நடை பயிற்சியினால் ஏற்ப்படும் நன்மைகள் என்ன?
.
உடல் உழைப்பு, விளையாட்டு, உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் ஈடுபட முடியாதவர்களுக்கு அற்புதமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு விஷயம் நடை பயிற்சி. நமக்கு, கராத்தே, யோகா, உடற் பயிற்சிகள், ஓட்டம், பல்வேறு விளையாட்டுக்கள் போன்றவைகளை விட நடை பயிற்சி மிகவும் எளிது. செலவில்லாத விஷயம்!
.
.
.
நல்ல ரம்மியமான இயற்கை சூழ்ந்த இடங்களில் நடை பயிற்சி செய்வது மன இறுக்கம், மன அழுத்தத்தைப் போக்குகிறது. மனதிற்கு மகிழ்ச்சி தரும்! நல்ல நடைபயிற்சி நலம் தரும் ஹார்மோன்களை உடலில் சுரக்கச் செய்யும். உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மேம்படும். நன்றாகப் பசி எடுக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்! தோலின் இளமையை பாதுகாக்கும்!
.
.
.
குறிப்பாக, பெண்கள் மற்றும் நோய் தாக்குதலில் மீண்டு வருபவர்களுக்கு மிகவும் எளிமையானது. சுருக்கமாக சொன்னால் தொடர்சியான நடை பயிற்சி உடல், மனச்சோர்வைக் குறைக்கிறது.முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது. கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது! நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறுகிறது! செலவில்லாமல் தேவையான வைட்டமின் டி-யும் கிடைக்கிறது!
.
.
உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை எரித்து ஆரோக்கியமாகவும் ஸ்லிம்மாகவும் வைத்துகொள்கிறது! மெயிண்டன்ஸ் டயட்டில் இருப்பவர்கள் பெரிதாக கணக்கு பார்க்காமல் இருக்கலாம்! ஆனால் நான் சொல்லிவிட்டேன் என்பதற்க்காக பிரியானி, பாயசம் என ஆரம்பிச்சுட கூடாது! சீட்டிங் கூடாது! எப்பவாச்சும் ஆசைப்பட்டா ரெண்டுதுண்டு மல்கோவா , இமாம்பசந்த் போன்ற சுவைக்காக சாப்பிடும் மாம்பழங்களை கடித்துகொள்ளலாம்!
.
.
உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை எரித்து ஆரோக்கியமாகவும் ஸ்லிம்மாகவும் வைத்துகொள்கிறது! மெயிண்டன்ஸ் டயட்டில் இருப்பவர்கள் பெரிதாக கணக்கு பார்க்காமல் இருக்கலாம்! ஆனால் நான் சொல்லிவிட்டேன் என்பதற்க்காக பிரியானி, பாயசம் என ஆரம்பிச்சுட கூடாது! சீட்டிங் கூடாது! எப்பவாச்சும் ஆசைப்பட்டா ரெண்டுதுண்டு மல்கோவா , இமாம்பசந்த் போன்ற சுவைக்காக சாப்பிடும் மாம்பழங்களை கடித்துகொள்ளலாம்!
.
.
ஆனால் அதோடு விட்டுவிட வேண்டும்! ஒரு நேர உணவாக கணக்கில் எடுத்து அதை சாப்பிட வேண்டும்! இதில் சில நண்மைகளும் இருக்கு! கணையத்தை ஒரேயடியாக ஓய்வில் வைத்திருக்கும் நமக்கு இப்படியான சில நாட்களில் அதற்க்கு அதிர்ச்சி வைத்தியம் குடுப்பதை போல இருக்கும்! நான் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறேன் பேர்வழின்னு வாரத்தில் மூனு நாட்கள் மாம்பழம் தின்றால் அதற்க்கு நான் பொருப்பல்ல!
.
.
அதுவும் கார்பைட் கல் போடாத மாம்பழம்! அடுத்து நாம் சாப்பிடகூடிய ஒரே பழம் பப்பாளி! இதை இரண்டையும் மட்டும் மாதத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் ஒரு நேர உணவாக எடுத்து கொள்ளலாம்! நன்றாக கவனிக்கவும்…. மெயிண்டன்ஸ் டயட்டில் இருப்பவர்கள் மட்டும்!!! மெயிண்டென்ஸ் டயட்டில் இருப்பவர்கள் இப்படி எப்போதாவது ஃப்ரூட் சீட்டிங் செய்வது தவறில்லை! ஏனென்றால் தொடர்ச்சியான நடை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை எரித்துகொண்டே இருப்பதால் புதிதாக கொழுப்பு சேர வாய்ப்பே இல்லாமல் போகிறது!
.
.
.
.
மேலும் நாள் தவறாத நடைபயிற்சியானது அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது. அடி வயிற்றில் மேலும் கொழுப்பு சேராமல் பார்த்துகொள்கிறது! மூட்டுகளை இலகுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துகொள்கிறது! நடக்க நடக்க மூட்டு இனைப்புகளில் குளுகோஸமின் என்ற உயவு ஹார்மோன் சுரந்துகொண்டே இருக்கும்! தொட்டனை தூரும் மணர்க்கேணி என்பதை போல உபயோகிக்க உபயோகிக்கத்தான் எந்த உருப்புகளும் அதன் முழு செயல் திறனுக்கு வரும்! நடை அதுக்கு மிக முக்கியமானது!
.
.
.
.
மேலும் எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது. முக்கியமாக நல்ல தூக்கம் வர உதவுகிறது. ஹாஸ்பிட்டல் மற்றும் ஆம்புலன்ஸ் கனவுகள் வருவதில்லை! ஆனால் அதிர்ஷ்ட வசமாக சிலருக்கு அழகிகளை சுமந்துகொண்டு டூயட் பாடும் கனவுகள் கூட வந்து ஆனந்தப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது!
.
.
மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது. தினமும் குறைந்தது 45 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதும். ஆரோக்கியம் நம்முடன் எப்போதும் இருக்கும். காமன் மேன் டயட்டில் ஒரு நபர் நடக்க ஆரம்பித்து குறைந்தது இருபது நிமிடங்கள் கழித்துதான் உடலில் இருக்கும் கொழுப்பு கொஞ்சம் எரிய ஆரம்பிக்கும்! ஆனால் அற்புதம் செய்யும் பேலியோவாலாக்களுக்கு இரண்டு நிமிடத்தில் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு எரிய தொடங்கும்!
.
.
.
ஆகவே அன்பர்களே நல்ல நாள் பஞ்சாங்கம் எல்லாம் பார்க்காமல் உடனே தொடங்கலாம் நடைபயிற்சியை! ஏற்கனவே, தொடங்கி பயிற்சி மேற்கொண்டவர்கள் மகிழ்ச்சியோடு இன்னும் சில நிமிடங்கள் நடையை அதிகப்படுத்தலாம். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு கிடைத்துள்ள அற்புத வரம்தான் நடைபயிற்சி ! பயன்பெறுங்கள்!!! ஆரோக்யத்துடன் வாழுங்கள்!
.
.
.
.
மீண்டும் சொல்கிறேன்! ஆரோக்கியம் எல்லா செல்வங்களையும் விட மேலானது! ஹெல்த் ஈஸ் மோர் ப்ரீஷியஸ் தென் வெல்த் என்பதை எப்போதும் மறக்காதீர்கள்! நான் சொன்ன இதெயெல்லாம் கடந்தும் இன்னும் என்னற்ற நற்பயன்கள் உள்ள நடைபயிற்ச்சியை உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ளுங்கள்! ஆரோக்கியம் மகிழ்ச்சி என்ற இனையற்ற செல்வம் உங்களுடன் எப்போதும் இருக்கும்!
.
.
.
.
நடைபயிற்சி அனுபவ கட்டுரைமுடிந்தது! அடுத்து ஒரு சிறிய இடைவெளி விட்டு எடை பயிற்சி (உடற்பயிற்சி) கட்டுரை வரும்! ………………… நன்றி!!!
Gunaseelan
Gunaseelan
No comments:
Post a Comment