Friday, November 4, 2016

சொரியாசிஸ்

சொரியாசிஸ் தோல்நோய் ஏன் வருகிறது, எதற்கு வருகிறது என சரியாக தெரியாது. ஆனால் இது வந்தால் நம் நோயெதிர்ப்பு சக்தி நம் தோலை வைரஸ் என நினைத்து தாக்க துவங்கும். இப்படி இம்யூன் சிஸ்டம் (நோயெதிர்ப்பு சக்தியால்) வரும் இது ஆடோஇம்யூன்ட் வியாதி என வகைபடுத்தபடும்.

80க்கும் மேற்பட்ட ஆட்டோஇம்யூன் வியாதிகள் உலகில் உள்ளன. சமீபகாலமாக சர்க்கரைக்கு கொடுக்கபடும் மெட்பார்மின் மருந்தை இவற்றில் சிலவற்றுக்கு கொடுக்க துவங்கி உள்ளார்கள். இம்யூன்ட் சிஸ்டத்தை குணப்படுத்த டயட் பெருமளவில் உதவும்.

இதுவரை இதுகுறீத்து நிகழ்த்தபட்ட ஆய்வுகள் கூறூவது என்னவெனில்

1) குறைந்த காலரி உணவு குண்டாக இருக்கும் ப்சொரியோசிஸ் பேஷண்டுகளின் உடல்நிலையில் முன்னேற்றத்தை காட்டுகிறது

2) சர்க்கரைக்கு கொடுக்கபடும் மெட்ஃபார்மின் ப்சொரியாசச்ஸுக்கு கொடுக்கபடலாம்

3) வைட்டமின் டீ3 ப்சொரியோசிசுக்கு மருந்தாக கொடுக்கப்டலாம். அது இம்யூன் சிஸ்டத்தை குணபடுத்தும்.

ப்சொரியோசிஸ் என இல்லாமல் தோல் வியாதிகள் குறித்து நிகழ்த்தபட்ட ஆய்வுகள் கூறூவது வைட்டமின் ஏ, டி3, ஈ ஆகியவை தோலுக்கு மிக முக்கியமானவை என.

ஆக துவக்க கட்டத்தில் நாம் முயலவேண்டியது

அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது

இம்யூன் சிஸ்டத்தை குணபடுத்துவது

எடையை கட்டுபாட்டில் வைப்பது

ஆக அனைத்து குப்பை உணவுகளும் முதலில் தவிர்க்கபடவேண்டும். வீட்டில் சமைக்காத எந்த உணவுப்பொருளும் பயன்படுத்த வேண்டாம். கேக், இனிப்பு, முறுக்கு, டீ, காபி அனைத்தும் நிறுத்தவேண்டும். வீட்டில் செய்ததாக இருந்தாலும்.

கோதுமை, மைதா பக்கம் அறவே போக கூடாது. கம்பு, சோளம் எல்லாம் தவிர்க்கவேண்டும்.

தவிர்க்கவேண்டிய காய்கறிகள்:

தக்காளி, கிழங்குவகைகள், கத்திரிக்காய், அனைத்து மசாலாபொருட்கள், கடுகு, மிளகு, மிளகாய்..

எந்த ஆயிலும் வேண்டாம். செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெய், செக்கில் ஆட்டிய ஆலிவ் ஆயில் மட்டுமே பயன்படுத்தவேண்டும். விதைகள் இதற்கு அலர்ஜி ஆனவை என்பதால் விதைமூலம் வரும் எந்த ஆயிலும் வேண்டாம். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் கிடைப்பது சிரமம் தான். ஆனால் என்ன செய்ய? கிடைக்கவே இல்லை என்றால் நெய் மட்டும் பயன்படுத்தவும். பால் பொருட்கள் தவிர்க்கவும்.

விதையில் இருந்து கிடைக்கும் எதுவும் வேண்டாம் (வெந்தயம், பாதாம், நிலகடலை, எள், கடுகு..எக்ஸட்ரா)

பீன்ஸ், அவரை, சென்னா, பருப்பு பக்கமே போகவேண்டாம்.

அப்புறம் என்னதான் சாப்பிடுவது?

தினம் 1/2 மூடி தேங்காய்
காய்கறி சூப்/பொறியல் (மேலே எழுதின காய்கறிகளை தவிர்க்கவும்)
அவகாடோ பழம்
மீன் (பண்ணை மீன் தவிர்க்கவும். ஏரி,கடல் மீன்)
கோழி
புல்லுணவு மாமிசம் (ஆடு, எக்ஸ்ட்ரா..)
தினம் 200 கிராம் கீரை
நாட்டுகோழி முட்டையின்  ஆம்லட்

கால்ஷியம் மட்டும் பிரச்சனை ஆகும். மத்தி/ நெத்திலி மீனை சிறு எலும்புகளுடன் கடித்து உண்டால் கால்ஷியம் பிரச்சனை தீரும்.

மதியம் 11 முதல் 1 மணிவரையில் தலைக்கு தொப்பி அணிந்து வெயிலில் அரைமணிநேரம் நிறக்வும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது நிற்கவும். 1/2 டிரவுசர், கை வைக்காத பனியன் அணிந்தால் சிறப்பு. இது வைட்டமின் டி3 கிடைக்க உதவும்.

வாரம் ஒரு முறை கட்டாயம் ஆட்டு ஈரல் உண்ணவேண்டும்.

முதலில் ஒரு வாரம் இதை முயலவும். இது சிரமமான டயட் என்பதை சொல்லவேண்டியது இல்லை. உடனே குணம் ஆகும் என எதிர்பார்க்க முடியாது. முதல் வாரத்தில் டயட்டுக்கு உடல் எப்படி அட்ஜஸ்ட் ஆகிறது என்பதை பார்ப்போம். அதன்பின் பிரஷர், எடை இறங்க, இறங்க சொரொயாசிஸும் கட்டுபாட்டில் வரும் .


Neander Selvan

No comments: