Friday, November 4, 2016

பசு மஞ்சள் ஒரு விளக்கம்



பசுமஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என்பவை மஞ்சளின் வெரைட்டிகளில் சில. பச்சையாக, பசுமையாக பறித்தவுடன் கானப்படும் மஞ்சளை பசு மஞ்சள் என்கிறோம். காய வைத்தால் கஸ்தூரி மஞ்சள். மஞ்சள் வியாபாரிகள் இது குறித்து மேலதிகமாக சொல்வார்கள்.
ஆனால் எந்த மஞ்சள் வகையாக இருந்தாலும் ஓக்கே என்பதை நினைவில் கொண்டு மேலே படிக்கவும்
மஞ்சள் இன்ஃப்ளமேஷன் எனப்படு உள்காயத்துக்கு அருமருந்து. ஆனால் சும்மா இருக்காத அமெரிக்கர்கள் மஞ்சளை அக்குவேறு ஆணிவேராக பிரித்து ஆராய்ந்து மஞ்சளில் உள்ள கியுர்குமினில் தான் அதன் ஜீவநாடியே இருக்கு என கண்டுபிடித்தார்கள். அப்படி கண்டுபிடித்தபின் கியுர்கிமுனை மட்டும் தனியாக பிரித்து எடுத்து காப்ஸ்யூலில் அடைத்து அதை நமக்கே விற்க ஆரம்பித்தார்கள். நாமும் அதை பாட்டில் ஆயிரம், ஐநூறு என கொடுத்து வாங்கி சாப்பிட்டுகொண்டிருக்கிறோம்.
மஞ்சளில் உள்ள கியுர்குமின் மேல் வெயில் பட, பட அதன் விரியம் குறைந்துகொண்டே போகும். அதே செடியாக, தண்டாக, கிழங்காக இருக்கையில் இப்பிரச்சனை இல்லை. ஏனெனில் கியுர்குமின் கிழங்குக்கு உள்ளே தான் ஏராளமா இருக்கு. அதை பொடியாக்கி பாட்டிலில் அடைத்து ஷெல்பில் வைத்தால் அதன் வீரியம் நாள்பட, நாள்பட குறைந்துகொண்டே போகும். அதை சமையலுக்கு பயன்படுத்தினால் இன்னும் சுத்தம். சக்கை தான் மிஞ்சும்,.
அதனால் மஞ்சள் வேரை வாங்கி ஒரு தொட்டியில் வளர்த்து வாருங்கள். அபார்ட்மெண்டில் கூட வலர்க்கலாம். இது ஒரு பைபாஸ் சர்ஜரியையே நிறுத்தும் சக்தி கொண்டது. சி.ஆர்.பி அளவுகள் எல்லாருக்கும் எகிறி இருக்கிறது. அதனால் இதையும் கூட துளசி, துலசி கிடைக்காத நாடுகளில் பேஸில் என வளர்த்து வாருங்கள்.
மஞ்சள் கிழங்கை தினம் அரை அல்லது 1 இஞ்சு அளவில் வெட்டி எடுத்து, கருமிளகுடன் பச்சையாக உண்ணவும். அப்படி உண்கையில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் அல்லது முட்டை, இறைச்சி போன்ரவற்றுடன் சேர்த்து உண்ணவும். கியுர்குமின் அப்சார்ப் ஆவதை இது 1000 மடங்கு அதிகரிக்கிறது. இப்படி செய்யாமல் காப்ஸ்யூலில் எடுப்பதால் எப்பலனும் கிடையாது. காப்ஸ்யூலில் எடுத்தால் கூட கருமிளகு, சேச்சுரேட்டட் பேட் எடுப்பதும் அவசியம்.
மஞ்சள் கிழங்கு கிடைக்கலை என்பவர்கள் பிரஷ் ஆன மஞ்சள் பொடியை வாங்கி, அதை ஒரு துணியால் மூடி ப்ரிஜ்டில் வைத்து வெளிச்சம் படாமல் வைப்பது கியுர்குமின் அளவுகளை அதிகரிக்க உதவும். நாட்பட்ட மஞ்சள் பொடியை முடிந்தவரை தவிர்க்கவும். ஆனாலும் பாட்டிலில் இருப்பதால் வெளிப்புறம் இருக்கும் கியுர்குமின் வேண்டுமானால் வீரியம் குன்றலாமே ஒழிய பொடியின் பெரும்பகுதியில் கியுர்குமின் தப்பி பிழைத்துவிடும். கிழங்காக எடுத்தால் இந்த சிக்கல் இல்லை. கிடைக்கவில்லையெனில் பொடியாக எடுக்கவும்.
பொடியாக எடுத்தாலும் சமைக்க பயன்படுத்தும் மஞ்சள் வேறு, சி.ஆர்.பிக்கான மஞ்சள் வேறு என்பதில் தெளிவாக இருக்கவும். சி.ஆர்.பிக்கான மஞ்சளை பிரிட்ஜில் வைத்து தினம் 1 ஸ்பூன் என்ற அளவில் பச்சையாக உண்ணவும். அல்லது எதாவது சாலடின் மேல் தூவி உண்ணவும்.
மாரடைப்பு, ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கும் இதயத்தில் சிக்கல் இருப்பவர்களுக்கும், உள்காயம் இருப்பவர்களுக்கும் மஞ்சள் அருமருந்து. அதை மருந்தின் தன்மையுடன் பயன்படுத்தினால் மிக சிறப்பு

Neander Selvan

No comments: