Friday, November 4, 2016

ஆட்டிசம்



கேள்வி: "கட்டுரையில் சுட்டப்படும் ஆய்வு கெடொஜெனிக் டயட் ஆட்டிசத்தை முழுமையாக குணப்படுத்தும் என கூறவில்லை"
பதில்: ஆய்வு நிகழ்ந்தது இரு வாரங்கள் மட்டுமே. இரண்டு வாரத்தில் ஆட்டிசத்தில் முன்னேற்றம் காணபட்டதாக தான் ஆய்வு கூறுகிறது. இரு வாரத்தில் ஆட்டிசத்தை முழுமையாக குணபடுத்த முடிந்தால் ஆய்வாளருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும்..)
கேள்வி: கெடொஜெனிக் டயட்டும் பேலியோவும் ஒன்று இல்லை..வேறு, வேறு
பதில்: பாட்சாவும், மாணிக்கமும் வேறு, வேறு என சொல்லுவது மாதிரி இருக்கு. குழந்தைகள் கெடொஜெனிக் டயட்டின் கடுமையை தாங்கமட்டார்கள் எனதான் அந்த ஆய்வுலேயே 20% காலரிகளை கார்பில் இருந்து கொடுத்தார்கள். அதே காரணத்தால் தான் நானும் கொஞ்சம் அரிசி, பழங்களை பரிந்துரைத்தேன். ஆக மாணிக்கம் மாறுவேடத்தில் இருக்கும் பாட்சாபாயே தான்.
கேள்வி: பேலியோ சர்வரோக நிவாரணி அல்ல, அல்லவே அல்ல, அல்ல
பதில்: நோ டென்சன் ப்ளீஸ். கொஞ்சம் தண்ணீர் குடிக்கவும்...குடிச்சாச்சா? ரைட்டு..பேலியோ சர்வரோக நிவாரணின்னு யார் சொன்னது?
கேள்வி: நானே தான் சொல்லிகிட்டேன். சொல்லிகிட்டு அதை நானே மறுத்தும் விட்டேன்
பதில்: சரி..அப்ப நெக்ஸ்ட் கொஸ்டினுக்கு போங்க
கேள்வி: பேலியோவை ஏன் எல்லா வியாதிக்கும் பரிந்துரைக்கிறீர்கள்?
பதில்: ஆஸ்பத்திரில எல்லா வியாதி வந்தவர்களுக்கும் பிரெட், சீரியல், இட்டிலி, தோசையை தான் கொடுக்கிறார்கள்..ஏன் என யாராவது கேள்வி கேட்டதுண்டா? உலகில் எந்த வியாதி வந்திருந்தாலும் அவர்கள் எதாவது உணவை சாப்பிட்டே ஆகணும். அப்படி உண்ணும் உணவு குப்பை உணவாக இல்லாமல் ஆரோக்கியமான இறைச்சி, முட்டை என இருந்தால் இப்ப என்ன கெட்டுபோனது? நோயாளிகள் சத்தற்ற உணவை தான் சாப்பிடவேண்டும் என்பது யார் வகுத்த விதி? மூளைக்கும், உடல்நலனுக்கும் ஏற்ற ஊட்டசத்துள்ள உணவுகளை கொடுத்து குப்பை உணவுகளை விலக்கினால் உடல் தன்னை தானே சரி செய்துகொள்ளும், எந்த நோயிலும் முன்னேற்றம் காணப்படும்
கேள்வி: அது எப்படி எல்லா நோயிலும் முன்னேற்றம் காணபடும்? பேலியோவில் கான்சரில் முன்னேற்றம் காணபடுமா, காய்ச்சல் குணமாகுமா? மருந்து கொடுத்தால் தான் குணமாகும்
பதில்: கான்சர் வார்டில் நோயாளிகளுக்கு என்ன உணவு கொடுக்கிறார்கள் என பார்க்கவும். பாஸ்டா, நூடில்ஸ், சாண்ட்விச் மாதிரி இன்னபிற உணவுகளை தான் கொடுக்கிறார்கள். கான்சர் செல்கள் வளர சுகர் அவசியமான மூலப்பொருள். பாஸ்டா நூடில்ஸ் மாதிரி சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை கொடுப்பதால் கான்சர் என்னவாகும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள். அது ஏன் நீங்கள் யாரும் பாஸ்டா, பிரெட் சாப்பிடுவதால் கேன்சர் எப்படி குணமாகும் என கேட்காமல் பேலியோவால எப்படி குணமாகும் என மட்டும் கேட்கிறிரிகள்? அப்ப கான்சர், காய்ச்சல் வந்தவர்கள் எதை வேண்டுமனாலும் சாப்பிடலாமா?
கேள்வி: காய்ச்சல் வந்தால் பேலியோ எப்படி அதை குணபடுத்தும்?
பதில்: பிரெட் எப்படி குணபடுத்துமோ அதே போல் தான்.
காய்ச்சல் வந்து ஆன்டிபயாடிக் எடுத்தால் வயிற்றில் உள்ள ப்ரொபயாடிக் பாக்டிரியா எல்லாம் செத்துவிடும். அதனால் விவரமுள்ள எந்த டாக்டரும் ஆன்டிபயாடிக் எடுக்கையில் ப்ரொபயாடிக் மாத்திரை எடுக்கவே பரிந்துரைப்பார். பேலியோவில் கபிர் தயிர் எடுப்பதால் ப்ரோபயாடிக் மாத்திரை அவசியமே இல்லை. வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, லெமென், நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் முட்டை இறைச்சியை எடுத்தால் உடல் நன்றாக காய்ச்சல் சமயம் ரெகவரி ஆகும். நோயெதிர்ப்பு சக்தியும் வலிவடைந்து கிருமிகளை எதிர்த்து போரிடும். டாக்டரிடம் போவது போய் எடுக்கும் மாத்திரைகளை எடுங்கள். கூட சத்தான உணவையும் சபபிடுங்கள் என்றால் "அதனால் காய்ச்சல் குணமாகுமா?" என காமடி செய்தால் என்ன செய்வது? பேலியோவுக்கு பதில் எடுக்கும் பிரெட், இட்டிலியில் எப்படி காய்ச்சல் குணமாகும்?

Neander Selvan

No comments: