Showing posts with label Paleo for Dummies. Show all posts
Showing posts with label Paleo for Dummies. Show all posts

Tuesday, April 4, 2017

விரதத்தினால் நம் உடலில் ஏற்படும் பத்து (10) நன்மைகள்

1) நம் உடலின் உள்காயங்களை (அழற்சி-INFLAMMATION) குணப்படுத்துகிறது.
2) எடை குறைப்பு திடீரென்று நிற்கும் போது, மீண்டும் எடை குறைப்பைத் தூண்டுகிறது.
3) இன்சுலின் எதிர்ப்பைக்(INSULIN RESISTANCE) குறைத்து டையபடிஸ் டைப் - 2 வருவதைத் தடுக்கிறது.
4) வளர்ச்சி ஹார்மோன்களின் (HUMAN GROWTH HARMONES) உற்பத்தி 5 மடங்கு அதிகமாகி, உடல் கொழுப்பை எரிக்க, தசைகளை வளர்க்க உதவுகிறது.
5) குறைபாடுள்ள செல்கள் பழுது பார்க்க தூண்டுகிறது. செல்களில் உள்ள உபயோகமற்ற பொருட்கள் வெளியேற்றப்படுகிறது. (AUTOPHAGY PROCESS)
6) நமது ஆயுளை நீடிக்கச் செய்யும்மற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக் கூடிய ஜீன் களில் (GENE EXPRESSION) நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, ஆயுளைக் கூட்டுகிறது.
7) ஆரோக்கியமான இருதயத்தை தந்து நமது ஆயுளை கூட்டுகிறது.
8) புற்று நோய் (CANCER) வருவதை தடுக்கிறது
9) நமது மூலையில் புதிய நியூரான்கள் (NEURONS) உற்பத்தியைத் தூண்டி மூளையை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
10) அல்சீமர் நோய் (Alzheimer’s Disease) வருவதைத் தடுக்கிறது.
விரதம் இருப்போம்....பயன் / பலன் பெறுவோம்.

முக்கிய குறிப்பு :
நீரிழிவு நோய் உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இருதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் விரதம் இருப்பதை தவிர்க்கவும்.

பேலியோவை புதியதாக முயற்சிப்பவர்கள் பலர் மலச்சிக்கல் வருவதை தடுப்பது எப்படி ?

பேலியோவை புதியதாக முயற்சிப்பவர்கள் பலர் மலச்சிக்கல் வருவதாகப் பதிவிடுகிறீர்கள்.
உங்களுக்கு சில டிப்ஸ்.
முதலில் ஒரு உணவு முறை மாற்றத்திற்கு உடல் பழக சில நாட்கள் பிடிக்கும். அதை உணரவேண்டும். எல்லாமே இரண்டு நிமிட மேகி நூடுல்ஸ் அல்ல.
வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
பரிந்துரைக்கப்படும் உணவுகளை சரியாகப் பின்பற்றி உண்பது அவசியம்.
பேலியோ பரிந்துரையில் வாரம் 3 நாட்கள் கீரை ஸ்மூத்தி, சாலட், பழுக்காத கொய்யா, 3 லி நீர் போன்றவை பரிந்துரைக்கப்படுவதின் காரணம் அதிக நார்சத்து மற்றும் நுண் சத்துக்களுக்காகவே.
மலச்சிக்கலுக்கும், மலம் சேர்வதற்குமான வேறுபாட்டினை அறிந்துகொள்ளவேண்டும்.
அன்றாடம் உண்ணும் உணவில் ஜீரணிக்க இயலாதவைகள்தான் கழிவாக, மலமாக வெளியேறும். இறைச்சி, முட்டை போன்ற உணவுகள் முழுவதும் ஜீரணிக்கப்படுவதால் 3 நாட்களுக்கு ஒருமுறை என்றாலும் வலியோ, கெட்டித்தன்மையோ இல்லாமல் இலகுவாக சரக்கு இறங்கினால் பயப்படவேண்டியதில்லை. உங்கள் உணவில் செரிக்க இயலாத குப்பைகள் குறைவு என்பதை அறிக.
வயிற்றினை சரியாக சுத்தம் செய்யாமல் தடாலடியாக பேலியோவுக்கு வருபவர்கள் காண்ஸ்டிபேஷன் கண்டத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். போலவே தினம் காலை எழுந்தவுடன் லோடை இறக்கியாகவேண்டும் என்ற பழக்கம் இருப்பவர்களும். Iron சப்ளிமெண்ட் எடுப்பவர்களும்.
இதிலிருந்து சுலபமாக மீளும் வழிமுறைகள் பின்வருமாறு..
01. கீரை ஸ்மூத்தி காண்ஸ்டிபேஷன் கில்லர். பேலியோ துவங்கும் நாட்களில் பிடிக்கிறதோ இல்லையோ காலை உணவாக கீரை ஸ்மூத்தி, மதியம் சாலட் இரவு ஏதேனும் பேலியோ ஹெவி உணவை முதல் 2 வாரங்கள் உண்ணுங்கள்.
02. தயிர் + சிக்கரி. ஒரு ஸ்பூன் சிக்கரியை 100எம் எல் தயிரில் கலந்து கல்பாக அடித்தால் நகராத நரகல்லும் நகரும்.
03. திரிபலா சூர்ணம் அல்லது மாத்திரை காலை / மாலை ஒரு சிட்டிகை அல்லது ஒரு மாத்திரை.
04. பழுக்காத கொய்யா - 2 இரவில்.
05. மக்னீசியம் க்ளைசினேட் சப்ளிமெண்ட்.
06. நிறைய தண்ணீர்.
07. விரதங்கள்.
08. பரிந்துரைக்கப்படும் உணவை மட்டும் சரியான அளவுகளில் உண்பது.
09. நடைப்பயிற்சி.
இதுபோக சிலருக்கு மூலம், பைல்ஸ், என்று விதவிதமாக ஆசனப் பிரச்னைகள் இருக்கும். அவர்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.
மேலும் சில உடல் சார்ந்த பிரச்னைகளாலும் மலம் கழிக்க முடியாமல் போகலாம். தகுந்த மருத்துவ சிகிச்சை, பரிசோதனைகள் அவசியம். குறிப்பாக வயதானவர்களுக்கு.
மலம் கழிக்க சிரமமாக இருந்து மிகவம் கட்டியாகி என்ன முக்கி முயன்றும் வராமல் அதை ஏதேனும் செய்து ஆசனவாயைக் காயப்படுத்தி அந்த வாயில் ரத்தவாந்தி எடுக்க சிலர் கட்டிங் ப்ளேயரை எல்லாம் எடுத்துக்கொண்டு ரெஸ்ட்ரூம் செல்வார்கள். தயவு செய்து உடனடியாக மருத்துவரைப் பார்த்து தகுந்த சிகிச்சையைப் பெறவும். இல்லையெனில் அவதிப்பட நேரிடும்.

Saturday, November 26, 2016

மஞ்சள் காமாலை மற்றும் பேலியோ உணவுமுறை




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry)  SRI BALAJI CLINIC, Eachanari, Coimbatore-21
மஞ்சள் காமாலையில் ஒரு வகையான hepatitis B ஒரு ஆபத்தான நோயாகும். வைரஸ் உள்ள ரத்தத்தை ஏற்றுவதன் மூலமும், உடலுறவாலும், போதை ஊசிகளை பரிமாறிக் கொள்வதாலும் இது வரும். இந்த வைரஸ் ஈரலை அழித்து கேன்சர் வரவழைக்கும். இது கண்டுபிடிக்கப்பட்டால் உடனே மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுக்கவும். இந்த வியாதி காமன் மேன் டயட் அல்லது பேலியோ போன்ற எந்த டயட்டாலும் வருவதில்லை. இனி விவாத்திற்க்கு செல்வோம்.

டாக்டர் கருணாநிதி: Hepatitis B உள்ளவர்கள் பேலியோ  உணவுமுறை எடுக்கக் கூடாது.
எங்கள் பதில்: ஆமாம். அவர் சொன்னது சரியாக இருக்கலாம். எலிகளில் ஆராய்ந்து பார்த்து கரெக்ட் என சொல்லியுள்ளனர்.
ஏன் இதைப் பற்றி யாருமே இந்தக் குழுமத்தில் இதுவரை எங்களுக்கு சொல்லவில்லை
எங்கள் வாதம் : ஏன் உங்களுக்கு சூரியகாந்தி எண்ணையும் அரிசியும் கெடுதல் என எங்களைத் தவிர யாருமே சொல்லவில்லை? ஏனென்றால் அவர்களுக்கு அது கெடுதல் எனத் தெரியாது. மருத்துவ விஞ்ஜானம் முன்னேற முன்னேற புதிய தகவல்கள் வருகின்றன. அப்படிப்பட்ட புதிய தகவல் தான் பேலியோ. அது இன்று உங்கள் கையில். யாருக்கெல்லாம் பேலியோ கொடுக்கக் கூடாது என்ற சிறிய தகவல்களே கைவசம் உள்ளன. அதை இந்த கட்டுரையின் முடிவில் தருகிறேன். Hepatitis B எனப்படும் மஞ்சள் காமாலைக்கு பேலியோ தரக்கூடாது என்பது இப்போது வந்திருக்கும் (விவாதத்திற்குரிய) கருத்து.

உலகளவில் உள்ள பல பேலியோ குழுமங்களில் இன்னமும் இந்த வைரஸ் உள்ளவர்களுக்கு பேலியோ  உணவுமுறை தருகிறார்கள். ஏனென்றால் இன்னமும் மனிதர்களில் HBV இன்பெக்ஷன் உள்ளவர்களுக்கு பேலியோ எடுத்தால் கெடுதல் தானா எனத் தெரியாது. இனி hepatitis B உள்ள அனைவருக்கும் நமது தளத்தில் பேலியோ அறிவுறுத்தப் பட மாட்டாது என அறிவிக்கிறோம். பேலியொவில் விரதம் முன்னெடுக்கப்படுவதால், பசி இல்லாமை இருப்பதால், உணவு குறைவாக எடுக்கும்பொழுது இதனால் பாதிப்பு வரக்கூடாது என்ற முன்னெச்சிரிக்கையில் இதைக் சொல்கிறோம். இனி புதிதாய் வருபவர்கள் HBSAg டெஸ்ட் எடுத்த பின் தான் நம்மிடமிருந்து அட்வைஸ் வரும்.
இப்போது பேலியோ எடுக்கும் அனைவரும் இந்த டெஸ்ட் எடுக்குமாறு பரிந்துரைக்கிறோம். நெகடிவ் என்றால் நீங்கள் பேலியோவை தொடர்ந்து பின்பற்றலாம். உடனே HBV தடுப்பூசிகள் போடவும். பாசிடிவ் என்றால், பேலியோவை நிறுத்தி மருத்துவரிடம் சென்று வைத்தியம் செய்து குணமான பின் பேலியோவை தொடரலாம்.
என்னடா இது வம்புல மாட்டி விட்டுட்டாங்க. அப்ப பேலியோவே தவறா என சந்தேகம் வரும். ஐயா, Hepatitis B வியாதி உள்ளவரும் அது இல்லாத நார்மல் ஆட்களும் ஒன்றல்ல. அந்த இன்பெக்ஷன் இருப்பவர் தான் இயற்கை உணவான பேலியோ எடுக்கக் கூடாதே தவிர உங்களைப் போல் நார்மலானவர்களுக்கு பேலியோ போன்ற இயற்கை உணவுகளே சிரஞ்சீவிக்கான சாவி.
சார் எனக்கு ஆறாங்கிளாஸ் படிக்கும் போது மஞ்சள் காமாலை வந்துது. நாட்டு மருந்து சாப்பிடவுடன் சரியாச்சு. நான் பேலியோ எடுக்கலாமா?
 ஒரு வாரம் மட்டுமே வரும் மஞ்சள் காமாலை, அதில் 99% hepatitis A ஆகும். அது ஒன்றும் செய்யாது. அவர்கள் தாராளமாக பேலியோ கடைப்பிடிக்கலாம்.
நகைமுரண்: பேலியோ Hepatitis B உள்ளவர்களுக்கு பிரச்சினையே தவிர, இன்று உலகெங்கும் மிக வேகமாக பரவி வரும் மிக ஆபத்தான Hepatitis Cக்கு மிகச்சிறந்த மருந்தாகும். . 

மஞ்சள் காமாலை மற்றும் பேலியோ 
ஒரு ஜீனை பற்றி ஒருவர் metaanalysis (பல ஆராய்ச்சி பேப்பர்களை பார்த்து ஒரு பொதுக் கருத்துக்கு வருவது) செய்கிறார் என்றால், அந்த ஜீனை பற்றி பல தகவல்கள் வருகின்றன. இந்த ஜீன் இதை செய்கிறது என்று நாலு ஆதாரங்கள் கிடைக்கிறது. இல்லையில்லை இந்த ஜீன் அந்த வேலைக்கு எதிர் வினை புரிகிறது என நாலு ஆதாரங்கள். அதோடு இது வேறு பல வேலைகளும் செய்கிறது என நாலு ஆதாரங்கள். இவற்றில் எதை எடுப்பது விடுவது என தெரிவதில்லை. Vit D வெறும் எலும்புக்கு என எவ்வளவு காலமாக மருத்துவ உலகம் நம்பி வந்தது. அதே போல் Zinc க்கும். இரண்டுமே மாஸ்டர் ஹார்மோன்கள் என உலகம் இப்போது கொண்டாடுகிறது.
நம் செல்களில் 23,000 ஜீன்கள் இருப்பதே நமக்கு 2001ல் தான் தெரியும். ஒவ்வொரு ஜீனுக்கும் என்ன வேலை என ஒவ்வொன்றாக கண்டுபிடித்துக் கொண்டிருக்கிரார்கள். பிறக்கும் போது இந்த ஜீன் சரியில்லை என்றால் இன்னின்ன வியாதி வரும் என்பது பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து முக்கால்வாசி வியாதிகளை கண்டுபிடித்துருக்கிறார்கள். ஆனால் பிறக்கும் போது வரும் அல்லது பிறந்து நிர்ணயிக்கப் பட்ட சில ஆண்டுகளில் வரும் வியாதிகளைப் பற்றி நாம் பேசப் போவதில்லை.
சில சமயம் ஜீன் மாறி விடும். polymorphism என்று சொல்வார்கள். இயற்கையாகவே ஒருவருக்கு இருக்கும் ஒரு ஜீன் போல அனைவருக்கும் இருக்கும் என்று சொல்லி விட முடியாது. சிலருக்கு கொஞ்சம் மாறுதல் இருக்கும், ஆனால் ஒன்றும் செய்யாது. ஆனால் பிறந்த பின் நிகழும் பல வகை பாலிமார்பிசங்கள் ஆபத்தானவை. பல பாலிமார்பிசங்கள் நன்றாக வேலை செய்யும் ஜீனை முடக்கிப் போட்டு விடும். பாலிமார்பிசம் எதனால் நடக்கிறது. உணவு, பொல்லுஷன், மற்ற வியாதிகள், புகையிலை மற்றும் பல.

ஜீன் எக்ஸ்பிரஷன் இன்னொரு பேசு பொருள். அப்படி என்றால் என்ன? 
உங்களுக்கு ஐம்பது கோடி பணம் இருக்கிறது. ஆனால் ஒரு வேட்டி சட்டையுடன் சிம்பிளாக சுற்றுகிரீர்கள். நீங்கள் அவ்வளவு பெரிய பணக்காரர் என்பதை வெளிக்காட்டுவதில்லை. ஆனால் எதிர் வீட்டில் ஒருவன் ஒரு கோடி ரூபாய் வைத்துக் கொண்டு இல்லாத ஆட்டம் எல்லாம் ஆடி, உங்களை கடுப்பாக்கினால், அடுத்த நாளே உங்கள் வீட்டின் முன் ஒரு ஜாகுவார் காரை வாங்கி நிறுத்தி உங்களை எக்ஸ்பிரஸ் செய்வீர்கள். அதாவது தகுந்த உசுப்பேற்றுருதல் இருந்தால் தான் பல ஜீன்கள் வேலையே செய்ய ஆரம்பிக்கும். அதில் நல்ல ஜீனும் உண்டு. கேன்சர் செய்யும் ஜீனும் உண்டு. என்ன வகையான உசுப்பேற்றல் என்பதை பொறுத்து இந்த இரண்டு வகை ஜீன்களில் ஒன்று தூக்கத்திலிருந்து எழுந்து வினை செய்யும். பல வகை தூண்டுதல்கள் இருக்கின்றன. பல வகை ஜீன்கள் அவற்றால் விழிக்கின்றன. இன்னும் பல ஜீன்களின் தூண்டும் காரணி யார் என அறியப்படவில்லை.
டைப் 1 டயாபடிசை விட்டுவிட்டு இரண்டாம் டயாபெடிசுக்கு வருவோம். இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் ஏன் ஆரம்பிக்கிறது. முழு கதை இதுவரை யாருக்கும் தெரியாது. பல ஜீன்களின் சித்து விளையாட்டுகள் ஆரம்பிக்கின்றன. குண்டாக இருப்பதாலோ, மாறுபட்ட கொலஸ்டிரால் அளவாலோ, இன்பலமேஷனாலோ, இவை எதுவுமே இல்லாமலோ, தெரியாத காரனங்களாலோ பல ஜீன்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட ஜீன் பாதிக்கப் படுகிறது. பாலிமார்பிசமும் நிகழலாம், அல்லது எக்ஸ்பிரஷனிலும் மாற்றம் நிகழலாம். சிலருக்கு லெப்டின் ஜீன், சிலருக்கு அடிப்போநெக்டின், சிலருக்கு PPAR ஜீன் அல்லது எல்லாம் சேர்ந்து கிண்டிய அல்வா அல்லது இதுவரை தெரியாத புது மெக்கானிசம் உள்ள ஜீன் என சர்க்கரை வியாதியில் ஒன்று அல்லது அதற்கு மேம்பட்ட ஜீன்களின் கோளாறு உள்ளது. பலர் இந்த ஜீன் கோளாறால் தான் சுகர் வருகிறது என்கிறார்கள். ஆனால் கார்ப்  உணவுமுறை  மற்றும் கெட்ட வழக்கங்களே இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் வரும் என்பது பரவலான எண்ணம். அதனால் ஜீன்கள் பாதிக்கப்பட்டு டயாபடிசாக உருவாகலாம்.

கோழியிலிருந்து முட்டையா இல்லை முட்டையிலிருந்து கோழியா என்பது இப்போதைய கேள்வி அல்ல. இப்படி மாறுபட்ட ஜீன்கள் இருப்போருக்கு என்னென்ன உப பிரச்சினைகள் வரும் என்பதே முக்கியம். அதில் நமது டாக்டர் கருணாநிதி அவர்கள் கொடுத்த PGC-1 alpha என்ற முக்கியமான ஜீன் பற்றிய தகவல் மற்றும் hepatitis B க்கும் பேலியோவிற்கும் உள்ள நெருடலான தொடர்பு பற்றிப் பார்ப்போம்.

PGC-1α ஜீன் புரதத்தின் வேலைகள்:

1. இந்தப் புரதம் கொழுப்பை உடைத்து சக்தியை உருவாக்குவதில் ஒரு பங்கு வகிக்கிறது. எலிகளுக்கு இந்த ஜீனை பாதிக்க வைத்தால், எலிகள் அதிக வேலை செய்ய முடியாமல் களைப்பாகி விடுகின்றன.
2. எலி வளரும் போது இந்த ஜீன் மிக அதிகமாக இதயத்தில் தூண்டப் படுகிறது. இதனால் வளரும் உடலுக்கு ரத்தம் செலுத்த இதயத்திற்கு மிக அதிக சக்தியை கொழுப்பை உடைத்து உருவாக்க இந்தப் புரதம் உதவுகிறது
3. மற்றும் கொழுப்பை உடைத்து இயற்கையான உடற்சூட்டை ஏற்படுத்த இந்தப் புரதம் தூண்டுகோலாய் இருக்கிறது.
4. இன்சுலினுக்கு எதிரான குளுக்ககான் போல் இது வேலை செய்கிறது. பாஸ்டிங் நேரத்தில் மற்ற பொருட்களிலிருந்து குளுக்கோஸ் தயாரிக்கவும், கொழுப்பை எரிக்கவும் தூண்டுகிறது.
5. இன்னும் சில வேலைகள்.

Hepatitis B வைரசின் வேலைகள்:

1. மற்ற வைரஸ்கள் போல் வந்தோமா செல்லை அழிச்சோமா போனோமா என இல்லாமல், இந்த வைரஸ் நம் மெட்டபாலிச ஜீன்களுடன் ஒன்றி உறவாடுகிறது.
2. பசி நேரத்தில் குளுக்கோஸ் கம்மியாகி, குளுக்ககான் தயாரிப்பு தூண்டப்படும். அதே நேரத்தில் PGC-1 alpha ஜீனும் அதிகமாக எக்ஸ்பிரஸ் செய்யப்படும். பசி நேரத்தில் சுரக்கப்படும் PGC-1 alpha, Hepatitis B வைரசை பல்கி பெருக வைக்கிறது. சாப்பிடவுடன் இந்த வைரஸ் அளவு கட்டுக்குள் வந்து விடுகிறது.
3. பேலியோவில் நம் உடல் கொஞ்சம் பசி நிலை (குளுக்கோஸ் இல்லா நிலை) யில் இருப்பதால், HBவைரஸ் கொஞ்சம் அதிகமாக இருந்து லிவரை மேலும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
4. இன்னும் மனிதர்களில் இந்த ஆராய்ச்சி செய்யப்படவில்லை. animal studies, cell lines மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
5. இதைப் போன்ற வேறு வைரஸ்கள் இதுவரை இல்லை.

முடிவுரை:
சந்தேகத்திற்கான பலனை மக்களுக்கு வழங்க வேண்டி அனைவரும் பேலியோவிற்கு முன் HBsAg டெஸ்ட் செய்ய வேண்டும் (HBVக்கும் பேலியோவிற்கும் மனிதர்களில் சம்பந்தமில்லை என நிருபிக்கும் வரை). Hepatitis B இருந்தால் பேலியோ வேண்டாம். அவர்கள் hepatologistஐ பார்த்து மருந்துகள் எடுக்கலாம் (அவ்வளவு காஸ்ட்லி ஒன்றும் இல்லை. interferon costly but works quickly, lamivudine cheap but takes two years to get well). முழுமையாக வைரஸ் ஒழிந்த பின் இங்கே வரவும்.
மறுபடி முதல் paragraph: மஞ்சள் காமாலையில் ஒரு வகையான hepatitis B ஒரு ஆபத்தான நோயாகும். வைரஸ் உள்ள ரத்தத்தை ஏற்றுவதன் மூலமும், உடலுறவாலும், போதை ஊசிகளை பரிமாறிக் கொள்வதாலும் இது வரும். இந்த வைரஸ் ஈரலை அழித்து கேன்சர் வரவழைக்கும். இது கண்டுபிடிக்கப்பட்டால் உடனே மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுக்கவும். இந்த வியாதி காமன் மேன்  உணவுமுறை  அல்லது பேலியோ போன்ற எந்த  உணவுமுறை வருவதில்லை.

Monday, November 21, 2016

பேலியோவில் உடல் எடை ஏற....


முக்கிய குறிப்பு : கீழே சொல்லுவது உடல் ஏற வேண்டும் என்பவர்களுக்கு மட்டும். சர்க்கரை குறைபாடு போன்ற எவ்வித உடல் உபாதைகள் இல்லாதோருக்கு மட்டும்.



பேலியோவை பெரும்பாலும் உடல் எடை குறைக்கதான் பயன்படுத்துகிறார்கள். ஒல்லியாக உள்ளவர்கள், எடை குறைவாக உள்ளவர்கள் பேலியோவில் எடை ஏற்றவும் நல்ல வாய்ப்பு உள்ளது. உடலில் கொழுப்பு சேராமல் தசை ஏற்ற வாய்ப்பு உள்ளது.
உங்கள் எடை ஏற வேண்டுமெனில்....
1. ஜிம் செல்லுங்கள். இது மிக முக்கியம். பயிற்சிகளை முறையாக கற்றுக் கொண்டு எடை தூக்கும் பயிற்சிகளை செய்யுங்கள். Squats போன்ற கால்களுக்கான பயிற்சி கண்டிப்பாக செய்யுங்கள். உங்கள் தசைகளுக்கு பயிற்சி கொடுக்கும் போது அவை காயப்பட்டு அவை மேன்மேலும் வலுவுடன் வளர ஆரம்பிக்கும். No Pain. No Gain.
2. நடை பயிற்சி, ஓட்டம் போன்றவை வாரம் ஒரு முறைக்கு மேல் வேண்டாம்.
3. ஒரு நாளைக்கு 250 மிலி முழு கொழுப்பு பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
4. 200 மிலி தயிர் தினசரி எடுத்துக் கொள்ளுங்கள்.
5. ஒரு வேளை கார்ப் உணவு எடுக்க வேண்டும். ஒர்க் அவுட் முடித்த பிறகுதான் ஒரு மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் கார்ப் உணவுகள் உருளைக் கிழங்கு 200 கிராம் அல்லது சக்கரை வள்ளிக் கிழங்கு 200 கிராம் அல்லது 200 கிராம் ஆப்பிள் அல்லது 200கி வாழைப்பழம்.
6. மற்ற வேளைகளில் புரதம் + கொழுப்பு அதிகம் நிறைந்த முட்டை, கோழி, மீன், சிகப்பு இறைச்சி போன்ற உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
7. இரவு உறங்கும் முன்பு 20 பாதாம் சாப்பிடுங்கள்.
மேலே உள்ள அனைத்தையும் செய்யுங்கள். எதையும் ஸ்கிப் செய்ய வேண்டாம். ஒரு மாத முடிவில் உங்கள் எடை அதிகரித்து இருக்கும்.
இவ்வாறு செய்யும் போது உடலில் அதிகம் கொழுப்பு சேராமல் தசை அதிகம் ஏறும். உடலில் கொழுப்பு அதிகம் சேர்வதாக தெரிந்தால் பாலை நிறுத்தி விடுங்கள்.

- Kathiran

Saturday, November 12, 2016

சி ஆர் பி - high sensitive crp

Dr. Arunkumar, MD(Pediatrics), Erode.

Crp என்றால் என்ன?
C-Reactive Protein என்பதன் சுருக்கமே CRP.
இது எங்கிருந்து வருகிறது?
எப்போதெல்லாம் நமது உடலில் கிருமி தாக்கம் (infection) அல்லது, இன்ப்ளமேஷன் (inflammation) அதாவது உள் காயம் ஏற்படுகிறதோ அப்போது நமது கல்லீரல் மற்றும் வேறு சில செல்கள் சுரக்கும் பல acute phase reactants எனப்படும் புரதங்களில் ஒன்று தான் crp.
இதன் வேலை என்ன?
உடலில் எப்போது என்ன டேமேஜ் நடந்தாலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் செயல் கூறுகளில் வரும் இடை தரகர் தான் இந்த crp. இது அதிகமாக இரத்தத்தில் இருந்தால், உடலில் ஏதோ கிருமி தாக்கமோ அல்லது உள்காயமோ ஏற்பட்டிருக்கிறது என்று முடிவு செய்து கொள்ளலாம்.
நார்மலாக இது எவ்வளவு இருக்க வேண்டும்?
3 mg/dl எனும் அளவிற்கு கீழ் இருக்க வேண்டும்.
எப்பொழுது  இது அதிகமாகும்?
Crp அதிகம் ஆக பல காரணங்கள் உள்ளன.
Infection - கிருமி தாக்கம். சாதாரண சளி காய்ச்சலில் இருந்து, தொண்டை வலி, சீழ் புண், நிமோனியா என எங்கு கிருமிகள் இருந்தாலும் crp பல மடங்கு உயர்ந்திருக்கும். (கிட்டத்தட்ட 100 mg/dl மேல் உயர்ந்திருக்கும்)
Chronic inflammatory states - நீண்ட கால மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள், ருமாட்டாய்டு ஆர்த்திரைட்டிஸ், சொரியாசிஸ், போன்ற ஆட்டோ இம்மியூன் நோய்கள், இருதய வால்வு பிரச்சனைகள், முதலியன. இவற்றில் crp 10 mg/dl மேல் உயர்ந்திருக்கும்.
தீ காயம், எலும்பு முறிவு, போன்ற காயங்கள்.
மாரடைப்பு(myocardial infarction), கணைய பாதிப்பு (pancreatitis), போன்ற உள்ளுறுப்பு பாதிப்புகள்.
தசை சிதைவு.
புற்று நோய்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நோய்களிலும் crp குறைந்த பட்சம் 10 mg/dl எனும் அளவிற்கு மேல் உயர்ந்திருக்கும்.
High sensitive CRP என்றால் என்ன?
சாதாரண crp பரிசோதனையில் 6 mg எனும் அளவிற்கு கீழ் crp இருந்தால் அதை கண்டுபிடிக்க முடியாது. எனவே குறைந்த அளவு இருந்தாலும் கண்டுபிடிக்க உதவும் பரிசோதனை பெயர் தான் high sensitive crp. இது அதே crp தான். டெஸ்ட் தான் வேறு.
இது எங்கு அதிகம் ஆகும்?
மேலே கூறிய அனைத்து தொந்தரவுகளிலும் hscrp அதிகம் ஆகும்.
அத்துடன்,
புகை பிடிக்கும் பழக்கம்.
உடல் பருமன்.
மெட்டபாலிக் சின்ட்ரோம்
இருதயம் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களில் உள்காயம்.
நீரிழிவு நோய்.
இவற்றிலும் hscrp அதிகம் ஆகும்.
ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம்.
இந்த பிரச்சனைகளில் எப்போதும் hscrp 10 mg மேல் ஏறாது.
Hscrp 10 mg மேல் இருந்தாலே அவற்றிற்கு காரணம், இருதய நோயோ உடல் பருமனோ அல்ல,
மேலே கூறிய கிருமி தாக்கம், மூட்டு வலி, ஆட்டோ இம்மயூன் போன்றவைகளே.
இதை மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், ரிப்போர்ட் பார்த்து ஹார்ட் அட்டாக் தான் வரும்.
அவன் crp 3 mg மேலே இருந்தாலே high ரிஸ்க் என்று கொடுத்திருக்கிறான்.
>10 mg என்றால் கதை முடிந்தது என்று அர்த்தம் இல்லை.
வேறு என்ன காரணங்கள் என்று தேட வேண்டும்.
அல்லது சளி காய்ச்சல் போன்றவைகளால் crp அதிகம் ஆனதா என்று தெரிந்து கொள்ள hscrp பரிசோதனையை 3 வாரம் விட்டு திரும்ப எடுக்க வேண்டும்.
நம் குழு அன்பர் ஒருவரது குழந்தைக்கு சிறுநீர் infection உள்ளது என்றும் அதனால் crp அதிகம் ஆகியுள்ளது என்றும் மருத்துவர் தெரிவித்திருக்கிறார். ஆன்டிபயாடிக் மருந்து செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த அன்பர் என்னிடம் கேட்கிறார், பசு மஞ்சள் சாப்பிட்டால் crp குறைந்து விடுமா என்று!!
சரியாக புரிந்து கொள்ள வில்லை என்றால் இப்படி தான் ஆகும்.
Crp குறைய என்ன செய்ய வேண்டும்?
நல்ல உணவுமுறை. நம் பேலியோ உணவுமுறை போன்று இயற்கையை ஒன்றி அமைந்த மாவுச்சத்து கம்மி உண்ணும் நல்ல உணவுமுறை hscrp ஐ குறைக்கும்.
உடல் பருமன் குறைத்தல். அதுவும் நம் பேலியோவில் நடக்கும்.
சர்க்கரை நோய் கட்டுப்படுத்துதல். இதுவும் பேலியோவில் நடக்கும்.
புகை, மது விட்டொழிதல்.
மிதமான உடற்பயிற்சி.
பசு மஞ்சள்
கிருமி தாக்கத்தினால் crp அதிகம் ஆனால் அவற்றுக்குரிய மருந்துகள் எடுத்தால் மட்டுமே crp குறையும். நம் உணவுமுறையோ பசு மஞ்சளோ ஒன்றும் செய்யாது.
ஆட்டோ இம்மியூன் நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களில் மருந்துகளுடன் நம் உணவுமுறையும் பசு மஞ்சளும் சேரும்போது பல பயன்களை அளிக்கும்.
பசு மஞ்சளின் வேலை என்ன? ஏன் அது நம் குழுவில் பரிந்துறைக்கப்படுகிறது?
பல தாவரங்களுக்கு anti inflammatory அதாவது உள் காயத்தை குறைக்கும் தன்மை உள்ளது.
அதில் மிக முக்கியமான ஒன்று மஞ்சள். மஞ்சலிலுள்ள cucurmin எனும் மூல பொருளுக்கு, பல விதங்களில் anti inflammatory தன்மை உள்ளதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இரத்த குழாய் சம்பந்தப்பட்ட உள்காயம், ஆட்டோ இம்மியூன் நோய்கள், osteoarthritis எனும் மூட்டு வலி போன்ற பல நோய்களுக்கு மஞ்சள் தீர்வளிக்கும் என்று ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளன.

இது மட்டுமில்லாமல் பல anti oxidant தன்மைகளும் உள்ளன.
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/23013352
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16394323
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/20056736
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/19900435

Atherosclerosis எனப்படும் இரத்த குழாய் அடைப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்த வல்லது எனவும் ஆராய்ச்சிகள் உள்ளன.
எனவே தான் நம் குழுவில் crp அதிகம் இருப்பவர்களுக்கு பசு மஞ்சள் பரிந்துரைக்கப்படுகிறது.
ஏன் பேலியோ எடுக்கும்போது சிலருக்கு hscrp குறைவதில்லை அல்லது ஏறுகிறது?
மேலே கூறியுள்ளது போல பல்வேறு காரணங்களால் hscrp அதிகம் ஆகிறது. உடல் பருமன், இரத்த குழாய் உள்காயம், மெட்டபாலிக் சின்ரோம் ஆகிய காரணங்களால் hscrp அதிகம் ஆகியிருந்தால் மட்டுமே பேலியோவினால் குறையும். வேறு காரணங்கள் என்றால், தகுந்த மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
Hscrp நார்மலாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தமா?
இல்லை. Hscrp ஒரு marker. அவ்வளவே. மேகம் கறுத்து இருந்தால் மழை கட்டாயம் வரும் என அர்த்தம் இல்லை. இல்லை மேகமே இல்லை என்றாலும் மழை வராது எனவும் அர்த்தம் இல்லை. Hscrp போல் ஒவ்வொரு நோய்க்கும் நிறைய marker இருக்கும். அனைத்தையும் வைத்து பார்த்து, பொது உடல் ஆரோக்கியத்தையும் வைத்து பார்த்து மட்டுமே நோய் வரும் வாய்ப்புகளை கூற முடியும்.
சுருக்கமாக சொன்னால், hscrp என்பது தூரத்தில் ஒலிக்கும் சைரன் ஒலி போன்றது. அது போலீஸாகவும் இருக்கலாம், அம்புலன்சாகவும் இருக்கலாம், தீயணைப்பு வண்டியாகவும் இருக்கலாம், பக்கத்து வீட்டு குழந்தை விளையாடும் பொம்மையின் ஒலியாகவும் இருக்கலாம். எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் தான் உண்மை தெரியும்.
இதுவே hscrp க்கு என் கோனார் உரை.

பீட் கவாஸ் புரோபயாட்டிக் டானிக்




புரோபயாட்டிக் உணவுகளில் பிரதானமாக நாம் அறிவது கெபிர் மட்டுமே. ஒவ்வோரு நாட்டிலும் பராம்பரியமான முறையில் பல புரோபயாட்டிக் உணவுகள் உள்ளன. இனி வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம். இப்பொழுது முதலில் பீட் கவாஸ் எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
பீட் கவாஸ் எளிதாக அதிகமான பொருட்கள் இல்லாமல் தயார் செய்யலாம். இது ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக உபயோகத்தில் உள்ளது. இதில் உடலுக்கு நன்மை தரும் புரோபயாட்டிக் உருவாகி நமது ஜூரண சக்தியை மேம்படுத்துகிறது. அத்துடன் நமது சிறுநீரகங்களுக்கும், ஈரலுக்கும் ஒரு டிடாக்ஸாக அமைகின்றது. சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் இதை அருந்தி பயன்கள் பெறலாம். ஐரோப்பியா நாடுகளில் கான்சர் தெரப்பியில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. அலர்ஜிகளுக்கும், chronic fatigue எனப்படும் நாள்பட்ட சோர்வு, ரசாயண அலர்ஜிகளுக்கும் நல்ல தீர்வாக அமைகின்றது.
டால்ஸ்டாய் பீட்கவாஸை தண்ணீரைவிட சிறந்தது என்றும், எவ்வாறு ரஷ்ய போர்வீரர்கள் காலரா தோன்றிய காலத்தில் தங்களது ராணுவ குடியிருப்பிகளிலிருந்து கவாஸை கொண்டு வந்து மாஸ்கோ தெருக்களில் மக்களை எவ்வாறு தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றினார்கள் என்று அழகாக வர்ணித்திருப்பார். பீட் கவாஸ் ஆயிரம் வருடங்களாக ரஷ்யா, போலன்ட், லாட்டிவியா, லித்துவானியா, பெலாரஸ், ஜார்ஜியா, கஜக்ஸ்தான், ஆர்மேனியா மற்றும் சீனாவிலும் பிரபலமாக உள்ளது. இன்றும் தெருக்களில் ஒரு ஆரோக்கியபானமாக விற்க்கப்படுகிறது.
இதில் உண்டாகும் புரோபயாட்டிக் பாக்டீரியாக்களின் மூலம் பயன்பெற இன்றும் பழமையான முறையில் கம்பு ரொட்டிகளை சேர்த்து செய்கிறார்கள். எளிமையான முறையில் கெபிர் வே சேர்த்து செய்வதால் கம்பு ரொட்டி நமக்கு தேவையில்லை.
இவ்வாறு உண்டாக்கும் பீட்கவாஸில் வைட்டமின்கள் B-1, B-6, மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், அமினோ ஆசிட்கள், லாக்டிக் ஆசிட் மற்றும் பேன்டோதெனேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் உள்ள என்சைம்கள், நலம் தரும் பாக்டீரியாக்கள் பீட்டாசயானின் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்சிட்ட்டாக மாறி இதய நோய்களுக்கும், கான்சருக்கும் மற்றும் தொற்று நோய்களுக்கு நல்ல பயன் தருகிறது.
பீட் கவாஸை இரண்டு முறைகளில் தயாரிக்கலாம். ஒன்று கெபிர் வே (whey) அல்லது சாதரண தயிரின் வேயுடன்.
கெபிர் வே எவ்வாறு தயார் செய்வது ?
கெபிர் அதிகமாக புளித்தால் கெபிர் தயிர் மேலேயும், வே கீழேயும் தங்கிவிடும். இதனை தனியாக பிரித்து உபயோகப்படுத்தலாம். அல்லது பனீர் தயாரிக்கும் போது எவ்வாறு தயிரிலிருந்து தண்ணீரை (வே) ஒரு துணியில் கட்டி வடிக்கிறமோ அந்த முறையில் கெபிர் தயிரையும் பிரிக்கலாம்.
எவ்வாறு பீட்ரூட் கவாஸ் தயார் செய்வது ?
தேவையான பொருட்கள்:
2,3 மூன்று ஆர்கானிக் பீட்ரூட்
கெபிர் அல்லது சாதாரண தயிர் வே - கால்கப்
கல் உப்பு அல்லது இந்துப்பு - 2 டீஸ்பூன்
ஒரு மேசன் ஜார்
ஸ்பிரிங் அல்லது பில்ட்டர் தண்ணீர் (குளோரின் இல்லாத தண்ணீராகிருக்க வேண்டும்)
கெபிர் வே இல்லையென்றால் கெபிர் ஸ்ட்டார்டர் கல்சரும் பயன்படுத்தலாம்
செய்முறை:
▪️ஆர்கானிக் பீட்ரூட்டை நன்றாக கழுவி அரை/ஒரு இன்ச் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சாதாரண பீட்ரூட்டாக இருந்தால் தலைபாகத்தை சிறிது அதிகமாகவும், அடிபாகத்தை சாதரணமாகவும் வெட்டி நீக்கிவிட்டு தோலை சீவி மேற்சொன்ன அளவில் நறுக்கிக்கொள்ளவும்.
▪️நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை ஜாரில் இட்டு, கெபிர் வே அல்லது ஒரு பேக்கட் கெபிர் ஸ்டார்ட்டர் கல்ச்சரையும், உப்பையும், தண்ணீரையும் சேர்க்கவும்.
நன்றாக கலக்கி ஜாரை நன்றாக காற்று புகாதவாறு அடைத்து வைக்கவும். குறைந்தது மூன்று நாட்கள் வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை திறந்து பூஞ்சை ஏற்படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.
▪️இப்பொழுது லாக்ட்டிக் ஆசிட்டால் பெர்மன்ட் ஆகி சிறிய குமிழிகள் நிறைந்துள்ளதை பார்க்கலாம்.
▪️நான்கு நாட்கள் முதல் ஒரு வாரம் கழித்து திறந்து வேறு ஒரு கண்ணாடி பாட்டிலில் தனியாக பிரித்து ஊற்றி பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும்.
▪️தினமும் காலையும் இரவும் 2-3 அவுன்ஸ் குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு எவ்வாறு செய்யலாம் ?
ஆப்பிள், ஆரஞ்ச், ஸ்ட்ராபெரி, கொய்யாப்பழம், பைனாப்பிள் போன்ற பழங்களை துண்டுகளாக்கி சேர்த்து செய்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.
▪️நமது உணவுமுறைகளுக்கு ஏற்ப எவ்வாறு செய்வது ?
இஞ்சி, எலுமிச்சை, சோம்பு, மல்லி, மாங்காய் இஞ்சி,ஏலக்காய், கிராம்பு, பட்டை என்று உங்களுக்கு பிடித்த மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களை சேர்த்து செய்யலாம். பீட்ரூட்டின் பச்சை வாசனை பிடிக்காதவர்களுக்கு இந்த முறையில் செய்யும்போது மேலும் மருத்துவ குணங்களுடன் சுவையையும் கூட்டும்.

குறிப்பு:
▪️வடிகட்டிய பீட் கவாஸ் கால்கப் எப்பொழுதும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த முறை தயாரிக்கும் போது கெபிர் வேக்கு பதிலாக இதையே சேர்த்துக்கொள்ளலாம்.
▪️பில்ட்டர் செய்த பிறகு மீதமுள்ள பீட்ரூட் துண்டுகளில் இராண்டாம் முறையும் பீட் கவாஸ் செய்யலாம். அல்லது இதை சலாட்டுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.
▪️நான் செய்த முறையில் வெறும் இஞ்சி மட்டுமே பீட்ரூட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளது.


Abdul Farook

Tuesday, November 8, 2016

புதியவர்கள் அதிகம் செய்யும் தவறுகள் என்ன?



01. அடிக்கடி சீட்டிங் என்று கண்ட சத்தில்லாத ருசி சார்ந்த உணவுகளை உண்பது.
02. குறைந்த நடைப்பயிற்சி செய்யாமல் தேமே என்று கொழுப்பு சாப்பிட்டு உட்கார்ந்து தெய்வமகள் அண்ணியாரைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவது.
03. சரியான அளவு நீர் அருந்தாதது.
04. விட்டமின் டிக்காக வெயிலில் நிற்காமல் நிறத்தைக் காக்க ஏசியிலேயே அமர்ந்திருப்பது. அல்லது நிழலிலேயே இருப்பது.
05. சரியான அளவுகளில் உண்ணாமல் குறைந்த கலொரி உணவுகளை எடுப்பது. குறிப்பாக சைவர்கள் காலை பட்டர் டீ, மதியம் பொரியல், இரவு கூட்டு என்று எடையைக் குறைக்கிறோம் என்று மஸிலை கரைத்துக்கொண்டிருப்பது.
06. சரியான அளவுகளில் ப்ரோட்டீன் எடுக்காமல் இந்தியன் தாத்தா கமலைப் போல ஆகிவிடுவது.
07. சைலண்ட்டாக சரக்கு, தம் என்று அடித்துக் கலக்கி ஹார்ட் அட்டாக் வந்து பேலியோ மீது பழி போடத் தயாராக இருப்பது.
08. பக்கம் பக்கமாக எழுதினாலும்.. சார் கொழுப்பு கூடிடுச்சின்னு ரிப்போர்ட் சொல்லுது உடனடியாக அதைக் குறைக்க வழி சொல்லுன்கள் என்று டர்ரியலாவது. கொழுப்பு சாப்பிட்டால் ஏன் கொழுப்பு கூடுகிறது என்பதை பேலியோ டயட் புத்தகத்தில் தேடிப் படிக்கவும்.
09. குறைந்த பட்ச கலோரி அளவான 1200 கலோரி உணவை பரிந்துரைத்தபடி எடுக்காது, குறைவாக எடுத்து அவதிப்படுவது.
10. காய்கறி, கீரைகளை முற்றிலும் புறக்கணித்து முக்கியமான காலைக்கடனை முக்கமுடியாது அவதிப்படுவது.
11. எங்களிடம் ஆலோசனை பெற்று, மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று ஒன்றுவிட்ட சித்தப்பா பையனிடமும் அதைக் காட்டி பிறகு இரண்டு இட்லி பாதாம் சட்னியுடன் பேலியோ துவங்கினேன் வயிறு வலிக்கிறது சீனியர்களே உதவுங்கள் என்று எங்களை அலறவைப்பது.
12. உண்பதோ சைவம், அதிலும் ஏகப்பட்ட உடல் உபாதைகளுடன் இருக்கும் குறைந்தபட்ச தேர்வில் அது டேஸ்ட் புடிக்காது இது ஸ்மெல் புடிக்காது என்று 10ல் 9 உணவுகளை விலக்கிவிட்டு பேலியோ அல்லாத பேலியோ என்ற ஒன்றைப் பரிந்துரைக்கக் கேட்பது.

Shankar Ji

Monday, November 7, 2016

நாம் பயப்பட வேண்டிய ஒரே கொலஸ்டிரால்!!

Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
Lp(a) என்ற டெஸ்டை என்றாவது செய்திருக்கிரீர்களா? என்னைப் பொருத்தவரை இதுவே உங்கள் கொலஸ்டிரால் பிரச்சினையை அறிய உதவும் மிக முக்கியமான டெஸ்ட்.
இதய ரத்தக் குழாய் செல்களின் இடுக்கில் இந்த Lp(a) எனப்படும் அபாய கொலஸ்டிரால் அடைத்து, அந்த செல்களுக்கு செல்ல வேண்டிய சத்துகளை அடைய விடாமல் தடுக்கிறது. இதனால் அந்த செல்கள் பாதித்து இன்ப்லமேஷன் எனும் உள்காயம் ஏற்பட்டு, அதில் கொழுப்பு சேர்ந்து மாரடைப்பு வருகிறது.
உங்களுக்கு ஏன் இந்த மிக முக்கியமான டெஸ்ட் பற்றி யாரும் சொல்லவில்லை? மருந்து கம்பெனிகள் உங்களுக்கு அதை சொல்ல விடவில்லை. ஏனென்றால் மாரடைப்பு வராமல் இருக்க உங்களுக்கு தரப்படும் ஸ்டாடினால் (Atorvastatin, Rosuvastatin), இந்த Lp(a) வை குறைக்க முடியாது.
அதிக மாவுச்சத்து (Carbohydrates) உள்ள உணவை உட்கொண்டு அதனால் அதிகம் சுரக்கும் இன்சுலினால், இந்த Lp(a) அதிகமாகிறது என்று ஒரு தரப்பு வாதம். இது முழுக்க ஜெனிடிக் என்பது இன்னொரு வாதம் (உங்கள் பரம்பரையில் கெட்ட பழக்கம் இல்லாத அல்பாயுசில் மாரடைப்பு வந்து இறந்தவர்களுக்கு காரணி இந்த Lp(a) வாக இருக்கலாம்).
பிகு: போன வாரம், ஒரு 22 வயது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பெண்ணிடம் Lp (a) அதிகமாக இருப்பதைக் கண்டேன்.

கொலஸ்டிராலை கெடுத்து மாரடைப்பை வரவழைப்பது எப்படி?


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

LDL கொலஸ்டிரால் உடம்பில் உள்ள முப்பது டிரில்லியன் செல்களுக்கும் சில விட்டமின்களை கொண்டு சேர்ப்பதுடன், அந்த செல்களின் சுவர் பலப்பட கொலஸ்ட்ராலை தருகிறது. மற்றும் பல ஹார்மோன்கள் உருவாக, கொலஸ்டிராலையும் கொண்டு சேர்க்கிறது.
இந்த கொலஸ்டிராலை கெடுத்தால் (ஆக்சிடைஸ்) செய்தால் அது Oxidized LDL (Ox LDL) ஆகி விடும். இந்த ox LDL நேராக இதய ரத்தக் குழாய்களில் படிந்து மாரடைப்பை உருவாக்கும்.
உடலுக்கு அதிக நன்மை செய்யும் LDLலை, OxLDL எனப்படும் விஷமாக மாற்றுவது எப்படி?
1. பிராசஸ் செய்யப்பட்டு கொழுப்பை குறைத்த பாக்கெட் பால் (Low fat milk-4%, 2%, etc.,) மற்றும் பால் பவுடர் சாப்பிடுவதன் மூலம் Ox LDL உடலில் அதிகமாகிறது.
2. எந்த எண்ணையை பொரிக்க பயன்படுத்தினாலும் அந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதிக Ox LDL கிடைக்கிறது (பொரிப்பது-பூரி, போண்டா போல் எண்ணையில் போட்டு எடுக்கும் அனைத்தும்)
3. அளவிற்கு அதிகமான சூட்டில் சமையல் செய்தல் Ox LDL அளவை அதிகப்படுத்தும்
4. முறையான உணவை சாப்பிட்டாலும் உடலில் இன்பலமேஷன் எனப்படும் உள்காயம் இருந்தால் LDLஐ Ox LDL ஆக மாற்றும்.
பின் குறிப்பு: ஸ்டாடின் (Atorvastatin, Rosuvastatin) மருந்துகளால் Ox LDL எனப்படும் உயிர்கொல்லி கொலஸ்டிராலை குறைக்க முடியாது. நல்லது செய்யும் சாதா LDLஐ மட்டுமே குறைக்க முடியும்.

டாக்டர்கள் ஏன் இன்னமும் ஸ்டாட்டின் பரிந்துரைக்கிறார்கள்?




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore 
மேற்கு நாடுகளில் தான் அலோபதி தோன்றியது. அதை தான் இன்று மாடர்ன் மெடிசின் என உலகமே கொண்டாடுகிறது. விஞ்சானம் மூலம் பலப் புதிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தி பலரைக் காப்பாற்றும் அளவு சக்தி படைத்தது எங்கள் துறை. 

ஆனால் நாங்களும் சில பைத்தியக்காரத்தனமான, சுத்தமாக வியாதியை குணப்படுத்தாத சில வைத்தியமுறைகள் செய்திருக்கிறோம். உதாரணம், கத்தியை வைத்து நரம்பைக் கிழித்து ரத்தத்தை வெளியேற்றுவது. இன்னொரு வகை, அட்டைப் பூச்சிகளை பேஷன்ட் மேல் போட்டு ரத்தத்தை உறிஞ்ச வைப்பது. இதை அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனுக்கு தொண்டை வலிக்காக செய்யப் போய், கிட்டத்தட்ட அவர் சாவின் விளிம்பிற்கே சென்று விட்டார்.

இந்த ரத்தம் வடித்தல், அட்டைப் பூச்சி ட்ரீட்மென்ட் எல்லாம் தவறு, பிரயோஜனப்படாது, ஆபத்து என நானூறு வருடங்களுக்கு முன்பே சில மருத்துவர்கள் சொன்னாலும், அறிவியல் ஆதாரமில்லை என மற்ற மருத்துவர்கள் ஒதுக்கினார்கள். அப்புறம் ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தான் இந்த முறைகள் தவறு என அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

அந்த அட்டைப்பூச்சி மருத்துவம் போல் இன்னொன்று தான், கொலஸ்டிராலை குறைப்பதற்கு ஸ்டாடின் (Atorvastatin, Rosuvastatin) மருந்துகளைக் கொடுப்பது. 

HbA1c எனும் மூன்று மாத சர்க்கரை அளவீடு-கவனம்


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
சர்க்கரை நோயாளிகள் இந்த டெஸ்டை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எடுப்பார்கள். சர்க்கரை வியாதி இருக்கிறதோ இல்லையோ, அமெரிக்க டயாபெடிஸ் அசோசியேஷன், பருவமடைந்த (15வயதிற்கு மேல் அனைவரும்) எல்லோரும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இந்த டெஸ்டை செய்ய சொல்கிறது. பிரிடயாபெடிக் மற்றும் சுகர் உள்ளவர்கள்-மூன்று மாதங்களுக்கு ஒருமுறை-வாழ்நாள் முழுதும்.
இவர்கள் பழைய பார்முலா (28.7 X A1C – 46.7 = eAG) படி Hba1c-6 இருந்தால் ரத்த சர்க்கரை 126 எனவும், 7 இருந்தால் 154 எனவும், 8 இருந்தால் 183 எனக் கொள்ளலாம் என்று கூறினார்கள். அதையே பின்பற்றி நம் லேபுகளும் ஆவரேஜ் சர்க்கரை அளவை ரிப்போர்டில் தருகின்றன.
ஆனால் சர்க்கரை உள்ளவர்கள் தினமும் டெஸ்ட் செய்து பார்த்து ஒரு நோட்டில் எழுதி வைத்து ஆவரேஜ் பார்த்தால் இது தவறு என்று தெரியும். இந்த பழைய பார்முலா தான் முக்கால்வாசி லேபுகளில் செய்யப்படுகிறது. சுகரை கம்மியாக இது காட்டுகிறது. இதனால் பேஷண்டுகள் "நம் சர்க்கரை கரெக்டாக இருக்கிறது" என நம்ப வாய்ப்பு இருக்கிறது.
Nathan formula என்ற இன்னொரு கோளாறு பார்முலாவும் உள்ளது.
Dr. Richard Bernstein மற்றும் Jeff Cyr அவர்களின் தனிப்பட்ட கருத்துப்படி ஒரு புதிய பார்முலா கரெக்டாக சர்க்கரை அளவைக் காட்டுகிறது.
A1CX35.6-77.3=average estimated blood sugar
இதன் படி
If A1Cx35.6-77.3=average blood sugar,
then
If A1C = 4.5, avg = 83
If A1C = 4.6, avg = 87
If A1C = 4.7, avg = 90
If A1C = 4.8, avg = 94
If A1C = 4.9, avg = 97
If A1C = 5, avg = 101
If A1C = 5.1, avg = 105
If A1C = 5.2, avg = 108
If A1C = 5.3, avg = 111
If A1C = 5.4, avg = 115
If A1C = 5.5, avg = 119
If A1C = 5.6, avg = 122
7%A1C actually=an average blood sugar of 172 mg/dl.
8%A1C actually=an average blood sugar of 207 mg/dl.
நாம் இதுவரை Hba1c 5.7-6.4 என்பது பிரி டயாபெடிக் எனவும், 6.4க்கு மேல் இருந்தால் டயாபெடிக் எனவும் நினைத்திருந்தோம்.
அதனால் hba1c 5.7க்கு கீழே இருந்தால் நமக்கு ஒன்றும் இல்லை என நினைத்திருந்தோம். மேலே சொன்ன புதிய பார்முலா படி நம் hba1c அளவை 5 க்கு கீழ் கொண்டு வந்து சர்க்கரை வியாதி எமனை தள்ளியே வைப்போம்.

நான் என்ன தப்பு செஞ்சேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி?


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore 



நேரடியாகவும் மறைமுகமாகவும் நாம் சாப்பிடும் வெள்ளை கலரிலான சர்க்கரையின் அளவு:

1750: வருடத்திற்கு இரண்டு கிலோ ஒரு நபருக்கு
1850: வருடத்திற்கு பத்து கிலோ ஒரு நபருக்கு
1994: வருடத்திற்கு 60 கிலோ ஒரு நபருக்கு
1996: வருடத்திற்கு 80 கிலோ ஒரு நபருக்கு

வாழ்நாளில் நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு- 2 டன்.

அப்புறம் ஏன்யா நமக்கு இதெல்லாம் வராது:
1. சர்க்கரை வியாதி
2. பிரஷர்
3. இதயவியாதி
4. உடற்பருமன்
5. அதிக கொலஸ்டிரால்
6. fatty liver

மாரடைப்பு ஏன் வருகிறது ?


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
ஸ்டிரெஸ், அதிக ரத்த சர்க்கரை அளவு, அதிக இன்சுலின் அளவு, எக்சர்சைஸ் செய்யாமை, சிகரெட், காற்றில் உள்ள மாசு, அதிக பிரஷர், வயது அதிகரித்தல், ஒமேகா 6 கொழுப்புஅதிகமுள்ள எண்ணெய்கள் (சூரியகாந்தி, ஆமணக்கு, தவிட்டு, கனோலா), ஹோமோசிஸ்டீன் எனும் கெமிக்கலின் அளவு ரத்தத்தில் அதிகரித்தல் போன்ற பல கூறுகள் நம் ரத்தக்குழாய்களில் உள்லைனிங் போன்று இருக்கும் எண்டோதீலியல் செல்களை டேமேஜ் செய்கின்றன. செல்லின் தோலில்(cell membrane) கொலஸ்டிரால் உள்ளது. இந்த தோல் டேமேஜ் ஆகும் போது LDL அங்கு சென்று கொலஸ்டிராலை வைத்து ரிப்பேர் செய்கிறது. செல் சரியானவுடன், HDL அந்தக் கொலஸ்டிராலை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஈரலுக்கு எடுத்துச் சென்று அழிக்கிறது.
LDL, செல்லின் டேமேஜ் ஆன இடத்தில் கொலஸ்டிராலை, 'பேன்ட் எய்ட்' போல் ஓட்டி விட்டு செல்கிறது. இப்போது அந்த செல் தன் தோலை சரி செய்ய முற்படுகிறது. அதனை சரி செய்ய சாட்சுரேட்டட் கொழுப்புகள் (வெண்ணை/முட்டை) மற்றும் புரதங்கள் தேவை.
நாம் சாதாரணமாக மூன்றுவேளையும் சாப்பிடும் இட்லி/தோசை/சாதம்/குழம்பு/காய்கறி/சப்பாத்தி,etc., வில் சுத்தமாக சாட்சுரேட்டட் கொழுப்புகள் இல்லை எனலாம். புரதமும் கம்மி. இதனால் செல் அதன் தோலை சரி செய்ய முடியாமல் தவிக்கும். இதைப் பார்க்கும் LDL, "இந்த ஓட்டைஅடைக்கப்படவில்லை" எனக்கருதி இன்னும் கொஞ்சம் கொலஸ்டிராலை அங்கு அப்பி விட்டு போகிறது. நாளாக நாளாக கொழுப்பு அதிகம் படிந்து மாரடைப்பில் கொண்டு வந்து விடுகிறது.
நாளாக நாளாக உடம்பில் இருக்கும் பல ரத்த நாளங்களில் இது நடக்கிறது. அதனால் LDL ன் தேவை அதிகமாகி, ஈரல் அதிகமான LDLலை சுரக்கிறது. மேலே எழுதியிருப்பதை மீண்டும் படித்தால் ஒரு உண்மை புரியும். ரத்தக் குழாயில் கொழுப்பு படிவது அது காயம் படுவதாலேயன்றி LDL கொலஸ்டிரால் அதிகம் இருப்பதால் அல்ல. உள்காயம் அதிகமாக இருந்தால் LDL அதிகமாக இருக்கும். இது ஒரு அறிகுறி.
LDL லை பழி சொல்வது என்பது, வீட்டி்ல் தீப்பிடித்தால், தீயை அணைக்க வரும் தீயணைப்பு வீரரை பழி சொல்வது போலாகும். அவரை கட்டி வைத்து உதைத்தால் தீ அணைந்து விடுமா? அதனால் தான் LDL அதிகம் இருக்கும் பலருக்கும் ஸ்டாடின் மருந்து கொடுத்தும், இதய வியாதிகள் வருவதை தடுக்க முடிவதில்லை.
இதற்கு வைத்தியம் மருந்து மூலம் LDL லை குறைப்பது அல்ல. பேலியோ போன்ற சாட்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் புரதம் அதிகமுள்ள நல்ல உணவுமுறையும், பேலியோ மூலம் இன்சுலின் லெவலையும் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைப்பதும், டயட் மூலம் பிரஷரை நார்ம்லாக்குவதும், உடற்பயிற்சியும், சிகரெட்டை விடுவதும், மன அழுத்தத்தை தியானம்/யோகா மூலம் செல்கள் காயமடைவதை குறைப்பது மட்டுமே.

சப்பாத்தி சர்க்கரை வியாதிக்கு நல்லதா?


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry)


100கிராம் கோதுமை மாவில் 340கலோரிகள் உள்ளன. 100கிராம் சர்க்கரையில் 387 கலோரிகள் உள்ளன.
சர்க்கரைக்கு அடுத்து ரத்தத்தில் சுகரை ஏற்ற வல்லது கோதுமை உணவு தான்.
சுகர் பேஷண்டை சப்பாத்தி சாப்பிட சொல்வது என்பது நெருப்பை அணைக்க பவர் பெட்ரோலுக்கு பதில் சாதா பெட்ரோலை ஊற்றுவது போலாகும்.
சிறுதானிய உணவு? அதுவும் சப்பாத்திக்கு இணையாக ரத்த சர்க்கரையை உயர்த்தும். கலோரிகளும் அதே அளவு.
புழுங்கல் அரிசி ஓரளவிற்கு தேவலாம். ஆனால் இது டீசல் போன்றதே. (கோதுமை, சிறுதாணியம், அரிசி, சர்க்கரை, கருப்பட்டி, தேன், பனைவெல்லம் முதலிய அனைத்தும் ரத்தத்தில் சர்க்கரை அளவை மிகவும் அதிகரிப்பதே)
ரத்த சர்க்கரை அளவு எனும் தீயை அணைக்கும் தண்ணீர், பேலியோ உணவுகளே. ஒரு நாளில் ஒரு வேளை நீங்கள் எடுக்கும் மாவுச்சத்து அளவை பேலியோ டயட்காரர்கள் மூன்று நாட்களுக்கு எடுக்கிறார்கள்.
இப்போது புரிகிறதா, சர்க்கரை வியாதி பேலியோயால் எப்படி குணமாகிறது என்று.
மேலும் விபரம் அறிய glycemic index/glycemic load என கூகிளில் தேடவும்.

எடைபயிற்சியும் பேலியோவும்! அனுபவ கட்டுரை தொடர் !!! பாகம் -1


.
எச்சரிக்கை! இது உடலில் உயர் இரத்த அழுத்தம், மிகு மற்றும் குறைந்த சர்க்கரை நோய், இதய நோய் , சிறுனீரக கோளாறு, முடக்குவாதம், மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கடைபிடைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள படுகிறார்கள்! மீறி செய்து ஏற்ப்படும் விளைவுகளுக்கு குழுவோ கட்டுரையாளரோ பொறுப்பு ஏற்க இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்!
.


.

பேலியோ டயட்டில் இருந்து கொண்டு கடுமையான உடற்பயிற்ச்சி செய்துவருபவர்களுக்கு உடல் எடை குறைவு என்பது மெதுவாகவே நடக்கும்! ஆனால் அதே பேலியோ டயட் எடுத்துகொண்டு மிதமான நடைபயிற்ச்சி மட்டும் செய்பவர்கள்களுக்கு எடை இழப்பு வேகமாக ஏற்படும்! கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆனால் அதுதான் உண்மை! 
.
.
ஏனென்றால் பேலியோ டயட்டில் இருப்பவர்கள் மிக தரமான அதிக அளவு புரோட்டீனும் கொழுப்பும் எடுக்கிறார்கள்! இப்படி ஹை எஸன்ஸியல் ப்ரோட்டீன் எடுத்துகொண்டு நடைபயிற்ச்சியோடு சேர்ந்து ஜிம்மில் கடுமையான எடைபயிற்ச்சிகள் செய்யும்போது உடலில் இரண்டு விதமான வேலைகள் நடக்கும்! ஒன்று கொழுப்பு வேகமாக கரையும்! ஆனால் இன்னொருபக்கம் உடற்பயிற்சியால் தசைகள் வேகமாக வளரும்! 
.
.
எந்த அளவுக்கு கடுமையான பயிர்ச்சியினால் தசை செல்கள் பிளவு படுகிறதோ அந்த அளவுக்கு தசைகளின் வளர்ச்சி வேகமாக நடக்கும்! அதாவது ஒரே நேரத்தில் கொழுப்பு எடை குறையவும் தசைகளின் எடை கூடவும் செய்வதால் நமக்கு எடை இழப்பு அதிகம் இருக்காது! ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் சென்று பார்த்தால் அவர்கள் உடல் கொழுப்பு அனைத்தும் எரிக்கப்பட்டு அழகான தசை திரள்களுடன் கட்டுடலாக காட்சியளிப்பார்கள்! 
.
.
இவர்கள் எடைகுறைப்பு நிகழவில்லையே என குழம்ப தேவையில்லை! போதாகுறைக்கு நாம் சாப்பிடும் பாதாம் பருப்பு, பசு மஞ்சள், துளசி, பூண்டு, போன்றவை தசைகளில் ஏற்ப்படும் சிதைவை உடனுக்குடன் சரிசெய்து விடுவதால் மற்ற உணவு முறைகளை விட பேலியோ டயட் எடுத்துகொண்டு எடைபயிற்ச்சி செய்பவர்கள் வேகமாக கட்டுடலை பெறுவார்கள்! 
.
.
மேலும் கடுமையான உடற்பயிற்சியின் போது உடலில் சுரக்கும் கார்டிசால் மற்றும் ஃப்ரீரேடிகல்ஸ் போன்ற தீங்குவிளைவிக்கும் நச்சுபொருட்கள் நாம் எடுத்துகொள்ளும் ஆண்ட்டிஆக்ஸ்டெண்டுகளால் உடனுக்குடன் துப்புறவு செய்யப்படுவதால் பேலியோ டயட் பாடிபில்டர்களுக்கு ஒரு மிகச்சிறந்த டயட்டாக இருக்கும் என்பதில் துளியளவும் சதேகமில்லை!
.
.
பேலியோ டயட்டில் இருப்பவர்கள் வெருமனே நடைபயிற்ச்சி மட்டும் செய்யும் போது உடலில் உள்ள கொழுப்பு மட்டும் வேகமாக கரையும்! ஆனால் தசை வளர்ச்சி என்பது இருக்காது! அதனாலயே அவர்கள் மிக விரைவான எடை இழப்புக்கு ஆளாகிறார்கள்! உடல் முழுதும் திரள் திரளாக தசை வளர்ச்சி பெற்றவர்கள் உடலில் மீண்டும் கொழுப்பு சேர்வது கடினம்! 
.
.
ஆனால் தசை திறள்கள் இல்லாது எடை குறைபவர்கள் டயட்டை கைவிட்டால் சொற்ப காலத்திலேயே மளமளவென எடை கூடிவிடுவார்கள் என்பதும் உண்மையே! ஏனென்றால் தசைதிரள்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு அந்த தசை அழியாமல் பாதுகாக்க உடல் தன்னிச்சையாக உடலில் சேரும் கொழுப்பை எரித்துகொண்டே இருக்கும்! இந்த ஆட்டோ ஃபேட்பர்னிங் மெட்டபாலிசம் உடல் இளைத்து எலும்பும் தோலுமாக இருப்பவர்களுக்கு நடக்காது! 
.
.
அவர்களை பொருத்தமட்டில் டயட்டில் இருந்தால் எடை மெயின்ட்டென் ஆவதும் டயட்டை நிருத்தி காமன்மேன் டயட்டுக்கு மாறியவுடனே எடை கூடுவதும் தவிற்க்கமுடியாத விஷயமே! ஆனால் கடுமையான எடைபயிற்ச்சி என்பது எல்லா வயதினர்களுக்கும் சாத்தியமில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்! 
.
.
உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து 40 வயதுக்கு கீழ் இருந்தால் தகுந்த எடைபயிற்ச்சி ஆலோசகர்களின் ஆலோசனை பெற்று தாராளமாக ஜிம்மில் பயிற்ச்சி பெறலாம்! சாதகமான மரபனுவும் நோயற்ற உடல் வளமும் கொண்டவர்கள் 50 வயதிலும் தாராளமாக முயற்ச்சிக்கலாம்! 
.
.
ஆரோக்கியமான கட்டுடல் என்பது எல்லோருக்கும் நிச்சயம் சாத்தியமே! இனி வரும் பாகங்களில் ஆரம்ப நிலை எடைபயிற்ச்சிகளையும் அதன் செய்முறைகளையும் ஒவ்வொரு வாரமும் எழுதுகிறேன்!

Gunaseelan

Sunday, November 6, 2016

நாம் ஏன் அதிக பசியுடன் இருக்கிறோம்?




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
நாம் நம் தாத்தாக்களை விட அதிகமாக உண்கிறோம். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது நம் தவறு கிடையாது. நம் முன்னோர்கள் அதிக கொழுப்பு உண்டனர், ஆரோக்கியமாக இருந்தார்கள்.
1970களில் அமெரிக்க அரசாங்கத்தால் கொலஸ்டிரால் கெட்டது என்ற தவறான கொள்(ல்)கையால், நாம் கம்மி கொழுப்புள்ள தானியத்தை அதிகம் சாப்பிட ஆரம்பிக்க நேர்ந்தது.
கார்ப் (தானியம்) அதிகம் சாப்பிட்டால் இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும். இன்சுலின் பசியைத் தூண்டும் (ஏனென்றால் இன்சுலின் ஒரு பஞ்ச கால ஹார்மோன்). நாம் அதிகமாக சாப்பிடுவதற்கு காரணம், நமது இன்சுலின் அளவுகள் அதிகமாக இருப்பதே.
நாம் நம் முன்னோர்களை விட அதிகம் சாப்பிடக் காரணம் நாம் அவர்களை விட அதிக பசியுடன் இருப்பதாலேயே ஆகும். நம் தவறு இதில் இல்லை.
அதற்கு காரணம் முன்னெப்போதும் இல்லாததை விட நாம் தானியத்தை அதிகமாக நம்பி உண்பதே.
நல்ல கொழுப்பு கொஞ்சம் அதிகமாக உண்டு, கார்புகளை கம்மி செய்தால், நாம் நம் முன்னோர் போல் ஒபிசிடி, சுகர், பிரஷர், இதய வியாதி, ஆட்டோ இம்யூன் வியாதிகள் இல்லாமல் வாழலாம்.

பேலியோ உணவுமுறை தவறா?



Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

நூறு வருடங்களுக்கு முன்பு டிபி எனப்படும் காசநோய்க்கு மருந்து கிடையாது. ஆனால் காலம் காலமாக டிபி நோயாளிகளுக்கு பேலியோ போன்ற உணவுமுறையே பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு காரணம், தானியங்களை ஓரங்கட்டுவதன் மூலம் உடலில் க்ளுக்கோஸ் அளவு கம்மியாகி, பாக்டிரியாக்களுக்கு ஊட்டம் கம்மியாகி அவை பல்கிப் பெருகுவது குறையுமென்பதால். பலர் நன்றாக குணமாகவும் செய்தார்கள்.

இதைப் பற்றி மேலும் அறிய விரும்பிய Weston A Price எனும் பல் மருத்துவர் உலகம் முழுக்க பல்வேறு பழங்குடி இனத்தவரிடம் ஆராய்ச்சி மேற்கொண்டு 1939ல் Nutrition and Physical Degeneration, A Comparison of Primitive and Modern Diets and Their Effects என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் பழங்குடியினர் அவர்களின் உணவை உண்ணும் போது தோன்றாத பல் சொத்தை, காசநோய், பிரசவத்தின் போது வரும் பிரச்சினைகள், பர்சனாலிட்டி பிரச்சினைகள், டிப்ரஷன் போன்றவை , இவர்கள் இன்றைய நவீன மனிதனின் உணவுகளை எடுக்க ஆரம்பிக்கும் போது தோன்றுவதை குறிபிட்டுள்ளார்.

1985ல் Boyd Eaton எனும் ஆராய்ச்சியாளர் எழுதிய Paleolithic Nutrition — A Consideration of Its Nature and Current Implications எனும் கட்டுரை பரவலான கவனத்தைப் பெற்றது.

ஒரு நூற்றாண்டிற்கு முன்பே பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆய்ந்தறிந்த சார்லஸ் டார்வின், அவர் புத்தகமான origin of species ல், "மனித உடல் மற்றும் உயிர் கற்காலத்திர்காக வடிவமைக்கப்பட்டவை. நவீன சூழல் மற்றும் உணவு பல்வேறு வியாதிகளை உருவாக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பல வருட ஆராய்ச்சிக்கு பின்னர் Loren Cordain என்ற ஆராய்ச்சியாளர் பேலியோ உணவுமுறை  எனும் நூலை எழுதினார். அதன் பின்னர் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகள் அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்டு, பேலியோஉணவுமுறை  பல வியாதிகளிடமிருந்து மனிதர்களை காப்பாற்ற வல்லது என நிருபிக்கப்பட்டது.

லேட்டாக விழித்துக் கொண்ட அமெரிக்க அரசு 2015ல் "சாட்சுரேட்டட் கொழுப்பு நிரம்பிய வெண்ணையும், முட்டையும் உடலுக்கு தீங்கல்ல, கொலஸ்டிரால் ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற எங்கள் கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்" என அறிவித்தார்கள்.

சர்க்கரை தீமையானது என்பது உலகமே ஒப்புக் கொண்ட ஒரு உண்மை. processed food, junk food, பொரித்த உணவுகள், கோலா பானங்கள், ஆல்கஹால், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை எல்லா டாக்டர்களும் சாப்பிடக்கூடாது என்றே அறிவுறுத்துகின்றனர்.

மேலே சொன்ன இரு விஷயங்களையும் இன்னொரு காண்செப்ட்டோடு இணைத்தால் அதுவே பேலியோ உணவுமுறை . அந்த கான்செப்ட் என்னவென்றால், உணவில் சேர்க்கப்படும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தின் அளவுகளை குறைத்தல்.

பல்வேறு ஆராய்ச்சிகள் மாவுச்சத்தை குறைத்துக் கொடுத்து செய்யப்பட்டதில் சுகர், பிரஷர், உடற்பருமன் போன்ற பல்வேறு வியாதிகள் குறைவதாக/நீங்குவதாக தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் உருவானது தான் தமிழ் பேலியோ உணவுமுறை . மூன்று வேளை நான்வெஜ் என்றெல்லாம் இதில் இல்லை. பேலியோவின் மூலப்பொருளான, கம்மி கார்ப், மித புரதம், அதிக சாட்சுரேட்டட் கொழுப்பு என்பதை மட்டுமே இதில் வலியுறுத்தப்படுகிறது. அதை சுத்த சைவமாகவும், முட்டை சேர்த்த சைவமாகவும் அல்லது அசைவமாகவும் மக்களே அவர்கள் கலாச்சாரத்திற்கேற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

ஆயிரக்கணக்கானவர்களுக்கு முழு ரத்த பரிசோதனையின் அடிப்படையில் இலவசமாக உணவுமுறை  வழங்கப்படுகிறது. அவர்கள் எடுக்கும் மருந்தகளை யாரும் நிறுத்த சொல்வதில்லை. வியாதிகள் குறையக் குறைய அவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரைப் பார்த்து மருந்துகளை குறைக்க/நிறுத்த மட்டுமே சொல்லப்படுகிறது. மற்றும் ஒவ்வொரு மூன்று மாதமும் அவர்கள் ஆரோக்கியம் எந்த அளவு முன்னேறியுள்ளது என்பதைக் காண ரத்த டெஸ்டுகள் பரிந்துரைக்கப் படுகிறது.

இன்றைய தேதியில் தமிழகம் முழுக்க 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த உணவுமுறையை  பின்பற்றி நலமாகி வருகிறார்கள். பல்வேறு கல்லூரிகளில் பேலியோ சம்பந்தமான கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஒரு உணவுமுறையை கற்றுக்கொடுப்பது என்பது தவறு என்று உலகின் எந்த சட்டத்திலும் சொல்லப்படவில்லை. மேலும் இலவசமாக அளிக்கப்படும் எந்தவொரு சேவையின் மேலும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வழியில்லை.

தனியொரு மனிதனின் முயற்சியால் பலரின் பிரச்சினைகள் இல்லாமல் போகும் போது, பலரின் பார்வை அங்கு விழும். புகழ் பெரும் போது பலரின் பொறாமை அவரை நோக்கி திரும்பும். அந்த பொறாமையின் வடிகாலாக சேறு வாரி இறைக்கப்படும். மேலே படும் சேற்றை துடைக்கக் கூட நேரம் இல்லாமல் சேவை செய்வோரை சேறு அல்ல, நெருப்பு கூட நெருங்காது.

இன்றைய தேதியில் தமிழகத்தில் பேலியோ பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. நாளை உலகளவில் சிறந்த ஆராய்ச்சி ஜர்னல்களில் அவை பிரசுரிக்கப்படும் போது, பரவலாக அனைத்து டாக்டர்களாலும் இந்த பேலியோ உணவுமுறை   பரிந்துரைக்கப்படும். அதுவரை தனியொரு மனிதனின் இந்த சேவை தொடரும். நாமும் அவருக்கு பக்கபலமாக இருப்போம்.

உணவியல் முரண்பாடுகள் - கொழுப்பு கெட்டதா, நல்லதா?




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemsitry), Coimbatore

ஒரு செயலை செய்தால் அதற்கு தக்க வினை இருக்கும். ஆனால் நாம் எதிர்பார்ப்பதற்கும், அறிவியிலால் சொல்லப்படுவதற்கும் எதிராக அந்தச்செயலுக்கு வினை நடந்தால், அது paradox எனப்படும். மருத்துவ உலகின் சில paradox களை பார்ப்போம்.

1. French paradox(பிரஞ்சு முரண்பாடு): 
அதிகம் சாட்சுரேட்டட் கொழுப்பு (நெய், முட்டை, இறைச்சி)எடுத்தால் மாரடைப்பு வரும் என மருத்துவ அறிவியல் சொல்கிறது. ஆனால் இவற்றை அதிகம் எடுக்கும் பிரஞ்சு மக்களுக்கு இதய வியாதி மிகக் குறைவான அளவில் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் யோசிக்கப்பட்டது (விட்டமின் k2 அவர்கள் உணவில் அதிகம், ஸ்டிரஸ் கம்மி, உணவில் ஆண்ட்டி ஆக்சிடண்டுகள் அதிகம் என). கடைசியில் சாட்சுரேட்டட் கொழுப்பு நல்லது, அதனால் தான் இதய வியாதி கம்மியாக வருகிறது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
2. Israeli Paradox : 
டாக்டர்கள் அறிவுறுத்தும் சன்பிளவர் ஆயில், சோயா ஆயில், சோள எண்ணெய்களை பயன்படுத்தி, டாக்டர்கள் எதிர்க்கும் சாட்சுரேட்டட் கொழுப்புகளை கம்மியாக எடுக்கும் இஸ்ரேலியர்களுக்கு மிக அதிக அளவில் மாரடைப்பு வந்தது. இன்று இந்த கமர்சியல் எண்ணெய்களில் அதிகம் உள்ள ஒமேகா 6 எனும் அமிலம் இதய வியாதியை கொண்டு வருவதாக கண்டுப்பிடித்துள்ளனர்.
3.Spanish Paradox
1976ல் திடீரென இதய வியாதி வருதல் குறைந்தது. என்ன காரணம் என்று ஆராய்ந்ததில் அந்த வருடம் தேசிய அளவில் இறைச்சி, பால் பொருட்கள், மீன் ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தது தெரிய வந்தது. மற்றும் கார்புகள் குறைவாக எடுக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
4. Japanese Paradox:
ஜப்பானியர்களுக்கு இதய வியாதி மற்ற நாட்டினரை விட குறைவு. ஆனால் கொலஸ்டிரால், பிரஷர், சர்க்கரை வியாதிகள் மற்ற நாட்டு அளவுகள் போல் இருக்கிறது. ஆராய்ந்து பார்த்ததில் அவர் அதிக கடலுணவு எடுப்பதே காரணம் என அறிந்தார்கள். இதயத்தை புண்ணாக்கும் ஒமேகா 6 (சூரியகாந்தி, ஆமணக்கு, சோள, தவிட்டு எண்ணெய்கள்) அமிலத்திலின் கெடுதலை, கடல்மீனில் இருக்கும் ஒமேகா 3 அமிலம் தடுக்க வல்லது.
5. masai paradox: 
கென்யா நாட்டின் மசாய் பழங்குடிகள் தினமும் பால் பொருட்கள், இறைச்சி என 3000கலோரிகள் உண்டும் அவர்கள் ஒல்லியாகவும், இருதயத்தில் அடைப்பு சுத்தமாக இல்லாமலும் இருந்திருக்கிறார்கள். கொலஸ்டிராலும் அவர்கள் ஒரு நாளைக்கு 600-2000Mg அளவு எடுக்கிறார்கள். ரெகுலர் உணவுகளில் இவ்வளவு கலோரிகள் எடுத்தால் உடற்பருமன், சுகர், பிரஷர், இதய வியாதி வந்துவிடும். ஆனால் கலோரிகள் எவ்வளவு என்பது முக்கியமல்ல, எதில் இருந்து கிடைக்கிறது என்பது தான் முக்கியம் என இவர்கள் உணர வைத்தார்கள்.
பேலியோ பலருக்கு முரணாக தோன்றலாம். ஆனால் பல வியாதிகளை இல்லாமல் ஆக்குகிறது.

பேலியோ உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு வருமா?




பேலியோ உணவுமுறை என்றதுமே, கிட்னி சட்னி ஆகும், சிறுநீரகம் சின்னாபின்னமாகும் போன்ற விமர்சனங்கள் மருத்துவர்களிடமும் சில பொது மக்களிடமும் எழுவது சகஜமாகிவிட்டது. ஊடகங்களும் இது போன்ற ஆதரமில்லாத தவறான ஆனால் சுவாரசியமான பரபரப்பு மிக்க செய்திகளை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்துகின்றன.
இதன் பின்னணி என்ன?
பேலியோ உணவுமுறை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கறியும் கோழியும் முட்டையும். இறைச்சி வகைகளில் புரதம்(protein) அதிகம் இருப்பதால் சில வருடங்களில் சிறுநீரக பாதிப்பு உண்டாகும் எனும் தவறான கருத்து நிலவுகிறது.
புரதம் என்றால் என்ன?
நம் உடலின் கட்டுமானத்திற்கு உதவும் building blocks தான் புரதம்.
Cytoskeleton எனப்படும் நமது செல்களின் அஸ்திவாரம் புரதம்.
actin, myosin எனப்படும் புரதங்கள் தான் நம் தசைகளின் முதுகெலும்பு.
நாம் உண்ணும் உணவை செரிமானம் ஆக்க உதவும் அனைத்து என்சைம்களும் புரதம் தான்.
இன்சுலின், பிட்யூட்டரி போன்ற அதிமுக்கிய ஹார்மோன்கள் புரதம் தான்.
நோய் எதிர்ப்பு சக்தி என்று கூறுகிறோமே, அந்த இம்யூனோக்ளோபுளின் புரதம் தான்.
இது மட்டுமில்லாமல் உடலில் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும் உதவும் பெரும்பாலான என்சைம்கள் புரதம் தான்.
சுருக்கமாகச் சொன்னால் புரதம் தான் நம் உடலின் உயிர்நாடி.
எவ்வளவு புரதம் ஒருநாளைக்கு தேவை?
ஒரு சராசரி மனிதனுக்கு அவனது உடல் எடையை போல 0.7 மடங்கு கிராம் புரதம் தேவை. அதாவது அவனது உடல் எடை 80 கிலோ இருந்தால், அவனுக்கு 56 கிராம் புரதம் தினசரி தேவை. பிரசவமாக இருக்கும் பெண்கள், தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், குழந்தைகளுக்கு(கிலோவுக்கு 1.5 கிராம் வரை) புரதம் இன்னும் அதிகம் தேவைப்படும். இதில் குறிப்பாக, இந்தியாவில் உள்ளது போன்று, பெரும்பாலும் சைவ உணவுகளில் இருந்து புரதம் எடுத்தால், அதன் குறைந்த தரம் காரணமாக இன்னும் அதிக புரதம்(ஒரு கிலோ எடைக்கு 1 கிராம்) தேவை.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அளவு குறைந்தபட்ச அளவு மட்டுமே. இதற்கு குறைந்து புரதம் எடுத்தால் தளர்வு, தசை இழப்பு, உடல் சோர்வு மற்றும் பல கோளாறுகள் உடலில் ஏற்படும்.
மிருகங்களின் புரதம் உடலுக்கு கெடுதலா?
இது தான் மிகப்பெரிய காமெடி.
புரதங்களின் மூலக்கூறுகள் அமினோ ஆசிட் எனப்படும். 20 வகை அமினோ ஆசிட்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான புரதங்கள் உடலில் தயார் செய்ய படுகின்றன. இதில் 9 வகை அமினோ ஆசிட்கள் உணவில் இருந்து மட்டும் தான் உடலுக்கு கிடைக்க செய்ய வேண்டும். இவை essential amino acids என்றழைக்கப்படும். இவை அனைத்தும் ஒரு சேர கிடைப்பது முட்டை மற்றும் மிருக புரதங்களில் மட்டும் தான். அரிசியிலோ பருப்பிலோ சுண்டலிலோ அனைத்து essential அமினோ ஆசிட்கள் கிட்டுவதில்லை. எனவே தான் பருப்பு சுண்டல் வகைகளை உணவியல் நிபுணர்கள் poor man's meat (ஏழையின் இறைச்சி) என்றழைப்பர். முட்டை புரதத்தை reference protein என்றழைப்பர். அதாவது மற்ற எல்லா உணவு வகைகளிலும் எவ்வளவு புரதம் இருக்கிறது, அதன் தரம் என்ன என்பதை முட்டையுடன் ஒப்பிட்டுத் தான் விளக்குவார்கள். நாம் பள்ளி செல்லும்போது எல்லா பாடத்திலும் ஒருவன் முதல் ரேங்க் வாங்குவானே, எல்லாரும் அவனை மாதிரி படிக்க வேண்டும் என்பார்களே, அவனைப் போல.
பேலியோ அதிக புரதம் எடுக்கும் உணவுமுறையா?
இது பொதுவாக மக்களிடமும் மருத்துவர்களிடமும் நிலவும் தவறான கருத்து.
பேலியோ என்பது
- குறைந்த மாவுச்சத்து (carbohydrate)
- அதிக கொழுப்பு (fat)
- தேவையான அளவு புரதம் (protein)
எடுக்கும் உணவுமுறை.
பொதுவாக இந்தியர்கள் உண்ணும் உணவில் இருப்பது 30-40 கிராம் புரதங்களே. அதுவும் தரம் குறைந்த தானிய புரதங்கள்.
பேலியோ உணவில் கிட்டத்தட்ட 80 முதல் 100 கிராம் வரை உயரிய மிருக புரதங்கள் கிடைக்கும். அனைத்து essential அமினோ ஆசிட்களும் கிட்டும். உடல் தேவையான அளவு புரதங்களைப் பெற்று செழிப்புடன் விளங்கும்.
புரதம் நல்லது சரி, அதிகபட்சம் தினம் எவ்வளவு எடுக்கலாம்?
ஒரு சராசரி மனிதன் ஒரு கிலோவுக்கு 2.5 கிராம் என்கிற அளவு வரை புரதங்கள் எடுக்கலாம். எந்த பிரச்னையும் இல்லை. அதாவது ஒரு 80 கிலோ எடையுள்ள மனிதன் தினசரி 200 கிராம் வரை எடுக்கலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது. இது ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல். ஆனால் நம் உடலால் அதிகபட்சம் ஜீரணம் செய்யக்கூடியது கிட்டத்தட்ட 375 கிராம் புரதம். (Theoretical maximum)

கவனிக்கவும்: பேலியோவில் பரிந்துரைப்பது 80-100 கிராம் புரதங்களே.
சரி, 56 கிராம் குறைந்தபட்ச தேவை எனும்போது, 150 கிராம் எடுத்தால் என்ன ஆகும்?
1. பாடி பில்டிங்கில், விளையாட்டு துறையில் உள்ளோர், அதிக புரதம் எடுக்கும்போது அந்த புரதங்கள் actin மற்றும் myosin ஆக மாறி, தசைகளை மெருகேற்றும்.
2. குறைந்த கார்போஹைட்ரேட் உணவுமுறையை பின்பற்றும் ஒரு சராசரி மனிதர் அதிக புரதங்கள் எடுத்தால், மிச்ச புரதங்கள், gluconeogenesis எனும் செயல் மூலம், உடலில் குளுக்கோஸ் ஆக மாறி, மூளை, சிவப்பு அணுக்கள், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கு சக்தி தரும்.
3. மிச்சக் கழிவுகள் யூரியாவாக மாறி, சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும்.
இந்த கடைசி பாயிண்டை தான் மக்கள் பிடித்துக்கொண்டு பேலியோவைத் தூற்றிய வண்ணம் உள்ளனர்.
உண்மையில் அதிக புரதம் எடுத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?
- ஆராய்ச்சிகளில், ஏற்கனவே சிறுநீரக செயலிழப்பு (renal failure) உள்ள மக்களுக்கு அளவுக்கு மீறிய புரதம் கொடுத்தால், தொந்தரவு அதிகமாகும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தான், சிறுநீரக கோளாறு ஏற்கனவே இருப்பவர்களுக்கு, 55 கிராமுக்கு கீழ் புரதம் எடுக்க வேண்டும் என்று நம் குழுவில் பரிந்துரைக்கப்படுகிறது.
(கவனிக்கவும்: renal failure உள்ளவர்களுக்கும் கூட 55 கிராம் புரதம் குறைந்தபட்சம் வேண்டும். ஜீரோ புரதம் பரிந்துரைப்பது இல்லை. உடலில் அத்துனை முக்கிய வேலை உள்ளது புரதத்திற்கு.)
- ஆனால், எந்த தொந்தரவும் இல்லாத, சிறுநீரகம் நன்றாக செயல்படும் மக்களுக்கு அதிக புரதம் கொடுத்தால் அவர்களுக்கு சிறுநீரக தொந்தரவு வரும் என்று கூறுவது முட்டாள்தனம். அதற்கு எந்த ஒரு ஆராய்ச்சி அடிப்படையும் இல்லை.
- சிறுநீரகத்தின் முக்கிய வேலைகளுள் ஒன்று புரதம் ஜீரணமாகும்போது உருவாகும் nitrogenous கழிவுகளை வெளியேற்றுவதுதான். அதனால் தான் இந்த சந்தேகங்கள் வருகின்றன.
- உடலில் புரதங்களை ஜீரணம் செய்ய ஒரு எல்லை இருக்கிறது. பல ஆராய்ச்சிகளின் மூலம், அது மொத்த உணவின் 35 சதவீதம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தனை புரதம் உண்பது சாத்தியம் அல்ல. அதனைக் கட்டுப்படுத்த மூளையில் பல்வேறு செயல்பாடுகள் உள்ளன.


https://www.ncbi.nlm.nih.gov/pubmed/22319049


- அளவுக்கு விஞ்சிய புரதங்கள் எடுக்கும்போது சிறுநீரகத்தில் சில மாற்றங்கள் நிகழ்வது சில ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

http://www.sciencedirect.com/science/article/pii/B9780123919342000138

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/10578207

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3602135/


- இந்த மாற்றங்கள் யாதெனில்
*glomerular filtration rate (GFR) எனப்படும் சிறுநீரகத்தின் வடிகட்டும் வேகம் அதிகம் ஆகிறது.
*glomeruli எனப்படும் சிறுநீரகத்தின் அடிப்படை யூனிட்கள் அளவில் பெரியதாகின்றன.
- இந்த மாற்றங்களை hyperfiltration என்பார்கள். இவற்றை, ஆரோக்கியமான சிறுநீரகத்தின் adaptive changes (தேவைக்கேற்றார் போல் செயல்திறனை மாற்றி அமைத்து கொள்ளும் தன்மை) என்பார்கள்.

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1262767/


அதாவது, மரம் வெட்டுபவனை விட ஓவியனுக்கு கை நேர்த்தி அதிகம் உள்ளதே, அது போல.
- இத்தகைய adaptive changes பிரசவமாக இருப்பவர்க்கும், ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தவருக்கும் சாதாரணமாக நடப்பதுண்டு. உதாரணத்திற்கு, ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தவருக்கு, இன்னொரு சிறுநீரகம் கொஞ்சம் அதிக வேலை செய்யும். GFR அதிகமாக இருக்கும். பிரசவமாக இருப்பவர்க்கு 50% கூடுதல் வேலைப்பளு சிறுநீரகத்திற்கு இருக்கும். ஆனால், ஒரு போதும் அது பாதிப்படையாது.
http://journals.plos.org/plosone/article?id=10.1371%2Fjournal.pone.0097656



இந்த மிக உயரிய systematic review ஆராய்ச்சியில், அதிக புரதம் எடுப்பது gfr, urea, uric acid போன்றவற்றை சிறிது அதிகம் அடையச் செய்தாலும், அது சிறுநீரகத்தின் தேவைக்கேற்றார் போல் செயல்திறனை மாற்றி அமைத்து கொள்ளும் தன்மை தான். இதற்கு மருத்துவ ரீதியில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கத் தேவையில்லை என்று முடிவுரை கூறியுள்ளார்கள்.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3386674/



இந்த ஆராய்ச்சியில் அத்தகைய சிறு மாற்றங்களும் அதிக புரதம் எடுக்கும் யாருக்கும் நிகழவில்லை என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

http://www.sciencedirect.com/science/article/pii/B9780123919342000138



இந்த ஆராய்ச்சிக்கட்டுரையில், அதிக புரதம் எடுப்பது பற்றிய எல்லா ஆராய்ச்சிகளையும் ஒப்பீடு செய்து இறுதியாக ஒரு முடிவை எட்டியுள்ளார்கள். அதாவது, மேலே குறிப்பிட்டுள்ளது போல சிறு சிறு மாற்றங்கள் புரதம் அதிகம் எடுக்கும்போது நடந்தாலும், அவை சாதாரண adaptive மாற்றங்களே. அது பற்றி எந்த ஒரு தயக்கமும் தேவை இல்லை. ஆனால், நாம் பொதுவாக எடுக்கும் அதிக மாவுச்சத்து உணவுகளே, நீரிழிவு நோய் போன்ற கொடிய நோய்களை வரவழைத்து, diabetic nephropathy எனும் நீரிழிவினால் ஏற்படும் சிறுநீரக செயழிலப்பை அதிகப்படுத்தி, வருடம் ஒன்றிற்கு பல்லாயிரக்கணக்கான மரணங்களை நிகழ்த்துகின்றன என்கிறார்கள்.
இது மட்டும் இல்லாமல், பேலியோ போன்றதொரு குறைந்த மாவுச்சத்து, அதிக கொழுப்பு, தேவையான அளவு நல்ல புரதம் எடுக்கும் உணவுமுறையில், diabetic nephropathy எனும் நீரிழிவினால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு நோய் ஆரம்ப கட்டத்தில் இருந்தால், அது பூர்த்தி குணமடையவும் நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. சிலருக்கு கீட்டோஜெனிக் பேலியோ டயட் மூலம், ஆரம்பக்கட்ட diabetic nephropathy சரியாகி பழைய நல்ல நிலைமைக்கு சிறுநீரகம் திரும்பிவிட்டது என்றும் case ரிப்போர்ட்கள் உள்ளன.


http://journals.plos.org/plosone/article?id=10.1371%2Fjournal.pone.0018604

http://nutritionandmetabolism.biomedcentral.com/articles/10.1186/1743-7075-3-23


கவனிக்கவும்: சிறுநீரக கோளாறுகளுக்கு டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களில் கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதத்திற்கு மூல காரணம் diabetes(நீரிழிவு நோய்) மற்றும் hypertension(உயர் இரத்த அழுத்தம்). இவற்றை குணமாக்கவோ, ஏற்கனவே ஏற்பட்ட சிறுநீரக கோளாறை சரி செய்யவோ, தற்போது எந்த ஒரு மருத்துவமோ மருந்துகளோ இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். டயாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.
மறுபடியும் முதல் கேள்விக்கே வருவோம்.
பேலியோ உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு வருமா?
1. பேலியோ உணவு முறையால் சிறுநீரக பாதிப்பு வரும் என்று நினைப்பது அரை வேற்காட்டுத்தனமான ஆதாரம் அடிப்படைகளற்ற குற்றச்சாட்டு.
2. வேண்டுமானால், பேலியோ உணவுமுறை உங்களைப் பல எதிர்கால சிறுநீரக பாதிப்புகளில் இருந்து காப்பாற்றும். உங்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் அழுத்தத்தில் இருந்து விடுதலை அளிப்பதன் மூலம் உங்கள் சிறுநீரகங்களை செயலிழப்பில் இருந்தும், உங்களை டயாலிசிஸில் இருந்தும், மாற்று சிறுநீரகங்களுக்குக் காத்துக் கிடக்கும் கொடிய நிலைமையில் இருந்தும் காப்பாற்றும்.
எனவே, இல்லாத ஒரு பிரச்சனைக்கு பயந்து மாவுச்சத்து உணவு உண்டு, உங்களின் சிறுநீரகங்களை நீரிழிவு நோய்க்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் பலி கொடுக்க வேண்டுமா?
அல்லது பேலியோ உணவு முறை பின்பற்றி, உங்கள் சிறுநீரகங்களை பொன் போல பாதுகாத்துக்கொள்ள வேண்டுமா?
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!!

- Dr. Arunkumar, MBBS, MD(Pediatrics),  Erode.