நடையா? இது நடையா???
உடற்பயிற்சி என்றால் என்ன? நடை பயிற்சி என்றால் என்ன? எடை பயிற்சி என்றால் என்ன? உடற்பயிற்சி என்பது பொதுவான சொல்! உடற்பயிற்சியில் ஒரு வகைதான் நடை பயிற்சி! உடற்பயிற்சியில் இன்னொரு வகை எடை பயிற்சி! இவைகள் மட்டுமே முக்கியமாக பரிந்துரைக்கப்படும் பயிற்சிகள்!
.
.
.
.
நடை பயிற்சி-ன்னா என்னான்னு முதல்ல பார்ப்போம்! நடை பயிற்சி என்ற வார்த்தையே இந்த நூற்றாண்டின் வார்த்தையாகத்தான் இருக்கும்! ஏன்னா நடைக்கு பயிற்சி எடுப்பது பெரும்பாலும் ஒரு வயது குழந்தைதான்! போன நூற்றாண்டில் மனிதனின் நடையை ஒழித்துகட்டும் கார், பஸ், பைக், டிவி, கம்யூட்டர், வீடியோகேம்ஸ், இண்டெர் நெட், பேஸ் புக், வாட்ஸ் ஆப், இத்தியாதியெல்லாம் இல்லவே இல்லை! ஆக இதெல்லாம் எப்ப வந்ததோ அப்ப கூடவே வந்தது தான் நடைபயிற்சி!
.
.
.
.
சரி! அதை விடுங்க! நமக்கு ஏன் நடைபயிற்சி தேவைப்படுது? தேமேன்னு கண்ணுல கண்டதயெல்லாம் தின்னுட்டு வீட்டுலயே உக்கார்ந்து உலகத்துல இருக்கர எல்லா வியாதியயும் வரவழைச்சு, பின் ஊர் உலகம் பூராவும் விசாரித்து கடைசியாக ஒரு டாக்டரிடம் போவோம்! அவர்தான் உங்கள் நடை பயிற்சியின் காரணகர்த்தா! அதுவும் நோயாளி கிராமத்தானா இருந்துட்டா டாக்டர் நிலைமை கவலைக்கிடமாக போய்விடும்! பெரும்பாலும் எல்லா ரிப்போர்ட்டையும் பார்த்துட்டு கடைசியா டாக்டர் நோயாளியிடம் இதைத்தான் சொல்லுவார்!
.
.
.
.
உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்குங்க!....... டாக்டர்???? எனக்கு சர்க்கரை சாப்பிட்டா கீரிபூச்சி வந்துடும்னு அத நான் தொட்டுகூட பார்க்கரதில்லை டாக்டர்!.... அப்படியா? அது காரணமில்லைங்க! உங்க உடம்புல இன்சுலின் அப்படீன்னு ஒரு ஹார்மோன் சுரக்கறது கம்மியாயிடுச்சு! அதனால சர்க்கரை நோய் வந்துடுச்சி! ஒன்னும் பயப்பட வேண்டாம்! இந்த மருந்து தொடர்ந்து சாப்பிடுங்க!
.
.
.
.
தினமும் காலையில் வாக்கிங் போகனும்ங்க! சரிங்க டாக்டர்….. எவ்வளவு தூரம் போகனும் டாக்டர்? சராசரியா மணிக்கு அஞ்சு கிலோ மீட்டர் வேகத்துல ஒரு நாளைக்கு அஞ்சு கிலோ மீட்டர் நடக்கனும்! சரிங்க டாக்டர்! கரூர்-ல இருந்து நடக்க ஆரம்பிச்சா தினமும் அஞ்சு கிலோமீட்டர் நடந்தா 15 நாள்ல திருச்சி வரைக்கும் போயிரலாம் டாக்டர்! அப்புறம் அங்க இருந்து எங்க போகனும் டாக்டர்? இடையில சாப்பாட்டுக்கு என்ன பன்றதுங்க டாக்டர்? டாக்டர் பேஷண்டுக்கு விளக்கம் சொல்றதுக்குள்ள டாக்டருக்கு சுகர் வந்துடும்!
.
.
.
.
ஆக இப்படித்தான் நடை பயிற்சி என்ற விஷயம் ஏதோ ஒரு மருத்துவரால்தான் ஆரம்பித்து இருக்கும்! இப்போது நாமும் வாக்கிங் போற நிறையப்பேரை பார்க்கிறோம்! காலை 5 மணிக்கு எழுந்து அவசரமா கிளம்புவாங்க! அதுவும் சில அலப்பறைகள் அடிடாஸ், வுட்லேண்ட்ஸ் ஷீ இல்லாம வாக்கிங் போக மாட்டாங்க! அதுவும் தனியா இல்லை! ஒரு ஊரையே கூட்டிக்குவாங்க!
.
.
.
.
ஊர் உலகத்துல இருக்கற அத்தனை குடும்பத்தின் கதையும் பேசிகிட்டு ஏதோ ஜாலி ட்ரிப் போற மாதிரி ஒரு உல்லாச நடை! பக்கத்து ரோட்ல இவங்க குடும்ப கதைய இன்னொரு க்ரூப் பேசி சிரிக்கற விஷயம் இவங்களுக்கு தெரியாது! இப்படியே ஒரு அஞ்சு ஆறு கிலோமீட்டர் நடந்து முடிச்சப்புறம் படு விபரமா ஆரோக்கியத்தின் அத்தியாவசிய திறவுகோலான செட்டியார் கடை போண்டாவோடுதான் அந்த வாக்கிங் முடிவுக்கு வரும்! போண்டா ஒவ்வொன்றும் அனுகுண்டு சைஸுக்கு இருக்கும்!
.
.
.
அதுவும் சூரியகாந்தி எண்ணய், ரீஃபைண்ட் எண்ணெய் , தவிட்டு எண்ணெய், எல்லாம் கலந்த ஒரு வஷ்துவில் சுட்ட அந்த போண்டாவில் நியூட்ரிஷனல் வேல்யூ எல்லாம் எப்பேர்ப்பட்ட விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க முடியாது! சட்டியில் எண்ணெய் குறைய குறைய எந்த எண்ணெய் அப்போது கையில் இருக்கிறதோ அதை கூட சேர்த்து சுட்டுகொண்டே இருப்பார்கள்! எனக்கு தெரிந்து அந்த ஒரு போண்டா மட்டும் 500 கலோரி தரும்!
.
.
அதுவும் சூரியகாந்தி எண்ணய், ரீஃபைண்ட் எண்ணெய் , தவிட்டு எண்ணெய், எல்லாம் கலந்த ஒரு வஷ்துவில் சுட்ட அந்த போண்டாவில் நியூட்ரிஷனல் வேல்யூ எல்லாம் எப்பேர்ப்பட்ட விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க முடியாது! சட்டியில் எண்ணெய் குறைய குறைய எந்த எண்ணெய் அப்போது கையில் இருக்கிறதோ அதை கூட சேர்த்து சுட்டுகொண்டே இருப்பார்கள்! எனக்கு தெரிந்து அந்த ஒரு போண்டா மட்டும் 500 கலோரி தரும்!
.
.
அதோடு அந்த காலாவதியான எண்ணெயால் வரும் சீர்கேடுகள் எல்லாம் போனஸ்! அதோடு வாக்கிங் முடியாது! கூடவே ஒரு டீ! டீன்னா எப்படிப்பட்ட டீ தெரியுமா? , முக்கால் வாசி தண்ணீர் கலந்த ஜவ்வரிசி ஊரவைத்த பால், அதில் ரெண்டு ஸ்பூன் சர்க்கரை, கொஞ்சம் சாயம் கலந்த புளியங்கொட்டை தூளோடு போனா போவுதுன்னு கலக்கப்பட்ட நாலந்தர டஸ்ட் டீத்தூள், இதெல்லாம் கலந்து பூச்சிமருந்து எவ்வளவோ பரவாயில்லைங்கர மாதிரியான ஒரு டீ!
.
.
.
.
இன்னும் பாலில் கலக்கப்பட்ட மாவுசோடா, பாலில் கலந்த தன்ணீரை மறைக்க சர்க்கரை, இதெல்லாம் அந்த கடைக்கு பால் ஊற்றும் பால்காரன் அவன் பங்குக்கு செய்யும் கைங்கர்யம்! இன்னும் நிறைய இருக்கு! நான் ஒரு முன்னால் மில்க் வாலாவும் கூட என்பதால் தொழில் தர்மம் கருதி அதை முழுமையாக சொல்ல விரும்பவில்லை!
.
.
.
.
அதுமட்டுமா? வாக்கிங் போகும் போது சாலைகளில் போகும் வாகனங்கள் கக்கும் கார்பன் மோனாக்ஸைடு போன்ற விஷப்புகை! மற்றும் ஒவ்வொரு தெரு முக்கிலும் கர்மசிரத்தையாக நம் துப்புறவு பணியாளர்கள் எரிக்கும் பிளாஸ்டிக் குப்பையினால் வெளிப்படும் பென்சீன் போன்ற விஷ வாயுக்கள், இப்படி மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லக்கூடிய அத்தனை விஷயங்களும் வாக்கிங்கில் இலவச இனைப்பாக கிடைக்கும்!
.
.
.
.
இப்படியெல்லாம் உடம்பை குப்பைத்தொட்டியாக்கி சீரழித்து விட்டு எதுவுமே தெரியாத அம்மாஞ்சி போல ஒரு மாசம் கழிச்சு டாக்டர் கிட்ட போய் ரொம்ப பெருமையா சொல்லுவாங்க! டாக்டர்! நீங்க சொன்ன நாள்ல இருந்து தினமும் வாக்கிங் போரேன் டாக்டர்! மாத்திரை தவறாம சாப்பிடுறேன் டாக்டர்! எனக்கு சர்க்கரை வியாதி குணமாகி இருக்குமா டாக்டர்?
.
.
.
.
இவர் அமுக்கிய செட்டியார் கடை போண்டாவையும், குடித்த ரசாயன டீயையும் மட்டும் சொல்லவே மாட்டார்! ஓ…. போய் ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்து பார்த்துட்டு வாங்க! வந்தவுடன் ரிப்போர்ட்டை வாங்கி பார்த்த டாக்டர் மயங்கி விழ நிறையவே சாத்தியம் இருக்கு!
.
.
.
.
இப்படித்தான் நிறைய பேர் நீரிழிவுக்கு மருந்து சாப்பிட்டு நாசமாய் போறாங்க! சரி! அது போகட்டும்! ஆக இப்படி மருத்துவ பெருந்தகைகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒரு விஷயம்தான் செல்லமாக வாக்கிங் என கிராமத்தானாலும் அழைக்கப்படும் நடை பயிற்சி!
.
.
.
.
சரி! இந்த நடை பயிற்சியை எப்படி செய்யனும்! இதை செய்வதால் நமக்கு என்ன லாபம்? இதனால் நம் உடலுக்குள் நடக்கும் விஷயம் என்ன? யாரெல்லாம் நடை பயிற்சி செய்யலாம்? யாரெல்லாம் நடை பயிற்சி செய்யக்கூடாது? எங்கே நடை பயிற்சி செய்ய வேண்டும்? ட்ரெட் மில் எனப்படும் நடை இயந்திரத்தில் நடக்கலாமா? இதற்க்கான பதிலை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்! ……………………….. தொடரும்!!!
No comments:
Post a Comment