Tuesday, August 11, 2015

30 Days Paleo Challenge / 30 நாட்கள் பேலியோ சாலஞ்ச்!

முப்பது நாள் பேலியோ சாலஞ்ச்.
பேலியோ துவங்குவதின் முதல் பிரச்சனையே என்ன சாப்பிடுவது? எப்பொழுது சாப்பிடுவது? எவ்வளவு செலவாகும்? என்பதுதான்.

இந்த டயட் முறை ஒத்து வருமா?

இதனால் என்ன பயன்?

இது உடலுக்கு நல்லதா கெடுதலா?

முப்பது நாள் ஒழுங்காக பேலியோவைக் கடைபிடிப்பதன் மூலம் இதன் பலன் உங்களுக்குத் தெரியவரும். அல்லது இந்த முறை ஒத்து வராது என்று நீங்கள் தலை முழுகிவிடலாம். அல்லது குறைந்தபட்சம் இனிப்பு, குப்பை உணவுகள், கண்டதைத் தின்பது என்ற தினப்படி தவறான உணவுப்பழக்கத்திலிருந்து நீங்கள் விடுபடலாம்.

உதாரணத்திற்கு ஒரு மாதத்திற்கு நபருக்கு தோராயமாக ரூ.6000/- செலவாகும் என்று முடிவு செய்து இந்த முப்பது நாள் பேலியோ சவாலை முயற்சிக்கலாம். ஒரே கண்டிஷன் என்னவென்றால் இங்கே சொல்லப்படும் பல கண்டிஷன்களையும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்பதுதான்.

முதலில் செய்யவேண்டியது:

ஒரு ரத்தப் பரிசோதனை (எ) முழு உடல் பரிசோதனை.
இதில் லிபிட் ப்ரொபைல் டெஸ்ட், HbA1C, சாப்பிடுவதற்கு முன்-பின் சர்க்கரை அளவு, எடை, இடுப்பு அளவு, HDL, LDL, போன்ற முக்கியமான அளவுகள் உங்களுக்குக் கிடைக்கும். அதை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள், முப்பது நாட்கள் கழிந்து மீண்டும் இதே பரிசோதனையை நீங்கள் செய்யும்போது, இந்த டயட்டால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உங்களுக்குத் தெரியவரும்.

டெஸ்ட் பற்றிய மேலதிக விவரங்கள் இங்கே


சாலஞ்சுக்கு தேவையான பொருட்கள்.
01. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய். 1 லிட்டர்.
02. செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய். 2 லிட்டர்.
03. வெண்ணெய் வாங்கி உருக்கிய நெய் 2 லிட்டர்.
04. தேங்காய். 05
05. தயிர். 04 லிட்டர்
06. சீஸ். 500 கிராம்.
07. கீரை (அனைத்து வகைகளும்). 30 கட்டுகள்
08. காலி ப்ளவர் / ப்ராக்களி. 10 பூக்கள்
09. பாதாம். 01 கிலோ
10. பிஸ்தா. 500 கிராம்.
12. அவகோடா. 10
13. பழுக்காத கொய்யா. 45
14. பூண்டு. 500 கிராம்.
15. ஒமேகா 3 மீன் மாத்திரை 1000எம்ஜி. 60 கேப்ஸூல்
16. Flax seed powder. 100 கிராம் பாக்கெட். (சைவர்களுக்கு மட்டும் ஒமேகா 3க்காக)
17. ஆர்கானிக் மஞ்சள்தூள் - 500 கிராம்.

அசைவம் சாப்பிடுபவர்களுக்கு
18. நாட்டுக் கோழி முட்டை 120
19. க்ரில்டு சிக்கன் 10
20. மீன் / கடலுணவுகள்.

பொதுவான பானங்கள்:

க்ரீன் டீ ( சர்க்கரை இல்லாமல் ). 60 டீ பாக்

ப்யூர் கொக்கோ பாக்கெட் (சர்க்கரை இல்லாமல்). 100 கிராம்

மோர்

தண்ணீர் 30*4= 120 லிட்டர்.


மேலே உள்ள பொருட்கள் தோராயமாக ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்குத் தேவையானவை, கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம். எதுவும் வீணாகப்போவதில்லை. முழுவதும் ஒரேயடியாக வாங்கவேண்டும் என்பதில்லை, எவ்வளவு செலவாகும் என்பதற்கான ஒரு கணக்கு. இவற்றை மட்டும் ஒரு மாதத்திற்கு நீங்கள் உண்ணும்பட்சத்தில், நிச்சயம் முழு மாடிபைடு பேலியோ டயட்டை பின்பற்றுபவராவீர்கள். அதனால் வரும் நன்மைகள் ஒரு மாத முடிவில் உங்களுக்குத் தெரியவரும்.

இதைத் தவிர்த்து என்ன சாப்பிடலாம்.

எதையும் சாப்பிடக்கூடாது. பொறந்த நாள் என்று கேக் தருவார்கள், சாக்லெட் தருவார்கள், திடீரென்று லேஸ் சிப்ஸ், பஜ்ஜி, போண்டா, பர்கர், பீட்ஸா சாப்பிட அழைப்பு வரும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். வெளியில் சாப்பிடக்கூடாது. பாண்ட் பாக்கெட்டில் 100 கிராம் பிஸ்தா, பாதாம் இருந்தால் ஒரு வேளை உணவு பசி அடங்கிவிடும். அல்லது ஆப்பிள், தயிர், சீஸ் சாப்பிடலாம்.

காபி, டீ கூடவே கூடாது. புல் மேய்ந்த மாட்டின் கறந்த பால் கிடைத்தால் தாராளமாக தண்ணீர் ஊற்றாமல் (அப்கோர்ஸ் சர்க்கரை போடாமல்தான்) குடிக்கலாம். இந்தப் பாலும் டயபடிக் உள்ளவர்களூக்கு ரத்த சர்க்கரை அளவை ஏற்றினால் தவிர்க்கவேண்டும். நல்ல பால் கிடைக்காமல் வெறும் பாக்கெட் பால்தான் கிடைக்கிறது என்றால் பாலைத் தவிர்ப்பதே உத்தமம்.

எந்த வகைப் பழங்களும், ஜூஸும் பாக்கெட்டில் அடைத்தது, நீங்களே பிழிந்தது கூடாது.

எந்த வகையிலும் இனிப்பு கூடாது, வெள்ளை சர்க்கரை, தேன், நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், பனை வெல்லம், கருப்பட்டி, கரும்பு ஜூஸ், சுகர் ப்ரீ மாத்திரைகள், பிஸ்கெட், கேக், பேக்கரி ஐட்டம், பரோட்டா, ரொட்டி, ப்ரெட், சப்பாத்தி, கிழங்கு வகைகள், பழங்கள் கூடாது.

அடிக்கடி உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெது வெதுப்பான நீராக இருப்பின் மிக நல்லது.

தினசரி மித வேக அல்லது சாதாரண நடைப் பயிற்சி முக்கியம். 3000 முதல் 10000 ஸ்டெப்ஸ்.

முதலில் ஒரு கிலோ மீட்டர் நடை தூரம் ஆரம்பித்து, பின்னர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் நடக்கவும். பேலியோ துவங்கும்போது ஓத்துழைக்க மறுக்கும் உடல் பின்னர் எப்படி இலகுவாகிறது என்பதை கவனிக்கவும். தினம் குறைந்தது 3 கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை நடந்தால் உத்தமமான ரிசல்ட் கிடைக்கும்.
முடிந்தால் தினம் 20 நிமிடங்களாவது 11 மணி முதல் 2 மணிக்குள் உடலில் பெரும்பாலான இடங்களில் வெயில் படுமாறு நிற்கவும். (அப்கோர்ஸ் தலையில் துண்டு போட்டுக்கொண்டுதான்.) Dminder என்ற App உங்கள் ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்து அதில் நீங்கள் வசிக்கும் இடத்தில் சோலார் நூன் நேரம் என்ன என்று பார்த்து அந்த நேரத்தில் சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு நின்றால் விட்டமின் டி அளவு அதிகரிக்கும்.

பச்சையாக ஒரு பல் பூண்டு சிறிய மாத்திரை வடிவில் துண்டுகளாக்கி, மாத்திரை போல வாயில் போட்டு முழுங்கிவிடவும். காலை வெறும் வயிற்றில் என்றால் உத்தமம். கடிக்காமல் துண்டுகளாக்கி முழுங்கி அதன் பின் காலை உணவு எடுத்துக்கொள்வதால் பூண்டு வாசனை வாயில் வராது.

பீடி, சிகரெட், கஞ்சா, சுறுட்டு, அனைத்து வகை சாராயம் போன்றவை டயட்டின் போது கூடவே கூடாது. டயட்டுக்குப் பின்னரும் அதை விட்டுவிட இந்தக் கால கட்டம் உதவும்.

மருத்துவர் கொடுத்துள்ள மருந்து மாத்திரைகளை அவரின் அனுமதியின்றி நிப்பாட்ட வேண்டாம். சர்க்கரை அளவு குறைவது போல இருந்தால் வீட்டிலேயே அளக்கும் கருவி கொண்டு சரிபார்த்துக்கொள்ளுங்கள். 30 நாளும், ப்ளட் ப்ரஷர், எடை, சர்க்கரை அளவு எடுக்க்க முடிந்தால், அதை குறித்து வந்தால் உத்தமம்.

கிட்னி கற்கள் இருப்பவர்கள், இன்னும் பேலியோ என்றால் என்னவென்று புரியாதவர்கள், கடுமையான உடல் உபாதைகள் இருப்பவர்கள், கொழுப்பு சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்று நம்பிக்கையோடு சன்ப்ளவர் ஆயிலில் பஜ்ஜி சாப்பிடுபவர்கள் ப்ளீஸ் இது வரை படித்ததை எச்சி தொட்டு அழித்துவிடுங்கள் இந்த டயட் உங்களுக்கு ஒத்து வராது.

வேறு சந்தேகங்கள், இந்தப் பதிவில் உள்ள பிழைகள், மேலே சொல்லப்பட்ட உணவுப் பொருட்கள் சார்ந்த பேலியோ ரெசிபிக்கள், கூடுதலாக சேர்க்கவேண்டிய உணவுப் பொருட்கள், ரெசிப்பிக்கள் ஏதேனும் இருப்பின் குழும சீனியர்கள் கமெண்டில் தந்து உதவினால், ஒரு இபுக்காக மாற்றி முப்பது நாட்கள் முயற்சி செய்ய விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

ஒரு பேலியோ நாள் என்பது....

தினமும் காலை சீக்கிரமாக எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பல் துலக்குவதற்கு முன்பாக நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் வாயில் விட்டு நன்றாகக் (5நிமிடமாவது) கொப்புள்ளித்துப் பின் அதை உமிழ்ந்துவிடவும். வாயும் தாடையும் ஆரம்பத்தில் கொஞ்சம் வலிக்கும், ஆனால் பற்களுக்கும், ஈறுகளுக்கும், மலச்சிக்கலுக்கும் நல்ல பலன் இதனால் கிடைக்கிறது. தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம்.

அதன்பின் சுடுநீரில் வாய் கொப்புளித்து, மூலிகை பற்பொடி இருந்தால் அதில் பல் துலக்கிவிட்டு, மீண்டும் இரண்டு டம்ப்ளர் நல்ல காபி குடிக்கும் சூடில் மீண்டும் வெந்நீர் குடிக்கலாம், அப்படியே ஒரு பல் பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி முழுங்கி மீதமுள்ள வெந்நீரை ரசித்து சிறிது சிறிதாக சிப் பண்ணிக் குடித்தால் நலம். காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தை மாற்ற இம்முறை உதவும். சூடான நீர் உள்ளே சென்றவுடன் காலைக்கடன் சுலபமாக வெளிவரும்.

தினமும் எடை பார்க்க உகந்த நேரம் இது. எடை பார்த்து குறித்துக் கொள்ளவும். நூறு கிராம் , ஐம்பது கிராம் எடை இழப்புக்கெல்லாம் கவலைப் படக்கூடாது.

மூச்சுப் பயிற்சி, யோகா, நடைப் பயிற்சி போன்றவற்றை ஒரு சூடான சர்க்கரை இல்லாத க்ரீன் டீயோடு துவங்கலாம். அல்லது கொக்கோ பானம்.

நன்றாக பச்சைத் தண்ணீரில் தலைக்குக் குளித்துவிட்டு, (குளிரும் என்று நினைப்பவர்கள் மோட்டார் போட்டு டைரக்டாக பூமியிலிருந்து வரும் நீர், அல்லது கிணற்றில் இறைக்கும் நீரைப் பயன்படுத்தினால் வெது வெதுப்பாக இருக்கும். ) காலை முதல் பேலியோ உணவாக, அவித்ததாகவோ, ஆம்லெட்டாகவோ நாலு முட்டையை உள்ளே தள்ளலாம். அல்லது 100 கிராம் பாதாம்/பிஸ்தா பொறுமையாக நன்கு கடித்து மென்று உமிழ்நீர் சேர சாப்பிடுங்கள்.

மதிய சாப்பாடு வரை இந்த காலை உணவு படி எடுக்காமல் காக்கும். தேவைப்பட்டால், மீண்டும் ஒரு க்ரீன் டீ, ஒரு கொய்யா நடுவே சாப்பிடலாம்.

மதிய உணவாக, க்ரில்ட் சிக்கன் அல்லது ஒரு காலிப்ளவர் ப்ரோக்கோலியை மசாலா போட்டு வேகவைத்து உண்ணலாம். இரண்டு மணி நேரம் கழித்து ஒரு கப் தயிர் அல்லது பெரிய டம்ப்ளரில் மோர். ஒரு 40 கிராம் அளவுக்குள்ளாக ஒரு கார்போஹைடிரேட் உணவு எடுத்துக்கொள்ளுங்கள்,  திடீரென்று டயட்டுக்கு மாறும்பொழுது உடல் ஏற்றுக்கொள்ள இது உதவும். கண்டிப்பாக 40கிராம் கார்ப் மட்டுமே சேர்க்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கவும். இதுபின்னர் இன்னும் குறையும்.

மாலை ஒரு க்ரீன் டீ அல்லது கொழுப்பு நீக்காத பால், சில தேங்காய் துண்டுகள், பச்சையாகவோ, நெய்யில் வறுத்ததோ. (பசித்தால் மட்டும், பசிக்கவில்லை என்றால் எதுவும் உண்ணத் தேவையில்லை, பசிக்கும் க்ரேவிங் எனப்படும் எதையாவது தின்னவேண்டும் என்ற ஆவலுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்துகொள்ளுங்கள். அதன்படி சாப்பிடுங்கள்.

காலையோ, மாலையோ 2 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி.

இரவு, வீடு வந்ததும் மீண்டும் ஒரு குளியல். பனீர் டிக்கா, ஏதாவது ஒரு கீரை. இரவு கீரை சாப்பிடுவதில் தயக்கம் உள்ளவர்கள் மதியம் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு உணவோடு இல்லாமல், ஒரு உணவிற்குப் பிறகு ஒரு மணி நேர இடைவெளி விட்டு கீரையை தனியாக ஒரு பவுலில் வைத்து சாப்பிடுங்கள் அதன் முழு பலன் உடலில் சேருவதற்காகவே இப்படிச் சொல்லப்படுகிறது.

இந்த உணவுற்குப் பிறகு தேவைப்பட்டால் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு பால் குடியுங்கள். இரண்டு ஒமேகா 3 மாத்திரைகளை முழுங்கிவிட்டு..

பின்னர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளித்து உறங்கச் செல்லுங்கள்.

மேலே சொல்லப்பட்ட ஒரு நாளையும் தற்பொழுது நீங்கள் கழிக்கும் ஒரு நாளையும் ஒப்பிட்டால் உங்களுக்கு தெரிய வரும் வித்தியாசத்தைப் பாருங்கள். தேவையில்லாத டீ, காபி, குப்பை உணவுகள் தின்றும் பசி ஆறாமல், நெஞ்சு கரித்து, கேஸோடு வயிறு பாடாகப் படுத்தி நடக்க முடியாமல், சோம்பேரித்தனமாக இருந்த நாள் இந்த உணவுக்குப் பிறகு எப்படி சுறுசுறுப்பாக, பசி குறைந்து, ஆசிட் தொல்லை, நெஞ்சரிச்சல், கேஸ் தொல்லை இல்லாமல் இலகுவாக மாறுகிறது என்பதைப் பாருங்கள்.

மேலே சொன்னது ஒரு உதாரண நாள். இதில் தேவைக்கேற்ப உணவுகளை மேலே வாங்கிய பொருட்களோடு மாற்றி மாற்றி சமைத்து உண்ணும்போது போரடிக்காது.

கண்டிப்பாக, தினம் ஒரு கீரை, மற்றும் உணவில் வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள் இவைகளைச் சேர்த்து வரவும்.

வழக்கமான டிஸ்கி.

இது குறைவான கார்போ ஹைடிரேட், அதிக நல்ல கொழுப்பு சார்ந்த டயட் முறை, அதிக கெட்ட கொழுப்பு, அதிக ப்ரோட்டீன் சார்ந்த உணவு வகைகள், அதிக கார்போ ஹைடிரேட் போன்றவைகளை தவறாக எடுத்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்.

நீங்கள் சாப்பிடும் உணவுகளுக்கும், அது சார்ந்த டயட்டுக்கும் நீங்களே முழு முதல் பொறுப்பு, இங்கே நானோ, மற்ற யாருமோ அங்கீகரிக்கப்பட்ட, படித்த டயட்டிசியன்கள் இல்லை, ஆனால் இந்த உணவு முறை எங்களால் சோதித்துப் பார்க்கப்பட்டு பலன் கிடைக்கப்பட்ட ஒரு முறை, அதை ஒரு தகவலாக இங்கே பகிர்கிறோம். எந்த பாதிப்புக்கும் இந்தக் குழுமமோ, இதில் இணைந்திருப்பவர்களோ எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

புரிந்துகொண்டு இந்த டயட்டை எடுத்து ஓரிரண்டு நாட்கள் அப்படி இப்படி இருந்து, இனிப்பு சாப்பிட்டு, காபி குடித்து, பிட்ஸா சாப்பிட்டேன் என்பவர்களும் குற்றம் செய்தவராகிறீர்கள். :) ஆக, உங்கள் டயட்டுக்கு நீங்களே சாட்சி, நீங்களே நீதிபதி, நன்மை கிடைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே.

ஏன் காபி குடிக்கக்கூடாது, ஏன் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், ஏன் புல் சாப்பிட்ட மாட்டின் பால், ஆமா, இந்த Paleo அப்படின்னா என்ன? என்றெல்லாம் எதுவும் புரியாமல் கேள்வி கேட்பதற்கு முன் இந்தக் குழுமத்தின் பழைய பதிவுகள், முன்னோர் உணவு எனும் பிடிஎஃப் போன்றவைகளை படித்துவிட்டு கேள்விகளுக்கான பதிலை அங்கே பெற்றுக்கொள்ளவும்.
நன்றி!

Sunday, August 9, 2015

Kidney stones and Muscle cramps (By Neander Selvan) கிட்னி கற்கள்


க்ராம்ப்ஸ் என்பது ஸ்போர்ட்ஸ்மேன்களுக்கு வரலாம். மற்றவர்களுக்கு  கிராம்ப்ஸ் வர காரணம் கீழ்காணும் மும்மூர்த்திகளின் பற்றாகுறையே:மக்னிசியம்: எலும்புக்கு நல்லது கால்ஷியம் என கேள்விபட்டிருப்போம். ஆனால் எலும்பின் பெரும்பகுதி மக்னிசியமே. மக்னிசியம் எத்தனை முக்கியமான மூலசத்து என நாம் சரியாக உனர்வதில்லை. 400 விதமான உடலியல் இயக்கங்கள் மக்னிசியத்தை நம்பி உள்ளன.கால்ஷியம்: தினம் 3 கப் பால் குடிக்கிறேன். எனக்கு எப்படி கால்ஷியம் பற்றாகுறை என கேட்கலாம். கால்ஷியம் உணவில் உண்டாலும் அதை சரியாக எலும்புகளுக்கு கொண்டுபோய் சேர்க்க மக்னிசியமும், வைட்டமின் டியும் அவசியம். 

கால்ஷியம் நீர், எலும்பு பூச்செடி என்றால் மக்னிசியமும், வைட்டமின் டியும் பாத்திகள். நீரை செடிக்கு கொன்டுபோய் சேர்க்க பாத்தி அவசியம்.அதன்பின் வைடமின் டி. வைட்டமின் டியின் முக்கியத்துவம் அளவற்றது. பொதுவாக பெண்கள் சூரிய ஒளியை தவிர்ப்பார்கள். அதனால் வைட்டமின் டி பற்றாகுறை உருவாகும் வாய்ப்பு அதிகம்.இதுபோக பொட்டாசியம் பற்றகுறையாலும் க்ராம்ப்ஸ் வரலாம்.

அதனால்:மக்னிசியத்துக்கு தினம் கைப்பிடி முந்திரியை லேசாக நெய்யில் வறுத்து மகளுக்கு கொடுக்கவும், அல்லது பாதாம் உண்டாலும் போதும்தினம் 1 வாழை, 1 சர்க்கரை வள்ளிகிழங்கு தோலுடன். இது பொட்டாசியம் பற்ராகுறையை நீக்கும்கால்ஷியத்துக்கு வழக்காமக அருந்தும் 2 கப் பால். அருந்துவதில்லை என்றால் அருந்த கொடுக்கவும்வைடமின் டி: மதிய வெயிலில் அட்லீஸ்ட் கை, காலையாவது வெயிலில் 10- 20 நிமிடம் காட்டவேண்டும். அதுபோக தினமும் நிறைய நீர் பருகவேண்டும். டிஹைட்ரேஷனாலும் க்ராம்ப்ஸ் வரும்.இதை செய்தால் விரைவில் க்ராம்ப்ஸ் விலகிவிடும்..

கிட்னி கற்கள்

கிட்னி கற்கள் மூன்றுவகைப்படும். கால்சியம் கற்கள், யூரிக் அமில கற்கள், பாஸ்பரஸ் கற்கள் என

இக்கற்கள் ஏன் உடலில் சேர்கின்றன? ஒரு சில காரணிகளை ஆராய்வோம்

பைட்டிக் அமிலம்: தானியம், நட்ஸ், விதைகளில் பைட்டிக் அமிலம் உள்ளது. முழுகோதுமை சப்பாத்தியும் தயிரும் உண்கிறீரக்ள் என வைத்துகொள்வோம். தயிரில் உள்ள கால்ஷியம் உடலில் சேரவிடாமல் கோதுமையில் உள்ள பைட்டிக் அமிலம் தடுக்கிறது. இப்போது அந்த உடலில் சேர இயலாத கால்ஷியம் சிறுநீரில் வெளியேற்ரபடுகிறது. ஆனால் நீர் போதுமான அளவு குடிக்காதபோது கால்ஷியம் சிறிது கிட்னியில் தங்குகிறது,. இது தினமும் நடக்கையில் அந்த கால்ஷியம் சின்ன கட்டிகளாக மாறி கிட்னியில் தேங்கிவிடுகிறது. இது கல்சேரும் ஒரு வழிமுறை. பைட்டிக் அமிலமும், கால்ஷியமும் ஒன்றாக உண்ணகூடாது என்பதால் முழு தானியங்கள் குறிப்பாக கம்பு, கைகுத்தல் அரிசியுடன் தயிர், பால், மோர், கீரை , எள் முதலானவற்றை உண்பது கிட்னியில் கற்கள் சேர காரணம் ஆகிறது. நட்ஸுடன் பாலை உன்டாலும் இதுதான் நிலை. நட்ஸிலும் பைட்டிக் அமிலம் உண்டு. அதனால் தான் நட்ஸ் உண்டு 2 மணிநேரம் எதையும் உண்ணவேண்டாம் என கூறூவது.

தானியங்களில் ஏராளமான பாஸ்பரஸ் சத்து உள்ளது. ஆனால் தானியங்களில் உள்ள பைட்டிக் அமிலம் பாஸ்பரஸுடன் ஒட்டிகொள்வதால் பாஸ்பரஸ் கற்கள் தோன்றுகின்றன. பெருமளவு தானிய உணவை உண்பவர்களுக்கு கிட்னி கற்கள் தோன்றுவதுடன், எலும்புகள் வீக் ஆகவும், மாரடைப்பு வரவும், ஆஸ்டிரொயிபோஸிஸ் வரவும் சாத்தியகூறுகள் அதிகம். இதற்கு ஒரு காரணம் உடலில் மினரல்கள் சரியாக் சேராமல் இருப்பதன் அடையாளமே கிட்னிகற்கள். உடலில் மக்னிசியம், வைட்டமின் டி அளவு குறைகையில் கால்ஷியம் முறைபடுத்தபடாமல் இதயகுழாய்கள், கிட்னி எங்கும் தேங்கும். அதனால் கிட்னியில் கல் வந்தால் உங்கள் உணவில் பைட்டிக் அமிலம் அதிக அளவில் இருக்கலாம் என்பதையும், அக்கால்ஷியம் முதலான மினரல்கள் இதயகுழாயில் டெபாஸிட் ஆகலாம் என்பதையும் சுட்டிகாட்டும் அறிகுறையாக இருக்கலாம். இதயத்தில் கால்ஸிபிகேஷன் டெஸ்ட் என ஒரு டெஸ்ட்டை எடுத்துபார்த்தால் இதயத்தின் சுவர்களில் கால்ஷியம் படிந்துள்ளதா என்பதை அறியலாம்.

ஆக்சலேட்டுகள்: பைட்டிக் அமிலம் போல் ஆக்சலேட் என இன்னொன்றும் உண்டு. ஆக்சலேட்டுகளும் கால்ஷியத்தில் ஒட்டிகொண்டு உடலில் சேரவிடாமல் தடுக்கும். இது காணபாடும் பொருட்கள் டீ, பீட்ரூட், ருபார்ப், நட்ஸ், ஸ்ட்ராபெர்ரி, சாக்லட், கோதுமை மற்றூம் அனைத்துவகை பீன்ஸ்களும் ஆகும். கிட்னியில் கல் இருப்பவர்கள் மேலே சொன்ன அனைத்தையும் தவிர்க்கவேண்டும். க்ரீன் டீ கூட பருக கூடாது. கோக், பெப்ஸி மாதிரி குப்பை உணவுகளை தவிர்க்கவேண்டும் என்பது சொல்லவேண்டியது இல்லை.

மைதா, வெள்ளை அரிசியை பதப்படுத்துகையில் அதில் உள்ள பைட்டிக் அமிலம் முழுக்க அகற்றபட்டுவிடுகிறது. (மினரல்களும், வைடமின்கலும் கூடதான்). அதனால் சொல்லபோனால் முழு தானியம் உண்பவர்களை விட வெள்லை அரிசியும், மைதாவும் உண்பவர்களுக்கு கிட்னி கற்கள் வரும் வாய்ப்பு குறைவு. சிரிச்சு முடிச்சாச்சா? குட் தானியங்களின் சிக்கலில் இதுவும் ஒன்று.

நட்ஸ்: பாதாம், முந்திரி எல்லாம் ஆரோக்கியமானவை. ஆனால் அவற்றின் பைட்டிக் அமில அளவால் அவற்றை வேறு எதனுடனுன் உண்ணகூடாது. பாதாம் பருப்பை 18 மணிநேரம் நீரில் ஊறவிட்டு, வாணலியில் லேசாக ரோஸ்ட் செய்து உண்பது அவற்றின் பைட்டிக் அமில அளவை பெருமளவு குறைத்துவிடுகிறது

பீன்ஸ்: சோயா, டோபு, சென்னா தால், ராஜ்மா முதலான பீண்ஸ்கள் எல்லாமே பைட்டிக் அமிலம் ஏராளம் நிரம்பியவை. சப்பாத்தி, ராஜ்மா பீன்ஸ், தயிருடன் உணவு உண்ணுவது வடநாட்டு வ்ழக்கம். சாலட்களில் எல்லாம் பீன்ஸை போடுவார்கள். இது கிட்னிகற்களின் கற்பகவிருச்க்கம். பீன்ஸை அதிக அளவு உண்ணும் தென்னமெரிக்க குடிகள் அனைவரும் பீன்ஸை முளைகட்டவிட்டு பெர்மென்ட் செய்யாமல் உண்பதில்லை. ஜப்பானில் குறிப்பாக சோயாவை அதிகம் உண்பார்கள் எனினும் சோயாவை அவர்கள் பல மாதங்கள் பெர்மென்ட் செய்வார்கள். இதனால் அதில் உள்ள பைட்டிக் அமிலம் முழுக்க அகன்று அதில் ஏராளமான பாக்டிரியா சேர்ந்து நாட்டோ எனும் ஜப்பானிய சோயாபீன் உணவு உலகிலேயே வைட்டமின் கே2 அதிகம் நிரம்ப்ய உணவாக உள்ளது. ஆனால் சோயாவை நாம் இப்படி பெர்மென்ட் எதுவும் செய்யாமல் டோஃபு, பிரியாணி என போட்டு உண்பதால் பைட்டிக் அமிலம் நம்மை பாதிக்கிறது

கிட்னிகற்களை தடுக்கும் வைட்டமின்கள்:

வைட்டமின் ஏ: வைட்டமின் டி உடலுக்கு நல்லது எனினும் வைட்டமின் ஏ போதுமான அளவில் உடலில் இல்லையெனில் கிட்னிகற்களுக்கு அதுவே காரணம் ஆகிறது. வைட்டமின் ஏ உணவில் கிடைக்க தினம் 4 முட்டை உணவில் சேர்க்கவேண்டும். சிக்கன், பட்டர் முதலானவற்றிலும் வைட்டமின் ஏ உள்ளது. சைவர்கள் காரட்டை நெய்யில் வணக்கி உண்பதும் வைட்டமின் ஏ கிடைக்க உதவும்.

கே2 வைட்டமினும் கிட்னிகற்களை கட்டுபடுத்த உதவும்,. கே2 இருக்கும் உணவுகள் ஈரல், சிக்கன் ப்ரெஸ்ட், முட்டை மற்றும் புல்லுணவு பால், நெய், பட்டர், சீஸ் முதலானவை,.
சரி..இப்ப கிட்னி கல் டயட்டுக்கு போகலாமா?

காலை: 4 நாட்டுகோழி முட்டையை பட்டரில் போட்டு செய்த ஆம்லட். கூட காய்கறிகள். கீரை மற்றும் மேலே குறிப்பிட்ட காய்கறிகளை தவிர்க்கவேண்டும். மற்ற காய்களை உண்ணலாம்.

ஸ்னாக்: 1 கப் பால் அல்லது சீஸ்

மதியம்: முழுதேங்காய் ஒன்று மற்றும் 1 கொய்யா/ நெல்லிகனி/லெமென் ஜூஸ். இளநீர் என்றால் 2 - 3 பருகலாம். இளநீரில் உள்ள மக்னிசியம் கால்ஷியம் கட்டுபாட்டுக்கு உதவும். இளநீர் தேங்காய் வழுக்கையை தவறாமல் உண்ணவும். முழு தேங்காய் எனில் தேங்காயில் உள்ல பிரவுன் பகுதியை சுரண்டி எடுக்கவும். அதை நெய்யில் வணக்கி உண்ணவும். உடன் பால் அருந்தவேண்டாம். நட்ஸ் உண்பதில்லை என்பதால் தேங்காய் உண்பது மக்னிசியம் கிடைக்க உதவும்.

தேங்காய் கிடைக்கவில்லை எனில் அரைகிலோ உருளைகிழங்கு. தோலுடன் வாணலியில் நெய் விட்டு வறுத்தது. நன்றாக ஆறவிட்டு குளிரந்ததும் உண்ணவும். இது உருளையில் உள்ள ஸ்டார்ச் அளவை குறைக்கும். அரை கிலோ உருளையில் 65 கிராம் கார்ப் உள்ளது. நட்ஸ் உணவில் இல்லை என்பதால் இதில் உள்ள 50% மக்னிசியம் கால்ஷியம் ஜீரணத்துக்கு உதவும். டயபடிஸ் இருந்தால் வேண்டாம்

மாலை: 1 கப் முழுகொழுப்பு பால்

டின்னர்: சிக்கன் ப்ரெஸ்ட் நெய்யில் வணக்கியது. அளவு 1. சைவர்கள் 40 கிராம் வெள்ளை அரிசி மற்றும் காய்கறி சேர்க்கலாம். பருப்பு தவிர்க்கவும்.

அத்துடன் தினம் 2 லிட்டர் சிறுநீர் கழியும் அளவு நீர் பருகுவது அவசியம்.

இந்த டயட் கிட்னியில் புதிதாக கற்கள் படிவதை தடுக்கும். நீர் பருகுவது ஏற்கனவே உள்ல சிறிய கற்களை அடித்து செல்ல உதவும். பெரிய அளவில் கற்கள் இருந்தால் அதை சர்ஜரி/லேப்ராஸ்கோபி மூலம் அகற்றமுடியும். இது ஆபத்து அற்ற சர்ஜரி என்பதால் அச்சப்படவேண்டியது இல்லை.

Saturday, August 8, 2015

Cholesterol, Gout/ Hyperuricemia, Hypothyroidism / கொலஸ்டிரால், ஹைப்பெர்யுரிசெமியா, தைராய்ட் குறைபாடுகளுக்கான டயட்.

Cholesterol, Gout/ Hyperuricemia, Hypothyroidism

கொலஸ்டிராலை இறக்கும் சைவ டயட்:
காலை உணவு: பிஸ்தா, வால்நட்ஸ், பாதாம்- 100 கிராம் மேக்சிமம்

மதிய உணவு: வெஜிட்டபிள் சூப் அல்லது சாலட்/ அவகாடொ பழம். சமையல் எண்ணெய் எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில்

மாலை ஸ்னாக்: ஆப்பிள் வித் 1 டம்ளர் பால்

டின்னர்: பனீர் டிக்கா (அ) ஆம்லட் (அ) டார்க் சாக்லட் (சமையல் எண்னெய் எ.வி.ஆலிவ் ஆயில்.)

2 துண்டு பச்சை பூண்டு.

ஒமேகா 3 மீன் ஆயில்- மாத்திரை. strict சைவர்கள் பிளாக்சீட் பவுடர் உட்கொள்க..அது ஒமேகா 3 மீன்மாத்திரைக்கு ஈடு இல்லை எனினும் its okay.

நடைபயணம்: வாரம் 3 நாள்

விளைவுகள்: ட்ரைகிளிசரிடு தரைமட்டம், எச்டிஎல் உயர்வு, எல்டிஎல், மொத்த கொலஸ்டிரால் குறைவு


URIC ACID DIET:

யூரிக் அமிலம் (uric acid) அதிகரிப்பதால் வரும் சிக்கலை ஹைப்பர்யுரிசெமியா (hyperuricemia) என அழைப்பார்கள். ஹைப்பர்யுரிசெமியா அதிகரித்தால் மூட்டுகளில் வீக்கம் வரும்.

இது முன்பு மன்னர்களுக்கு மட்டும் வந்ததால் "மன்னர்களின் வியாதி" (King's disease) என அழைக்கபட்டது. பின்பு இது பணகாரர்களுக்கும் வந்ததால் "பணகாரர்களின் வியாதி" (Richman's disease) என அழைத்தார்கள். 20ம் நூற்றாண்டுவாக்கில் அதிக அளவில் பொதுமக்களுக்கும் பரவி சாதாரண மனிதர்களின் வியாதி ஆகிவிட்டது.

ஹைப்பர்யுரிசெமியா ஏன் இப்படி மன்னர்கள், பணகாரர்களுக்கு மட்டும் வந்தது? அவர்களால் தான் அன்று பணக்கார உணவுகளை உண்ண முடிந்தது. அதாவது மாமிசம், சர்க்கரை, இனிப்புகள், மது (கொலம்பஸ் காலத்துக்கு முந்தைய ஐரோப்பாவில் சர்க்கரையின் விலை தங்கத்தின் விலைக்கு சமம்). அதன்பின் இவை கொஞ்சம், கொஞ்சமாக விலை இறங்கி அனைவரும் உண்ணகூடிய உணவுகளாக மாறின. ஹைப்பர்யுரிசெமியாவும் பொதுமக்களுக்கு பரவிவிட்டது.

ஹைப்பெர்யுரிசெமியா வர பின்வரும் காரணம் கூறபடுகிறது..

நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் பியூரின்கள் (purines) உள்ளன. பியூரின்கள் தான் நம் ஜீன்களின் கெமிக்கல் ஸ்ட்ரக்சரை உருவாக்குபவை. அதனால் பியூரின் இல்லாத உணவே உலகில் கிடையாது. பியூரின் என்பது செல் ஸ்ட்ரக்சர், ஜீன் என்பதால் அனைத்து உணவுகளிலும் உண்டு. ஆனால் பியூரின் அதிகம் உள்ள உணவுகள் மாமிசம், குறிப்பாக புரதம் அதிகம் உள்ள மாமிசம். உயிர்சத்து, ஜீவசத்து என சொல்லுவோமே? அதுதான் பியூரின் என வைத்துகொள்ளலாம்.

இந்த பியூரின் ஜீரணம் ஆகையில் திரவம் ஆக்கபட்டு யூரிக் அமிலமாக மாற்றபடுகிறது. பியூரின் உடைக்கபட்டு யூரிக் அமிலம் ஆவது மிக ஆரோக்கியமானது. இயற்கையானது. யூரிக் அமிலம் மிக சிறந்த ஆண்டிஆக்சிடண்ட். ரத்தநாளங்கள் ஆக்சிடைசேஷனில் சேதமடையாமல் யூரிக் அமிலம் காக்கிறது.

இந்த யூரிக் அமிலத்தை வெளியே அனுப்பும் பொறுப்பு கிட்னியை சார்ந்தது. கிட்னி அதை செய்ய முடியாமல் போகையில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. அது மூட்டுக்களில் சேர்க்கபட்டு கடும் வலி உருவாகிறது. இதுதான் ஹைபர்யுரிசெமியா அல்லது கவுட் (gout).
ஆக பியூர்ன் குறைவாக இருக்கும் சைவ உணவுகளை உண்டால் ஹைப்பர்யுரிசெமியா குணமாகும்..சீன் ஓவர் லைட் ஆஃப்....இதுதான் இதற்கான தீர்வு/வழிமுறையாக பரிந்துரைக்கபட்டு வருகிறது.

ஆனால்...

உணவில் பியூரின் அதிகமாக இருப்பதால் தான் ஹைப்பர்யூரிசெமியா வருகிறது என்பது
உணவு உண்பதால் தான் கழிவு உடலில் உருவாகிறது. உணவையே உண்னாமல் இருந்தால் கழிவும் உருவாகாது. மலசிக்கலும் வராது. ஆக மலசிக்கலுக்கு மருந்து பட்டினி என்பது மாதிரியான தீர்வுதான்!!!!!!!!!!


பிரச்சனை யூரிக் அமிலத்தை கிட்னி வெளியே அனுப்பாததுதானே ஒழிய யூரிக் அமிலம் அல்ல!!!!!
யூரிக் அமிலம் வெளியேற்றபடுவதை தடுப்பது எது?

ப்ருக்டோஸ் (பழ சர்க்கரை) மற்றும் மது!!!!!

நம் லிவரில் ப்ருக்டோஸ் சேர்கையில், அது பியூரின் மெடபாலிசத்தை குறைத்து யூரிக் அமில அளவுகளை எகிற வைக்கிறது.

இது நிகழ எந்த அளவு ப்ருக்டோஸை உண்னவேண்டும்?

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் நியுட்ரிஷனில் வெளியான ஆய்வு ஒன்று இந்த மெக்கானிசம் நிகழ சுமார் 80 கிலோ எடை உள்ளவர் 40 கிராம் ப்ருக்டோஸ் உண்டாலே போதும் என்கிறது. அதாவது சுமார் 4 வாழைப்பழம்!!!!!!!

ப்ருக்டோஸ் உணவில் சேர பழம் சாப்பிடணும் என்றே இல்லை. சர்க்கரை என்பதே கரும்பில் இருந்து கிடைப்பதுதான். ஆக அதில் பாதி ப்ருக்டோஸ்.

ஆக மாமிசம், சர்க்கரை, பழம், மது என பணக்கார உணவுகளை உண்டால் யூரிக் அமில அதிகரிப்பு நிச்சயம்.

சர்க்கரை, மது, ஆகியவற்றை தவிர்த்து மாமிசம், காய்கறி மட்டும் உண்ணும் கேவ்மேன் டயட்டில் யூரிக் அமில பிரச்சனை வராது. உருவாகும் யூரிக் அமிலம் அப்படியே வெளியேறிவிடும்.

20ம் நூற்றாண்டில் ஹைப்பர்யுரிசெமியா அதிகரிக்க காரணம் பெப்சி/கோக்/இனிப்புகள் மற்றும் அதிகரித்த மது நுகர்வு. மாமிசம் உண்னாமல் சைவ உணவு மட்டுமே உண்டு பெப்சி/கோக்/இனிப்பு/ மது அருந்தினாலும் யூரிக் அமில பிரச்சனை வரும். காரணம் நம் உணவுகள் அனைத்திலும் பியூரின்கள் உண்டு. பியூரின் மெக்கானிசம் டிஸ்டர்ப் ஆனால் யூரிக் அமிலம் வெளியேறூவது தடைப்பட்டு ஹைப்பர்யுரிசெமியா வரும்.

ஹைப்பர்யுரிசெமியா பிரச்சனை வந்தால்/ இருந்தால் என்ன மாதிரி டயட் உண்னவேண்டும்?
ஜர்னல் ஆஃப் ருமடாலஜியில் வெளியான ஆய்வு ஒன்று பியூரின் குறைவாக உள்ள உணவுகளை உன்டால் ஹைப்பர் யுரிசெமியா குறையும் என்பதை நிராகரிக்கிறது. பியூரின் அதிகமாக உள்ள உணவுகளை உன்டால் தற்காலிகமாக மட்டுமே யூரிக் அமில அளவு அதிகரித்து பின் குறைந்துவிடும் என்கிறது. பியூரின் குறைவாக உள்ள உணவுகளை உண்டால் வெகு சிறிதளவே யூரிக் அமில அளவுகளில் மாற்றம் ஏற்படும் என்கிறது.

என்ன மாதிரி உணவை உண்னவேண்டும்?

காலரி குறைவான, குறைந்த கார்ப், புரதம் சற்று அதிகம் உள்ள, மோனோசேச்சுரேட்டட் வகை கொழுப்புகள் அதிகமாக உள்ள உணவை உண்னவேண்டும். அதாவது 40% கார்ப், 40% கொழுப்பு, 20% புரதம்.

அதாவது நட்ஸ்,ஆலிவ் ஆயில், மீன் அதிகம் உள்ள உணவுகளை 1600 காலரி எனும் அளவுக்குள் உண்ணவேண்டும். 1600 காலரி அளவுக்குள் உண்னவேண்டும். ஆல்கஹால், சர்க்கரை அறவே தவிர்க்கவேண்டும். உறைகொழுப்பு உள்ள மாமிசம், வெண்ணெய், தேங்காய், முட்டை போன்றவற்றை தவிர்க்கவேண்டும். யூரிக் அமில பிரச்சனை வர இவை காரணம் அல்ல. ஆனால் ப்ருக்டோஸால் வரும் பிரச்சனையால் துரதிர்ஷ்டவசமாக மிக ஆரோக்கியமான இந்த உணவுகளை உண்ண இயலாமல் போகிறது. ஹைப்பர்யுரிசெமியா குணமான பின் இவற்றை மீண்டும் உண்ணலாம்.

40% கார்ப் என கூறபட்டு இருப்பதால் காய்கறி, நட்ஸ் மூலம் கார்ப்களை அடையலாம். பால் பொருட்க்ல நுகர்வை குறைக்கவேண்டும். நட்ஸில் முந்திரி சேர்த்துகொள்லலாம். 100 கிராம் முந்திரியில் 39 கிராம் கார்ப் உண்டு. ஆல்கஹால்/ சர்க்கரை முதலானவற்றை தவிர்க்கவேண்டும். காளிபிளவர், கார்ட்,பூசணி முதலிய காய்களை அதிகம் உண்ணலாம். வைட்டமின் சி சப்ளிமெண்ட் தினமும் எடுக்கலாம், அல்லது தினம் 1 - 2 நெல்லிகனி உண்ணலாம். (கொய்யா வேண்டாம்). நீர் நிறைய அருந்தவேண்டும். வைட்டமின் சி ஹைப்பர்யுரிசெமியா பிரச்சனையை தீர்க்கும்.

காலரி கணக்கை 1600க்குள் அடக்குவதும் முக்கியம்.

பெப்சி.கோக்,மது, சர்க்கரை பக்கமே போக கூடாது.

இன்ஃப்ளமேஷனை குறைக்கும் பச்சை பூன்டு, (பச்சை) மஞ்சள், இஞ்சி, துளசி முதலானவற்றை தினமும் உணவில் சேர்க்கவேண்டும். மஞ்சளை சமைத்தபின் மேலே தூவி உண்ணவேண்டும்
காமன் மேன் டயட்டில் இருப்பவர்கள் அரிசி.உருளைகிழங்கு சேர்த்துகொள்ளலாம். பழுப்பு அரிசியாக சேர்த்து கொள்வது நல்லது. இவற்றில் க்ளுகோஸ் தான் அதிகமே ஒழிய ப்ருக்டோஸ் இல்லை.

ஆய்வுகள்:

http://www.jrheum.org/content/29/7/1350.full.pdf

http://ajcn.nutrition.org/content/58/5/754S.long

ஹைப்போதய்ராய்டு டயட்:

கழுத்துக்கு அருகே இருக்கும் தய்ராய்டு சுரப்பி தய்ராய்டு ஹார்மோன் சுரப்பை நிறுத்தினால் ஹைப்போதய்ராய்டு பிரச்சனை வரும். உடல் எடை அதிகரித்தல், உடலில் கொழுப்பு தங்குதல் முதலிய பல பிரச்சனைகள் இதனால் வரும்.

திடீர் என பலருக்கும் இந்த பிரச்சனை ஏன் வருகிறது என்பதைப்பற்றி பல தியரிகள் உலா வருகின்றன. அவற்றில் சில:

ஹைப்போ தய்ராய்டு பிரச்சனைக்கு முக்கியகாரணமாக அரசுகள் கூறூவது அயோடின் பற்றாகுறை. இதனால் உப்பில் அயோடின் சேர்க்கசொல்லி கட்டாயபடுத்தி சட்டம் கூட வந்துவிட்டது. ஆனாலும் இந்த சிக்கல் தீர்ந்தபாடு இல்லை.

அயோடின் சேர்த்த உப்பால் தான் தய்ராய்டு பிரச்சனை வருகிறது என இன்னொருதரப்பு கூறீவருகிறது. இப்படி எதிரும், புதிருமாக இருகருத்துக்கள் நிலவுவதும் இதற்கு ஆராய்ச்சிகள் அதிகமாக நடக்காததும் வியப்பு ஊட்டுகிறது.

அரசால் நீரில் கலக்கபடும் ப்ளோரைடு, க்ளோரின் முதலானவை இந்த பிரச்சனைக்கு காரணம் என்பது இன்னொரு தியரி. நம் குடிநீர் முழுக்க புளோரைடு கலக்கப்ப்ட்டு தான் வருகிறது
சளி, காய்ச்சலுக்கு உட்கொள்ளும் மருந்துகள், ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்துகள் முதலானவை தய்ராய்டு சிக்கலுக்கு காரணம் என்பது இன்னொரு காரணி.

தய்ராய்டு பிரச்சனை வந்தால் தய்ராய்டு ஹார்மோனை மருந்தாக கொடுப்பார்கள். இதற்கு என தனியாக டயட் எதுவும் கிடையாது. அப்படி சில வலைதளங்களில் பரிந்துரைகள் வருவது உண்மை. ஆனால் அவை எதுவும் தய்ராய்டை குணப்படுத்துவதாக தெரியவில்லை.

கேவ்மேன் டயட்டுகள் தய்ராய்டு பிரச்சனையை தீர்க்கும் என எழுத ஆசைதான். ஆனால் பலசமயங்களில் டயட் என்பது வியாதி வராமல் தடுக்க கூடிய ஒன்றாக அமைவதும், சிக்கல் என வந்தபின் அதை குணப்படுத்த டயட்டால் இயலாமல் போவதும் காண்கிறோம். தய்ராய்டுக்கு ஸ்பெஷன் டயட் எதுவும் இல்லை. ஆனால் சில விதிகள் உதவலாம்:

தய்ராய்டு என்பது ஒரு ஹார்மோன். ஹார்மோன்கள் அனைத்தின் மூலப்பொருளும் கொலஸ்டிராலே. அதனால் உயர்கொழுப்பு உணவு தியரட்டிக்கலாக தய்ராய்டு ஹார்மோன் சுரப்புக்கு உதவவேண்டும்.

குப்பை உணவுகள், குறிப்பாக கோதுமை, சர்க்கரையை தவிர்க்கவேண்டும். தய்ராய்டில் முக்கிய பிரச்சனை எடை அதிகரித்தல், டயபடிஸ். அவற்றை இவை விரைவுபடுத்தும்
தய்ராய்டு ஹார்மோன் பிரச்சனை இருப்பவர்கள் கார்ப் சற்று சேர்த்துகொள்வது நலம். இயற்கையான ஆர்கானிக் பழங்கள் (சர்க்கரை குறைவான ஸ்ட்ராபெர்ரி போன்றவை) சேர்த்துகொள்ளலாம்.

உடல் வலி வீக்கம், இன்ஃப்ளமேஷனுக்கு தினம் துளசி, மஞ்சள், பேஸில், பூண்டு, இஞ்சி முதலானவற்றை பச்சையாக்வும் சாறெடுத்தும் சேர்த்து வரலாம்.

ஒமேகா 3 அதிகம் உள்ள சால்மன், பிளாக்சீடு, ஆண்டிஆக்சிடண்டுகள் உள்ள பாதாம் முதலானவற்றை உண்ணலாம்.

முழுக்க கார்ப்பை தவிர்க்கவேண்டாம். அவ்வபோது இயற்கையான ஆர்கானிக் பழங்கள் கிடைத்தால் சற்று உண்ணவும். மிக அதிகமாக உண்ணவும் வேண்டாம்.

சோயாபீன்ஸ் தய்ராய்டு சுரப்பியின் பரமஎதிரி. சோயா பொருட்கள் அனைத்தையும் பாம்பை கண்டால் பயந்து விலகுவது போல் விலக்கவேண்டும்.

தேங்காயும், தேங்காய் எண்ணெயும் தய்ராய்டு சுரப்பியின் நண்பர்கள். தேங்காய் எண்ணெயில் சமையல் செய்வது மிகுந்த நலன் பயக்கும்

காப்பி மற்றும் டீ (ப்ளோரைடு அதிகம்) தவிர்க்கவேண்டும்.

போதுமான அளவில் நீர் அருந்தி ஹைட்ரேட் ஆக இருப்பது தய்ராய்டு சுரப்பிக்கு மிகுந்த நன்மை அளிக்கும்.

நார்சத்து உள்ள அவகாடோ, தேங்காய் முதலானவற்றை தினமும் உணவில் சேர்க்கலாம்
பிராக்களி, கேல், முடைகோஸ், கடுகு,நிலக்கடலை, பாலகீரை, டர்னிப், கம்பு/ராகி,பீச் பழம் முதலான பல வகை காய்கள் தய்ராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சிக்கலாக்குபவையாக அமையலாம். இவை உடலுக்கு மிகுந்த நன்மையளித்தாலும் தய்ராய்டு ஹார்மோன் சுரப்பியை பெரிதுபடுத்துபவையாக அமைந்து விடுகின்றன. மருத்துவரிடம் கேட்டு இவற்றை உட்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் பச்சையாக சாப்பிடவேண்டாம்.

சைவர்கள் அரிசி லிமிடட் ஆக உட்கொள்ளலாம்.

மொத்தத்தில் தேங்காய், புல்லுணவு மாமிசம், நட்ஸ், பழம், முட்டை, மூலிகைகள், நீர் அடிப்படையிலான டயட் இதற்கு நன்று

What is HbA1C Test? HbA1C டெஸ்ட் என்றால் என்ன? By - Muthuraman Gurusamy

HBA1C என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் எவ்வளவு சதவீதம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் ஒரு மாற்று சோதனை.

இதற்கு ஏற்கனவே இரத்தத்தில் குளுக்கோஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள Fasting blood sugar, 2-hour postprandial blood sugar, Random blood sugar (RBS), Oral glucose tolerance test என்று பல்வேறு சோதனை முறைகள் உள்ளது.
பின் ஏன் HBA1C பரிந்துரைக்கபடுகிறது.

மேற்சொன்ன சோதனைகள் உங்கள் இரத்தத்தில், குளுக்கோஸின் இப்போதைய நிலைமை என்ன என்பதை மட்டுமே சொல்லும்.

HBA1C கடந்த மூன்று மாதமாக இரத்தத்தில் குளுக்கோஸின் நிலைமை என்ன என்பதின் சராசரியை சொல்லும். அதானால் இது பரிந்துரைக்கபடுகிறது.
பின் என்ன பிரச்னை.

HBA1C சோதனை எடுத்து பார்த்து கடந்த மூன்று மாதமாக இரத்தத்தில் குளுக்கோஸின் சராசரி நிலைமை என்ன என்பதை சரியாக தெரிந்து கொள்ளலாமே.
இங்கு சரியாக என்று சொல்வதில்தான் பிரச்னை.

அதற்க்கு HBA1C சோதனை எவ்வாறு செய்ப்படுகிறது என்பதை புரிந்துகொண்டால்தான் தெரியவரும்.
இரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த செல்களில், ஹீமோகுளோபினில் A1A, A1B, A1C என்ற பிரிவுகள் உள்ளது. இதில் A1Cயுடன் குளுக்கோஸ் அதிகமாக ஒட்டிகொள் கிறது. அதை தனியாக பிரித்தெடுத்து அதில் எத்தனை சதவீதம் குளுக்கோஸ் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று கண்டுபிடிக்கவேண்டும். இரத்த சிவப்பு செல்களின் வாழ்நாள் சராசரியாக 90 நாட்கள் அதன் பிறகு அது சிதைந்து விடும். இந்த 90 நாட்களில் படிப்படியாக எவ்வளவு குளுக்கோஸ் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து சொல்வதுதான் HBA1C சோதனை முடிவுகள்.

இந்த 90 நாட்கள் என்பது சரியான கணக்கு கிடையாது. ஒவ்வொருத்தருக்கும் வேறுபாடும். நீரழிவு(DIABETIC), அனிமியா (ANEMIA) போன்ற இரத்த குறைபாடு உள்ளவர்களுக்கு சிறிது நாட்களிலேயே சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் முடிந்துவிடும் . ஒரு பிரச்னையும் இல்லாதவர்களுக்கு சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் 187 நாட்கள் வரை கூட இருக்கும்.

சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் குறைவாக இருக்கும்போது அதனுடன் ஒட்டிக்கொள்ளும் குளுக்கோஸ் விகிதம் குறைவாக இருக்கும் HBA1C சோதனை முடிவுகள் குறைவாக இருக்கும்.

சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் அதிகமாக இருக்கும்போது அதனுடன் ஒட்டிக்கொள்ளும் குளுக்கோஸ் விகிதம் அதிகமாக இருக்கும். HBA1C சோதனை முடிவுகள் அதிகமாக இருக்கும்.

ஆக HBA1C சோதனை முடிவுகளை நமது உடலில் உள்ள குளுக்கோசை விட நமது உடலில் உள்ள சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள்தான் தீர்மானிக்கிறது.

சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் அதிகமாக இருப்பவர்களுக்கு அவர்களின் உடலுக்கு குளுக்கோசை சாமாளிக்கும் திறமை இருந்தாலும் HBA1C சோதனை முடிவுகள் அதிகமாக இருக்கும்.

இதே மாதிரி நீரழிவு(DIABETIC), அனிமியா (ANEMIA) போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் குறைவாக இருக்கும். அவர்களுக்கு HBA1C சோதனை முடிவுகள் குறைவாக காண்பித்து அவர்கள் நல்ல நிலைமையில் இருப்பதாக முடிவுகள் வரக்கூடும்.

மேலும் ஏ1சி சராசரியைத்தான் காட்டும். அதாவது ஒரு நாள் 300 இருந்து மூன்று நாட்கள் 80 இருந்தால் சராசரி 125. ஆனால் ஒரு நாள் 300 போவதில் இருந்து வரும் பாதிப்பை கட்டுப் படுத்த முடியாது
மேலும் இது இரத்தத்தில் குளுக்கோஸ் ஏறும்போது நம் உடல் அதை எப்படி சாமளிக்கிறது என்பதும் தெரியாது.
இதனால்தான் HBA1C சோதனை முடிவுகளை நம்புவதர்க்கு முடியவில்லை.

எனவே HBA1C எடுக்கும்போது Fasting blood sugar, 2-hour postprandial blood sugarவும் எடுத்து பார்த்துவிடுங்கள் என்பது என் சொந்த கருத்து.

By - Muthuraman Gurusamy

தைராய்டு என்றால் என்ன? தைராய்டு இருப்பவர்களுக்கான உணவுகள். Thyroid / Diet

தைராய்டு பற்றி அறிந்துகொள்ள Muthuraman Gurusamy அவர்கள் எழுதிய கட்டுரை உதவும். அதைத் தரவிறக்க இந்தச் சுட்டியை அழுத்தவும்.





https://www.facebook.com/groups/tamilhealth/236455219878298/

நனி சைவம் எனும் வீகன் டயட் என்றால் என்ன? Raw Vegan Diet.

நனி சைவம் என்றழைக்கப்படும் வீகன் டயட் பாலைக் கூட அசைவம் என்று சைவர்களையே பீதியடைய வைக்கும் உணர்வுபூர்வமான ஒரு உணவுப் பழக்கமாகும்.

மிருக வதை, உயிர்க்கொலை, உணவுக்காக உயிர்களைக் கொல்வது என்பதை இந்த நனிசைவ மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

சைவர்களின் குறைந்தபட்ச மிருகங்களிலிருந்து பெறப்படும் உணவுகளான பால், தேன் போன்றவைகளைக் கூட நனிசைவர்கள் உண்பதில்லை.

அப்படிப்பட்ட நனி சைவத்திலும் எடை குறைக்கவும், உடலிலிருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றவும் சிறப்பான டயட் முறை ஒன்று உள்ளது. 21 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை இந்த டயட்டைப் பின்பற்றி உடல் எடை குறைப்பு, உடலிலிருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றவும் செய்யலாம். அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் உண்பதால் வயிறு மிகவும் சுத்தமாவதோடு உடல் லேசாகவும், உற்சாகத்துடனும் இருக்கும். பேலியோவுக்கு நிகரான உடல் எடை குறைக்கும் இந்த டயட் முறையை பேலியோவுடன் குழப்பிக்கொள்ளாமல் சைவம் மட்டும் உண்டு டயட் எடுத்து உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் பயன்படுத்தலாம்.

70% சமைக்காத உணவுகளும், 30% சமைத்த உணவுகளும் கொண்ட இந்த உணவு முறை பற்றி அறிய இந்தக் குழுமத்திற்கு வாருங்கள்.

https://www.facebook.com/groups/919246308138414/

Paleo Diet Tips. பேலியோ டயட் டிப்ஸ்! By- Gokul Kumaran.

டிப்ஸ் நம்பர் 1:
கொழுப்பு எப்படி சேர்கிறது?

 மது அருந்த ஆரம்பிக்கும் ஒருவனுக்கு ஆரம்பத்தில் இரண்டு பெக் போட்டாலே போதை ஏறிவிடுகிறது. அதுவே சில வருடங்கள் கழிந்த பிறகு அதே போதையை அந்த இரண்டு பெக் தருமா? நிச்சயம் தராது. இரண்டு குவார்ட்டர் ஆகும், குவார்ட்டர் ஹால்ஃப் ஆகும். ஏன்? அவனது உடம்பின் செல்கள் ஆல்கஹாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

அதே நிலைமை தான் கார்போஹைட்ரேட்டுக்கும். நாம் கார்போஹைட்ரேட் உட்கொள்ள அது க்ளூகோஸாக மாறுகிறது. க்ளூகோஸை பார்த்தவுடன் கணையம் இன்சுலினைச் சுரக்கிறது. இன்சுலின் எல்லா க்ளூகோஸையும் எனர்ஜியாக எடுத்துக்கொள் என்று செல்களுக்கு கட்டளை இடுகிறது. செல்களும் அதை எடுத்துக்கொள்கின்றன. நமக்கு எனர்ஜி கிடைக்கிறது. நாம் ஃபிட்டாக இருக்கிறோம்.

இது சிறு வயதில் ஓகே. நன்றாக ஆடி ஓடி விளையாடினோம். ஆனால் வயது ஆக ஆக நமது உடலுழைப்பு குறைகிறது. ஆனால் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவதில்லை. இதனால் செல்கள் இன்சுலின் பேச்சைக் கேட்பதில்லை. இந்த நிலைமைக்குப் பெயர் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ். கொஞ்சம் க்ளுகோஸ் எனர்ஜியாக கன்வெர்ட் ஆகிறது. மீதி அப்படியே ரத்தத்தில் இருக்கிறது. இப்பொழுது கணையம் இன்னும் அதிகம் இன்சுலினை அனுப்புகிறது. இப்பொழுது எனர்ஜியாக கன்வெர்ட் ஆகாத க்ளுகோஸை எல்லாம் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க வைத்து விடுகிறது இன்சுலின்.

ஆக, நமக்குப் பிரச்சினை கார்போஹைட்ரேட். இதை நாம் கட்டுப்படுத்தினால் உடலில் கொழுப்பு சேர்வதைக் கட்டுப்படுத்தலாம்.

oo0oo

டிப்ஸ் நம்பர் 2:

கார்போஹைட்ரேட்டைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

 முதலில் சர்க்கரை, சீனி, கருப்பட்டி, வெல்லம், பனங்கற்கண்டு, தேன், கூல் ட்ரிங்க்ஸ், பழங்கள், இனிப்பு சுவை உள்ள எல்லா பண்டங்கள், ஜங்க் உணவு என்று சொல்லக்கூடிய பீட்ஸா, பர்கர், ஐஸ் க்ரீம், கே எஃப் சி போன்ற எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும்.

oo0oo

டிப்ஸ் நம்பர் 3:
மற்ற எது எதெல்லாம் கார்போஹைட்ரேட்?

நாம் சாப்பிடும் தானியங்களான அரிசி, கோதுமை, பருப்பு, பயறு, சுண்டல், பட்டாணி, மைதா, ரவை, கம்பு, கேழ்வரகு, சோளம் இவை எல்லாமே கார்போஹைட்ரேட்கள். இவை எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும்.

oo0oo

டிப்ஸ் நம்பர் 4:
தானியங்கள், பழங்கள் இவை எல்லாம் நல்லது என்று தானே இது வரை கேள்விப்பட்டோம்?

பழங்கள் சாப்பிட்டால் இன்சுலின் ஸ்பைக் ஆகும். அதாவது நிறைய இன்சுலின் ஒரே நேரத்தில் வந்து விடும். அப்படி வந்தால், உடம்பு ஃபேட் பர்னிங் மோடுக்கு போகவே போகாது. ஆகவே, நம்முடைய டார்கெட் எடை வரும் வரை பழங்கள் சாப்பிடக்கூடாது. டார்கெட் எடை வந்த பின் மெயிண்ட்டனஸ் டயட்டில் பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

தானியங்களைத் தானே இதுவரை சாப்பிட்டு வந்தீர்கள். அவைகள் உடம்புக்கு நல்லது எடை கூட்டாது என்றால் இதை ஏன் நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் உடம்புக்கும் தானியத்துக்கும் ஒத்து வரவில்லை. உங்கள் உடம்புக்கு தானியம் அலர்ஜி. தானியம் ஒரு கார்ப் கிட்டங்கி. இரண்டாவதாக அதன் அவுட்டர் மோஸ்ட் லேயரில் இருக்கும் ஃபைட்டிக் ஆசிட் உங்கள் உணவில் இருக்கும் மற்ற நல்ல சத்துகளை உடம்பில் சேர விடாது. தானியங்களிலிருந்து கிடைக்கும் புரதங்கள் நல்ல புரதங்கள் இல்லை. தானியங்கள் உங்கள் குடலுக்கு நிச்சயம் நல்லது அல்ல. சாப்பாடு சாப்பிட்ட பின் வயிறு தொம் என்று டைட்டாக அடைத்துக்கொண்டிருப்பது போல் இருப்பதற்கும், சிலருக்கு acid refulx என்று சொல்லக்கூடிய உணவுக்குழாய் வழியே பித்த நீர் மேலேறி தொண்டை வரை வந்து நிற்பதும் தானியங்களால் தான். இதை நிப்பாட்டினால் உடம்பு நன்றாக இருக்கும்.

oo0oo

டிப்ஸ் நம்பர் 5:
அப்போ கார்போஹைட்ரேட் சுத்தமா சாப்பிடவே கூடாதா?

ஒரு நாளில் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டின் அளவு 50 கிராமுக்குள் இருக்க வேண்டும். அந்த 50 கிராமும் முன்பு சொன்ன தானியங்களிலிருந்து வராமல் Glysemic Index கம்மியாக உள்ள நல்ல கார்பிலிருந்து வரணும். அந்த நல்ல கார்போஹைட்ரேட்களின் சோர்ஸ் என்ன? கீரை, காலி ஃப்ளவர், மஷ்ரூம், கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி, வெங்காயம், வெள்ளரி, பூசணிக்காய், காரட், பீட்ரூட், சுரைக்காய், சவ்சவ் போன்ற காய்கறிகள். பீன்ஸ், அவரைக்காய் legumes வகைகளில் வருவதால் அவை பேலியோவில் சேர்ப்பு அல்ல.

oo0oo

டிப்ஸ் நம்பர் 6:
வெறும் 50 கிராம் கார்ப் எடுத்தால் பசிக்காதா?

நாம் ஒரு நாள் உட்கொள்ளும் கார்பின் அளவு 50 கிராமுக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் உடம்பு நாம் உட்கொள்ளும் கொழுப்பு மற்றும் ப்ரோட்டீனிலிருந்து க்ளூகோஸைத் தயார் செய்து கொள்ளும். இந்த டயட்டில் நாம் 50 கிராம் கார்போடு சேர்த்து ப்ரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்பு வகை உணவுகளை எடுக்கப்போகிறோம். கொழுப்பு + புரோட்டீன் உள்ளே போகும்பொழுது வயிறு நிறைவாக இருக்கும். கார்ப் சாப்பிட்ட போது இருப்பது போல் பசிக்காது.

oo0oo

டிப்ஸ் நம்பர் 7:
நல்ல கொழுப்பு என்றால் எவை எவை?

 நல்ல கொழுப்பு முதலில் எண்ணெயிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். நாம் உபயோகிக்கும் வெஜிடபிள் ரீஃபைண்ட் எண்ணெய்கள் எல்லாமே உடல்நலத்திற்குக் கேடானவை. அவைகளை அதிக வெப்பத்துக்கு சூடு பண்ணி ஹைட்ரோஜெனரேட் செய்யும்பொழுது ட்ரான்ஸ்ஃபேட் உள்ளே நுழைகிறது. அது நமது உடம்புக்கு நல்லது அல்ல.

செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், வெண்ணெய், நெய் - இதெல்லாம் உடம்புக்கு மிகவும் நல்லது. உங்கள் சமையல் இதில் ஏதாவது ஒன்றில் செய்யப்பட வேண்டும். 100% தேங்காய் எண்ணெய் என்று கடைகளில் விற்கும். அதுவும் நல்லது அல்ல. வர்ஜின் தேங்காய் எண்ணெய் அல்லது எக்ஸ்ட்ரா வர்ஜின் தேங்காய் எண்ணெய் தான் நல்லது. வேறு வழியே இல்லை என்றால் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் ஓகே, அதையும் தவிர்ப்பது நல்லது. எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலின் ஸ்மோக் பாயிண்ட் மிகவும் கம்மி என்பதால் அது சமையலுக்கு உகந்தது அல்ல. சலாடின் மேல் கோல்ட் ட்ரெஸ்ஸிங்கிற்காக உபயோகித்துக்கொள்ளலாம்

முட்டை மிகவும் நல்லது. அதுவும் நாட்டுக்கோழி முட்டை என்றால் மிக மிக நல்லது. முட்டையை முழு முட்டையாக மஞ்சள் கருவோடு சேர்ந்து சாப்பிட வேண்டும். ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு முட்டைகள் சாப்பிடலாம்.

ஆடு, மாடு, கோழி, மீன் மிகவும் நல்லது. அதுவும் புல் தின்று வளர்ந்த ஆடு, மாடு மிக மிக நல்லது. நாட்டுக்கோழி மிகவும் நல்லது. பண்ணையில் வளர்க்கப்படாத, ஆற்றில், கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் மிகவும் நல்லது. ஆடு மாடுகளின் உள்ளுறுப்புகளான இதயம், மூளை, லிவர், போன்றவைகள் மிகவும் நல்லது.
தேங்காயை அப்படியே சாப்பிடலாம். அதில் இருப்பது நல்ல உறைகொழுப்பு. பனீர் சாப்பிடலாம். முழுக்கொழுப்புள்ள சீஸ் சாப்பிடலாம்.

பாதாம், பிஸ்தா, வால்நட், மகடாமியா நட்ஸ், பிரேசில் நட்ஸ், முந்திரிப்பருப்பு போன்ற நட்ஸ்களைச் சாப்பிடலாம். முந்திரிப்பருப்பில் கார்ப் கொஞ்சம் அதிகம் என்பதால் கொஞ்சம் கம்மியாகச் சாப்பிடலாம். பாதாம், முந்திரி இவைகளை நெய்யில் வறுத்தும் சாப்பிடலாம். இது போன்ற நட்ஸ்கள் சாப்பிடும்பொழுது நட்ஸ்களை மட்டும் தனியாகச் சாப்பிட வேண்டும். வேறு எதையும் இதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் இரண்டு மணி நேரம் இடைவெளி இருப்பது மிகவும் நல்லது. பாதாமை குறைந்த பட்சம் 8 மணி நேரம் ஊற வைத்து சாப்பிடுவது அதனில் இருக்கும் ஃபைட்டிக் அமிலத்தின் தீவிரத்தைக் குறைக்கும்.

வெஜிடேரியன்கள் ஃப்ளாக்ஸ் ஸீட் வாங்கி அதை பவுடராக்கி, ஒரு டீஸ்பூன் அளவு தினமும் சமையலில் தூவி சாப்பிடலாம்.

அவகேடா, ஆலிவ் பழங்கள் சாப்பிடலாம்.

oo0oo

டிப்ஸ் நம்பர் 8:
கொழுப்பு சாப்பிடலாம் என்கிறீர்களே, கொலஸ்ட்ரால் கூடாதா, இதயத்திற்கு ஆபத்து இல்லையா?

 ஆக்சுவலா பாத்தீங்கன்னா கொலஸ்ட்ரால் ஒரு பிரச்சினையே இல்லை. பிரச்சினை inflammation. இது எதனால் ஏற்படுது? சுகர், கார்ப், ஒமேகா 6 வெஜிடபிள் ஆயில்களான சன்ஃப்ளவர் ஆயில், சோயாபீன் ஆயில், கார்ன் ஆயில் இவைகளால் தான். Inflammation எப்படி இருக்கும்னா ரத்த நாளங்களின் உள்பகுதியில் சேண்ட்பேப்பரை வச்சு உரசினா என்ன மாதிரி உள்காயங்கள் வரும் அது தான் Inflammation. இதைச் சரி பண்ண கொலஸ்ட்ரால் போய் அதன் மேல் படியுது. Inflammation இல்லை என்றால் கொலஸ்ட்ரால் சுதந்திரமா போய்க்கிட்டு வரும்.

பேலியோ லைஃப்ஸ்டைலினால் இந்த உள்காயங்கள் ஏற்படுவதில்லை. அடுத்து ட்ரைக்ளிஸரைட்ஸ் 100 க்கு கீழே வந்திரும். எல் டி எல் கொலஸ்ட்ரால் இருக்கும். ஆனால் அவை அளவில் பெரிய fluffy ஆக இருக்கும். அதனால் இதயத்திற்கு ஆபத்தில்லை.

நான்கு முட்டைகள் வரை சாப்பிடுகிறோம். அவ்வாறு முட்டைகள் நாம் சாப்பிடாவிட்டால் உடம்பே கொலஸ்ட்ராலை உற்பத்தி பண்ணிக்கொள்ளும். நாம் முட்டைகள் சாப்பிடுவதால் அது கொலஸ்ட்ரால் உண்டாக்குவதை குறைத்துக்கொள்கிறது.

இந்த சுட்டிகளை வாசிச்சீங்கன்னா கொலஸ்ட்ராலைப் பற்றி ஒரு புரிதல் வரும்.
http://www.sott.net/…/242516-Heart-surgeon-speaks-out-on-wh…
http://authoritynutrition.com/how-many-eggs-should-you-eat/

oo0oo

டிப்ஸ் நம்பர் 9:
இதுவரை சோறு சப்பாத்தி என்று ஃபுல் கட்டு கட்டி சாப்பிட்டோமோ, இப்போ அதையெல்லாம் நிறுத்தப்போகிறோமே, பசிக்காதா?

 நாம சாப்பிடுகிற உணவிலிருந்து உருவாகும் க்ளுகோஸ் எனர்ஜியாக மாறியது போக மீதம் இருக்கும் க்ளுகோஸ் லிவர்ல க்ளைகோஜனாக சேமிக்கப்படுகிறது. எப்பொழுதாவது நாம் விரதம் இருக்கும்பொழுது உடம்பில் க்ளுகோஸ் இல்லாமல் போகும். அந்நேரம் இந்த க்ளைகோஜன் க்ளூகோஸாக மாறி ஆற்றல் கொடுக்கும். நீங்கள் பேலியோவிற்கு மாறி கார்ப் 50 கிராமுக்கு கம்மியாக எடுக்கும்பொழுது இது தான் ஆரம்பத்தில் நடக்கும். க்ளூகோஸ் உடம்பில் இல்லாமல் போகும். கார்ப் சாப்பிட்டு பழக்கப்பட்டு விட்ட உடம்பு எனக்கு கார்ப் கொடு என்று கேட்டு அழும். அதை எப்படித் தெரிவிக்கும்? தலைவலி மூலமாக. அதை நீங்கள் கொஞ்சம் நட்ஸ் சாப்பிட்டோ தண்ணீர் குடித்தோ, இல்லை ஒரு காபி டீ குடித்தோ கட்டுப்படுத்தி விட்டால் க்ளைகோஜனிலிருந்து ஸ்டாக் ரிலீஸாகும், உடம்புக்கு எனர்ஜி கிடைத்து விடும். ஆக, டயட் ஆரம்பத்தில் நாலைந்து நாட்களுக்கு அதாவது கொழுப்பு + புரத உணவுக்கு உங்கள் உடம்பு பழக்கப்படும் வரை அவ்வப்பொழுது தலைவலி வரலாம். அதைத் தாண்டி வந்து விட்டால், அப்புறம் பசி இருக்காது. காலையில் 100 பாதாம் சாப்பிட்டாலே மதியம் வரை பசிக்காது. கார்ப் உணவு எடுப்பது போல் சீக்கிரம் பசி எடுக்காது. வயிறும் தொம்மென்று இருக்காமல், லேசாக இருக்கும். பசியும் இருக்காது.
ஆக, முதலில் இந்த க்ளைகோஜன் ஸ்டாக் காலியாகும். அப்புறம் Between meals நேரங்களில் உடம்புக்கு எனர்ஜி தேவைப்படும் அல்லவா அது உங்கள் கொழுப்பு ஸ்டாக்கிலிருந்து கொடுக்கப்படும். இப்படித்தான் உங்களுக்கு எடை குறையப் போகிறது.

க்ளைகோஜன் சேமிக்கப்படும்பொழுது அதன் எடைக்கு பல மடங்கு நிகரான நீர் எடையும் உடம்பில் சேமித்து வைக்கப்படுகிறது. க்ளைகோஜன் காலியாக ஆக, அந்த நீரும் காலியாகும். ஆரம்ப காலத்தில் மூன்றிலிருந்து நான்கு கிலோ வரை சீக்கிரமாக எடை இழப்பு நேரும். அது நீர் எடை தான். அதன் பின் நீங்கள் இழக்கும் எடை தான் உண்மையான கொழுப்பு கரைந்து இழக்கப்போகும் எடை

oo0oo

டிப்ஸ் நம்பர் 10:
பேலியோ ஆரம்பித்து ஒரு மாதம் கழித்து எனக்கு பழைய உணவு ஒரு முறை சாப்பிடவேண்டும் போல் ஆசை வருகிறது. “சீட்” செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அப்பொழுது என்ன ஆகும்?

 டயட் ஆரம்பித்து நன்றாகச் சென்று கொண்டிருக்கும்போது ஒரு நாள் ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் ஒரு தட்டு சாம்பார் சாதம், இன்னொரு தட்டு ரசம் சாதம், அடுத்த தட்டு வத்தக்குழம்பு சாதம் அடுத்த தட்டு தயிர்சாதம் கடைசியில் பாயாசம் (எழுதும்போதே எப்படியோ இருக்கிறது இப்படியா சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்) என்று ஃபுல் கட்டு கட்டுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன ஆகும்? இன்சுலின் ஸ்பைக் ஆகும். உடம்பு என்ன செய்யும்? ஆகா, இதுவரை கார்ப் கிடைக்காத ஏதோ பஞ்சத்தில் அடிபட்ட ஊரில் இருந்திருக்கிறான் போல, இன்று மீண்டும் நல்ல இடத்திற்கு வந்து விட்டான், இன்று உடனடியாக கொழுப்பைச் சேமிக்க வேண்டும் இல்லையேல் இவனுக்கு தேவைப்படும் நேரத்தில் நாம் எப்படி கொழுப்பு சப்ளை பண்ண முடியும் என்று நினைத்து அன்று உடனடியாக ஃபேட் ஸ்டோரிங் மோடிற்கு வந்து எவ்வளவு சேமிக்க முடியுமோ அவ்வளவும் சேமித்து விடும். பெரும்பாலும் அது க்ளைகோஜனாகத்தான் இருக்கும்.
ஒரு நேரம் அல்லது மேக்ஸிமம் இரு நேரங்கள் சீட் செய்து விட்டு மறுபடியும் டயட்டிற்கு திரும்ப வந்தால் முதலில் ஆரம்பத்தில் கூறியது போல் க்ளைகோஜன் ஸ்டாக்கை காலி செய்த பின் தான் மறுபடியும் ஃபேட் பர்னிங் மோடிற்கு உடம்பு வரும். இதற்கு நான்கைந்து நாட்கள் ஆகலாம்.
ஆகவே வாரத்திற்கு ஒருமுறை வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் மட்டும் சீட் செய்து கொள்கிறேன் என்பதெல்லாம் கதைக்காகாது. ஒரு மாதமாவது தொடர்ந்து சீட் செய்யாமல் டயட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும்.

oo0oo

டிப்ஸ் நம்பர் 11:
என்னுடைய டார்கெட் வெயிட் வந்து விட்டால் இந்த டயட்டிலிருந்து விலகி நார்மல் உணவை சாப்பிட ஆரம்பிக்கலாமா?

எது நார்மல் உணவு? உங்களுக்கு இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் தந்து, இன்ஃப்ளமேஷன் தந்து, சர்க்கரை நோய் தந்து, அல்சர் தந்து, acid reflux தந்து, சுமக்கவே முடியாத தொப்பையையும் கொடுத்த அந்த உணவா நார்மல் உணவு?

என் நண்பன் தினமும் நன்றாக சோறு சப்பாத்தி சாப்பிடுகிறானே அவனுக்கு ஒன்றும் ஆகவில்லையே? அவர் உடம்பு வேற உங்க உடம்பு வேற அவருக்கு மெட்டாபாலிஸம் சரியாக இருந்தால் மகராஜனாக சாப்பிடட்டும் நன்றாக இருக்கட்டும், உங்களுக்கு கார்ப் அலர்ஜி, தானியம் அலர்ஜி, உங்களுக்கும் தானிய வகை சாப்பாடுகளுக்கும் ஒத்துக்கொள்ளவில்லை அதனால் தான் இந்தப் பக்கம் வந்திருக்கிறீர்கள் ஆகவே நீங்கள் தொடர்ந்து இந்த லைஃப் ஸ்டைலில் இருங்கள். ஆறு மாதங்கள் இருந்தாலே எது நார்மல் உணவு எது உங்கள் ancestors சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் இருந்த உணவு என்பது உங்களுக்கே தெரிய வரும்.
உங்கள் எடை குறைந்திருக்கலாம். ஆனால் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் அவ்வளவு எளிதில் ரிவர்ஸ் ஆகாது. ஆகவே அதே சைன்ஸ் தான் இப்பொழுதும். 125 கிலோவிலிருந்து 85 கிலோவிற்கு உடம்பின் எடையைக் குறைத்திருந்தாலும் மறுபடியும் நீங்கள் கார்ப் லோடிங் செய்தால் இன்சுலின் ஸ்பைக் ஆகும், உடம்பு ஃபேட் பர்னிங் மோடிலிருந்து ஃபேட் ஸ்டோரிங் மோடிற்கு செல்லும், கொழுப்பு சேரும்.

டார்கெட் எடை வந்த பின் மெயிண்ட்டனஸ் டயட்டாக சிலவற்றை தளர்த்தலாம். நல்ல கார்ப் சோர்ஸ்களான ஆப்பிள் போன்ற பழங்களைச் சேர்க்கலாம்.

ஆகவே ஒரு பெர்மனெண்ட் லைஃப் ஸ்டைலில் மாற்றம் வேண்டும் எனக்கு ஆரோக்கியமான உடம்பு வேண்டும் என்றால் இந்தப் பக்கம் வாங்கள். குறுகிய கால ரிசல்ட் கிடைத்த பின் கட்சி மாறுவது இங்கே சாத்தியமில்லை.

By- Gokul Kumaran.

முன்னோர் உணவு மென்புத்தகம், (தமிழின் முதல் பேலியோ புத்தகம்). Munnor Unavu PDF (First Tamil Paleo Guide)

தமிழின் முதல் பேலியோ புத்தகம் பிடிஎஃப் தரவிறக்க:

இங்கே சொடுக்கவும்.

இந்தப் புத்தகம் குழுமத்தின் ஆரம்பகால முக்கிய பதிவுகளையும், பகிர்வுகளையும் ஒன்றாகத் தொகுத்த ஒரு முயற்சி.

அனைத்து உரிமையும் ஆசிரியர் Neander Selvan அவர்களுக்கே உரித்தானது. அனுமதி இன்றி பிரசுரித்தல், காசுக்கு விற்பனை செய்தல், சொந்தமாக ஜிந்தித்து எழுதியதுபோல பீலா விட்டு காசு வாங்கி, எடை குறைக்கிறேன் என்று ஏதாவது கேடுகெட்ட பவுடர் விற்பது போன்றவைகள் கூடாது.

மீறி இதைப் பகிர்வதும், கண்டமேனிக்கு உடல் எடை குறைக்க மருந்து கொடுப்பதும், அதைச் சாப்பிட்டு உடல் கேடுகள் வருவதற்கும் நீங்களே பொறுப்பு, எந்த வகையிலும் ஆரோக்கியம் நல்வாழ்வுக் குழு இதை ஆதரிப்பதில்லை.

நன்றி.

பேலியோவில் தவிர்க்கவேண்டிய, உண்ணக்கூடிய காய்கறிகள் எவை?

Paleo Vegetables


தவிர்க்கவேண்டிய மற்றும் உண்ணக்கூடிய பேலியோ காய்கறிகள் எவை எனப்பார்ப்போம்.


உண்ணகூடிய காய்கறிகள்
காளிபிளவர்
பிராக்களி
முட்டைகோஸ்                                                                                                                                              முள்ளங்கி
பாகற்காய்
காரட்
பீட்ரூட்
தக்காளி
வெங்காயம்
வெண்டைக்காய்
கத்திரிக்காய்
சுண்டைக்காய்
வாழைத்தண்டு
அனைத்துவகைகீரைகள்
முருங்கை
ஆஸ்பாரகஸ்
ருபார்ப்
ஆலிவ்
செலரி
வெள்ளரி
ஸுக்கனி
காப்ஸிகம் (பெல்பெப்பெர்), குடைமிளகாய்
பச்சை, சிகப்பு மிளகாய்
பூசணி
காளான்
தேங்காய்
எலுமிச்சை
பூண்டு
இஞ்சி
கொத்தமல்லி
மஞ்சள்கிழங்கு
அவகாடோ                                                                                                                                                    பீர்க்கங்காய்                                                                                                                                                   புடலங்காய்                                                                                                                                                  சுரைக்காய்

பெரிய நெல்லிக்காய்
அவகோடா எனும் பட்டர் ப்ரூட்.

 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<

தவிர்க்கவேண்டிய காய்கறிகள்
மரவள்ளி
சர்க்கரைவள்ளி
உருளைகிழங்கு
பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை)
சென்னா
சுண்டல்
பருப்புவகைகள் அனைத்தும்
பயறுவகைகள் அனைத்தும்
நிலக்கடலை
சோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர்
*சோயா எந்தவடிவிலும் ஆகாது*
அவரைக்காய்                                                                                                                                               பனங்கிழங்கு
பலாக்காய்
வாழைக்காய்
பழங்கள் அனைத்தும்.

For more information visit http://www.facebook.com/groups/tamilhealth

Repeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.

பாதாம் எண்ணிக்கை 100 கிராமா? 100 நம்பரா?

பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண்ணிக்கையிலும் அது கிட்டத்தட்ட 100 பாதாம்களே வரும். அதாவது ஒரு கிராம் = ஒரு பாதாம். கூடக் குறைய இருக்கலாம் தவறில்லை.

டயட்டுக்கு முன்பாக கண்டிப்பாக உடல் பரிசோதனை, ப்ளட் டெஸ்ட் செய்யவேண்டுமா?

கண்டிப்பாக செய்துகொள்வது நல்லது, அப்பொழுதுதான் உங்கள் உடலில் ஏற்கனவே ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது தெரியவரும், அதற்கேற்ப சில பொருட்களை விலக்கியும் சேர்த்தும் டயட் எடுக்க முடியும். டயட்டிற்கு பின்பும் இந்த டெஸ்ட்களை மீண்டும் எடுப்பதன் மூலம் டயட்டால் விளைந்த நன்மைகள் உங்களுக்கு அறிவியல் பூர்வமாகவே தெரியவரும்.

கடைகளில் விற்கப்படும் பேலியோ பிரியாணி ரைஸ், பேலியோ பரோட்டா, பேலியோ ப்ரோட்டீன் பார், பேலியோ சர்க்கரை, பேலியோ சுகர்லெஸ் கரும்பு ஜூஸ், பேலியோ சப்பாத்தி, பேலியோ எண்ணெய் போன்றவற்றை வாங்கி உண்ணலாமா? 

கூடாது. பேலியோவில் உங்கள் உணவை நீங்களே சமைத்து உண்ணுவதே சிறப்பு. ரெடிமேடாகக் கிடைக்கும் உணவுகள், பேலியோ என்ற அடைமொழியுடன் கடைகளில் விற்கப்படுபவனவற்றை வாங்கி காசை வீணாக்காதீர்கள். தேவையான பொருட்களை வாங்கி, உங்களுக்குப் பிடித்தது போல சமைத்து ஆரோக்கியமாக டயட் துவங்குங்கள். எந்தப் பொருளை வாங்கினாலும் அதில் என்ன பொருட்கள் கலந்திருக்கிறது என்று பாருங்கள், செயற்கை நிறங்கள், செயற்கை இனிப்பு, ப்ரிசர்வேட்டிவ்கள் போன்றவைகள் இருந்தால் எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவது உத்தமம்.

கோழி முட்டை நாட்டுக் கோழி முட்டையா? ப்ராய்லர் கோழிமுட்டையா? எது சாப்பிடுவது?

பேலியோவைப் பொறுத்தவரை தானாகவே இரை தேடி உண்ணும் மிருகங்களின் மாமிசம் மட்டுமே முதல் தேர்வு. முட்டையைப் பொறுத்தவரை நாட்டுக் கோழி முட்டை கிடைத்தால் உன்னதம். கிடைக்காவிட்டால் ப்ராய்லர் கோழி முட்டைகளை சாப்பிடலாம். கவனம் நாட்டுக் கோழி முட்டை என்பது பண்ணைகளில் ஹைப்ரிட் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்பட்டு, அந்தக் கோழிகள் இயற்கையாக உண்ணாத பொருட்களை தீவனமாகக் கொடுத்து உற்பத்தி செய்யப்படும் முட்டைகளும், கோழிகளும் விற்பனையாகிறது. இதை அதிக விலை கொடுத்து வாங்குவதை விட ப்ராய்லர்கோழியே வாங்கி உண்ணுவது உத்தமம்.

உங்களால் அருகாமை கிராமங்களில் சுதந்திரமாக வளர்க்கப்படும் கோழிகளை, முட்டைகளை வாங்க முடியுமென்றால் உங்கள் உடல் நலத்திற்கென வாரம் ஒரு நாள் பயணம் செய்து அப்படி வளர்ப்பவர்களிடம் வாங்கிப் பயனடையலாம். உங்கள் முயற்சியையும், நேரத்தையும் பொறுத்தது அது. இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாதவர்கள், ப்ராய்லர் வாங்கி டயட்டை முன்னெடுங்கள்.

டேட்ஸ் சாப்பிடலாமா? ஓட்ஸ் சாப்பிடலாமா? பழங்கள் ஏன் தவிர்க்கவேண்டும்?வேர்க்கடலை, பருப்பு ஏன் தவிர்க்கவேண்டும்? பீன்ஸ் ஏன் சாப்பிடக்கூடாது? ஏன் பழங்களை ஜூஸ் செய்து குடிக்கக்கூடாது?

டேட்ஸ் என்பது ஒரு இனிப்பு உணவுதான், அதைச் சாப்பிட்டு இரும்புச் சத்து உடலில் சேரவேண்டுமானால் ஒவ்வொரு வேளையும் 1.5கிலோ அளவுக்குச் சாப்பிடவேண்டும், அதில் சேரும் இரும்புச் சத்தைவிட உங்களின் உடலில் சேரும் சர்க்கரை அளவுகள் அதிகம்.

பழங்களிலும் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது, டயபடிஸ் இருப்பவர்கள் பழம் சாப்பிட்டால் உடனே சர்க்கரை அளவுகள் ரத்தத்தில் ஏறும். போலவே உடல் எடை குறைக்க டயட் எடுப்பவர்கள் முதல் 30 
நாட்கள் பழங்கள் தவிர்ப்பது நல்லது, இது இன்சுலினை ஏற்றும், உடல் எடை கூடும், ஏன் எடை குறையவில்லை என்று குழப்பமே மிஞ்சும்.

பருப்பு, லெகூம் வகைகளில் வரும் பீன்ஸ் வகைகளும் இயற்கையாகவே பைட்டிக் அமிலம் (Pytic Acid) என்ற தற்காப்பு விஷயத்தை தன்னகத்தே கொண்டுள்ளன. இந்த இயற்கை தற்காப்பு விஷயம் பருப்பு, பீன்ஸ் வகைகளை நாம் சமைத்து உண்ணும்போதும் அழியாமல் உடலில் சேர்ந்து பல உபாதைகளையும், அதனுடன் நாம் உண்ணும் பிற உணவுகளின் சத்துக்களை நம் உடலில் சேரவிடாமலும் செய்கின்றன. அதனாலேயே பாலியோவில் அவற்றுக்குத் தடை.

பேலியோவில் குதித்துவிட்டேன், நான் எப்படி சாப்பிடவேண்டும், கொடுக்கப்பட்ட டயட் சார்ட்டில் இருப்பவைகளுடன் கூடவே கோதுமை தோசை, தேன் தினைமாவு, ஹெர்பாலைப் பவுடர், கொள்ளு ரசம், ஓட்ஸ் அல்வா, அப்பளம், எண்ணெயில் நன்றாகப் பொரித்த சிக்கன், வெல்லம் போட்ட கடலைமிட்டாய், இன்னபிறவற்றையும் கூட சேர்த்து சாப்பிடலாமா?

கூடாது, கொடுக்கப்பட்ட டயட் சார்ட்டை மட்டும் முதல் 30 நாட்கள் கடுமையாகக் கடைபிடிக்கவும். மேலே சொன்ன உணவுகள் யாவும் பேலியோவில் விலக்கப்பட்டவை.

நீங்கள் கொடுத்த டயட் சார்ட்டினை நானே சிறிது மாற்றி, காலையில் ஒரு காபியுடன் 5 பட்டர் பிஸ்கெட் (பட்டர் பாதாம்தானே?) அல்லது மேரி பிஸ்கெட், 100 பாதாமுக்குப் பதில் 15 பாதாம், இரண்டு இட்லி, மஞ்சள் கரு இல்லாத முட்டை, இதயத்துக்கு நலமளிக்கும் சன்ப்ளவர் ஆயிலில் செய்த மெதுவடை 1, மதியம் 1 ப்ளேட் சோறு, பீன்ஸ் பொரியல், அவரைக்காய் கூட்டு, நிறைய சன்ப்ளவர் எண்ணெய் விட்டு வதக்கிய உருளைக்கிழங்கு பொரியல், இரவு சப்பாத்தி 4, பனீர் டிக்கா, சிக்கன் 65 போன்றவைகளை சாப்பிடுகிறேன். குறைவாகச் சாப்பிட்டால் விரைவில் எடை குறையும் என்பதற்காக நானே சொந்தமாக ஜிந்திச்சி இப்படி டயட் சார்ட் எடுத்துக்கொண்டேன், இது சரியான டயட்தானா?

 வேலை மெனெக்கெட்டு டயட் சார்ட் கொடுப்பது அதை அப்படியே கடைபிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான், மேலே உள்ள உணவுகளில் சூரியகாந்தி எண்ணெய், பொரித்த உணவுகள், பிஸ்கெட், சோறு, சப்பாத்தி போன்றவைகளால் உங்கள் எடை கூடும், எண்ணெயில் பொரித்த சிக்கன் 65 போன்றவைகளால் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவுகள் கூடும் எனவே தயவுசெய்து உங்கள் ஜிந்தனைகளை ஓரம்கட்டிவிட்டு கொடுத்துள்ள டயட் சார்ட்டின்படி வயிறு நிரம்ப சாப்பிடுங்கள். குறைவாகச் சாப்பிடுவது, கலோரி கணக்குகள் இங்கே உதவாது. பசியுடன் இருக்கவைக்கும் எந்த டயட்டும் நல்ல டயட் இல்லை.

என் எடை 105 கிலோ, எனக்கு சர்க்கரை குறைபாடு, பிபி, தைராய்ட் எல்லாம் உண்டு, நான் பேலியோவை கடுமையாக கடைபிடித்துவிட்டு என் எடையை 75 கிலோவுக்குக் குறைத்துவிட்டு, சர்க்கரை, பிபி எல்லாம் நார்மலாக்கிவிட்டு பிறகு சாதாரணமாக நான் சாப்பிடலாமா?

தாராளமாகச் சாப்பிடலாம், ஆனால் அப்படிச் சாப்பிட ஆரம்பித்த உடன் உங்கள் எடை ஏறும், சர்க்கரை, பிபி அளவுகள் கூடும், பழைய படி எடையில் செஞ்சுரி அடித்து மேல் மூச்சு வாங்க மீண்டும் பேலியோவுக்குத்தான் ஓடிவருவீர்கள்.

அப்படி என்றால் காலம் பூராவும் நான் பேலியோவைத்தான் உண்ணவேண்டுமா?

கிட்டத்தட்ட ஆமாம். காலம்பூரவும் அரிசி, கோதுமை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சர்க்கரை, இனிப்புகள், குப்பை உணவுகள் மானாவாரியாக உள்ளே தள்ளி உடல் நிலை கெட்டபோது வராத இந்தக் கேள்வி ஏன் பேலியோவுக்கு மட்டும் வருகிறது என்பதை யோசியுங்கள். உங்களின் சாதாரண உணவுகள் உங்கள் உடலுக்கு உபாதைகள் தருகின்றன, பேலியோ உங்களுக்கு ஆரோக்கியத்தையும், ஆயுளையும் கூட்டுகிறது என்றால் எதை நீங்கள் வாழ்நாள் முழுவதும் உண்பீர்கள் என்பதற்கான விடையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கவேன்டும்.

ஏன் காபி குடிக்கக்கூடாது? என்னால் காபி குடிக்கமுடியவில்லை என்றால் நான் இறந்தேவிடுவேன்.

இல்லை நீங்கள் இறக்கமாட்டீர்கள். காபி என்பது ஒரு போதைதான், இருதயத்துக்கு பலமான அதிர்ச்சி கொடுக்கும் இந்தப் பானம்தான் உங்களின் ரத்த அழுத்தத்திற்கான முழு முதல் காரணி. நீங்கள் 50 வருடம் தினம் 10 லோட்டா காபி குடிப்பவர்களாகக் கூட இருங்கள், 1 வாரம் காபி குடிக்காமல் இருந்துவிட்டால் அதன்பிறகு இப்படி ஒரு பானத்திற்காகவா உயிர்விடத் துணிந்தோம் என்று நீங்களே உங்களைப் பார்த்து கேட்கும் நிலை வரும். ஆம், காபி குடிப்பதை விட்டால் முதல் 3-4 நாட்களுக்கு தலை வலிக்கும், நன்றாக நெற்றியில் சுக்கை பாலில் அரைத்து பற்றுப் போட்டுவிட்டு கம்மென்று படுத்து விடுங்கள், 5-ம் நாள் காபி எனும் போதை உங்கள் வாழ்விலிருந்து ஒழிந்துவிடும். இது நரசுஸ் மீது ஆணை. கேவலம் ஒரு காபியைக் கூட உணவிலிருந்து ஒழிக்கமுடியாவிட்டால் நம்மால் எந்த டயட்டையும் எடுத்து உடல் நலம் பேண முடியாது.

வேறு வழியே இல்லை என்றால்..

காபிக்கு மாற்றாக புல்லட் ப்ரூப் காபி, பட்டர் டீ, க்ரீன் டீ போன்றவைகள் எடுக்கலாம்.

புல்லட் ப்ரூப் காபி செய்முறை - இங்கே.

பட்டர் டீ செய்முறை - இங்கே

பேலியோ டயட் ஆரம்பித்த உடன் எனக்கு மலச்சிக்கல் வருகிறது. வயிறு வலிக்கிறது, பேதி ஆகிறது, தலை வலிக்கிறது, சோர்வாக உணர்கிறேன்.

ஆரம்பகட்டத்தில் உடல் கார்போஹைட்ரேட் மூலம் சக்தி கிடைப்பதிலிருந்து கொழுப்பு மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும் வழி மாறுவதற்கான அறிகுறிகள்தான் மேலுள்ளவை. பெரும்பாலும் ஒரு வாரத்திறகுள் இவை சரியாகி புத்துணர்ச்சி பெறுவீர்கள். டயட் சார்ட்படி டயட் எடுத்தாம் மட்டுமே இது பொருந்தும், உங்கள் இஷ்டத்திற்கு சாப்பிடுவதாலும் மேலுள்ள பிரச்சனைகள் வரலாம். தண்ணீர் சரியான அளவு குடிக்காமல் விட்டாலும் மேலுள்ள பிரச்சனைகள் வரலாம்.

மலச்சிக்கல் நீங்க பேலியோ காய்கறிகள், தினம் ஒரு கீரை, காலை எழுந்த உடன் வெதுவெதுப்பான நீர், போன்றவை உதவும். அதிக காய்கறிகள், சரியான நீர் மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் தரும்.

பேலியோ எடுத்தது முதல் தாகம் அதிகமாக இருக்கிறது, வாய் உலர்ந்து போகிறது, கண் எரிச்சலாக இருக்கிறது.

தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும், கொழுப்பு சார்ந்து தானியம் தவிர்த்து டயட் எடுக்கும்பொழுது உடலில் முதலில் ஏற்படும் எடை இழப்பு என்பது தானியம் சாப்பிட்டதால் உடல் தேக்கி வைத்திருக்கும் நீர் எடையே. இந்த உடல் நீர் வற்றும்பொழுது தாகம் எடுக்கும், எனவே பேலியோவில் தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும். 3-4லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். வாய் உலர்ந்து போகுதல், கண் எரிச்சல் போன்றவை உடலில் கொழுப்பு எரிவதாலும் நிகழலாம் அல்லது நீங்கள் அளவு குறைவாக சாப்பிடுவதாலும் நிகழலாம்.  

பேலியோவில் சைவம் சாப்பிடுபவர்களுக்கு டயட் இல்லையா? நான் முட்டை கூட சாப்பிடமாட்டேன், எனக்கு பேலியோ டயட் கடைபிடிக்க முடியுமா?

முடியும். தெளிவாக இந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்குத் தேவையான டயட்டில் மட்டுமே கவனம் செலுத்தவும். எல்லாவகை உணவுப் பழக்கவழக்கம் உடையவர்களுக்கும் டயட் சார்ட் தேவைப்படுவதால், விருப்பு, வெறுப்பு, மதம், கடவுள், ஜாதி இன்னபிறவற்றை உடல்நலம் காக்கும் உணவுக்குறிப்புகளுடன் சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம்.

மேலே தெளிவாக டயட் சார்ட் கொடுக்கப்பட்டும் எனக்கு எழும் சந்தேகங்கள் பின்வருமாறு:
டேட்ஸ், ஓட்ஸ், சிறு தானியங்கள், வேர்க்கடலை, முந்திரி, தேன், வெல்லம், கருப்பட்டி, ஸ்டீவியா, சுகர் ப்ரீ மாத்திரைகள், காபி, டீ, பூஸ்ட், ஹார்லிக்ஸ், வெந்தய தோசை, மசாலாதோசை, கேஎப்சி/மெக்டொனால்ட் சிக்கன், போன்ற நீங்கள் டயட் சார்ட்டில் குறிப்பிடாத உணவுகளைச் சாப்பிடலாமா?

கூடாது.

தெள்ளத் தெளிவாக இந்த பேலியோவின் அடிப்படையிலான டயட் சார்ட் என்பது ஒருவருக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் கொழுப்பு சார்ந்த அடிப்படையைக் கொண்டு அளிக்கப்பட்டிருக்கிறது. டயட் சார்ட்டில் குறிப்பிட்டதைவிட குறைவாகச் சாப்பிடுவது, மற்ற உணவுகளைக் கலந்து சாப்பிடுவது. ஹெர்பாலைப், கொள்ளு பவுடர், மூலிகைகள், சிட்டுக்குருவி லேகியம் போன்றவைகளை சேர்த்து உண்பது என்பது கூடாது.

பேலியோ டயட் எடுக்கும்பொழூது சரக்கடிக்கலாமா?
பேலியோ டயட் என்று இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சாராயமும் சிகரெட்டும் கூடவே கூடாது. ஆண்டுக்கணக்கில் சிகரெட்டும், சரக்குமாக இருந்த நண்பர்கள் பேலியோ டயட் எடுத்தபிறகு அதிலிருந்து முற்றிலும் வெளியே வந்து இருக்கிறார்கள். உண்மையிலேயே உங்களுக்கு இந்தப் பழக்கங்களிலிருந்து வெளியேற விருப்பம் இருந்தால் இந்த டயட் அதற்கு உதவும். சரக்கடிக்க பேலியோ டயட்டை சைட் டிஷ்ஷாக உபயோகப்படுத்தினால் நிச்சயம் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

கூகுள் தளத்தில் பேலியோ என்று தேடினால் வரும் ரிசல்டுகளில் சொல்லப்படுபம் விஷயங்களுக்கும், இந்தக் குழுவில் சொல்லப்படும் விஷயங்களுக்கும் சில வேறுபாடுகள் இருக்கிறதே?

ஆம். ஆரோக்கியம் நல்வாழ்வுக் குழுவில் நமது மக்களுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை பேலியோ டயட்டில் செய்திருக்கிறோம். உலகின் முழு முதல் முட்டை கூட இல்லாத சைவ பேலியோ டயட்டும் இந்தக் குழுவில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மிருகங்களின் மூலம் பெறப்படும் கொழுப்புணவுதான் அதிக நன்மைகளைத் தரும் என்றாலும், பிறப்பிலிருந்தே சைவ உணவுப் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு பல காரணிகளால் அசைவம் சாப்பிட முடியாதவர்களுக்காக உடலுத் தேவையான பல ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த சைவ டயட் தயாரிக்கப் பட்டுள்ளது.

சைவ பேலியோ, அசைவ பேலியோ எது சிறந்தது?

பேலியோ என்றாலே அசைவம்தான், மனிதன் நெருப்பே கண்டுபிடிக்காத காலத்தில் சைவத்தை விட அசைவமே அவனுக்குத் தெரிந்த பிரதான உணவாக இருந்தது. ஆக அசைவ பேலியோவே சிறந்தது, உடல் எடை குறைப்புக்கு மட்டும் என்றால் சைவ பேலியோவும், நடை பயிற்சியுமே போதுமானது. உடல் பிரச்சனைகளோடு டயட் கேட்பவர்கள் குறைந்தபட்சம் முட்டையாவது சாப்பிடத் தயார் என்றால் அவர்களுக்கு பலனலளிக்கக் கூடிய டயட் பேலியோவில் கிடைக்கும். நீங்கள் பால் குடிப்பீர்கள் என்றால் முட்டையும் அதைப் போலத்தான் என்று நினைத்துக்கொள்ளவும். முடியவே முடியாத மனத்தடை என்றால் வேண்டியதில்லை, மனத்தடையோடு எந்த புதிய முயற்சியும் நன்மை தராது. 


பேலியோ பற்றி தமிழில் ஏதேனும் புத்தகம் வந்துள்ளதா?

நமது குழுமம் சார்பிலேயே நியாண்டர் செல்வன் அவர்களின் முக்கிய பதிவுகள் தொகுக்கப்பட்டு பிடிஎஃப் வடிவில் இலவச புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. குழுமத்தில் இருப்பவர்கள் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://paleogod.blogspot.in/2015/08/munnor-unavu-pdf-first-tamil-paleo-guide.html

என்னால் தடாலடியாக பேலியோவுக்கு மாறமுடியாது, ஆனாலும் நான் பேலியோவுக்கு மாற விரும்புகிறேன், சிறிது சிறிதாக பேலியோவுக்கு மாற வழிமுறை உள்ளதா?

உள்ளது. திரு.கோகுல் குமரன் அவர்களின் படிப்படியாக பேலியோ உணவுமுறைக்கு மாறும் இந்த கையேடு உங்களுக்கு உதவும்.

https://www.facebook.com/groups/tamilhealth/262831150574038/

பேலியோ டயட் பற்றிய சுலபமான புரிதலுக்காக டிப்ஸ் எதாவது? 

உணவு என்றாலே டிப்ஸ் இல்லாமலா? கோகுல் குமரன் அவர்கள் தொகுத்த பேலியோ டிப்ஸ் உங்களுக்காக.

இங்கே

http://paleogod.blogspot.in/2015/08/paleo-diet-tips.html

http://paleogod.blogspot.in/2015/08/paleo-diet-for-dummies.html

தைராய்டு பற்றி அறிய விரும்புகிறேன் விவரங்கள் தரவும்.

http://paleogod.blogspot.in/2015/08/thyroid-diet.html


http://paleogod.blogspot.in/2015/08/cholesterol-gout-hyperuricemia.html

HbA1C டெஸ்ட் என்றால் என்ன? டயபடிஸ் பரிசோதனைக்கு ஏன் இந்த டெஸ்ட் எடுக்கவேண்டும்?

http://paleogod.blogspot.in/2015/08/what-is-hba1c-test-hba1c-by-muthuraman.html




நான் 30 நாட்கள் பேலியோ முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன், எனக்கு எவ்வளவு செலவாகும்? நான் என்னென்ன வாங்கவேண்டும்?

இணைப்பைப் பார்க்கவும் 30 நாட்கள் பேலியோ சாலஞ்ச்.

http://paleogod.blogspot.in/2015/08/30-days-paleo-challenge-30.html


கெஃபிர் என்றால் என்ன? What is Kefir?

http://paleogod.blogspot.in/2015/09/kefir-probiotc-kefir.html 


பேலியோவில் என் எடை திடீரென்று குறையாமல் அப்படியே நின்றுவிட்டது, காரணம் என்ன?

http://paleogod.blogspot.in/2015/09/weightloss-stages-in-paleo.html

கர்பமாக இருக்கும் சமயம் பேலியோ டயட் எடுக்கலாமா? 

http://paleogod.blogspot.in/2015/10/pregnency-paleo-diet.html


(புதிய கேள்விகளும் அதற்கான பதில்களும் தொடர்ந்து இந்தத் தளத்தில் அப்டேட் செய்யப்படும்..)

BBT,Bullter Proof Tea, Butter Tea - திபெத்திய பட்டர் டீ.

பட்டர் டீ
திபெத்தில் மலை ஏறும் லாமாக்கள் களைப்பு வராமல் இருக்க "யாக் பட்டர் டீ" அருந்துவார்கள். அதை ஒட்டிய பட்டர் டீ ரெசிபி. ஆங்கிலத்தில் இதன் பெயர் புல்லட் ப்ரூஃப் டீ
தேவை:
அரை கப் பால்: 90 மிலி
நீர்: 90 மிலி
வெண்ணெய்: 30 கிராம்
டீ தூள்: 1.5 டீஸ்பூன்செய்முறை:
அனைத்து பொருட்களையும் ஒன்றாக பாத்திரத்தில் விட்டு கலக்கவும். கொதிக்க விட்டு வடிகட்டி இறக்கவும். மிக சுவையான பட்டர் டீ தயார்.

Buller Proof Coffee - புபுகா அல்லது புல்லட் ப்ரூப் காபி எனும் குண்டு துளைக்காத குழம்பி.



புல்லட் ப்ரூப் காபி என்பது பேலியோவில் பிரபலமான ஒரு பானம், இதைக் குடிக்கும்போது பசி எடுப்பதில்லை, சர்க்கரை அளவுகள் கூடுவதில்லை.

இனி செய்முறை:

30 கிராம் உப்பிடாத வெண்ணெய், 2 ஸ்பூன் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் காபி பவுடர் (இன்ஸ்டன்ட்) இதனுடன் கொதிக்கும் வெந்நீர் ஒரு கப் சேர்த்து நன்றாக ப்ளென்டரில் சுற்றினால் கிடைப்பதே குண்டு துளைக்காத குழம்பியாகும். சர்க்கரை மற்றும் எந்த இனிப்பும் சேர்க்கக் கூடாது.

Bullet proof coffee.

Receipe

Unsalted Butter 30 mg.
Virgin Coconut oil 2 tea spoons,
One spoon Instant Coffee powder.
Mix with one cup Hot water and pour in a blender and blend for 5 minutes. Enjoy your BBC. 

Friday, August 7, 2015

பேலியோ டயட் எடுப்பதற்கு முன்னால் செய்யவேண்டிய பரிசோதனைகள் Tests before starting Paleo Diet.

முழு உடல் பரிசோதனை. இது இங்கே அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. பேலியோ ஆரம்பிக்குமுன் எந்த மாதிரியான உடல் பரிசோதனை செய்யவேண்டும் என்பது எல்லோருக்கும் எழும் சந்தேகம். கீழே உள்ள பரிசோதனைகளை அருகில் இருக்கும் நல்ல லேபில் காலை வெறும் வயிற்றுடன் சென்று எடுத்து அந்த ரிப்போர்ட்டில் உள்ள பிரச்சனைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப டயட் துவங்க வேண்டும். 
 



டயட் எடுத்த பிறகு, தேவையான எடை குறைப்பு அடைந்தபிறகு மீண்டும் மேல் கூறிய டெஸ்ட்களை எடுக்கும்பொழுது டயட்டால் உங்களுக்குக் கிடைத்த பலன் என்ன என்பது தெரியவரும். 

--



இந்த டெஸ்ட் எல்லாம் சகாய விலையில் உங்கள் அருகாமையில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்களில் எடுத்துக்கொள்ளவும். மீண்டும் டயட்டிற்குப் பின்னான டெஸ்ட்டையும் அதே லேபில் பரிசோதிக்கவும்.


நாட்பட்ட டயபடிஸ், க்ரியெட்டின் அளவுகள் அதிகம் போன்றவை இருந்தால் eGFR & Microalbumin Urea போன்ற கிட்னியின் செயல்திறன் அறியும் டெஸ்ட்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளவும், இந்தப் பரிசோதனைகளை வருடம் ஒருமுறை செய்து கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளவும்.
  

பேலியோ டயட் எடுப்பதற்கு முன்னால் செய்யவேண்டிய பரிசோதனைகள் Tests before starting Paleo Diet.

முழு உடல் பரிசோதனை. இது இங்கே அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. பேலியோ ஆரம்பிக்குமுன் எந்த மாதிரியான உடல் பரிசோதனை செய்யவேண்டும் என்பது எல்லோருக்கும் எழும் சந்தேகம். கீழே உள்ள பரிசோதனைகளை அருகில் இருக்கும் நல்ல லேபில் காலை வெறும் வயிற்றுடன் சென்று எடுத்து அந்த ரிப்போர்ட்டில் உள்ள பிரச்சனைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப டயட் துவங்க வேண்டும். 
 



டயட் எடுத்த பிறகு, தேவையான எடை குறைப்பு அடைந்தபிறகு மீண்டும் மேல் கூறிய டெஸ்ட்களை எடுக்கும்பொழுது டயட்டால் உங்களுக்குக் கிடைத்த பலன் என்ன என்பது தெரியவரும். 

--



இந்த டெஸ்ட் எல்லாம் சகாய விலையில் உங்கள் அருகாமையில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்களில் எடுத்துக்கொள்ளவும். மீண்டும் டயட்டிற்குப் பின்னான டெஸ்ட்டையும் அதே லேபில் பரிசோதிக்கவும்.


நாட்பட்ட டயபடிஸ், க்ரியெட்டின் அளவுகள் அதிகம் போன்றவை இருந்தால் eGFR & Microalbumin Urea போன்ற கிட்னியின் செயல்திறன் அறியும் டெஸ்ட்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளவும், இந்தப் பரிசோதனைகளை வருடம் ஒருமுறை செய்து கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளவும்.
  

ரியாக்டிவ் ஹைப்போகிளைசீமியா


உணவுக்கு பின் சர்க்கரை அளவு மிக குறைந்துவிடுவது தான் ரியாக்டிவ் ஹைப்ப்போகிளைசெமியா
இதற்கு காரணம் உணவில் இருக்கும் உயர் சர்க்கரையே. வருடகணக்கில் ஒவ்வொருவேளையும் 200, 250 கிராம் சர்க்கரை உடலில் சேர்வதை நினைத்துகொள்ளுங்கள். ஒரு பருக்கை உணவு உள்ளே போனதும் உடல் உடனடியாக பர,பர என இன்சுலின் உற்பத்தியை துவக்கிவிடும். துவக்கி தேவைக்கு அதிகமான இன்சுலினை உற்பத்தி செய்துவிடும். உண்டபின் இன்சுலின் சுரப்பு அதிகம் ஆகி தலைசுற்றல், மயக்கம் எல்லாம் வரும்.
லோ கார்ப் டயட்டால் இது குணம் ஆகுமா? ஆகும். ஆனால் உடனடியாக ஆகாது. இத்தனை வருட உணவுபழக்கத்தில் நீங்கள் ஏராளமான கொழுப்பை உண்டாலும், உடல் ஆட்டோபைலட்டில் இன்சுலினை உற்பத்தி செய்யும். உங்கள் உணவில் சர்க்கரை இல்லை என்பதை உடல் உணர சிலகாலம் ஆகலாம்.
அதனால் ரியாக்டிவ் ஹைப்போகிளைசெமியா உள்ளவர்கள் லோ கார்ப் செல்லுமுன் பின்வரும் உத்திகளை பயன்படுத்தலாம்.

கொஞ்சம், கொஞ்சமாக உணவில் கொழுப்பின் சதவிகிதத்தை அதிகபடுத்தி வருவது.
கொழுப்பு அதிகம் உள்ள தேங்காய் மாதிரி உணவை உட்கொள்வது

கொழுப்பு நிரம்பிய உணவை உண்டபின் க்ளுகோஸ் மாத்திரைகளை எச்சரிக்கையுடன் கையில் வைத்திருப்பது.
கைப்போகிளைசெமியா தாக்குவது போல் தெரிந்தால் உடனடியாக அதை உட்கொள்வது
சிலருக்கு 2 - 3 மணிநேரத்துக்கு ஒரு முறை உண்ண சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். சிலர் ஐந்து - ஆறுமணிநேரத்துக்கு ஒருமுறை உண்பது பலனளிக்கும். இதை ட்ரயல் அன்ட் எர்ரர் முறை மூலமே கண்டறிய முடியும்.

துவக்கத்தில் கொழுப்பும், சிறிது கார்பும் சேர்த்து கொள்ளலாம். மெதுவாக கொழுப்பின் சதவிகிதத்தை அதிகரித்து வாருங்கள். உதா: தோசை 3 உண்பதற்கு பதில் 2 முட்டை+ 1 தோசை என சேர்த்து நாள்போக்கில் மூன்று முட்டைக்கு மாறலாம். கார்பை முழுக்க துவக்கத்தில் இதுக்கவேண்டாம். புரதமும் அதிக அளவில் வேண்டாம். ஐம்பது அறுபது கிரமுடன் நிறுத்திவிட்டு கொழுப்பையும், நார்சத்தையும் சேர்க்கவும். தேங்காய், நட்ஸ், வெண்ணெய் எல்லாம் இதற்கு சரியான உணவுகள்.

லோ கார்புக்கு மாறுகையில் அடுத்த 1- 2 மணிநேரம் உடன் யாராவது இருக்குமாறு பார்த்துகொள்ளவும். க்ளுகோஸ் மாத்திரை கையில் வைத்திருக்கவும். உடல் லோ கார்ப் டயட்டுக்கு பழகியபின் இன்சுலினின் ஆட்டம் தானே குறைந்துவிடும்.

Paleo Diet for Dummies

உங்கள் சந்தேகங்களுக்கு ஒவ்வொரு கேள்வியின் கீழுள்ள சுட்டிகளை அழுத்தினால் அதற்குரிய பதில்களுக்கான தளத்திற்கு கொண்டுசெல்லும்.


பேலியோ டயட் என்றால் என்ன?

http://paleogod.blogspot.in/2015/08/what-is-paleo-diet.html


பேலியோ டயட் எடுப்பதற்கு முன்னால் செய்யவேண்டிய பரிசோதனைகள் என்ன?

http://paleogod.blogspot.in/2015/08/tests-before-starting-paleo-diet.html


பேலியோ டயட் சார்ட் எங்கே கிடைக்கும்?

http://paleogod.blogspot.in/2015/08/paleo-diet-for-beginners-veg-non-veg.html


பேலியோவில் உண்ணக் கூடிய காய்கறிகள் எவை, தவிர்க்கவேண்டிய காய்கறிகள் எவை?

http://paleogod.blogspot.in/2015/08/blog-post_8.html

பேலியோ டயட்டிற்கான சமையல் குறிப்புகள் உள்ளதா?

உள்ளது, இணைய தளம்:
www.munnorunavu.blogspot.com

வண்ணமயமான பேலியோ சமையல் மின்புத்தகம்:

https://www.facebook.com/groups/tamilhealth/316592741864545/

பேலியோவில் திரும்பத் திரும்பக் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள். 

http://paleogod.blogspot.in/2015/08/repeated-questions-about-paleo-diet.html

ஏன் வீகன்களை ராங் நம்பர் என்று ஒதுக்கிவிட்டீர்கள்? வீகன்களுக்கான டயட்டே உங்களிடம் இல்லையா?

இருக்கிறது. டிடாக்ஸ் எனப்படும் நச்சகற்றும் ரா வீகன் டயட், உடல் எடை 'மட்டும்' குறைக்க விரும்பும் மக்களுக்காக தனியே ஒரு குழுமம் இருக்கிறது. அந்தத் தளத்திற்கான சுட்டி.

https://www.facebook.com/groups/tamilhealth/262831150574038/




ராவீகன் / நனி சைவத்திற்கான இணைய தளம்

https://veganintamil.wordpress.com/2015/07/23/21days_detoxdiet/


நான் 30 நாட்கள் பேலியோ முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன், எனக்கு எவ்வளவு செலவாகும்? நான் என்னென்ன வாங்கவேண்டும்?

இணைப்பைப் பார்க்கவும் 30 நாட்கள் பேலியோ சாலஞ்ச்.

http://paleogod.blogspot.in/2015/08/30-days-paleo-challenge-30.html

<<><><><><><><><><><><><>

எனக்குப் பேலியோ பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை, நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது, நான், நீங்கள் கூறும் பதில்களை ஏற்றுக்கொள்ளமாட்டேன், ஆனால் எனக்கு உங்களிடம் பேலியோ தவறு என்று நீண்ட விவாதம் செய்யவேண்டிய ஆசை உள்ளது, பதிலுக்கு எது நல்லது என்று கேள்வி கேட்டால் எனக்குத் தெரியாது, நான் பதில் சொல்லவும் விரும்பவில்லை, எனக்கு கேள்வி கேட்கமட்டும்தான் தெரியும். நான் என்ன செய்யவேண்டும்?

உங்கள் அன்பான அக்கறைக்கு மிக்க நன்றி. US $1000.00 (Thousand US Dollars Only) நாங்கள் சொல்லும் தொண்டு நிறுவனத்திற்கு செலுத்திவிட்டு, அந்த ரசீது தரவுகளுடன் எங்களை அணுகவும். என்ன கையபுடிச்சி இழுத்தியா? என்ற தலைப்பில் காலை முதல் மாலை வரை விவாதிக்கலாம்.




    >>>>>>>>இந்தத் தளம் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.<<<<<<<<<<

துவக்க நிலை பேலியோ டயட் சார்ட் - Paleo diet for beginners (Veg & Non Veg)

Paleo diet for beginners

பேலியோ துவக்கநிலை டயட்

முன் எச்சரிக்கை:

இந்த டயட் மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம், படித்து தெரிந்துகொண்டது ஆகியவற்றின் பேரில் எழுதபட்டது. டயட்டை துவக்குமுன் மருத்துவர் அறிவுரையை கேட்டுகொன்டு பின்பற்றூவது நலம்

இந்த டயட்டில் கொலஸ்டிரால் & எல்டிஎல் ஏறும். சுகர் இறங்கும். பிளட் பிரஷர் கட்டுபாட்டில் வரும். இதயத்துக்கு எந்த ஆபத்தும் கிடையாது.

இந்த டயட்டில் சுகர் இறங்குவதால் அதற்கு தகுந்தபடி சுகர் மாத்திரை அளவை மருத்துவர் அறிவுரையின் பேரில் குறைத்துகொள்வதும், சுகர் லெவலை அடிக்கடி மானிட்டர் செய்து லோ சுகர் ஆகாமல் பார்த்துகொள்வதும் அவசியம்.

இது பொதுவாக சுகருக்கும், எடைகுறைப்புக்கும் எழுதபட்டது. அத்துடன் வேறு எதாவது சிக்கல்கள், வியாதிகள் (உதா: கிட்னி பிரச்சனை) இருந்தால் அம்மாதிரி பிரச்சனைகளை மனதில் வைத்து இது எழுதபடவில்லை. அம்மாதிரி சூழலில் இதை மருத்துவ ஆலொசனை இன்றி பின்பற்றவேண்டாம்.

——-

இந்த டயட்டில் தானியத்தை எந்த அளவு தவிர்க்கிறீர்களோ அந்த அளவு நல்லது. காலரி கணக்கு பார்க்கவேண்டியது இல்லை. பசி அடங்கும் வரை உண்ணலாம்.

விதிகள்:

மூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவு மட்டுமே
சர்க்கரை, தேன், இனிப்புகள், கோக்/பெப்சி உணவகத்தில் சமைத்தது, பேக்கரி பொருட்கள், இனிப்பு, காரம் அனைத்தும் தவிர்க்கணும்

அசைவ டயட்:

மீல் 1:

3 முட்டை ஆம்லட். முழு முட்டை. வெள்ளைக்கரு அல்ல. மஞ்சள் கருவும் சேர்த்து. தேவைப்பட்டால் 4 முட்டை ஆம்லட் கூட உண்ணலாம். பிரச்சனை இல்லை. பசி அடங்குவது முக்கியம். சமையல் எண்ணெய் நெய். நாட்டுகோழி முட்டை மிக சிறப்பு. முட்டையை ஸ்க்ராம்பிள், ஆஃப்பாயில், புல்பாயில் என எப்படியும் உண்ணலாம்.

மீல் 2:

100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ், மாகடமியா நட்ஸ்.நெய்யில் வணக்கி உண்ணலாம், ஊறவைத்தும் உண்ணலாம்.

OR

நட்ஸ் விலை அதிகம் என கருதுபவர்கள் காளிபிளவர் ரைஸ், சிக்கன்/மட்டன் சூப் சேர்க்கலாம்

OR

பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம். (அதன் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.)

மீல் 3:

பாயில் / க்ரில் செய்த சிக்கன்/மட்டன்/ மீன். அளவு கட்டுபாடு இல்லை. வாணலியில் வறுத்தால் சமையல் எண்னெயாக நெய் பயன்படுத்தவும்
ஸ்னாக்: தினம் 1 கப் முழு கொழுப்பு உள்ள பால் அல்லது 50 கிராம் முழு கொழுப்பு உள்ள சீஸ்

சைவ டயட்:

மீல் 1: 100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் அல்லது முந்திரி.பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம்

மீல் 2: காளிபிளவர் அரிசி வித் காய்கறி. காளிபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளால்க நறுக்கி இட்டிலி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து அரிசி போல் பாவித்து குழம்பில் ஊற்றி உண்ணவும்
அல்லது காய்கறி சூப் ஏராளமாக பருகவும். உடன் சிறிது தேங்காய். வாரம் 1 நாள் 40 கிராம் கைகுத்தல்/குதிரைவாலி அரிசி எடுத்து சமைத்து உண்ணலாம். அதற்கு மேல் வேண்டாம்.

மீல் 3:   4 முட்டை ஆம்லட். அல்லது பனீர் டிக்கா. 200 கிராம் பனீர்
ஸ்னாக்: 1 கப் முழு கொழுப்பு உள்ள பால்/தயிர். தினம் 100 கிராம் கீரை சேர்த்துகொள்ளவும்
சமையல் எண்ணெய் நெய்/பட்டர்/செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்/செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மட்டுமே.

தவிர்க்கவேன்டியவை

பழங்கள் (அவகாடோ, தேங்காய் தவிர்த்து மற்ற எல்லா பழங்களும் தவிர்க்கவேண்டும்)
அரிசி, கோதுமை, சிறுதானியம், ராகி, கம்பு, குதிரைவாலி, பாஸ்மதி, கைகுத்தல் அரிசி, தினை அனைத்தும்
பருப்பு, க்ரீன் பீன்ஸ், மாவு, சோயா, பேபிகார்ன், க்ரீன் பீன்ஸ், பலாக்காய், வாழைக்காய், பச்சை மாங்காய், முளைகட்டின பயறுவகைகள், கொண்டைகடலை, இன்ன பிற கடலை வகைகள், கிழங்கு வகைகள் அனைத்தும், அவரைக்காய், நிலகடலை, எடமாமி, டோஃபு தவிர்க்கவும்.

பேக்கரியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் தவிர்க்கவும், இனிப்பு, காரம், பேகேஜ் உணவுகள், பிஸ்கட் இன்னபிற கொரிக்கும் உணவுகள்.

கொழுப்பு அகற்றிய பால், 2% பால், 1% பால் அனைத்தும் தவிர்க்கவும்,. முழுகொழுப்பு பாலே உட்கொள்ளவேண்டும்.

அளவு கட்டுபாடு இன்றி உண்ணகூடியவை

மாமிசம், மீன், முட்டை, பனீர் அல்லது சீஸ் ,காய்கறிகள்,கீரைகள் (உருளை, கேரட், கிழங்குவகைகள் தவிர்த்து)

தவிர்க்கவேண்டிய இறைச்சி:

சாஸேஜ், ஸ்பாம் முதலான புராசஸ் செய்யபட்ட இறைச்சி தவிர்க்கவேண்டும்
கொழுப்பு அகற்றப்பட்ட லீன் கட்ஸ் வகை இறைச்சி, தோல் இல்லாத கோழி
கருவாடு (மிதமான அளவுகளில் உண்னலாம். தினமும் வேண்டாம்)
முட்டையின் வெள்ளைகரு மட்டும் உண்பது தவிர்க்கபடவேண்டும். முழு முட்டை உண்னவேண்டும்
எண்ணெயில் டீஃப் ப்ரை செய்த இறைச்சி

———————————————————————————————————————————————————

இது முகநூலில் இயங்கும் ஆரோக்கி யம்& நல்வாழ்வு எனும் குழுமத்திற்கான டயட். இதில் மேலும் கேள்விகள் இருந்தால் இக்குழுவில் இணையவும். இக்குழுவின் பதிவுகளை முன்னோர் உணவு எனும் முகநூல் பக்கத்திலும் படிக்கலாம்.

பேலியோ டயட் என்றால் என்ன? What is Paleo Diet?

பேலியோ டயட் என்றால் என்ன?

பேலியோ டயட் என்றால் என்ன?

பெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்கு முந்தைய கற்காலத்தை குறிக்கும். கற்காலத்தில் அரிசி, பருப்பு, காபி, பீன்ஸ், உருளைகிழங்கு, சோயா, சோளம், கோதுமை, சிறுதானியங்கள், எண்ணெயில் பொறித்த உணவுகள் இல்லை. மக்களின் உணவு சுட்ட இறைச்சியும் சில காய்கறிகளுமே.

தானியம், சர்க்கரை அற்ற இந்த உணவை உண்ட வரை மக்களுக்கு டயபடிஸ், பிளட்பிரஷர், மாரடைப்பு, சைனஸ், ஆஸ்துமா, -ஹைப்போதய்ராய்டிசம், காக்கை வலிப்பு, சொரியாசிஸ், விடில்கோ (வெண்திட்டுக்கள்), கான்சர் முதலான நகர்ப்புற மனிதனின் வியாதிகள் இல்லை. தானிய உணவை உண்டபின்னரே இவ்வியாதிகள் மனிதரை சூழந்தன‌

பேலியோ டயட்டில் என்ன சாப்பிடலாம்?
முட்டை
இறைச்சி, மீன்
பேலியோ காய்கறிகள்
மூலிகைகள்
தண்ணீர்
பாதாம், வால்நட் முதலான கொட்டைகள் (நிலகடலை அல்ல)
சிறிதளவு பால், தயிர் சுவைக்கும் கால்சியத்துக்கும் சேர்க்கிறோம்

இவற்றை எந்த அளவுகளில் சாப்பிடலாம்?
அளவுகணக்கு எதுவும் இல்லை. முட்டை, இறைச்சி ஆகியவற்றை வயிறு நிரம்பும்வரை உண்ணலாம். பசி
அடங்கியபின் சாப்பிடுவதை நிறுத்திவிடலாம்.

எம்மாதிரி முட்டை, இறைச்சி சாப்பிடவேண்டும்?
முழு முட்டையும் சபபிடவேண்டும். இறைச்சிகளில் கொழுப்பு நிரம்பிய இறைச்சியே நல்லது. கொழுப்பு குறைவான கருவாடு, சிக்கன் பிரெஸ்ட் போன்றவற்றை குறைவாக அல்லது அளவாக சாப்பிடுங்கள். எக் ஒயிட்ஸ் மட்டும் சபபிடுவது, ஸ்கிம் மில்க் சபபிடுவது போன்றவற்றை தவிர்க்கவேண்டும். பேலியோவில் கொழுப்பே உங்கள் எரிபொருள், சர்க்கரை அல்ல என்பதால் கொழுப்பு நிரம்பிய இறைச்சியாக உண்ணலாம்

எவ்வகை சமையல் முறையை பின்பற்றவேண்டும்?
குக்கரில் வேகவைப்பது, அவன், வாணலியில் சமைப்பது, க்ரில் செய்வது, பேக் செய்வது ஆகியன
செய்யலாம். எண்ணெயில் பொறிப்பதை தவிர்க்கவும்

எவ்வகை சமையல் எண்ணெய் பயன்படுத்தலாம்?
-ஹைட்ரஜனேட் செய்யாத இயற்கை மிருக கொழுப்புகள்: லார்ட் (பன்றிகொழுப்பு), பேகன் க்ரீஸ் (பன்றிக்கொழுப்பு), பீஃப் டாலோ (மாட்டுகொழுப்பு), நெய், வெண்ணெய்
-ஹைட்ரஜன்நேட் செய்யாத கொட்டை எண்ணெய்கள்: தேங்காய் எண்ணெய்
மூன்றாமிடம்: எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய்
தவிர்க்கவேண்டியவை: கடலை எண்ணெய், சஃபோலா, சனோலா, சூரியகாந்தி, ரைஸ் ப்ரான் ஆயில், கடுகு எண்ணெய், காட்டசீட் ஆயில், வானஸ்பதி, டால்டா
டயபடிஸ் இருப்பவர்கள் பேலியோ எடுககலமா?
கட்டாயமாக எடுக்கலாம். ஆனால் பேலியோவில் உங்கள் சுகர் அளவுகள் ஏறவே ஏறாது என்பதால் வழக்கமான தானிய உணவுக்கு போடும் அளவு இன்சுலின் ஊசி, மாத்திரை போட்டால் லோ சுகர் அபாயம் வரும்…ஆக பேலியோ எடுக்கும் முதல் நாளே இன்சுலின் ஊசி அளவை குறைக்கும் நிலை அல்லது சுத்தமாக நிறுத்தும் இனிய பிரச்சனையை நீங்கள் சந்திப்பீர்கள். சுகர் அளவுகளை தொடர்ந்து மானிட்டர் செய்து, இன்சுலின் ஊசி அளவை குறைத்து வரவும்

பேலியோ டயட்டின் பின்விளைவுகள் என்ன?
முதல் சில நாட்கள் தலைவலி, களைப்பு போன்றவை இருக்கும். நீர் அதிகமாக பருகி வரவும். முதல் சிலநாட்கள் உடல்பயிற்சி வேண்டாம்.அதன்பின் மறைந்துவிடும்

பேலியோவில் துவக்கநிலை தவறுகள் எவை?
பட்டினி கிடத்தல்…இது வேண்டாம். வயிறு நிரம்ப சாப்பிடவும்
குறைந்த காலரி உண்ணுதல்…இதுவும் வேண்டாம்.
கொழுப்பை சாப்பிட பயபடுதல்…..இதுவும் தவறு, முட்டையின் மஞ்சள் கரு, சிகப்பிறைச்சி ஆகியவையே உங்கள் எரிபொருள். இதை பயமின்றி உண்ணவும்

எத்தனை நாளுக்கு ஒருமுறை பிரேக் எடுக்கலாம்?
துவக்கத்தில் மாதம் ஒரு நாள் மட்டுமே பிரேக் எடுக்கலாம். அன்றும் குப்பை உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள், ஐஸ்க்ரீம் எலலம் சாப்பிடவேண்டாம். பேலியோவில் 1 மாதம் இருந்து குப்பை உணவை ஒரே ஒரு நாள் உண்டாலும் வயிறு கடுமையான ரியாக்சன் காட்டும். விரும்பினால் அன்று அரிசி, இட்டிலி, பழங்கள் முதலையவற்றை உண்டு சீட் செய்யவும். இனிப்பு, துரித உணவகம், நூடில்ஸ் குப்பைகள் பக்கமே போகவேண்டாம்

எம்மாதிரி உடல்பயிற்சி செய்யவேண்டும்?
30- 45 நிமிட மெதுநடை, ஜிம்முக்கு சென்று பளுதூக்குவது, சைக்கிளிங் , கிரிக்கட் மாதிரி விளையாட்டுக்கள் ஆகியவற்றை செய்யலாம். ஓடுதல், ஜாகிங், கடும் பயிற்சிகள் ஆகியவை அவசியமில்லை என்பதுடன் ஆபத்தும் கூட.

எனக்கு சொரொயாசிஸ், -ஹைப்போதையாரிடிசம், பிகாட் மாதிரி ஸ்பெசலான சில வியாதிகள் உள்ளன. நான் பேலியோ பின்பற்றலாமா?
கட்டாயமாக செய்யலாம். இதற்கான தனி டயட்டுகள் உள்ளன. ஆரோக்கியம், நல்வாழ்வு குழுமத்தில் பதிவு செய்து டயட் கேளுங்கள்.

நான் சைவம்..பேலியோவில் எம்மாதிரி தேர்வுகள் எனக்கு உள்ளன?
பேலியோவில் குறைந்தது முட்டையாவது தினம் சாப்பிட தயாராக வேண்டும்.. 90% வியாதிகளை முட்டையை அடிப்படையாக கொண்ட எஜிட்டேரியன் டயட்டால் துரத்த முடியும். முட்டையும் சாப்பிடவில்லை எனில் எடைகுறைப்பு, பிரசர், சுகர் முதலானவற்றை சற்று சிரமபட்டு குறைக்க முடியும். -ஹார்மோன் சிக்கல், ஆண்மைகுறைவு, ஆட்டோஇம்யூன் வியாதிகள், சொரஇயாசிஸ் போன்ற சிக்கலான பிரச்சனைகளை ஒன்று அதனால் தீர்க்க இயலாது. அல்லது யோகி நிலைக்கு சென்று கடும் பத்தியம் இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

நான் பால் கூட குடிக்காத வீகன்…
ராங் நம்பர்….நீங்கள் அழைத்த எண்ணை சரிபார்க்கவும் :-)
கட்டாயம் தினம் 100 பாதாம் சாபிடணுமா?

முடியாதெனில் வேறு தேர்வுகள் உள்ளன. ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் கேளுங்கள்
நான் பேலியோ ஆரம்பித்து ஆகி விட்டது..அடுத்து என்ன செய்யவேண்டும்?
பயணத்தை அனுபவியுங்கள்…எடை இறங்கும்வரை இறங்கட்டும். எடை இறங்குவது நின்றால் வாரியர், கெடொசிஸ் போன்ற அடுத்த கட்டங்களுக்கு செல்லலாம்..ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் கேளுங்கள்.

எண்டோமெட்ரியோசிஸ்: (endometriosis) / Psoriasis சொரியாஸிஸ் தோல்குறைபாடுகளும் பேலியோவும்.

எண்டோமெட்ரியோசிஸ்: (endometriosis)

இது ஒரு வகை ஆட்டோஇம்யூன் வியாதி. பால் பொருட்கள், தானியம், நட்ஸ், பருப்பு வகைகள் இவற்றை தவிர்க்கவேண்டும். அதாவது உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி மேலே சொன்ன உணவுகளில் உள்ள சர்க்கரை மற்றும் அலர்ஜின்களால் தூண்டபட்டு உடல் பாகங்களை கண்டமேனிக்கு தாக்குகிறது. நம் வீட்டில் வேலைக்கு இருக்கும் வாட்ச்மேன் மாடியில் டிவியில் வரும் சத்தத்தை ஆபத்து என நினைத்து வீட்டுக்குள் சுடுவதை போன்றது.

நம் நோயெதிர்ப்பு சக்தி கர்ப்பபையில் தாக்குதல் நிகழ்த்துவதால் கர்ப்பபை லைனிங் பாதிப்படைந்து வளர்ச்சி குன்றி என்டோமெட்ரியோசிஸ் வருகிறது. இதே போன்ற பாதிப்பின் ஒரு வகையே சொரியோசிஸ்.
இதற்கான டயட்

காலை: தேங்காய் அரை மூடி அல்லது 3 முட்டை
மதியம்: செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் வணக்கிய காய்கறிகள்
மாலை: கால் கிலோ இறைச்சி

சொரியாசிஸ் புண் ஆக வரும். புண்ணை ஆற்றுவது எளிது. தாக்குதல் நின்றால் புண் ஆறிவிடும். கர்ப்பபை லைனிங் பாதிப்பு மற்றும் ஃபெர்ட்டிலிட்டி என்பது புண்ணை ஆற்றுவதை விட கடினமான விஷயம். எண்டோமெட்ரியோசிஸ் உள்ள சைவர்கள் மருந்து மாதிரி நினைத்து மாமிசம் சாப்பிடுவதாக இருந்தால் மேலே சொன்னதை பின்பற்றலாம். முடியவே முடியாது என்றால் மேலே சொன்ன டயட்டில் காலையில் தேங்காய்/இளநீர் சாப்பிட்டு மாலை 3- 4 முட்டை ஸ்க்ராம்பிள் உண்ணவும். மதியம் காய்கறி உண்ணவும். ஆனால் உடல்நலம் என்பது வியாதிகள் வராமல் தடுப்பது மட்டும் அல்ல..போதுமான ஊட்டசத்துக்களை உடலுக்கு வழங்குவதுமே ஆகும். எலும்பு சூப், கடல் மீன், ஈரல் மாதிரியானவற்றை உண்டால் கர்ப்பபை விரைவில் பலமடையும். அதில் உள்ல ஒமேகா 3 மற்றும் இன்னபிற வைட்டமின், மினரல்கள் எந்த தாவர உணவிலும் இல்லை.

டயட் என்பது நம்மால் முடிந்த முயற்ஸிகளை செய்து உடலுக்கு தன்னை குணபடுத்திகொள்ள நாம் அளிக்கும் தேர்வே. நம் உடலுக்கு நாம் சைவமா, அசைவமா என்பதைபற்று அக்கறை இல்லை. அதற்கு தேவை போதுமான ஊட்டசத்துக்கள் மட்டுமே.

By- Neander Selvan.

இன்சுலினைப் பற்றி அறிந்துகொள்வோம்.- 1. Understanding Insulin - 1



ஒரு பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இருக்கும் சொத்துக்கு கணக்கு வழக்கில்லை. ஆனால் தினமும் கோயிலில் பிச்சை எடுத்து உண்டு வந்தான். காரணம் அவன் பணம் எல்லாம் ஒரு வங்கியில் இருந்தது. வங்கியில் பணம் எடுக்கலாம் என போனால் வாட்ச்மேன் அவனை பணத்தை எடுக்கவிடாமல் துரத்திவிடுகிறார்.

யார் அந்த பரிதாபத்துகுரிய கோடீஸ்வரன்?

நாம் தான்.

சுமார் 70 கிலோ எடையுள்ள ஒருவரை எடுத்துக்கொள்வோம். இது ஒன்றும் அதிக எடை அல்ல, பர்பெக்ட் எடை என கூட சொல்லலாம்.

இவரது உடலில் 1500 கலோரி கிளைகோஜெனாக தேங்கியுள்ளது. உடலுக்கு இந்த 1500 கலோரி கிளைகோஜெனை தொட விருப்பமே இருப்பதில்லை. காரணம் அது எமெர்ஜென்சிக்கு என சேமித்து வைத்துள்ள பணம்.

அடுத்ததாக நம் உடலின் செல்களுக்குள் எட்டு கிலோ புரதம் (சுமார் 25,000 கலோரி) உள்ளது. இது கிஸான் விகாஸ் பத்ராவில் உள்ல பணம் போல. இதை உடல் எடுக்கவே எடுக்காது. எடுக்க உடல் அனுமதிக்கவும் அனுமதிக்காது. எடுக்க ரொம்ப சிரம்படவேண்டும் என வைத்துக்கொள்ளுங்கள்.
ஆக மீதமிருப்பது கொழுப்பு மட்டுமே....எழுபது கிலோ ஒல்லியான நபர் உடலில் சுமார் 15 கிலோ கொழுப்பு இருக்கும். இது முழுக்க, முழுக்க அன்றாட தேவைகளுக்கு வேண்டும் என்ற நோக்கில் உடலால் கரண்ட் அக்கவுண்டில் போடபப்ட்ட பணமே. இதில் சுமார் 150,000 கலோரிகள் உள்ளன. நமக்கு ஒரு நாளைக்கு தேவை 2000 கலோரி மட்டுமே. கணக்கு போட்டுபாருங்க, அப்ப எத்தனை மாதத்துக்கு தேவையான கலோரியை நாம் வைத்துள்ளோம் என்று

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இவர் ஒல்லியான 70 கிலோ நபர் என்பதே. இதே குண்டான நபர் என்றால் அவர் உடலில் பல லட்சம் கொழுப்பு கலோரிகள் கரண்ட் அக்கவுண்டில் எடுக்க தயாராக காத்திருக்கும்.

ஆனால் இன்சுலின் எனும் வாட்ச்மேன் அதை எடுக்க விடாமல் தடுத்துவிடுகிறார்.
சர்க்கரை அதிகமுள்ள தானிய உணவுகளை உண்டால் உடல் கொழுப்பு ஸ்டோரேஜ் மோடுக்கு சென்றுவிடும். அதன்பின் செல்கள் தாம் தேக்கி வைத்திருக்கும் கொழுப்பை எரிக்காது. கிளஒகோஜெனையும் தொடாது. புரதத்தையும் எரிக்க முடியாது. வேறு வழி என்ன? பசி, அகோரபசி தான். பசியைத்தூண்டி நம்மை மேலும் உணவை சாப்பிட்டு எனெர்ஜியை அடைய தூண்டி பட்டினியில் இருந்து உடல் தப்புகிறது. ஆனால் அப்படி சபபிடும் உணவும் சர்க்கரை நிரம்பிய உணவாக இருந்தால் இந்த ப்ராசஸ் மீன்டும் ரிபீட் ஆகிறது
ஆக வங்கியில் பல லட்சம் காலரிகள் நமக்காக காத்திருந்தும் அதை எடுக்க முடியாமல் வாட்ச்மேன்
தடுத்துவிடுகிறார்.

இன்சுலினை வெளியே வராமல் தடுத்தால் வங்கிக்குள் எளிதில் செல்லலாம். கேஷியர் நாம் விரும்பும் அளவு பணத்தை கொடுத்துக்கொண்டே இருப்பார். நாம் அடுத்த சில மாதங்கள் லீவு போட்டுவிட்டு, வேலைக்கே போகாமல் ஜாலியாக வங்கியில் இருக்கும் பணத்தை செலவு செய்யலாம்.

நார்வேயில் 175 கிலோ எடை இருந்த நோயாளி ஒருவர் ஒரு வருடம் வரை எதுவுமே உண்ணாமல் இருந்து உடல் இளைத்தார். அவரது இன்சுலினின் ஆட்டம் அடங்கி உடல் கெடொசிஸுக்கு சென்றவுடன் உடல் தான் தேக்கி வைத்த கொழுப்பை ஜாலியாக எரித்துக்கொண்டே இருந்தது. ஒரு வருடம் எரித்து முடித்தபின்னரே அவர் மீண்டும் உணவை உண்டார்.

ஆக இன்சுலினின் ஆட்டத்தால் நாமெல்லாம் மாடிவீட்டு ஏழையாக இருக்கிறோம்.

By- Neander Selvan.