Sunday, November 6, 2016

கொலஸ்டிரால் உடல்நலனுக்கு மட்டுமல்ல மனநலனுக்கும் உகந்தது என ஆய்வுகள் கூறுகின்றன


ஜர்னல் ஆஃப் அபெக்டிவ் டிஸார்டரில் 2006ல் பதிப்பிக்கபட்ட ஆய்வு ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு குறைவாக இருக்கும் ஆண்களுக்கு மனநிலை கோளாறுகள் வரும் வாய்ப்பு அதிகம் என்று கண்டறிந்தது

கொலஸ்டிரால் அளவு குறைவாக இருப்பவர்கள் மத்தியில் அதிக அளவு தற்கொலைகள் நடப்பதாக ஜர்னல் ஆஃப் சைகோமெட்ரிக் ரிசர்ச்சில் 1995ல் பதிப்பிக்கபட்ட இன்னொரு ஆய்வு கூறுகிறது. இதற்கான காரணமாக இந்த ஆய்வு கூறுவது கொலஸ்டிராலுக்கும் நம் மூடுக்கும் தொடர்பு உள்ளது என்பதே. கொலஸ்டிராலுக்கும் மூடுக்கும் உள்ள தொடர்பால் குறைந்த கொலஸ்டிரால் அளவுகள் இருந்தால் விபத்துக்களும் அவர்களுக்கு அதிகம் நடப்பதாக இவ்வாய்வு கூறுகிறது. மூடு சரியில்லாத நேரத்தில் தான் தண்ணி அடித்துவிட்டு வண்டிஓட்டுவோம். சீட்பெல்ட் போடாமல் கார் ஓட்டுவோம்

ஜர்னல் ஆஃப் சைக்கிரியாடிக் ரிசர்ச்சில் 2000ம் ஆண்டு பதிப்பிக்கபட்ட இன்னொரு ஆய்வு கொலஸ்டிரால் அளவுக்கும் குற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்தது. ஸ்வீடனில் குற்றம் இழைத்து ஜெயிலில் இருந்த 80,000 கைதிகளிடையே இந்த ஆய்வு நடத்தபட்டது. இதில் கொலஸ்டிரால் அளவு எந்த அளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவு அக்குற்றவாளிகள் வன்முறைக்குற்றங்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. பாலினம், மது அருந்துதல், கஞ்சா அடித்தல்..என எதுவுமே வன்முறையுடன் தொடர்பிருப்பதாக ஆய்வு கூறவில்லை. அதாவது மது அருந்தினால் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பது போல கூட கூறமுடியவில்லை. ஆனால் கொலஸ்டிரால் அளவு குறைந்தால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டிருப்பார்கள் என உறுதியாக தெரியவந்தது. அதாவது வன்முறையில் ஈடுபட்டு ஜெயிலில் இருந்த அனைவர் கொலச்டிரால் அளவும் குறைவாக இருந்தது

கொலஸ்டிரால் கட்டுபாட்டு மருந்தான ஸ்டாடினுக்கும் வன்முறைக்கும் இடையே உள்ள உறவை ஆராய்ந்த ஆய்வு ஒன்று ஸ்டாடின் உண்ணும் பெண்கள் வன்முறையில் அதிகம் ஈடுபடுவதாக கூறுகிறது

போர்முனையில் இருந்து திரும்பிய போர்வீரர்கள் மன அழுத்தம், தற்கொலை, வன்முறை, குடி, கஞ்சா போன்ரவற்றால் பாதிக்காப்டுவார்கள். இதை பிடிஎஸ்டி என அழைபபர்கள். இவர்களை வைத்து நிகழ்த்தபட்ட ஆய்வு ஒன்று எத்தனைகெத்தனை ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகமாக இருக்கிறதோ அத்தனைஅத்தனை இவ்வீரர்களுக்கு மன அழுத்தம், வன்முறை உணர்வு ஆகியவை குறைந்து இருப்பதாக கூறுகிறது

இப்படி கணக்குவழக்கற்ற ஆய்வுகள் நம் ரத்தத்தில் உள்ள கொலச்டிராலுக்கும் மனநலனுக்கும் இடையே உள்ள உறவை சுட்டுகின்றன. இதற்கான காரணங்கள் பின்வருமாறு:

பாலூட்டிகளின் நரம்பு மண்டலம் முழுக்க ஏகபட்ட கொலச்டிரால் உள்ளது

மனித உறுப்புகளில் மிக அதிக அளவு கொலஸ்டிராலை கொண்ட ஒரே உறுப்பு மூளையே. பிற எந்த உறுப்புக்களிலும் இருப்பதை விட பத்து மடங்கு அதிக கொலஸ்டிரால் மூளையில் உள்ளது

இத்தனை கொலஸ்டிராலை மூளை தேக்கி வைத்திருப்பதால் நம் நரம்புமண்டலத்தின் தோற்றம், மூளையுடனான அதன் உறவு அனைத்திலும் கொலஸ்டிரால் மிக முக்கிய பங்காற்றீருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். நம் மூளை உடலின் பிற உறுப்புக்களுடன் தொடர்பு கொள்வதே நரம்புகள் மூலம் தான் என்பதை நினைவில் கொள்வோம்

உடலில் அனைத்து உறுப்புக்களிலும் உள்ள கொலஸ்டிரால் அவ்வுறுப்புக்களை விட்டு நீங்கி, புதிதாக அங்கே கொலஸ்டிரால் உடலால் அனுப்பபடும். ஆனால் மூளையில் உள்ள கொலஸ்டிராலை மட்டும் மூளை மிக, மிக மெதுவாகவே இழக்கும். அதாவது பிற உறுப்புக்களை விட 300% குறைந்த வேகத்திலேயே மூளையில் உள்ள கொலஸ்டிரால் நீங்கும்.

மூளையில் உள்ளதில் 70% கொலஸ்டிரால் மயீலின் வடிவில் உள்ளது. மயீலின் என்பது முழுக்க கொழுப்பால் ஆன ஒரு மெய்க்காப்பாளன். மூளையின் மிக, மிக சென்சிடிவ் ஆன நரம்புகளை சுற்றி மயீலின் படலம் போல் படர்ந்து அவற்றில் அதிர்ச்சி ஏற்படாது பாதுகாக்கிறது. அந்த நரம்புகளில் சேதம் ஏற்பட்டால் கம்ப்யூட்டரின் சர்க்கியூட் போர்டில் சேதம் ஏற்பட்டது போல தான். ஆக அதை பாதுகாக்கும் அதிமுக்கிய பொறுப்பு கொலஸ்டிராலிடமே ஒப்படைக்காப்ட்டுள்ளது

மீதமுள்ல 30% கொலஸ்டிரால் மூளையின் நியூரான்களுக்கும், கிளியல் செல்களுக்கும் பயன்படுகிறது. மூளை உடலுறுப்புக்களுடன் தொடர்புகொள்ல நியூரான் சிக்னல்களையே பயன்படுத்துகிறது. அதாவது நெருப்பில் கைவைத்து சூடுபட்டால் "கையை எடு" என்ற சிக்னலை மூளை நீயூரான் மூலமாக்வே அனுப்பும். நியூரான் காலி என்றால் மூளைக்கும் பிற உறுப்புக்களுக்குமான தொடர்பு சுத்தமாக அறுந்தது எனப்பொருள். அதனால் இத்தனை முக்கியமான நியூரான்களுக்கு மூளையில் இருப்பதில் 10% கொலஸ்டிரால் சப்ளை செய்யபடுகிறது

எலிகளை வைத்து நடந்த ஆய்வு ஒன்றில் நியூரான்களுக்கு மத்தியில் செயற்கையாக கொலஸ்டிராலை சேர்த்தபோது நியூரான்களின் தொடர்சங்கிலிகள் அதிகரிப்பது தெரியவந்தது. அதாவது கொலஸ்டிரால் மூளையை வளர்த்து, அதன் இணைப்புச் சங்கிலியை அதிகரிக்கிறது

ஆய்வு முடிவுகளுக்கான ஆய்வுக் கட்டுரைகளை முதல் பின்னூட்டத்தில் காணலாம்

ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு இத்தனை முக்கியமென்றால் ஏன் அதை குறைக்கவேண்டும் என இப்படிப்பட்ட பிரச்சாரம் நடந்து, கொலஸ்டிராலை கண்டு மக்கள் பீதியடைந்து ஓடுகிறார்கள் என கேட்கிறீர்களா?

எனக்கு தெரியலை..உங்களுக்கு தெரிஞ்சால் சொல்லுங்க 


Neander Selvan






No comments: