Friday, November 4, 2016

பல்லுக்கு பாதகமான உணவுகள்




1. ஐஸ்கட்டி...வெறும் நீர் மட்டுமே உள்ள சாதா ஐஸ்கட்டியானாலும் சரி கட, முடா என பல்லில் வைத்து கடித்து சாப்பிடுவதால் பல்லில் உள்ள எனாமல் பாதிப்படைகிறது. கூட சுகர், சாயம் எல்லாம் இருந்தால் இன்னும் சுத்தம்
2. உலர் பழங்கள்: பேரிச்சை, திராச்சை முதலான உலர்பழங்களை உண்கையில் அதில் ஏராளமான சுகர் உள்ளது. இயற்கையான பழங்களை உண்கையில் அதில் உள்ள நீரும் இதில் கிடையாது என்பதால் பழசர்க்கரை பல்லில் படிந்து அசிடிட்டியை உருவாக்கும் பாக்டிரியாவை பல்லில் உருவாக்கி பல்லை கெடுத்துவிடுகிறது
3. பிரெட்/தோசை/பூரி/சப்பாத்தி முதலானவை.....இவை முழுக்க ஸ்டார்ச் என்பதால் நம் எச்சில் அதை உடைத்து வாயிலேயே அதை சுகராக மாற்றி பேஸ்ட் மாதிரி பல்லில் படிய வைக்கிறது. பாக்டிரியாவுக்கு கொண்டாட்டமோ, கொண்டாட்டம் தான்
4. மது..மது அருந்துவதால் வாயில் எச்சில் ஊறுவது குறைகிறது. எச்சில் ஊறுவதுதான் ஜீரணத்துக்கும் நல்லது. எச்சில் ஊறுவது குறைந்தால் ஏராளமான பல் வியாதிகள் வரும்
5. கார்ப்பனேட்டட் பானங்கள்: கோக்/பெப்ஸி முதலானவை பற்களை சர்க்கரையால் குளிப்பாட்டுகின்றன. பெப்ஸி/கோக் அடிக்கடி குடித்தால் உங்கள் வாயே பாக்டிரியாக்களின் நிரந்தர வாசஸ்தலமாக மாறிவிடும். சுகர் இல்லாத டயட் கோக் குடித்தாலும் அதில் உள்ள ஆசிட் உங்கள் பல் எனாமலை பதம் பார்த்துவிடும்.
6. சாக்லட்/ இனிப்பு முதலானவை..இதற்கு விளக்கமே வேண்டியதில்லை
7. வினிகர்: வினிகர் உடலுக்கு நல்லதெனினும் வினிகர் முழுக்க அசிடிட்டி அதிகம் என்பதை நினைவில் கொள்க. வினிகர் நேரடியாக பல்லில் பட்டால் பல் எனாமல் கரைந்துவிடும். அதனால் நீரில் கரைத்து பருகி உடனே வாயை கொப்புளிக்க வேண்டும்

-  Neander Selvan 

No comments: