Monday, November 7, 2016

பேலியோவும் எடைபயிற்சியும் ---பாகம்--6


வெறும் காலில் நடக்கலாமா???


.
.
ஷீ இல்லாமல் வெறும் காலில் நடப்பது நல்லதா? வெறும் காலில் நடப்பது மிக மிக மிக நல்லது! உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் கட்டுப்படுத்த கூடிய நரம்பு முடிச்சுகள் பாதத்தில்தான் முடிவடைகிறது! அதை நடையின் போது மிக சுலபமாக தூண்டமுடியும்!
.
.
ஆனால் அதற்க்கு நாம் வாழும் சமூகம் தகுதியானதா என்றால் இல்லை என்ற வருத்தமான பதிலைத்தான் சொல்லவேண்டியுள்ளது! சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்துகொள்ளும் அளவுக்கு நாம் இன்னும் வளரவில்லை என்பது வருந்ததக்க விஷயமே!!!
.
.
சாலைகளில் நாம் நடக்கும் போது சர்வ சாதாரனமாக கானக்கிடைக்கும் ஆணிகள், துருப்பிடித்த ஸ்க்ரூக்கள், பழைய லாடங்கள், உலர்ந்த குருதியுடன் கூடிய சவர ப்ளேடுகள், உடைந்த கண்ணாடி சில்லுகள், துருப்பிடித்த கம்பிகள் , நோய்கிருமிகள் தாங்கிய மருத்துவ கழிவுகள் மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட ஊசிகள் இதெல்லாம் மனிதனின் காலை பதம்பார்க்க மண்ணில் புதைந்திருக்கும் கொலைக்கருவிகள்!!!
.
.
உலர்ந்த குருதியில் ஒரு வாரம் உயிர்வாழும் நோய் கிருமிகள் உள்ளதாக எங்கோ சமீபத்தில் படித்தேன்! ஆக இத்தனை சோதனைகளை தாண்டி நம்மால் வெறும் காலில் நடக்க முடியுமா என்பதே கேள்வி! அதனால்தான் நல்ல தரமான ஷீ அனிந்து நடக்கவேண்டும் என அறிவுறுத்தினேன்!
.
.
மற்றபடி சொந்த தோட்டத்தில் நடப்பவர்கள், மாசுபடாத ஆற்றங்கரையில் நடப்பவர்கள், கடற்க்கரையில் நடப்பவர்கள் முடிந்தவரைக்கும் எச்சரிக்கையாக வெறும் காலில் நடப்பது மிகவும் ஆரோக்கியமானதே!!!
.
.
அதேபோல் எட்டு வடிவ நடை நடக்கலாமா என்றால் மூட்டுவலி, கவுட் பிரச்சனை, இல்லாதவர்கள் தாராளமாக நடக்கலாம்! ஆனால் மூட்டு எலும்பு தேய்மானம், முடக்குவாதம், போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், அதிக உடல் எடையால் அந்த பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளவர்கள் எட்டு வடிவ நடை நடப்பது உகந்தது அல்ல!
.
.
இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் எப்பொழுதும் ஒரே நேராகவும் ,சீராகவும், நல்ல மெண்மையான , மிக சரியாக காலில் பொருந்தியுள்ள சிலிக்கான் பேஸ் ஷீ- க்களை உபயோகித்து நடப்பதே நல்லது! பாதுகாப்பானது! முக்கியமாக குதிகால் வலி இருப்பவர்கள் வீட்டுக்குள்ளே கூட MCR செருப்பு அனிந்து நடப்பதை வழக்கமாக கொள்ளவேண்டும்!
.
.
இன்னொறு மிக்கியமான விஷயம் அக்குப்ரஸ்ஸர் செருப்பு என்ற வஷ்துவை சிலர் வீட்டுக்குள் அணிந்துகொண்டே இருப்பார்கள்! அது மிகவும் கெடுதல்! கட்டாயம் அதானால் இல்லாத குதிகால் வலி வந்துவிடும் ஜாக்கிரதை!!! இருந்தால் அதை தலையை சுற்றி எறிந்து விடவும்!!!
.
.
அடுத்து நடை இயந்திரத்தில் நடப்பதை பற்றிய விஷயங்களை அலசுவோம்!!!...... தொடரும்!!!

Gunaseelan

No comments: