Sunday, November 6, 2016

ரத்ததானம்




குறைவான இரும்புச்சத்து இரத்தசோகை வியாதியை உருவாக்கும். அதீத இரும்புச்சத்து இதயத்துக்கு நல்லதல்ல. உள்ளுறுப்புக்களில் படிந்து ஆபத்தை உருவாக்கிவிடும்.
இயற்கை உணவுகளை உண்டவரை இரும்புச்சத்தால் நமக்கு பாதிப்பு வராமல் இருந்தது. ஆனால் மக்களுக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என பாஸ்டா, நூடில்ஸ், சீரியல், ரொட்டி எல்லாவற்றிலும் இரும்புச்சத்தை செயற்கையாக சேர்க்க ஆரம்பித்தார்கள். இவ்வகை இரும்பு உடலால் எளிதில் கிரகிக்கபடுவதில்லை. பெண்களுக்கு மாதவிலக்கு சமயம் இரும்புசத்து இயற்கையாக வெளியேற்றபடுகிறது. ஆண்களுக்கும் முன்பு போர், சண்டை, அடிதடி, விளையாட்டு என காயம் பட்டு ரத்தம் வெளியேறி இயற்கையாக இரும்புசத்து இழப்பு ஏற்பட்டது. ஆனால் நாம் இப்ப செய்யும் போர் என்பது ஐபோனில் விளையாடும் "கேம் ஆஃப் வார்"தான். அதில் ரத்தகாயம் எல்லாம் ஏற்படுவதில்லை.
அதனால் வருடாந்திர மெடிக்கல் சோதனையில் இரும்புச்சத்து அளவுகளை சோதித்துகொள்வது அவசியம். ரத்ததானம் செய்வது நம் ரத்ததில் இருக்கும் கூடுதல் இரும்பை வெளியேற்றும் இயற்கையான் வழி. குறிப்பாக இரும்புச்சத்து சேர்க்கபடும் பாஸ்டா, பிரெட் போன்றவற்றை உண்ணும் நடுத்தர வயது காமன் மென் டயட் நான்வெஜ் ஆண்கள் ரத்ததானம் செய்வது அவர்கள் இதயத்தை காக்கும்.
வெஜிட்டேரியன் பெண்கள், அனிமியா உள்ள பெண்கள், இரும்புச்சத்து பார்டரில் இருக்கும் பெண்கள் ஒரு உயிரை காக்கவேண்டிய அபூர்வமான சமயங்கள் தவிர்த்து மற்ற சமயங்களில் ரத்ததானம் செய்யவேண்டாம். உங்களுக்கு அனிமியா இருப்பதை சொன்னால் பல ரத்ததான மையங்களில் பிளட்டொனேசனே வாங்கமட்டார்கள். ஆனால் பலருக்கு தமக்கு அனிமியா இருப்பதே தெரியாது என்பதே சோகம்.
அதனால் தான் வருடாந்திர மெடிக்கல்டெஸ்டுகள் அவசியமானவையாகிறது. ஆண்டுக்கு ஒரு மெடிக்கல் டெஸ்ட்டும், ஆண்டுக்கு இருமுறை பல்வைத்தியரை பார்த்து க்ளினிங் செய்துகொள்வதும் மிக அவசியம். அதேபோல ஆண்கள் ஓரிரு ஆண்டுக்கு ஒருமுறை ரத்ததானமும் செய்யலாம். சைவ பெண்கள் இரும்புச்சத்து அளவை அளந்துபார்த்து அது பார்டர்லைனில் இல்லாமல் இருந்தால் மட்டுமே ரத்ததானம் செய்யவும்.

Neander Selvan

No comments: