Monday, November 7, 2016

பேலியோவும் எடை பயிற்சியும்!!! ….. பாகம்----- 9




.
.
ஒருவழியா நடையா நடந்துட்டோம்! நடை பயிற்சிங்கறது எல்லோருக்கும் சுலபம்! நினச்சா உடனே ஒரு ஷீ வ மாட்டிகிட்டு கிளம்பிடலாம்ன்னு நெனச்ச உங்க எல்லோருக்கும் கடந்த எட்டு பாகங்களில் வெளிவந்த நடை பயிற்சி கட்டுரை கொஞ்சம் கலங்க வைத்திருக்கும்! நிறைய பேர் என் மெஜஞ்சர் பாக்ஸில் நடக்கறதுல இத்தனை விஷயம் இருக்கா சார்-ன்னு கேட்டாங்க! உண்மைய சொன்னா நான் சொன்னது பாதிதான்! இன்னும் எவ்வளவோ இருக்கு! இருந்தாலும் நமக்கு இது போதும்!
.
.
அடுத்து உடற்பயிற்சி பற்றி பார்க்கலாம்!
.
.
உடற்பயிற்சியில் நிறைய வகைகள் இருக்கு!
.
1. எந்த கருவிகளும் இல்லாமல் செய்யும் ஃப்ரீ ஹேண்டட் பயிற்சிகள்!
2. நீச்சல், சைக்ளிங், ஓடுதல், நடத்தல், மற்றும் தடகல பயிற்சிகள்!
3. சில வகையான எடைகளை வைத்து வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது! தம்பல்கள், பார்பெல் ராடு போன்றவையும் சில எடை ப்ளேட்டுகளும் வைத்து செய்வது!
4. கராத்தே, குங்ஃபூ, சிலம்பம், பாக்ஸிங் போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கான சிறப்பு உடற்பயிற்சிகள்!
5. ஆனழகன் போட்டிகள், எடை தூக்கும் போட்டிகளுக்கான சிறப்பு உடற்பயிற்சிகள்!
6. பொதுவான ஆரோக்கியத்துக்காகவும் கட்டான உடலை பேனுவதற்க்காகவும், செய்யப்படும் உடற் பயிற்சிகள்!
7. குறிப்பிட்ட உடற்கோளாறுகளை சரி செய்யும் முட நீக்கியல் உடற்பயிற்சிகள்! (பிஸியோ தெரபி)
இது போன்ற இன்னும் நிறைய உடற்பயிற்சி வகைகள் உள்ளது!
.
.
இது எல்லாவற்றையும் நாம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை! பொதுவாக உடல் நலம் பேனும் உடற்பயிற்சிகள், இளைஞர்கள் கட்டுடலை பெறுவதர்க்கான உடற்பயிற்சிகள், அதிக உடல் எடை இருப்பவர்கள் எடை குறைய உடற்பயிற்சிகள், எடை குறைவாக உள்ளவர்கள் எடை அதிகரிக்க பாடி மாஸ் கிரியேட்டிங் பயிற்சிகள், சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் உடற்பயிற்சிகள் , ஆகியவற்றை ஓரளவு பார்க்கலாம்!
.
.
அதாவது எனக்கு தெரிந்தவரை எழுதுகிறேன்! நான் எழுதுவது எனது அனுபவம் மட்டுமே! சில நாட்களுக்கு முன் ஒரு முக நூல் நண்பர் இன்பாக்ஸில் கேட்டார்! சார்? நீ நீங்க பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கீங்களா? இந்த கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்? ஆகவே இந்த சந்தேகம் இதை தொடர்ந்து படிப்பவர்களுக்கு வந்துவிட கூடாது என்பதற்க்காக மிக சுருக்கமாக எனது உடற்பயிற்சி மீதான அனுபவத்தை சொல்லி விடுகிறேன்!
.
.
உடற்பயிற்சி நான் செய்ய ஆரம்பித்தது 1983-ம் ஆண்டு! அதாவது எனக்கு 10 வயது! எங்கள் வீட்டில் நடந்த ஒரு விரும்பதகாத சம்பவத்தின் அடிப்படையில் ஒரு விபத்தாக உடற்பயிற்சி கூடம் ஒன்று ஆரம்பித்தோம்! அதில் எங்கள் அண்ணன்கள் இரண்டு பேர் மற்றும் எங்கள் உறவினர்கள் வீட்டு பையன்கள் சுமார் 15 பேர் சிலம்பம் கற்றுகொண்டார்கள்! அப்போது அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட அடிப்படை பயிற்சிகளான தண்டால், பஸ்கி, கர்லாகட்டை சுற்றுதல் ஆகியவற்றை பார்த்து அதனால் உந்தப்பட்ட நான் அவர்களோடு சேர்ந்து பயிற்சி செய்ய ஆரம்பித்ததுதான் எனது முதல் அனுபவம்!
.
.
அன்றில் இருந்து இன்று வரைக்கும் உடற்பயிர்ச்சி என் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது! அன்றில் இருந்தே எங்கள் வீட்டு கோழிகள் போடும் முட்டைகள் தினமும் கானாமல் போக துவங்கியது! அடிக்கடி கைகளை மடக்கி சத்து கட்டி ( பைசப்ஸ்) பார்க்கும் பழக்கம் வந்துவிட்டது! அதன் பாதிப்புதான் 10 வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு உங்களுக்கு உடற்பயிற்சி கட்டுரை எழுதிகொண்டிருக்கிறேன்!
.
.
ஆக 32 வருடமாக இந்த உடற்பயிற்சியை நான் விடவேயில்லை! 1988-ம் வருடம் எனது பள்ளிக்கு அருகே உள்ள மார்டன் ஜிம்மனாசியம் தான் எனக்கு முதன் முதலில் எடை பிளேட்டுகளை அறிமுகப்படுத்தியது! எனது இரண்டாவது குரு நாதர் மதிப்பிற்குறிய பாடிபில்டர் திரு ரத்தினம் அவர்கள்! எங்கள் நட்பு இன்று வரை தொடர்கிறது! சரி இந்த விபரம் போதும்… மேட்டருக்கு போகலாம்!
.
.
சாதாரணமாக ஒருவர் உடல் குண்டாக காட்சியளித்தால் அவரிடம் நாம் சொல்லும் அட்வைஸ், என்னங்க ஜிம்முக்கு போலாமில்ல! ஆக உடல் இளைக்க ஜிம்முக்கு போவது ஒரு வகை! சில ஒல்லி பிச்சான்களாக இருப்பார்கள்! அவர்களிடமும் நாம் தவறாமல் சொல்லும் வார்த்தை என்ன? என்னப்பா? ஜிம்முக்கு போய் உடம்பை தேத்த வேண்டியதுதானே? என்ற அறிவுரையை இலவசமாக அள்ளி வீசுவோம்! அதெப்படி உடல் இளைப்பதற்க்கும் உடல் ஏற்றுவதற்க்கும் இரண்டுக்குமே ஜிம்முக்கு போவது? இந்த குழப்பம் எல்லோருக்கும் இருக்கும்!
.
.
பொதுவாக உடல் இளைக்கவேண்டியவர்களை பார்த்து கறி மீன் முட்டையெல்லாம் அதிகம் சாப்பிடாதீங்க-ன்னு சொல்லித்தானே பார்த்திருக்கோம்! இப்ப அதான் பிரச்சனை! குண்டாக இருப்பவனிடம் போய் ஏப்பா! நல்லா கறி , மீன் ,முட்டை ,பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் சாப்பிடு! உடல் இளைக்கும் என சொன்னால் அவனுக்கு முதல் எதிரியே நாமதான் என்பதை போல பார்ப்பான்! அதானே உண்மை! ஆனால் இப்படி எதெல்லாம் சாப்பிட்டால் உடல் எடை போடும் என சமூகத்தால் நம்பப்பட்டதோ, அதெல்லாம் சாப்பிட்டு உடல் எடை குறைப்பதுதான் பேலியோ டயட்டின் சிறப்பு!
.
.
இதோடு சரியான உடற்பயிற்ச்சியும் செய்யும் பட்சத்தில் கட்டுடல் கனவை நனவாக்கி விடலாம்!

--Gunaseelan
.
( பின் குறிப்பு! புகைபடங்கள் எனது அக்கால உடற்பயிற்சி அனுபவங்களை சொல்வதற்காகவே வெளியிடப்படுகிறது! யாரும் திருஷ்டி வைக்காமல் பார்க்கவும்)

No comments: