Saturday, November 26, 2016

மஞ்சள் காமாலை மற்றும் பேலியோ உணவுமுறை




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry)  SRI BALAJI CLINIC, Eachanari, Coimbatore-21
மஞ்சள் காமாலையில் ஒரு வகையான hepatitis B ஒரு ஆபத்தான நோயாகும். வைரஸ் உள்ள ரத்தத்தை ஏற்றுவதன் மூலமும், உடலுறவாலும், போதை ஊசிகளை பரிமாறிக் கொள்வதாலும் இது வரும். இந்த வைரஸ் ஈரலை அழித்து கேன்சர் வரவழைக்கும். இது கண்டுபிடிக்கப்பட்டால் உடனே மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுக்கவும். இந்த வியாதி காமன் மேன் டயட் அல்லது பேலியோ போன்ற எந்த டயட்டாலும் வருவதில்லை. இனி விவாத்திற்க்கு செல்வோம்.

டாக்டர் கருணாநிதி: Hepatitis B உள்ளவர்கள் பேலியோ  உணவுமுறை எடுக்கக் கூடாது.
எங்கள் பதில்: ஆமாம். அவர் சொன்னது சரியாக இருக்கலாம். எலிகளில் ஆராய்ந்து பார்த்து கரெக்ட் என சொல்லியுள்ளனர்.
ஏன் இதைப் பற்றி யாருமே இந்தக் குழுமத்தில் இதுவரை எங்களுக்கு சொல்லவில்லை
எங்கள் வாதம் : ஏன் உங்களுக்கு சூரியகாந்தி எண்ணையும் அரிசியும் கெடுதல் என எங்களைத் தவிர யாருமே சொல்லவில்லை? ஏனென்றால் அவர்களுக்கு அது கெடுதல் எனத் தெரியாது. மருத்துவ விஞ்ஜானம் முன்னேற முன்னேற புதிய தகவல்கள் வருகின்றன. அப்படிப்பட்ட புதிய தகவல் தான் பேலியோ. அது இன்று உங்கள் கையில். யாருக்கெல்லாம் பேலியோ கொடுக்கக் கூடாது என்ற சிறிய தகவல்களே கைவசம் உள்ளன. அதை இந்த கட்டுரையின் முடிவில் தருகிறேன். Hepatitis B எனப்படும் மஞ்சள் காமாலைக்கு பேலியோ தரக்கூடாது என்பது இப்போது வந்திருக்கும் (விவாதத்திற்குரிய) கருத்து.

உலகளவில் உள்ள பல பேலியோ குழுமங்களில் இன்னமும் இந்த வைரஸ் உள்ளவர்களுக்கு பேலியோ  உணவுமுறை தருகிறார்கள். ஏனென்றால் இன்னமும் மனிதர்களில் HBV இன்பெக்ஷன் உள்ளவர்களுக்கு பேலியோ எடுத்தால் கெடுதல் தானா எனத் தெரியாது. இனி hepatitis B உள்ள அனைவருக்கும் நமது தளத்தில் பேலியோ அறிவுறுத்தப் பட மாட்டாது என அறிவிக்கிறோம். பேலியொவில் விரதம் முன்னெடுக்கப்படுவதால், பசி இல்லாமை இருப்பதால், உணவு குறைவாக எடுக்கும்பொழுது இதனால் பாதிப்பு வரக்கூடாது என்ற முன்னெச்சிரிக்கையில் இதைக் சொல்கிறோம். இனி புதிதாய் வருபவர்கள் HBSAg டெஸ்ட் எடுத்த பின் தான் நம்மிடமிருந்து அட்வைஸ் வரும்.
இப்போது பேலியோ எடுக்கும் அனைவரும் இந்த டெஸ்ட் எடுக்குமாறு பரிந்துரைக்கிறோம். நெகடிவ் என்றால் நீங்கள் பேலியோவை தொடர்ந்து பின்பற்றலாம். உடனே HBV தடுப்பூசிகள் போடவும். பாசிடிவ் என்றால், பேலியோவை நிறுத்தி மருத்துவரிடம் சென்று வைத்தியம் செய்து குணமான பின் பேலியோவை தொடரலாம்.
என்னடா இது வம்புல மாட்டி விட்டுட்டாங்க. அப்ப பேலியோவே தவறா என சந்தேகம் வரும். ஐயா, Hepatitis B வியாதி உள்ளவரும் அது இல்லாத நார்மல் ஆட்களும் ஒன்றல்ல. அந்த இன்பெக்ஷன் இருப்பவர் தான் இயற்கை உணவான பேலியோ எடுக்கக் கூடாதே தவிர உங்களைப் போல் நார்மலானவர்களுக்கு பேலியோ போன்ற இயற்கை உணவுகளே சிரஞ்சீவிக்கான சாவி.
சார் எனக்கு ஆறாங்கிளாஸ் படிக்கும் போது மஞ்சள் காமாலை வந்துது. நாட்டு மருந்து சாப்பிடவுடன் சரியாச்சு. நான் பேலியோ எடுக்கலாமா?
 ஒரு வாரம் மட்டுமே வரும் மஞ்சள் காமாலை, அதில் 99% hepatitis A ஆகும். அது ஒன்றும் செய்யாது. அவர்கள் தாராளமாக பேலியோ கடைப்பிடிக்கலாம்.
நகைமுரண்: பேலியோ Hepatitis B உள்ளவர்களுக்கு பிரச்சினையே தவிர, இன்று உலகெங்கும் மிக வேகமாக பரவி வரும் மிக ஆபத்தான Hepatitis Cக்கு மிகச்சிறந்த மருந்தாகும். . 

மஞ்சள் காமாலை மற்றும் பேலியோ 
ஒரு ஜீனை பற்றி ஒருவர் metaanalysis (பல ஆராய்ச்சி பேப்பர்களை பார்த்து ஒரு பொதுக் கருத்துக்கு வருவது) செய்கிறார் என்றால், அந்த ஜீனை பற்றி பல தகவல்கள் வருகின்றன. இந்த ஜீன் இதை செய்கிறது என்று நாலு ஆதாரங்கள் கிடைக்கிறது. இல்லையில்லை இந்த ஜீன் அந்த வேலைக்கு எதிர் வினை புரிகிறது என நாலு ஆதாரங்கள். அதோடு இது வேறு பல வேலைகளும் செய்கிறது என நாலு ஆதாரங்கள். இவற்றில் எதை எடுப்பது விடுவது என தெரிவதில்லை. Vit D வெறும் எலும்புக்கு என எவ்வளவு காலமாக மருத்துவ உலகம் நம்பி வந்தது. அதே போல் Zinc க்கும். இரண்டுமே மாஸ்டர் ஹார்மோன்கள் என உலகம் இப்போது கொண்டாடுகிறது.
நம் செல்களில் 23,000 ஜீன்கள் இருப்பதே நமக்கு 2001ல் தான் தெரியும். ஒவ்வொரு ஜீனுக்கும் என்ன வேலை என ஒவ்வொன்றாக கண்டுபிடித்துக் கொண்டிருக்கிரார்கள். பிறக்கும் போது இந்த ஜீன் சரியில்லை என்றால் இன்னின்ன வியாதி வரும் என்பது பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து முக்கால்வாசி வியாதிகளை கண்டுபிடித்துருக்கிறார்கள். ஆனால் பிறக்கும் போது வரும் அல்லது பிறந்து நிர்ணயிக்கப் பட்ட சில ஆண்டுகளில் வரும் வியாதிகளைப் பற்றி நாம் பேசப் போவதில்லை.
சில சமயம் ஜீன் மாறி விடும். polymorphism என்று சொல்வார்கள். இயற்கையாகவே ஒருவருக்கு இருக்கும் ஒரு ஜீன் போல அனைவருக்கும் இருக்கும் என்று சொல்லி விட முடியாது. சிலருக்கு கொஞ்சம் மாறுதல் இருக்கும், ஆனால் ஒன்றும் செய்யாது. ஆனால் பிறந்த பின் நிகழும் பல வகை பாலிமார்பிசங்கள் ஆபத்தானவை. பல பாலிமார்பிசங்கள் நன்றாக வேலை செய்யும் ஜீனை முடக்கிப் போட்டு விடும். பாலிமார்பிசம் எதனால் நடக்கிறது. உணவு, பொல்லுஷன், மற்ற வியாதிகள், புகையிலை மற்றும் பல.

ஜீன் எக்ஸ்பிரஷன் இன்னொரு பேசு பொருள். அப்படி என்றால் என்ன? 
உங்களுக்கு ஐம்பது கோடி பணம் இருக்கிறது. ஆனால் ஒரு வேட்டி சட்டையுடன் சிம்பிளாக சுற்றுகிரீர்கள். நீங்கள் அவ்வளவு பெரிய பணக்காரர் என்பதை வெளிக்காட்டுவதில்லை. ஆனால் எதிர் வீட்டில் ஒருவன் ஒரு கோடி ரூபாய் வைத்துக் கொண்டு இல்லாத ஆட்டம் எல்லாம் ஆடி, உங்களை கடுப்பாக்கினால், அடுத்த நாளே உங்கள் வீட்டின் முன் ஒரு ஜாகுவார் காரை வாங்கி நிறுத்தி உங்களை எக்ஸ்பிரஸ் செய்வீர்கள். அதாவது தகுந்த உசுப்பேற்றுருதல் இருந்தால் தான் பல ஜீன்கள் வேலையே செய்ய ஆரம்பிக்கும். அதில் நல்ல ஜீனும் உண்டு. கேன்சர் செய்யும் ஜீனும் உண்டு. என்ன வகையான உசுப்பேற்றல் என்பதை பொறுத்து இந்த இரண்டு வகை ஜீன்களில் ஒன்று தூக்கத்திலிருந்து எழுந்து வினை செய்யும். பல வகை தூண்டுதல்கள் இருக்கின்றன. பல வகை ஜீன்கள் அவற்றால் விழிக்கின்றன. இன்னும் பல ஜீன்களின் தூண்டும் காரணி யார் என அறியப்படவில்லை.
டைப் 1 டயாபடிசை விட்டுவிட்டு இரண்டாம் டயாபெடிசுக்கு வருவோம். இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் ஏன் ஆரம்பிக்கிறது. முழு கதை இதுவரை யாருக்கும் தெரியாது. பல ஜீன்களின் சித்து விளையாட்டுகள் ஆரம்பிக்கின்றன. குண்டாக இருப்பதாலோ, மாறுபட்ட கொலஸ்டிரால் அளவாலோ, இன்பலமேஷனாலோ, இவை எதுவுமே இல்லாமலோ, தெரியாத காரனங்களாலோ பல ஜீன்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட ஜீன் பாதிக்கப் படுகிறது. பாலிமார்பிசமும் நிகழலாம், அல்லது எக்ஸ்பிரஷனிலும் மாற்றம் நிகழலாம். சிலருக்கு லெப்டின் ஜீன், சிலருக்கு அடிப்போநெக்டின், சிலருக்கு PPAR ஜீன் அல்லது எல்லாம் சேர்ந்து கிண்டிய அல்வா அல்லது இதுவரை தெரியாத புது மெக்கானிசம் உள்ள ஜீன் என சர்க்கரை வியாதியில் ஒன்று அல்லது அதற்கு மேம்பட்ட ஜீன்களின் கோளாறு உள்ளது. பலர் இந்த ஜீன் கோளாறால் தான் சுகர் வருகிறது என்கிறார்கள். ஆனால் கார்ப்  உணவுமுறை  மற்றும் கெட்ட வழக்கங்களே இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் வரும் என்பது பரவலான எண்ணம். அதனால் ஜீன்கள் பாதிக்கப்பட்டு டயாபடிசாக உருவாகலாம்.

கோழியிலிருந்து முட்டையா இல்லை முட்டையிலிருந்து கோழியா என்பது இப்போதைய கேள்வி அல்ல. இப்படி மாறுபட்ட ஜீன்கள் இருப்போருக்கு என்னென்ன உப பிரச்சினைகள் வரும் என்பதே முக்கியம். அதில் நமது டாக்டர் கருணாநிதி அவர்கள் கொடுத்த PGC-1 alpha என்ற முக்கியமான ஜீன் பற்றிய தகவல் மற்றும் hepatitis B க்கும் பேலியோவிற்கும் உள்ள நெருடலான தொடர்பு பற்றிப் பார்ப்போம்.

PGC-1α ஜீன் புரதத்தின் வேலைகள்:

1. இந்தப் புரதம் கொழுப்பை உடைத்து சக்தியை உருவாக்குவதில் ஒரு பங்கு வகிக்கிறது. எலிகளுக்கு இந்த ஜீனை பாதிக்க வைத்தால், எலிகள் அதிக வேலை செய்ய முடியாமல் களைப்பாகி விடுகின்றன.
2. எலி வளரும் போது இந்த ஜீன் மிக அதிகமாக இதயத்தில் தூண்டப் படுகிறது. இதனால் வளரும் உடலுக்கு ரத்தம் செலுத்த இதயத்திற்கு மிக அதிக சக்தியை கொழுப்பை உடைத்து உருவாக்க இந்தப் புரதம் உதவுகிறது
3. மற்றும் கொழுப்பை உடைத்து இயற்கையான உடற்சூட்டை ஏற்படுத்த இந்தப் புரதம் தூண்டுகோலாய் இருக்கிறது.
4. இன்சுலினுக்கு எதிரான குளுக்ககான் போல் இது வேலை செய்கிறது. பாஸ்டிங் நேரத்தில் மற்ற பொருட்களிலிருந்து குளுக்கோஸ் தயாரிக்கவும், கொழுப்பை எரிக்கவும் தூண்டுகிறது.
5. இன்னும் சில வேலைகள்.

Hepatitis B வைரசின் வேலைகள்:

1. மற்ற வைரஸ்கள் போல் வந்தோமா செல்லை அழிச்சோமா போனோமா என இல்லாமல், இந்த வைரஸ் நம் மெட்டபாலிச ஜீன்களுடன் ஒன்றி உறவாடுகிறது.
2. பசி நேரத்தில் குளுக்கோஸ் கம்மியாகி, குளுக்ககான் தயாரிப்பு தூண்டப்படும். அதே நேரத்தில் PGC-1 alpha ஜீனும் அதிகமாக எக்ஸ்பிரஸ் செய்யப்படும். பசி நேரத்தில் சுரக்கப்படும் PGC-1 alpha, Hepatitis B வைரசை பல்கி பெருக வைக்கிறது. சாப்பிடவுடன் இந்த வைரஸ் அளவு கட்டுக்குள் வந்து விடுகிறது.
3. பேலியோவில் நம் உடல் கொஞ்சம் பசி நிலை (குளுக்கோஸ் இல்லா நிலை) யில் இருப்பதால், HBவைரஸ் கொஞ்சம் அதிகமாக இருந்து லிவரை மேலும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
4. இன்னும் மனிதர்களில் இந்த ஆராய்ச்சி செய்யப்படவில்லை. animal studies, cell lines மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
5. இதைப் போன்ற வேறு வைரஸ்கள் இதுவரை இல்லை.

முடிவுரை:
சந்தேகத்திற்கான பலனை மக்களுக்கு வழங்க வேண்டி அனைவரும் பேலியோவிற்கு முன் HBsAg டெஸ்ட் செய்ய வேண்டும் (HBVக்கும் பேலியோவிற்கும் மனிதர்களில் சம்பந்தமில்லை என நிருபிக்கும் வரை). Hepatitis B இருந்தால் பேலியோ வேண்டாம். அவர்கள் hepatologistஐ பார்த்து மருந்துகள் எடுக்கலாம் (அவ்வளவு காஸ்ட்லி ஒன்றும் இல்லை. interferon costly but works quickly, lamivudine cheap but takes two years to get well). முழுமையாக வைரஸ் ஒழிந்த பின் இங்கே வரவும்.
மறுபடி முதல் paragraph: மஞ்சள் காமாலையில் ஒரு வகையான hepatitis B ஒரு ஆபத்தான நோயாகும். வைரஸ் உள்ள ரத்தத்தை ஏற்றுவதன் மூலமும், உடலுறவாலும், போதை ஊசிகளை பரிமாறிக் கொள்வதாலும் இது வரும். இந்த வைரஸ் ஈரலை அழித்து கேன்சர் வரவழைக்கும். இது கண்டுபிடிக்கப்பட்டால் உடனே மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுக்கவும். இந்த வியாதி காமன் மேன்  உணவுமுறை  அல்லது பேலியோ போன்ற எந்த  உணவுமுறை வருவதில்லை.

Monday, November 21, 2016

பேலியோவில் உடல் எடை ஏற....


முக்கிய குறிப்பு : கீழே சொல்லுவது உடல் ஏற வேண்டும் என்பவர்களுக்கு மட்டும். சர்க்கரை குறைபாடு போன்ற எவ்வித உடல் உபாதைகள் இல்லாதோருக்கு மட்டும்.



பேலியோவை பெரும்பாலும் உடல் எடை குறைக்கதான் பயன்படுத்துகிறார்கள். ஒல்லியாக உள்ளவர்கள், எடை குறைவாக உள்ளவர்கள் பேலியோவில் எடை ஏற்றவும் நல்ல வாய்ப்பு உள்ளது. உடலில் கொழுப்பு சேராமல் தசை ஏற்ற வாய்ப்பு உள்ளது.
உங்கள் எடை ஏற வேண்டுமெனில்....
1. ஜிம் செல்லுங்கள். இது மிக முக்கியம். பயிற்சிகளை முறையாக கற்றுக் கொண்டு எடை தூக்கும் பயிற்சிகளை செய்யுங்கள். Squats போன்ற கால்களுக்கான பயிற்சி கண்டிப்பாக செய்யுங்கள். உங்கள் தசைகளுக்கு பயிற்சி கொடுக்கும் போது அவை காயப்பட்டு அவை மேன்மேலும் வலுவுடன் வளர ஆரம்பிக்கும். No Pain. No Gain.
2. நடை பயிற்சி, ஓட்டம் போன்றவை வாரம் ஒரு முறைக்கு மேல் வேண்டாம்.
3. ஒரு நாளைக்கு 250 மிலி முழு கொழுப்பு பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
4. 200 மிலி தயிர் தினசரி எடுத்துக் கொள்ளுங்கள்.
5. ஒரு வேளை கார்ப் உணவு எடுக்க வேண்டும். ஒர்க் அவுட் முடித்த பிறகுதான் ஒரு மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் கார்ப் உணவுகள் உருளைக் கிழங்கு 200 கிராம் அல்லது சக்கரை வள்ளிக் கிழங்கு 200 கிராம் அல்லது 200 கிராம் ஆப்பிள் அல்லது 200கி வாழைப்பழம்.
6. மற்ற வேளைகளில் புரதம் + கொழுப்பு அதிகம் நிறைந்த முட்டை, கோழி, மீன், சிகப்பு இறைச்சி போன்ற உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
7. இரவு உறங்கும் முன்பு 20 பாதாம் சாப்பிடுங்கள்.
மேலே உள்ள அனைத்தையும் செய்யுங்கள். எதையும் ஸ்கிப் செய்ய வேண்டாம். ஒரு மாத முடிவில் உங்கள் எடை அதிகரித்து இருக்கும்.
இவ்வாறு செய்யும் போது உடலில் அதிகம் கொழுப்பு சேராமல் தசை அதிகம் ஏறும். உடலில் கொழுப்பு அதிகம் சேர்வதாக தெரிந்தால் பாலை நிறுத்தி விடுங்கள்.

- Kathiran

Thursday, November 17, 2016

மைக்ரவேவ் பயன்படுத்துவது கெடுதலானதா ?


எந்த உணவையும் எத்தனை அதிகமுறை மறுசூடு செய்கிறோமோ அந்த அளவு அதன் வைட்டமின், ஊட்டசத்துக்களில் இழப்பு ஏற்படும். சமைத்தவுடன் சூடு ஆறாமல் உண்பதே சிறந்தது. ஸ்டேக் தவிர. ஸ்டேக்கை சமைத்து ஆறவிட்டு உண்டால் தான் ஜூஸியாக இருக்கும்.
ஆக நீங்கள் மைக்ரவேவை மறுசூட்டுக்கு பயன்படுத்துகையில் வைட்டமின் இழப்பு ஏற்படும். ஆனால் அதனால் உடலுக்கு வைட்டம்ன் இழப்பு தவிர்த்த கெடுதல் இல்லை. குறிப்பாக அதனால் கான்சர் வரும் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே.
மற்றபடி மைக்ரவேவில் பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்து சூடுபண்ணுவதும் பிளாஸ்டிக் மூடி யை பயன்படுத்தி சூடு பன்ணுவதும் தவிர்க்கப்டவேண்டும், மைக்ரவேவபிள் பிளாஸ்டிக் என தனியாக இருக்கும். அதை மட்டுமே பயன்படுத்தலாம். அப்படி அல்லாத தரகுறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் பிளாஸ்டிக் உணவுடன் சேர்ந்து நம் வயிற்றுக்குள் போய்விடும்.

Neander Selvan

டயபடிஸின் கதை



3500 ஆண்டுகளுக்கு முன்பு முதல்முதலாக டயபடிஸ் என ஒரு வியாதி இருப்பது அன்றைய எகிப்தில் கண்டறியபடுகிறது. அன்று டயாப்டிஸ் என்பது அதிக சிறுநீர் சுரப்பதே என நம்பினார்கள். அதனால் அதற்கு மருந்தாக ஒரு குடுவையில் நீர், பேரிச்சை, பியர், பால், சில மூலிகைகளை கலந்து குடிக்க கொடுத்தார்கள். அப்போதும் குணமாகவில்லையெனில் (எப்படி குணமாகும்?) அடுத்த கட்ட சிகிச்சையாக படுக்க வைத்து பின்புறத்தில் ஆலிவ் ஆயில், தேன், பியர், உப்பு மற்றும் சில பழங்களின் விதைகளை உள்ளே விடுவார்கள். நோயாளி வலியில் துடிதுடித்து போய்விடுவார்
முதல் முதலாக கிரேக்க மருத்துவர் ஹிப்பாக்ரடிஸ் தான் டயபடிஸ் இருந்தால் குறைவாக உண்னவேண்டும், உடல்பயிற்சி செய்யவேண்டும் என கூறினார். ஆனால் அவரும் டயபடிஸ் என்பது உடல் தசைகள் சிறுநீராக மாறி கரையும் வியாதி என நம்பிக்கொண்டிருந்தார். இந்த சூழலில் இந்தியாவில் ஆயுர்வேதத்தில் டயாப்டிஸின் பல புதிர்கள் விடுவிக்கபட்டன. டயபடிஸ் வந்தவர்கள் சிறுநீரை எறும்புகள் சூழ்வதை கண்ட சுஷுர்தரும், சருகரும் டயபடிக்குகளின் சிறுநீரை குடித்து பார்த்தார்கள். டென்சனாக வேண்டாம்..அன்றைய காலகட்டத்தில் இது ஒரு புரட்சி. அதன்பின் 19ம் நூற்ரான்டுவரை ஒருவருக்கு டயபடிஸ் இருக்கா இல்லையா என்பதை கண்டறிய இதுவே வழியாக இருந்தது.
சிறுநீர் இனிப்பாக இருப்பதை கண்ட அவர்கள் டயபடிஸுக்கு மதுமேகம் என பெயரிட்டார்கள். மது என்பது தேனை குறிக்கும், சிறுநீர் தேன் போல இனிப்பதால் இப்பெயர். அந்த பெயரே இன்றளவும் நீடித்து டயபடிஸ் மெடில்லஸ் என இவ்வியாதி அழைக்கபட காரணம், மெடிலஸ் என்றால் தேன் எனப்பொருள்
தவிரவும் சுஷுர்தரும், சருகரும் தான் முதல்முதலாக டைப் 1 டயபடிச், டைப் 2 டயபடிஸ் என இருவகை வியாதிகள் இருப்பதை கண்டறிகிறார்கள். அதாவது குண்டாக இருப்பவர்களுக்கு வரும் டயபடிஸ் டைப் 2 டயபடிஸ், ஒல்லியாக இருப்பவர்களுக்கு வரும் டயபடிஸ் டைப் 1 டயபடிஸ், டைப் 1 டயபடிஸ் வந்தவர்கள் நீண்டநாள் உயிர்வாழ மாட்டார்கள் என்பதை கண்டறிந்தார்கள். மதுமேகம் பெரும்பாலும் குண்டானவர்களுக்கே வருவதை கண்ட சுஷ்ருதர் சுஷ்ருத சம்ஹிதை எனும் நூலில் இதற்கு தீர்வாக உடல்பயிற்சியை பரிந்துரைத்தார். சில சூரணங்களும் பரிந்துரைக்கபட்டன. பிளட் பிரசரையும் சுஷ்ருதர் அறிந்திருந்ததாக தெரிகிறது. வாதரக்தம் எனும் பெயரில் அவர் குறிப்பிட்டிருந்த நோய் இன்றைய பிரசருக்கு ஒப்பானதாக தெரிகிறது
அதன்பின் அராபியர் மூலமாக இந்த நூல்களும், விஞ்ஞானமும் ஐரோப்பாவுக்கு சென்றன. டயபடிஸுக்கு வெந்தயத்தை கரைத்து குடிக்கும் வைத்தியம் 10ம் நூற்ரான்டு அரபு மருத்துவ நூல்களில் காணபடுகிறது.
16ம் நூற்ராண்டில் தான் முதல் முதலாக டயபடிக்குகளின் யூரினில் இருப்பது சர்க்கரை என்பது கண்டறியபட்டு, அது கிட்னியில் இருந்து வருவதல்ல, ரத்தத்தில் இருந்து வருவது என கண்டறியபடுகிறது
17ம் நூற்ராண்டில் நவீன உலகின் முதல் டயபடிக் மருத்துவ நூல் எழுதபடுகிறது. டயாப்டிஸ் வந்த இருவருக்கு பரிந்துரைக்கபட்ட உணவு:
காலை: முட்டை, பிரெட் பட்டர்
மதியம்: ரத்த கட்டிகள் மற்றும் பன்றிக்கொழுப்பு
இரவு உணவு: கெட்டுபோன மாமிசம், பிராந்தி
இந்த உணவை உண்டு தினமும் தம் சிறுநீரை அருந்தி அதில் இருக்கும் இனிப்பின் அளவை கண்டறிய அவர்கள் பணிக்கபடுகிறார்கள். வியப்பளிக்கும் வகையில் அவர்களது சிறுநீரின் இனிப்புசுவை இறங்கிகொண்டே செல்கிறது. அதன்பின் ரொட்டியும், உருளைகிழங்கும் உணவில் சேர்க்கபடுகிறது. உடனடியாக மூன்று கிலோவுக்கு மேல் எடை ஏறி இனிப்புசுவையும் சிறுநீரில் அதிகரிக்கிறது. ஆக டயாப்டிஸ் உள்ளவர்களுக்கு பிராந்தி, இறைச்சி, முட்டை ஆகியவை பரிந்துரைக்கபடுகின்றன
1911ல் இன்சுலின் கண்டுபிடிக்கபட்டபின் டயட் மேல் மக்களுக்கு ஆர்வம் குறைந்து என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம், இன்சுலின் எடுத்துக்கொண்டால் போதும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்

 -- Neander Selvan

Saturday, November 12, 2016

சி ஆர் பி - high sensitive crp

Dr. Arunkumar, MD(Pediatrics), Erode.

Crp என்றால் என்ன?
C-Reactive Protein என்பதன் சுருக்கமே CRP.
இது எங்கிருந்து வருகிறது?
எப்போதெல்லாம் நமது உடலில் கிருமி தாக்கம் (infection) அல்லது, இன்ப்ளமேஷன் (inflammation) அதாவது உள் காயம் ஏற்படுகிறதோ அப்போது நமது கல்லீரல் மற்றும் வேறு சில செல்கள் சுரக்கும் பல acute phase reactants எனப்படும் புரதங்களில் ஒன்று தான் crp.
இதன் வேலை என்ன?
உடலில் எப்போது என்ன டேமேஜ் நடந்தாலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் செயல் கூறுகளில் வரும் இடை தரகர் தான் இந்த crp. இது அதிகமாக இரத்தத்தில் இருந்தால், உடலில் ஏதோ கிருமி தாக்கமோ அல்லது உள்காயமோ ஏற்பட்டிருக்கிறது என்று முடிவு செய்து கொள்ளலாம்.
நார்மலாக இது எவ்வளவு இருக்க வேண்டும்?
3 mg/dl எனும் அளவிற்கு கீழ் இருக்க வேண்டும்.
எப்பொழுது  இது அதிகமாகும்?
Crp அதிகம் ஆக பல காரணங்கள் உள்ளன.
Infection - கிருமி தாக்கம். சாதாரண சளி காய்ச்சலில் இருந்து, தொண்டை வலி, சீழ் புண், நிமோனியா என எங்கு கிருமிகள் இருந்தாலும் crp பல மடங்கு உயர்ந்திருக்கும். (கிட்டத்தட்ட 100 mg/dl மேல் உயர்ந்திருக்கும்)
Chronic inflammatory states - நீண்ட கால மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள், ருமாட்டாய்டு ஆர்த்திரைட்டிஸ், சொரியாசிஸ், போன்ற ஆட்டோ இம்மியூன் நோய்கள், இருதய வால்வு பிரச்சனைகள், முதலியன. இவற்றில் crp 10 mg/dl மேல் உயர்ந்திருக்கும்.
தீ காயம், எலும்பு முறிவு, போன்ற காயங்கள்.
மாரடைப்பு(myocardial infarction), கணைய பாதிப்பு (pancreatitis), போன்ற உள்ளுறுப்பு பாதிப்புகள்.
தசை சிதைவு.
புற்று நோய்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நோய்களிலும் crp குறைந்த பட்சம் 10 mg/dl எனும் அளவிற்கு மேல் உயர்ந்திருக்கும்.
High sensitive CRP என்றால் என்ன?
சாதாரண crp பரிசோதனையில் 6 mg எனும் அளவிற்கு கீழ் crp இருந்தால் அதை கண்டுபிடிக்க முடியாது. எனவே குறைந்த அளவு இருந்தாலும் கண்டுபிடிக்க உதவும் பரிசோதனை பெயர் தான் high sensitive crp. இது அதே crp தான். டெஸ்ட் தான் வேறு.
இது எங்கு அதிகம் ஆகும்?
மேலே கூறிய அனைத்து தொந்தரவுகளிலும் hscrp அதிகம் ஆகும்.
அத்துடன்,
புகை பிடிக்கும் பழக்கம்.
உடல் பருமன்.
மெட்டபாலிக் சின்ட்ரோம்
இருதயம் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களில் உள்காயம்.
நீரிழிவு நோய்.
இவற்றிலும் hscrp அதிகம் ஆகும்.
ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம்.
இந்த பிரச்சனைகளில் எப்போதும் hscrp 10 mg மேல் ஏறாது.
Hscrp 10 mg மேல் இருந்தாலே அவற்றிற்கு காரணம், இருதய நோயோ உடல் பருமனோ அல்ல,
மேலே கூறிய கிருமி தாக்கம், மூட்டு வலி, ஆட்டோ இம்மயூன் போன்றவைகளே.
இதை மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், ரிப்போர்ட் பார்த்து ஹார்ட் அட்டாக் தான் வரும்.
அவன் crp 3 mg மேலே இருந்தாலே high ரிஸ்க் என்று கொடுத்திருக்கிறான்.
>10 mg என்றால் கதை முடிந்தது என்று அர்த்தம் இல்லை.
வேறு என்ன காரணங்கள் என்று தேட வேண்டும்.
அல்லது சளி காய்ச்சல் போன்றவைகளால் crp அதிகம் ஆனதா என்று தெரிந்து கொள்ள hscrp பரிசோதனையை 3 வாரம் விட்டு திரும்ப எடுக்க வேண்டும்.
நம் குழு அன்பர் ஒருவரது குழந்தைக்கு சிறுநீர் infection உள்ளது என்றும் அதனால் crp அதிகம் ஆகியுள்ளது என்றும் மருத்துவர் தெரிவித்திருக்கிறார். ஆன்டிபயாடிக் மருந்து செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த அன்பர் என்னிடம் கேட்கிறார், பசு மஞ்சள் சாப்பிட்டால் crp குறைந்து விடுமா என்று!!
சரியாக புரிந்து கொள்ள வில்லை என்றால் இப்படி தான் ஆகும்.
Crp குறைய என்ன செய்ய வேண்டும்?
நல்ல உணவுமுறை. நம் பேலியோ உணவுமுறை போன்று இயற்கையை ஒன்றி அமைந்த மாவுச்சத்து கம்மி உண்ணும் நல்ல உணவுமுறை hscrp ஐ குறைக்கும்.
உடல் பருமன் குறைத்தல். அதுவும் நம் பேலியோவில் நடக்கும்.
சர்க்கரை நோய் கட்டுப்படுத்துதல். இதுவும் பேலியோவில் நடக்கும்.
புகை, மது விட்டொழிதல்.
மிதமான உடற்பயிற்சி.
பசு மஞ்சள்
கிருமி தாக்கத்தினால் crp அதிகம் ஆனால் அவற்றுக்குரிய மருந்துகள் எடுத்தால் மட்டுமே crp குறையும். நம் உணவுமுறையோ பசு மஞ்சளோ ஒன்றும் செய்யாது.
ஆட்டோ இம்மியூன் நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களில் மருந்துகளுடன் நம் உணவுமுறையும் பசு மஞ்சளும் சேரும்போது பல பயன்களை அளிக்கும்.
பசு மஞ்சளின் வேலை என்ன? ஏன் அது நம் குழுவில் பரிந்துறைக்கப்படுகிறது?
பல தாவரங்களுக்கு anti inflammatory அதாவது உள் காயத்தை குறைக்கும் தன்மை உள்ளது.
அதில் மிக முக்கியமான ஒன்று மஞ்சள். மஞ்சலிலுள்ள cucurmin எனும் மூல பொருளுக்கு, பல விதங்களில் anti inflammatory தன்மை உள்ளதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இரத்த குழாய் சம்பந்தப்பட்ட உள்காயம், ஆட்டோ இம்மியூன் நோய்கள், osteoarthritis எனும் மூட்டு வலி போன்ற பல நோய்களுக்கு மஞ்சள் தீர்வளிக்கும் என்று ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளன.

இது மட்டுமில்லாமல் பல anti oxidant தன்மைகளும் உள்ளன.
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/23013352
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16394323
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/20056736
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/19900435

Atherosclerosis எனப்படும் இரத்த குழாய் அடைப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்த வல்லது எனவும் ஆராய்ச்சிகள் உள்ளன.
எனவே தான் நம் குழுவில் crp அதிகம் இருப்பவர்களுக்கு பசு மஞ்சள் பரிந்துரைக்கப்படுகிறது.
ஏன் பேலியோ எடுக்கும்போது சிலருக்கு hscrp குறைவதில்லை அல்லது ஏறுகிறது?
மேலே கூறியுள்ளது போல பல்வேறு காரணங்களால் hscrp அதிகம் ஆகிறது. உடல் பருமன், இரத்த குழாய் உள்காயம், மெட்டபாலிக் சின்ரோம் ஆகிய காரணங்களால் hscrp அதிகம் ஆகியிருந்தால் மட்டுமே பேலியோவினால் குறையும். வேறு காரணங்கள் என்றால், தகுந்த மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
Hscrp நார்மலாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தமா?
இல்லை. Hscrp ஒரு marker. அவ்வளவே. மேகம் கறுத்து இருந்தால் மழை கட்டாயம் வரும் என அர்த்தம் இல்லை. இல்லை மேகமே இல்லை என்றாலும் மழை வராது எனவும் அர்த்தம் இல்லை. Hscrp போல் ஒவ்வொரு நோய்க்கும் நிறைய marker இருக்கும். அனைத்தையும் வைத்து பார்த்து, பொது உடல் ஆரோக்கியத்தையும் வைத்து பார்த்து மட்டுமே நோய் வரும் வாய்ப்புகளை கூற முடியும்.
சுருக்கமாக சொன்னால், hscrp என்பது தூரத்தில் ஒலிக்கும் சைரன் ஒலி போன்றது. அது போலீஸாகவும் இருக்கலாம், அம்புலன்சாகவும் இருக்கலாம், தீயணைப்பு வண்டியாகவும் இருக்கலாம், பக்கத்து வீட்டு குழந்தை விளையாடும் பொம்மையின் ஒலியாகவும் இருக்கலாம். எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் தான் உண்மை தெரியும்.
இதுவே hscrp க்கு என் கோனார் உரை.

பீட் கவாஸ் புரோபயாட்டிக் டானிக்




புரோபயாட்டிக் உணவுகளில் பிரதானமாக நாம் அறிவது கெபிர் மட்டுமே. ஒவ்வோரு நாட்டிலும் பராம்பரியமான முறையில் பல புரோபயாட்டிக் உணவுகள் உள்ளன. இனி வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம். இப்பொழுது முதலில் பீட் கவாஸ் எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
பீட் கவாஸ் எளிதாக அதிகமான பொருட்கள் இல்லாமல் தயார் செய்யலாம். இது ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக உபயோகத்தில் உள்ளது. இதில் உடலுக்கு நன்மை தரும் புரோபயாட்டிக் உருவாகி நமது ஜூரண சக்தியை மேம்படுத்துகிறது. அத்துடன் நமது சிறுநீரகங்களுக்கும், ஈரலுக்கும் ஒரு டிடாக்ஸாக அமைகின்றது. சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் இதை அருந்தி பயன்கள் பெறலாம். ஐரோப்பியா நாடுகளில் கான்சர் தெரப்பியில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. அலர்ஜிகளுக்கும், chronic fatigue எனப்படும் நாள்பட்ட சோர்வு, ரசாயண அலர்ஜிகளுக்கும் நல்ல தீர்வாக அமைகின்றது.
டால்ஸ்டாய் பீட்கவாஸை தண்ணீரைவிட சிறந்தது என்றும், எவ்வாறு ரஷ்ய போர்வீரர்கள் காலரா தோன்றிய காலத்தில் தங்களது ராணுவ குடியிருப்பிகளிலிருந்து கவாஸை கொண்டு வந்து மாஸ்கோ தெருக்களில் மக்களை எவ்வாறு தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றினார்கள் என்று அழகாக வர்ணித்திருப்பார். பீட் கவாஸ் ஆயிரம் வருடங்களாக ரஷ்யா, போலன்ட், லாட்டிவியா, லித்துவானியா, பெலாரஸ், ஜார்ஜியா, கஜக்ஸ்தான், ஆர்மேனியா மற்றும் சீனாவிலும் பிரபலமாக உள்ளது. இன்றும் தெருக்களில் ஒரு ஆரோக்கியபானமாக விற்க்கப்படுகிறது.
இதில் உண்டாகும் புரோபயாட்டிக் பாக்டீரியாக்களின் மூலம் பயன்பெற இன்றும் பழமையான முறையில் கம்பு ரொட்டிகளை சேர்த்து செய்கிறார்கள். எளிமையான முறையில் கெபிர் வே சேர்த்து செய்வதால் கம்பு ரொட்டி நமக்கு தேவையில்லை.
இவ்வாறு உண்டாக்கும் பீட்கவாஸில் வைட்டமின்கள் B-1, B-6, மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், அமினோ ஆசிட்கள், லாக்டிக் ஆசிட் மற்றும் பேன்டோதெனேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் உள்ள என்சைம்கள், நலம் தரும் பாக்டீரியாக்கள் பீட்டாசயானின் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்சிட்ட்டாக மாறி இதய நோய்களுக்கும், கான்சருக்கும் மற்றும் தொற்று நோய்களுக்கு நல்ல பயன் தருகிறது.
பீட் கவாஸை இரண்டு முறைகளில் தயாரிக்கலாம். ஒன்று கெபிர் வே (whey) அல்லது சாதரண தயிரின் வேயுடன்.
கெபிர் வே எவ்வாறு தயார் செய்வது ?
கெபிர் அதிகமாக புளித்தால் கெபிர் தயிர் மேலேயும், வே கீழேயும் தங்கிவிடும். இதனை தனியாக பிரித்து உபயோகப்படுத்தலாம். அல்லது பனீர் தயாரிக்கும் போது எவ்வாறு தயிரிலிருந்து தண்ணீரை (வே) ஒரு துணியில் கட்டி வடிக்கிறமோ அந்த முறையில் கெபிர் தயிரையும் பிரிக்கலாம்.
எவ்வாறு பீட்ரூட் கவாஸ் தயார் செய்வது ?
தேவையான பொருட்கள்:
2,3 மூன்று ஆர்கானிக் பீட்ரூட்
கெபிர் அல்லது சாதாரண தயிர் வே - கால்கப்
கல் உப்பு அல்லது இந்துப்பு - 2 டீஸ்பூன்
ஒரு மேசன் ஜார்
ஸ்பிரிங் அல்லது பில்ட்டர் தண்ணீர் (குளோரின் இல்லாத தண்ணீராகிருக்க வேண்டும்)
கெபிர் வே இல்லையென்றால் கெபிர் ஸ்ட்டார்டர் கல்சரும் பயன்படுத்தலாம்
செய்முறை:
▪️ஆர்கானிக் பீட்ரூட்டை நன்றாக கழுவி அரை/ஒரு இன்ச் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சாதாரண பீட்ரூட்டாக இருந்தால் தலைபாகத்தை சிறிது அதிகமாகவும், அடிபாகத்தை சாதரணமாகவும் வெட்டி நீக்கிவிட்டு தோலை சீவி மேற்சொன்ன அளவில் நறுக்கிக்கொள்ளவும்.
▪️நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை ஜாரில் இட்டு, கெபிர் வே அல்லது ஒரு பேக்கட் கெபிர் ஸ்டார்ட்டர் கல்ச்சரையும், உப்பையும், தண்ணீரையும் சேர்க்கவும்.
நன்றாக கலக்கி ஜாரை நன்றாக காற்று புகாதவாறு அடைத்து வைக்கவும். குறைந்தது மூன்று நாட்கள் வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை திறந்து பூஞ்சை ஏற்படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.
▪️இப்பொழுது லாக்ட்டிக் ஆசிட்டால் பெர்மன்ட் ஆகி சிறிய குமிழிகள் நிறைந்துள்ளதை பார்க்கலாம்.
▪️நான்கு நாட்கள் முதல் ஒரு வாரம் கழித்து திறந்து வேறு ஒரு கண்ணாடி பாட்டிலில் தனியாக பிரித்து ஊற்றி பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும்.
▪️தினமும் காலையும் இரவும் 2-3 அவுன்ஸ் குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு எவ்வாறு செய்யலாம் ?
ஆப்பிள், ஆரஞ்ச், ஸ்ட்ராபெரி, கொய்யாப்பழம், பைனாப்பிள் போன்ற பழங்களை துண்டுகளாக்கி சேர்த்து செய்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.
▪️நமது உணவுமுறைகளுக்கு ஏற்ப எவ்வாறு செய்வது ?
இஞ்சி, எலுமிச்சை, சோம்பு, மல்லி, மாங்காய் இஞ்சி,ஏலக்காய், கிராம்பு, பட்டை என்று உங்களுக்கு பிடித்த மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களை சேர்த்து செய்யலாம். பீட்ரூட்டின் பச்சை வாசனை பிடிக்காதவர்களுக்கு இந்த முறையில் செய்யும்போது மேலும் மருத்துவ குணங்களுடன் சுவையையும் கூட்டும்.

குறிப்பு:
▪️வடிகட்டிய பீட் கவாஸ் கால்கப் எப்பொழுதும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த முறை தயாரிக்கும் போது கெபிர் வேக்கு பதிலாக இதையே சேர்த்துக்கொள்ளலாம்.
▪️பில்ட்டர் செய்த பிறகு மீதமுள்ள பீட்ரூட் துண்டுகளில் இராண்டாம் முறையும் பீட் கவாஸ் செய்யலாம். அல்லது இதை சலாட்டுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.
▪️நான் செய்த முறையில் வெறும் இஞ்சி மட்டுமே பீட்ரூட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளது.


Abdul Farook

Tuesday, November 8, 2016

புதியவர்கள் அதிகம் செய்யும் தவறுகள் என்ன?



01. அடிக்கடி சீட்டிங் என்று கண்ட சத்தில்லாத ருசி சார்ந்த உணவுகளை உண்பது.
02. குறைந்த நடைப்பயிற்சி செய்யாமல் தேமே என்று கொழுப்பு சாப்பிட்டு உட்கார்ந்து தெய்வமகள் அண்ணியாரைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவது.
03. சரியான அளவு நீர் அருந்தாதது.
04. விட்டமின் டிக்காக வெயிலில் நிற்காமல் நிறத்தைக் காக்க ஏசியிலேயே அமர்ந்திருப்பது. அல்லது நிழலிலேயே இருப்பது.
05. சரியான அளவுகளில் உண்ணாமல் குறைந்த கலொரி உணவுகளை எடுப்பது. குறிப்பாக சைவர்கள் காலை பட்டர் டீ, மதியம் பொரியல், இரவு கூட்டு என்று எடையைக் குறைக்கிறோம் என்று மஸிலை கரைத்துக்கொண்டிருப்பது.
06. சரியான அளவுகளில் ப்ரோட்டீன் எடுக்காமல் இந்தியன் தாத்தா கமலைப் போல ஆகிவிடுவது.
07. சைலண்ட்டாக சரக்கு, தம் என்று அடித்துக் கலக்கி ஹார்ட் அட்டாக் வந்து பேலியோ மீது பழி போடத் தயாராக இருப்பது.
08. பக்கம் பக்கமாக எழுதினாலும்.. சார் கொழுப்பு கூடிடுச்சின்னு ரிப்போர்ட் சொல்லுது உடனடியாக அதைக் குறைக்க வழி சொல்லுன்கள் என்று டர்ரியலாவது. கொழுப்பு சாப்பிட்டால் ஏன் கொழுப்பு கூடுகிறது என்பதை பேலியோ டயட் புத்தகத்தில் தேடிப் படிக்கவும்.
09. குறைந்த பட்ச கலோரி அளவான 1200 கலோரி உணவை பரிந்துரைத்தபடி எடுக்காது, குறைவாக எடுத்து அவதிப்படுவது.
10. காய்கறி, கீரைகளை முற்றிலும் புறக்கணித்து முக்கியமான காலைக்கடனை முக்கமுடியாது அவதிப்படுவது.
11. எங்களிடம் ஆலோசனை பெற்று, மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று ஒன்றுவிட்ட சித்தப்பா பையனிடமும் அதைக் காட்டி பிறகு இரண்டு இட்லி பாதாம் சட்னியுடன் பேலியோ துவங்கினேன் வயிறு வலிக்கிறது சீனியர்களே உதவுங்கள் என்று எங்களை அலறவைப்பது.
12. உண்பதோ சைவம், அதிலும் ஏகப்பட்ட உடல் உபாதைகளுடன் இருக்கும் குறைந்தபட்ச தேர்வில் அது டேஸ்ட் புடிக்காது இது ஸ்மெல் புடிக்காது என்று 10ல் 9 உணவுகளை விலக்கிவிட்டு பேலியோ அல்லாத பேலியோ என்ற ஒன்றைப் பரிந்துரைக்கக் கேட்பது.

Shankar Ji

பேலியோவுக்கு எதிரான கருத்துகளுக்கு ஒரு அறிவியல் விளக்கம்




Dr. Arun Kumar  MBBS , MD - Paediatrics

இணையத்தில் சில நாட்களாக பேலியோவுக்கு எதிராக சிலர் எழுதி வருகின்றனர் என்று அனைவருக்கும் தெரியும்.
அதில், நேற்று ஒருவர் விலாவரியாக பேலியோவுக்கு எதிராக ஒரு கட்டுரையை வெளியிட்டார்.
அதில் நிறைய தவறுகளும் அபத்தங்களும் இருந்ததால், அவருடைய சுட்டியின் கீழ், விளக்க பதிவு கொடுத்துள்ளேன்.
அந்த விளக்க பதிவை உங்களிடம் பகிர்கிறேன்.
எதற்காக?
இது போன்ற கேள்விகள் "திரும்ப திரும்ப பேசுற நீ" என்ற ரேஞ்சுக்கு மறுபடி மறுபடி கேட்கப்படுவதை தவிர்க்க.
நீங்கள் இவற்றை புரிந்து கொண்டால், வேறு யாரவது இப்படி பேலியோ பற்றி தெரியாமல் கேள்வி எழுப்பினால், சட்டையை பிடித்து கேள்வி கேட்பது போல், ஆதாரங்களுடன் அறிவியல் ரீதியுடன் பதில் பேசலாம்.
ஆனால், தயவுசெய்து அவரின் பதிவில் சென்று அவரை கமெண்ட் செய்வதோ, கிண்டல் செய்வதோ, திட்டுவதோ வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அது நமது வேலையும் இல்லை.
Discussion, உங்கள் பார்வைக்கு,,,
( // // குறியீட்டுக்குள் இருக்கும் வாசகங்கள் அவர் கட்டுரையில் உள்ளவை)
நல்ல முயற்சி !
ஆனால் அடிப்படை உயிர் வேதியியல் தெரியாமல் அவசரம் அவசரமாக ஒரு கட்டுரை எழுதினால் இப்படி தான் சொதப்பும்.
//உங்கள் சக்திக்கு உங்களுடைய உடலின் கார்ப்ஸுக்கு பதில் உங்களுடைய புரதத்தினை எரிப்பொருளாக பயன்படுத்த ஆரம்பிப்பீர்கள்.//
தவறு. கொழுப்பு முக்கிய எரிபொருளாக பயன்படுகிறது.
க்ளுகோஸ் மட்டும் உபயோகபடுத்தும் மூளை போன்ற உறுப்புகளுக்கு சக்தி தர புரதம் க்ளுகோசாக மாற்றபடுகிறது. இதை தான் gluconeogenesis என்பர்.
//கார்ப்ஸுக்குப் பதிலாக, உங்களுடைய புரதம் எரிப்பொருளாகும் போது எடை குறைய ஆரம்பிக்கும். இதை Ketosis என்கிறார்கள்.//
தவறு. கொழுப்பு 2 வழிகளில் எரிபொருளாக மாறும்.
1. beta oxidation.
2. ketosis.
புரதம் எரிபொருளாக மாறுவதற்கு பெயர் gluconeogenesis.
//புரதமோ (Protein) கொழுப்போ (Fat) அவ்வளவு எளிதில் ஜீரணமாகக் கூடியவை அல்ல.//
தவறு.
இருப்பதிலேயே குறைந்த கழிவுகளுடன் ஜீரணம் ஆக கூடியது கொழுப்பு மட்டுமே, its called the cleanest fuel.
//புரதமினால் உருவாக்கப்படும் ‘சக்தி’ (குளுக்கோஸ்) மூளைக்குப் போகாது. மூளைக்கான சக்திக்கு உங்களுக்கு கார்ப்ஸ் தேவை. //
glucose தான் பாஸ் கார்பஸ். இரண்டும் வேறு வேறு அல்ல.
//காய்கறி, பழங்கள் இன்னபிற நார்சத்துகளைத் தருபவற்றை இந்த டயட் நிராகரிப்பதால்//
பேலியோ உணவுமுறை பற்றி நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவு தான். இருப்பதிலேயே அதிகம் காய்கறி உண்பது இப்போது தான். தினமும் ஒவ்வொருவரும் அரை கிலோ காய்கறிகள் உண்கிறோம்.
//மூளை பட்டினிக் கிடந்து, அபாயகரமான நிலையிலிருந்தால் கீடோன்களை சக்தியாய் மாற்ற ஆரம்பிக்கும்.//
அறிவியல் புரியாததால் கட்டுக்கதை சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள்.
மூளை இப்போது gluconeogenesis மூலம் பெரும் க்ளுகொசையும் , ketosis மூலம் பெரும் கேடோன்கள் நம்பியும் செயல்படுகிறது.
முன்பை விட மிக திறனுடன் செயல்படுகிறது.
Ketogenic is neuroprotective (மூளைக்கு பாதுகாப்பு ) என்று ஏன் போற்றப்படுகிறது?
//அமெரிக்காவில் இந்த டயட் முற்றிய வலிப்பு நோய் காரர்களுக்கு மட்டுமே, குறைந்த கால இடைவெளியில் stop gap arrangement ஆக மட்டுமே வழங்கப்படுகிறது.//
வலிப்பு நோய் உள்ள குழந்தைகள் இதை 5 முதல் பத்து வருடங்கள் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இந்த உணவுமுறையை பின்பற்றுகின்றனர். மூளை தொடர்பான பல நோய்கள் ketogenic டயட் மூலம் சரியாகின்றன.
வலிப்பு நோய்க்கு மட்டும் இல்லை.
பல பல நோய்களுக்கு ketogenic டயட் அற்புதம் நிகழ்த்தும் என உலகின் மிக உயரிய மருத்துவ ஆராய்ச்சி நூலான nature ejcn சமீபத்தில் வெளியிட்ட கட்டுரை.
புதிய விஷயங்களை கற்று கொள்ளுங்கள்.
http://www.nature.com/…/journ…/v67/n8/full/ejcn2013116a.html
படிக்கவும்.
//மூளையின் குளுக்கோஸ் தேவைகளை புரதம் உருவாக்க முடியாது. அதை கார்ப்ஸ் தான் உருவாக்க வேண்டும். //
ஏற்கனவே பதில் சொல்லியாச்சு. மேலே பார்க்கவும். விடை : gluconeogenesis.
//அதிக புரதம் எடுத்துக் கொள்ளுதல் சிறுநீரக சிக்கல்களை உருவாக்கலாம் என்பது தான்//
என்னுடைய கட்டுரையை படியுங்கள்.
தனி கமெண்டில் போடுகிறேன்.
இப்போதைக்கு,
Comparative effects of low-carbohydrate high-protein versus low-fat diets on the kidney by Friedman AN, Ogden LG, Foster GD, Klein S, Stein R, Miller B, Hill JO, Brill C, Bailer B, Rosenbaum DR, Wyatt HRin Clin J Am Soc Nephrol. 2012 Jul;7(7):1103-11. doi: 10.2215/CJN.11741111. Epub 2012 May 31. who conclude that In healthy obese individuals, a low-carbohydrate high-protein weight-loss diet over 2 years was not associated with noticeably harmful effects on GFR, albuminuria, or fluid and electrolyte balance compared with a low-fat diet.
//டயட் மாறுபாடுகளால் irritable bowel syndrome-மையும் உருவாக்கும்//
இந்த நோய்க்கு காரணமே கார்ப் தான் பாஸ். இதற்கு வைத்தியத்திற்கு low fodmap டயட் இரைப்பை மற்றும் குடல் சிகிச்சை நிபுணர்(gastro enterologist) பரிந்துரைப்பார். அப்படி என்றால் என்ன என்று கூகுளில் தேடவும்.
http://www.med.monash.edu/cecs/gastro/fodmap/
irritable bowel syndrome நோய்க்கு வைத்தியமே பல வகை கார்ப் உணவுகளை தவிர்ப்பது தான்.
//நீங்கள் உண்ணும் LCHF டயட்டே ஒரு காலக்கட்டத்துக்கு பிறகு உங்கள் எடையை கூட்ட ஆரம்பிக்கலாம் என்று இன்னொரு தரவு சொல்கிறது//
பொய்.
பல வகை டயட் முறைகளை கம்பேர் செய்து பார்த்ததில், lchf உணவு முறையில் மட்டுமே அதிக வருடங்கள் எடை திரும்ப ஏறாமல் இருகிறது என்று மிக உயரி மருத்துவ ஆராய்ச்சி நூலான new england journal of medicine இல் வெளிவந்த கட்டுரை.
www.nejm.org/doi/full/10.1056/NEJMoa0708681
///A low-carbohydrate diet based on animal sources was associated with higher all-cause mortality in both men and women, whereas a vegetable-based low-carbohydrate diet was associated with lower all-cause and cardiovascular disease mortality rates.//
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2989112/
இந்த ஆராய்ச்சியில் லோ கார்ப் என்று கூறபடுவது லோ கார்பே அல்ல. கண்ட பொறித்த மாமிசத்துடன் பர்கர், புகை, மது சேர்ந்து நாற்பது முதல் ஐம்பது சதவீதம் கார்ப் எடுத்தது இந்த ஆராய்ச்சியில் லோ கார்ப் என்று குறிபிடப்பட்டுள்ளது.
பரோட்டாவுடன் மட்டன் பிரியாணி சாப்பிட்டு புகை பிடித்து மது அருந்தியவர்களை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தி, இறைச்சி கேட்டது என்று முடிவுக்கு வந்த ஆராய்ச்சி இது.
பேலியோவில் வலியுறுத்த படுவது, இது இல்லை. 
இதற்கு தான் வெளியில் இருந்து பேலியோவை பார்த்தால் இப்படி தான் தெரியும்.
//இந்திய மருத்துவ ஆய்வுகளை விட நான் அமெரிக்க டயாபடீஸ் அசோசியேஷனையும், ஜான் ஹாப்ப்கின்ஸ் மருத்துவப் பள்ளியையும், ஹார்வேர்ட் மருத்துவப் பள்ளியையும் நம்புவேன்.//
கீழே வருகிறது ஆராய்ச்சி தரவுகள்.
//பேலியோ/LCHFனை பின்பற்றுபவர்களின் பற்றுறுதி (Faith, Allegiance) மதப் போதக/convertsகளின் பற்றுறுதியைப் போன்றது. அவற்றை தர்க்கம், நியாயம், அறிவியல், மருத்துவ ஆதாரங்களால் உடைக்க முடியாது. //

//பேலியோவோ, கீட்டோவோ, அட்கின்ஸோ, சவுத் பீச்சோ இன்னபிற LCHF வகையறா டயட்கள் முன்வைப்பது பெரும்பாலும் pseudo, fake & non-verifiable claims. It can't stand the test of scrutiny before hard-nosed science.//
lchf வேலை செய்வது மாரியாத்தா effect இல்லை.
அறிவியல் பூர்வமானது.
நீங்கள் கூறிய மிக உயர்ந்த பல்கலைகழகங்களில் நிரூபணம் ஆகிய ஆராய்ச்சி முடிவுகள்.
lchf உணவு முறைகள் எப்படி பயனளிக்கும் என்று nature, oxfordjournals, new england journal of medicine, plosone போன்ற மிக உயர்ந்த ஆராய்ச்சி தரவுகளில் நிரூபணமான உண்மைகள்.
and why the traditional diet heart hypothesis suggesting replacing saturated fats with pufas and mufas failed
2 வருடம் வரை பின்பற்றியவர்களுக்கு எந்த தீங்கும் இல்லை. மிகவும் பயனளிக்க கூடியது என்று ஏற்கனவே நிரூபணம் செய்ய பட்டுள்ளது.
5 வருடம், பத்து வருடம், நீண்ட கால முடிவுகள் வந்தால் தான் நாங்கள் பின்பற்றுவோம் என்றால் வெயிட் செய்ய விரும்புவர்கள் அதுவரை தாராளமாக வெயிட் செய்யலாம்.
அதற்குள் சர்க்கரை நோய் மூலம் கிட்னி கெட்டு போனாலோ, கண் பார்வை போனாலோ, உடல் பருமன் மூலம் fatty liver வந்தாலோ, மாரடைப்பு வந்தாலோ, pcod மூலம் குழந்தை பேறின்மை இருந்தாலோ, உங்களை தான் நீங்கள் நொந்து தான் கொள்ள வேண்டும்.

Monday, November 7, 2016

நாம் பயப்பட வேண்டிய ஒரே கொலஸ்டிரால்!!

Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
Lp(a) என்ற டெஸ்டை என்றாவது செய்திருக்கிரீர்களா? என்னைப் பொருத்தவரை இதுவே உங்கள் கொலஸ்டிரால் பிரச்சினையை அறிய உதவும் மிக முக்கியமான டெஸ்ட்.
இதய ரத்தக் குழாய் செல்களின் இடுக்கில் இந்த Lp(a) எனப்படும் அபாய கொலஸ்டிரால் அடைத்து, அந்த செல்களுக்கு செல்ல வேண்டிய சத்துகளை அடைய விடாமல் தடுக்கிறது. இதனால் அந்த செல்கள் பாதித்து இன்ப்லமேஷன் எனும் உள்காயம் ஏற்பட்டு, அதில் கொழுப்பு சேர்ந்து மாரடைப்பு வருகிறது.
உங்களுக்கு ஏன் இந்த மிக முக்கியமான டெஸ்ட் பற்றி யாரும் சொல்லவில்லை? மருந்து கம்பெனிகள் உங்களுக்கு அதை சொல்ல விடவில்லை. ஏனென்றால் மாரடைப்பு வராமல் இருக்க உங்களுக்கு தரப்படும் ஸ்டாடினால் (Atorvastatin, Rosuvastatin), இந்த Lp(a) வை குறைக்க முடியாது.
அதிக மாவுச்சத்து (Carbohydrates) உள்ள உணவை உட்கொண்டு அதனால் அதிகம் சுரக்கும் இன்சுலினால், இந்த Lp(a) அதிகமாகிறது என்று ஒரு தரப்பு வாதம். இது முழுக்க ஜெனிடிக் என்பது இன்னொரு வாதம் (உங்கள் பரம்பரையில் கெட்ட பழக்கம் இல்லாத அல்பாயுசில் மாரடைப்பு வந்து இறந்தவர்களுக்கு காரணி இந்த Lp(a) வாக இருக்கலாம்).
பிகு: போன வாரம், ஒரு 22 வயது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பெண்ணிடம் Lp (a) அதிகமாக இருப்பதைக் கண்டேன்.

கொலஸ்டிராலை கெடுத்து மாரடைப்பை வரவழைப்பது எப்படி?


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

LDL கொலஸ்டிரால் உடம்பில் உள்ள முப்பது டிரில்லியன் செல்களுக்கும் சில விட்டமின்களை கொண்டு சேர்ப்பதுடன், அந்த செல்களின் சுவர் பலப்பட கொலஸ்ட்ராலை தருகிறது. மற்றும் பல ஹார்மோன்கள் உருவாக, கொலஸ்டிராலையும் கொண்டு சேர்க்கிறது.
இந்த கொலஸ்டிராலை கெடுத்தால் (ஆக்சிடைஸ்) செய்தால் அது Oxidized LDL (Ox LDL) ஆகி விடும். இந்த ox LDL நேராக இதய ரத்தக் குழாய்களில் படிந்து மாரடைப்பை உருவாக்கும்.
உடலுக்கு அதிக நன்மை செய்யும் LDLலை, OxLDL எனப்படும் விஷமாக மாற்றுவது எப்படி?
1. பிராசஸ் செய்யப்பட்டு கொழுப்பை குறைத்த பாக்கெட் பால் (Low fat milk-4%, 2%, etc.,) மற்றும் பால் பவுடர் சாப்பிடுவதன் மூலம் Ox LDL உடலில் அதிகமாகிறது.
2. எந்த எண்ணையை பொரிக்க பயன்படுத்தினாலும் அந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதிக Ox LDL கிடைக்கிறது (பொரிப்பது-பூரி, போண்டா போல் எண்ணையில் போட்டு எடுக்கும் அனைத்தும்)
3. அளவிற்கு அதிகமான சூட்டில் சமையல் செய்தல் Ox LDL அளவை அதிகப்படுத்தும்
4. முறையான உணவை சாப்பிட்டாலும் உடலில் இன்பலமேஷன் எனப்படும் உள்காயம் இருந்தால் LDLஐ Ox LDL ஆக மாற்றும்.
பின் குறிப்பு: ஸ்டாடின் (Atorvastatin, Rosuvastatin) மருந்துகளால் Ox LDL எனப்படும் உயிர்கொல்லி கொலஸ்டிராலை குறைக்க முடியாது. நல்லது செய்யும் சாதா LDLஐ மட்டுமே குறைக்க முடியும்.

டாக்டர்கள் ஏன் இன்னமும் ஸ்டாட்டின் பரிந்துரைக்கிறார்கள்?




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore 
மேற்கு நாடுகளில் தான் அலோபதி தோன்றியது. அதை தான் இன்று மாடர்ன் மெடிசின் என உலகமே கொண்டாடுகிறது. விஞ்சானம் மூலம் பலப் புதிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தி பலரைக் காப்பாற்றும் அளவு சக்தி படைத்தது எங்கள் துறை. 

ஆனால் நாங்களும் சில பைத்தியக்காரத்தனமான, சுத்தமாக வியாதியை குணப்படுத்தாத சில வைத்தியமுறைகள் செய்திருக்கிறோம். உதாரணம், கத்தியை வைத்து நரம்பைக் கிழித்து ரத்தத்தை வெளியேற்றுவது. இன்னொரு வகை, அட்டைப் பூச்சிகளை பேஷன்ட் மேல் போட்டு ரத்தத்தை உறிஞ்ச வைப்பது. இதை அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனுக்கு தொண்டை வலிக்காக செய்யப் போய், கிட்டத்தட்ட அவர் சாவின் விளிம்பிற்கே சென்று விட்டார்.

இந்த ரத்தம் வடித்தல், அட்டைப் பூச்சி ட்ரீட்மென்ட் எல்லாம் தவறு, பிரயோஜனப்படாது, ஆபத்து என நானூறு வருடங்களுக்கு முன்பே சில மருத்துவர்கள் சொன்னாலும், அறிவியல் ஆதாரமில்லை என மற்ற மருத்துவர்கள் ஒதுக்கினார்கள். அப்புறம் ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தான் இந்த முறைகள் தவறு என அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

அந்த அட்டைப்பூச்சி மருத்துவம் போல் இன்னொன்று தான், கொலஸ்டிராலை குறைப்பதற்கு ஸ்டாடின் (Atorvastatin, Rosuvastatin) மருந்துகளைக் கொடுப்பது. 

முகப்பரு இருந்தால் வருங்காலத்தில் சர்க்கரை வியாதி வருமா??? வரலாம்....


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore.
டீனேஜ் பருவத்தில், நம் எல்லோருக்கும் இன்சுலின் அதிகமாக சுரக்கிறது. இந்த இன்சுலின் நாம் உண்ணும் உணவில் இருந்து புரதத்தையும், கொழுப்பையும் உடலில் தேக்கி, அந்தப் பருவத்தில் உடலை வளர வைக்கிறது. வளர்ச்சிக்கு தேவையான குரோத் ஹார்மோனும் அப்போது அதிகம் சுரக்கிறது. அதனாலேயே டீனேஜ் பருவத்தில், டக்கென குட்டிஸ்கள் உயரத்திலும் எடையிலும் பெரியவர்களாகிறார்கள்.
அந்த சமயத்தில் நாம் அவர்களுக்கு என்ன கொடுக்கிறோம்? அரிசி, கோதுமை, பருப்பு போன்ற மாவுச்சத்துகள், சர்க்கரை, கூல்டிரிங்க்ஸ் எனும் சர்க்கரை மாவுச்சத்து உணவுகள், அதிக அளவில் பால். இப்படி கொடுப்பதால் இன்சுலின் மற்றும் IGF (insulin like growth factor) அதிகம் சுரக்க வேண்டியதாகி விடுகிறது. டீனேஜ் பருவத்தில் இயல்பாகவே அதிகம் இருக்கும் செக்ஸ் ஹார்மோன்கள், இன்சுலின் அதிகரிக்கும் போது, மேலும் அதிகரித்து தோலில் அதிக எண்ணைப் பசையை சுரந்து, பரு உண்டாகிறது.
கம்மி கார்ப் (மாவுசத்து), அதிக நல்ல கொழுப்பு (முட்டை, வெண்ணை, இறைச்சி) எடுப்பவர்களுக்கு டீனேஜ் பருவத்தில் கூட பரு அவ்வளவாக வருவதில்லை.
இன்சுலின் அதிகமானால் என்னாகும்? அதன் பெயரே இன்சுலின் ரெசிஸ்டன்ஸ். செல்கள், இன்சுலின் சொல்வதைக் கேட்காது. ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அதிகரித்து கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை வியாதி வரும்.
பெரியவர்களுக்கும் பரு வரும். இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகமானால் வரும் பாலி சிஸ்டிக் ஓவரி பெண்களுக்கு பரு இருக்கும்.
தோல், மனிதனின் கண்ணாடியாகும். உள்ளே நடப்பதை வெளியே சொல்லும் உறுப்பே தோல். தவறான உணவுப் பழக்கத்தால் வரப் போகும் சர்க்கரை வியாதியை முன்கூட்டியே தோல் நமக்கு சொல்கிறது.
இதற்கு கார்ப் உணவுகளை கம்மி செய்து முட்டை, இறைச்சி, வெண்ணை போன்றவற்றை அதிகப் படுத்தினாலே போதும். பருவும் குறைந்துவிடும், சர்க்கரை வியாதியும் வராது. தோல் நிபுணர்கள் இதற்கு வெளியிலிருந்து வைத்தியம் செய்கிறார்கள். இன்பெக்ஷன் ஆன பருவிற்கு ஆண்டிபயாடிக், சோப்புகள் போன்றவை உடையும் அணையை உள்ளிருந்து செப்பனிடாமல், வெளியே பூச்சு வேலை செய்வது போலாகும்.

இதைப்பற்றிய அருமையான ஆராய்ச்சி பேப்பர் ஒரு இந்தியர் வெளியிட்டுருக்கிறார். அதன் லிங்க் 

சர்க்கரை வியாதி பரம்பரை வியாதியா?


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore.

"எனக்கு வயது 28. கொஞ்சம் குண்டாக இருப்பேன். அவ்ளோ தான். அடுத்த மாசம் கல்யாணம்".
இவரால் என்னென்ன பிரச்சினைகள் வருகிறது என பார்ப்போம்.
இவர் குண்டாக இருப்பதால், இவருக்கு இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஆரம்பித்திருக்கும் (கொழுப்பு சாப்பிட வேண்டிய உடம்புக்கு அதிக மாவுச்சத்து கொடுப்பதால் இன்சுலின் வேலை செய்யாமல் போவது. இன்சுலின் வேலை செய்யாததால் க்ளுக்கோஸ் ரத்தத்தில் அதிகமாக ஆரம்பிக்கும்- சுகருக்கு முந்தைய நிலை). அவரின் மனைவி நார்மல் என வைத்துக் கொள்வோம்.
இவரின் இன்சுலின் ரெசிஸ்டன்சால் அவர் மரபணு லைட்டாக பாதித்திருக்கும். அந்த மரபணுவை குழந்தைக்கு கொடுத்திருப்பார். தாயின் வயிற்றில் வளரும் குழந்தை, அம்மா சாப்பிடும் அரிசி, கோதுமையில் இருந்து வரும் குளுக்கோசில் திக்கு முக்கு ஆயிருக்கும். அப்பவே லைட்டாக இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும்.
இந்தக் குழந்தை பிறந்து வளரும் போது தாய் தந்தை சாப்பிடும் அதே கார்ப் உணவை சாப்பிட்டு டீனேஜ் பருவத்தில் இவனுக்கும் உடல் எடை மற்றும் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஆரம்பிக்கிறது.
அவன் குண்டாவதைப் பார்த்து தாய் என்ன செய்கிறாள்? உணவில் கொழுப்பைக் குறைக்கிறாள். அவன் திருமண வயதில் prediabetic ஆகிறான்.
அடுத்து அவன் மனைவி கர்ப்பமாகிறாள்.........
சர்க்கரை வியாதி பரம்பரை வியாதியல்ல. இந்த மாதிரி உணவுமுறைகளால் வருவது. உணவை மாற்றினால் சர்க்கரை வியாதி போய் விடும்.
Disclaimer: சொந்தக் கருத்து.