ஆலோசனை பெற்று, மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று ஒன்றுவிட்ட சித்தப்பா பையனிடமும் அதைக் காட்டி பிறகு இரண்டு இட்லி பாதாம் சட்னியுடன் பேலியோ துவங்கினேன் வயிறு வலிக்கிறது சீனியர்களே உதவுங்கள் என்று எங்களை அலறவைப்பது.
12. உண்பதோ சைவம், அதிலும் ஏகப்பட்ட உடல் உபாதைகளுடன் இருக்கும் குறைந்தபட்ச தேர்வில் அது டேஸ்ட் புடிக்காது இது ஸ்மெல் புடிக்காது என்று 10ல் 9 உணவுகளை விலக்கிவிட்டு பேலியோ அல்லாத பேலியோ என்ற ஒன்றைப் பரிந்துரைக்கக் கேட்பது.

Shankar Ji

Monday, November 7, 2016

நாம் பயப்பட வேண்டிய ஒரே கொலஸ்டிரால்!!

Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
Lp(a) என்ற டெஸ்டை என்றாவது செய்திருக்கிரீர்களா? என்னைப் பொருத்தவரை இதுவே உங்கள் கொலஸ்டிரால் பிரச்சினையை அறிய உதவும் மிக முக்கியமான டெஸ்ட்.
இதய ரத்தக் குழாய் செல்களின் இடுக்கில் இந்த Lp(a) எனப்படும் அபாய கொலஸ்டிரால் அடைத்து, அந்த செல்களுக்கு செல்ல வேண்டிய சத்துகளை அடைய விடாமல் தடுக்கிறது. இதனால் அந்த செல்கள் பாதித்து இன்ப்லமேஷன் எனும் உள்காயம் ஏற்பட்டு, அதில் கொழுப்பு சேர்ந்து மாரடைப்பு வருகிறது.
உங்களுக்கு ஏன் இந்த மிக முக்கியமான டெஸ்ட் பற்றி யாரும் சொல்லவில்லை? மருந்து கம்பெனிகள் உங்களுக்கு அதை சொல்ல விடவில்லை. ஏனென்றால் மாரடைப்பு வராமல் இருக்க உங்களுக்கு தரப்படும் ஸ்டாடினால் (Atorvastatin, Rosuvastatin), இந்த Lp(a) வை குறைக்க முடியாது.
அதிக மாவுச்சத்து (Carbohydrates) உள்ள உணவை உட்கொண்டு அதனால் அதிகம் சுரக்கும் இன்சுலினால், இந்த Lp(a) அதிகமாகிறது என்று ஒரு தரப்பு வாதம். இது முழுக்க ஜெனிடிக் என்பது இன்னொரு வாதம் (உங்கள் பரம்பரையில் கெட்ட பழக்கம் இல்லாத அல்பாயுசில் மாரடைப்பு வந்து இறந்தவர்களுக்கு காரணி இந்த Lp(a) வாக இருக்கலாம்).
பிகு: போன வாரம், ஒரு 22 வயது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பெண்ணிடம் Lp (a) அதிகமாக இருப்பதைக் கண்டேன்.

கொலஸ்டிராலை கெடுத்து மாரடைப்பை வரவழைப்பது எப்படி?


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

LDL கொலஸ்டிரால் உடம்பில் உள்ள முப்பது டிரில்லியன் செல்களுக்கும் சில விட்டமின்களை கொண்டு சேர்ப்பதுடன், அந்த செல்களின் சுவர் பலப்பட கொலஸ்ட்ராலை தருகிறது. மற்றும் பல ஹார்மோன்கள் உருவாக, கொலஸ்டிராலையும் கொண்டு சேர்க்கிறது.
இந்த கொலஸ்டிராலை கெடுத்தால் (ஆக்சிடைஸ்) செய்தால் அது Oxidized LDL (Ox LDL) ஆகி விடும். இந்த ox LDL நேராக இதய ரத்தக் குழாய்களில் படிந்து மாரடைப்பை உருவாக்கும்.
உடலுக்கு அதிக நன்மை செய்யும் LDLலை, OxLDL எனப்படும் விஷமாக மாற்றுவது எப்படி?
1. பிராசஸ் செய்யப்பட்டு கொழுப்பை குறைத்த பாக்கெட் பால் (Low fat milk-4%, 2%, etc.,) மற்றும் பால் பவுடர் சாப்பிடுவதன் மூலம் Ox LDL உடலில் அதிகமாகிறது.
2. எந்த எண்ணையை பொரிக்க பயன்படுத்தினாலும் அந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதிக Ox LDL கிடைக்கிறது (பொரிப்பது-பூரி, போண்டா போல் எண்ணையில் போட்டு எடுக்கும் அனைத்தும்)
3. அளவிற்கு அதிகமான சூட்டில் சமையல் செய்தல் Ox LDL அளவை அதிகப்படுத்தும்
4. முறையான உணவை சாப்பிட்டாலும் உடலில் இன்பலமேஷன் எனப்படும் உள்காயம் இருந்தால் LDLஐ Ox LDL ஆக மாற்றும்.
பின் குறிப்பு: ஸ்டாடின் (Atorvastatin, Rosuvastatin) மருந்துகளால் Ox LDL எனப்படும் உயிர்கொல்லி கொலஸ்டிராலை குறைக்க முடியாது. நல்லது செய்யும் சாதா LDLஐ மட்டுமே குறைக்க முடியும்.

டாக்டர்கள் ஏன் இன்னமும் ஸ்டாட்டின் பரிந்துரைக்கிறார்கள்?




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore 
மேற்கு நாடுகளில் தான் அலோபதி தோன்றியது. அதை தான் இன்று மாடர்ன் மெடிசின் என உலகமே கொண்டாடுகிறது. விஞ்சானம் மூலம் பலப் புதிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தி பலரைக் காப்பாற்றும் அளவு சக்தி படைத்தது எங்கள் துறை. 

ஆனால் நாங்களும் சில பைத்தியக்காரத்தனமான, சுத்தமாக வியாதியை குணப்படுத்தாத சில வைத்தியமுறைகள் செய்திருக்கிறோம். உதாரணம், கத்தியை வைத்து நரம்பைக் கிழித்து ரத்தத்தை வெளியேற்றுவது. இன்னொரு வகை, அட்டைப் பூச்சிகளை பேஷன்ட் மேல் போட்டு ரத்தத்தை உறிஞ்ச வைப்பது. இதை அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனுக்கு தொண்டை வலிக்காக செய்யப் போய், கிட்டத்தட்ட அவர் சாவின் விளிம்பிற்கே சென்று விட்டார்.

இந்த ரத்தம் வடித்தல், அட்டைப் பூச்சி ட்ரீட்மென்ட் எல்லாம் தவறு, பிரயோஜனப்படாது, ஆபத்து என நானூறு வருடங்களுக்கு முன்பே சில மருத்துவர்கள் சொன்னாலும், அறிவியல் ஆதாரமில்லை என மற்ற மருத்துவர்கள் ஒதுக்கினார்கள். அப்புறம் ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தான் இந்த முறைகள் தவறு என அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

அந்த அட்டைப்பூச்சி மருத்துவம் போல் இன்னொன்று தான், கொலஸ்டிராலை குறைப்பதற்கு ஸ்டாடின் (Atorvastatin, Rosuvastatin) மருந்துகளைக் கொடுப்பது. 

முகப்பரு இருந்தால் வருங்காலத்தில் சர்க்கரை வியாதி வருமா??? வரலாம்....


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore.
டீனேஜ் பருவத்தில், நம் எல்லோருக்கும் இன்சுலின் அதிகமாக சுரக்கிறது. இந்த இன்சுலின் நாம் உண்ணும் உணவில் இருந்து புரதத்தையும், கொழுப்பையும் உடலில் தேக்கி, அந்தப் பருவத்தில் உடலை வளர வைக்கிறது. வளர்ச்சிக்கு தேவையான குரோத் ஹார்மோனும் அப்போது அதிகம் சுரக்கிறது. அதனாலேயே டீனேஜ் பருவத்தில், டக்கென குட்டிஸ்கள் உயரத்திலும் எடையிலும் பெரியவர்களாகிறார்கள்.
அந்த சமயத்தில் நாம் அவர்களுக்கு என்ன கொடுக்கிறோம்? அரிசி, கோதுமை, பருப்பு போன்ற மாவுச்சத்துகள், சர்க்கரை, கூல்டிரிங்க்ஸ் எனும் சர்க்கரை மாவுச்சத்து உணவுகள், அதிக அளவில் பால். இப்படி கொடுப்பதால் இன்சுலின் மற்றும் IGF (insulin like growth factor) அதிகம் சுரக்க வேண்டியதாகி விடுகிறது. டீனேஜ் பருவத்தில் இயல்பாகவே அதிகம் இருக்கும் செக்ஸ் ஹார்மோன்கள், இன்சுலின் அதிகரிக்கும் போது, மேலும் அதிகரித்து தோலில் அதிக எண்ணைப் பசையை சுரந்து, பரு உண்டாகிறது.
கம்மி கார்ப் (மாவுசத்து), அதிக நல்ல கொழுப்பு (முட்டை, வெண்ணை, இறைச்சி) எடுப்பவர்களுக்கு டீனேஜ் பருவத்தில் கூட பரு அவ்வளவாக வருவதில்லை.
இன்சுலின் அதிகமானால் என்னாகும்? அதன் பெயரே இன்சுலின் ரெசிஸ்டன்ஸ். செல்கள், இன்சுலின் சொல்வதைக் கேட்காது. ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அதிகரித்து கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை வியாதி வரும்.
பெரியவர்களுக்கும் பரு வரும். இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகமானால் வரும் பாலி சிஸ்டிக் ஓவரி பெண்களுக்கு பரு இருக்கும்.
தோல், மனிதனின் கண்ணாடியாகும். உள்ளே நடப்பதை வெளியே சொல்லும் உறுப்பே தோல். தவறான உணவுப் பழக்கத்தால் வரப் போகும் சர்க்கரை வியாதியை முன்கூட்டியே தோல் நமக்கு சொல்கிறது.
இதற்கு கார்ப் உணவுகளை கம்மி செய்து முட்டை, இறைச்சி, வெண்ணை போன்றவற்றை அதிகப் படுத்தினாலே போதும். பருவும் குறைந்துவிடும், சர்க்கரை வியாதியும் வராது. தோல் நிபுணர்கள் இதற்கு வெளியிலிருந்து வைத்தியம் செய்கிறார்கள். இன்பெக்ஷன் ஆன பருவிற்கு ஆண்டிபயாடிக், சோப்புகள் போன்றவை உடையும் அணையை உள்ளிருந்து செப்பனிடாமல், வெளியே பூச்சு வேலை செய்வது போலாகும்.

இதைப்பற்றிய அருமையான ஆராய்ச்சி பேப்பர் ஒரு இந்தியர் வெளியிட்டுருக்கிறார். அதன் லிங்க் 

சர்க்கரை வியாதி பரம்பரை வியாதியா?


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore.

"எனக்கு வயது 28. கொஞ்சம் குண்டாக இருப்பேன். அவ்ளோ தான். அடுத்த மாசம் கல்யாணம்".
இவரால் என்னென்ன பிரச்சினைகள் வருகிறது என பார்ப்போம்.
இவர் குண்டாக இருப்பதால், இவருக்கு இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஆரம்பித்திருக்கும் (கொழுப்பு சாப்பிட வேண்டிய உடம்புக்கு அதிக மாவுச்சத்து கொடுப்பதால் இன்சுலின் வேலை செய்யாமல் போவது. இன்சுலின் வேலை செய்யாததால் க்ளுக்கோஸ் ரத்தத்தில் அதிகமாக ஆரம்பிக்கும்- சுகருக்கு முந்தைய நிலை). அவரின் மனைவி நார்மல் என வைத்துக் கொள்வோம்.
இவரின் இன்சுலின் ரெசிஸ்டன்சால் அவர் மரபணு லைட்டாக பாதித்திருக்கும். அந்த மரபணுவை குழந்தைக்கு கொடுத்திருப்பார். தாயின் வயிற்றில் வளரும் குழந்தை, அம்மா சாப்பிடும் அரிசி, கோதுமையில் இருந்து வரும் குளுக்கோசில் திக்கு முக்கு ஆயிருக்கும். அப்பவே லைட்டாக இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும்.
இந்தக் குழந்தை பிறந்து வளரும் போது தாய் தந்தை சாப்பிடும் அதே கார்ப் உணவை சாப்பிட்டு டீனேஜ் பருவத்தில் இவனுக்கும் உடல் எடை மற்றும் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஆரம்பிக்கிறது.
அவன் குண்டாவதைப் பார்த்து தாய் என்ன செய்கிறாள்? உணவில் கொழுப்பைக் குறைக்கிறாள். அவன் திருமண வயதில் prediabetic ஆகிறான்.
அடுத்து அவன் மனைவி கர்ப்பமாகிறாள்.........
சர்க்கரை வியாதி பரம்பரை வியாதியல்ல. இந்த மாதிரி உணவுமுறைகளால் வருவது. உணவை மாற்றினால் சர்க்கரை வியாதி போய் விடும்.
Disclaimer: சொந்தக் கருத்து.

நான் என்ன தப்பு செஞ்சேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி?


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore 



நேரடியாகவும் மறைமுகமாகவும் நாம் சாப்பிடும் வெள்ளை கலரிலான சர்க்கரையின் அளவு:

1750: வருடத்திற்கு இரண்டு கிலோ ஒரு நபருக்கு
1850: வருடத்திற்கு பத்து கிலோ ஒரு நபருக்கு
1994: வருடத்திற்கு 60 கிலோ ஒரு நபருக்கு
1996: வருடத்திற்கு 80 கிலோ ஒரு நபருக்கு

வாழ்நாளில் நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு- 2 டன்.

அப்புறம் ஏன்யா நமக்கு இதெல்லாம் வராது:
1. சர்க்கரை வியாதி
2. பிரஷர்
3. இதயவியாதி
4. உடற்பருமன்
5. அதிக கொலஸ்டிரால்
6. fatty liver

Sunday, November 6, 2016

நாம் ஏன் குண்டாகிறோம்? எப்படி இளைப்பது?




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
அதிக கார்ப் (மாவுச்சத்து-இட்லி/தோசை/சப்பாத்தி/சிறுதானியம்/போண்டா/etc.,)சாப்பிட்டால் அதிக இன்சுலின் சுரக்கும். இன்சுலின் ஒரு பஞ்ச கால ஹார்மோன். மனிதனுக்கு பூமியில் உணவு கிடைக்காத நேரத்தில், கையில் கிடைக்கும் உணவை உடலில் சேர்த்து வைப்பதற்காக பரிணாம வளர்ச்சியில் இது தோன்றியது.
கார்ப் உணவுகள் அதிகமாக சாப்பிட்டால், இன்சுலின் அவற்றை எடுத்து கிளைக்கோஜனாகவும் கொழுப்பாகவும் சேமித்து வைத்து நம்மை குண்டாக்கும். நாம் சக்திக்காக உண்ணும் உணவை, இன்சுலின் இப்படி திசைதிருப்பவதால், உடல் இயங்க சக்தி கிடைக்காது. அதனால் உணவு சாபிட்ட சில மணி நேரங்களில் மறுபடி பசி எடுக்கிறது. நாம் மறுபடியும் கார்ப் உணவுகள் எடுக்கிறோம்-->இன்சுலின் சுரக்கிறது-->குண்டாகிறோம்-->உடல் இயங்க சக்தி இல்லை-->மறுபடி பசி. இந்த சுழற்சியில் சிக்கி குண்டாகி, அத்துடன் சில சமயம் பிரஷர், சுகரை வரவழைக்கிறோம்.
நல்ல கொழுப்பு (பேலியோ டயட்) சாப்பிட்டால் வயிறு உடனே நிரம்புகிறது. இன்சுலின் சுரப்பதில்லை. சாப்பிட்ட உணவில் இருந்து உடலுக்கு சக்தி பெறப்படுகிறது. இன்னும் சக்தி தேவைப்பட்டால் உடலில் இருக்கும் கொழுப்பு கரைகிறது. உடற்பருமன் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. சுகரும், பிரஷரும் தான்.

பேலியோவில் கொழுப்பு சாப்பிட்டும் டிரைகிளிசிரைட் குறைவது எப்படி?

 


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

கொழுப்பு சாப்பிடால் கொலஸ்டிரால் வரும் என 1970களில் பயமுறுத்தியதில் கொழுப்பை நீக்கி, அதிக மாவுச்சத்து உணவுகளான இட்லி, தோசை, சாதம், சப்பாத்திக்கு மாறினோம். எல்லோருக்கும் ரத்த கொழுப்பளவு குறைந்திருக்கிறதா? அல்லது கூடியிருக்கிறதா? உடனே செக் செய்து பாருங்கள். கூடியிருக்கலாம்.

ஆனால் அதிக கொழுப்பு நிரம்பிய பேலியோ எடுக்கும் போது டிரைகிளிசிரைட் குறைகிறது. எப்படி இந்த ஆச்சரியம் நிகழ்கிறது? நாம் மாவுச்சத்து அதிகம் உண்ணும் போது இன்சுலின் அதிகம் சுரக்கிறது. இன்சுலின் உணவில் உள்ள தேவைக்கதிகமான கார்புகளை டிரைகிளிசிரைட் எனும் கொழுப்பாக மாற்ற தூண்டுகிறது. டிரைகிளிசிரைட் அளவுகள் அதிகரிக்கின்றன. நாமும் தினமும் மூன்று வேளை கார்புகள் எடுத்து, கொழுப்பை அதிகரித்த வண்ணம் உள்ளோம்.

அதுவே கார்புகள் கம்மியாக (பேலியோ) எடுக்கும் போது க்ளுக்ககான் மற்றும் அட்னிரலின் அதிகரிக்கின்றன. இன்சுலின் சுரப்பு குறைகிறது. இதனால் கொழுப்பு செல்களில் கொழுப்பை உடைய வைக்கும் லைப்பேஸ் எனும் என்சைம் தூண்டப்பட்டு, சேர்ந்திருக்கும் கொழுப்பு கரைந்து சக்திக்காக எரிக்கப்படுகிறது. இன்சுலின் கம்மியாக சுரப்பதால் புதிதாக டிரைகிளிசிரைட் உறப்த்தியாகாது. டிரைகிளிசிரைட் உறபத்தி கம்மி மற்றும் அதன் எரிப்பு அதிகமென்பதால் இதன் அளவு கம்மியாகிறது. நாமும் இளைக்கிறோம்.

பேலியோவில் உணவில் எடுக்கும் அதிக டிரைகிளிசிரைட் என்னாகிறது? அவை நேராக ஈரலுக்கு செல்லாமல் கொழுப்பு செல்களுக்கு சென்று ஸ்டோர் செய்யப்படுகிறது. அதிக கொழுப்பு எடுத்தவுடன் பார்த்தால் டிரைகிளிசிரைட் அதிகமாக இருக்கும். ஆனால் அன்றே அவை எரிக்கப்பட்டு, ஸ்டோரில் உள்ள பழைய கொழுப்பும் எரிக்கப்பட்டு காலை உணவிற்கு முன் டெஸ்ட் எடுத்துப் பார்த்தால் கம்மியாக இருக்கும்.
இது தான் கொழுப்பை கொழுப்பால் எரிப்பது.

நம் முன்னோர்களில் நாம் சிம்பன்சிக்கு மிக நெருக்க சொந்தமாவோம். மற்ற அனைத்து வகை குரங்குகளும் சுத்த சைவம் அல்லது சிலது பூச்சிகளை உண்ணும். ஆனால் சிம்பன்சியின் உணவில் 5% மாமிசம் இருந்துள்ளது. தன் எல்லைக்குள் வேறு வகை குரங்கு வந்துவிட்டால், கூட்டமாக சிம்பன்சிகள் அந்தக் குரங்கை அடித்து சாப்பிட்டு விடும். மற்ற நேரங்களில் பழம் கொட்டைகள், இலைகள் என்று நாள் முழுக்க சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்.
இதன் வாரிசான Australopithecus africanus குரங்கு, சிம்பன்சியை விட நான்வெஜ் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டது.

அதன் பின் வந்த homo erectus மனிதன் கல்லால் செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்து மாமிசத்தை கிழித்து சாப்பிட ஆரம்பித்தான். அதன் பிறகு வந்த நியண்டர்தால் மனிதன் மிக சிறந்த வேட்டையன் ஆவான். மிக அதிக அளவில் மாமிசம் தின்றான். சிறிய அளவில் காய்கறிகள், கொட்டைகள் மற்றும் பழங்கள் தின்றான்.

அதன் பிறகு வந்த நாம் homo sapiens, நியண்டர்தால் மனிதனின் அதே உணவை உண்டோம். ஆனால் நியண்டர்தாலை விட கொஞ்சம் அதிகம் கார்ப் உணவுகள் உண்டோம். அதனால் நம் உடல் அதிக கொழுப்பு, மித அளவு புரதம், கம்மி கார்ப் என்ற நிலைக்கு செட்டானது.

சூழ்நிலை 1: அதிக கொழுப்பு, மிக கம்மி கார்புகள்: மனிதன் வேட்டைக்கு சென்று மாமிசம் கிடைத்த நாளில் அதிகம் அவற்றை உண்டான். அதில் உள்ள கொழுப்பு அவனுக்கு சக்தியளித்தது. மாமிசம் மட்டும் சாப்பிடும் போது மனித உடல், அதை சேமிக்காது. கொழுப்பை கீட்டோன் எனப்படும் சிறிய வகை கொழுப்பாக மாற்றி உடலின் பல செல்களுக்கும் அனுப்பி அவற்றை எரித்து விடும். இதனால் டிரைகிளிசிரிட் எனப்படும் ரத்த கொழுப்பின் அளவு குறையும். இப்படி எரிக்கும் போது கொழுப்பிலிருந்து கம்மி சக்தியே மனிதனுக்கு கிடைக்கும். அதனால் அவன் தினசரி வேலைகளுக்காக அதிக கொழுப்பு எரிகிறது. (மிருகங்கள் அதிகம் கிடைக்கும் நாளில்-->மாமிசம் மட்டும் உண்ணுதல்-->அதிக கலோரிகள் கிடைத்தாலும் உடம்பு அதை சேர்க்காமல் எரித்து விடுதல்).

சூழ்நிலை 1ன் வேதியியல்: அவன் கார்ப் கம்மியாக உண்பதால் கார்பிலிருந்து oxaloacetate கிடைக்காது(சாப்பிடும் கார்புகள் ரத்த செல்களுக்கும் மூளைக்கும் சக்தியளிக்க ஒதுக்கப்பட்டு விடும்). oxaloacetate இருந்தால் தான் கொழுப்பு அதிக சக்தி தரும் TCA cycle க்குள் செல்ல முடியும். oxaloacetate இல்லாததால், கொழுப்பு சக்தி கம்மியாக தரும் கீட்டோன்களாக மாறுகிறது. அதிகமான கொழுப்பு இப்படி செலவிடப்படுகிறது

சூழ்நிலை 2: அதுவே மாமிசம் கிடைக்காத பொழுது காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டைகள் உண்ணும் போது அவை சக்திக்காக எரிகின்றது. அதிகமாக உண்டால் அவை கொழுப்பாக மாறுகிறது. கம்மியாக உண்டால், உடலில் உள்ள கொழுப்பு எரியும். ஆனால் அதிகம் எரியாது.

சூழ்நிலை 2ன் வேதியியல்: கம்மியாக கார்ப் உண்ணும் போது உடலில் உள்ள கொழுப்பு எரிந்து சக்தி தரும். ஆனால் கம்மியான கார்பிலும் oxaloacetate கிடைத்து விடுவதால், கொழுப்பு TCA cycle வழியாக எரியும். கீட்டோன்களாக அல்ல. அதனால் கொஞ்சம் கொழுப்பிலிருந்தே அதிக சக்தி கிடைக்கும். உடல் பெரிதாக இளைக்காது.

சூழ்நிலை 3: சாப்பிடாமலேயே இருந்தால்:கொழுப்புகள் கீட்டோன்களாக கரையும். ஏனென்றால் oxaloacetate இல்லை. உடல் இளைக்கும்

சூழ்நிலை 4: தினமும் கார்புகள் மட்டுமே எடுத்தல்: முந்தைய போஸ்டில் சொன்னது போல, கார்புகள் மட்டுமே எடுத்தால் அவை லைட்டாக எரியும், மற்ற கார்புகள் கொழுப்பாக மாற்றப்படும், உடலில் உள்ள கொழுப்பு எரியவே எரியாது. காரணம்-அதிக இன்சுலின் அளவு.

மனிதன் மாமிசம் அதிகம் சாப்பிட்டான். கிடைக்காத நாளில் காய்கறிகள் பழங்கள் கொட்டைகள் சாப்பிட்டான். அதனால் அவன் உணவுமுறை அதிக கொழுப்பு, கம்மி கார்புகள் என்று பழகியது. அதுவே பேலியோ டயட். கொழுப்பை வேகமாக கீட்டோன் முறையில் எரிப்பதால் டிரைகிளிசிரைட் எனும் கொழுப்பு அளவு குறைகிறது

பேலியோ உணவுமுறை தவறா?



Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

நூறு வருடங்களுக்கு முன்பு டிபி எனப்படும் காசநோய்க்கு மருந்து கிடையாது. ஆனால் காலம் காலமாக டிபி நோயாளிகளுக்கு பேலியோ போன்ற உணவுமுறையே பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு காரணம், தானியங்களை ஓரங்கட்டுவதன் மூலம் உடலில் க்ளுக்கோஸ் அளவு கம்மியாகி, பாக்டிரியாக்களுக்கு ஊட்டம் கம்மியாகி அவை பல்கிப் பெருகுவது குறையுமென்பதால். பலர் நன்றாக குணமாகவும் செய்தார்கள்.

இதைப் பற்றி மேலும் அறிய விரும்பிய Weston A Price எனும் பல் மருத்துவர் உலகம் முழுக்க பல்வேறு பழங்குடி இனத்தவரிடம் ஆராய்ச்சி மேற்கொண்டு 1939ல் Nutrition and Physical Degeneration, A Comparison of Primitive and Modern Diets and Their Effects என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் பழங்குடியினர் அவர்களின் உணவை உண்ணும் போது தோன்றாத பல் சொத்தை, காசநோய், பிரசவத்தின் போது வரும் பிரச்சினைகள், பர்சனாலிட்டி பிரச்சினைகள், டிப்ரஷன் போன்றவை , இவர்கள் இன்றைய நவீன மனிதனின் உணவுகளை எடுக்க ஆரம்பிக்கும் போது தோன்றுவதை குறிபிட்டுள்ளார்.

1985ல் Boyd Eaton எனும் ஆராய்ச்சியாளர் எழுதிய Paleolithic Nutrition — A Consideration of Its Nature and Current Implications எனும் கட்டுரை பரவலான கவனத்தைப் பெற்றது.

ஒரு நூற்றாண்டிற்கு முன்பே பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆய்ந்தறிந்த சார்லஸ் டார்வின், அவர் புத்தகமான origin of species ல், "மனித உடல் மற்றும் உயிர் கற்காலத்திர்காக வடிவமைக்கப்பட்டவை. நவீன சூழல் மற்றும் உணவு பல்வேறு வியாதிகளை உருவாக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பல வருட ஆராய்ச்சிக்கு பின்னர் Loren Cordain என்ற ஆராய்ச்சியாளர் பேலியோ உணவுமுறை  எனும் நூலை எழுதினார். அதன் பின்னர் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகள் அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்டு, பேலியோஉணவுமுறை  பல வியாதிகளிடமிருந்து மனிதர்களை காப்பாற்ற வல்லது என நிருபிக்கப்பட்டது.

லேட்டாக விழித்துக் கொண்ட அமெரிக்க அரசு 2015ல் "சாட்சுரேட்டட் கொழுப்பு நிரம்பிய வெண்ணையும், முட்டையும் உடலுக்கு தீங்கல்ல, கொலஸ்டிரால் ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற எங்கள் கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்" என அறிவித்தார்கள்.

சர்க்கரை தீமையானது என்பது உலகமே ஒப்புக் கொண்ட ஒரு உண்மை. processed food, junk food, பொரித்த உணவுகள், கோலா பானங்கள், ஆல்கஹால், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை எல்லா டாக்டர்களும் சாப்பிடக்கூடாது என்றே அறிவுறுத்துகின்றனர்.

மேலே சொன்ன இரு விஷயங்களையும் இன்னொரு காண்செப்ட்டோடு இணைத்தால் அதுவே பேலியோ உணவுமுறை . அந்த கான்செப்ட் என்னவென்றால், உணவில் சேர்க்கப்படும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தின் அளவுகளை குறைத்தல்.

பல்வேறு ஆராய்ச்சிகள் மாவுச்சத்தை குறைத்துக் கொடுத்து செய்யப்பட்டதில் சுகர், பிரஷர், உடற்பருமன் போன்ற பல்வேறு வியாதிகள் குறைவதாக/நீங்குவதாக தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் உருவானது தான் தமிழ் பேலியோ உணவுமுறை . மூன்று வேளை நான்வெஜ் என்றெல்லாம் இதில் இல்லை. பேலியோவின் மூலப்பொருளான, கம்மி கார்ப், மித புரதம், அதிக சாட்சுரேட்டட் கொழுப்பு என்பதை மட்டுமே இதில் வலியுறுத்தப்படுகிறது. அதை சுத்த சைவமாகவும், முட்டை சேர்த்த சைவமாகவும் அல்லது அசைவமாகவும் மக்களே அவர்கள் கலாச்சாரத்திற்கேற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

ஆயிரக்கணக்கானவர்களுக்கு முழு ரத்த பரிசோதனையின் அடிப்படையில் இலவசமாக உணவுமுறை  வழங்கப்படுகிறது. அவர்கள் எடுக்கும் மருந்தகளை யாரும் நிறுத்த சொல்வதில்லை. வியாதிகள் குறையக் குறைய அவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரைப் பார்த்து மருந்துகளை குறைக்க/நிறுத்த மட்டுமே சொல்லப்படுகிறது. மற்றும் ஒவ்வொரு மூன்று மாதமும் அவர்கள் ஆரோக்கியம் எந்த அளவு முன்னேறியுள்ளது என்பதைக் காண ரத்த டெஸ்டுகள் பரிந்துரைக்கப் படுகிறது.

இன்றைய தேதியில் தமிழகம் முழுக்க 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த உணவுமுறையை  பின்பற்றி நலமாகி வருகிறார்கள். பல்வேறு கல்லூரிகளில் பேலியோ சம்பந்தமான கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஒரு உணவுமுறையை கற்றுக்கொடுப்பது என்பது தவறு என்று உலகின் எந்த சட்டத்திலும் சொல்லப்படவில்லை. மேலும் இலவசமாக அளிக்கப்படும் எந்தவொரு சேவையின் மேலும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வழியில்லை.

தனியொரு மனிதனின் முயற்சியால் பலரின் பிரச்சினைகள் இல்லாமல் போகும் போது, பலரின் பார்வை அங்கு விழும். புகழ் பெரும் போது பலரின் பொறாமை அவரை நோக்கி திரும்பும். அந்த பொறாமையின் வடிகாலாக சேறு வாரி இறைக்கப்படும். மேலே படும் சேற்றை துடைக்கக் கூட நேரம் இல்லாமல் சேவை செய்வோரை சேறு அல்ல, நெருப்பு கூட நெருங்காது.

இன்றைய தேதியில் தமிழகத்தில் பேலியோ பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. நாளை உலகளவில் சிறந்த ஆராய்ச்சி ஜர்னல்களில் அவை பிரசுரிக்கப்படும் போது, பரவலாக அனைத்து டாக்டர்களாலும் இந்த பேலியோ உணவுமுறை   பரிந்துரைக்கப்படும். அதுவரை தனியொரு மனிதனின் இந்த சேவை தொடரும். நாமும் அவருக்கு பக்கபலமாக இருப்போம்.

உணவியல் முரண்பாடுகள் - கொழுப்பு கெட்டதா, நல்லதா?




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemsitry), Coimbatore

ஒரு செயலை செய்தால் அதற்கு தக்க வினை இருக்கும். ஆனால் நாம் எதிர்பார்ப்பதற்கும், அறிவியிலால் சொல்லப்படுவதற்கும் எதிராக அந்தச்செயலுக்கு வினை நடந்தால், அது paradox எனப்படும். மருத்துவ உலகின் சில paradox களை பார்ப்போம்.

1. French paradox(பிரஞ்சு முரண்பாடு): 
அதிகம் சாட்சுரேட்டட் கொழுப்பு (நெய், முட்டை, இறைச்சி)எடுத்தால் மாரடைப்பு வரும் என மருத்துவ அறிவியல் சொல்கிறது. ஆனால் இவற்றை அதிகம் எடுக்கும் பிரஞ்சு மக்களுக்கு இதய வியாதி மிகக் குறைவான அளவில் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் யோசிக்கப்பட்டது (விட்டமின் k2 அவர்கள் உணவில் அதிகம், ஸ்டிரஸ் கம்மி, உணவில் ஆண்ட்டி ஆக்சிடண்டுகள் அதிகம் என). கடைசியில் சாட்சுரேட்டட் கொழுப்பு நல்லது, அதனால் தான் இதய வியாதி கம்மியாக வருகிறது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
2. Israeli Paradox : 
டாக்டர்கள் அறிவுறுத்தும் சன்பிளவர் ஆயில், சோயா ஆயில், சோள எண்ணெய்களை பயன்படுத்தி, டாக்டர்கள் எதிர்க்கும் சாட்சுரேட்டட் கொழுப்புகளை கம்மியாக எடுக்கும் இஸ்ரேலியர்களுக்கு மிக அதிக அளவில் மாரடைப்பு வந்தது. இன்று இந்த கமர்சியல் எண்ணெய்களில் அதிகம் உள்ள ஒமேகா 6 எனும் அமிலம் இதய வியாதியை கொண்டு வருவதாக கண்டுப்பிடித்துள்ளனர்.
3.Spanish Paradox
1976ல் திடீரென இதய வியாதி வருதல் குறைந்தது. என்ன காரணம் என்று ஆராய்ந்ததில் அந்த வருடம் தேசிய அளவில் இறைச்சி, பால் பொருட்கள், மீன் ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தது தெரிய வந்தது. மற்றும் கார்புகள் குறைவாக எடுக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
4. Japanese Paradox:
ஜப்பானியர்களுக்கு இதய வியாதி மற்ற நாட்டினரை விட குறைவு. ஆனால் கொலஸ்டிரால், பிரஷர், சர்க்கரை வியாதிகள் மற்ற நாட்டு அளவுகள் போல் இருக்கிறது. ஆராய்ந்து பார்த்ததில் அவர் அதிக கடலுணவு எடுப்பதே காரணம் என அறிந்தார்கள். இதயத்தை புண்ணாக்கும் ஒமேகா 6 (சூரியகாந்தி, ஆமணக்கு, சோள, தவிட்டு எண்ணெய்கள்) அமிலத்திலின் கெடுதலை, கடல்மீனில் இருக்கும் ஒமேகா 3 அமிலம் தடுக்க வல்லது.
5. masai paradox: 
கென்யா நாட்டின் மசாய் பழங்குடிகள் தினமும் பால் பொருட்கள், இறைச்சி என 3000கலோரிகள் உண்டும் அவர்கள் ஒல்லியாகவும், இருதயத்தில் அடைப்பு சுத்தமாக இல்லாமலும் இருந்திருக்கிறார்கள். கொலஸ்டிராலும் அவர்கள் ஒரு நாளைக்கு 600-2000Mg அளவு எடுக்கிறார்கள். ரெகுலர் உணவுகளில் இவ்வளவு கலோரிகள் எடுத்தால் உடற்பருமன், சுகர், பிரஷர், இதய வியாதி வந்துவிடும். ஆனால் கலோரிகள் எவ்வளவு என்பது முக்கியமல்ல, எதில் இருந்து கிடைக்கிறது என்பது தான் முக்கியம் என இவர்கள் உணர வைத்தார்கள்.
பேலியோ பலருக்கு முரணாக தோன்றலாம். ஆனால் பல வியாதிகளை இல்லாமல் ஆக்குகிறது.

பேலியோ உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு வருமா?




பேலியோ உணவுமுறை என்றதுமே, கிட்னி சட்னி ஆகும், சிறுநீரகம் சின்னாபின்னமாகும் போன்ற விமர்சனங்கள் மருத்துவர்களிடமும் சில பொது மக்களிடமும் எழுவது சகஜமாகிவிட்டது. ஊடகங்களும் இது போன்ற ஆதரமில்லாத தவறான ஆனால் சுவாரசியமான பரபரப்பு மிக்க செய்திகளை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்துகின்றன.
இதன் பின்னணி என்ன?
பேலியோ உணவுமுறை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கறியும் கோழியும் முட்டையும். இறைச்சி வகைகளில் புரதம்(protein) அதிகம் இருப்பதால் சில வருடங்களில் சிறுநீரக பாதிப்பு உண்டாகும் எனும் தவறான கருத்து நிலவுகிறது.
புரதம் என்றால் என்ன?
நம் உடலின் கட்டுமானத்திற்கு உதவும் building blocks தான் புரதம்.
Cytoskeleton எனப்படும் நமது செல்களின் அஸ்திவாரம் புரதம்.
actin, myosin எனப்படும் புரதங்கள் தான் நம் தசைகளின் முதுகெலும்பு.
நாம் உண்ணும் உணவை செரிமானம் ஆக்க உதவும் அனைத்து என்சைம்களும் புரதம் தான்.
இன்சுலின், பிட்யூட்டரி போன்ற அதிமுக்கிய ஹார்மோன்கள் புரதம் தான்.
நோய் எதிர்ப்பு சக்தி என்று கூறுகிறோமே, அந்த இம்யூனோக்ளோபுளின் புரதம் தான்.
இது மட்டுமில்லாமல் உடலில் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும் உதவும் பெரும்பாலான என்சைம்கள் புரதம் தான்.
சுருக்கமாகச் சொன்னால் புரதம் தான் நம் உடலின் உயிர்நாடி.
எவ்வளவு புரதம் ஒருநாளைக்கு தேவை?
ஒரு சராசரி மனிதனுக்கு அவனது உடல் எடையை போல 0.7 மடங்கு கிராம் புரதம் தேவை. அதாவது அவனது உடல் எடை 80 கிலோ இருந்தால், அவனுக்கு 56 கிராம் புரதம் தினசரி தேவை. பிரசவமாக இருக்கும் பெண்கள், தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், குழந்தைகளுக்கு(கிலோவுக்கு 1.5 கிராம் வரை) புரதம் இன்னும் அதிகம் தேவைப்படும். இதில் குறிப்பாக, இந்தியாவில் உள்ளது போன்று, பெரும்பாலும் சைவ உணவுகளில் இருந்து புரதம் எடுத்தால், அதன் குறைந்த தரம் காரணமாக இன்னும் அதிக புரதம்(ஒரு கிலோ எடைக்கு 1 கிராம்) தேவை.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அளவு குறைந்தபட்ச அளவு மட்டுமே. இதற்கு குறைந்து புரதம் எடுத்தால் தளர்வு, தசை இழப்பு, உடல் சோர்வு மற்றும் பல கோளாறுகள் உடலில் ஏற்படும்.
மிருகங்களின் புரதம் உடலுக்கு கெடுதலா?
இது தான் மிகப்பெரிய காமெடி.
புரதங்களின் மூலக்கூறுகள் அமினோ ஆசிட் எனப்படும். 20 வகை அமினோ ஆசிட்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான புரதங்கள் உடலில் தயார் செய்ய படுகின்றன. இதில் 9 வகை அமினோ ஆசிட்கள் உணவில் இருந்து மட்டும் தான் உடலுக்கு கிடைக்க செய்ய வேண்டும். இவை essential amino acids என்றழைக்கப்படும். இவை அனைத்தும் ஒரு சேர கிடைப்பது முட்டை மற்றும் மிருக புரதங்களில் மட்டும் தான். அரிசியிலோ பருப்பிலோ சுண்டலிலோ அனைத்து essential அமினோ ஆசிட்கள் கிட்டுவதில்லை. எனவே தான் பருப்பு சுண்டல் வகைகளை உணவியல் நிபுணர்கள் poor man's meat (ஏழையின் இறைச்சி) என்றழைப்பர். முட்டை புரதத்தை reference protein என்றழைப்பர். அதாவது மற்ற எல்லா உணவு வகைகளிலும் எவ்வளவு புரதம் இருக்கிறது, அதன் தரம் என்ன என்பதை முட்டையுடன் ஒப்பிட்டுத் தான் விளக்குவார்கள். நாம் பள்ளி செல்லும்போது எல்லா பாடத்திலும் ஒருவன் முதல் ரேங்க் வாங்குவானே, எல்லாரும் அவனை மாதிரி படிக்க வேண்டும் என்பார்களே, அவனைப் போல.
பேலியோ அதிக புரதம் எடுக்கும் உணவுமுறையா?
இது பொதுவாக மக்களிடமும் மருத்துவர்களிடமும் நிலவும் தவறான கருத்து.
பேலியோ என்பது
- குறைந்த மாவுச்சத்து (carbohydrate)
- அதிக கொழுப்பு (fat)
- தேவையான அளவு புரதம் (protein)
எடுக்கும் உணவுமுறை.
பொதுவாக இந்தியர்கள் உண்ணும் உணவில் இருப்பது 30-40 கிராம் புரதங்களே. அதுவும் தரம் குறைந்த தானிய புரதங்கள்.
பேலியோ உணவில் கிட்டத்தட்ட 80 முதல் 100 கிராம் வரை உயரிய மிருக புரதங்கள் கிடைக்கும். அனைத்து essential அமினோ ஆசிட்களும் கிட்டும். உடல் தேவையான அளவு புரதங்களைப் பெற்று செழிப்புடன் விளங்கும்.
புரதம் நல்லது சரி, அதிகபட்சம் தினம் எவ்வளவு எடுக்கலாம்?
ஒரு சராசரி மனிதன் ஒரு கிலோவுக்கு 2.5 கிராம் என்கிற அளவு வரை புரதங்கள் எடுக்கலாம். எந்த பிரச்னையும் இல்லை. அதாவது ஒரு 80 கிலோ எடையுள்ள மனிதன் தினசரி 200 கிராம் வரை எடுக்கலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது. இது ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல். ஆனால் நம் உடலால் அதிகபட்சம் ஜீரணம் செய்யக்கூடியது கிட்டத்தட்ட 375 கிராம் புரதம். (Theoretical maximum)

கவனிக்கவும்: பேலியோவில் பரிந்துரைப்பது 80-100 கிராம் புரதங்களே.
சரி, 56 கிராம் குறைந்தபட்ச தேவை எனும்போது, 150 கிராம் எடுத்தால் என்ன ஆகும்?
1. பாடி பில்டிங்கில், விளையாட்டு துறையில் உள்ளோர், அதிக புரதம் எடுக்கும்போது அந்த புரதங்கள் actin மற்றும் myosin ஆக மாறி, தசைகளை மெருகேற்றும்.
2. குறைந்த கார்போஹைட்ரேட் உணவுமுறையை பின்பற்றும் ஒரு சராசரி மனிதர் அதிக புரதங்கள் எடுத்தால், மிச்ச புரதங்கள், gluconeogenesis எனும் செயல் மூலம், உடலில் குளுக்கோஸ் ஆக மாறி, மூளை, சிவப்பு அணுக்கள், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கு சக்தி தரும்.
3. மிச்சக் கழிவுகள் யூரியாவாக மாறி, சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும்.
இந்த கடைசி பாயிண்டை தான் மக்கள் பிடித்துக்கொண்டு பேலியோவைத் தூற்றிய வண்ணம் உள்ளனர்.
உண்மையில் அதிக புரதம் எடுத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?
- ஆராய்ச்சிகளில், ஏற்கனவே சிறுநீரக செயலிழப்பு (renal failure) உள்ள மக்களுக்கு அளவுக்கு மீறிய புரதம் கொடுத்தால், தொந்தரவு அதிகமாகும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தான், சிறுநீரக கோளாறு ஏற்கனவே இருப்பவர்களுக்கு, 55 கிராமுக்கு கீழ் புரதம் எடுக்க வேண்டும் என்று நம் குழுவில் பரிந்துரைக்கப்படுகிறது.
(கவனிக்கவும்: renal failure உள்ளவர்களுக்கும் கூட 55 கிராம் புரதம் குறைந்தபட்சம் வேண்டும். ஜீரோ புரதம் பரிந்துரைப்பது இல்லை. உடலில் அத்துனை முக்கிய வேலை உள்ளது புரதத்திற்கு.)
- ஆனால், எந்த தொந்தரவும் இல்லாத, சிறுநீரகம் நன்றாக செயல்படும் மக்களுக்கு அதிக புரதம் கொடுத்தால் அவர்களுக்கு சிறுநீரக தொந்தரவு வரும் என்று கூறுவது முட்டாள்தனம். அதற்கு எந்த ஒரு ஆராய்ச்சி அடிப்படையும் இல்லை.
- சிறுநீரகத்தின் முக்கிய வேலைகளுள் ஒன்று புரதம் ஜீரணமாகும்போது உருவாகும் nitrogenous கழிவுகளை வெளியேற்றுவதுதான். அதனால் தான் இந்த சந்தேகங்கள் வருகின்றன.
- உடலில் புரதங்களை ஜீரணம் செய்ய ஒரு எல்லை இருக்கிறது. பல ஆராய்ச்சிகளின் மூலம், அது மொத்த உணவின் 35 சதவீதம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தனை புரதம் உண்பது சாத்தியம் அல்ல. அதனைக் கட்டுப்படுத்த மூளையில் பல்வேறு செயல்பாடுகள் உள்ளன.


https://www.ncbi.nlm.nih.gov/pubmed/22319049


- அளவுக்கு விஞ்சிய புரதங்கள் எடுக்கும்போது சிறுநீரகத்தில் சில மாற்றங்கள் நிகழ்வது சில ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

http://www.sciencedirect.com/science/article/pii/B9780123919342000138

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/10578207

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3602135/


- இந்த மாற்றங்கள் யாதெனில்
*glomerular filtration rate (GFR) எனப்படும் சிறுநீரகத்தின் வடிகட்டும் வேகம் அதிகம் ஆகிறது.
*glomeruli எனப்படும் சிறுநீரகத்தின் அடிப்படை யூனிட்கள் அளவில் பெரியதாகின்றன.
- இந்த மாற்றங்களை hyperfiltration என்பார்கள். இவற்றை, ஆரோக்கியமான சிறுநீரகத்தின் adaptive changes (தேவைக்கேற்றார் போல் செயல்திறனை மாற்றி அமைத்து கொள்ளும் தன்மை) என்பார்கள்.

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1262767/


அதாவது, மரம் வெட்டுபவனை விட ஓவியனுக்கு கை நேர்த்தி அதிகம் உள்ளதே, அது போல.
- இத்தகைய adaptive changes பிரசவமாக இருப்பவர்க்கும், ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தவருக்கும் சாதாரணமாக நடப்பதுண்டு. உதாரணத்திற்கு, ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தவருக்கு, இன்னொரு சிறுநீரகம் கொஞ்சம் அதிக வேலை செய்யும். GFR அதிகமாக இருக்கும். பிரசவமாக இருப்பவர்க்கு 50% கூடுதல் வேலைப்பளு சிறுநீரகத்திற்கு இருக்கும். ஆனால், ஒரு போதும் அது பாதிப்படையாது.
http://journals.plos.org/plosone/article?id=10.1371%2Fjournal.pone.0097656



இந்த மிக உயரிய systematic review ஆராய்ச்சியில், அதிக புரதம் எடுப்பது gfr, urea, uric acid போன்றவற்றை சிறிது அதிகம் அடையச் செய்தாலும், அது சிறுநீரகத்தின் தேவைக்கேற்றார் போல் செயல்திறனை மாற்றி அமைத்து கொள்ளும் தன்மை தான். இதற்கு மருத்துவ ரீதியில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கத் தேவையில்லை என்று முடிவுரை கூறியுள்ளார்கள்.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3386674/



இந்த ஆராய்ச்சியில் அத்தகைய சிறு மாற்றங்களும் அதிக புரதம் எடுக்கும் யாருக்கும் நிகழவில்லை என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

http://www.sciencedirect.com/science/article/pii/B9780123919342000138



இந்த ஆராய்ச்சிக்கட்டுரையில், அதிக புரதம் எடுப்பது பற்றிய எல்லா ஆராய்ச்சிகளையும் ஒப்பீடு செய்து இறுதியாக ஒரு முடிவை எட்டியுள்ளார்கள். அதாவது, மேலே குறிப்பிட்டுள்ளது போல சிறு சிறு மாற்றங்கள் புரதம் அதிகம் எடுக்கும்போது நடந்தாலும், அவை சாதாரண adaptive மாற்றங்களே. அது பற்றி எந்த ஒரு தயக்கமும் தேவை இல்லை. ஆனால், நாம் பொதுவாக எடுக்கும் அதிக மாவுச்சத்து உணவுகளே, நீரிழிவு நோய் போன்ற கொடிய நோய்களை வரவழைத்து, diabetic nephropathy எனும் நீரிழிவினால் ஏற்படும் சிறுநீரக செயழிலப்பை அதிகப்படுத்தி, வருடம் ஒன்றிற்கு பல்லாயிரக்கணக்கான மரணங்களை நிகழ்த்துகின்றன என்கிறார்கள்.
இது மட்டும் இல்லாமல், பேலியோ போன்றதொரு குறைந்த மாவுச்சத்து, அதிக கொழுப்பு, தேவையான அளவு நல்ல புரதம் எடுக்கும் உணவுமுறையில், diabetic nephropathy எனும் நீரிழிவினால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு நோய் ஆரம்ப கட்டத்தில் இருந்தால், அது பூர்த்தி குணமடையவும் நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. சிலருக்கு கீட்டோஜெனிக் பேலியோ டயட் மூலம், ஆரம்பக்கட்ட diabetic nephropathy சரியாகி பழைய நல்ல நிலைமைக்கு சிறுநீரகம் திரும்பிவிட்டது என்றும் case ரிப்போர்ட்கள் உள்ளன.


http://journals.plos.org/plosone/article?id=10.1371%2Fjournal.pone.0018604

http://nutritionandmetabolism.biomedcentral.com/articles/10.1186/1743-7075-3-23


கவனிக்கவும்: சிறுநீரக கோளாறுகளுக்கு டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களில் கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதத்திற்கு மூல காரணம் diabetes(நீரிழிவு நோய்) மற்றும் hypertension(உயர் இரத்த அழுத்தம்). இவற்றை குணமாக்கவோ, ஏற்கனவே ஏற்பட்ட சிறுநீரக கோளாறை சரி செய்யவோ, தற்போது எந்த ஒரு மருத்துவமோ மருந்துகளோ இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். டயாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.
மறுபடியும் முதல் கேள்விக்கே வருவோம்.
பேலியோ உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு வருமா?
1. பேலியோ உணவு முறையால் சிறுநீரக பாதிப்பு வரும் என்று நினைப்பது அரை வேற்காட்டுத்தனமான ஆதாரம் அடிப்படைகளற்ற குற்றச்சாட்டு.
2. வேண்டுமானால், பேலியோ உணவுமுறை உங்களைப் பல எதிர்கால சிறுநீரக பாதிப்புகளில் இருந்து காப்பாற்றும். உங்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் அழுத்தத்தில் இருந்து விடுதலை அளிப்பதன் மூலம் உங்கள் சிறுநீரகங்களை செயலிழப்பில் இருந்தும், உங்களை டயாலிசிஸில் இருந்தும், மாற்று சிறுநீரகங்களுக்குக் காத்துக் கிடக்கும் கொடிய நிலைமையில் இருந்தும் காப்பாற்றும்.
எனவே, இல்லாத ஒரு பிரச்சனைக்கு பயந்து மாவுச்சத்து உணவு உண்டு, உங்களின் சிறுநீரகங்களை நீரிழிவு நோய்க்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் பலி கொடுக்க வேண்டுமா?
அல்லது பேலியோ உணவு முறை பின்பற்றி, உங்கள் சிறுநீரகங்களை பொன் போல பாதுகாத்துக்கொள்ள வேண்டுமா?
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!!

- Dr. Arunkumar, MBBS, MD(Pediatrics),  Erode.

குழந்தைகளுக்கு வரும் காக்கைவலிப்பு: தீர்வு என்ன?



காக்கைவலிப்பு என பொதுவாக அழைக்கபட்டாலும் இதில் பல வகைகள் உண்டு. வலிப்பு ஏன் வருகிறது என நமக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தெரியாது. ஆனால் இதற்கான தீர்வு பண்டைய கிரேக்கர், ரோமானியர் காலத்திலேயே ஓரளவுக்கு கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் 1920ல் தான் இதற்கு தீர்வு கண்டுபிடிக்கப்பட்டது. தீர்வு கண்டுபிடிக்கபட்டிருந்தாலும், மருத்துவர்களுக்கு தெரிந்திருந்தாலும் அதன்பின் ஏனோ அது மக்களை சென்று சேரவே இல்லை. இப்புதிரான வரலாற்றை சற்று ஆராய்வோம்.
காக்கை வலிப்பு உள்ளவர்கள் விரதம் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு வலிப்பு வருவதில்லை என்பதை பண்டைய கிரேக்கர்கள் கண்டுபிடித்தார்கள்...எத்தனை நாள் சாப்பிடாமல் இருக்கிறார்களோ, அத்தனை நாளும் அவர்களுக்கு வலிப்பு வருவதில்லை. சாப்பிட ஆரம்பித்ததும் வலிப்பு மீண்டும் வர துவங்கியது. அதனால் உணவில் உள்ள ஏதோ ஒன்றுதான் இதை உருவாக்கவேண்டும் என்பதை அன்றைய மக்கள் அறிந்திருந்தார்கள்.
நிற்க:::அக்காலத்தில் பெப்ஸி,கோக், மெக்டானல்ட்ஸ், எதுவுமே இல்லை....முழுக்க கைகுத்தல் அரிசி, கோதுமை, ஆர்கானிக் காய்களையே அன்று உண்டார்கள்...ஆனால் இதை எல்லாம் உண்ண ஆரம்பித்ததும் மீண்டும் வலிப்பு வந்தது. நிறுத்தினால் வரவில்லை


பைபிளில் வலிப்பு உள்ள ஒருவனை ஏசுவின் முன்னால் கொண்டுவருகிறார்கள்..ஏசு அவனுக்கு பரிந்துரைப்பது உபவாசத்தை!!!!!
இந்த புதிர் விடுபட்டது 1920களில்...அன்று தான் தற்செயலாக காக்கை வலிப்பு உள்ளவர்களுக்கு "லாங் செயின் டிரைகிளிசரைடு டயட்டில்" (long chain triglyceride diet) போட்டால் அவர்களுக்கு வலிப்பு பெருமளவில் நின்றுவிடுவதாக கண்டறிந்தார்கள்..10- 15% பேருக்கு இதனால் முழுமையாக வலிப்பு நின்றே விட்டது. மீதி பேருக்கு 50 முதல் 75% வரை வலிப்பு வரும் விகிதம் குறைந்தது
லாங் செயின் டிரைகிளிசரைடு டயட் என்றால் என்ன?
லாங் செயின் டிரைகிளிசரைடு என்பது ஒரு வகை ஸ்பெஷல் உறைகொழுப்பு...இது உள்ள உணவுகள் ஆடு, மாடு, பன்றி போன்ற சிகப்பிறைச்சிகள்...தேங்காயில் உள்ளது மீடியம் செயின் டிரைகிளிசரைடு. பட்டரில் உள்ளது ஷார்ட் செயின் டிரைகிளிசரைஅடு
ஆக வெறும் இறைச்சியை மட்டும் உண்டு வருகையில் காக்கை வலிப்பு நின்றது கண்டறியபட்டது...இதனால் உலகபுகழ் பெற்ற ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் காக்கை வலிப்பு வார்டில் ஸ்Pஎஷலாக கெடொஜெனிக் டயட் வார்டு ஒன்றை துவக்கினார்கள். எந்த மருந்தாலும் நிற்காத வலிப்பு நோய் உள்ள குழந்தைகளை இந்த வார்டில் போடுவார்கள். மிக, மிக ஸ்ட்ரிக்டாக குழந்தைக்கு இறைச்சி மட்டுமே வழங்கபடும்..இறைச்சியை உண்ன பற்கள் இல்லாத குழந்தைகளுக்கு பார்முலா வடிவில் இறைச்சி வழங்கபட்டது. பச்சை குழந்தைகளும் கெடொசிஸ்ல் போனபின் அவர்களுக்கு வலிப்பு நின்றது
இன்றுவரை கெடொசிசுக்கு ஒப்பான காக்கைவலிப்பு மருந்து எதுவும் கிடையாது. எந்த மருந்தாலும் நிற்காத வலிப்பு இதனால் நிற்கும் என மருத்துவர்களுக்கு தெரியும். ஆனால் டயட்டின் கடுமை, குழந்தைகள் அதை பின்பற்ற கடினமாக இருப்பது போன்ற காரணத்தால் இந்த தீர்வை மெதுவாக விட்டுவிட்டு வேறு மருந்துகள், மாத்திரைகளுக்கு மாறிவிட்டார்கள். மக்களும் மருந்து சபபிடுகிறோமே என சொல்லி குழந்தைகளுக்கு வேறு எந்த கட்டுபாடும் விதிக்கவில்லை...ஆக வலிப்புக்கு நிவாரணமே இல்லாமல் இருக்கிறது
2012ல் தான் வலிப்புக்கான காரணத்தை விளக்கும் முக்கிய ஆய்வறிக்கை ஒன்று ஹார்வர்டு மெடிக்கல் பல்கலைகழகத்தில் பதிப்பிக்கபட்டது. இதன்படி வலிப்பு வருவதற்கான காரணமும், கெடொஜெனிக் டயட் அதை எப்படி தீர்க்கிறது என்பதையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது
காக்கை வலிப்பு என்பது ஒரு மூளை நரம்பியல் பிரச்சனை.நம் மூளை நரம்பில் பிசிஎல் 2 என்ற வகை புரதம் ஒன்று உண்டு. இதுதான் மூளைக்கு செல்லும் க்ளுகோஸ் அளவுகளை கட்டுக்குள் வைக்கும் புரதம். இது பாதிப்படைகையில் அல்லது சரியாக வேலை செய்யாமல் போகையில் மூளை நியூரான்களில் எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தது போன்ற அதிர்ச்சி உருவாகிறது. மயக்கம், மூளை உறுப்புகள் மேல் கட்டுபாட்டை இழத்தல் எல்லாமே உருவாகி வலிப்பு ஏற்படுகிறது
க்ளுகோஸை கட்டுபடுத்தும் இந்த நியூரானுக்கு அந்த வேலையை கொடுக்காமல் விட்டால், அதாவது உடலின் எரிபொருளை சுகரிலிருந்து கொழுப்பாக மாற்றினால் மூளை க்ளுகோஸுக்கு பதில் கிடோனில் இயங்க துவங்கும். கிடோனில் மூளை இயங்குகையில் இந்த நியுரான் மிக அழகாக வேலை செய்கிறது. வலிப்புகள் பெருமளவு நின்றுவிடுகின்றன , பலருக்கு சுத்தமாக வருவதே இல்லை
குழந்தைகளுக்கு 90:10 என்ற விகிதத்தில் காலரிகளில் கொழுப்பும், புரதமும் இருக்கவேண்டும் என்ற விகிதத்தில் லாங் செயின் டிரைகிளிசரைடு ஆசிட் கெடொஜெனிக் டயட் வழங்கபடுகிறது. இந்த 90:10 விகிதம் பொதுவான 75:25 விகிதத்தை விட மிக கடுமையானது..75:25ல் மீன், கோழி எல்லாம் கூட சற்று சேர்க்கலாம். 90:10ல் முழுக்க போர்க் மற்றும் பீஃப் தான்.
கவனிக்க:::இது குழந்தைகளுக்கு.
இத்தனை கடுமையான டயட்டை நாம் பின்பற்ற முடியுமா?
முடியாது..அதனால் தான் மருத்துவமனையில் ஸ்பெஷல் வார்டு அமைத்து குழந்தைகளை அட்மிட் செய்து பின்பற்ற வைக்கிறார்கள்.
ஆக வலிப்பு உள்ள குழந்தைகளுக்கு முதற்கண் குப்பை உணவுக்ள், கோதுமை, நிலக்கடலை, ஐஸ்க்ரீம் முதலியவற்றை நிறுத்தவேண்டும். அதன்பின் மெதுவாக தானியங்கள், ஐஸ்க்ரீம், கேக் எல்லாவற்றையும் நிறுத்தவெண்டும் அல்லது குறைக்கவேண்டும். மெதுவாக காலை உணவாக முட்டை, மதியமும் மாலையும் அதிக கொழுப்புள்ல சிகப்பு இறைச்சியும் பிராக்களி, முட்டைகோஸ் முதலிய வெகுசில காய்கறிகளுமே வழக்ஙபடவேண்டும். குழந்தைகளை டயட்டில் கட்டுபடுத்துவது மிக கடினம்..ஆனால் முடிந்தவரை அவர்களுக்கு சுகர், கார்ப் இல்லாத உணவை கொடுத்து வந்தால் வலிப்பின் தீவிரம் குறையும். அவர்கள் சற்று வளர்ந்தபின் முழுமையாக கெடொசிஸில் இறக்கினால் 2 வருடங்களில் வலிப்பு குணமாகிவிடும். ஏன் எனில் வலிப்பு இருப்பவர்களுக்கு 2 வருட காலகட்டமே கெடொசிஸ் பரிந்துரைக்கபடுகிறது. அதன்பின் சற்று கார்ப் சேர்த்துகொள்லலாம். ஆனால் தானியம் பக்கம் போககூடாது.
துவக்கநிலை சாம்பிள் காக்கை வலிப்பு டயட்:
காலை: 3 முட்டை ஆம்லட்..நெய்யில்
மதியம்: சிக்கன் லெக் பீஸ்...100 கிராம் பிராக்களி, லெட்டுஸுடன் அல்லது சிக்கன் சாலட்.
மாலை: 1 துண்டு சீஸ். 30 கிராம்
மாலை: சிகப்பிறைச்சி (ஆடு, பீஃப், போர்க்).
உடனே இதை துவக்கவேண்டும் என இல்லை...
முதல்படியில் குப்பை உணவுகளை நிறுத்தவேண்டும்...
மெதுவாக காலை உணவாக முட்டையை அறிமுகபடுத்தவேண்டும். சீரியல், ஓட்மீல்,மாகி நூடில்ஸ் குப்பைகளை தொலைத்து தலைமுழுகவேண்டும்
மதியம் சிக்கன் வைத்து கொடுக்கவேண்டும்...அரிசி கொஞ்சமாக கொடுக்கலாம்...கோதுமை வேண்டாம். சோயா, மக்கா சோளம் பக்கம் போகவேண்டாம்.
இரவு மீன் கொடுத்து கொஞ்சமாக சோறு கொடுக்கலாம். இப்படி படிப்படியாக இந்த டயட்டுக்கு கொண்டுவரவேண்டும். துவக்கத்தில் காய்கறிகளை கொடுத்து குப்பை உணவுகளை மறகடியுங்கள். முக்கியமாக பெரியவர்கள் குப்பை உணவுகளை சபபிடுவதை நிறுத்துங்கள். கோதுமை, சோயா வேண்டவே வேண்டாம். சமையல் எண்ணெயாக நெய் மட்டும் பயன்படுத்தவும்.

Neander Selvan

வைட்டமின் கே 2


வைட்டமின் கே பற்றி அறிவோம். ஆனால் வைட்டமின் கே வில் இருவகை உண்டு என்பதும் அதிகம் அறியப்படாத கே 2 உடல்நலனுக்கு மிக முக்கியம் எனவும் தெரிந்து வருகிறது. இன்னும் கே2வுக்கு ஆர்,டி.ஏ நிர்ணயிக்கப்டவில்லை. வைட்டமின் மாத்திரைகள் கூட வெளீயாகவில்லை.
இந்த இடத்தில் ஒரு சிறுகுறிப்பு: எந்த வைட்டமினையும் மாத்திரை மூலம் அடைவது பலனற்றது. வைட்டமின்கள் ஒரு காம்போவாக தான் இயங்கும். உதாரணமாக பாலில் உள்ள வைட்டமின் ஏ, டீ, கால்ஷியம் முதலனாவற்றை எடுத்துக்கொள்வோம். ஏவும், டியும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள். இவைகளை நம் உடல் கிரகிக்க பால் கொழுப்பு அவசியம். பாலில் உள்ள கால்ஷியத்தை உடல் கிரகிக்க வைட்டமின் டி அவசியம். பாலில் உள்ள கால்ஷியம் எலும்புகளுக்கு சென்று சேர, கிட்னி, இதயம் முதலிய இடங்களில் டிபாசிட் ஆகாமல் இருக்க வைட்டமின் கே 2 அவசியம்.
ஆக பால் மூலம் இந்த மூலபொருட்களை அடைந்தால் நம் உடல் இந்த வைட்டமின், மினரல்களை சிறப்பான முறையில் கிரகிக்கும். வைட்டமின் மாத்திரை மூலம் சாப்பிட்டால் எந்த பலனும் இல்லை. மேலும் நம் உடல் கால்ஷியம் மாத்திரைகளில் உள்ள கால்ஷியத்தை சுத்தமாக பயன்படுத்திக்கொள்வது இல்லை. காரணம் கால்ஷியம் மாத்திரைகள் கல் சுண்ணாம்பால் தயாரிக்கபடுபவை. உடல் இவற்றை ஏற்றுகொள்வது இல்லை. அதனால் வைட்டமின் மாத்திரை சாப்பிட்டு கே 2 அடையலாம் என நினைப்பது தவறு.
கே 2 என்பது என்ன?
வைட்டமின் கே நம் ரத்தம் கட்டியாகாமல் தடுக்கும் மூலப்பொருள். கே 2 என்பது
1) நம் உடலில் கால்ஷியம் சரியான இடத்துக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும்
2) தவறான இடத்தில் கால்ஷியம் படிவதை தடுக்கும்.
உதாரணமா வைட்டமின் கே2 குறைபாடு உள்ளவர் அருந்தும் பால், தயிரில் உள்ள கால்ஷியம் எலும்புகளில் சென்று சேராமல் இதயகுழாய், கிட்னி ஆகிய இடங்களில் படிந்தால் கிட்னி கல், கிட்னி பழுது, மாரடைப்பு ஆகியவை நேரிடும். அத்துடன் கால்ஷியம் எலும்புகள், பற்களுக்கு சென்று சேராமல் அவை பலனீமமடையும்.இதயகுழாய் சுவர்களில் கால்ஷியம் படிவது மிக ஆபத்தானது. கே 2 குறைபாடால் இது நேர்கிறது. கே 2 எவ்வளவுக்கு எவ்வளவு உணவின் மூலம் கிடைக்கிறதோ அவ்வளவுகு அவ்வளவு நமக்கு நல்லது. அதுபோக மனித மூளையின்செயல்பாட்டுக்கு கே 2 அவசியம் தேவை. சொல்லபோனால் நம் உடலில் வைட்டமின் கே2 வை சேமிக்கும் இடமே மனித மூளைதான். கிட்டத்தட்ட 93% வைட்டமின் கே2 மூளையின் செல்களில் தான் சேமிக்கபடுகிறது
கே 2 எந்த உணவுகளின் மூலம் கிடைக்கிறது? தினம் எத்தனை மைக்ரோகிராம் அளவு தேவை?
தினம் 200 மைக்ரோகிராம் அளவு கே2 கிடைப்பது உத்தமம். குறைந்தது நூறு மைக்ரோகிராம் அளவாவது கிடைக்கவேண்டும். கே 2 வுக்கு உயர் எல்லை எதுவும் இல்லை.
100 கிராம் அளவு கீழ்க்கண்ட உணவுகளை உண்பதால் கிடைக்கும் கே 2 அளவுகள்:
நாட்டோ 1130 மைகி (ஜப்பானில் கிடைக்கும் ஃபெர்மெண்ட்டட் சோயாபீன்ஸ். ஒரு வித பாக்டிரியாவில் இது ஃபெர்மெண்ட் செய்யபடுவதால் ஏராளமான கே2 கிடைக்கிறது. டோஃபு, மீல்மேக்கரில் இது துளியும் இல்லை)
வாத்து ஈரல் 369
சீஸ்: 56 முதல் 76 வரை
நாட்டுக்கோழி முட்டை 32.
பண்ணைகோழி முட்டை 15.5
வெண்ணெய் 15
சிக்கன் லிவர் 14.1 (நாட்டுகோழி லிவரில் இன்னும் அதிகம்)
சிக்கன் 8.5
சவர்கிராட் எனும் புளீத்த கேபேஜ் 4.8
முழு பால் 1.0
கொழுப்பு எடுத்த பால்: பூஜ்யம்
கொழுப்பு எடுத்த லீன் சிக்கன், லீன் மாமிசம்: பூஜ்யம்
எக் ஒயிட்: 0.4
ஆக புல்மேயும் மாட்டு வெண்ணெய், சீஸ், சிக்கன், முட்டை முதலானவற்றை தினம் உண்பதால் இது உணவில் சேர்கிறது. சைவர்கள் அன்றாடம் வெண்ணெய் மற்றும் சீஸ் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். பனீரில் இருக்கா என தெரியவில்லை. நம் ஊர் பொருள் என்பதால் ஆய்வு நடத்தப்டவில்லை போல.

REF

Neander Selvan