Showing posts with label VItamin D Deficiency. Show all posts
Showing posts with label VItamin D Deficiency. Show all posts

Saturday, November 5, 2016

பேலியோ உணவுக்கு வருபவர்களுக்கு



1. ஆரம்பத்தில் ஒரு மெடிக்கல் டெஸ்ட் எடுத்திருங்க.
2. சுகர், இனிப்பு, ஜங்க் உணவு மறக்கப் பழகுங்க
3. தானியங்களை நிப்பாட்டுங்க
4. வெஜிடபிள் ரீஃபைண்ட் ஆயில்களிலிருந்து பேலியோ ஆயில்களுக்கு மாறுங்க
5. பேலியோ உணவை சீட் பண்ணாமல், ஒரு மாசமோ ரெண்டு மாசமோ கொழுப்புணவு உடம்புக்கு சூட் ஆகும் வரை நல்லா வயிறார, பசி அறிந்து, கலோரி ரெஸ்ட்ரிக்ட் பண்ணாமல் சாப்பிடுங்க.
6. தலைவலி வரும். அதை சரி பண்ண, தண்ணீர் நல்லா குடிங்க. உப்பை ரெஸ்ட்ரிக்ட் பண்ணாதீங்க. உப்புப்போட்ட லெமன் ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ் மாதிரி ட்ரிங்க்ஸ் குடிங்க.
7. நீரிழிவிற்காக மாத்திரை, இன்சுலின் போட்டுக்கொள்பவரா, அப்படீன்னா லோ சுகர் சிம்ப்டம்ஸ் வரும். அப்படி இரண்டு மூன்று நாள் தொடர்ந்து வந்தா மருத்துவரிடம் கலந்தாலோசித்து மாத்திரை / இன்சுலின் அளவைக் குறைங்க.
8. வைட்டமின் டி-க்காக வெயில்ல நில்லுங்க.
9. கொஞ்சம் நடைப்பயிற்சி, உடல்பயிற்சி ஆரம்பிங்க.
10. கொழுப்புணவுக்கு உடம்பு நன்றாக பழக்கம் ஆனதும், பசி நிச்சயம் குறையும், அப்போ இண்டெர்மிட்டெண்ட் ஃபாஸ்ட்டிங் ஆரம்பிங்க.
11. மூனு மாசம் பேலியோ உணவு முறை முடிஞ்சதும் இன்னொரு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து பழசுக்கும் புதுசுக்கும் ஒப்பிட்டுப் பாருங்க. முன்னேற்றம் இருந்தா தொடருங்க. இல்லையா பிடிக்கலையா, திரும்பவும் பழைய உணவு முறைக்கு போயிடுங்க.
12. வேண்டிய எடைக்கு வந்ததும், தேவைப்பட்டால், கொஞ்சம் கார்ப் கூட்டி, மெயிண்ட்டனன்ஸ் டயட்க்கு வாங்க.

மகப்பேறின்மை

மகப்பேறின்மை காரணமாக பெண்களை பலரும் குற்றம் சாட்டுவார்கள். ஆனால் மகப்பேறின்மை என்பது கணவந் மனைவி இருவரும் சம்பந்தபட்டதாகும். 40% சமயம் இதற்கு காரணம் ஆணின் ஸ்பெர்ம் கவுன்ட் குறைவு போன்ற காரணம் என்பதை பலரும் உணர்வதில்லை. மேலும் சில சமயம் மனைவியின் உடல் கணவனின் விந்தணுவை ஏதோ வைரஸ் என நினைத்து தாக்கி அழிக்கும் அபாயமும் உள்ளது. ஆட்டோஇம்யூன் வியாதிகள் (லூபஸ், சொரியாசிஸ்) போன்றதே இது. சில சமயம் கணவனின் விந்தணுவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை கூட மனைவியின் உடல் தயாரிக்கும். மேலும் மகபேறின்மைக்கு அதீத வெப்பம், உணவுநீரில் உள்ள நச்சுக்கள் போன்ற பலகாரணிகள் உண்டு. ஆக இது எதையும் கருத்தில் கொள்ளாது பெண்களை இதற்கு குற்றம் சாட்டும் மூடதனமான வழக்கம் சமூகத்தில் நிலவுகிறது
உண்மையில் பெண்கள் விரும்பினாலும் கூட மற்ற காரணிகள் சரியாக அமைந்தால் அவர்களால் கருத்தரிக்காமல் இருக்க முடியாது. ஆக பெண்களை இதற்கு காரணமாக கூறுவது விவரம் அறியாத போக்கு என்றே கூறலாம்.
மகபேறின்மைக்கு கீழ்க்கண்ட தடைகள் உண்டு
மகபேறின்மைக்கு 40% காரணம் ஆண் விந்தணு குறைபாடே. பெண்களுக்கு எனில்
ஃபலோபியன் டியூப்களில் பிளாக் இருப்பது
என்டோமெட்ரியோசிஸ்
ஃபைப்ராய்டுகள்
கணவனின் விந்தணுவுக்கு மனைவியின் உடல் அலர்ஜிக் ஆவது (இது சற்று அபூர்வம். ஆனால் இது இருந்தால் செக்ஸுக்கு பின் பெண்ணுறுப்பில் வீக்கம், வலி, எரிச்சல் ஆகியவை இருக்கும். காண்டம் போட்டு உறவு கொன்டால் இப்படி நிகழாது. இது சில சமயம் மருத்துவர்களால் ஈஸ்ட் என தவறாக புரிந்து கொள்ளப்படலாம்)
ஓவலேசன் சரியாக அமையாதது
பெண்ணுடல் ப்ரொக்ரெஸ்ட்ர்ரொனை போதுமான அளவு உற்பத்தி செய்வதில்லை
இருவரில் ஒருவருக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பது
ஆகியவை காரணமாக அமையலாம்.
கருத்தரிப்புக்கு உடலுறவு கொள்வதற்கான முறைகள்
ஓவலேஷன் நிகழும் சமயம் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். ஆய்வுகள் கூறுவது என்னவெனில் ஓவலேஷன் சமயம் உறவுகொன்டால் அம்மாதம் கருத்தரிக்க 20% வாய்ப்பு உன்டு என்பதே. ஓவலேஷன் காலகட்டம் 12 முதல் 24 மணிநேரமே. இதில் நல்ல விசயம் என்னவெனில் ஆணின் விந்தணு ஓவலேஷன் நடக்கும் அதே நாளில் பெண்ணுடலில் சேரவேண்டும் என்ர அவசியம் கூட இல்லை. ஆணின் விந்தணு பெண்ணுடலில் இரண்டு, மூன்று நாட்கள் கூட உயிர்ப்புடன் இருக்கும். கருமுட்டை உருவானால் அதன்பின் விந்தணு சேர்ந்து குழந்தை பிறக்கலாம். கருத்தரிக்க ஒரே ஒரு விந்தணு போதும் என்பது குறிப்பிடதக்கது
மருந்து கடைகளில் டிப்ஸ்டிக் கிடைக்கும். இதை சிறுநீரில் விட்டு ஓவலேஷன் நிகழ்கிரதா என கன்டறியலாம். இதில் பாஸிடிவான ரிசல்ட் வந்து 1 முதல் 3 நாளில் ஓவலேஷன் நிகழும். ஆனால் இப்பரிசோதனை 100% சரியாக இருக்கும் என கூறமுடியாது.
மேலும் கருத்தரிக்க டைமிங் எல்லாம் பார்க்கும் அவசியம் இல்லை. தினமும் உறவு கொள்வது நல்லது. ஓவலேஷன் சமயம் ஒரு நாளக்கு எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உறவுகொள்ளவேண்டும். ஓவலேஷன் சமயம் லீவு போட்டுவிட்டு வீட்டில் கூட இருக்கலாம். ஏனேனில் ஓவலேஷன் சமயம் ஒருமுறை கருத்தரித்தால் பிள்ளை பிறக்கும் வாய்ப்பை விட இரண்டு,மூன்று முறை உறவுகொள்வது அவ்வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும். ஆக இந்த நாட்களில் எத்தனை தரம் முடியுமோ அத்தனை தரம் உறவுகொள்வது நல்லது.
முன்பு "டைமிங் முறையை" மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள். இதன்படி "தினம் உறவுகொள்வதை விட ஒரு நாள் விட்டு ஒரு நாள் உறவுகொன்டால் விந்தணுக்கள் அதிகரிக்கும்" என்றார்கள். இது உண்மைதான் எனினும் இந்த டைமிங் முறையை விட தினம் உறவுகொள்வது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என இப்போது கூறுகிரார்கள். கருத்தரிக்க அவசியம் என்பது ஒரு விந்தணு கருமுட்டையில் நுழையவேண்டும் என்பதே....அவ்வளவுதான்...எத்தனை முறை உறவுகொள்கிறோமோ அத்தனைகத்தனை இதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அதனால் ஓவலேஷன் பீரியட் முடிந்தபின்னரும் கூட தினம் உறவுகொள்வது ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை அதிகர்க்கிறது, ஆண்மையை அதிகரிக்கிறது எனவும் கூறுகிரார்கள்.
சுருக்கமாக சொன்னால் ஒரு புல்லட்டை வைத்து குறிபார்த்து சுட்டு எதிரியை வீழ்த்துவதை விட மெஷின்கன்னால் சகட்டுமேனிக்கு சுட்டால் எதிராளி வீழும் வாய்ப்புகள் அதிகம் அல்லவா? நமக்கு தேவை ஒரே புல்லட் இலக்கின் மேல் படவேன்டும். அவ்வளவே
உணவுமுறை :
அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைத்துவிட்டு கருத்தரிப்புக்கு தயாராக வேண்டும். ஏனெனில் கருத்தரிக்க முயலும் சமயம் எடையையும் இறக்க முயல்வது சரியானதல்ல. பட்டினி, விரதம், கலோரி கட்டுபாடு போன்றவை கருத்தரிப்பை தடுக்கலாம். ஏனெனில் நீங்கள் பட்டினி இருக்கும் சமயம் உடல் சர்வைவல் மோடுக்கு சென்றுவிடும். சர்வைவல் சமயத்தில் கருத்தரிப்பு என்பதெல்லாம் உடலுக்கு ஆடம்பரம் போல. ஆக கருத்தரிக்கும் சமயம் கலோரிகள் அதிகமாகவும், மூன்று வேளையும் உண்பதும், நல்ல ஊட்டசத்துள்ல உணவுகளாக உண்பதும் அவசியம். உடலுக்கு ஸ்ட்ரெஸ் அளிக்கும் கடின உடல்பயிர்சிகளை ஆணும், பெண்ணும் செய்யவேன்டாம். மித நடை போதுமானது
கருத்தரிக்க தேவையான உணவுமுறை . ஆண்,பெண் இருவரும் எடுக்கவேண்டும். பெண் மட்டும் எடுத்தால் போதுமானது என் நினைப்பது ஏன் பிழையானது என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்
செலனியம்: செலனியம் ஆண்களின் விந்தணு கவுண்ட்டை அதிகரிக்க உதவுகிறது. ஆண்கள் தவறாமல் செலனியம் உள்ள உணவுகளை எடுக்கவேண்டும். பெண்களும். செலனியம் உள்ள உணவுகள்: முந்திரி, காளான், மீன் (டியூனா), பன்றி/ஆடு/பீஃப், சிக்கன், ஈரல் முதலானவை
வைட்டமின் சி: வைட்டமின் சி விந்தணுவின் வீரியத்தை (மோடிலிட்டி) அதிகரிக்கிறது. மோடிலிட்டி அதிகரித்தால் விந்தணு நகரும் வேகம் அதிகரிக்கும். வேகமாக செல்லும் விந்தணு விரைவில் கருத்தரிக்க உதவும்.ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்கனி, கீரை .தினம் 2 நெல்லிக்கனி சபபிடுவது மிக உகந்தது
வைட்டமின் ஈ: இதன் பெயரே செக்ஸ் வைட்டமின்.ஏனெனில் இதுதான் பாலுறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொன்டுபோய் சேர்க்கிறது. இதனால் உடலுறவின் இன்பம் அதிகரிப்பதுடன் விந்தணுவின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்
வைட்டமின் ஈ உள்ல உணவுகள்:பாதாம், கீரை, அவகாடோ, ஷ்ரிம்ப் மீன், ட்ரவுட் மீன்,பூசணி முதலானவை
ஸின்க்: விந்தில் ஸின்க் ஏராளமாக காணப்படும். இது அதன் வீரியத்தை அதிகரிக்கும். இது உள்ள உணவுகள்
மாட்டிரைச்சி, நண்டு, பன்றி இறைச்சி, முந்திரி, சிக்கன் , பாதாம் முதலானவை
மாங்கனிஸ்: இது செக்சுக்கு தேவையான ஹார்மோனை தயாரிக்க உதவும். பாதாம், டார்க் சாக்லட், கொக்கோ பவுடர், கீரை, ஆழிவிதையில் கிடைக்கும். கிராம்பு/லவங்கபட்டையை மாங்கனிஸின் கோட்டை எனலாம்.
புரதம் மிகுந்த உணவை இருவரும் தவறாமல் உண்னவேண்டும். புரதம் தான் நீங்கள் பட்டினி கிடக்கவில்லை என்பதை உடலுக்கு உனர்த்தி உங்களை ஸ்டார்வேஷன் மோடிலிருந்து மாற்றுகிறது. மேலும் ஆர்ஜினைன், எல்சிஸ்டைன் முதலான அமினோ அமிலங்கல் ஸ்பெர்ம் கவுன்ட்டை அதிகரிக்க முக்கியமானவை.புரதம் நிரம்பிய உனவுகள்: முட்டை, இறைச்சி, பாதாம் முதகானவை
போலிக் அமிலம், B12 நிரம்பிய முட்டை, கீரையை எத்தனைகெத்தனை எடுக்கிறோமோ அத்தனைகத்தனை நல்லது
உதவுவதாக கூறப்படும் நாட்டு மூலிகைகள் (இவற்றை முயல்வதில் தவறில்லை)
ஜின்செங்
வல்லாரை
மாகாளிக்கிழங்கு
அதிமதுரம் (மூலிகை கடைகளில் கிடைக்கும்)


Neander Selvan

Friday, November 4, 2016

ஆரோக்கியம் நல்வாழ்வுக் குழு சார்ந்த துணைக்குழுக்களின் முகவரிகள்




ஆரோக்கியம் நல்வாழ்வுக் குழு மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
நமது குழு சார்ந்த துணைக்குழுக்களின் முகவரிகள் அதன் விவரங்கள் பின்வருமாறு, இதைத் தவிர்த்து பேலியோ என்று பெயருடன் இயங்கி, டயட்னா போரடிக்கிற மாதிரியா சாப்பிடறது, ஒரு பரோட்டா, ஒரு டின் பியர், கால் கிலோ ஜிலேபி இல்லாம அது என்ன பேலியோ டயட்? போன்ற திடீர் குழுக்கள், கார்ன் பவுடர், கண்ட கலப்பட பாக்கெட் மசாலாக்கள், ரவாகிச்சடிகள் தாங்கிய திடீர் பேலியோ ரெசிப்பிக் குழுக்கள் என்று பல குழுக்களில் பேலியோ என்ற வார்த்தையால் ஈர்க்கப்பட்டு மக்கள் அதில் சேர்ந்து, சார், பாதாம் கேசரி பேலியோவா என்று என்னைக் கேட்கிறார்கள்.
என்னடா பேலியோவுக்கு வந்த சோதனை என்று லின்கில் சென்று பார்த்தால் அது இந்தக் குழுவில் சேர்ந்து பேலியோ கற்றுக்கொண்டு தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப சிலர் ஏற்படுத்திய குழுக்கள் என்பது தெரியவந்தது. சுகர்லெஸ் கரும்பு ஜூஸ் என்று வித்தாலும் வாங்கிக் குடிக்கும் மக்கள் இருக்கும் வரையிம் நம் குழு சார்ந்து நம்மால் அங்கீகரிக்கப்பட்ட குழுக்கள் எவை என்பதை நம் குழு மக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கீழுள்ள குழுக்கள் தவிர நமக்கு வேறு எந்தக் குழு பற்றியும் அக்கறை இல்லை, கருத்துக்கள் இல்லை. அங்கே சேர்ந்து பேலியோ பற்றிய அடிப்படைப் புரிதலின்றி மிண்டும் சுவைக்கு அடிமையாகப் போகிறவர்களுக்கு எங்களின் ஆழ்ந்த வாழ்த்துகள்.
நமது அதிகார்வப் பூர்வ குழுமங்கள் அவற்றின் செயல்பாடுகள் பின்வருமாறு.

பேலியோ டயட்டிற்கான ஆங்கிலக் குழுமம். தமிழ் தெரியாத ஆங்கிலம் தெரிந்த மக்களுக்காக மட்டும் இயங்குகிறந்து இந்தக் குழுமம். சகட்டுமேனிக்கு அங்கேயும் நீங்கள் சென்று ரிக்கொஸ்ட் தரவேண்டியதில்லை. உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு தமிழ் தெரியாதென்றால் இந்தக் குழுவின் முகவரியைக் கொடுத்துவிடுங்கள். தமிழ் தெரிந்தவர்கள் அங்கே ஆங்கிலத்தில் டயட் கேட்பது போன்றவைகளைச் செய்யவேண்டாம்.
சர்க்கரை இல்லாப் பொங்கல் குழு, டயபடிஸ் அதிக நாட்கள் இருக்கும் மக்கள், கட்டுபாடில்லாத ரத்த சர்க்கரை அளவுகள் இருப்பவர்களுக்கான பிரத்யேகக் குழுமம் இது. ஆரோக்கியம் நல்வாழ்வில் டயட் கேட்பவர்களுக்கு டயபடிஸ் அதிக அளவில் இருந்தால் நாங்களே இந்தக்குழுவிற்கு வரச்சொல்லி வழிகாட்டுவோம்.
பேலியோ டயட் எடுத்து அதனால் அடைந்த பலன்களைப் பற்றி , அனுபவப் பகிர்வாக அடுத்தவர்களுக்கு உதவ நினைக்கும் அன்பர்களுக்கான குழு இது, பேலியோ சக்ஸஸ் ஸ்டோரீஸ். பேலியோ டயட் எடுத்து நீங்கள் அடைந்த பலனை தயவுசெய்து இங்கே பகிர்ந்து மற்றவர்களுக்கும் ஒரு ஊக்க சக்தியாக / ரோல் மாடலாக இருக்க இந்தக் குழுவைப் பயன்படுத்தவும்.
பேலியோ பொருட்கள் விற்பனை செய்பவர்கள், வாங்குபவர்களுக்கான பிரத்யேக இலவச சந்தைக் குழுமம் - பேலியோ சந்தை. நீங்கள் பேலியோ சார்ந்த பொருள் விற்பவர்களோ, வாங்குபவர்களோ இந்தக் குழுமத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பால் /தேன் போன்ற உணவுகளைக் கூட அசைவம் என்று ஒதுக்கும் நனி சைவர்களுக்கான குழுமம் இது. உடல் எடை மட்டுமே பிரச்சனை வேறு எந்த உடல் நலப் பிரச்சனைகளும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தவர்கள், சைவம் மட்டுமே உண்ணும் பழக்கமுடையவர்கள், இந்தக் குழுமத்தில் சேர்ந்து பலனடையலாம். பேலியோவையும் இதையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாது தெளிவாகப் புரிந்துகொண்டு இந்த டயட்டை முயற்சிக்கவும், குறுகிய காலத்திற்கான டயட் இது.
மக்கள் உணவு - பேலியோ முயற்சிக்க விரும்பாத, அல்லது பொருளாதார வசதி இல்லாமல் நல்ல உணவுகளைச் சாப்பிட விரும்பும் மக்களுக்கான எளிய ஆரோக்கிய உணவுமுறை வழிகாட்டிதான் இந்த மக்கள் உணவு. இதையும் பேலியோவையும் போட்டுக் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
பேலியோ ரெசிப்பிக்களின் அதிகார்வபூர்வ குழு - ஆரோக்கிய உணவுகள். இதைத் தவிர்த்து வேறு எங்கும் நமது ரெசிப்பிக்கள் பதிவதில்லை, ஆகவே பேலியோ என்று பெயர் தாங்கிவரும் குழுக்களில் சேர்ந்து குழம்புவதோ, குழம்பு வைப்பதோ உங்கள் பிரச்சனை. எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
இதுபோக நம் அதிகார்வபூர்வ வலைத்தளங்கள்:
குழுவின் ஒரே அதிகார்வப்பூர்வ யுடியூப் சானல்.
குழுவின் அதிகார்வப் பூர்வ டெலிக்ராம் ப்ராட்காஸ்ட் லிங்க் (Telegram - https://play.google.com/store/apps/details…)
@paleogod
குழுவின் அதிகார்வப் பூர்வ டிவிட்டர் முகவரி:
திரு.நியாண்டர் செல்வன் அவர்களின் ட்விட்டர் முகவரி


வேறு ஏதேனும் குழுக்கள் / இணையப் பக்கங்கள் எங்களால் துவக்கப்பட்டால் அதற்கான விவரம் குழுவில் பகிரப்படும், மேலே அறிவிக்கப்படாத குழுக்களில் நடக்கும் போஸ்ட்கள், விவாதங்கள், தவறான தகவல்களுக்கு எங்களிடம் விளக்கம் கேட்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலே குறிப்பிடப்பட்டவை தவிர்த்து வாட்ஸப் துவங்கி வேறு எங்கும் எங்களுக்குக் கிளைகள் இல்லை.

உள்ளுறுப்புக்கள் என்னென்ன சாப்பிடலாம்? என்னென்ன நன்மைகள்?


ஈரல்- வைட்டமின் ஏ..பி வைட்டமின்களின் கோட்டை. கொலஸ்டிரால் நிரம்பிய அதியற்புத வைட்டமின் கோட்டை இது. வாரம் ஒரு நாள் கட்டாயம் ஈரல் சாப்பிடணும்
கிட்னி- இதிலும் வைட்டமின் ஏ உள்ளது, ஸிங், புரதம் நிரம்பிய சிறப்புணவு,. வாரம் 1- 2 நாள் இதை சபபிடலாம்
இதயம்- தசைபகுதி மாமிசம். சொ.ஓ.கியு 10 ரிமபியது. இதயத்துக்கு இதமளிப்பது.ஸ்டடின் மத்திரை எடுப்பவர்கள், -ஹார்ட் பேசன்டுகள் சாப்பிடவேண்டிய பொருள் சி ஓ கியு 10 என்பதால் இதயம் அவர்களுக்கு மிக நலமளிப்பது
ரத்தம் - அனிமியா எனும் இரும்புசத்து குறைபாடு உள்லவர்கள் சாப்பிட அக்குறை நீங்கும். புரதமும், இரும்பும் அதிகம். கொழுப்பு குறைவு. ஆண்கள் இதை சாப்பிடும் அவசியம் பொதுவாக இல்லை
எலும்புகள்- தினமும் கூட இதில் சூப் சாப்பிடலாம்....எலும்புகளுக்கு நல்லது
மீன் தலை- கிட்டபார்வை உள்ளவர்களுக்கும், கண்னாடி அணிபவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நன்மையளிப்பது.
கோழிக்கால்- கால்சியம், கொலாஜன் நிரம்பிய அற்புத உணவு. பாலுக்கு மாற்ராக பருகலாம். ஆர்த்ரைட்டிசுக்கு மிக நல்லது
முட்டை ஓடு-- இது முழுக்க கால்சியமே. ஒரே ஒரு சின்ன துணுக்கு முட்டை ஓட்டை பொடியாக அரைத்து சாப்பிட்டால் ஒரு கப் பாலுக்கு சமம்.
அதே சமயம் இது ஓவர்டோசாகும் அபாயம் இருப்பதால் இதை பயன்படுத்தௌவதில் எச்சரிக்கை அவசியம்
-  Neander Selvan 

Sunday, October 11, 2015

உடல் பிரச்சனைகள் - விளக்கங்கள்

உடலில் நமக்கு ஏற்படும் பல பிரச்சனைகள் அதற்கான விளக்கங்கள்:

ஃபேட்டி லிவர் (Fatty Liver)

http://paleogod.blogspot.in/2015/10/fatty-liver.html