Showing posts with label Plaeo. Show all posts
Showing posts with label Plaeo. Show all posts

Sunday, November 6, 2016

பேலியோவில் எப்படி சர்க்கரை வியாதி சரியாகிறது?





Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore.
கார்ப் எனப்படும் மாவுச்சத்து அதிகம் சாப்பிட்டால், இன்சுலின் அதிகம் சுரக்கும். அதிக இன்சுலின் சுரக்கும் போது, செல்கள் இன்சுலின் சொல்வதை கேட்காது. இதுவே இன்சுலின் எதிர்ப்பு நிலை. இன்சுலினின் முக்கிய வேலை, ரத்தத்தில் உள்ள க்ளுக்கோசை செல்களுக்கு உள்ளே அனுப்பவது. 

செல்கள் இன்சுலின் சொல்வதைக் கேட்காவிட்டால், ரத்த சர்க்கரை ஏறும். டயாபெடிஸ் வரும். இதிலிருந்து மீள்வது எப்படி?

கல்யாணமான புதிதில் கணவன் என்ன சொன்னாலும் மனைவி கேட்பாள். கொஞ்ச நாட்களுக்கு பிறகு கணவன் (இன்சுலின்) ஓவராக மனைவியை திட்டுவான். அப்போது கணவன் சொல்வதை மனைவி (செல்கள்)கேட்கமாட்டாள். குடும்பத்தில் பிரச்சினை (டயாபெடிஸ்) வரும்.

அதே கணவன் இரண்டு மாதங்களுக்கு ஃபாரின் போய்விட்டால், கணவன் மனைவி, இருவருமே ஏங்க ஆரம்பிப்பார்கள். கணவன் வந்த பின்பு கத்த மாட்டான், மனைவியும் அவன் சொல்வதைக் கேட்பாள்.

பேலியோ உணவுகள் இன்சுலின் உற்பத்தியை தூண்டாது. அதிக ரத்த இன்சுலின் அளவுகள் கட்டுக்குள் வரும். அப்போது செல்கள் இன்சுலின் சொல்வதைக் கேட்க ஆரம்பிக்கும். க்ளுக்கோஸ் செல்களுக்குள் நுழையும். ரத்த சர்க்கரை அளவுகள் நார்மலாகி, மருந்தே இல்லாமல் சர்க்கரை வியாதி கொஞ்சம் கொஞ்சமாக மறையும். 

பேலியோ உணவுமுறை தவறா?



Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

நூறு வருடங்களுக்கு முன்பு டிபி எனப்படும் காசநோய்க்கு மருந்து கிடையாது. ஆனால் காலம் காலமாக டிபி நோயாளிகளுக்கு பேலியோ போன்ற உணவுமுறையே பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு காரணம், தானியங்களை ஓரங்கட்டுவதன் மூலம் உடலில் க்ளுக்கோஸ் அளவு கம்மியாகி, பாக்டிரியாக்களுக்கு ஊட்டம் கம்மியாகி அவை பல்கிப் பெருகுவது குறையுமென்பதால். பலர் நன்றாக குணமாகவும் செய்தார்கள்.

இதைப் பற்றி மேலும் அறிய விரும்பிய Weston A Price எனும் பல் மருத்துவர் உலகம் முழுக்க பல்வேறு பழங்குடி இனத்தவரிடம் ஆராய்ச்சி மேற்கொண்டு 1939ல் Nutrition and Physical Degeneration, A Comparison of Primitive and Modern Diets and Their Effects என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் பழங்குடியினர் அவர்களின் உணவை உண்ணும் போது தோன்றாத பல் சொத்தை, காசநோய், பிரசவத்தின் போது வரும் பிரச்சினைகள், பர்சனாலிட்டி பிரச்சினைகள், டிப்ரஷன் போன்றவை , இவர்கள் இன்றைய நவீன மனிதனின் உணவுகளை எடுக்க ஆரம்பிக்கும் போது தோன்றுவதை குறிபிட்டுள்ளார்.

1985ல் Boyd Eaton எனும் ஆராய்ச்சியாளர் எழுதிய Paleolithic Nutrition — A Consideration of Its Nature and Current Implications எனும் கட்டுரை பரவலான கவனத்தைப் பெற்றது.

ஒரு நூற்றாண்டிற்கு முன்பே பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆய்ந்தறிந்த சார்லஸ் டார்வின், அவர் புத்தகமான origin of species ல், "மனித உடல் மற்றும் உயிர் கற்காலத்திர்காக வடிவமைக்கப்பட்டவை. நவீன சூழல் மற்றும் உணவு பல்வேறு வியாதிகளை உருவாக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பல வருட ஆராய்ச்சிக்கு பின்னர் Loren Cordain என்ற ஆராய்ச்சியாளர் பேலியோ உணவுமுறை  எனும் நூலை எழுதினார். அதன் பின்னர் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகள் அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்டு, பேலியோஉணவுமுறை  பல வியாதிகளிடமிருந்து மனிதர்களை காப்பாற்ற வல்லது என நிருபிக்கப்பட்டது.

லேட்டாக விழித்துக் கொண்ட அமெரிக்க அரசு 2015ல் "சாட்சுரேட்டட் கொழுப்பு நிரம்பிய வெண்ணையும், முட்டையும் உடலுக்கு தீங்கல்ல, கொலஸ்டிரால் ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற எங்கள் கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்" என அறிவித்தார்கள்.

சர்க்கரை தீமையானது என்பது உலகமே ஒப்புக் கொண்ட ஒரு உண்மை. processed food, junk food, பொரித்த உணவுகள், கோலா பானங்கள், ஆல்கஹால், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை எல்லா டாக்டர்களும் சாப்பிடக்கூடாது என்றே அறிவுறுத்துகின்றனர்.

மேலே சொன்ன இரு விஷயங்களையும் இன்னொரு காண்செப்ட்டோடு இணைத்தால் அதுவே பேலியோ உணவுமுறை . அந்த கான்செப்ட் என்னவென்றால், உணவில் சேர்க்கப்படும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தின் அளவுகளை குறைத்தல்.

பல்வேறு ஆராய்ச்சிகள் மாவுச்சத்தை குறைத்துக் கொடுத்து செய்யப்பட்டதில் சுகர், பிரஷர், உடற்பருமன் போன்ற பல்வேறு வியாதிகள் குறைவதாக/நீங்குவதாக தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் உருவானது தான் தமிழ் பேலியோ உணவுமுறை . மூன்று வேளை நான்வெஜ் என்றெல்லாம் இதில் இல்லை. பேலியோவின் மூலப்பொருளான, கம்மி கார்ப், மித புரதம், அதிக சாட்சுரேட்டட் கொழுப்பு என்பதை மட்டுமே இதில் வலியுறுத்தப்படுகிறது. அதை சுத்த சைவமாகவும், முட்டை சேர்த்த சைவமாகவும் அல்லது அசைவமாகவும் மக்களே அவர்கள் கலாச்சாரத்திற்கேற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

ஆயிரக்கணக்கானவர்களுக்கு முழு ரத்த பரிசோதனையின் அடிப்படையில் இலவசமாக உணவுமுறை  வழங்கப்படுகிறது. அவர்கள் எடுக்கும் மருந்தகளை யாரும் நிறுத்த சொல்வதில்லை. வியாதிகள் குறையக் குறைய அவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரைப் பார்த்து மருந்துகளை குறைக்க/நிறுத்த மட்டுமே சொல்லப்படுகிறது. மற்றும் ஒவ்வொரு மூன்று மாதமும் அவர்கள் ஆரோக்கியம் எந்த அளவு முன்னேறியுள்ளது என்பதைக் காண ரத்த டெஸ்டுகள் பரிந்துரைக்கப் படுகிறது.

இன்றைய தேதியில் தமிழகம் முழுக்க 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த உணவுமுறையை  பின்பற்றி நலமாகி வருகிறார்கள். பல்வேறு கல்லூரிகளில் பேலியோ சம்பந்தமான கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஒரு உணவுமுறையை கற்றுக்கொடுப்பது என்பது தவறு என்று உலகின் எந்த சட்டத்திலும் சொல்லப்படவில்லை. மேலும் இலவசமாக அளிக்கப்படும் எந்தவொரு சேவையின் மேலும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வழியில்லை.

தனியொரு மனிதனின் முயற்சியால் பலரின் பிரச்சினைகள் இல்லாமல் போகும் போது, பலரின் பார்வை அங்கு விழும். புகழ் பெரும் போது பலரின் பொறாமை அவரை நோக்கி திரும்பும். அந்த பொறாமையின் வடிகாலாக சேறு வாரி இறைக்கப்படும். மேலே படும் சேற்றை துடைக்கக் கூட நேரம் இல்லாமல் சேவை செய்வோரை சேறு அல்ல, நெருப்பு கூட நெருங்காது.

இன்றைய தேதியில் தமிழகத்தில் பேலியோ பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. நாளை உலகளவில் சிறந்த ஆராய்ச்சி ஜர்னல்களில் அவை பிரசுரிக்கப்படும் போது, பரவலாக அனைத்து டாக்டர்களாலும் இந்த பேலியோ உணவுமுறை   பரிந்துரைக்கப்படும். அதுவரை தனியொரு மனிதனின் இந்த சேவை தொடரும். நாமும் அவருக்கு பக்கபலமாக இருப்போம்.

Saturday, November 5, 2016

உண்ணாவிரதம் எப்படி நமக்கு உதவுகிறது?



நாம் உண்டவுடன் உணவில் உள்ள அந்த சுகரை ப்ராசஸ் செய்ய உடலுக்கு ஆறு முதல் எட்டு மணிநேரம் பிடிக்கிறது. அதன்பின் நாம் எதையும் உண்ணவில்லை எனில் உடலில் சுகர் இல்லை. இன்சுலின் உற்பத்தி செய்யும் அவசியம் இல்லை. உடலில் இன்சுலின் இருக்கும்வரை உடல் கொழுப்பை எரிக்கும் மோடுக்கு போகாது
இன்சுலின் சுரக்காமல் நின்றவுடன் உடல் சேமிப்பில் உள்ள (அதாவது தொப்பையில் உள்ள) கொழுப்பை எரித்து க்ளுகோனோஜென்சிஸ் புராசஸ் மூலம் சுகராக மாற்றுகிறது. உணவு இல்லாவிடினும் உடலுக்கு தேவையான எனெர்ஜி இப்படி கிடைக்கிறது.
ஆக ஆறு அல்லது எட்டுமணிநேரத்துக்கு மேல் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தொடர்ந்து உங்கள் உடல் கொழுப்பை எரித்து கொண்டே இருக்கிறது. எதாவது உணவுபொருள் உங்கள் வாயில் போனால் இந்த புராசஸ் நின்று மறுபடி ஆறு- எட்டு மணிநேரம் கழித்து தொடர்கிறது
ஆக தினம் ஆறு சிறு உணவுகள் அல்லது நாள் முழுக்க இடைவிடாது தின்றுகொண்டே இருப்பது ஆகியவை உங்களை எடையை இழக்கவிடாமல் தடுக்கிறது. பலரும் இரவு ஹெவியாக உண்டுவிட்டு நடுவே எழுந்து கூட ஒரு ஸ்னாக் சாப்பிட்டுவிட்டு காலையில் எழுந்ததும் பாயசத்துடன் (காப்பி) நாளை துவக்குவார்கள். ஆக அவர்கள் உடல் கொழுப்பை எரிக்கும் மோடுக்கு செல்வதே கிடையாது
ஆய்வு ஒன்றில் ஒரே அளவு காலரிகள் இரு குழு எலிகளுக்கு கொடுக்கப்ட்டது. ஒரு குழு எலிகளுக்கு நாள் முழுக்க உணவு அளிக்காப்ட்டது. ஆனால் தினம் 16 மணிநேரம் விரதம் இருந்த எலிகள் மீதமிருந்த எட்டுமணிநேரத்தில் உண்ணாவிரதம் இருக்காத எலிகள் உண்ட அதே அளவு காலரிகளை உண்டபோதிலும் அவற்றை விட அதிக எடையை இழந்தன. ஆரோக்கியமாகவும்,. சுறுசுறுப்பாகவும் இருந்தன
காலை உணவு ஒரு நாளின் முக்கிய உணவு என்ற வதந்தியை பரப்பியவை முழுக்க சீரியல் கம்பனிகள் ஸ்பான்சரில் நடந்த ஆய்வுகள்
உண்னாவிரதம் (முழு, பகுதி) நம் எடையை குறைப்பது மட்டும் அல்ல, விரதம் இருக்கும் சமயம் மூளையின் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பசியோடிருக்கும் சமயம் தான் இரையை எப்படி தேடுவது என்பதை மனிதன் யோசிப்பது அவசியம். அதனால் இம்மாதிரி சமயங்களில் தான் மனிதனின் மூளையில் புதிய செல்கள் தோன்றுகின்றன.
உண்ணாவிரதம் நம் உடலின் இன்சுலின் சென்சிட்டிவிட்டையையும் அதிகரிக்கிறது. அதாவது குறைவான இன்சுலினை சுரந்தே அதிக அளவு சுகரை எரிக்கும் சக்தி என வைத்துகொள்வோம்
மன அழுத்தத்தை தாங்கும் வலிமை, வயதாவதை தடுப்பது ஆகியவற்ரையும் உண்னாவிரதம் அளிக்கிறது
அதுபோக
ஒல்லியாக இருந்து அன்ஃபிட் ஆக இருப்பதை விட குண்டாக இருந்து ஃபிட் ஆக இருப்பவர்கள் ஆரோக்கியமானவர்கள் என தெரிகிறது.
சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் இவ்வகை ஒல்லிதன்மை மிக ஆபத்தானது. காரணம் இவர்கள் உடலில் கொழுப்பு உள்ளுறுப்புகளில் (இதயம், கிட்னி) படியும். அதே சமயம் சிலர் குண்டாக இருந்தாலும் அவர்கள் உடலில் உள்ல கொழுப்பு முழுக்க தொப்பை, தொடை முதலிய இடங்களில் இருக்கும் (சுமோ வீரர்களை நினைவில் கொள்க). இதனால் ஒபிசிட்டி வருமே ஒழிய உள்ளுறுப்புகள் பாதிக்கபடுதல் முதலான ஆபத்துக்கள் இருப்பதில்லை.
ஆக டயட் இருந்து தொப்பையை இறக்கினாலும், உடன் உடல்பயிர்சியும் செய்வது அவசியம். உடல்பயிற்சி உங்கள் இதயத்துக்கு, டயட் உங்கள் தொப்பைக்கு என வைத்துகொள்ளுங்கள். என்னதான் பேலியோ, வாரியர் என டயட் இருந்தாலும் அதனுடன் எளிய நடைபயிற்சி போன்றவற்றை சேர்ப்பது மிக, மிக அவசியம். டயட் என்பது 80% உணவு, 20% உடல்பயிற்சி. பிசிகல் பிட்னஸ், உடல்பயிர்சி இல்லாவிடில் என்னதான் சிறப்பான டயட் ஆக இருந்தாலும் அது நம்மை காப்பாற்றாது.
தினம் 30- 45 நிமிட நடைபயிற்சி மினிமம் வாரம் 3- 4 நாள் செய்யவேண்டும் (அல்லது அதுக்கு சமமான வீட்டுவேலை)
தினம் குறைந்தது 12- 16 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்.
உங்கள் உணவு இயற்கையை ஒட்டிய நம் ஜீன்களுக்கு நெருக்கமான பேலியோ உணவாக இருக்கவேண்டும்
இவையே நம் ஜீன்களுக்கு நெருக்கமான ஆதிமனிதனின் வாழ்க்கைமுறையை ஒட்டிய முறை. இதுவே மருந்துகள், நோய்களில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கும்.

Neander Selvan


டாக்டர் ஜேஸன் ஃபங்க் அவர்களின் இந்த விடியோ