Monday, November 7, 2016

பேலியோவும் எடைபயிற்சியும்!!! ----------- பாகம் – 7 ( நடை இயந்திரம் )


ட்ரெட்மில் எனப்படும் நடை இயந்திரத்தில் நடக்கலாமா? 


.
.
தாராளமாக நடக்கலாம்! ஆனால் நடை இயந்திரம் (ட்ரெட்மில்) தரமானதாக இருக்க வேண்டும்! நல்ல காற்றோட்டமான அறையில் வைத்து நடக்க வேண்டும்! தகுந்த க்ரிப்பான ஷீ அனிய வேண்டும்! எக்காரணம் கொண்டும் நடை இயந்திரத்தில் வெரும் காலில் நடக்க கூடாது! நாம் நடக்கும் இயந்திரத்தின் ரப்பர் கன்வேயரானது கீழே உராயாமல், அடிக்கடி சிலிக்கான் லூஃப்ரிகெண்டுகளை பயன்படுத்தி உராய்வை குறைக்க வேண்டும்!
.
.
இல்லையென்றால் அந்த கன்வேயர் பெல்ட் ஆனது கீழே உள்ள பிளாஸ்டிக் உருளைகளுடன் உராய்ந்து பென்சீன் போன்ற விஷ வாயுக்களை வெளியிடும் ஆபத்து இருக்கிறது! மேலும் திடீரென பவர் கட் ஆனால் இயந்திரத்தின் பெல்ட் சரியாக லூஃப்ரிகண்ட் செய்யப்படாமல் ஹைஃப்ரிக்ஸன் ஆக இருந்தால் பிரேக் பிடிச்ச மாதிரி கன்வேயர் பெல்ட் நின்று விடும்! அப்படி உடனடியாக பெல்ட் நிற்க்கும் போது நாம் குப்புற விழ வாய்ப்பு அதிகம்!
.
.
ஒரு தபா நான் 12 கிலோ மீட்டர் வேகத்தில் ட்ரெட் மில்ல ஓடிகிட்டு இருக்கும் போது எங்க கீழ் வீட்டுல இருந்த அபிஷ்டு ஒருத்தன் மெயின் சுவிச்ச ஆஃப் பன்னிட்டன்! நான் நிற்க முடியாமல் ட்ரெட்மில் மேல ஏறி இரண்டு கரணம் அடிச்சு விழுந்தேன்! நல்ல வேளை! யாரும் பார்க்காததால மண் ஒட்டலை!
.
.
ஆகவே கவனமாக நடக்க வேண்டும்! இதை ஹில் மோடுக்கு மாற்றி ஓட்டுவதால் பயிற்சி கடுமையாக இருக்கும்! மலை ஏறுவதைபோன்றே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும்! ஆனால் மூட்டுவலி இருப்பவர்கள் இப்படி ஹில் மோடில் வைத்து நடப்பதோ, ஓடுவதோ ஆபத்து! நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஹில் மோடில் வைத்து நடப்பதால் தவறில்லை! கலோரி வேகமாக எரியும்! கொழுப்பு சரசரவென குறையும்!
.
.
அதிலும் லெவல் 1-லிருந்து மெஷின்களின் மாடல்களை பொருத்து 15 லெவல் வரைக்கும் இருக்கும்! நம்மால் எதுவரை முடிகிறதோ அதுவரைக்கும் உயர்த்தி வைத்து நடக்கலாம்! ஹில் மோடுக்கு மாற்றி நடக்கும் போது வேகத்தை குறைத்துகொள்வது நல்லது! வயதானவர்கள், அதிகம் எடை உள்ளவர்கள் அந்த ட்ரெட்மில்லின் முன்னால் உள்ள கேண்டில்பாரை பிடித்துகொண்டும் நடக்கலாம்!
.
.
அப்படி நடக்கும் போது கைகளுக்கு முன்னோக்கிய அழுத்தம் கொடுத்து வயிறை இருக்கமாக வைத்துகொண்டு நடக்கும் பட்சத்தில் வயிற்றுபகுதியில் உள்ள கொழுப்பு சீக்கிரம் கரையும்!!! ஆனால் செயற்க்கையாக வயிற்றை உள் நோக்கி இழுத்து பிடித்து கொண்டு நடப்பது ஆபத்து! கைகளை ஹேண்டில் பார்களில் அழுத்தும் போது ஏற்ப்படும் இயற்க்கையான அந்த லேசான இருக்கமே வயிற்றுதசைகளை வலுவாக்கி கொழுப்பை குறைக்கும்! கால்களுக்கு போக வேண்டிய அழுத்தத்தை கைகள் பகிர்ந்து கொள்வதால் கால் வலியும் குறைவாக இருக்கும்! நல்ல தரமான ப்ராண்டட் நடை இயந்திரத்தின் குறைத்தபட்ச விலையே ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும் !!!
.
.
அடுத்து நாம் நடக்கும் போது உடலில் பெருகும் வியர்வை இயந்திரத்தின் மின் பாகங்களில் படாமலும் கவனமாக நடக்க வேண்டும்! தொடர்ந்து அதில் நடப்பது சிலருக்கு ஒரு மாதிரி போரடிக்கும் ஆகையால் வாரத்தில் இரண்டு நாள் வெளியில் சென்றும் நடக்கலாம்! அல்லது அந்த ட்ரெட்மில்லின் நேராக ஒரு டி வி பெட்டியை வைத்து கொண்டு எஃப் டிவி சேனலில் வரும் பிகினிகளை பார்த்துகொண்டே நடந்தால் களைப்பு தெரியாது! ஆனால் அது மனைவிக்கு தெரியாமல் இருக்க வேண்டும்!!! தெரிஞ்சா அடுத்து வீட்டுல WWF- குத்துசண்டை ஆரம்பிச்சுடும்! அதுக்கு நான் பொருப்பல்ல!!!
.
.
இதேபோல நின்றுகொண்டே ஓட்டும் எலிப்டிகல் சைக்கிள் வாங்கியும் ஓட்டலாம்! ட்ரெட் மில் அளவுக்கு இது ஆபத்து இல்லைன்னாலும் அலைன்மெண்ட் சரியாக உள்ள ஒரே சீராக ஓடும் தரமான இயந்திரத்தை வாங்கித்தான் உபயோகிக்க வேண்டும்! டி வி விளம்பரத்தில் வரும் பாடாவதி மெசின்கள் மூட்டுகளுக்கு தீங்கு விளைவிக்கும்!
.
.
நல்ல தரமான எலிப்டிக்கல் இயந்திரத்தின் குறைந்த விலையே 90,000 இருக்கும்! கொழுப்பை எரிப்பதில் இந்த எலிப்டிக்கல் மெஷினும் கில்லிதான்! கைகளுக்கும் கால்களுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு வேகமாக எரியும்! லாட்ஸ் மற்றும் ஆர்ம்ஸ் தசைகளும் ஸ்ட்ரெச் ஆவதால் கிட்டத்தட்ட முழு உடலும் பயிற்சி பெறும்! ஆனால் குறைந்தது மணிக்கு 30 நிமிடம் ஓட்ட வேண்டும்! அதிக பட்சம் 60 நிமிடம் போதும்! இதிலும் ஹில் மோடு வைத்தும் ஓட்டலாம்! ட்ரெட்மில் போல இதில் மூட்டு வலி அதிகம் வருவதில்லை! எனவே ஓட்டமுடிந்த எல்லோருமே பயன்படுத்துவதால் தவறில்லை!!!
.
.
இன்னொரு முக்கியமான விஷயம் ரூமுக்குள் ட்ரெட்மில் வச்சு நடக்கும் போதும் ஓடும் போதும் நமக்கு தேவையான ஆக்ஸிசன் வெண்ட்டிலேசன் கிடைக்குமான்னு தெரியாது! அதாவது நம்மை சுற்றியுள்ள காற்றில் கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிக பட்சம் 500 PPM- க்கு மேல் போக கூடாது! அப்பொழுதுதான் ஆக்ஸிசன் அளவு நமக்கு போதுமானதாக இருக்கு என அர்த்தம்!
.
.
இந்த கார்பன் டை ஆக்ஸைடை அளக்க ஒரு கருவி உள்ளது! அப்படி CO2 அதிகமாக இருந்து ஆக்ஸிசன் பற்றாக்குறையாக இருந்தால் வசதி இருப்பவர்கள் ஒரு டொமஸ்டிக் ஆக்ஸிசன் ஜெனரேட்டரை வாங்கி வைத்து கொள்ளலாம்! அது காற்றில் இருந்து மற்ற அசுத்தங்களை பிரித்து சுத்தமான ஆக்ஸிசனை நமக்கு வழங்கும்! அதேபோல் காற்றில் உள்ள 20 மைக்ரான் அளவுக்கு கீழே உள்ள காற்றில் சுலபமாக பறக்ககூடிய நுண்னிய தூசிகளை வடிகட்ட மைக்ரோ ஏர் ஃபில்டர் என்ற இயந்திரம் கூட உள்ளது!
.
.
அதிக தூசிகள் காற்றில் இருக்க சாத்திய கூறு உள்ளவர்கள், பஞ்சாலைகள், சிமண்ட் ஆலைகள், நில்லகரி சுரங்கங்கள், மற்றும் பிரதானமான போக்குவரத்து மிகுந்த சாலைகளின் பக்கமாக வீடு உள்ளவர்கள் இந்த இயந்திரங்களை பயன்படுத்தலாம்! விலை கொஞ்சம் அதிகம்! இம்மூன்றும் சேர்ந்து ஒன்னறை லட்ச ரூபாயை தாண்டும்! நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே 1,60,000 ரூபாய்க்கு வாங்கினேன்! கிராமத்தில் இருப்பவர்களுக்கு இந்த சிரமம் இல்லை! இயற்கை ஆக்ஸிசன் நிரம்ப கிடைப்பதால் கொடுத்துவைத்தவர்கள்!
.
.
அடுத்த பாகத்தில் நடை பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்!!! …………………. தொடரும்!!!

Gunaseelan
Post a Comment