Showing posts with label Paleo Warriar. Show all posts
Showing posts with label Paleo Warriar. Show all posts

Tuesday, April 4, 2017

விரதத்தினால் நம் உடலில் ஏற்படும் பத்து (10) நன்மைகள்

1) நம் உடலின் உள்காயங்களை (அழற்சி-INFLAMMATION) குணப்படுத்துகிறது.
2) எடை குறைப்பு திடீரென்று நிற்கும் போது, மீண்டும் எடை குறைப்பைத் தூண்டுகிறது.
3) இன்சுலின் எதிர்ப்பைக்(INSULIN RESISTANCE) குறைத்து டையபடிஸ் டைப் - 2 வருவதைத் தடுக்கிறது.
4) வளர்ச்சி ஹார்மோன்களின் (HUMAN GROWTH HARMONES) உற்பத்தி 5 மடங்கு அதிகமாகி, உடல் கொழுப்பை எரிக்க, தசைகளை வளர்க்க உதவுகிறது.
5) குறைபாடுள்ள செல்கள் பழுது பார்க்க தூண்டுகிறது. செல்களில் உள்ள உபயோகமற்ற பொருட்கள் வெளியேற்றப்படுகிறது. (AUTOPHAGY PROCESS)
6) நமது ஆயுளை நீடிக்கச் செய்யும்மற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக் கூடிய ஜீன் களில் (GENE EXPRESSION) நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, ஆயுளைக் கூட்டுகிறது.
7) ஆரோக்கியமான இருதயத்தை தந்து நமது ஆயுளை கூட்டுகிறது.
8) புற்று நோய் (CANCER) வருவதை தடுக்கிறது
9) நமது மூலையில் புதிய நியூரான்கள் (NEURONS) உற்பத்தியைத் தூண்டி மூளையை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
10) அல்சீமர் நோய் (Alzheimer’s Disease) வருவதைத் தடுக்கிறது.
விரதம் இருப்போம்....பயன் / பலன் பெறுவோம்.

முக்கிய குறிப்பு :
நீரிழிவு நோய் உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இருதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் விரதம் இருப்பதை தவிர்க்கவும்.

Tuesday, November 8, 2016

புதியவர்கள் அதிகம் செய்யும் தவறுகள் என்ன?



01. அடிக்கடி சீட்டிங் என்று கண்ட சத்தில்லாத ருசி சார்ந்த உணவுகளை உண்பது.
02. குறைந்த நடைப்பயிற்சி செய்யாமல் தேமே என்று கொழுப்பு சாப்பிட்டு உட்கார்ந்து தெய்வமகள் அண்ணியாரைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவது.
03. சரியான அளவு நீர் அருந்தாதது.
04. விட்டமின் டிக்காக வெயிலில் நிற்காமல் நிறத்தைக் காக்க ஏசியிலேயே அமர்ந்திருப்பது. அல்லது நிழலிலேயே இருப்பது.
05. சரியான அளவுகளில் உண்ணாமல் குறைந்த கலொரி உணவுகளை எடுப்பது. குறிப்பாக சைவர்கள் காலை பட்டர் டீ, மதியம் பொரியல், இரவு கூட்டு என்று எடையைக் குறைக்கிறோம் என்று மஸிலை கரைத்துக்கொண்டிருப்பது.
06. சரியான அளவுகளில் ப்ரோட்டீன் எடுக்காமல் இந்தியன் தாத்தா கமலைப் போல ஆகிவிடுவது.
07. சைலண்ட்டாக சரக்கு, தம் என்று அடித்துக் கலக்கி ஹார்ட் அட்டாக் வந்து பேலியோ மீது பழி போடத் தயாராக இருப்பது.
08. பக்கம் பக்கமாக எழுதினாலும்.. சார் கொழுப்பு கூடிடுச்சின்னு ரிப்போர்ட் சொல்லுது உடனடியாக அதைக் குறைக்க வழி சொல்லுன்கள் என்று டர்ரியலாவது. கொழுப்பு சாப்பிட்டால் ஏன் கொழுப்பு கூடுகிறது என்பதை பேலியோ டயட் புத்தகத்தில் தேடிப் படிக்கவும்.
09. குறைந்த பட்ச கலோரி அளவான 1200 கலோரி உணவை பரிந்துரைத்தபடி எடுக்காது, குறைவாக எடுத்து அவதிப்படுவது.
10. காய்கறி, கீரைகளை முற்றிலும் புறக்கணித்து முக்கியமான காலைக்கடனை முக்கமுடியாது அவதிப்படுவது.
11. எங்களிடம் ஆலோசனை பெற்று, மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று ஒன்றுவிட்ட சித்தப்பா பையனிடமும் அதைக் காட்டி பிறகு இரண்டு இட்லி பாதாம் சட்னியுடன் பேலியோ துவங்கினேன் வயிறு வலிக்கிறது சீனியர்களே உதவுங்கள் என்று எங்களை அலறவைப்பது.
12. உண்பதோ சைவம், அதிலும் ஏகப்பட்ட உடல் உபாதைகளுடன் இருக்கும் குறைந்தபட்ச தேர்வில் அது டேஸ்ட் புடிக்காது இது ஸ்மெல் புடிக்காது என்று 10ல் 9 உணவுகளை விலக்கிவிட்டு பேலியோ அல்லாத பேலியோ என்ற ஒன்றைப் பரிந்துரைக்கக் கேட்பது.

Shankar Ji

Sunday, November 6, 2016

நாம் ஏன் அதிக பசியுடன் இருக்கிறோம்?




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
நாம் நம் தாத்தாக்களை விட அதிகமாக உண்கிறோம். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது நம் தவறு கிடையாது. நம் முன்னோர்கள் அதிக கொழுப்பு உண்டனர், ஆரோக்கியமாக இருந்தார்கள்.
1970களில் அமெரிக்க அரசாங்கத்தால் கொலஸ்டிரால் கெட்டது என்ற தவறான கொள்(ல்)கையால், நாம் கம்மி கொழுப்புள்ள தானியத்தை அதிகம் சாப்பிட ஆரம்பிக்க நேர்ந்தது.
கார்ப் (தானியம்) அதிகம் சாப்பிட்டால் இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும். இன்சுலின் பசியைத் தூண்டும் (ஏனென்றால் இன்சுலின் ஒரு பஞ்ச கால ஹார்மோன்). நாம் அதிகமாக சாப்பிடுவதற்கு காரணம், நமது இன்சுலின் அளவுகள் அதிகமாக இருப்பதே.
நாம் நம் முன்னோர்களை விட அதிகம் சாப்பிடக் காரணம் நாம் அவர்களை விட அதிக பசியுடன் இருப்பதாலேயே ஆகும். நம் தவறு இதில் இல்லை.
அதற்கு காரணம் முன்னெப்போதும் இல்லாததை விட நாம் தானியத்தை அதிகமாக நம்பி உண்பதே.
நல்ல கொழுப்பு கொஞ்சம் அதிகமாக உண்டு, கார்புகளை கம்மி செய்தால், நாம் நம் முன்னோர் போல் ஒபிசிடி, சுகர், பிரஷர், இதய வியாதி, ஆட்டோ இம்யூன் வியாதிகள் இல்லாமல் வாழலாம்.

Saturday, November 5, 2016

பேலியோ உணவுக்கு வருபவர்களுக்கு



1. ஆரம்பத்தில் ஒரு மெடிக்கல் டெஸ்ட் எடுத்திருங்க.
2. சுகர், இனிப்பு, ஜங்க் உணவு மறக்கப் பழகுங்க
3. தானியங்களை நிப்பாட்டுங்க
4. வெஜிடபிள் ரீஃபைண்ட் ஆயில்களிலிருந்து பேலியோ ஆயில்களுக்கு மாறுங்க
5. பேலியோ உணவை சீட் பண்ணாமல், ஒரு மாசமோ ரெண்டு மாசமோ கொழுப்புணவு உடம்புக்கு சூட் ஆகும் வரை நல்லா வயிறார, பசி அறிந்து, கலோரி ரெஸ்ட்ரிக்ட் பண்ணாமல் சாப்பிடுங்க.
6. தலைவலி வரும். அதை சரி பண்ண, தண்ணீர் நல்லா குடிங்க. உப்பை ரெஸ்ட்ரிக்ட் பண்ணாதீங்க. உப்புப்போட்ட லெமன் ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ் மாதிரி ட்ரிங்க்ஸ் குடிங்க.
7. நீரிழிவிற்காக மாத்திரை, இன்சுலின் போட்டுக்கொள்பவரா, அப்படீன்னா லோ சுகர் சிம்ப்டம்ஸ் வரும். அப்படி இரண்டு மூன்று நாள் தொடர்ந்து வந்தா மருத்துவரிடம் கலந்தாலோசித்து மாத்திரை / இன்சுலின் அளவைக் குறைங்க.
8. வைட்டமின் டி-க்காக வெயில்ல நில்லுங்க.
9. கொஞ்சம் நடைப்பயிற்சி, உடல்பயிற்சி ஆரம்பிங்க.
10. கொழுப்புணவுக்கு உடம்பு நன்றாக பழக்கம் ஆனதும், பசி நிச்சயம் குறையும், அப்போ இண்டெர்மிட்டெண்ட் ஃபாஸ்ட்டிங் ஆரம்பிங்க.
11. மூனு மாசம் பேலியோ உணவு முறை முடிஞ்சதும் இன்னொரு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து பழசுக்கும் புதுசுக்கும் ஒப்பிட்டுப் பாருங்க. முன்னேற்றம் இருந்தா தொடருங்க. இல்லையா பிடிக்கலையா, திரும்பவும் பழைய உணவு முறைக்கு போயிடுங்க.
12. வேண்டிய எடைக்கு வந்ததும், தேவைப்பட்டால், கொஞ்சம் கார்ப் கூட்டி, மெயிண்ட்டனன்ஸ் டயட்க்கு வாங்க.

Thursday, February 25, 2016

வாரியர் உணவுமுறை - Warriar Diet

 Article by Neander Selvan: 

Hope you are atleast following paleo / LCHF for minimum 3 months, else dont try this it will collapse your metabolism:
வாரியர்உணவுமுறை  பின்பற்றுவது எப்படி?

வாரியர் என எழுதினாலும் இது இன்டர்மிட்டன்ட் பாஸ்டிங் முறையை சார்ந்ததாகும். இதன் அடிப்படை கொள்கை நமக்கு புதிதல்ல. நம் பெரியவர்கள் சொன்னதுதான்.."
மூன்று வேளை உண்பவன் ரோகி, இரு வேளை உண்பவன் போகி, ஒரு வேளை உண்பவன் யோகி.." என

இதில் பாஸ்டிங் விண்டோ, பீடிங் விண்டோ என இரு வகைகள் உண்டு..அதாவது விருந்து/ விரத நேரங்கள்...

துவக்கத்தில் அனைவரும் 12: 12 விண்டோவை கடைபிடிக்கலாம். உடலுக்கு கண்டநேரத்தில் கண்டதையும் கொடுத்து பழக்கவேண்டாம்...காலை 9 மணிக்கு சாப்பிட ஆரம்பித்தால் இரவு 9 மணிக்குள் இரவு உணவை முடித்து விடவேண்டும். அதன்பின் எக்காரணம் கொண்டும் அடுத்தநாள் காலை 9 மணிவரை சாப்பிடவேண்டாம். நீர் மட்டும் பருகலாம்.

அதன்பின் அடுத்த நிலை காலையில் பசிக்கையில் மட்டுமே உண்பது...பல சமயம் பார்த்தால் நாம் விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கு எழுவோம். மதியம், 1- 2 வரை பசிக்கவே பசிக்காது. ஆக இந்த நிலையில் காலை உணவை தாராளமாக ஸ்கிப் செய்யலாம்..காலையில் பசிக்கையில் மட்டும் சாப்பிட ஆரம்பிப்பது என அடுத்த ஸ்டேஜுக்கு செல்லுங்கள்..9 மணிக்கு சபபிட்டே ஆகணும் என எந்த கட்டாயமும் இல்லை.

ஆக இந்த 12: 12 விண்டோவை 8: 12 என அடுத்த கட்டத்தில் மாற்றுங்கள். எட்டு மணிநேரத்தில் 2 வேளை உணவை எடுக்கலாம். அதன்பின் 16 மணிநேரம் விரதம்

உதாரணம்

மதியம் 12 மணிக்கு 4 முட்டை, காய்கறி

மாலை 6 மணிக்கு: 1/2 கிலோ மட்டன்

இதில் கவனிக்க வேண்டியது

முதல் உணவில் காலரி குறைவு

இரண்டாவது உணவில்/ டின்னரில் காலரி அதிகம்

நடுவே ஸ்னாக்ஸ் மிக அவசியம் இல்லையெனில் வேண்டாம்..

இதில் பழக்கபட்ட பின் அடுத்து நாலுமணி நேர விண்டோ

இதில்

மாலை 3 மணிக்கு 4 முட்டை, காய்கறி

இரவு 7 மணிக்குள் கால் கிலோ சிக்கன்

அதன்பின் 20 மணிநேரம் விரதம்

இதன் உச்சகட்டம்

ஒரு வேளை உணவு...இதன்படி தினம் மாலை 3- 4 மணிக்கு அரைகிலோ அல்லது முக்கால் கிலோ கொழுப்புள்ள இறைச்சி மட்டுமே எடுக்கவும். அதன்பின் மீண்டும் 23 மணிநேரம் பட்டினி...

சில டிப்ஸ்கள்

துவக்கத்தில் கஸ்டமாக இருந்தால் பாஸ்டிங் விண்டோவில் லைட்டான ஸ்னாக்ஸ் எடுக்கவும்...2 முட்டை, 1 கப் பால் முதலானவை.

எடுத்த எடுப்பில் சிங்கிள் மீலுக்கு அல்லது 4 மணிநேர விண்டோவுக்கு போகவேண்டாம்...12:12, 8:16, 6:18, அதன்பின் 4:20, அதன்பின் 1:23 என செல்லவும்

விரதம் இருக்கிறோம் என குப்பை உணவால் வயிற்றை நிரப்பவேண்டாம்..பேலியோ உணவுகளே உண்ணவும்

விரதம் இருக்கையில் காலரிகள் குறைவாக எடுக்கவேண்டும். பேலியோ உணவாக இருந்தாலும். 1500- 1800 காலரிகள் போதுமானவை

பட்டினி கிடக்கவேண்டாம் பசியுடன் இருக்கவேண்டாம் . பசித்தால் டின்னரில் கூடுதலான அளவு இறைச்சி சேர்க்கவும்

முடியவில்லையெனில் தினமும் 12:12 இருந்துவிட்டு வாரம் 2 நாள் மட்டும் 4:20 இருக்கலாம்...

டயபடிஸ் உள்ளவர்கள், பிரசர் உள்ளவர்கள் 12:12உடன் நிறுத்திக்கொள்வது நல்லது.