Friday, November 4, 2016

ஆதிமனிதனுக்கு எப்படி ப்ரொபயாடிக் பாக்டிரியா கிடைத்தது ?

ஆதிமனிதனுக்கு எப்படி ப்ரொபயாடிக் பாக்டிரியா கிடைத்தது என ஒரு கேள்வி.
ப்ரொபயாடிக் பாக்ட்ரீயா நமக்கு கிடைக்கும் முதல் இடல் தாயின் பிறப்புறுப்பு..ஆம் நார்மல் டெலிவரியில் குழந்தை பிறக்கையில் தாயின் பிறப்புறுப்பில் குழந்தையின் தோல் படுகையில் தோல்மூலமாக தான் நமக்கு தாயின் அன்புப்பரிசாக ப்ரொபயாடிக் பாக்டிரியா கிடைக்கிறது.
சிசேரியன் குழந்தைகளுக்கு?--அவர்களுக்கு இந்த பாக்கியம் இல்லை. அதனால் பிறக்கையிலேயே அவர்கள் பெரும்குடலில் பாக்ட்ரியா காலனி இல்லாத குறைபாட்டுடன்
பிறக்கிறார்கள்.
ப்ரொபயாடிக் பாக்டிரியா என்பது நம் உடலில் உள்ள செல்களில் 90%. இது உடலின் இரண்டாம் மூளை என சொல்லகூடிய அளவு மிக,மிக முக்கியமான விசயம். பாக்டிரியா காலனியின் முக்கியத்துவம் இன்னமும் நமக்கு சரியாக புரிவதில்லை...நாம் அன்ராடம் பயன்படுத்தும் பல உணவுகள் பாக்டிரியா காலனியை அழிக்கும் தன்மை கொண்டவை. காய்ச்சல் வந்து ஆண்டிபயாடிக்குகள் எடுத்தால் அவ்வளவுதான்.. அனைத்து பாக்டிரியாவும் காலி.
நார்மல் டெலிவரியில் பிறந்து, தாய்ப்பால் அருந்தி வளர்ந்து, ஆயுள் முழுக்க ஆண்டிபயாடிக்குகள் எடுக்காமல், குப்பை உனவையே தொடாமல் இருந்த ஆதிமனிதன் நம்மை விட அதீத சிறப்பான ப்ரொபயாடிக் காலனியுடன் இருந்ததில் வியப்பில்லை அல்லவா?
அவனது உணவில் ப்ரொபயாடிக் எப்படி கிடைத்தது என்பதை இப்போது வெளிவரும் பல ஆய்வுகல் ஆராய்கின்றன.
எஸ்கிமோக்களின் உணவை ஆராயும் விஞ்ஞானிகள் எஸ்கிமோக்கள் கெட்டுபோன மான் இறைச்சி மற்றும் சீல் இரைச்சியை உண்பதை கண்டார்கள்..குறிப்பாக நாள்பட்ட மான் ஈரல் மற்றும் இதயம்...ஏன் இப்படி என பார்த்தால் நாள்பட்ட இறைச்சி கிழவர்களுக்கு கூட வயக்ரா எஃபெக்டை கொடுக்கிறதாம். அதிலும் மிக இயற்கையான சூழலில் கிடக்கும் அவ்விறைச்சி கெட்டுபோயிருந்தாலும் அதில் உள்ள ப்ரொபயாடிக் பாக்டிரியாக்களின் தரம் அளவற்ற சிறப்புடையதாம்.
அதனால் இவ்வகை நாள்பட்ட பச்சை இறைச்சிக்கு "ஹை மீட்" என பெயர் சூட்டியுள்ளனர்.
"ஹை மீட்" நாம் யாரும் உண்ணாத உணவு....அதை உண்ண சொல்லியும் நான் வலியுறுத்தவில்லை :-) நானும் அதை தொடபோவதில்லை. ஏனெனில் அதில் நிறைய ரிஸ்க்குகள் உள்ளன. அதை உண்ணும் ஆதிகுடிகள் பலருமே சிலசமயம் அதனால் நோய்வாய்ப்பட்டு பிழைத்து எழுவார்கள்....ஆனால் இன்றும் அது பல பழங்குடியினரால் தம் மரபுசார் விஞ்ஞானத்தில் மருந்தாக பயன்படுகிறது என்பது ஒரு விந்தையான செய்தி.
சென்ற ஆண்டு வெளியான ஜர்னல் ஆஃப் காஸ்ட்ரோஇன்டஸ்ட்ரினாலஜி இதழில் இது குறித்த ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது
61 வயதான மூதாட்டி ஒருவருக்கு தீராத வயிற்றுப்போக்கு...வயிற்றில் போயே 21 கிலோ இளைத்துவிட்டார். என்ன செய்தும் குணமாகவில்லை,. இறுதி முயர்சியாக "ஹை மீட்" வழங்கபட்டது..மூன்று நாட்களில் அவர் குணமடைந்தார். அவரது வயிற்றில் மிகப்புதிய பாக்ட்ரியா காலனி ஒன்று உருவாகி இருந்ததும் கண்டறியப்பட்டது
இன்னொரு ஆய்வில் எலிகளுக்கு ஆண்டிபயாடிக் மருந்து கொடுத்து பாக்டிரியா காலனியை அகற்றினார்கள். அதன்பின் அவற்றை இருபிரிவாக பிரித்தார்கள். ஆரோக்கியமான எலிகளின் பாக்ட்ரியா ஒரு பிரிவுக்கு கொடுக்கபட்டது. குண்டான எலிகளின் பாக்ட்ரியா இன்னொரு பிரிவுக்கு கொடுக்கபட்டது...அதன்பின் ஒரேவகை உணவு வழங்கபடபின்னும் ஒரே அளவு கலோரிகள் இருந்தும், ஆரோக்கியமான பாக்ட்ரியா உள்ள எலிகள் ஆரோக்கியமாக இருந்தன, குன்டான எலிகளின் பாக்ட்ரீயா செலுத்தபட்ட எலிகள் குன்டாகின.
ஆக நம் பாக்ட்ரீயா காலனி மேம்பட நாம் செய்யவேண்டியது
1) குப்பை உணவுகளை தவிர்த்தல்
2) நார்மல் டெலிவரி/தாய்ப்பால்
3) ஆன்டிபயாடிக்குகளை தவிர்த்தல் (காய்ச்சல் வராமல் தடுத்துகொள்ளுதல்.அதுக்குன்னு நிமோனியா வந்தால் எடுக்காமல் இருக்ககூடாது :-) ஆதிமனித காலத்தில் ஆன்டிபயாடிக்குகள் இல்லாததால் நிமோனியா வந்தால் மரணம்தான் என்பதையும் நினைவில் கொள்ளவேன்டும் :-)
4) கிம்சி,கெபிர்,ப்ரொபயாடிக் ஊறுகாய், கெபிர் மாதிரி ப்ரொபயாடிக்ஸ் நிரம்பிய உனவுகளை எடுக்கவேன்டும்.
இதை செய்தாலே போதும்...ஆதிமனிதன் அளவுக்கு நம் கட் காலனி மேம்படாது என்றாலும் இப்போது இருப்பதை விட சிறப்பாக அமையும்.
Post a Comment